புண்ணியமும், பாவமுமில்லை, இன்பமும், துன்பமும் இல்லை,
மந்திரங்களும், தீர்த்தங்களும், வேதங்களும், யாகங்களுமில்லை,
நான் புசிப்பவனன்று, புசிக்கப்படுவதுமன்று, புசிக்கும் செயலுமன்று,
அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான் சிவமே நான்.
எனக்குச் சாவில்லை, பயமில்லை, ஜாதிபேதமில்லை,
எனக்குத் தாயில்லை, தந்தையில்லை, பிறப்புமில்லை,
எனக்குச் சுற்றமுமில்லை, நட்புமில்லை,
எனக்கு குருவுமில்லை, சீடனுமில்லை,
அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.