தனுசு
1 முதல் 10 பாகைக்குள் — நரநாற்கால் ஆயுததிரேக்காணம்–
மனிதனின் முகம் உள்ளது,
குதிரைக்கொப்பான சரீரம்
ஆஸ்ரமம் வேள்வியில் பங்கு பெறும்அமைப்பும் உண்டு.
புதன் நாயகன்
ஸ்திரீ கிரகம்
பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்–
மனதைக் கவரக் கூடிய அமைப்பு,
செண்பக புஷ்பம், தங்கம் இவற்றிற்கொப்பான நிறமுள்ளவளும்,
கடலில் விளையும் பொருள்களை தரித்தவளும்,
பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும் ஆவாள்.
செவ்வாய் நாயகன்.
ஆண் கிரகம்
பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர ஆயுததிரேக்காணம்–
நீண்ட தாடியுள்ளவனும்,
செண்பக தங்கம் போன்ற நிறம் உள்ளவனும்,
தண்டத்தை தாங்கிக் கொண்டு உள்ளவனும்
சிறந்த ஆசனத்தில் அமர்ந்தவனும்
வெண்பட்டு, மான்தோலை தரித்துக் கொண்டுள்ளவனும் ஆவான்.
சூரியன் நாயகன்
அலிகிரகம்
பலம் – பாதம் வரை.