எனக்கு ஞானத்தை அளித்து அஞ்ஞானம்
நிறைந்ததும் பிறப்பிறப்பு வடிவானதுமான
ஸம்ஸாரஸாகரத்தினின்று என்னைக் காப்பாற்றியவரும்,
போற்றுதற்குரியவர்களிற் சிறந்தவரும்,
எல்லாமறிந்தவருமான எனது குருநாதரை வணங்குகிறேன்.
அஞ்ஞான இருளிருந்தபொழுது இவ்வுலகம்
முழுதும் உண்மையெனப்புலப்பட்டது.
ஞான சூரியன் உதித்த பிறகு உலகை நான் காணவில்லை.
இது ஆச்சரியம்.