நாடிக்கியானம் ….. சீவ நிலை சில இடத்தில் நாபியைப்போல் சக்கிராகாரமாயும், சில இடங்களில் ஆமாதிசயம் முதலிய கோசாகாரமாயும், சில இடங்களில் இருதயாதி ஜீவகிருஹங்களாகவும் இருக்கும். இந்த சரீரத்தில் ஜீவன் தனது ஆகாமி சஞ்சித பிராப்தத்திற்கு சரியாக வசித்து இருப்பான். சிலந்தை தான் பிள்ளையை கூண்டில் விடாது வசிக்கிறதுப்போல் இந்த ஜீவன் பஞ்ச பிராணங்களுடன் கலந்து வசித்திருக்கிறான். யாராவது மேற்கூறிய ஜீவனை யோகாப்பியாசத்தால் பரப்பிரம்மமாக அறிகின்றார்களோ அவர்கள் காலபாசத்தில் சிக்காமல் வாழ்வார்கள். பிராணவாயு இருப்பிடம் ….. நாபி, தாது, குதம், சுக்கிலம், ரத்தம், முடிச்சு, சிரம், புஜங்கள், சந்திகள், இருதயம் இந்த பத்து இடத்தில் பிராண வாயுவானது சஞ்சரித்துக் கொண்டு இருக்கும். விஸ்வோதரி நாடி ….. முப்பத்தி இரண்டு முழம் நீளமான விஸ்வோதரி என்கிற நாடி வயிற்றில் இருக்கிறது. அதில் ஒரு முழம் கண்டத்தில் கீழ்பாகத்தில் அக்கிரமித்து இருக்கிறது. கண்டத்தில் வியாபித்திருக்கும் மேற்கூறிய நாடிக்கு கீழ்புரத்தில் பத்து முழத்தில் ஆமாதிசயமும், அந்த பத்து முழத்துக்கு பச்சயமாநாசயமும் அதற்கு பத்து முழத்திற்கு பக்குவாசயமும் இருக்கின்றது. மற்ற ஒரு முழம் சங்கைப்போல் குதஸ்தானத்தில் இருக்கின்றது. Category: மருத்துவம்By admin@powerathmaMay 27, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஇருதயம்சிரம்நாடிநாபிபிராணவாயுரத்தம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:குணங்களின் தன்மை 3NextNext post:பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 6 கோள்களின் கோலாட்டத்தின் படிRelated Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024