சகோதரி நிவேதிதை எழுதியது கேம்பிரிட்ஜ் மாஸ், ஞாயிற்று கிழமை. டிசம்பர் 10, 1910. அன்புமிக்க அன்னைக்கு, இன்று அதிகாலையில் ‘ சாரா ‘ வுக்காகப் பிரார்த்தனை செய்யும் பொருட்டு சர்ச்சுக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் எல்லோரும் ஏசுவின் தாயான மேரியைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தனர். திடீரென நான் உங்களை நினைத்தேன். உங்கள் பிரியமுகம், அன்பு நிறைந்த பார்வை, உங்கள் வெண்மையான ஆடை, உங்கள் கைவளையல்கள் எல்லாம் என் மனக்கண்முன் தோன்றின. சாராவிற்கு ஆறுதல் தந்து ஆசி கூறுவதற்கு ஏற்றவர் நீங்களே, என்று எனக்குத் தோன்றியது. மேலும், உங்களுக்குத் தெரியுமா? உங்கள் அறையிலே ஸ்ரீராமகிருஷ்ணருக்காக நடந்த மாலைப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு தியானம் செய்ய முயன்றேனே , அது எவ்வளவு அறிவீனமான செயல் என்று எண்ணினேன் உங்கள் காலடியில் சிறு குழந்தையைப் போல இருப்பதே போதுமானது என்று நான் ஏன் அறிந்து கொள்ளமுடியவில்லை? அன்புள்ள அன்னையே ‘, நீங்கள் அன்பு நிறைந்தவர்கள். உலகத் தோரது அன்பு போலவும், எங்களது அன்பு போலவும், பரபரப்பும் கடுமையும் உள்ளதாய் உங்கள் அன்பு இருப்பதில்லை. அது சாந்த மயமானது. எல்லோருக்கும் நல்லதையே தருவது. ஒருவருக்கும் தீங்கினை எண்ணாதது. அது விளையாடும் நீர்மை நிறைந்த, பொன்மயமான ஒளியே. சில மாதங்களுக்கு முன் கங்கைநதியில் பயணம் செல்லும் முன் உங்களைக் காண ஒடிவந்தேனே, அந்த ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு புனிதமானது, திரும்பி வந்ததும் உங்களைக் காணவந்த கணநேரந்தான் எவ்வளவு சிறந்தது, நீங்கள் ஆசி கூறி அனுப்பிய போதும் வீட்டிற்கு வரவேற்ற போதும் ஆச்சரியகரமான விடுதலை நிலையை உணர்ந்தேன். அன்பான அன்னையே, உங்களுக்கு ஒரு பாடலோ, வணக்கச் செய்யுளோ அனுப்பவேண்டுமென ஆசையுண்டு. ஆனால் எங்ஙனமோ அதுவும் மிதமிஞ்சிய இரைச்சலும் ஆரவாரமும் உள்ளதாய் தோன்றுகிறது. உண்மையில் தாங்கள் கடவுளின் வியக்கத்தக்க படைப்பே. உலகிற்கென ஸ்ரீராமகிருஷ்ணர் செய்து அளித்த அன்புப் பிரசாதக் கிண்ணமே, இந்தத் தனிமை மிகுந்த நாட்களில் தம் குழந்தைகளுக்கென அவர் விட்டுச்சென்ற ஞாபகச் சின்னமே. விளையாடும் சிறிது நேரம் தவிர மற்ற நேரங்களில் நாங்கள் உங்கள் முன், அமைதியாகவே இருப்போம். கடவுளின் வியத்தகு படைப்பெல்லாம், காற்றும், கதிரவனது ஒளியும், பூங்காவின் இனிமையும், கங்கையின் இன்பமும், அமைதியானவையே. நாம் அறிமைலே அவை நமது வாழ்விற் புகுந்து கலந்து விடுவன. உங்களைப் போன்ற மோன நிலையில் இருப்பவை இப்பொருள்கள். ஏழை ‘ சாரா ‘வுக்கு உங்கள் சாந்திப் போர்வையை ஈந்தருள்க. அன்றும், இன்றும் உங்கள் நினைவு, விருப்பு வெறுப்பற்ற உயர்ந்த காந்தம் அல்லவா? தாமரையிலை மீதுள்ள பனித்துளிபோல, உலகினைத் தீண்டாது இறைவனிடத்தே உலவும் இனிய ஆசி மொழியன்றோ அது? என் இன்னுயிர் அன்னையே, என்றுமே தங்களது அறியாக் குழந்தை நிவேதிதை. உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் விதம் பற்றி நாம் நிறைய பழக வேண்டும் அதற்க்கு இதுபோல் உள்ள கடிதங்கள் உதவும் Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaAugust 28, 20203 CommentsTags: divine power athmaHOLLY MOTHER SARADHA DEVIஅன்னை சாரதாதேவிநிவேதிதை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:அழகு.NextNext post:சித்த மருத்துவத்தில் குன்றிமணி (Abrus precatorious)Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023
நமஸ்காரங்க அய்யா நீங்கள் அனுப்பிய இந்த பதிவை ஒரு வருடம் கழித்து படிக்கிறேன். என்னை நானே சீ வெட்கமாக இல்லையா என்று என் மனதில் கேள்வி கேட்டு கொள்கிறேன். ஆனால் இந்த கடிதத்தை படிக்கும் போது நான் அவ்வப்போது படிக்கும் யோகியின் சுயசரிதம் புத்தகத்தின் தமிழ் நடை ஞாபகம் வருகிறது. இரண்டுமே உணர்வுகளின் இமய சிகரங்களை போன்றவைகளா அய்யா. ஓம் ஓம் ஓம் Reply
Nice
Nice
நமஸ்காரங்க அய்யா
நீங்கள் அனுப்பிய
இந்த பதிவை ஒரு வருடம் கழித்து படிக்கிறேன்.
என்னை நானே சீ வெட்கமாக
இல்லையா என்று
என் மனதில் கேள்வி கேட்டு கொள்கிறேன்.
ஆனால் இந்த கடிதத்தை படிக்கும் போது
நான் அவ்வப்போது
படிக்கும் யோகியின் சுயசரிதம்
புத்தகத்தின் தமிழ் நடை
ஞாபகம் வருகிறது.
இரண்டுமே உணர்வுகளின்
இமய சிகரங்களை போன்றவைகளா
அய்யா.
ஓம் ஓம் ஓம்