சென்னையில் சுவாமிஜி முக்கியமான ஏழு சொற்பொழிவுகள் நிகழ்தினார். 7 பிப்ரவரி 1897 அன்று 1.வரவேற்புக்கு பதிலுரை;
நாம் விக்டோரியா ஹாலில் அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.
ஒன்று நினைக்கிறோம். தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும்
ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ
அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார்-
சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரததிலிருந்து கீதை பாணியில் பேசுகிறேன்.
இப்படிதான் நடந்திருக்க வேண்டும், எனவே அதற்கு நமது நன்றி.
இது சொற்பொழிவிற்கு ஓர் உத்வேகத்தை கொடுக்கும்.
நான் உங்களுக்குச் சொல்லப் போகின்றவை எல்லாம் வலிமையுடன் வெளிவரும்.
என் குரல் அனைவருக்கும் கேட்குமா என்பது சந்தேகமே. எனினும்
இயன்ற அளவு முயற்சி செய்கிறேன்.
திறந்த வெளியில் இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் இதுவரை பேசியதில்லை.