நாச்சியார் கோயிலில் கல் கருடன் சன்னிதி உள்ளது.
ஒன்பது நாகங்கள் அவர் உடலில் இருப்பதால், நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஆகும்.
கல் கருடனே உத்ஸவத்தில் வலம் வருவார்.
அதன் எடையை ஆரம்பத்தில் 8,16,32,64 பேர்கள் வரை சுமப்பதும்,
திரும்ப கோயிலில் நுழைந்து கர்ப்பக்கிருஹம் செல்லும்பொழுது 64, 32, 16, 8 பேராகப் படிப்படியாகக் குறைந்து
கடைசியாக நான்கு பட்டர்கள் மட்டும் சுமப்பதும் ஒரு அதிசயம் என்றால்,
கருடன் உத்ஸவத்தில் வீதிஉலா வரும் பொழுது
கருடனுக்கு வியர்ப்பதும்,
பட்டர்கள் பெரிய விசிறியால் விசிறுவதும்
இன்னொரு அதிசயமான நிகழ்வுகளாகும்.