முக்தியை விரும்பி ஒருவன் கங்காஸாகரத்திற்கு
யாத்திரை செல்லலாம் விரதமிருக்கலாம்,
ஏழைகளுக்கு தானம் செய்யலாம்,
ஆனால் ஞானமின்றி இவை முக்கியளிக்க மாட்டா.
ஆத்மஞானம் இங்கேயே இப்பொழுதே முக்தியளிக்கிறது.
ஞானத்திலிருந்துதான் முக்தி என்பது
உபநிஷதங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஞானத்தால் இங்கேயே, இப்பொழுதே,
உடனே பயன்கிட்டுவதால்,
ஞானத்தால் என்ன பயன் என்ற அச்சத்திற்கு இடமே இல்லை.