ஒரு நபரின் வாழ்க்கையில் இன்னொரு நபரின் பாதிப்பு எந்த விதத்திலாவது இருந்தே தீரும்.
இதை நாம் நமக்குள் இறங்கி பார்க்கும்போதுதான் அந்த நபர் யார் என்பதே தெரியும்.
சமூகத்தில் அந்த பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர் ஆண் என்றால் மனைவியாகவோ,
பெண் என்றால் கணவராகவோ இருக்க வேண்டும் என்ற ஆசையில் உண்டான நியதியே திருமணம்.
ஆனால் எல்லா தம்பதியருக்கும் அப்படி அமைகிறதா என்பது வினாவிற்குரிய விஷயம் தான் என்பதே உண்மை.
அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், ஆன்மீக பேச்சாளர்கள், நடிகர்கள்,போன்றவர்களின் பாதிப்பு
உடையவர்களை நாம் அன்றாடம் நமது வாழ்க்கையில் காண முடியும்.
ஆனால், தம்பதிகளில் காண்பது அரிதாகவே இருக்கிறது.