கம்ப ரோக குன்மரோக நாடி லக்ஷணம்
குன்ம ரோகம், கம்பரோகம் இவைகளில் நாடியானது புறாவைப் போல் நடக்கும்.
விரண பகந்தரரோக நாடி லக்ஷணம்
விரணம், பசுந்தரம், இந்த ரோகங்களில் நாடியானது பித்தநாடியைப் போல் நடக்கும்.
வமன ரோக அபிகாதரோக நாடி லக்ஷணம்
வாந்தி செய்தவன், காயத்தை அடைந்தவன் வேகமாய் சஞ்சரிக்கிறவன் இவர்களின் நாடி
மத்தித்தயானை, அன்னம், இவைகளின் நடையை ஒத்திருக்கும்.
சிலேஷ்மத்தில் அதிகமாய் பிரகோபித்திருக்கும்.