நேத்திர பரீக்ஷ
வாதாதிக்க நேத்திரம் …..
வாததிக்கத்தில் நேத்திரங்கள் சலத்துடன் கூடி கண்ணீர் வடிந்துக்
கொண்டு புகை நிறமாயும், மஞ்சள் நிறமாயும் இருக்கிறது.
பித்தாதிக்க நேத்திரம் …..
பித்தாதிக்கத்தில் நீலநிறம் அல்லது கறுப்பு, சிகப்பு கலந்த நிறம்,
தீபதுவேஷியாயும், வெப்பமாயும் இருக்கும்.
கபாதிக்க நேத்திரம் …..
கபாதிக்கத்தில் மந்தமந்த பார்வை, வெண்மை நிறம், ஜலத்துடன்
கலந்து பார்வை ஹீனமாயும் இருக்கும்.
துவந்த தோஷ நேத்திரம் …..
துவந்தத்தில் இரண்டு தோஷ லக்ஷணம் ஒன்றாயிருக்கும்.