மலமூத்திர பந்தன விஷ சிகாரோக நாடி லக்ஷணம் …..
மல மூத்திரத்தை அடக்குகிறவனது நாடி அதிவேகமாய் நடக்கும்
விஷ சிகாரோகத்தில் தவக்களை நடையைப் போல் நடக்கும்.
காமிலா மூத்திரகிருச்சிரரோக நாடி லக்ஷணம் …..
காமிலா ரோகம், மூத்திரகிருச்சிரம் இவைகளில் நாடி கரிஷ்டமாய் நடக்கும்.
வாத ரோக சூலரோக நாடி லக்ஷணம் …..
வாத ரோகம், சூலரோகம், இவைகளில் நாடி வக்கிரமாய் நடக்கும்.
பித்த ரோக ஆமசூல நாடி லக்ஷணம் …..
பைத்திய ரோகத்தில் நாடி அதிக சுவாலையாயும், ஆமசூலையில் நாடி
புஷ்ட்டியாயும் நடக்கும்.