உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஷியாவின் ” கார்காவ் “ சிறையாகும்.  இங்கு கைதிகளை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.  மொத்தம் 40 ஆயிரம் கைதி – களுக்கு, மேல் உள்ளனர்.  மிகச் சிறிய சிறை ‘ சார்க் ‘ தீவில் உள்ளது.  இங்கு ஒரு வரை மட்டுமே அடைக்க இயலும்..

உரையாடலில் ஒரு பகுதி 49

இது புரிய அடிபட வேண்டும் அப்போது தான் தெளிவு எது என்று மனம் தேடும் அப்படி தேடும் போதுதான் செய்ததெல்லாம் எத்தனை சிறுபிள்ளைதனமானது என்று தெரிய வரும் அப்போது வரும் தெளிவில் தோன்றும் வாழ்வை அனுபவிக்க ரசிக்க ஆசை மிக பெரிய முட்டுகட்டையென்று அப்போது உண்டாகும் ஞானமே அமைதி  

உரையாடலில் ஒரு பகுதி 48

மனிதனின் நிம்மதி தொலைவதற்க்குண்டான காரணம் எது என்று யோசித்தால் வரும் பதில் இப்படி தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஆசை, அதற்கான முயற்சி, முயற்சியால் பரபரப்பு, வேகம் உடனே வேண்டும் என்கின்ற எண்ணம், அதனால் பயம், பயத்தினால் நாலு பேர் துணை, துணை செய்தவர்க்கு உதவி, உதவி செய்வதற்க்கு விளம்பரம் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செல்லும்போது நமக்கு மிஞ்சுவது நிம்மதி இழந்த நிலை

உரையாடலில் ஒரு பகுதி 47

 நாம் மறந்துவிட்ட காரணத்தால், ஒரு விஷயம் நடைபெறும் விதம் என்பது, நினைப்பது – மனம், செய்வது – உடல் எப்படி இது என்று நினைப்பது  அறிவு – புத்தி. எவர் நினைக்கிறார், எவர் செய்கிறார் இது தான் மிக பெரிய கேள்வி இதற்கு உண்டான பதில்களே வேதம், உபநிதஷம், பல்வேறு மதங்களின் கருத்துகள் இந்த கேள்விக்கு எத்தனை பேர்களால் எத்தனை காலங்களாய் எத்தனை பதில்கள் ஆச்சரியமும் அதிசயமான விஷயம் இது தான்.

உரையாடலில் ஒரு பகுதி 46

இப்படி மனதை புரிந்து கொண்டால் மனதை பழக்க, இயக்க, சுலபமாக இருக்கும் மனதை தன் இஷ்டப்படி இயக்கும் பயிற்சி பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளை நிம்மதியுடன் திருப்தியுடன் கடத்தி விடுவர். மனதை பண்படுத்தி, அதனை பயன்படுத்தி நித்திய ஆனந்ததிற்க்கு செல்லும் வழியை உபதேசிப்பதே நம் தேசத்தின் வேதா உபநிஷத்துகள் பண்பட்ட மனம் சரியான பயன்பாட்டிற்க்கு வரும் போது இறைவனை அடைய முடியும் என அறியும் அறிவுக்கான கல்வியே நமது நாட்டின் கல்வி அந்த கல்வி மறைந்து இருக்கிறது.

உரையாடலில் ஒரு பகுதி 45

மனிதனின் அடிப்படை குண விஷேசத்தை இப்படி பாகுபடுத்தலாம் அதாவது, ஆசை, பாசம், பற்று, அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாம் உண்டாவது மனதினாலேயே இதற்க்கு அடிப்படை காரணம் விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு விஷயங்கள் இதற்க்கு அடிப்படையான காரணம், உயிர் வாழ வேண்டும் எனும் ஆசை நான் என்ற நினைவு இது எல்லாவற்றிக்கும் அடிப்படை மூல காரணம் மாயை எனும் அறியாமை.

உரையாடலில் ஒரு பகுதி 44

செயல்களால்,சிந்தனைகளால், மனம் இருப்பதை அறிய முடியும் ஆனால் அதற்க்கு ஆதார மூலமான ஆன்மாவை அறிய முடியாது. மனம் இறந்த நிலையே ஆன்மா பிரகாசிக்கும் இடம்.  நாம் உயிருடன் இருப்பதை அறிய உணர முடியும். ஆனால், உயிரை அறிய உணர  முடியாது. இது போல் தான் மேல் சொன்னது.

புதன் 3

புதன் 9ம் இடத்தில் இருந்தால் அறிவாளியாக முடியும், பேச்சுவன்மை உண்டாகும், வர்த்தகத்துறை கல்வியில் தேர்ச்சிபெறக்கூடும். புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகி மகிழ்ச்சியோடு வாழ்வதுடன் அடக்கமுள்ளவளாகவும், சுமுகமாகப் பழகுகிறவளாகவும் விளங்குவார். புதன் பொதுவாக சிம்ம லக்கினக்காரகர்களுக்கு தனுசில் இருந்தால் தனயோகம் வரும். புதன், செவ்வாய் ஆகியோர் ஒருவருக்கொருவர் சமசப்தமாக இருந்தால் உயர்ந்த பெரிய சரீரம் அமைந்திருப்பர்.

புதன் 2

புதனுக்கு 1,2,5,6,9,10ல் கேது நின்றிடில் காதல் வரும், குரு, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி பெறும்.  செவ்வாய் பார்க்கில் தோல்வியுறும். புதன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் எழுத்து, சொந்த தொழில், கலைகளில் ஆர்வம் ஏற்படும். புதன் மீன லக்னக்காரகர்களுக்குக்கேந்திராதிபத்திய தோஷம் உடையவரானாலும் கெடுதலை பண்ணமாட்டார். புதன் பலம் கூடிய ரிஷப லக்னத்தாருக்கு விஷயஞானம், பேச்சில் கெட்டிக்காரத்தனம், பொருளாதார தட்டுப்பாடு இராது.

புதன்

ஜோதிட விதிமுறைகள் வாழ்க்கைக்கே வழிகாட்டியாக விளங்குகின்றன.   புதன் லக்னத்தில் நின்றிடில் படிப்பில் நாட்டம், கலையார்வம், பந்த பாசம் உள்ளவராய் திகழ்வர். புதனுடன் சூரியன் சங்கமித்தால் தாய் மாமனுக்கு கெடுதி விளைவிக்கும். புதன் பலமுடன் இருப்பின் விஷ்ணு பூஜை வாயிலாக சித்தி பெறுவர்.  புதன் 10ல் இருந்தால் கணிதம், ஜோதிடம், மனைவியிடம் அன்பு, வியாபாரம், வெளிநாட்டு வியாபாரம் தொடர்பும் உண்டாகும். புதனுக்கு 1,5,9,2,6,10ல் கேது இருப்பின் காதல் வரும். செவ்வாய் பார்க்கின் தோல்வி, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி…

செவ்வாய் 12

செவ்வாய் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ அந்த வீடும் கேந்திர வீடாக அமைந்தால் ருசிகரயோகம் ஏற்படும்.  இதனால் தைரியம், சாகஸம், வெற்றி மேல் வெற்றி பெருவர். செவ்வாய் 2ம் வீட்டிலோ, 4ம் வீட்டிலோ, 12ம் வீட்டிலோ இருப்பின் அவர் வீட்டுக்கு மூத்த பிள்ளையாவார். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலோ, கடகம், சிம்மத்தில் நின்றாலோ குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியாவது இவர்களால் பார்க்கப்பட்டாலாவது செவ்வாய் தோஷம் ஏற்படாது.

செவ்வாய் 11

செவ்வாய் கிரகத்திற்கு 7ல் சூரியன் நின்றால், அங்காரகன் வக்ரம் பெற்று உள்ளார் என்று கொள்ளவேண்டும். செவ்வாய் 12ல் நிற்பது தாம்பத்ய உறவு, படுக்கை சுகம் பாதிக்கப்படும் ஆயுள் பங்கமும் ஏற்படும். செவ்வாய் பெண் ஜாதகத்திலும், ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரனும் ஒன்றுக்கொன்று கேந்திரம் பெற்று இருந்தால் தாம்பத்திய உறவு பலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய்7ல் இருந்தால் இருதாரம் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடு 8ல் இருந்தால் மனைவியை இழந்து வாழ்வார், பின்னர் பல மாதர்கள் தொடர்பு ஏற்படும்,…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  76

வாதாதி சர பேதங்கள்  சிலேஷ்ம தேஹிக்கு கம்பீரமாக சரம், பித்தேஹிக்கி சீக்கிர சவரம் வாததேகிக்கு சமசரம், பித்ததில் துரிதகதி, சிலேஷ்மத்தில் ஸ்திரகதி, வாதத்தில் மந்தகதி சேஷ்டை உண்டாகி இருக்கும். வாதாதி பிரகிருதி தேஹ லக்ஷணம்  பித்த ரோகி தேகம் உஷ்ணமாயும், வாதரோகத்தால் சீதலமாயும் சிலேஷ்ம ரோகியின் தேகம் சலமயமாயும் இருக்கும் இவைகளைத்தான் தேகத்தின் சேஷ்டைகள் என்று சொல்லப்படுகின்றது. ரோகமானது சாத்தியமென்று, அசாத்தியமென்றும் இரண்டு விதமாயிருக்கிறது கால சம்பிராப்தியால் சகலமும் நிஷ்பலமாகி ஜீவியின் இருப்பு மரணமானது நிச்சயமாகின்றது காலஞானமில்லாததினால்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  75

காலசங்கிய பிரமாணானி இருபத்தோராயிரத்தி  அறு நூறு( 21,600) சுவாசமானது இரவும், பகலும் ஒடுகின்றது இதற்குதான் பிராணன் என்று பேர், இதுகாலபிராப்தியால் நாசம் சம்பவிக்கின்றது. சரீரம் என்கிற வீட்டில் ரக்ஷகப்படுகின்றது, உள்புரமாக மூச்சானது பத்து அங்குலமும் மூச்சு வெளியில் விடும்போது பனிரெண்டு அங்குலமும், போகின்றது ஆகையால் மனது நிறுத்தி வருதலும், போதலும் சமானமாயிருந்தால் காலதரிசனமாகா.  சிரஞ்சீவியாயிருப்பான். காலபேதத்தால் வாத பித்த சிலேஷமென்கிற தாதுவினால் தேகத்தின் சகல குணங்களும் நிச்சயப்படுகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  74

இடகலை நாடி .; நாசிகையின் இடது பாரிசமாக ( வழி ) வரும் காற்றை இடகலை என்றும், சந்திரனென்றும், பித்துரியானமென்றும் பதினாறுகலைகளை உடையதென்றும் சொல்லப்படுகின்றது. இனி சுழிமுனையென்னும் நாடியை குறித்து இது வைத்திய சாஸ்திரமாதலால் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.  ஓ பார்வதி, சர லக்ஷணங்கள் முதலியது சர சாஸ்திரத்தில் புகட்டி இருக்கிறேன் இது வைத்திய கிரந்தம் ஆதலால் அவ்விஷயங்களை விவரமாய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது சரம் பலதென்று தெரியக் காட்டினேன் இனி அதுகளின் மாறுதலால் உண்டாகும்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  73

சூரிய சந்திராதி சுர லக்ஷணம் ..  இடாசலாம நிஸ்வாச சோம மண்டல கோசரா  பித்ருயான மிதிஞேயம் வாமமாசிரித்யதிஷ்டதி  தக்ஷிணே பிங்களா நாடி வஹ்ணி மண்டலகோசரா தேவயானமிதிஞேயம் புண்யகர்மானுகாரணி. வலது பக்கத்து நாசிகை துவாரமாய்வரும் உஸ்வாச நிஸ்வாச ரூபமாய் இருக்கும் காற்றை பிங்களை என்றும், சூரியனென்றும், தேவயானமென்றும், புனராவிருத்தி ரஹிதமென்றும் புண்ணிய கருமங்கள் செய்யும்படியானதென்றும் பன்னிரெண்டு அங்குலம் பாயுமென்றும் அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  72

ஸ்வர பேதம் …..  சூரிய சுரத்தில் உதயமாகி அஸ்தமானத்தில் சந்திரன் இருந்தால் மிகவும் சுபமாகும்.  இது தவிர்த்து சந்திரனுக்கு பதில் சூரியனும், சூரியனுக்கு பதில் சந்திரனும் உதயமானால் அசுபம் ஹானி பீடை முதலியது உண்டாகும். கிரம சுர லக்ஷணம் .. கிரமமான சுரம் உதயமாகிலும் சுபம் வாய்க்கும் என்றும் வினவ தேவியார் சுவாமியைப் பார்த்து ஓ நாயகா, தாங்கள் கூறியது ஒன்றும் எனக்கு தெரியவில்லை. பார்வதி பிரசனை ..   சூரியனென்னறால் யார், சந்திரனென்றால் யார் அவைகளின் ரூப…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 39

 4 – இல் பாவர், 4 – க்குரியவர் பாதகாதிபதி சாரம் பெற்று பாவரால் பார்க்கப்பட்டால், தாய்க்கும், ஜாதகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். தாயை ஈனமான வார்ததைகளை சொல்லி வேதனைப்படுத்துவார். அதை துச்சமென நினைத்து தாய் ஜாதகருக்காக கடைசி வரையில் போராடுவாள்.  4 – க்குரியவர் பாதகம் பெற்று, 12 – க்குரியவர், 4 – இல் அமர்ந்து பாதகாதிபதியாலும், 6 – க்குரியவராலும் பார்க்கப்பட்டால், இருதயம், மார்பு போன்றவைகளில் நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெறுவர்.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 38

 4 – க்குரியவர் ராகு சேர்க்கை பெற்று, சனி, சக்கிரன், குரு தொடர்பு 5 – க்குரியவருக்கு கிடைத்தால், புதையல் யோகம் அல்லது திடீர் லாட்டரி யோகம்.  4 – இல் 1,2,3, 10 – க்குரியவர் சேர்க்கை, இவரை யாரும் பார்க்காமல் இருக்க, 4 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை இருந்து, 6, 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றிருப்பினும், இவன் தாய், ரோகி, மருந்தீடு, செய்வினை, ஏவல், தோஷத்தால் சித்த சுவாதீனமற்றவன் குடும்பம்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 37

 4 – க்குரியவர் பாவர் சாரம் பெற்று, 4 – க்கு 8 – இல் அமர்ந்து நாலை பாவர் பார்த்தாலும், 4 – க்குரியவர் நீச்சம் பெற்று, 4 – ஆமிடம் உபயராசியாகி, லக்கினாதிபதியின் தொடர்பை பெற்றாலும், சந்திரன், சுக்கிரன் பலம் குறைந்து, 4 – க்குரியவர் பலம் பெற்று உபயராசியிலிருந்து லக்கினி£திபதியின் தொடர்பை பெற்று உள்ள ஜாதகர்களுக்கு 2 தாய் ஏற்படும். தன் தாயின் வளர்ப்பு குறையும். 4– க்குரியவர் நின்ற வீட்டிற்கு அதிபதி…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 36

 4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து லக்கினாதிபதி 8 – லிருக்க, நிலபுலம் உண்டு. 4 – க்குரிய திசையும், 4 – இல் உள்ளவர் திசாபுத்தியிலும் சொந்த வீடுமனை அமையும்.  4 – க்குரியவர் 11 – ல் பாவருடன் சேர, 6 – க்குரியவர் 7 – இல் 4 – க்குரியவரால் பார்க்க, சந்திரன் 2 – இல் அமர பிறந்தவனின் தாய், பல தொல்லைகளுக்கு ஆளாவாள். அந்தக் குடும்பம்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 35

 4 – மிடத்தை பாபர் பார்த்து, 4 – க்குரியவர், 5, 9 – லிருந்து, 5 – க்குரியவர் பார்த்தால், பூர்வீக சொத்துக்கள் மாறி புதிய பொலிவுடன் திகழும். மாதுர் வகை சொத்து அழியும். பிதுர் வகை சொத்து விர்த்தி அடையும். நிலம், வீடு, வாகனங்கள் கடின உழைப்பின் பேரில் கிட்டும். 4 – க்குரியவர், பாதகம் பெற்று, 4 – இல் பாவர் பாதகாதிபதி சாரம் பெற்று, சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றால் பிரயாணங்களில்…

எது பிரம்மமுகூர்த்தம் ?

தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம் கடமையில் வழுவாத நேரம் அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்

எது இராகு காலம் ?

அகங்காரம் கொள்ளும் நேரம் பாசம் கண்களை மறைக்கும் நேரம் ஆசைகள் எல்லையை மீறும் நேரம் கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம் தேக கவர்ச்சியில் மூழ்கும் நேரம்

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முக்குறுணி விநாயகர் தோன்றிய வரலாறு

திருமலை நாயக்கர், மதுரையை ஆட்சி செய்த காலகட்டம் அது. அந்த மன்னனுக்கு தீராத வயிற்று வலி உண்டானது. பல வைத்தியங்களைப் பார்த்தும், அது சரியாகவில்லை. எனவே தன்னுடைய வயிற்றுவலி நீங்கினால், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக் குளம் கட்டித்தருவதாக வேண்டிக்கொண்டார். வேண்டுதல் நிறைவேறியதும், தெப்பக் குளம் அமைக்கும் பணி தொடங்கியது. குளம் தோண்டும் பணியின் போது, நிலத்துக்குள் இருந்து  விநாயகர் சிலை கிடைத்தது. அவரை மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர்.…

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 3

சேலம் மாவட்டத்தில் ஆலத்தூர், கல்வராயன்மலை, கராங்காடு, உத்தமசோழபுரம், பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் ஔவையார் ஆலயங்கள் இருக்கின்றன

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 2

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூா், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, இடும்பாவனம், துளசியாபட்டினம், திருவையாறு, குத்தாலம் ஆகிய இடங்களில் ஔவையார் கோவில்கள் காணப்படுகின்றன

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 1

 கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை ஆகிய பகுதிகளில் ஔவையாருக்கு ஆலயங்கள் உள்ளன.

அஞ்சலிவரத ஆஞ்சநேயர்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவரான ஆஞ்சநேயர் 16 அடி உயரத்தில் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இந்த சிலை மிகப்பெரிய சாளக்கிராமக் கல்லால் செய்யப்பட்டது.

இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்

இஞ்சியின் இயல்பு இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில்சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருகவேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்துசாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலேதாஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும் தொண்டை வலி ஆஸ்துமா போன்ற…

உரையாடலில் ஒரு பகுதி 43

மரணத்திற்க்கு பிறகும் உண்டாகும் நித்திய ஆனந்தமே நம் முன்னோர்களின் ஆய்வாக இருந்தது.  மேனாட்டு கல்வி முறை – வாழ்க்கை முறை நமது தேச மக்களின் இயற்கையான  கல்வி முறைக்கும், வாழ்க்கை முறைக்கும் நேர் விரோதமானது.  சாதாரண மக்களால் நன்கு தேர்ச்சியடைய முடியவில்லை இயற்க்கையான கல்வி முறையும் கிடைக்கவில்லை விஞ்ஞானத்தை விரும்பினர், வேதாந்தத்தை விட்டனர். விஞ்ஞானம் இவர்களின் விருப்ப பொருள் ஆனது. வேதாந்தமோ இவர்களின் ‍உதாசீனத்தால் தூசி படிந்து மறைய தொடங்கியது. இதனால் இரண்டிலும் நிறைவு இல்லாத நிலை…

உரையாடலில் ஒரு பகுதி 42

நம் முன்னோர்கள் விஞ்ஞானத்தின் முற்றிய வளர்ச்சியை முழுமையாய் அறிந்திருந்தனர்.  அதனாலேயே அதை மறைத்தும் மறந்தும் விட்டனர் காரணம் அவற்றால் ஆக்க பூர்வமானதைவிட அழிவு பூர்வமானதே அதிகம், அடுத்தது குறுகிய கால தேவைக்கு மட்டுமே பயன்படும்.  அதனால், ஏற்படும் தீய விளைவுகளோ, வெகு காலத்திற்க்கு சமுதாயத்திலேயே படிந்து நிற்க்கும்.

உரையாடலில் ஒரு பகுதி 41

கணிதம், வான ஆராய்ச்சி , கலைகள், தொழில்களில் நம் முன்னோர்கள் ஆக்க பூர்வமான அறிவோடு அளவோடு இருந்தனர். யாருக்கு எது தேவையோ அது அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இப்போது எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை அதனாலேயே தீமையும் அழிவும் பெருகி விட்டது. அஸ்திர சஸ்திரங்களில் நம் முன்னோர்கள் வெகு அறிவுடனும், திறமையுடனுமே இருந்தார்கள் ஆனால் அதை பொது மக்களின் கைகளுக்கு கிடைக்குமாறு செய்யவில்லை, இப்போது எது வேண்டுமானாலும் பொது மக்கள் கைக்கு மிக விரைவில் வந்து விடுவதால்…

உரையாடலில் ஒரு பகுதி 40

சின்ன, சின்ன விஷயங்களுக்கு மிக பெரிய விலையாகிய தன்னை இழந்தது தான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பதை மனிதன் அறியவில்லை.  அதில், கிடைக்கும் சுகமும், மகிழ்ச்சியும் தற்காலிகமானது என்பதை மனிதன் அறியவில்லை. மன வலிமை பெற்ற மனிதனுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஓர் அளவு போதும் தற்போதய மனிதன் மன வலிமை அடைய உள்ள பயிற்ச்சிகளை மறந்து விட்டான் அதனால் அவன் எப்போதும் சந்தேகம், கவலை, துக்கம் போன்றவற்றின் பிடியில் சிக்கி வாழ்க்கையை அனர்த்தமாக்கி விட்டான். ஆயுத கண்டுபிடிப்புகளே இதற்க்கு…

உரையாடலில் ஒரு பகுதி 39

 நமது முன்னோர்கள் ஆராய்ச்சி பொருளாய் எடுத்தது பிரபஞ்ச இருப்பை, இயல்பை அதனுடன் தொடர்புடைய இயற்கையை இப்படி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டதால் நாம் பேசும் விஞ்ஞானம் போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.  நம் முன்னோர்கள் ஆன்ம விஞ்ஞானத்தை முதன்மை படுத்தியதால் மற்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.  ஒரு விதத்தில் பார்த்தால் நிரந்தரமற்ற வாழ்க்கையை பெரிதாய் எண்ணி வேண்டாத வினைகளை வளர்த்துக்கொள்ள அஞ்சினார்கள் தற்போதய விஞ்ஞான வளர்ச்சி ஆக்கத்தை விட அழிவில் அல்லவா வளர்ந்து நிற்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால்…

உரையாடலில் ஒரு பகுதி 38

பஞ்ச பூதங்களால் ஆன மனிதனுக்கு அந்த பூதத்தினுடைய தன்மையே மனிதன் திறமாகிறது.  மனிதனின் திறமையாகிறது. பூமி — இது போல உறுதி உடையதாக மனமும் உடலும் வேண்டும். நீர் — இது போல நினைவுகள் நம்மை இழுத்து செல்கின்றது.  ஈரம்  என்ற அன்பு, கருணை, தியாகம் கொண்டுள்ளது. நெருப்பு –  கோபம், தூய்மை கொண்டுள்ளது. வாயு –  போல கண்ணுக்கு தெரியாத கற்பனைகளில் சிறகடித்து பறக்கின்றது, மன காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுகின்றது. ஆகாயம் –  போல பரந்து…

உரையாடலில் ஒரு பகுதி 37

பிராணணின் செயல்பாட்டால் உடலில் நோய் ஏற்படவும் நோய் குணப்படுத்தவும் முடியும் அது போல மன வலிமையையும் மன தளர்ச்சியையும் அடைய முடியும். பிராணணின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் உடல் நோய்வாய்படுகிறது.   உடல் நோய்வாய்பட்டால் மனம் தளர்ந்து சோர்ந்துவிடுகிறது. மனம் சோர்ந்து விட்டால் புத்தி தெளிவாய் இருப்பதில்லை, தெளிவில்லாத புத்தியின் செயல்கள் நம் வாழ்க்கைக்கு பெரும் கேடு விளைவிக்கின்றது.

உரையாடலில் ஒரு பகுதி 36

இப்படிப்பட்ட மனதை சரியான படி உபயோகித்தால் மனிதன் மாமனிதன் ஆகலாம் இதிலிருந்து நமக்கு ஒன்று தெரியும் மனிதன் வேறு மனம் வேறு என்பது தான் மனிதன் இல்லாவிட்டால் மனம் இல்லை, மனமே சரியில்லையென்றால் அவன் மனிதனே இல்லை மனதின் செயல்பாட்டால் உடலை கட்டுப்படுத்த முடியும் உடலின் செயல்பாட்டால் மனதை கட்டுபடுத்துவது என்பது முழுமையாக முடியாது ஆனால் பிராணணின் செயல்பாட்டால் உடல், மனம் இரண்டையும் கட்டுப்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும்,

உரையாடலில் ஒரு பகுதி 35

மனிதன் தான் அறிந்தவற்றை அனுபவித்து சிரிப்பதோ, அழுவதோ, சுகப்படுவதோ, துக்கப்படுவதோ ஆசை, கோபம், சந்தேகம் குழப்பம் போன்றவற்றை மனிதன் அனுபவிப்பது மனதின் மூலமே அன்பு, பாசம், பரிவு, நட்பு, தியாகம் பெருமை பொறுமை போன்றவற்றின் நிலைகளமும் இந்த மனமே.

உரையாடலில் ஒரு பகுதி 34

மனம் என்ற ஒன்றை கொண்டதாலேயே  அவன் மனிதன் என்ற பெயர் பெற்றான் மனம், அறிவு ஆகும், மனம் புத்தியாகும் எது எல்லாம் எப்படியெல்லாம் ஆனாலும் அதனடியில் மனம் இருக்கும், அதற்க்கும் அடியில் பிராணன் இருக்கும் இதை புரிந்து கொண்டால் நமக்கு கொஞ்சம் வசதியாய் இருக்கும் நம் செயல்கள் சிந்தனைகளை அறிய  –

உரையாடலில் ஒரு பகுதி 33

ஐம் பூதமென்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். ஐம் பொறிகள் என்பது கண், காது, மூக்க, நாக்கு, மனம். ஐம் புலன்கள் என்பது பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், சிந்தித்தல் மேலே சொல்லிய விஷயங்களில் மனிதன் ஈடுபட ஆதாரமாய் இருப்பது பிராணன், இந்த பிராணன் இல்லையேல் அவன் சவமாகி விடுவான்.  சவமானவனிடம் ஆனந்தத்தை அனுபவிக்கும் ஆற்றல் இல்லை எத்தனை பொறிகள் – புலன்கள் இருந்தாலும் அனுபவிக்க பிராணன் மட்டுமே முக்கியம் அதுவே ஜீவ சக்தி, அதுவே…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 33

உருவம் இருக்கும் எதனுள்ளும் அதனை இயக்கும் உருவமில்லா  சக்தி ஒன்று இருந்தே தீரும் என்பதே அது நாம் உருவம்  கொண்டிருக்கிறோம் நாம் இயங்க நம்முள் உருவமற்ற காற்று தேவைப்படுகிறது. அது போல தான் எல்லாவற்றிற்கும் அண்டங்களாலும் அணுவானாலும் இது தான் விதி இதனையே பண்டைய சித்தர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் இருக்கிறது என்று கண்டு உணர்ந்து கூறினார்கள். மனிதன் செயலில் கற்பனையெனும் பாகம் நம்மை வளமாக்கவும் செய்யும், நாசமாக்கவும் செய்யும் அது என்ன செய்யும், எப்படி செய்யும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 32

நாம் மனதின் ஒரு செயலான கற்பனை எனும் விஷயத்தை பற்றி நாம் நன்கு தெரிந்து கொண்டால் அதை செயல்படுத்தும் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நம் வாழ்வில் நாம் துன்பம், சோகம், தோல்வி, விரக்தி போன்றவற்றை அடியோடு ஒழித்துவிட்டு இன்பம், மகிழ்ச்சி, வெற்றி, உற்சாகம் எனும் நிலையினை இறக்கும் வரை அனுபவிக்கலாம் கற்பனையின் திறன் எப்படிப்பட்டதென்றால் அதால் கடவுளையே உருவாக்க முடியும் இன்னும் ஒரு படி மேலேபோய் யோசித்தால் அதனைக் கொண்டு நாம் கடவுளாகவே ஆக முடியும். நான்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 31

 கனவுகள் காண்பதை விட்டுவிட வேண்டாம் அதே போல் எல்லா கனவுகளும் பலித்துவிடும் என்றும் எண்ண வேண்டாம். பலிக்காத கனவுகளுக்கு மாற்று முறை கையாள எப்போதும் தயாராக இருங்கள் தேவைப்பட்டால் அந்த நிறைவேறாத கனவுகளை மறக்கவும், அழிக்கவும் சிறிதும் தயக்கம் காட்டாதீர்கள் அப்படி அதை அழித்துவிட்டு வேறு கனவுக்கு சென்றுவிடுங்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 30

தோல்விகளும், கவலைகளும் நம்மை அலைக்கழிக்கும் போது நாம் வாழும் வழிக்கான உபாயத்தினை கண்டுணர மிகுந்த அக்கரையை ஏற்படுத்தி நமது முயற்சியினை மிக அதிகமாக அதிகரிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் தோல்விகளை தடுக்க தவிற்க சில முன்னேற்ப்பாடான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் ஆக வேண்டும் எப்படி என்றால் எந்த விஷயத்திற்கும் இரண்டு விதமான ஆலோசனைகளும் அதற்கு தகுந்தாற்போல் தற்காப்பு நடவடிக்கைகளையும் வரையறுத்து கொள்ளவேண்டும் அதற்கு உண்டான சூழ்நிலைகளை உருவாக்கி நாம் நமது திறமையினை மெருகேற்றி கொள்ள வேண்டும். அப்போது…

எனது போர் முறை 26

இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான். ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி

எனது போர் முறை 25

தேசிய வாழ்க்கைக்குத் தேவையான உணவைக் கொடுங்கள், ஆனால் வளர்ச்சி அதைப் பொறுத்தது. அது வளர்வதற்கு யாரும் கட்டளையிட முடியாது, நம் சமூகத்தில் தீமைகள் அதிகமாக உள்ளன, ஆனால் அதுபோல் மற்ற ஒவ்வொரு சமூகத்திலும் தீங்குகள் இருக்கவே செய்கின்றன. இங்கு பூமி, சிலவேளைகளில் விதவைகளின் கண்ணீரால் நனைகிறது என்றால் அங்கே மேலை நாட்டின் காற்று திருமணமாகாத பெண்களின் ஏக்கப் பெருமூச்சால் நிறைந்துள்ளது.

எனது போர் முறை 24

அற்புதமான இந்தக் தேசிய எந்திரம் காலங்காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேசிய வாழ்க்கை என்னும் இந்த ஆச்சரியமான ஆறு நம் முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நல்லதா, எந்த வழியாக இது செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? அதைச் சொல்லும் தைரியம்தான் யாருக்கு இருக்கிறது? ஆயிரக்கணக்கான சூழ்நிலைகள் அதைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு தனிப்பட்ட சில உணர்வுகளைக் கொடுத்து, அதைச் சிலகாலத்தில் நிதானமாகவும் மற்ற காலங்களில் வேகமாகவும் ஓடச்செய்கின்றன. அதன் இயக்கத்தைப்பற்றிக் கட்டளையிட யாருக்குத் தைரியம் உள்ளது?…

எனது போர் முறை 23

அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன். என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்தச் சிறிய அணிலைப்போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அதுதான் என் நிலை.

எனது போர் முறை 22

நான் அவர்களுக்கு முதலில் சொல்வது இதுதான் எனக்கென்று ஒரு சுயேச்சை உள்ளது, எனக்கென்று சிறிது அனுபவமும் இருக்கிறது, உலகிற்குத் தர என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அதை அச்சமின்றியும் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப் படாமலும் நான் கொடுக்கவே செய்வேன். அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடிவரையிலான மொத்தச் சீர்த்திருத்தத்தை விரும்புகிறேன்.

எனது போர் முறை 21

இந்த சொசைட்டிகளுள் சில, தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு என்னைப் பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. இது ஒரு விபரீத முயற்சி. பதினான்கு வருடங்கள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்தித்த ஒருவனை, அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று தெரியாத ஒருவனை அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது. பூஜ்யத்திற்குக் கீழே முப்பது டிகிரி என்று வெப்பமானி காட்டுகின்ற பிரதேசத்தில், ஏறக்குறைய உடைகளே இல்லாமலும், அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமலும் வாழத் துணிந்த ஒருவனை…

எனது போர் முறை 20

இப்போது சென்னையிலுள்ள சீர்திருத்தச் சங்கங்களுக்கு வருகிறேன். அவர்கள் என்னிடம் கனிவு காட்டினார்கள், அன்போடும் பேசினார்கள். தங்களுக்கும் வங்காள சீர்திருத்தவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நானும் மனமுவந்து அதனை ஏற்றுக் கொள்கிறேன். சென்னை மிக அழகிய நிலையில் உள்ளது என்று நான் அடிக்கடிச் சொல்வது உங்களுள் பலருக்கு நினைவிருக்கும் ஒன்றைச் செய்வது உடனே அதற்கு எதிராக இன்னொன்றைச் செய்வது- வங்கச் சீர்திருத்தவாதிகளின் இந்த விளையாட்டை சென்னை இன்னும் பின்பற்றவில்லை. இங்கு எல்லாவற்றிலும் நிதானமான அதேவேளையில் உறுதியான…

சுந்தர யோக சிகிச்சை முறை 104

குடலின் பல பாகங்களில் தள்ளப்பட்ட இப்பொருள், அதாவது மலம், தேங்கிக் கொள்ளுகிறது. இந்நிலைமையே மலச்சிக்கலென்று கூறுகிறோம் இப்பொருள்கள் தங்குமிடங்களில் அழுகி, நாறி விஷங்களை உண்டாக்கி அபாயமாக மாறுகின்றன.  எல்லா இடங்களைக் காட்டிலும் சீகம் (CECUM) என்று சொல்லக் கூடிய  குடல் பாகம்தான் மிகவும் அபாயகரமானது! எக்காரணங்களால் இம்மாறுபாடுகள் ஏற்படுகின்றன

சுந்தர யோக சிகிச்சை முறை 103

பல வியாதிகள் மலச்சிக்களிலிருந்து ஆரம்பிப்பது போலவே, எந்த ஜுர வியாதிகள் வந்தாலும் மலத்தைக் கட்டி விடுகிறது. இதை அறிந்தே வைத்தியர்கள், மருந்துகளில் பேதியாகிற வஸ்துக்களை சேர்க்கிறார்கள்.  குடலில் மலம் தங்கவே விஷம் உண்டாகிறது. இது உடலெல்லாம் பரவுகிறது.  இதைச் சுய – விஷ – வெறி ( AUTO – INTOXICATION ) என்கிறார்கள். உடல் தனக்குத்தானே விஷத்தைக் கக்கிக் கொள்கிறது.  இந்த அபாயகரமான நிலை குடலில்தான் ஏற்படுகிறது.  அதாவது, பெருங் குடலினுடையதே இப்பொறுப்பு, இக்குடல் உபயோகமற்ற…

சுந்தர யோக சிகிச்சை முறை 102

நோய்கள் பல— வெளியில் இருந்தால் தான் மலம் கொடியது என்ற நினைவு தவறு. இயற்கை இதை உடலில் வைக்க பாதுகாப்பை நிரப்பி இருக்கிறதென்று எண்ணுவதும் அறியாமையே.  தினம் இது சரியாக வெளியே போகா விட்டால் தலைவலி, பசியின்மை, பாசம் படர்ந்த நாக்கு. அபெண்டிஸைடிஸ், தூக்கமின்மை, நரம்புகளில் சோர்வு, குடல் வீக்கம், கீழ்வாதம் ( ருமேடிஸம் )  காசநோய் இன்னும் பல வியாதிகள் உண்டாகு மென்று டாக்டர் கெல்லாக் ( Dr. KELLOGG )  சொல்லியிருக்கிறார். இந்தப் பட்டியலில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 101

வெளியில் பார்த்தவுடன் வாந்தி எடுக்கும் மகான்.  கொஞ்சம் தன் உடலை ஞாபகம் செய்து கொள்ள வேண்டும். மலம் சேர்க்கணக்காய் இவர் குடலில் தங்கி நிற்கும். பலநாள் பண்டமாய் கேட்பாரற்று, நாறிக் கிடக்கும். பல வருடங்களாக வெளிப் போக்கின்றி வரண்டுகூட இருக்க மென வைத்திய நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை வயிற்றில் வைத்துக் கொண்டு, வாசனையை மேல் பூசி பகட்டு அங்கிகளால் மூடி, நாகரீக மனிதரென்று பெருமையில் உலாவுகிறார்கள் பலர். உள் உடல் சுத்த மில்லாத வாழ்க்கை நாகரீகமுற்றதாகுமா?

சுந்தர யோக சிகிச்சை முறை 100

மலம்சிக்கக் கொள்வாய் பிணிகள் பலகாண் மலமகல அன்றன்றே பண்பு. பெ ரு ங் கு ட ல் மலம் – பெருங்குடலின் பெரிய பிணி மலச்சிக்கல் மலம் என்றாலே  அருவருப்பு உண்டாகும்.  இதைக் கண்டவுடன் பலர் வாந்திகூடச் செய்து விடுவார்கள்.  பார்க்கவும், தொடவும், வெறுப்பை விளைவிக்கக் கூடியது மட்டுமல்ல, இதை சரியான முறையில் விலக்காவிட்டால் மிகுந்த அபாயத்தை உண்டாக்கும். ஊரில் சேரும் மலம் ஊரையே ஒக்கும், வயிற்றிலே சேரும் மலம் ஆளையே கொன்றுவிடும்.  இவ்வளவு கொடிய வஸ்து…

ஈக்காடு பஞ்சவர்ணேஸ்வரர்

திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர் என்பது திருப்பெயர்.

திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள்

திருப்பதி திருமலையில்1.த்ருவ ஸ்ரீநிவாசர், 2. போக ஸ்ரீநிவாசர், 3. கொலுவு ஸ்ரீநிவாசர், 4. உக்ர ஸ்ரீ நிவாசர், 5. மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

விருஷப மலை – அஞ்சன மலை-ஆனந்த மலை

விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தா ள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘ அஞ்சன மலை’ எனப்படுகிற து. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட் டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.…

வேதமலை கருட மலை:

வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை (ஸ்ரீனிவாசன்) பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

வேங்கட மலை:

வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்க டாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

பூனையை விட

பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது. தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!

எனது போர் முறை  19

எல்லோருக்கும் சேவகனாக இருப்பதன் மூலம் தான் ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழிதேடுகிறான். பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித்தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த வெளி நாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்த்து அல்ல, மேலை நாகரீகத்தின் விளைவைப் பாருங்கள். இருபது ஆண்டுகள் அதன் ஆதிக்கத்தில் வாழ்ந்ததால் தன் சொந்த நண்பனையே அன்னிய நாட்டில் பட்டினிபோட விரும்பிய அந்த மனிதரின் நினைவுதான் எனக்கு வருகிறது. அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? நண்பன் பிரபலமாகி விட்டான், தான் பணம் சம்பாதிப்பதற்குக்…

எனது போர் முறை 18

ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்க்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை அவன் எப்படி அனுமதிப்பான் ? எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து, யாருமறியாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால் அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார். எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக்கொள்வதற்காகப் பல நாட்கள் இவ்வாறு செய்தார். அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரே என் தலைவர், அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.

எனது போர் முறை 17

சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இதையெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைச் சூத்திரன் என்று அழைப்பதால் நான் எந்த வகையிலும் வேதனைப்படவில்லை. எனது முன்னோர்கள் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமாகவே இருக்கும். நான் தாழ்ந்த குலத்தினனாக இருந்தால் மகிழ்ச்சியே அடைவேன். ஏனென்றால் பிராமணர்களுக்கெல்லாம் பிராமணராக இருந்து கொண்டு ஒரு தாழ்ந்த குலத்தினனின் வீட்டைச் சுத்தம் செய்ய விரும்பிய ஒருவரது சீடன் நான். அவன் இதை அனுமதிக்க மாட்டான்;

எனது போர் முறை 16

எனது ஜாதி ஒதுக்கப்படுமானால் இன்றைய இந்திய நாகரீகத்தில் என்ன மிஞ்சும்? வங்காளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியாவின் மகத்தான தத்துவ அறிஞர், மகத்தான கவிஞர், மகத்தான வரலாற்று அறிஞர், மகத்தான தொல் பொருள் ஆய்வாளர், மகத்தான சமய போதகர் என்று ஒவ்வொருவரும் என் ஜாதியைச் சேர்ந்தவர்களே. இக்கால விஞ்ஞானிகளுள் மகத்தான விஞ்ஞானி ஒருவரை இந்தியாவிற்கு அளித்துள்ளதும் என் ரத்தமே. உண்மையைத் திரித்துக் கூறுகின்ற இவர்கள் நம் வரலாற்றைப் பற்றிச் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் ; பிரசமணர் க்ஷத்திரியர், வைசியர் ஆகிய…

எனது போர் முறை 15

இன்னும் ஒரு வார்த்தை , சமுகச் சீர்த்திருத்தவாதிகளின் பத்திரிகை ஒன்றில் ,என்னைச் சூத்திரன் என்று எழுதி, சன்னியாசி ஆவதற்கு எனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று சவால் விடப்பட்டிருந்ததை நான் படித்தேன். அதற்கு என் பதில் ; ஒவ்வொரு பிராமணனும் ,யமாய தர்மராஜாய சித்ரகுப்தாய வை நம என்று ஓதிக்கொண்டு யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ, தூய க்ஷத்திரியர்கள் யாருடைய வழியில் தோன்றியவர்களோ, அவரது பரம்பரையில் தோன்றியவன் நான் . நீங்கள் உங்கள் புராணங்களையும் சாஸ்திரங்களையும் நம்புபவர்களானால் ,…

செவ்வாய் 10

செவ்வாய், சனி ஒன்றுக்கொன்று சமசப்தமாக இருந்தாலும், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளே வாழ்க்கையாக அமைந்துவிடும். செவ்வாய் பலம் பெற்ற இடங்களில் மகரம், மேஷம், விருச்சிகம் அகிய இடங்களில் சூரியனோடு இணைந்து, இருப்பின், பொடி, புகையிலை போடுபவராக இருப்பர். செவ்வாய் லக்கினத்தோடு அமைந்து அதுவே மேஷம், விருச்சிகம், மகரமாக அமைந்து ஆணாய்இருப்பினும் பெண்ணாய் இருப்பினும் வாழ்க்கை துணைவரை இழப்பர். செவ்வாயும், லக்னமும் மகரத்தில் நின்றுவிடில், அநீதி வழிசெல்வார், நீதி வழியில் பொருள் ஈட்டமாட்டார்.

செவ்வாய் 9

செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றவர்கள், பாதுகாப்பு படையில், காவல் துறையில் பணியாற்றுவார்கள். செவ்வாய் சுக்கிரன் சனி இவர்களுக்குள் ஏதாவது ஒரு தொடர்பு ஜாதகத்தில் இருப்பின் அந்த ஜாதகர் மறைக்கப்பட்ட பொருளை அறிவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பர். செவ்வாய்க்கு மகரத்தில் உச்சநிலை காரணமாக நிலம், மனை, வீடு வாகனம் பொறியியல் துறைகள் மூலம் நன்மைகள் ஏற்படும். செவ்வாய்க்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, புதன், ராகு நின்றால் யோகமேற்படும். செவ்வாய் நீசம்பெற்று பலமுற்று பாபகிரகங்களுடன் சேர்ந்து 12ல் இருப்பின் இடது…

செவ்வாய் 8

செவ்வாய் ஆட்சி உச்சம் வீட்டில் இருப்பது ருசிகர யோகம்.  இது போன்ற யோகம் அமைவது காவல்துறை, இராணுவம், கப்பல் துறைக்கு அதிகம் பயன்படும். செவ்வாயும், சுக்கிரனும் 1,4,7,10ல் கூடி இருக்குமாயின் இல்லாளை இழந்தவராய் அல்லது விவாகரத்து செய்தவராய் இருப்பர். செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் தன் பந்துதுக்களிடத்தில் எப்போதும் விரோதித்துக் கொள்வர். செவ்வாய் கடகத்தில் நீச்சம்பெற்று அதில் லக்னம் அமையப்பெற்றவர்கள் படிப்பு குறைவாக இருப்பினும், சிறு தொழில் செய்து ஜீவிப்பர்.

செவ்வாய் 7

செவ்வாய் கும்பத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் செல்வம் குறையும், கவலைகள் சூழும், கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டி வரும்.  சூதாட்டத்தில் பொருள் இழக்க நேரிடும். செவ்வாய் தசையில் சனி புத்தியில் பகைவர்களின் கொடுமை, துன்பம், துயரம் அதிகரிக்கும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் தொடர்பு இருந்து செவ்வாய் பலம் பெற்றால் பொறியியல் கல்வி ஏற்படும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் புதன், சனி கூடி இருப்பின் இன்சினீயரிங் கல்வி பெறக்கூடும். செவ்வாய், குரு பலமாக இருந்து வித்யாஸ்தானத்தோடும் தொடர்பு இருப்பின் சட்டம்…

செவ்வாய் 6

செவ்வாயுடன் தொடர்பு கொண்ட சனி பலம் பெற்றிருந்தால் ஒருவர் தொழில் நுட்பக்கலை வல்லுநராகவும், மெகானிக்கல் இன்சினியராகவும் முடியும். செவ்வாய் துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் லாகிரி வஸ்துக்களில் நாட்டம் செலுத்துவர்.  சிற்றின்பத்து செலவு செய்வார்கள், கடுமையாக பேசுவார்கள். செவ்வாய் மீனத்தில் இருக்க பிறந்தவர்கள், நல்ல பதவி வகிப்பார்கள், முன்னேற்றம் திருப்தியாக இராது.  வெளிநாட்டு வாசமிருக்கும். செவ்வாய் கடகத்தில் இருக்க பிறந்தவர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பர், உடல் நலம் குறைந்திருக்கும், விவசாயத்துறை லாபம் அளிக்கும்.

செவ்வாய் 5

செவ்வாய் எங்கிருந்தாலும், கடகம்,சிம்மம் ஆகிய லக்ன\ ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை. செவ்வாயுடன் குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் பலமுடன் விளங்கினால் சக்தி, முருகன் பூஜை வாயிலாக சித்தியை பெறுவார். செவ்வாயும் 12ம் வீட்டோனும் கூடி பலம் இழந்தால்சகோதரரிடையே சக்கரவு ஏற்படும். செவ்வாயுடன் 12ம் வீட்டோன் கூடி இருந்தால் சிறைப்பீதி ஏற்படக்கூடும்.  செவ்வாய், புதனுடன் சேர்ந்தால் மருந்துகள் சம்பந்தப்பட்ட கடைகளிலும் மருத்துவராகவும், திறமை ஏற்படும். செவ்வாய் 10…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 29

ஒவ்வொரு காலகட்டத்தில் மனிதன் ஒவ்வொரு விஷயத்திற்காக போராடுகிறான் பின் அவற்றை அடைகிறான். பின் அதை விட்டுவிடுகிறான் இது அவரவர் வாழ்வில் கண்டிப்பாய் நடந்திருக்கும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது நாம் போராட கூடிய விஷயம் என்றாவது ஒரு நாள் அல்லது ஜென்மத்தில் அடைந்தே தீருவோம் என்பதே இங்கு தேவை தொடர்ந்து போராடுவது அதுவும் இறை நம்பிக்கையோடு அதாவது தன் நம்பிக்கையோடு போராடும் விஷயத்திற்கேற்ப நம்மை எப்போதும் கைவிடாது.   பல சமயங்களில் சில பிரச்சனைகள் நாம்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 28

வினைகளை செய்தது நாம் என்றால் 1. நாம் வினைகளை செய்யாமல் இருக்கவும் முடியும். 2. நாம் செய்ததை நமக்கு பிடித்ததை போல் மாற்றவும் முடியும். சாஸ்திரங்களும், வேதங்களும் அதை ஒற்றி பயணித்த மதங்களும் மனிதனின் நிலைக்கு அவன், அவன் செய்த வினையே காரணம் என்று அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உறுதியாக சொல்கின்றன இதை ஏற்கும் நாம் பின்வருமாறு சிந்தித்தால் நாம் விரும்பும் பயனை அடையலாம் எனும் முடிவுக்கு வரமுடியும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 27

இப்படி போர் என்று  வந்த பின் நமக்கு துணை நம் தன்நம்பிக்கை எனும் இறை நம்பிக்கை தான் இந்த ஆயுதத்தை கொண்டே நாம் அந்த எதிரியை இல்லாதிருக்க செய்ய முடியும்.  இப்படி பட்ட போர் வந்த பின் எதன் மீதும் நாம் நமது பொறுப்பை சுமத்த முடியாது உதாரணமாக நான் ஏழை, அண்ணன் என்னை ஏமாற்றிவிட்டான், நான் படிக்கவில்லை இப்படி எந்த காரணங்களையும் சொல்ல முடியாது காரணம் இவையெல்லாம் மீறி போர் ஆரம்பித்தாகிவிட்டது, வெற்றி ஒன்றே லட்சியம்…

உரையாடலில் ஒரு பகுதி 32

மனிதனிடம் இருக்கும் கருவிகளில் மனம் எனும் கருவியே மிக பலமானதும் எல்லாவற்றிற்க்கும் ஆதாரமாயும் உள்ளது. ஆனால் இந்த மனம் எனும் கருவி இயங்க பிராணன் எனும் சக்தியே அடிப்படையானது. அதாவது, இப்படி வைத்துக் கொள்ளலாம் மனிதன் என்பவன் உடல், மனம், பிராணன் என்ற முக்கிய மூன்று விஷயத்தால் ஆனவன் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இதில், உடல் – 5புலன்கள், 5 பொறிகள், 72 ஆயிரம் நாடி நரம்புகள் என்று அமைந்தாலும் இவைகள் ஐம் பூதத்தின் அடிப்படையிலேயே…

உரையாடலில் ஒரு பகுதி 31 மனிதனின் தேடல்கள்

நித்திய ஆனந்தத்திற்கான வழி முறைகளையும், சூத்திரங்களையும் கொண்டவையே வேதோ உபநிஷத்துகள் அதில் மனிதனைப் பற்றி அறிய அவன் யார் என்ற அறிய ஆசை கொண்டு கேள்வி எழுப்பி விடை தேட தொடங்கினார்கள் உண்மையில் மனிதன் என்பவன் யார் அவனிடம் என்ன உள்ளது அவனிடம் உள்ளதால் அவனுக்கும் இயற்கைக்கும் என்ன நன்மை, அல்லது தீமை என்று தேடி, தேடி முடிவில் கண்டு கொண்டார்கள் அது பற்றி கொஞ்சம் விரிவாகவும், விளக்கமாகவும் அறிய நாம் ஆசைப்பட்டு முயற்சிப்போம்.

உரையாடலில் ஒரு பகுதி 30 மனிதனின் தேடல்கள்

வாழ்வை பற்றி நம் முன்னோர்களின் பார்வை மனிதன் அவன் இருப்பில் செய்யப்படும் செயல்கள் வாழ்க்கை என பெயர் பெறுகிறது. வாழ்க்கையில் மனிதனின் பங்கை அதாவது எப்படி வாழ்ந்தால் ஆனந்தமாக இருக்கலாம் அல்லது ஆனந்தத்தை அடையலாம் என்பதே முன்னோர்களின் தேடல்கள் ஆக இருந்தது.  அந்த தேடுதலின் விளைவாக உண்டான விஷயங்களை உள்ளடக்கியதே நமது வேதம், உபநிஷத புராண – இதிகாசங்கள் போன்றவை,

எந்த ஒருவரையும் 2

பாராட்டுக்கும், விமர்சனத்திற்கும்  நிலையான மதிப்பு என்று எதுவும் இல்லை.  இது புரிந்து கொண்டாலே கடவுளைப் பற்றியும், மதங்களை பற்றியும் இன்னும் இது போல் உள்ள எத்தனையோ விமர்சனங்கள் பாராட்டுதல்கள் பற்றியும் நாம் காதிலும், மனதிலும் இடாமல் சகஜமாய் நம் வாழ்க்கையை நாம் சந்தோஷத்தோடு வாழ்ந்து விடலாம்.  ஆனால் இது நிச்சயமாய் தெரிய வேண்டும். (முக்கியமாக அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு, அதனை சார்ந்து இருக்கும் , மக்களுக்கு)

எந்த ஒருவரையும் 1

எந்த ஒருவரையும் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் பாராட்டுவது, விமர்சிப்பது என்பது அவரவரின் மனநிலை பொறுத்த விஷயம்.  காரணம் பாராட்டபடும் நபரே சில பல நேரங்களில் பாராட்டுக்கு தகுதியில்லாதவர் ஆகிறார். அதனாலேயே நாம் பாராட்டுக்கோ விமர்சனத்திற்கோ, அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.  

உள்ளே ஒன்று வைத்து

உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு, ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம் தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது அழிந்து போயிருக்கலாம் பொய் முகம் அணிந்து, அணிந்து பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.

 தனிப்பட்ட கொள்கைகள்

எவனொருவனுக்கு தீவிரமான தனிப்பட்ட கொள்கைகள் உள்ளதோ அவன் எப்போதும் யாருக்காவது எதிரியாகவே இருப்பான். உண்மையில் தீவிரமான கொள்கைகள் அது எந்த கொள்கைகளாக இருந்தாலும் சரி மனிதனை பிரித்து கூறு போட்டுவிடுகின்றன. கூடி இருக்கவும் கூட்டத்தை பிரிக்கவும் பிடிவாதமான சில கொள்கைகளே காரணமாய் இருக்கின்றன.  எல்லோராலும் வான் பிறையின் வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன என்ற பட்டினத்தாரின் மன நிலையில் இருக்க முடிவதில்லை. இலக்கில்லாத கொள்கையில்லாத பயணம் சுகம் ஆனால் அது எவருக்கும் எப்போதும் வாய்ப்பது இல்லை. அதனால்…

விளையாட்டு என்றால் என்ன 3

செயலுக்கு பலன் என்பதை மனதில் ஊன்றி நிலைக்க விட்ட பின் பலனை எதிர்பாராமல் செயலை செய் எனும் வாக்கியத்தை உணருவது எங்ஙனம் அதோடு அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் என்ற வாக்கியத்தின் பொருளை உணர்வது எப்படி செயலில் இருக்கும் கவனம் பலனில் சென்று விட செயலின் முழுமையை எப்படி அனுபவிப்பது? எப்படி ஆனந்திப்பது?

விளையாட்டு என்றால் என்ன 2

எப்போது விளையாட்டில் இலக்கு தீர்மானிக்கப்பட்டதோ அப்போது அந்த விளையாட்டு சுமையாகிவிடும் அதாவது விளையாட்டு வினையாகும் இடம் அது நம்மில் எத்தனை பேர் விளையாட்டை விளையாட்டாய் பார்க்கும் பக்குவம் பெற்றுள்ளோம்.  பிறந்து மூன்று, நான்கு  வயதிற்குள்ளேயே இலக்கு நோக்கம் என்று எல்லா செயல்களையும் வடிவமைத்து நம் இயல்பை தொலைத்துவிட்டோமே

விளையாட்டு என்றால் என்ன 1

எந்த நோக்கமும் இல்லாமல் எந்த பயனையும் எதிர்பாராமல் உடலை வருத்திக் கொள்வது அப்படி வருத்தி கொள்வதின் மூலம் மகிழ்ச்சியில் திளைப்பது இலக்கில்லாமல் ஓடி, ஓடி மூச்சு இளைக்க, இளைக்க நிற்கும் போது உண்டாகும் சுகம், சந்தோஷம் நமது சிறு பிராயத்திலேயே முடிந்து விடுகிறது.  மூச்சு இளைக்கிறதே என்று விளையாடமல் இருக்க முடியுமா? எந்த குழந்தைகள் தான் அப்படி இருக்கிறது விளையாடி, விளையாடி இளைக்கிற மூச்சு ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் விளையாடாமலே சும்மா இருக்கும் போது இளைத்தால் அது வியாதி.

முருகனின் வடிவங்கள். 3

வள்ளி கல்யாணசுந்தரர் –  திருப்போரூர் முரகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுரும் இருக்கிறது. பாலசுவாமி – திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. சிரவுபஞ்சபேதனர் – திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. சிகிவாகனர் – மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது.  ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம்.

முருகனின் வடிவங்கள். 2

குமாரசாமி – கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. சண்முகர் – திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். தாரகாரி – ‘ தாரகாசுரன் ‘ என்னும் அசுரனை அழித்ததால் முருகப் பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார்.  உலகமாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது.  விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார். பிரம்மசாஸ்தா – காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில்…

முருகனின் வடிவங்கள். 1

சுப்பிரமணியர் – நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘ சுப்பிரமணியர் ‘ ஆவார். கஜவாகனர் – திருமருகல், மேல் பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக்கோபுரத்தில் யானை மீது இருக்கும் முருகப் பெருமானை தரிசிக்கலாம்.  இவரை ‘ கஜவாகனர் ‘ என்கிறார்கள். சரவணபவர் – சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத்தலங்களில் சரவணபவர்’  திருவுருவை காணலாம்.  கார்த்திகேயர் – கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிரும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம்…

நூற்று ஒன்று சாமி மலை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

ஒரு ஆவுடையார்.. இரண்டு லிங்கம் :

ஆந்திர மாநிலம் காளேஸ்வரம் என்ற திருத்தலத்தில் காளேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்க மூர்த்தங்கள் அமைந்துள்ளது. இது மிகவும் அபூர்வமான, வித்தியாசமான அமைப்பாக உள்ளது. இந்த லிங்க மூர்த்தங்கள் முறையே காளேஸ்வரர் என்றும், முக்தேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றன.

தனியாக முருகப்பெருமான்

கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத்தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  71  

ஒரு பக்ஷத்தில் மிருத்தியு லக்ஷணம் …..  பிரகிருதி ரூபமான சீவன் விகுருதம் அடைதலினால் காலசம்பிராப்தியால், பார்வையானது மட்டமாகிறது.  அப்பொழுது சந்திர நாடியில்லாமல்  சூரிய நாடி தானே இரவும், பகலும் ஒடிக்கொண்டு இருக்கும். அப்படி இருக்கும்படியான புருஷன் ஒரு பக்ஷத்தில் மரணம் அடைவான். வேறு வித குறி  எந்த புருஷனது வஸ்திரத்திலும், கண்டகசுரத்திலும், தேகத்திலும், முகத்திலும், துர்நாற்றம் வீசுமாகில் அவன் யோகியாயிருந்தாலும் தடையின்றி ப க்ஷதினத்தில் மரணமடைவான் இது நிச்சயம். வருஷம், அயனம், ருது, மாதம், பக்ஷம் இவைகளெல்லாம்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  70

ஆத்தும நிலை  சுருதி யுக்தி அனுபவம் என்னும் மூவிதங்களினால், சரீரம் ஆத்மாவென்றும், மனது அந்தராத்மாவென்றும், பிராணன் பரமாத்துமா என்றும், இதுதான் பஞ்சத்துவங்களை தாரணை செய்து இருக்கிறதென்றும் தெரியவருகிறது. ஆகையால் ஆத்மாவுக்கும், மனதுக்கும் விகுருமமுண்டாகில் தடை இன்றி மனிதன் இந்தலோகத்தில் சீவிக்கமாட்டான். காலமென்கிறவனால் பார்க்கப்பட்டான்.  அதாவது அந்த சீவிக்கி காலபிராப்தி ஆய்விட்டது என்று ( முடிந்து ) அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  69

நாலு வித வாஞ்சை  காலமென்கிற அக்கினியானது ஜடாக்கினியில் சேருவதினால் நான்கு விதமான வாஞ்சை உண்டாகின்றது.  அவையாவன 1.  ஆகாரம், 2. சலம், 3. நித்திரை, 4. காமம், இவைகளின் ஆகார மென்கிற அன்னம் இல்லாமற்போனால் தாது நஷ்டமாகின்றது சலம் இல்லாமல் போனால் ரத்தம் சுஷ்கித்துப் போகின்றது காமத்தினால் நேத்திரேந்திரியம் கெட்டுப் போகின்றது தூக்கமில்லாமையால்  சகல வியாதிகளும் தொடர்கின்றன.

மனித உடலைப்பற்றி அறிவோம் 10

மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட் மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட் அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல் வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்

மனித உடலைப்பற்றி அறிவோம் 9

மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது) குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி) பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306 இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5 உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ  உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 26

ஒவ்வொருவரும் போரிட வேண்டியது சக மனிதரிடம் அல்ல அவரவரின் முன் வினையோடு ஆம் அந்த முன்வினைதானே நாம் விரும்பாத துக்கம், துயரம், தோல்வி, வாழ்வில் சிக்கல் அனைத்தும் தந்தது. அதனால், அதனுடன் போர் புரிந்து அதை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அப்போது தான் நாம் ஆனந்தமாக இன்பமாக இருக்க முடியும் அதனால் நாம் நம் கண்ணுக்கு தெரியாத நம் முன்வினை எனும் எதிரியுடன் இறைவனின் துணை கொண்டு வியூகங்கள் அமைத்து சரியாக போர் செய்து வெற்றி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 25

நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று அதாவது முன் பிறவியின் தொடர்ச்சியே இப்பிறவி என்பது இது புரிந்து கொண்டால் நாம் அனுபவிக்கும் அல்லது நாம் சந்திக்கும் சிக்கல்கள் துயரங்கள் தோல்விகள் அனைத்தும் நம்மாளேயே உருவாக்கப்பட்ட‍ தென்று,  தெரிய வரும் அப்படி தெரியவரும் போது நமக்குள் தெளிவு வரும் அந்த தெளிவு இறைவனைப் பற்றிய சிந்த‍னைக்கு அழைத்துச் செல்லும் அதில் பயணப்படும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்கள் சிக்கல்கள், தோல்விகள் எதனால் ஏற்பட்டது…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 24

நாம் ஒன்றை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் நாம் செய்யும் பணிகள் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட நமக்கு உடல் பலம் முக்கியம் என்று கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியவரும் உடல் பலம் குறைந்தவர்கள் தன் நம்பிக்கை குறைவாக இருப்பவர்களாக இருப்பார்கள் அதனால் உங்கள் பணிகளை எப்போதும் நீங்கள் உற்சாகமாக செய்ய நல்ல சத்துள்ள உணவுகளையும், நல்ல உடற்பயிற்ச்சியையும் செய்யுங்கள் அது உங்களுக்கு உங்களது பணிகளை தொடர்ந்து உற்சாகமாய் செய்ய உதவி செய்யும் இன்னுமொரு விஷயம்…

 சுகமாக வாழ சில ஆலோசனைகள் 23

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலையில்  அவை வெளிப்பட்டு பிறர் நம்மை புகழும் படி செய்திருக்கலாம் என்பது நமக்கு தெரியும் ஒரு விஷயத்தில் தவறு நேர்ந்து விட்டால் அதை சரி செய்யவோ அல்லது அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்கவோ மேற் சொல்லிய விஷயங்கள் பயன்படும். தன்னுடைய குண நலன்களை ஆராய்ந்து பார்க்கும் வித்தையை அறியாதவர்களுக்கு தான் என்ன செய்கிறோம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாமல் போகலாம்.  அப்படிப்பட்டவர்கள் மேற் சொன்ன முறைகளை கையாண்டு சுய…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 22

அந்த நல்ல குணங்களை மேலும், மேலும் வளர்த்துங்கள் அது உங்களுக்கு நீங்கள் செய்யும் செயலில் விருப்பையும் சந்தோஷத்தையும் தரும் அது மட்டுமல்ல உங்களுடைய தன்னம்பிக்கையின் அளவும் அதிகரிக்கும். அந்த நல்ல குணங்களை பட்டியல் இட்டால் நேரந்தவறாமை, பிறருக்கு உதவிசெய்தல், செய்யும் பணிகளில் நேர்த்தி, சுறுசுறுப்பு பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம், கற்றதை செயல்படுத்துவதில் உள்ள முனைப்பு இனிமையான பேச்சு இப்படி எத்தனையோ நல்ல குணங்கள் ஒளிந்திருப்பதை அறியலாம்

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 21

ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி அறிய தினமும் நாட்குறிப்பில் குறித்து பழகுதல் தன்னைப் பற்றிய மதிப்பீடுகள் குறிப்பிட்ட கால அளவுகளில் எந்த அளவு மாறியிருக்கிறது அல்லது மாறவே இல்லையா என்பது தெரியவரும் இது நம்மை நாம் விரும்பும் விதத்தில் தயார் செய்ய உபயோகப்படும்.  உதாரணமாக நம்மை யாரெல்லாம் புகழ்ந்துள்ளார்கள் எந்த சந்தர்ப்பத்தில் புகழ்ந்தார்கள், எந்த விஷயத்திற்காக புகழ்ந்தார்கள் என்பதை பட்டியல் இடுங்கள்  அப்போது உங்கள் மனதில் ஒரு விஷயம் நன்றாக பதியும் அதாவது நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களே…

சுந்தர யோக சிகிச்சை முறை 99

விந்து நோய்கள் ஆண்மை அழியும், இதற்கும் பரிகாரம் விளம்பரத்தில் மட்டும் தானுண்டு மருந்துகளெல்லாம் ஏமாற்றமே மிகக் கெடாதவர், இயற்கை தர்மத்தால் ஒரு வேளை முன்னேறலாம். வெளிப்படையாக அறிய முடியாத கொடிய தன்மை கொண்டவை இவை. மலட்டுத் தனம் பெண் மலட்டுக்கு மருந்து ஏது?  பெண்மலடு நீங்க ரண சிகிச்சை செய்து புண்ணாக்குகிறார்கள்.  குறை நீங்கியவர் இல்லை.  ஆயுர் வேத முறையில் மிகச் சிலருக்குப் பலன் கிடைத்ததாகச் சொல்லுகிறார்கள். மூலம் இதை அறுத்துத் தள்ளுகிறார்கள்.  இராவணன் தலை போல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 98

பெண் நோய் அல்லது மேகப்படை ( VENEREAL DISEASE ) இதற்கு போட்டுக் கொள்ளும் ஊசிகளெல்லாம், இதன் மேல் சின்னங்களுக்கு குணம் கொடுத்தாலும், இது நன்றாகப் பரவிவிட்டால், இதற்கு உடலையும், உயிரையும் பறி கொடுக்கிறார்கள். லிவர் அல்லது கொலைக்கட்டி நாட்டு வைத்தியத்தில், அபூர்வமாக ஆயிரத்தில் ஒரு கேஸ் பிழைக்கலாம்.  இதற்கு இங்கிலீஷ் வைத்தியமே கிடையாது கிட்னி தாக்கப்பட்டால் சிகிச்சை என்பது மருந்தால் இல்லை.

கெட்ட உள்நோக்கத்துடன்

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை. வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும் கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்

ஆறுதலே கூற முடியாத

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்…. சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது … 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

எனது போர் முறை 14

அவர் இந்தியாவிலுள்ள சீர்திருத்தக் கட்சி ஒன்றின் தலைவர் ஏசு இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்று அவர் ஒவ்வொரு நாளும் முழங்குகிறார். ஏசு இந்தியாவிற்கு வரும் வழி இதுதானா? இதுதான் இந்தியாவைச் சீர்திருத்துகின்ற வழியா? இளமைப் பருவத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என் சிறந்த நண்பர்களுள் ஒருவராக இருந்தவர். அன்னிய நாட்டில் நெடுநாட்களாக நம் நாட்டினர் யாரையும் காணாமலிருந்து அவரைக் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பரிசு இது. என்னை என்று சர்வசமயப் பேரவை ஆரவாரம்…

எனது போர் முறை 13

அங்கே என்னை எதிர்ப்பவர்களான கிறிஸ்தவப் பாதிரிகளுடன் வேறு சேர்ந்து கொண்டனர். எனக்கு எதிராக இந்தப் பாதிரிகளின் கற்பனையில் தோன்றாத ஒரு பொய்கூடக் கிடையாது. நண்பர்களோ பணமோ யாரும் இல்லாத ஒருவனாக ஓர் அன்னிய நாட்டில் நான் உள்ளேன். என் நடத்தையைப்பற்றிக் கேவலமாக நகரம் தோறும் பரப்பினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்னைத் துரத்தியடிக்க முயன்றார்கள், எனக்கு நண்பர்களான ஒவ்வொருவரையும் பகைவனாக்க முயன்றார்கள். என்னைப் பட்டினிபோட்டுச் சாகடிக்க முயன்றார்கள், இதில் என் சொந்த நாட்டினர் ஒருவரும் எனக்கு எதிராக செயல்பட்டார்…

எனது போர் முறை 12

நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்கு இந்த சொசைட்டியிடம் நம்பிக்கை போய்விடும் என்ற பயம் தான் காரணம், குறிப்பிட்ட சிலர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் நியதிகளும் அதையே கூறுகின்றன அங்கு சேர்பவர்கள் குதுமி மற்றும் மொரியாவிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளான திரு. ஜட்ஜ் மற்றும் திருமதி. அன்னிபெசன்டின் மூலமே உபதேசங்களைக் கேட்க வேண்டும் . இந்த சொசைட்டியில் சேர்வது என்பது ஒருவர் தன் சுதந்திரத்தையே அடகு வைப்பதாகும். இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நிச்சயமாக என்னால் செய்ய முடியாது. அப்படிச் செய்கின்ற…

எனது போர் முறை 11

இதையெல்லாம் இப்போது சொல்லியிருக்க மாட்டேன். நம் நாட்டு மக்கள் விரும்பியதால் கூற வேண்டியதாயிற்று . கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப்பற்றி நான் வாயைத் திறந்ததே இல்லை. மௌனமே என் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று வெளியே வந்துவிட்டது. விஷயம் அத்துடன் முடியவில்லை. தியாசபிக் சொசைட்டியினர் சிலரை நான் சர்வசமயப் பேரவையில் பார்த்தேன், அவர்களோடு பேசவும் கலந்து பழகவும் விரும்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது, தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப்…

எனது போர் முறை 10

சர்வசமயப் பேரவை கூடுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். பணம் மிகக் குறைவாகத்தான் என்னிடம் இருந்தது, அதுவும் விரைவில் செலவாகிவிட்டது. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, என்னிடமோ வெயில் காலத்திற்குரிய மெல்லிய ஆடைகளே இருந்தன. உறையச் செய்கின்ற அந்தக் குளிரில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. தெருக்களில் பிச்சையெடுத்தாலோ சிறையில்தான் இடம் கிடைக்கும். சில டாலர்களைத் தவிர எல்லாம் கரைந்துவிட்டன. சென்னை நண்பர்களுக்குத் தந்தி கொடுத்தேன். என் நிலை தியாசபிக் சொசைட்டியினருக்குத் தெரியவந்தது. அவர்களுள் ஒருவர்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 34

 4 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4 – ஆமிடத்தை 9 – க்குரியவர் பார்த்து செவ்வாய், பலம் பெற்று இருப்பின் பூமி, தனம் சேர்க்கை உண்டு. தாய் வகை சொத்து கிட்டும். வாகன யோகம் உண்டு. பெறும் தொழில்களை நடத்துவான். 4 – க்குரியவர் செவ்வாய் வலுத்து, 7 – ல் சந்திரன் உச்சம் பெற்று இருப்பின் நிலம், வீடு, சொத்து வசதி உண்டு. கடன் தொல்லையும் உண்டு. 4 – க்குரியவர் உச்சம் பெற்று,…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 33

 4 – க்கு 8 – க்குரியவர், 4 – 10 – இல் அமைந்து 4 – க்குரியவர் 4 – க்கு 7 லிருந்து, 4 – க்கு பாதகாதிபதியால் பார்க்கப்பட்டால், மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் மாரகம் ஏற்படும்.  பாதகாதிபதி 4 – இல் அமர்ந்து, 4 – க்குரியவரையும், சக்கிரனையும், சந்திரனையும் பார்த்தால் தாய்க்கு மாரகம் மேற்படி தசாபுத்தியில்.  4 – க்கு, 8 – க்குரியவர் திசையில், 4 –…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 32

 4 – க்கு, 10 – க்குரியவர் திசையில் 4 – க்கு, 8 – க்குரியவர்  திசையில் அல்லது 8 – க்குரிய சாரம் பெற்று கிரக புத்தியில் கோச்சாரத்திற்கு 4 – க்கு, 12 – க்குரியவர், 4 – க்கு, 2 – இல் வரும்போது தாய்க்கு மாரகம். நாலுக்குரியவர் 7 – இல் பலம் குறைந்து இவரை பாவர் பார்த்தால் 4 – க்குரியவர் திசாபுத்தி காலத்தில் தாய்க்கு மாரகத்தை தரும்.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 31

 4 – ஆமிடத்தை பாவர் பார்த்து நாலுக்குரியவர் நீச்சம், அஸ்தமனம் மறைவு பெற்று 4 – க்கு பாதகாதிபதி திசாபுத்தியில் தாய்க்கு மாரகம்.  4 – க்கு 7 இல் புதன், சனி இருந்தாலும் 12 . இல் சந்திரன், 4 – க்கு, 11 – க்குரியவரோடு சேர்ந்து தனது திசாபுத்தி நடத்தும்போது தாய்க்கு மாரகம். 4 – க்குரியவர் லாபம் பெற்று தாய் காரகர் 2 – இல் 5 – க்குரியவருடன் சேர்க்கை…

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15

எண்ணிறந்த சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ள உண்மையை நான் அரை சுலோகத்தில் கூறுகிறேன். ( ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர – ) பிரம்மம் மெய், உலகம் பொய், ஜீவன் பிரம்மமேயன்றி வேறன்று. என்னுடைய மனமெங்குளதோ அங்கு உனது உருவம் இருக்கட்டும், என்னுடைய தலை எங்குளதோ அங்கு உன்னுடைய திருவடி இருக்கட்டும்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 19

அந்த குழந்தையிடம் தயை, இரக்கம், பாசம், நேசம் போன்றவை இருக்குமா?  இவையெல்லாம் அன்பின் ஆணி வேர்கள் அல்லவா இப்போதைய சமுதாய ஆட்சியாளர்கள் இதை விரும்புவது இல்லை முன்னதை மட்டுமே விரும்புவதால் சமுதாயம் எப்போதும் மாறப்போவதில்லை.   

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 18

மூன்று வயது வரை அன்பாய் வளர்த்துவிட்டு அவர்களை தூக்கி யாருக்கோ உழைக்க தேவையான கருவியாக மாற்றும் பணியாளர்களிடம்(அதாவது பள்ளி கூடங்களில் ) தூக்கி போட்டு விடுகிறீர்கள் இதைத்தான் நீங்கள் அன்பு என்கிறீர்கள். வேகமும், போட்டியும் இருந்தால் அங்கு வெறுப்பும் விரோதமும், வன்முறையும் இருக்கும். இவையெல்லாம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்குமா? இந்த சூழலில் பயிற்றுவிக்கப் பட்டு, வளர்ந்த குழந்தை அன்போடு இருக்குமா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 17

உயர்திரு. J.K. அன்பைப் பற்றி பேசும் போது இப்படி ஒரு வினாவை நம் முன் வைக்கிறார்.  அதாவது நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தினால் செலுத்தியிருந்தால் அவர்களை போருக்கு அனுப்புவீர்களா இது மட்டுமல்ல அவர் கேட்பது தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுக்கொண்டு பொருளாதாரத்திற்காக ஒரு பணியில் அமரவும் ஒரு சில பரிட்சைகளில் தேறவும் மாத்திரம் கற்பித்து விட்டு இந்த அருமையான வாழ்க்கையின் மீதி பகுதிகளை கவனிக்காமல் விட்டு விடும் கல்வியை அவர்களுக்கு தருவீர்களா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 16

அது உங்களுக்கு தரும் இன்பத்தினால் அதனுடன் தோழமை உணர்வு ஏற்படுகின்றது அந்த தோழமை உணர்வில் சிறிது மாற்றம் ஏற்படும் போது கூட உங்களால் தாங்க முடிவதில்லை உடனே அந்த இடத்தில் கோபம், வெறுப்பு வன்மம், பொறாமை போன்றவை வந்து விடுகிறது. அப்போது நாம் நினைத்துக் கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது. அன்பிற்கு இத்தனை முகங்களா என்றுதான்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 15

அன்பு செலுத்துவது என்றால் என்னவென்று நாம் அறிந்துள்ளோமா நமது அகாரதியின் படி அன்பு செலுத்துதல் என்பது அன்பாயிருத்தல் என்பது இன்பம், விருப்பு, அக்கறை இதன் கலவையையே அன்பு என்று புரிந்து கொண்டிருக்கிறோம்.   உண்மைநிலை என்வென்றால் ஒவ்வொருவரும் தன்னுள் பிளவு பட்ட தனிமையில் இருப்பதால், தனிமை தரும் வலியில், வேதனையில், துக்கத்தில், துயரத்தில், இருந்து தப்பிக்க நாம் ஒன்றை சார்ந்து நிற்கின்றோம். அப்படி சார்ந்து நிற்கும் போது அது தனி‍மையை விரட்டி விடுகிறது அதனால் நீங்கள் இன்பம் காணுகிறீர்கள்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 14

நம் கடவுளிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் கடவுளை வெறுப்போம் நம் நாட்டிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் நாட்டை வெறுப்போம் அது மட்டுமல்ல உச்சபட்ச அன்பின் வெளிப்பாடே காமத்தின் தலைவாசல் சரி இது இதோடு நிற்கட்டும்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 13

இந்த அன்பு என்பது மிகவும் வினோதமானது, விசித்திரமானது உண்மையில் அன்பில் வினோதமும், விசித்திரமும் ஏதும் இல்லை. நாம் அன்பை புரிந்து கொண்டதில் தான் இத்தனை வினோதங்களும் விசித்திரங்களும் உள்ளது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 12

உண்மையில் அன்பு என்றால் என்ன கடவுள் மீது அன்பு, பெற்றோர் மீது அன்பு, உறவினர், நண்பர்கள் மீது அன்பு, கணவன், மனைவி, காதலன், காதலி , நாடு, தேசம் இவற்றின் மீதெல்லாம் அன்பு என்று பேசுவோம். பேசிக்கொண்டிருப்போம் ஆனால் துர் அதிர்ஷ்டவசமாக அந்த அன்போடு கூட வெறுப்பும் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்களா அப்படி கண்டுபிடித்திருந்தீர்களானால் நீங்கள் உங்களை அறிய, உணர தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 11

எப்போதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா கொஞ்சம் உங்களை உற்றுப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள்.  நாம் நிறைய அன்பைப் பற்றி பேசுகிறோம். போதிக்கிறோம் அது நல்லது என்றும் இறைவனுக்கு பிடித்தது என்றெல்லாம் நாம் போசுகிறோம்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 10

நிலை இப்படி இருக்க சமுதாய மாறுதல், சமுதாய புரட்சி வேண்டும் என்று கேட்பதிலோ, கூக்குரல் இடுவதிலோ என்ன பயன் விளையகூடும் அதனால் தனிமனித மாறுதல் நிலையே சமுதாய மாறுதல் ஆகும். உறவை உறவாக புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம் மற்ற எந்த வழியும் இல்லை.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 9

சில பல தேவைகள் ஆசைகளுக்காக உறவு என்ற ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருப்பது நமக்கு புரியும்.  எந்தவித உறவும் இல்லாமல் உறவோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது தான் மனித குலத்தின் அறியாமை அல்லது மனித குலத்தின் சாபம் எதார்த்தமான அன்பும் இய்லபான நேசமும் இல்லாத நிலைகளில் உறவுகளை ஒவ்வொருவரும் கையாண்டு கொண்டிருக்கிறோம் இது தனிமனிதனில் தொடங்கி சமுதாயம் வரை பரவிவிட்டது

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 8

எப்படியென்றால் அவரவர்களுக்கு உண்டான குறிக்கோள்கள் பயங்கள், ஆசைகள் என்று தனிமைப்பட்டே வாழ்கின்றனர். அந்த தனிமையே ஒவ்வொருவருக்கும் பயத்தையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தந்து கொண்டிருக்கிறது.  ஒரே வீட்டில் 10 பேர்  உறவின் அடிப்படையில் இணைந்து இருந்தாலும் ஒவ்வொருவரும் தனி தனியே தான் வாழ்கின்றனர்.  இதில் உள்ள அர்த்தம் புரியும் போது நமக்கே நம் மேல் வெறுப்பு வரும்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 7

நாம் இங்கு முக்கியமாய் கவனித்து அறிந்து கொள்ளவேண்டியது. ஒவ்வொருவரும் குடும்பங்களாக அதாவது தாய், தந்தை, குழந்தைகள் அண்ணன், தம்பி, கணவன், மனைவி, காதலன், காதலி என்று சார்ந்து இருந்து நாங்கள் ஒன்று என்று சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்கின்றனர்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 6

 சார்ந்திருத்தலால் எதைப்பற்றியும் சுயமாக பார்க்கும் தன்மையிழந்து விடுகிறது. அதன் மூலம் ஒரு சார்பாகவே சிந்திக்க தோன்றுகிறது அதனால் உண்மைநிலையை உணர முடிவதில்லை. இதுவே வாழ்வின் எல்லா சோகங்களுக்கும், திருப்தியின்மைக்கும், அஸ்திவாரம் ஆகிவிடுகிறது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 5

ஒருவரை சார்ந்திருக்கும் போது அது உறவுகளால் பலப்படுத்தப்படுகிறது.  அங்கு உண்மையில் நிகழ்வது என்ன என்று கவனித்தால் தெரியும் விஷயம் இதுதான் அதாவது சார்ந்திருத்தல் பாதுகாப்பு உணர்வை தருவது போல் தோன்றினாலும் அதன் அடியில் பயமே உள்ளது பயம் எப்போதும் நன்மையை செய்யாது.

எதிர்பாராத சந்தோஷம்

எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! இதுபோலவே எதிர்பாராத சந்தோஷத்தை நாம் யாருக்காவது உருவாக்கி தருகிறோமா

எது பலம்

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?” அதற்கு சாவி சொன்னது. “நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.

நாம் சாப்பிடும் போது

நாம் சாப்பிடும் போது தலைக்குனிந்து சாப்பிடுகிறோம்.. காரணம் : இந்த உணவைத் தந்த பூமிக்கு நன்றி தெரிவிக்க. தண்ணீர் குடிக்கும் போது மேல் நோக்கி தண்ணீர் குடிக்கின்றோம்.. காரணம் : தண்ணீரை தந்த ஆகாயத்திற்க்கு நன்றி தெரிவிக்க. ஆனால் சரக்குஅடிக்கும் போது மட்டும் கண்களை மூடிக்கொள்கிறோமே ஏன்??? காரணம் : ஒருநாள் அதனால்தான் கண்கள் இரண்டும் மூட போகின்றது என்பதை தெரிவிக்க

காலாங்கி நாதரின் ஜீவ சமாதி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன்புறம் தீர்த்தக்குளம் அருகே கொண்டுள்ளார் இடபேஸ்வரர் . இதுதான் காலாங்கி நாதர் ஒளி ஐக்கியம் பொருந்திய இடமாகும் .. எதிரே கரூரார் சித்தரின் படம் மாட்டப் பட்டுள்ளது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னதானம் வழங்கும் இடத்தின் அருகே காலாங்கி நாதர் சமாதி பீடம் உள்ளது

மனித முக விநாயகர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே  உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.

எனது போர் முறை 9

சென்னை நண்பர்கள் சிலரின் உதவியால் நான் அமெரிக்கா சென்றது உங்களுக்குத் தெரியும். அவர்களுள் பெரும்பாலோர் இங்கே உள்ளார்கள். நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கும் நீதிபதி திரு. சுப்பிரமணிய ஐயர் மட்டும் இல்லை. ஒரு மேதையின் உள்ளுணர்வு பெற்றவர் அவர், எனது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர், ஓர் உண்மை நண்பர், இந்தியாவின் உண்மையான ஒரு குடிமகன்.

எனது போர் முறை 8

வசதியற்ற,யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக, கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன். அங்கே சென்று தியாசபிக் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன். அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர். ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன். அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார். முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றேன் நான் இதைக்…

எனது போர் முறை 7

இந்துக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய முயன்றால், இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வந்த துன்பம் என்ன? இந்துக்கள் தங்களையே சீர்திருத்திக் கொள்வதில் முனைந்து ஈடுபட்டால் பிரம்ம சமாஜத் தினருக்கும் மற்ற சீர்திருத்த அமைப்புகளுக்கும் நேர்ந்த தொல்லைதான் என்ன? அவர்கள் ஏன் எதிராக நிற்க வேண்டும்? அவர்கள் ஏன் இந்த இயக்கங்களின் மிகப் பெரிய பகைவர்களாக வேண்டும்? நான் கேட்கிறேன், ஏன்? ஏன் என்றோ, எப்படியென்றோ கேட்கப்படக் கூடாத அளவிற்கு அவர்களது வெறுப்பும் பொறாமையும் கடுமையாக இருப்பதாக எனக்குத்…

எனது போர் முறை 6

தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம். மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தக் தாராளம், பெருந்தன்மை எல்லாம் ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும் வரைதான். சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும் அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன. அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும், அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும், என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.

எனது போர் முறை 5

ஆனால் அது ஒரு விஷயம், அந்த சொசைட்டியில் சேர்வது என்பது மற்றொரு விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் கொள்வது ஒரு விஷயம்; ஒருவர் எதைச் சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது மற்றொரு விஷயம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நான் சாதித்த ஏதோ அந்தச் சிறிய வெற்றிக்கு தியாசபிக் சொசைட்டியினர் எனக்கு உதவியதாக இங்கெல்லாம் பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு சொல்லும் தவறு ஒவ்வொரு சொல்லும் பொய், என்பதை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 20

தன் நம்பிக்கை என்பது தனது திறமைகளை பற்றி அதீதமான தவறான மதிப்பீடு செய்வதல்ல அல்லது போலியான தற்பெருமையோடு அலைவதல்ல, அவரவரின் உள்ளார்ந்த ஆற்றலின் மீது உள்ள மன திடம் தன்நம்பிக்கை ஆகும். இன்னுமொரு விஷயம் அவரவரின் திறமையில் கிடைக்கும் பயன் கூட தன் நம்பிக்கையை வளர்க்கும் அனால் அது நீண்ட காலம் அல்லது எல்லா சூழ்நிலைகளிலும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது ஏமாந்தால் இது தற்பெருமை உள்ளவராகவும், ஆணவகாரராகவும் மாற்றிவிட வாய்ப்பு உண்டு ஆனால் உள்ளார்ந்த ஆற்றலின்…