கிரஹனி அக்கினிமாந்த தோஷ நாடி லக்ஷணம் …..
மந்தாக்கினி உடையவனது நாடி க்ஷீணித்து
அன்னத்தைப் போல் நடக்கும். அக்கினி மாந்தியம், கிரஹனி
ரோகம் இவைகளில் நாடியானது பாதத்தில் அன்னத்தைப்
போலும், அஸ்தத்தில் மண்டூகத்தைப் போலவும் நடக்கும்.
விளம்பிகா ஆமாதிசார மலபேத கிரஹணி தோஷ நாடி லக்ஷணம் …..
நாடியானது மலபேதத்தில் சாந்தமாயும் கிரஹணிரோகம்,
அதிசாரம் இவைகளில் தேஜோவிஹீனமாயும், விளம்பிகை
என்கிற ரோகத்தில் படகைப்போலவும், அமாதிசாரத்தில்
தொங்குகிறதுப்போலும் நாடி நடக்கும்.