அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்து எரிந்துக்கொண்டிருந்த வத்தியானது
கையால் எப்படி அணைந்து போகிறதோ
அவ்வண்ணம் சகலத்திற்கும் ஆதாரமாகிய வாயு
ஆதாரமற்றதாகிறதினால் பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது.
இதற்கு ஆகந்துக மிருத்யு என்றுப்பேர்.
இது வைத்தியனுடைய மந்திர, தந்திர மங்களாசரணத்தினால் சாந்தியாகின்றது.
மரணகாலம் சம்பவிக்கும்போது எந்த விதமான மருந்தும் பிரயோஜனப்படாது.