ரிசபம்.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ அக்னி திரேக்காணம் –
சுருட்டையாகவும், அறுக்கப்பட்டதாகவும் இருக்கின்ற மயிர்களை உடையவன்
குடம் போன்ற வயிறை உடையவன்.
ஓரிடத்தில் பொசுக்கப்பட்ட துணி உடையவன்
தாகமுடையவன்,
அதிகமான சாப்பாட்டு பிரியன்,
ஆபரணங்களை விரும்பும் ஸ்திரீ
சுக்கிரன் நாயகன்.
ஸ்திரீ கிரக
பலம் – கழுத்து வரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர நாற்கால் திரேக்காணம் –
வயல், நெல், வீடு, பசு இவைகளை பரீட்சை செய்யும் முறையைஅறிந்தவன்
கீதம் வாத்தியம், சித்திரம் வரைதல் முதலிய கலைகளை அறிந்தவன்,
வண்டியோட்டுவது பயிரிடுவது, இவற்றில் சாமர்த்தியம் வாய்ந்தவன்,
அதிக பசி உள்ளவன்
ஆட்டின் முகமுள்ளவன்
அழுக்கடைந்த வஸ்திரமுள்ளவன்
புருஷ வடிவமாக இருக்கிறது
. புதன் நாயகன்
ஆண் கிரகம்
பலம் – தெப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர புருஷ நாற்கால் திரேக்காணம் –
யானைக் கொப்பான சரீரம்
வெள்ளி நிறமான தெத்திப்பல்
கூர்மையான பாதம்,
பொன்னிறமான சரீரம்,
அங்கும் இங்கும் அலையும் மனதுடையவன்.
சனி நாயகன்
அலி கிரகம்
பலம் – பாதம் வரை.