வரத பித்தரோக நாடி லக்ஷணம் …..
வாதத்தில் நாடியானது பாம்பு, அட்டை, இவைகளின் நடையைப் பெற்றிருக்கும்.
பித்தத்தில் நாடியானது வாயசம்லாவகம், மண்டூகம் இவைகளது நடையை ஒத்து நடக்கும்.
சிலேண்ம ரோக நாடி …..
கபரோகத்தில் நாடியானது அன்னபக்ஷி, மயில், புறா, குருவி, கோழி இவைகளின் நடையை ஒத்து இருக்கும்.
வாத பித்த ரோக நாடி ….
சர்பத்தின் நடையைப்போலும் அடிக்கடி மண்டூகத்திபோலும் வாத பித்த தோஷ நாடி நடக்கும்.
வாத சிலேஷ்ம நாடி …..
சர்பத்தின் நடை, ராஜ அன்னத்தின் நடை இவைகளின் நடையை ஒத்து வாத சீதளத்தில் நாடியானது நடக்கும்.
பித்த சிலேஷ்ம நாடி லக்ஷணம் …..
மண்டூகத்தின் நடையும், மயில் நடை இவைகளை ஒத்து நடையையுடையதாயும், சூக்ஷ்மமாயும், சீதளமாயும்
நடக்கும் நாடி பித்த சிலேஷ்ம நாடி என்று பேர்.
பிரகாரந்தவாத சிலேஷ்ம நாடி லக்ஷணம் …..
அன்னத்தின் நடை, சர்ப்பத்தின் நடை ஒத்து வாத சிலேஷ்ம நாடி நடக்கும்.
வாத பித்த கப சந்திநபாத நாடி …..
லாவக பக்ஷியின் நடை, தித்தரிபக்ஷியின்நடை, மீன்குத்தி பக்ஷியின் நடை ஒத்து
திரிதோக்ஷ மிசிரமான சந்நிபாத நாடிநடக்கும்.
மேலும் ஒரு சமயம் மந்தாயும் உடனே தீவிரமாயும் நடக்கும்.