வாத கதி ….
. காற்று அடிக்கும்போது அதற்க்கு நேரில் இருக்கும் பொருள் விசேஷமாயும்,
பின்புறமாகிய பொருள் மந்தமாயும் அசைவதுப்போல்
மத்தியிலிருக்கும் வாதம் தன் எதிரில் இருக்கும் பித்தநாடியை அதி வேகமாயும்,
பின்புறமாயுள்ள கபத்தை மந்தமாயும் நடக்கச்செய்யும்.
பித்த கபநாடிகளுக்கு சுதந்திரமாகதானே நடக்கும்படியான சக்தி கிடையாது.
வாதநாடி கமனத்தை அனுசரித்து மற்ற நாடிகளுக்கும் கமனம் உண்டாகின்றது.
வக்கிரமமாய் சஞ்சரிக்கிற உலூகத்தைப்போல்
நாடிகளின் முதலில் இருக்கும் வாதநாடி நடந்தால் மற்ற இரண்டும் நடக்கும்
வாதம் நடக்காவிட்டால் மற்ற நாடிகள் நடக்காது.
சுக நாடீ லக்ஷணம் ..
… வியாதிஇல்லாதவனது நாடிக்கு பூலத, என்றுபேர்.
அந்தநாடி ஸ்திரமாயும் பலிஷ்ட்ட மாயும் நடக்கும்.
மேலும் காலையில் சீதளம் மற்றும் பகலில் உஷ்ணமாயும் சாயங்காலத்தில் தீவிரமாயும் நடக்கும்.
தோஷ நாடி லக்ஷணம் …..
வாத ரோகத்தில் வக்கிரமாயும்,
பித்தரோகத்தில் சஞ்சலமாயும்,
கபரோகத்தில் ஸ்திரமாயும்,
தொந்தரோகத்தில் மிசிரமமாயும் நடக்கும்.