நாடி பரீக்ஷ விவரணம் ….. இவைகளில் நாடீபரீக்ஷயை மாத்திரம் இந்த ஜம்புவத்தீவிலுள்ள தேவர் முதல் மானிடர் வரையிலும் உள்ள வைத்திய சிகாமணிகள் முக்கியமாய் விஸ்தரித்து எழுதி இருக்கிறார்கள் அவைகள் வடமொழியில் செய்யுட்களாக இருப்பதினால் திராவிட தேசத்தாருக்கு அதனை தெரியும்படி இலேசான சொற்களால் யாவரும் எளிதில் அறிந்து சிகிச்சை செய்யும்படிக்கு எழுதியிருக்கிறேன். வாத பித்த கபங்களாகிய திரிதோஷங்களின் விரோதத்தினால் உண்டாகும் சகல வியாதிகளும் அவைகளின் சாத்தியம், கஷ்டசாத்தியம், அசாத்தியம், அந்தந்த வியாதிகளின் பேதங்கள் முதலியவை அறிந்து சிகிச்சை செய்ய நாடி ஞானமே மூல காரணம், நாடியின் கதி முதலியது விசேஷமாய் தெரிந்தால் வியாதிகளின் சொரூபத்தை அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சைகளை செய்யலாம். ஆகையால் அந்த நாடி ஞானத்தை இலேசாய் அறிந்துக் கொள்ள அவைகளின் உற்பத்தி முதலியதும் ரோகங்களுக்கு தகுந்தவாறு நாடியின் கதிகளையும் விவரமாய் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடிகளின் உற்பத்தி அவைகளின் நாமங்கள் ….. இச்சரீரத்தில், மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆக்கினேயம், சஹஸ்ராரம், என்னும் ஏழுசக்கிரங்களில் மூலாதாரம் என்கிற சக்கிரத்தின் மத்தியில் சுக்ஷ்ம்ணா, என்கிற நாடியிருக்கின்றது. அதைச்சுற்றி அநேக நாடிகள் சூழ்ந்து இருக்கின்றது. மனிதர்களின் தேகத்தில் ஸ்தூல சூக்குமங்களான மூன்றுகோடி ஐம்பது லட்சத்து நாடிகள் இருக்கின்றன. இந்த நாடிகள் மூலாதாரத்திலிருந்து சிலது மேல் புறமாகவும், சிலது கீழ்புறமாகவும், சிலது குறுக்காவும் வியாபித்து இருக்கின்றன. மேற்கூறிய நாடிகளை தழுவிக்கொண்டு மூன்றுகோடி ஐம்பது லட்சத்து உரோமங்கள் இருக்கின்றன. அந்த ரோம துவாரங்களே நாடிகளின் முகங்களென்று சொல்லப்படும். அந்த முகங்களிலிருந்து வியர்வை கசிகின்றது மேற்கூறிய நாடிகளுக்கு ஆதாரமாய், பரப்பிரம்ம செரூபமாகிய ஒரு ( குக்ஷ்ம வாயுவு ) இருக்கிறது. அது பிராணாதி வாயுக்களின் மூலமாய் தேகமுழுதும் வியாபித்து இருக்கின்றது. Category: மருத்துவம்By admin@powerathmaMarch 25, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅநாஹதம்ஆக்கினேயம்சஹஸ்ராரம்சுவாதிஷ்டானம்மணிபூரகம்மூலாதாரம்விசுத்தி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு 8NextNext post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் – 3Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024