இறைச்சி, பால், மதுபாண்டங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் …..
இறைச்சிகளை அருந்தினவனது நாடி ஸ்திரமாயும், பாலைகுடித்தவனது நாடி மிகவும் சீதளமாயும்,
மதுரியமான பண்டங்கள் புசித்தவனது நாடி ஸ்திரமாயும், மந்தமந்தமாயும் நடக்கும்.
மதுர பதார்த்ததங்கள், உஷ்ண பதார்த்ததங்கள், உலர்ந்த பதார்த்தங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ——-
வெல்லம், வாழப்பழம், மாமிசம், உஷ்ணபதார்த்தங்கள், உலர்ந்த பதார்த்ததங்கள்,
முதலியவைகளை புசித்தவனுடைய நாடி
வாத பித்த ரோகநாடி கதியைப் போல் நடக்கும்.