இயற்கையாகவே மனம் அமைதியற்றது. ஆகவே, மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு முன், ஒருவன் மூச்சைக் கட்டுப்படுத்தித் தியானம் செய்யலாம். அது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவுகின்றது. ஆனால் அதிக அளவில் அதை செய்தல் கூடாது. ஏனெனில் அதனால் மூளை சூடடையும். நீங்கள் ஈசனது தரிசனத்தைப் பற்றியோ, தியானத்தைப் பற்றியோ பேசலாம். ஆனால் மனமே முக்கியம் என்பதை நினைத்துக் கொள். மனம் ஒரு நிலைப்படும்போது ஒருவன் எல்லா சித்திகளையும் பெறுகிறான். தொடர்ந்தாற்போல் தியானம் செய்தால் மனம் உறுதி பெற்று விடும். அப்போது அதை விட்டு விடவேண்டுமென்றே உங்களுக்குத் தோன்றாது. தியானம் செய்யக்கூடிய நிலையில் உங்கள் மனம் இல்லாவிட்டால், அதை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தவேண்டா. இம்மாதிரி சமயங்களில் இடத்தை விட்டு எழுந்து வணக்கம் செய்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். உண்மையான தியானம் தானகவே உண்டாகும் தன்மையுடையதாகும். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaApril 27, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஈசன்உண்மைதன்மைதியானம்மனம்மூளை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:வாழ்க்கையில் முடிவு செய்யNextNext post:நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 6 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..2Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023