இந்த இடத்தில் வளர்ச்சி என்பது எதை அடிப்படையாய் கொண்டிருக்கிறது என்று சிந்தித்தால் வரும் பதில்
அழிவு என்பதை தவிர வேறு என்ன பதில் வர முடியும்.
இப்போது, சிந்தித்து பார்த்தால் தோன்றுவது அணுவை பிளந்தது சாதனையா இல்லை, வேதனையா
அவர் அவர் மனசாட்சிபடி முடிவு செய்து கொள்ளுங்கள்.
திருப்தியான நிலையை விட்டு வெற்றியை நோக்கி நகர்ந்த மனிதன் தனக்குத்தானே
மிக பெரிய, ஈடு செய்ய முடியாத தோல்வியில் அல்லவா தடம் பதித்து விட்டான்.
இந்த இடத்தில்
மூட நம்பிக்கையை விட அதிக அளவு அனர்தத்தையும், அவலங்களையும் அல்லவா
விஞ்ஞானம் உண்டாக்கிவிட்டது.
எல்லாம் எதுவும் எல்லை மீறி போய்விட்டது என்பதை தவிர வேறு என்ன சொல்லமுடியும்.
இனி நமக்கு கவிதைகளும், இலக்கியங்களும் மட்டுமே ஆறுதல் சொல்லமுடியும்
அவைகள் பொய்யாய் இருந்தாலும் ஒரு சுகத்தை நிம்மதியை தருகிறதே.