நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்துத் தத்துவங்களை எல்லாம்அனுபவித்து அறிந்துகொள்ள விரும்பினேன்.
ஆனால் அவ்விதம் அவற்றைஎன்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது.
ஆதலால், நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம்.
படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம்
என்வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு முயற்சி செய்தேன்.ஆனால் அதிலே ஒன்றுமில்லை. என்று
மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள்.ஆனால்; அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும் காண்பாய்.
ஒருவர் இரசாயனசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பெரிய விஞ்ஞானியாக இருக்கிறார்.
அவர்உன்னிடம் வந்து இரசாயனத்தைப் பற்றிச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
நான் இரசாயன விஞ்ஞானியாகத் திகழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்கிறேன்.
ஆனால் அப்படியிருந்தும் என் முயற்சியில் நான் ஒன்றும்வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.
எனவே இரசாயனத்தைப் பற்றிய எதையும் நான்நம்புவதில்லை என்று நீ அவரிடம் சொல்வாயானால்
அவர் உன்னை திரும்பி,எப்போது நீ முயற்சி செய்தாய் ? என்று கேட்பார்.
நான் துாங்கச் செல்லும்வோது, ஓ இரசாயனமே நீ என்னிடம் வா என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். அது என்னிடம் வரவே இல்லை என்று
நீ சொல்வாய். இரசாயனவிஞ்ஞானி உன்னைப் பார்த்து சிரித்துவிட்டு, அப்பனே இரசாயனத்தை பற்றித்தெரிந்து கொள்வதற்கு அது வழியே அல்ல.
நீ இரசாயனப் பரிசோதனைச் சாலைக்குசென்று, எல்லா வகையான அமிலங்களையும், காரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு
ஏன் அவ்வப்போது உன் கைகளச் சுட்டுக் கொள்ளவில்லை ?
நீ அப்படிச்செய்திருந்தால் இரசாயனத்தைப் பற்றி ஞானம் உனக்கு வந்திருக்கும். என்றுசொல்லுவார்.
மதம் சம்பந்தமாக அப்படிப்பட்ட பெரிய முயற்சியை நீ எடுத்துக்கொள்கிறாயா ?
ஒவ்வொரு துறைக்கும் அதைக் கற்பதற்கென்று ஒரு தனி வழிமுறைஇருக்கிறது.
அத்தகைய முறையில்தான் மதத்தையும் கற்கவேண்டும