வாத பித்த சிலேஷ்மங்களில் எந்த தோஷத்தை நாடியானது நாடியிருக்குமோ
அதன் செய்கையை தான் மற்றவைகளுக்கும் உண்டாகும்.
நாடியானது வாத பித்த சிலேஷ்மத்தில் ஏதாவது ஒன்றில் சார்ந்திருக்கும் வாத
பிரகோபத்தில் தீவிரம் ஆகும்போது தீவிரமாயும் சாந்தமாகும் போது சாந்தமாயும்
நாடி நடக்கும்.
எண்ணெய், வெல்லம், உளுந்து, பால், தேன் இவைகளை தின்றவனுடைய நாடி …..
எண்ணை குடித்தவனுடைய நாடி வலிவாயும், வெல்லம், உளுந்து இவைகளை
தின்றவனுடைய நாடி பெரிய தடியைப் போல் நீளமாயும், பால் குடித்தவனுடைய
நாடி ஸ்திமிதமாயும் நின்று நின்று மந்தமாயும் நடக்கும், தேன் குடித்தவனுடைய
நாடி மண்டூகத்தைப் போல் நடக்கும்.
ஆறு இனிப்புகள் உடைய பதார்த்தங்களை புசித்தவனுடைய நாடி …..
தித்திப்பு பதார்த்தங்களை புசித்தவனுடைய நாடி மயில் நடைபோலும்,
கசப்பு பதார்த்தங்கள் அறுந்தினவனது நாடி ஸ்தூலமாயும், புளிப்பு கொஞ்சம்
உஷ்ணமான பதார்த்தம் புசித்தவனது நாடி குதித்து குதித்துக் கொண்டும், துவர்ப்பு
பதார்த்தம் புசித்தவனது நாடி கொளவியைப் போல் கிறகிற என்றும், கார பதார்த்தம்
புசித்தவனது நாடி கடினமாயும், லவன பதார்த்தம் புசித்தவனது நாடி லேசாயும்
வேகமாயும் நடக்கும்.