எந்த ஒரு குறிக்கோளை கொண்டிருந்தாலும் அதற்கு இணையான,
மாற்றான ஒன்றை எப்போதும் சிந்தித்து செயல்படுத்த தயராக இருக்க வேண்டும்
இந்த சூட்சுமம் நம்மை மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருந்து காக்கும்
அதனால் நம்முடைய சோகத்தின் அளவும் குறையும்
ஒரு குறிக்கோள் மட்டுமே நாம் கொண்டிருந்து எதிர்பாராவிதமாக
நம்முடைய அணுகுமுறையில் உள்ள ஏதாவது தவறினால்
அந்த குறிக்கோளை அடைய முடியாவிட்டால்
நாம் மனதளவில் வாங்கும் பின்னடைவுகள் நமது ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அழித்துவிடும்
அதற்கு முன் நாம் பெற்ற அத்தனை வெற்றிகளும் சந்தோஷங்களும்
சல்லிகாசு அளவு கூட மதிப்பில்லாமல் போய்விடும்.
அதனால் எதற்கும் ஒரு மாற்றை தேர்வு செய்து
செயல்படுத்த நாம் எப்போதும் தயராக இருக்க வேண்டும்