இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம்
ஆணின் திறமை தான் ஆணிற்க்கு அழகு
இங்கு திறமை என்றால் என்னவென்ற வினா வரும்
அதற்க்கு பதில்,
உழைப்பு, கெட்டி காரதனம், வரும் முன் காக்கும் குணம்
எதிலும் தெளிவு. எத்தனை தடை சோதனை வந்தாலும்
துணையாய் வந்த மனைவியை இழிவு படுத்தாத குணம்
கம்பீரமான மனத்தின்மை இவையே ஆணின் திறமை .
இதை வளர்த்துக்கொள்ள ஆண் விரும்பி முயலவேண்டும்.
அப்போது மனைவி
கணவனை உள்ளங்கயில் வைத்து தாங்குவாள்
அவளின் கர்வம், பேராசை, பேரழகியாய் இருந்தாலும்
அவள் அது அத்தனையையும் அவள் கணவனிடம் சமர்பபணம் செய்து விடுவாள்
அப்போது
அந்த இல்லறம்
இனிய நல்லறமாக மாறிவிடும்
இதற்க்கு உதாரணமே அகத்தியர் லோபாதேவி.