மரண லக்கின திதிகள் ….. விருச்சிகம், மேஷம் லக்கினத்தின் நந்தாதி திதியிலும், மிதுனம், கன்னிகை இந்த லக்னித்தின் பத்திராதிதியிலும், கர்க்கடகலக்கினத்தின் ஜயாதிதியிலும், கும்பம், சிங்கலக்கினங்களின், ரிக்த திதியிலும், தனுசு லக்கினத்தின் பத்திராதிதியிலும், மிதுன லக்கின ஜய திதியிலும், மகர லக்கின பூரண திதியிலும் இந்த லக்கின திதிகளில் ரோகங்கள் உண்டாகிறதினால் ரோகியானவன் மரணமடைகின்றான்.
திதிகளின் விவரணம் ….. செவ்வாய்க்கிழமை கிருத்திகை நக்ஷத்திரம் நந்தாதிதி, புதன் கிழமை, ஆயில்ய நக்ஷத்திரம் பத்திராதிதி வியாழக்கிழமை, மக நக்ஷத்திரம், ஜயா திதி வெள்ளிக்கிழமை, தனிஷ்டை நக்ஷத்திரம் ரிக்த திதி, சனிக்கிழமை பரணி, நக்ஷத்திரம் புரணதிதி, இவைகளின் ரோகங்கள் உண்டானால் ரோகமானது அசாத்தியமாகின்றது.