உடலில் ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை
விரல் தான் உடலின் கண்களை திறக்க வல்லது.
பாலாடையின் மீது ஊர்ந்து போகும் சிற்றெறும்பின் கால் தடம் போலத்தான்
விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும்,
வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியே தான் நினைவின் ஊற்று கசிந்து கொண்டே இருக்கும்
கண்ணுக்கு தெரியாமல் நினைவில் படறும் அந்த நறுமணத்திற்க்கு ஈடு சொல்ல
உலகில் எந்த நறுமண பொருளையும் மனிதன் கண்டறியவில்லை.