இயற்கை நாடி லக்ஷணம் …..
நாடியானது அதிகாலையில் கோமளமாயும், பகலில் உஷ்ணமாயும்
சாயங்காலம் வேகமாயும் இரவில் மந்தமாயும் நடக்கும்.
அதிக தாப சுர நாடி லக்ஷணம் ….
அதிக தாபமுடன் கலந்த சுர ரோகிக்கு மிகவும் வியர்வையும் நாடியானது சந்நிபாத நாடியைப்போலும் நடக்கும்.
சுர நாடி ….. சுரத்தில் நாடியானது உஷ்ணமாயும், வேகமாயும் நடக்கும்.சுரம், வாத ரோகம்,
சையோக நாடி லக்ஷணம் …..
சுரம், வாத ரோகம் இவைகளில் நாடி குறுக்கியும் நடக்கும். மேலும் ஸ்திரி சம்போகம் ( பெண் உறவு )
செய்தவனுக்கும் இரவிலும், அதிகாலையிலும் நாடி உஷ்ணத்துடன் கூடி நடக்கும்.
பித்த சுர ரோகிகடின பதார்த்த ( உண்டவன் ) முண்டவன் இவர்களது நாடி ….. பித்தசுரத்தில் நாடி துரிதமாயும்,
சரளமாயும் கிரமமாயும் நடக்கும். கடினபதார்த்ததங்கள் புசித்தவனது
நாடி ஒருவனை வெட்ட ஒடுபவனைப்போல் அதி சீக்கரமாய் நடக்கும்.
மலபந்தம் அசீரண நாடி லக்ஷணம் …..
மலபந்தத்திலும், அசீரணத்திலும் நாடியானது அசைந்துக்கொண்டிருக்கும்.
சிலேஷ்ம நாடி ….. சிலேஷ்மத்தில் நாடியானது சீதளமாயும் மந்தமாயும் நடக்கும்.