நாடிகளை மிகவும் நுட்பமான புத்தியுடன் அவைகளின் போக்கை அறிந்து வியாதிகளின் குணபேதங்களை தெரிந்து
சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நாடி ஞானத்தை செவ்வையாய் தேவர்களுக்கும் தெரிந்துக் கொள்வது
கஷ்டமென்றால் மானிடர்கள் தெரிந்து சிகிச்சை செய்ய எவ்வளவு கஷ்டமாயிருக்கும். ஆகையால் நாடிகளையும்
அதன் சப்தங்களையும் மிகவும் சூஷ்மபுத்தியுடன் தெரிந்துக்கெண்டு வியாதியின் குணத்தை அறிந்து சிகிச்சை
செய்ய வேண்டியது. மருத்துவரின் கடமை ஆகும்.
அபிகாதாதி ரோகங்களின் நாடி லக்ஷணம்
பளுவை எடுக்குதல், பிரவாகத்தில் அடித்துக்கொண்டு போகுதல் மூர்ச்சை சம்பவித்தல், பயமுண்டாகுதல்,
அதிக துக்கம் அடைதல், என்னும் இவைகள் உண்டான போது நாடியானது அழுத்தமாயும், தம்பித்தும் இருக்கும்.
அப்பபடியிருந்து அவ்விதமான நாடி கதியை உடையவன் ஜீவித்திருப்பான்.
வேறு விதம் ….. மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்தவன், அஸ்திர சஸ்திரங்களினால் மர்மஸ்தானங்கள்
பேதிக்கப்பட்டவன், இந்திரிய நஷ்டமுடையவன் ஆகிய இவர்களுக்கு நாடியானது மரணகுறிகளை காட்டும்
அப்படி மரணகுறிகளை காட்டினாலும் அவ்வித நாடிகதியை உடையவன் மரணமடையாமல் ஜீவித்திருப்பான்.