ஸ்ரீ மத் மேதா தக்ஷிணா மூர்த்திநே நம.,
சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரகம், என்னும் பஞ்ச கிருத்தியங்களை
நடத்தும்
மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளது பாதாரவிந்தங்களை இடைவிடாது திரிகரண
சுத்தியுடன் தியானித்து
( வைத்தியோ நாராயணா ஹரி ) என்கிற வாக்கிய அனுசசாரமாய், ஆயுள்வேதத்திற்கு மூல
புருஷோத்தராகிய
வைகுண்டவாசனை சதாபஜித்து நான் எழுதும் கிரந்தம் விக்கினமில்லாது சம்பூரணம்
ஆகும் பொருட்டு
திரிசக்தி சொரூபத்தை ஸ்தோத்தரித்து ஆயுர்வேத குறவர்களை புகழ்ந்து இரண்டாவது
காண்டம் எழுதலாயினேன்.
இக்காண்டத்தில்,
தன்வந்தரி, சாரங்கதரீயம், பசவராஜீயம், லோலாமபாராஜீயம், சரகசம்ஹிதை,
ரசமணிதர்ப்பம், சிகிச்சாசாரம்
முதலிய வடமொழி கிரந்தங்களிலிருக்கும் சுத்திகள், மாரணபஸ்ப,
சிந்தூரவகை ராக்கிகள், ஒஷதிகளின்
குணபாடம், அஷ்ட வித பரீக்ஷகள், காலக்கியானம் முதலியது வடமொழி
கிரந்தங்களிலிருந்து தமிழ் பாக்ஷயில்
மொழி பெயர்த்து எழுதியிருக்கிறேன்.
இன்னம் வைத்தியருக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் இதில் எழுதப்பட்டிருக்கிறது
இந்த கிரந்தத்தை பாமரர்
முதல் பண்டிதர் வரையிலும் இதில் இருக்கும் விஷயங்களை
எளிதில் அறிந்து சிகிச்சைகளை செய்யுமாறு
இலக்கண இலக்கியங்களை கவனியாது மிகவும்
லேசான மொழிகளால் எழுதி இருக்கிறேன்.
ஆகையால் இதில் சொற் குற்றம் எழுத்து பிழையிருந்தால்
அதைப் பாராட்டாமல் விஷயங்களை கருதுவீர்கள்.
———————————
அஷ்ட வித பரீக்ஷ …..
நோயாளிகள் பிணிகளால் அவஸ்தைப்படுவதை
மூன்றுவித காரணங்களினால் அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை
செய்தல் வேண்டுமென்று வைத்திய நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
அவையாவன —
(தரிசனம் – ஸ்பரிசனம், பிரஸ்னை,) அதாவது நோயாளிகளின்
தேகத்தைப் பார்க்குதல், தேகத்தை தொடுதல்,
அவர்களுடன் சம்பாஷித்தல் இந்த மூன்று விதத்தை தானே
பிராசீன வைத்திய குறவர்கள் எட்டுவித பரீக்ஷ என
பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது,
மூத்திரபரீக்ஷ, மலபரீக்ஷ, தேஹபரீக்ஷ,
( ஜிம்ஹபரிக்ஷ அதாவது நாக்குபரீக்ஷ) நரசிகா பரீக்ஷ, நயின பரீக்ஷ ,
சப்தபரீக்ஷ, நாடிபரீக்ஷ என்பனவாம் .