வெற்றி எட்டு வகைப்படும்.

1. எதிரிகளின் அதாவது பகைவர்களின் பொருளை கவர்தல். 2. பகைவர் தன்னிடம் இருந்து அபகரித்ததை மீட்டெடுத்தல். 3. பகைவர் மேல் போர் தொடுத்தல். 4. போருக்கு வரும் பகைவரை எதிர்கொண்டு தாக்குதல். 5. தன் குடிகளையும் உடைமைகளையும் காத்தல். 6. பகைவரின் உடைமைகளை, குடிகளை தனதாக்கி கொள்ளல். 7. போருக்கு திட்டமிடுல். 8. போரிடுதல் என்பவையே. இவை அனைத்தும் அரசர்களுக்கு உண்டான நியதிகள் இது ஒவ்வொன்றிக்கும், பூக்களும், மாலைகளும் உண்டு அவை முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி,…

நண்பர்கள் எத்தனை வகை?

வீட்டில் உங்கள் மனைவியும் வெளிநாட்டில் உங்கள் அறிவும் (புத்தி) நோயாளிக்கு மருந்தும் இறந்துபோனவனுக்கு தர்மமுமே நண்பர்கள் ஔரச – ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் க்ருத சம்பந்த — திருமணத்தால் உண்டான உறவு வம்ச- ஒரே பரம்பரையில் தோன்றியவர்கள் ரக்ஷக – கஷ்ட காலத்தில் காப்பாற்றியவர்கள் ஔரசம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் ரக்ஷகம் வ்யசனேப்யஸ்ச மித்ரம் ஞேயம் சதுர்விதம் –காமாந்தகீய நீதிசாரஹ

உங்கள் தவறுகளே காரணம் 2

செம்மறி ஆடுகளாக வாழ்வதா * ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழி முறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வலிமை படைத்த ஒரு சிலர் கட்டளை இடுகிறார்கள். அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் செம்மறி ஆடுகளைப் போல முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள். அவ்வளவுதான் விஷயம். உங்களுடைய பாராளுமன்றம், சட்டசபை வாக்களிப்பு முறை உங்கள் பெரும்பான்மை மக்களுடைய இரகசிய வாக்களிப்பு முறை – ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது நன்பரே இவை எல்லாம் எல்லா…

உங்கள் தவறுகளே காரணம் 1

அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே* நமது நாடு என்னும் இந்தக் கப்பல் நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரீகத்தைக் ஏற்றி கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும் பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும்மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது . பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது. ஆனால் இன்று அந்தக்…

அர்த்தம்!

நம்முடைய ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால்.. நாம் அதிபுத்திசாலி என்று அர்த்தமில்லை.. நமக்கான தண்டனை கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

நன்றி சொல்ல வேண்டிய தருணங்கள்

உங்களை சிரிக்க வைத்தவர்களுக்கு அழ வைத்தவர்களுக்கு உங்களோடு  தொடரப் போகிறவர்களுக்கு உங்களை விட்டு விலகிப் போனவர்களுக்கு … பாராட்டியவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு . அன்பு செய்தவர்களுக்கு வெறுத்தவர்களுக்கு தட்டிக் கொடுத்தவர்களுக்கு இவர்கள் எல்லோரும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உங்களுக்கே உணர்த்தியவர்கள் அதனால் நன்றி சொல்லுங்கள் எப்போதும் சந்தோஷமாய் இருப்பீர்கள்

எந்த ஒரு உறவும்

எந்த ஒரு உறவும் இருவருக்கு இடையில் மூன்றாம் நபர்கள் நுழையாத வரை.. லட்சியங்கள் மாறாதவரை பணம் ஒரு பொருட்டாக இல்லாதவரை எந்த ஒரு உறவும் உடைதல் என்பது.. அவ்வளவு எளிதில் நடப்பதில்லை!

வாழ்க்கையில் எதுவும் நடக்கும்

வாழும்போது வணங்கிக் கொண்டே இருந்தான் வெட்டியான். இறந்து போன பின் படுத்துக் கிடந்தார், ஜமீன்தார், நிமிர்ந்து நின்றான் வெட்டியான். இது தான் வாழ்க்கை..

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 5

உன்மத்த பைரவர் உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 3

தர்மமும், அறமும் முன்னோர்களின் நெறியும் அறியும் கல்வி இல்லாததால் அந்த கல்வி ஏன் இல்லாமல் போயிற்று. சுயநலமும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாததால் இனி இதைத் தவிர வேறு என்ன செய்வது, சொல்வது, சிந்திப்பது, அதீத ஆளுமைக்கு ஆசைப்படுதலே வன்முறை உண்டாவதற்கு ஒரு காரணம். அன்பு பழக நேரமாகும், வன்முறை அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்பட்டுவிடும் இந்த அன்பு பழகும் நேரம் பொறுமையாய் இருத்தல் நலம் மற்றும் அவசியம் அந்த பழக்கம்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  நேத்திர பரீக்ஷ.,  55

வாத தோஷ நேத்திரம்   வாயு தோஷத்தில் கண்களானது சிகப்பு நிறமாயும், புகை நிறமாயும் ரவுத்திர  நிறமாயும், கண்களில் நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண்  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண்  கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை மட்டாயும் இருக்கும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 4

குரோதன பைரவர் குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 2

வன்முறைக்கு காரணம் என்ன பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஏன் இல்லாமல் போயிற்று. ஆணவமும்,அகங்காரமும் மட்டும் இருப்பதினால் ஆணவமும், அகங்காரமும் மட்டும் ஏன் இருக்கிறது. அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் இல்லாததால் அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் ஏன் இல்லாமல் போயிற்று

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 3

சண்ட பைரவர் சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 2

ருரு பைரவர் ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 1

எங்கு எதிர்ப்பு வராதோ, எவரால் பதிலுக்கு அடிக்க முடியாதோ, எவர் பதிலுக்கு அடிக்கமாட்டரோ, அவர்களிடமே வன்முறையை பயன்படுத்த எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஒரு கன்னத்தில் அறைந்த பின் மறு கன்னத்தை காட்டுபவரிடமே இப்போதைய தலைமுறை மட்டுமல்ல எந்த கால தலைமுறையும் வன்முறையை பயன்படுத்தியிருக்கிறது.

பெண் அனுபவ பொருள் 4

ஆண் அப்படி நகர இயற்கை வாய்ப்பை தரவில்லை. அந்த நிலையை ஆணே உருவாக்கி கொள்ளும் படிதான் இயற்கை வைத்துள்ளது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் குழந்தையாய், குமரியாய், தாயாய் பெண் மாறும் போது உடலிலும் மனதிலும் ஒரே சேர அனுபவம் பெறுகிறாள். ஆணுக்கு அப்படியல்ல குழந்தையாய் வாலிபனாய் ஆன ஆணுக்கு தந்தையாய் மாறும் போது உடலில் மாற்றங்கள் குறைவாகவும் மனதில் அதிக மாற்றங்களையும் அவன் அடைகிறான். இப்படியெல்லாம், யோசிக்கும் போது அனுபவ பொருள் என்பது உலகத்தில் எத்தனையோ இருந்தாலும்…

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள்  1

காசி மாநகரில் திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள். அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 12

மயூகாதித்யர் கங்கைக்கரையில் உள்ள பஞ்ச கங்கா காட் அருகில் மயூகாதித்யர் என்னும் சூரியக்கோவில் உள்ளது.  புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்களகவுரி என்னும் பெயரில் சிவ – பார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார்.  மனம் இரங்கிய சிவன், சூரியனுக்கு ‘மயூகன்’ ( என்றும் அழியாதவன் ) என்று பெயர் சூட்டினார்.  காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு அங்குள்ள சூரியக் கோவில்களையும் வழிபட்டால் சகல நலமும் பெறலாம்.

பெண் அனுபவ பொருள் 3

ஆணுக்கு, பெண் எல்லா காலங்களிலும் அனுபவத்தை தந்து கொண்டிருப்பவள் அதனால் தான் அவள் எப்போதும் புதிரானவள் படித்து மாளாத அனுபவபட்டு தீராத விஷயமாகவே சிருஷ்டிபெண்ணை வடிவமைத்துள்ளது இந்த காரணத்தினாலேயே சாக்த மதம் தோன்றியிருக்கும் என்று கூட நாம் நம்பலாம் அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அனுபவ பொருளே இதில் சந்தேகம் இல்லை பெண்ணால் ஆணை சீக்கிரம் படித்து விட முடிகிறது. அவன் அனுபவத்தை தன்மையை உணர்ந்து விடுகிறாள் அதனால் அவள் அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுகிறாள்

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 11

விருத்தாதித்யர்      விருத்தன் என்னும் வேதியர் சூரியனை வழிபட்டதால் முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார்.  விருத்தன் வழிபாடு செய்த    விருத்தாதித்யர் காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.

பெண் அனுபவ பொருள் 2

 ஒவ்வொரு புலனும் மற்ற புலனின் பணியில் தலையிடுவது இல்லை ஆனால் மனம் மட்டும் எல்லா புலன்களிலும் தலையிட்டு பணி செய்கிறது. அதனால், அனுபவத்தின் தொகுப்பு மனதில் அமைகிறது. சரி இப்போது விஷயத்திற்க்கு வருவோம். அனுபவ பொருளான பெண் எதனால் மற்றவைகளை விட முக்கியத்துவம் பெற்றாள் என்றுபார்த்தால் மற்ற பொருள்களிடம் நமக்கு உறவோ, ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்போ இல்லை. பெண்ணிடம் உறவு, மற்றும் நாம் ஆதிக்கம் செலுத்தவும் முடியும் அதனால் தான் மற்ற அனுபவ பொருள்களை விட பெண்…

யாருக்கு எங்கே பலம்? 6

கேந்திர பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலன்கள் அனுபவத்துக்கு வரும்.  கேந்திரத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்த பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைமுறையில் வரும் போது அந்தந்த கிரங்களின் ஆதிபத்திய பலத்தில் கேந்திர பலம் பெற்ற கிரகத்தின் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் மாறுதல்கள் ஏற்படும்.

பெண் அனுபவ பொருள் 1

பெண் அனுபவ பொருள். அப்படித்தான் முன் காலங்களில் கருதியிருந்தார்கள் தற்போது கூட முகமதியர்கள் வழக்கில் பெண் அனுபவப் பொருளே. இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். அப்படி சிந்தித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வருவோம். அனுபவம் தருவது பெண் மட்டும் அல்லவே. பஞ்சபூதங்களும் அனுபவத்தை தருகிறது. அது போலவே பஞ்சபுலன்களும் அனுபவத்தை உணர்த்துகின்றதே நாம் புலன்களின் வழியே பெரும் அனுபவம் அனைத்தும் பொறிகள் வாயிலாகவே அமைகிறது. காண்பது எனும் அனுபவம் ஏற்பட கண் என்ற பொறியும் காண்பதற்க்குண்டான…

யாருக்கு எங்கே பலம்? 5

 சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி. சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,4,7ல் அமர்ந்து சனி 1,4,10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும். இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட…

புரிதலை எது தருகிறதோ 2

தன்னைப் போல் பிறரையும், பிறவற்றையும் உணரும் அறிவு உண்டாகும். இந்தக் கல்வி கிடைக்க நாம் நமக்குள் போரட வேண்டும். கடைகளிலும், கல்லூரிகளிலும் இது கிடைக்காது. கூவிக்கூவி விற்பனைக்கு வருவது அல்ல இந்த கல்வி. இந்த கல்வியை படித்தவனையே ஞானஸ்தன் என்கிறோம். பற்றற்று இவனால் எல்லா காரியங்களையும் செய்ய முடியும். தன் மரணத்தை தானே சந்தோஷமாய் அழைக்கும் தகுதியை இந்த கல்வி தரும்.

யாருக்கு எங்கே பலம்? 4

 அணியான ஜென்மம், உயிரான நாதன், அழகான கேந்திரமத்திலே -விரிவான ஆயுள் வெகுவாய் உயர்ந்து கெம்பீரனாவன் குயிலே! மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் எந்த ராசி ஜென்ம லக்கினமாக அமைந்த போதிலும் லக்கினாதிபதி லக்கின கேந்திரத்தில் அமர்ந்திருப்பது எல்லா வகையிலான யோகங்களுக்கும் சூட்டிய யோக லட்சணமாகும்.  இவர்களுக்கு ஆயுளுக்கு குறைவில்லை. விரிவான ஆயுள் ஏற்படுவதுடன் கெம்பீரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்பது விதியாகும். ஆதிபத்தியத்தில் பாதகாதிபத்தியம் பெற்று பாபக்கிரகங்கள் பகை நீச்சம் வீடுகளில் அமர்ந்து கேந்திரம் பெற்று அல்லது…

புரிதலை எது தருகிறதோ 1

பல மரணங்களைக் கண்டு, பல மனிதர்களுடன் பழகி, அவர்களின் நிலைகளை அறிந்து வாழ்க்கை அர்த்தமில்லாதது என்பதை புரிந்து கொண்டு ஊரோடு ஒட்டி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற புரிதலை எது தருகிறதோ, அதுவே கல்வி. அந்த கல்வி ஆணவப்படாது, ஆசைப் படாது, ஆசையும், ஆணவமும் இல்லாத இடத்தில் திருப்தி இயல்பாகவே இருக்கும். திருப்தி எப்போதும் மன நிம்மதியைத் தரும். மனநிம்மதியும், மனநிறைவும் நாணயத்தின் இருபக்கங்கள் போல இப்படி வாழும் வாழ்க்கை நிறைவையும், இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ளவும் மனம்…

யாருக்கு எங்கே பலம்? 3

 உடலாகிய சந்திரன் வளர்பிறை காலத்தில் திரிகோணமாகவும், தேய்பிறை காலத்தில் கேந்திரமாகவும் அமர்ந்திருப்பது மிகமிக உத்தமம்.  சாயா கிரகங்களாகிய ராகு, கேதுக்களில் ராகு 4ம் இடத்திலும் கேது 10ம்  இப்படியாக கிரகங்களின் பலம் அமைந்து இவர்களுடைய திசை வரும் காலம் ஜாதகர்களுக்கு பிரபலமான ராஜயோகம் ஏற்படும்.  இதற்கு மாறுபட்ட வகையில் கேந்திரங்களில் பாபக் கிரகங்களும், திரிகோணங்களில் சுபக் கிரகங்களும் அமர்ந்து சுபக்கிரக பார்வை, சேர்க்கை அமையப் பெற்றவர்களுக்கும் வாழ்க்கையில் உயர்வுகள் அமைகின்றன. லக்கினாதிபதிகள் மேற்கண்ட விதமாக கேந்திர திரிகோணங்களில்…

உரையாடலின் ஒரு பகுதி 21

 நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நமது எண்ணத்தை நமது விருப்பம் போல் உருவாக்க முடியும் அப்படி நாம் உருவாக்க வேண்டிய எண்ணம் முதலாவதாகவும், முன் உரிமை தரபட வேண்டியதாகவும் உள்ள எண்ணம், நான் திருப்தியடைந்த சந்தோஷமுடையவன். என்னால், என் சமுதாயமும், என் மனித குலம் முழுவதும் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் இருக்கும் என்னுடைய செயல்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என்ற எண்ணத்தை முன் நிறுத்தி செயலாற்ற பழகுங்கள் ஆனந்தம் உங்களுடையதே.

யாருக்கு எங்கே பலம்? 2

 கொடுப்பதிலும் கெடுப்பதிலும் நிகரற்ற பலசாலியான சனி பகவான் ஜென்ம லக்கினத்திற்கு 7மிடத்தில் பூரண பலம் பெறுகிறார். 7மிடத்தில் சனி இருக்கும் போது பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக உன்னத நிலையை அடைகிறார்கள் என்பது அனுபவ சித்தாந்தம்.  களத்திர காரகனான சுக்கிரன் சுகஸ்தானமாகிய 4மிடத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் மிக்க பலசாலிகள் பாக்கியங்களோடு வாழும் பாக்கியம் அமையும். புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால் (முதலாம் திரிகோணம்) மிக்க பலசாலிகளாக பூரண பலத்தோடு விளங்குகிறார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி 20

எண்ணமே வாழ்வு என்பது முன்னோர்கள் வாக்கு தினம், தினம் எத்தனையோ எண்ணங்கள் நம்மிடம் இருந்து கிளம்பி நம்மிடமே நிறைவடைகின்றன. இதனை, ஊன்றி கவனித்தால் எந்த விதமான எண்ணங்கள் நம்மிடம் தோன்றி நம்மிடம் நிறைவடைய வேண்டும் என்பதை நம்மால் தீர்மாணிக்க முடியும் என்பது தெரியும்

யாருக்கு எங்கே பலம்? 1

கொடியோர்கள் கேந்திரத்தில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களைத் தருவார்கள் என்பதும்  சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் அமர்ந்திருந்தால் சுப யோகத்தைச் செய்வார்கள் என்பதும் பொது விதி. கேந்திரம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,4,7,10. திரிகோணம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,5,9.ஆகும். சூரியன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் தசம கேந்திரத்தில் பூரண பலம் பெறுகிறார்கள். இப்படியாக பத்தாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். இவர்களுக்கு படிப்பும் நல்ல விதமாக…

குறைகள் கூறி

குறைகள் கூறி யாரும் வெற்றியாளர்கள் ஆனதில்லை. நீங்கள் ஒன்றைப்பற்றி ஒருவரை பற்றி குறை கூறும் போது உங்கள் மனதில் விஷ கறை படிகிறது. மற்றவர்களுக்கு உங்கள் மேல் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது. குறைகள் விஷத்திற்க்கு ஒப்பானவை. அது மனிதனை பல வழிகளில் நிலைகளில் துண்டாக்கி துன்பத்திற்க்கு ஆளாக்குகிறது. மகிழ்ச்சியை, ஆனந்தத்தை விரும்பும் எவரும் குறை கூறுவதை நிறுத்துங்கள் குறை கூறும் மனதிற்குள் ஆக்கபூர்வமான நல்ல எண்ணங்களை விதையுங்கள் அது உங்களுக்குள் ஆனந்த மலர்களை பூச்சொறியட்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 46

இந்த நிலையில்தான் பயிற்சி என்று சொல்லக்கூடிய, செயற்கை உழைப்புகள் அவசியமாகின்றன. இந்தப் பயிற்சி நோய், தடுக்க எவ்விதம் இருக்க வேண்டும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம். ஆனால் யாராயிருந்தாலும் கால் நடைக்கும் சாதாரண உழைப்புக்கும் காலம், காரணம், சமயம் இல்லையென்று கூற முடியாது. நம் வாழ்க்கைச் செயல்களை நாமே நமக்குச் செய்து கொள்ளுவதால் உடலின் பல பாகங்களுக்கும் உழைப்பு ஏற்படும்.

துக்கத்திற்க்கு காரணம்

துக்கத்திற்க்கு காரணம் ஆசை. அந்த ஆசையை இல்லாது ஆக்கிவிட்டால் துக்கத்திலிருந்து தப்பிவிடலாம் என்பதே பெளத்த தத்துவத்தின் மைய கருத்து.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 49

குல தேவதை தோஷ தயில பிந்து லக்ஷணம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் தன்குல தேவதைகளின் பிரகோபத்தினால் வியாதி சம்பவித்ததென்று அறியவேண்டியது. சுகதயில பிந்து லக்ஷணம் ….. தயில பிந்துவில் மண்டபம் போல் தோணுமாகில் வியாதி கிடையாதென்று அறியவேண்டியது. வியாதி நிவர்த்தி குறி ….. பூர்வ திசையாக தயிலபிந்து பாய்ந்து பரவினால் வியாதி நீங்கிவிட்டதென்று அறியவும்.

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும்

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சில ஆதங்கங்கள் இருக்கும் அந்த ஆதங்கங்கள் நிறைவேறுமா என்பது வாழ்க்கையின் ஒட்டத்தில் நம் தகுதியை பெறுக்கிக் கொள்வதில் அமைகிறது. ஆனால் அந்த ஆதங்கங்களில் சிலது நம்மை பிடிவாத காரனாக, தன் நினைப்பை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத மனோ பாவத்தை வளர்த்து விடுகிறது. இந்த நிலை தொடரும் போது நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. விளைவு ஆதங்கம் ஆதங்கமாகவே சற்று மாறுதலடைந்து கோபமாகவே இருக்கிறது.

தர்மம் என்பதற்கு 3

இந்த சிந்தனை வர காரணம் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட சமுதாய மாற்றமே காரணம் வேறு என்ன சொல்வது இருந்ததை தொலைத்து இல்லாததற்க்கு ஏங்கி இல்லாததை இருப்பதாய் நினைத்து தலை தெறிக்க தறிகெட்டு ஓடும் இந்த மனித சமுதாயத்தில் தர்மம் என்று சொல்லுவதே கூட பாபம் என்று தான் தோன்றுகிறது.

தர்மம் என்பதற்கு 2

இப்போது நம் முன் உள்ள கேள்வி, அல்லது சிந்தனை அப்படி பட்ட தர்மம் என்று ஒன்று உள்ளதா என்பதே காரணம் வெற்றியும், தனக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோபாவம் ஊறி தடித்து விட்ட மனதினால் தற்கால மனிதர்கள் இருக்கும் போது மேலே கூறிய அம்சங்களை கொண்ட தர்மத்தை எங்கே காண்பது எப்படி தேடுவது ஏதாவது பண்டைய நூல்களில் கிடைத்தால் உண்டு

தர்மம் என்பதற்கு 1 மாதவராவ், சதாசிவ கோல்வல்கர்

தர்மம் என்பதற்கு மாதவராவ், சதாசிவ கோல்வல்கரின் விளக்கம் எது உண்மை வடிவில் உள்ளதோ, எது அனைவரையும் ஒரு நூலில் இணைக்குமோ எது பிரிவினையையும், விளைவையும் உண்டாக்காதோ எது வழிபாட்டு பிரிவுகளிடையே மோதல்களின் மூலம் மக்களை கட்டி போடாதோ, எது பல்வேறு கொள்கைகளில் இடையே ஒத்திசைவை உண்டாக்குமோ, அதுவே தர்மம்

உரையாடலின் ஒரு பகுதி 19

எப்போது நாம் பிறருடன் ஒப்பிடுதல் , என்கிற நிலைக்கு நகர்கின்றேமோ அப்போது நாம் வாழ்தலில் பகுதியாக உள்ள அனுபவித்தல் என்கிற நிலையில் இருந்து வெகு தூரம் நகர்ந்து விடுவோம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

உரையாடலின் ஒரு பகுதி 18

ஆனாலும், அதில் அவனுக்கு நிம்மதி கிடைக்காமல் அடுத்த ஒப்பீடுகளுக்கு நகர்ந்து தன் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடுகிறான். இந்த நுண்ணிய வலைபின்னலில் இருந்து தப்பித்து தனக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து எந்த அளவு வேண்டும் என்பதையும் தீர்மானித்து தான் வேண்டியதை அடைவதற்க்கு உண்டான தகுதியையும் வளர்த்து தான் வேண்டியதை அடைந்து விட்டால் ஏற்படும் திருப்தி என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும் காரணம் இங்கு யாரோடும் ஒப்பிடுதல் இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி 17

நம்முடைய வாழ்க்கை முறையில் ஒப்பிடுதல், ஒப்பிட்டு பார்த்தல் என்ற விஷயமே நமக்கு அதிக அளவு அழுத்தத்தை தருகிறது. இந்த ஒப்பிடுதலின் காரணத்தால் போட்டி, பொறமை, வெறி போன்றவற்றால் மனிதன் தாக்கப்பட்டு சீர் குலைந்து விடுகிறான். ஆனாலும் அவன் போராடுகிறான் வெற்றி அடைகிறான்

சூரியன் எழுவதற்க்கு

சூரியன் எழுவதற்க்கு முன் நீ எழுந்தால்.. அது உன் வாழ்க்கை! அலாரம் அடித்த பின்னும் நீ எழவில்லை என்றால்.. வாழ்க்கையின் போக்கில் தான் நீ

வேண்டியது வேண்டாதது

வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்.. காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவை.. காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!  

பிராணனைப் பற்றி.

பிராணன் என்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஈரேழு பதினான்கு லோக ஜீவ ராசிகளுக்கும் அதுவே ஆதாரம் அப்படி ஆதாரமாய் இருக்கும் பிராணனை நாம் போற்றி வழிபடுவோம். நமது உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் நம்மை நாம் என்று சொல்வதற்கும் வேண்டிய சக்தியை தருவது பிராணணேயாகும். புலன்களுக்கு வேண்டிய அளவு சக்தியை வழங்குவதும் பிராணணே ஆகும். ஒவ்வொரு புலனுக்கும் பிராணன் தேவைப்படும் அளவு மாறுபடும் அப்படி மாறுபடும் அளவை அறிந்து பிராணன் புலன்களுக்கு தனது சக்தியை வழங்கட்டும் என்று…

மறு பிறவியை நிர்ணயிப்பது எது ?

மனிதனுடைய வாழ்க்கை பயணம் முடிந்தது என்பதற்கு அறிகுறி மரணம். மனிதனுடைய வாழ்க்கை பயணம் நடக்க உதவி செய்வது பிராணன் ஆகும். மரணத்திற்க்கு பின் ஜீவன் அதாவது உயிர் பயணிக்க உதவி செய்வதே உதானனின் பணியாகும். மரணமடையும் தருவாயில் மனிதனின் புலன்கள் செயலிலக்கின்றன. அப்படி செயலிலக்கும் போது முதலில் பேச்சு அவனிடம் இருந்து விடைபெறுகிறது. பின் படிப்பபடியாய் தொடர்ந்து ஒவ்வொரு புலனும் அவனைவிட்டு விலகுகிறது. கடைசியாய் மனம் விடைபெறும். அவனிடமிருந்து மனம் விடைபெறும் சமயத்தில் என்ன சிந்தனை அந்த…

நீதி மொழிகள்

மனிதன் நிர்ணயிக்கிறான், கடவுள் நிராகரிக்கிறார். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம். யாராலும் செய்ய முடியாததை நல்லதோ கெட்டதோ ஒரு பெண் செய்வாள். கண்ணாடிதான் என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும் போது அது ஒரு போதும் சிரித்ததில்லை. பூவாக இருந்தாலும் அதில் வாசனை இருந்தால் தான் அழகு. நட்பாக இருந்தாலும் அதில் நம்பிக்கை இருந்தால் தான் அழகு.

கற்பனை வாழ்க்கைக்கு

கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்

மனிதனுக்கு ஏனோ 2

பல வேளைகளில் மனிதனால் எதையும் எல்லாவற்றையும் மாற்றி விடமுடியும் என்ற ஆணவத்தோடு கூடிய சிந்தனையின் நிலைதான் தற்போதைய நாகரிகம் என்றும், வளர்ச்சி என்றும் கொண்டாடப் படுகிறது. ஏதோ படத்தில் சொன்ன வசனம் போல, ஒடிக்கொண்டிருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடாது. கடைசியில் தான் முடிவு செய்ய வேண்டுமென்று அது போல இந்த வளர்ச்சி, நாகரீகம் என்பதின் முடிவு ஒரு விதத்தில் நினைத்தால் பயம் தருகிறது. இன்னொரு விதத்தில் தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனிதன்…

மனிதனுக்கு ஏனோ 1

மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம் அவன் என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான். ஆனால், உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள் அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது. தோற்றவன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் விதி, வினை என்று நினைக்கிறான், சிந்திக்கிறான்.

அழகும் அறிவும்

அழகும் அறிவும் ஒன்றாய் இருந்து ஒன்றாய் அன்பாய் குடித்தனம் நடத்தும் இடம் சொர்க்கம். அங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். கெட்டதும் நல்லதாய் மாறும் இரசவாதம் போல்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 10

சாம்பாதித்யர் கிருஷ்ண அவதாரத்தின் போது, கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன். இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான். தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன், சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். அவன் வழிப்பட்ட சூரியனை, காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் காண முடியும்.

அகத்தியர் லோப முத்திரை 4

இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் ஆணின் திறமை தான் ஆணிற்க்கு அழகு இங்கு திறமை என்றால் என்னவென்ற வினா வரும் அதற்க்கு பதில், உழைப்பு, கெட்டி காரதனம், வரும் முன் காக்கும் குணம் எதிலும் தெளிவு. எத்தனை தடை சோதனை வந்தாலும் துணையாய் வந்த மனைவியை இழிவு படுத்தாத குணம் கம்பீரமான மனத்தின்மை இவையே ஆணின் திறமை . இதை வளர்த்துக்கொள்ள ஆண் விரும்பி முயலவேண்டும். அப்போது மனைவி கணவனை உள்ளங்கயில் வைத்து தாங்குவாள் அவளின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 44

பண்டைக்கால உழைப்பை எல்லாம், தற்கால வாழ்வில் எப்படி தருவது? முன்போல் வாழ்க்கை நிதானத்தில் இல்லையே எல்லாம் அவசரம், எல்லாம் காலச் சிக்கனம், எ ல்லாம் கொள்ளையும் கூத்துமாக இருக்கிக்கின்றன. ஒவ்வொரு வரும் விறகு வெட்டவோ, மரம் ஏறவோ, தண்ணீர் தூக்கவோ, செய்வதென்பது சாத்தியமானது அல்ல.

அகத்தியர் லோப முத்திரை 3

அவர்கள் மிகுந்த காதலோடு நெல்முனையலவும் பிரிவும் குறைவும் இல்லாமல் குடித்தனம் செய்தார்கள் அவர்களின் இனிய இல்லறத்தாலும் தபோ பலத்தாலும் உலகை உய்வித்தார்கள். இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இரு எதிர் துருவாங்களாக உள்ள ஆண், பெண் எனும் பிரகிருதி வஸ்துகள் ஒன்றை ஒன்று மதித்து கெளரவித்து அன்பு கொண்டு இருத்தலே இனிய இல்லறம் அமைய வழியாகும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 7

ஆத்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை, ஏனெனில் ஆத்மா பரிசுத்தமான அறிவொளி வடிவானது, அதனிடம் அஞ்ஞான இருளில்லை. ஆத்மாவிற்கு உபாதிகள் ஏதுமில்லை, அது வர்ணிக்க முடியாதது, பகுக்க முடியாதது, குணங்களற்றது, பரிசுத்தமானது, வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதது.

அகத்தியர் லோப முத்திரை 2

அகத்தியரோ உருவம் குட்டை ( குள்ளம் ) மனைவியின் அழகிற்க்கு முன் அகத்தியர் சாதாரணம், அவளுடைய ஆடை, அணிகலன்களின் விருப்பம் தனக்கு இடைஞ்சல் என்று அகத்தியர் நினைக்கவேயில்லை அவர் தனது மனைவியை இளவரசியாகவே வாழ வைத்தார். இதிலிருந்து நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது அவரவர் குணங்களை அவரவர்கள் பரஸ்பரம் மதித்தார்கள். அவரவர் விருப்பங்களை பரஸ்பரம் கெளரவித்தார்கள்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 30

61) குரு திரிகோணமடையவும், சுக்கிரன், குருவுக்கு கேந்திரமடையவும், புதன் கேந்திரத்தில் நிற்கவும், குருவின் கேந்திரத்தில் சந்திரனும், கேதுவும் கூடி நிற்க, ஜோதிடம், இலக்கியம், கற்றவர். 62) சுக்கிரன் உச்சமடைய, புதன் 3 – ல் நிற்க, தனுசு லக்கினமாயிருந்து 11 – ல் குரு நிற்க, வாக்கில் சிறந்தவராம். 63) 2 – ல் புதன் நிற்க, குரு திரிகோணமடைய 4 – இல் சந்திரன் நிற்க வித்தையில் வல்லவர்.

குடும்ப வாழ்க்கைக்கு அகத்தியர் லோப முத்திரை. 1

லோபா முத்திரை அழகி, இளவரசி ஆபரணங்களின் மேல் அதிகபிரியமுள்ளவள் அகத்தியர் துறவி, ஞானி காட்டில், பர்ணசாலை ஆனால் இவர்கள் இருவரும் ஆண், பெண் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்க்கு மிக சிறந்த உதாரணம். எப்படி இளவரசியும் ஆபரணங்களில் அதிக ஆசை உடையவளும் பேரழகியாக இருந்த லோப முத்திரை கணவனின் மேல் தீராத மாறாத காதல் கொண்டு காட்டிற்க்கு வந்து பர்ணசாலையில் வசிக்கும் தன் கணவனுக்கு சற்றும் அலுப்பில்லாமல் பிரியம் குறையாமல் குடித்தனம் செய்தாள்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 29

58) சந்திரனுக்கு 6, 8, 12 – ல் நிற்க, பாபர்கள் சுபஸ்தானங்களில் நிற்க சுபர்களை சனி பார்க்க கொடிய தரித்திரம். 59) லக்கினாதிபதியும் 4 – க்குடையவரும், குருவும், மூவரும் கூடி நன்மையான ராசி, திரிகோண கேந்திரமுடைய சந்திரன், சுக்கிரன், புதன் இவர்களில் ஒருவர் 2 – ல் நிற்க, ஜோதிட வித்துவான். 60) குரு கேந்திரமடைய, சுக்கிரன் 4 – ல் நிற்க, புதன் திரிகோணமடைய ஜோதிட சித்தாந்தி.

உரையாடலின் ஒரு பகுதி 16

மதிப்பற்று வாழ உலகில் எந்த உயிரும் விரும்புவது இல்லை தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளலும் பிறரை மதித்தலும் வாழ்க்கையின் அடிப்படையான அடித்தளங்கள் அந்த அடித்தளங்களை அமைக்க உள்ள அனுபவங்களே தத்துவங்கள் என்பார்கள்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 9

கேசவாதித்யர் காசியில் உள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக காசி காண்டம் கூறுகிறது. திருமாலின் அருளால் சூரியன் அமைத்த சிவலிங்கம் இது. இங்கு அருள் புரியும் சூரியன் ‘கேசவாதித்யர் ‘ எனப்படுகிறார்.

உரையாடலின் ஒரு பகுதி 15

பிரார்தனையில் ஒரு பாகமாக இருக்க வேண்டியது சொல்லிக்கொடு. எனக்கு எது தெரிய வேண்டுமோ அதை முழுமையாய் சொல்லி கொடு அதை புரிந்து கொள்ளும் சக்தியையும் நீயே கொடு என்று உண்மையாய் பிரார்திக்கும் பக்குவம் அதாவது நான் என்ற நிலை இல்லாத நிலையில் பிரார்திக்கதெரிந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு

சுந்தர யோக சிகிச்சை முறை 43

உழைப்பற்றால் பசி எடுக்காது. ஜீரணம் குறையும். பித்த சோகம் ஓய்வெடுக்கும். ரத்தவோட்டம் மந்தமாகும். சுவாசநடை தாறுமாறாகும். பூர்ண சுவாசமுண்டாகாது. சதைக்கூட்டங்கள் பல உழைப்பின்மையால் முதுமை அடையும். தூங்கும், அழுகும். உடல் கொழுக்க இருதயத்தின் மேலும் கொழுப்பு இறங்கும். சகல வியாதிகளுக்கும் மூல காரணமான மலச்சிக்கல் உண்டாகி அதிகரிக்கும். உழைப்பற்ற மானிட சரீரத்தை கண்ணால் பார்க்கச் சகிக்காது. தையல்காரனைக் கூப்பிட்டு அவனுதவியால் தான் ” இதுவும், மனித சரீரம் ” என்று அறிய வேண்டும். எளிதில் நோய் பற்றும்,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 6

ஒருவனுக்கு நான் என்னுடையது என்ற சொற்கள் எப்பொழுது முற்றும் அர்த்தமற்றவையாகின்றனவோ அப்பொழுது அவன் ஆத்மஞானியாகின்றான். எல்லா உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மாவைக் கண்டு கொண்டதாய்க் கருதுபவன் அப்பொழுதும் தனக்குப் பகைவர்கள் இருப்பதாய்க் கருதுவானேயானால் அவன் நெருப்பைக் குளிர்ந்ததெனக் கொள்பவனாவான்.

உரையாடலின் ஒரு பகுதி 14

நாம் வளர்வதும் நல்லபடியாய் இருப்பதும் ஒரு தனிமனிதன் கையில் இல்லை. காலம் விளையாடும் இடம் இது காலம் சில சமயம் பெரிய குழுக்களை ,தேசத்தை, இனத்தை, உருமாற்றும் இதையெல்லாம் தனி மனிதனால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என்று கேட்டால் ஆமாம் என்பதுதான் பதில் உதவி செய்ய கூடாதா என்றால் எது உதவி என்றே தெரியாத போது உதவி எப்படி செய்வது உதவி இதுதான் என்று தெரிவதற்கே ஜென்மம் போதாதே, ஏனென்றால் நாம் கற்க…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 48

பூத தோஷ நிவார தயிலபிந்து ரூபம் ….. மண்டலாகாரமாய் தோன்றுமாகில் கிரஹபீடை ஒழிந்தததென்று ஓளஷத சிகிச்சை செய்தல் வேண்டும். சாகினி கிரஹ தேவதா தோஷ லக்ஷணம் ….. தயிலபிந்து திரிகோணகாரமாய் தோணுமாகில் சாகினிதேவதை வீட்டு தேவதைகளால் நோய் உண்டானதென்று அறியவேண்டியது. பூத பிரேத தோஷ குறி ….. தைல பிந்துவில் சாலனி உருவம் தோன்றினால் பூத பிதேங்களினால் நோய் உண்டானதென்று அறிய வேண்டியது.

உரையாடலின் ஒரு பகுதி 13

எந்த அனுபவமும் ஒருவனுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த அனுபவம் தரும் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் அனுபவம் தன்னை மீறி ஆட்சி செய்ய தொடங்கிவிட்டால் நாம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியாது இந்த விஷயம் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 8

உத்திர அர்க்கர் காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம்’ என்றும் இதைக் கூறுவர். இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சுவாமிக்கு ‘ உத்திர அர்க்கர் ‘ என்பது பெயர்.

உரையாடலின் ஒரு பகுதி 12

மனித சமுதாயம் வாழ வேண்டிய முறை, உலகத்தை உள்ளபடி ரசி உனக்கென்று உள்ளதை முழுமையாக அனுபவி உன்னுடைய எந்த செயலும் பிறரை காயப்படுத்தாமல் வாழ். உன்னையே கவனி உனக்குண்டானது தவிர மற்றதை ஒதுக்க எப்போதும் எச்சரிக்கையாய் இரு ஆனந்தமாய் இரு அப்படி நீ இருந்தால் நீ ஆண்டவனை கூட நினைக்க வேண்டியது இல்லை காரணம் ஆண்டவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பான் இயற்கையிடம் பாடம் கேள் அது சொல்லி தருவதை புரிந்து கொள் சுதந்திரமானவனாய் இரு.

சுந்தர யோக சிகிச்சை முறை 42

பொய் நகாகரிகமற்ற பண்டைக்காலத்தில், இயந்திர, விஞ்ஞான முன்னேற்ற செளகரியக் குறைவால் உடல் மேற்கூறிய பலவித உழைப்புகளுக்கு ஈடுபட்டு, நன்றாக வளர்ந்து, திறமை திடம் பெற்று, மானிடர் வனப்பு ஓங்கி, கஷ்ட சுகங்களின் மாறுதலைத் தாங்கும் சக்தியுடன் இருந்தனர். இவர்களுடைய ரத்த நாடிகளும், இருதயமும், ஸ்வாசக் கருவிகளும், பலத்துடன், சுறுசுறுப்புடன், சிரமம் தாங்கி வேலை செய்து நின்றன. எனவே நோய் எளிதில் வரவில்லை. வந்தாலும், நீண்டு நிற்கவில்லை உயர், உயிர் கருவிகளைச் சிதைக்கவில்லை. தாறுமாறான நிலைகளை உண்டாக்கி, புதுப்புது…

ஆண்களும், பெண்களும் 2

எப்போது பொருளாதார சிந்தனை பெண் இனத்திற்குள் ஊடுருவி வேர் விட்டதோ அன்றே சமுதாயத்தில் தவறுகளின் காலம் தொடங்கி விட்டது எனலாம் மனிதனின் தேவைகள் என்பவற்றில் ஆசைகள் ஆட்சி செய்து ஆசைகள் எல்லாம் தேவைகளே எனும் நிலைக்கு வந்தது அப்போதுதான் பொறுப்பற்றதன்மையும், வேகமும், முரட்டுதனமும், சினமும், ஆதிக்கம் செலுத்தும் மனோ பாவமும் ஆணின் இயற்தன்மை. அச்சம், மடம், நாணம், பொறுப்போடு இருத்தல் அன்பு செலுத்துதல், அரவணைத்தல் அடங்குதல் பெண்ணின் இயற்தன்மை இவற்றில் குறையோ, மாறுபாடோ தோன்றினால் அடிப்படை எங்கோ…

ஆண்களும், பெண்களும் 1

ஆண்களும், பெண்களும் எப்போதும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கும், இயற்கையான இயல்பு தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் இதை முதலில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இவை இரண்டும் எதிர், எதிர் கோணங்கள் ஆண் ஆணாக இருப்பதும், பெண், பெண் ஆக இருப்பதும் இயற்கையின் வடிவமைப்பு அந்த வடிவமைப்பில் மனிதன் மாற்றம் செய்யும் போது அடிப்படை தகர்ந்து விடும் இது ஆணாதிக்க நிலையில் தோன்றிய சிந்தனை அல்ல உண்மை நிலை இதை பகுத்தறிவு கொண்டு மறுதலிக்கும் போது கட்டமைப்பு…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 5

செயல்களைத் துறந்து, காலம், தேசம், திக்கு முதலியவைகளைக் கருதாமல் என்றும் இன்பவடிவானதும், மாசற்றதும், குளிர் முதலியவற்றை போக்குவதும் ஆகிய ஆத்மா எனும் புண்ணிய பூமியை எவன்,  நாடுகிறானோ அவன் அனைத்தையும் அறிந்தவனாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் சாவைக் கடந்தவனாகவும் விளங்குவான், உடலில் ஒரு கை வெட்டி எறியப்பட்டால் உடலுக்குக் குறைவேற்படும்பொழுது ஆத்மாவிற்குக் குறைவேற்படுவதில்லை. மிகுதியுள்ள உடலின் அங்கங்கிளிலும் ஆத்மாவிற்கு ஒரு பற்றுமில்லை

கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் விதம்.

இதில் வரும் கருத்துக்கள் மத்திய அரசின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும், வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயண திரவங்களிலும் கழுவப்படுகிறது. அதனால், கன்றுக் குட்டியின் சீரம் முழுவதும் போய்விடுகிறது. அதன்பின் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது. வைரஸ் வளர்ந்தபின் வெரோ செல்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. அதன்பின் வைரசும் அழிக்கப்படுகிறது. (செயலிலக்கம் செய்யப்படுகிறது )…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 47

சிராயுதயில பிந்து ரூபம் ….. அன்னபக்ஷிகள் வாத்துக்கள் முதலியது சம்பூரணமாயும் தாமரைக்காய் பூ முதலியது நிறைந்த தடாகத்தை போலும், சத்திரம், சாமரம், தோரணம் இவைகளைப்போல் தோணினாலும் அந்த ரோகி சிராயுவாயிருப்பான். பூததோஷ தயில பிந்து ரூபம் ….. தயிதலபிந்துவில் எருக்கன் செடிப்போல் தோன்றினால் அந்த புருஷனுக்கு சாகினிமோகினி முதலியவைகளால் தோஷம் சம்பவித்ததென்று அறியவேண்டியது. கிரஹதேவதா தோஷ ரூபம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் வீட்டின் தேவதைகளால் தோஷம் உண்டானதென்று அறியவேண்டியது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 7

திரவுபதி ஆதித்யர் சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சயபீடத்தில் உள்ளது. சூரியனுக்கு திரவுபதி ஆதித்யர் என்று பெயர்.

உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும்

மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக்காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா ? இந்தியஅன்னை அறிவாற்றலில் குறைந்தவளா ? அல்லது திறமையில் தான் குறைந்தவளா ? அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றை பார். பிறகு அறிவாற்றலில் இந்தியஅன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா ? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான் உலக நாடுகளின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 41

இந்த உழைப்பை நடத்தல், ஓடுதல், ஏறல், இறங்கல், பிடித்தல், விழுதல், கடித்தல், மடித்தல், நீட்டல், திருப்பல் என்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். இச்செயல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சதைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதி நரம்புகள், நரம்புவலைகள், சக்கரங்கள், சக்திகள் உபயோகமாகின்றன. சதைக்கூட்டமும் ஒவ்வொருவித சக்தியை உபயோகித்து பலனுண்டாக்குகிறது.

இந்தியா அழிந்து விடுமா ?

இந்தியா அழிந்து விடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் இருந்த இடத்திலே காமமும், ஆடம்பரமும், ஆண் தெய்வமாகவும், பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றை…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 46

அசாத்திய தயிலபிந்து உருவம் ….. மூத்திரத்தில் விட்ட தயிலபிந்துவானது ஆமையைப் போலும், நகத்தடி கலப்பை, எருது, நரி, ஒட்டகம், பன்னி இவைகளின் உருவம் போலும் தோணுமாகில் ரோகமானது அசாத்தியமென்றும் அறிய வேண்டியது. மரண கால தயிலபிந்து ரூபம் …… ஆயுதங்கள், கத்தி, வில்லு, கேடயம், உலக்கை, சூலம், கதை முதலிய உருவமாக தோணுமாகில் சந்தேகமின்றி அந்த ரோகி எமபுரத்திற்கேகுவான்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 6

சுஷோல்கர் ஆதித்யர் கருடன் தன் தாய் விநதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாகும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழி பட்ட சூரிய பகவானை ‘சுஷோல்கர் ஆதித்யர்’ என்று அழைக்கின்றனர். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னிதி உள்ளது.

சுந்தர யோக சிகிச்சை முறை 40

சதைக் கூட்டங்கள் உழைத்தே உயிர், வீரியம் பெறவேண்டும். உழைக்காத சதைகள் மெலிந்து விடும் அல்லது உளைச் சதையாகப் பயனின்றி ஜீவனுக்கு அவசியமற்ற பாரமாக வளரும். இயந்திர முன்னேற்றம், மனிதனுடைய இயற்கைக்குகந்த உழைப்பு வாழ்வைப் பாழாக்கிவிட்டது. இயந்திர முன்னேற்றமே நேராகக் கெடுத்ததென்று சொல்ல நியாயமில்லை. இயந்திரம் உழைப்பின் அவசியத்தை நீக்கவே, மனிதர் சோம்பலுக்கிடங் கொடுத்தனர். இயந்திரம் நீக்கிய உடலுழைப்பை வேறு விதமாகப் பெற முயற்சிக்கவில்லை, உடலை எத்தீவிரத் திட்டத்தில் வைக்கின்றோமோ அதற்கொத்தவாறு தான் வீணைத் தந்தி போல் உயிர்…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 4

ஆத்மா எப்பொழுதும் அடையப்பட்டதாயிருப்பினும் அஞ்ஞானத்தால் அடையப்படாததது போல் தோன்றுகிறது. அஞ்ஞானம் நீங்கியதும் ஒருவன் தன் கழுத்தில் ஏற்கனவே இருந்த ஆபரணத்தைக் கண்டு கொள்வது போல் ஆத்மா ‍ அடையப்பட்டது போல் பிரகாசிக்கிறது. உலகனைத்தும் ஆத்மாவே, ஆத்மாவிற்குப் புறம்பாக ஒரு சிறிதுமில்லை. குடம் முதலியவை மண்ணெனக் காண்பது போல் ஞானி அனைத்தையும் ஆத்மாவாய்க் காண்கிறான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 45

சந்நிபாத குறி ….. கறுப்பு வன்னமாய் மூத்திரநிறமிருந்தால் சந்நிபாதமென்றும் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பிரசூதி தோஷ குறி ….. மஞ்சள் நிறமும் உபரிபாகத்தில் கிருஷ்ண வர்ணத்துடன் புத்புதாகாரமாய் மூத்திரம் விசர்ஜனமானால் பிரசூதி தோஷமென்றும் அறியவேண்டியது. பித்த வாத கப சுராதிக்க குறி ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறமும், வதாதிக்கத்தில் ரத்தநிறமும், கபாதிக்கத்தில் நுறை நுறையாயும், சுராதிக்கத்தில் புகை நிறமும் தோணுகின்றது. மேலும் தயிலபிந்துவை மூத்திரத்தில் விட்டு அதனால் தோணுகின்ற உருவங்களைத் தெரிந்து அதன் சுபாசுபங்களை அறிந்து சிகிச்சை…

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 5

எமாதித்யர் சூரியனின் மகன் எமதர்மன் தன் சக்தியை அதிகரிக்க விரும்பி, சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. எமாதித்யர் என்னும் பெயரில் இங்கு அருளும் சூரியனுக்கு காசி சங்கடா காட்டில் கோவில் உள்ளது.

சுந்தர யோக சிகிச்சை முறை 39

இயற்கை, உடலை உழைப்பிற்கென்றே அமைத்துள்ளது. உடலின் எந்த பாகமும் அவசியமற்றதல்ல. ஒவ்வொரு பாகமும் உழைப்பில் ஈடுபட்டு, உழைப்புக் கூட்டுறவால் உடல், உயிர், உன்னத வாழ்வு பெறவேண்டுமென்பதே திட்டம். இந்த திட்டத்தை முறித்தால் அந்த பாகம் பலவீனமடையும் அல்லது உடல் முழுவதும் நோய் கொண்டு அழிவு ஏற்படும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 3

புத்திமான் தன்னுடைய அறிவால் காணும் உலகனைத்தையும் ஆத்மாவில் ஒடுக்கி ஆத்மாவானது களங்கமற்ற ஆகாயம் போன்றதென்று எப்பொழுதும் தியானிக்க வேண்டும். அருணோதயத்தால் இருளானது முதலில் நீக்கப்பட்ட பின் சூரியன் தானே பிரகாசிப்பது போல் அஞ்ஞானம் ஞானத்தால் நீக்கப்பட்ட பின் ஆத்மா தானே பிரகாசிக்கும்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 4

விமலாதித்யர் தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்கு காட்சியளித்த சூரியன், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது என அருள் புரிந்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் சூரியனுக்கு கோவில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர் ‘ என்ற பெயர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 44

ரசாதிக்ய மூத்திர குறி ….. மூத்திரமானது கரும்பு ரசத்தைப் போல் ஒத்து நேத்திரமானது பிஞ்சர வன்னமாயும் இருந்தால் சகாதிக்யத்தினால் உண்டானதென்று அறிந்து வங்கணம் செய்விக்கவேண்டியது. ஆமவாத ரோக குறி …… மூத்திரம் மஞ்சள் வன்னமாயும் அதிகமாயும் ஆனால் ஆமவாத ரோகம் என்று அறியவேண்டியது. அதிகசுர குறி ….. சிகப்பாயும் சுவச்சமாயும் தூமிரவன்னமாயும் மூத்திரமிருந்தால் அதிக சுரமென்று அறியவேண்டியது.

உரையாடலின் ஒரு பகுதி 11

இனப்பற்றையும், மொழிப்பற்றையும் தொலைத்த சமுதாயம் , சமுதாயம் சக்தியுடன் வளரமுடியாது.   இப்போது உள்ள சூழ்நிலை திராவிடர் எனும் இனப்பற்றும் தமிழ் எனும் மொழிப்பற்றும் தேய்ந்து அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது.  அதனாலேயே தற்சமய சூழ்நிலையில் இனப்பற்றும், மொழிப்பற்றுமே வருங்கால சந்ததியினரை அடிமைகளாகாமல் காப்பாற்ற முடியும்.  ஆனால், பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கிய நிலையில் உள்ள இக்கால சந்ததியினரால் இதை புரிந்து கொள்ள முடியுமா என்பதே கேள்விகுறிதான்.  

உரையாடலின் ஒரு பகுதி 10

மனித வாழ்க்கை சிறப்புறுவதர்கான கருணை எப்போதும் எங்கும் பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த கருணையை சரியாய் உள்வாங்கி கொள்வது என்பது அவரவர்களிடமே இருக்கிறது. சரியாய் உள் வாங்கிவிட்டால் வாழ்வின் அர்த்தம் வாழும் விதம் புரிந்துவிடும். எதில் வெற்றி அடைய வேண்டுமென்றாலும் கேள்விகள் கூர்மையாக வந்து கேள்விகளுக்கு விடை காண அபாரமான வேகத்தில் இயங்க வேண்டும் . அப்படி இயங்கினால் வெற்றி அடைதல் சுலபமாகும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 38

பழக்க வழக்கங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த சுத்தம் நோய் வராமல் தடுக்க மெத்த அவசியமாகும். இதற்கு விரோதமானவை குடி போதை, பொடி, சுருட்டு, புகையிலை பழக்கங்கள், போதையில் கஞ்சா, அபின் பிரதானம் பெற்றவை மூக்கில் தூளேற்றுவது, புகையிலையை வாயில் போடுவது எல்லாம் நோயை அதிக சீக்கிரத்தில் வரவழைத்துக் கொள்ளும். பிணி தடுத்தலுக்கு இப்பழக்கங்கள் எதுவும் உதவாது.

உரையாடலின் ஒரு பகுதி 9

உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி மனம் பற்றும் விஷயத்தாலேதான் பற்றும் விஷயத்திற்க்கு சக்தி இதை புரிந்து கொண்டால் பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும் அப்படி தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை அணுகி கேட்டு தெரிந்து கொண்டால் சக்தி, பக்தி ஆகும். அந்த பக்தி சக்தியாகி நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 2

எப்படி ஒரு விளக்கைக் காண்பதற்கு வேறொரு விளக்கு வேண்டப் படுவதில்லையோ அப்படியே அறிவு வடிவான ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்துவதற்கு வேறொரு அறிவை வேண்டுவதில்லை. ஆத்மா தன்னை ஜீவன் என்று கொண்டால், ஒருவன் பழுதையைப் பாம்பு என்று கொண்டு பயப்படுவது போல் பயத்துக்குள்ளாகிறது. தான் ஜீவனன்று தான் பரமாத்மா என்று அறிந்தனுபவிக்கும் பொழுது பயமின்மையை மீண்டும் அடைகிறது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 3

லோலார்க்கர் மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் சூரியனை ‘ லோலார்க்கர் ‘ என்று அழைப்பர். காசியிலுள்ள அதிசங்கமத்தில் இவருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள ‘லோலார்க்க குண்டம்’ என்னும் குளம் புகழ்மிக்கது.

யாருக்கு விருப்பம் ?12

உயிரைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தவர்கள் சொத்து பற்றி யோசிக்க மாட்டார்கள் உடம்பு பற்றி யோசிப்பவர்கள் சொத்தோடு ஒட்டிக்கொள்வார்கள். சொத்தோடு ஒட்டிக்கொள்பவர்கள் உடலை தான் என்று நினைத்துக் கொள்வார்கள்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 43

வேறு விதம் ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறம் அல்லது நிர்மலமான மூத்திரம் ஆகும். அப்படியே சமதாதுவிலும் கிணற்று சலம்போல் மூத்திரம் இறங்கும் க்ஷயரோகத்தில் கறுப்புநிறம் மூத்திரம் ஆகும். மேலும் ஊர்த்துவபாகத்தில் மஞ்சள் நிறம் அதே பாகத்தில் சிகப்பு வர்ணம் மூத்திரத்தில் தோன்றினால் பித்த பிரகிருதி சந்நிபாதமென்று அறிய வேண்டியது.

யாருக்கு விருப்பம் ?11

அப்படி அறியும் போது ஏற்படும் மவுனமே அறிவு, அந்த அறிவே தெளிவு, குரு, இறைவன், மற்றபடி அலைவதல்ல அறிவு. ஆர்ப்பரிப்பது அல்ல அறிவு, அடங்குதலே அறிவு. அமைதியே அறிவு இந்த பாடம் புரிந்ததென்றால் இறப்பை பற்றி அறிய உள்ள பால பாடத்தில் சேர்ந்ததாக நாம் நினைத்துக்கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 37

போகம் தேவையானால் மணத்திற்குக் காத்திருக்கும் காலமல்ல இது. போகிக்க ஆண், பெண் கூட்டுறவிற்கும் எதிர்பார்ப்பதில்லை. தன் கையே தான் கெட உதவியாகக் கொண்டு, சமூகத்தின் நர உருக்கொண்டு உலாவும், கழுதைப் புலிகளின் சண்டாளச் சேர்க்கை கற்பித்தலால், இஷ்டம் போல் விந்துவை செலவழிக்கக் கூடாது. மணவாழ்க்கை கொண்டவர்கள், கூட்டுறவை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் பற்றாது தடுத்துக் கொள்ள முக்கிய உதவி, பிந்து ரக்ஷணை.

யாருக்கு விருப்பம் ?10

நான் என்பதை அறிந்து அந்த நானிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தலே வெற்றி மற்றபடி எந்த வெற்றியும் வெற்றி ஆகாது அந்த நான் என்பது என்ன என்ற வினா தனக்குள் வரும் போது நான் என்பது உடலா, இல்லை மனமா என்ற வினா வரும் அது சரியா என ஆராய பொறுமை, நிதானம், அமைதி, சாந்தம், விடாமுயற்சி, இது அத்தனையும் தேவை இவைகளை கைகொள்ளும் போது அன்பு ஊற்று எடுக்கிறது. அந்த அன்பு தனக்குள் பெருக, பெருக…

யாருக்கு விருப்பம் ? 9

தன்னைதான் அறிய வேணும் சாராமல், சாரவேணும், பின்னைதான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி என்ன சொல்கிறது இந்த பாடல் தன்னை அறிய வேண்டும் என்கிறது தன்னை அறிவது என்றால் என்ன தனக்குள் இருக்கும் உணர்வுகளை அறிதல் அது தோன்றுமிடம் அறிதல் எதனால் தோன்றியது என்றும் அறிதல் அப்படியானால் உணர்வுகள் எத்தனை விதம் உணர்வுகள் பலவிதம் அதில் சில காம, கோப, லோப, மோக, மத, மாச்சர்யம் காதல் அன்பு பரிவு நேசம் பாசம் தியாகம் போன்றது இதில் நல்லது,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 1

ஆத்மா ஸத்தும் சித்துமே வடிவான ஆத்மாவை இடைவிடாத அப்பியாஸத்தாலன்றி அறிய முடியாது. ஆகையால் ஞானத்தை நாடுபவன் தன்னுடைய லக்ஷியத்தையடைய நீண்ட காலம் தியானம் பழக வேண்டும். ஒரு விளக்கானது குடம் முதலியவற்றைப் பிரகாசப்படுத்துவது போல் ஆத்மா ஒன்றே புத்தி முதலியவற்றையும் இந்திரியங்களையும் பிரகாசப்படுத்துகிறது. ஜடமான அவற்றால் ஆத்மா பிரகாசமடைவதில்லை.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 2

அருணன் காசியப முனிவரின் மனைவி விநதை, இரண்டு பிள்ளைகளை பிரசவித்தாள். முதல் பிள்ளை அருணன், இரண்டாவது பிள்ளை கருடன், சூரிய பகவானை வழிபட்ட அருணன், அவரது தேரை செலுத்தும் சாரதியாகும் பேறு பெற்றார். காசி திரிலோசனர் கோவிலில் அருணன் வழிபாடு செய்த சூரிய பகவான் ‘அருணாதித்யர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

யாருக்கு விருப்பம் ?8

எண்ணம் எனும் விதை பல தரத்தில் இருக்கிறது. அந்த விதைகளில் சில காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம், அன்பு, காதல், பாசம், நேசம், நட்பு, தியாகம், பரிவு, பண்பு, இத்தனை விதைகளும் வளர்ந்து மனிதனை பல விதங்களில் இம்சை படுத்துகிறது. சந்தோஷபடுத்துகிறது. இறப்பில் இவை அத்தனையும் நி‍றைவு பெற்றதாய் சக மனிதன் நினைக்கிறான். ஆனால் சாஸ்திரம் இவை அனைத்தும் தொடரும் என்கிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 42

இதுவுமது ….. மூத்திரத்தை பார்க்கும்போது அடியில் ரத்தம் கலந்து போல் தோணுமாகில் அதிசார ரோக மென்றும், நெய்பிந்துக்களைப் போல் இருக்குமாகில் ஜலோதர ரோகமென்றும், வசும்பைப் போல் வாசனையும், தயிரைப்போல் நீர் இறங்குமாகில் ஆமவாதமென்றும், குங்கும நிறம் அல்லது மஞ்சள் நிறமூத்திரமும் அதே வன்னமான மலமும் ஆகுமாகில் வாதசுர மென்றும் அறிய வேண்டியது.

யாருக்கு விருப்பம் ?7

பஞ்ச பூத தத்துவத்தில் மனதை ஆகாய தத்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ தோன்றுகிறது. மனம் நிலத்தத்துவமோ என்று ஏனென்னறால் நிலம் தானே. எந்த விதையையும்வளர செய்கிறது. அது மாதிரி எண்ணம் எனும் விதை மனதில் விழுந்தவுடன் மிக வேகமாக எண்ணம் வளர்ந்து விடுகிறது. அது பிறகு பல விதங்களில் ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மனிதன், மனித குலம் தடுமாறி தள்ளாடி ஆடுகிறது. அதில் ஏற்படும் கலக்கம் குழப்பம் பயம் மனித குலத்தை படுத்தும் பாடு சொல்லிமாளாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 36

போகம் என்பது பிந்து ( விந்து ) வீரியத்திற்கு சம்பந்தப்பட்டது. வயது வந்து, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கென்று ஏற்பட்ட திட்டம் தற்காலக் கலியுக வாழ்க்கையில், மணந்தவன், மணமாகாதவன், எல்லோரும் விந்துவை வரியில்லாத குழாய்த் தண்ணீர் போல் செலவழித்துவிடுகிறார்கள். மணமாகாதவன் பண்டைக் காலத்தில் பிரம்மசாரி என்று பெயர் பெற்றிருந்தான். பிரம்மசாரி என்பது விந்துவை ரட்சணை செய்கிறவன் என்றும் பொருள் பெற்றிருந்தது.

யாருக்கு விருப்பம் ? 6

இறப்பு உடல் சம்பந்தப்பட்டதுதான் அதில் சந்தேகம் இல்லை ஏனென்றால் இறப்பு என்ற ஒன்று உடலை இயங்க அனுமதிப்பது இல்லை. இயங்காத உடல் அழுகி நாறி ஏதேதோ ஆகி அந்த உடல் இல்லாமல் பேய் விடுகிறது. மனம் என்ற ஒன்று உடலில் ஏதோ ஒரு வஷ்துவாய் இருந்தாலும் அது மனிதனுக்கு தெரியவில்லை. தெரிவதில்லை அதை அடுத்தவருக்கு காட்ட முடிவதும் இல்லை. இதை தான் கண்ணதாசன் தன் பாடலில் அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்ட கூடாதோ என எழுதியிருப்பார்.…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 14

எனக்கு ஞானத்தை அளித்து அஞ்ஞானம் நிறைந்ததும் பிறப்பிறப்பு வடிவானதுமான ஸம்ஸாரஸாகரத்தினின்று என்னைக் காப்பாற்றியவரும், போற்றுதற்குரியவர்களிற் சிறந்தவரும், எல்லாமறிந்தவருமான எனது குருநாதரை வணங்குகிறேன். அஞ்ஞான இருளிருந்தபொழுது இவ்வுலகம் முழுதும் உண்மையெனப்புலப்பட்டது. ஞான சூரியன் உதித்த பிறகு உலகை நான் காணவில்லை. இது ஆச்சரியம்.

யாருக்கு விருப்பம் ?5

இதிலிருக்கின்ற சிக்கல் என்னவென்றால் செத்தார் எப்படி திரிவார்கள் என்று தெரிந்தால்தானே அப்படி திரிய அது சரியாய் தெரியாத காரணத்தால் அவர் அவர்களுக்கு தோன்றியபடி திரியும் சில கூட்டங்கள் செத்தார்கள் இப்படிதான் திரிவார்கள் என சக மனிதர்களுக்கு பாடமும் எடுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் நரியையும் பார்த்ததில்லை அதன் கொம்பையும் பார்த்ததில்லை. நரி அதிகமாய் இருக்கும் காட்டையும் பார்த்ததில்லை ஆனால் நரி கொம்பு விற்கும் மனிதர்களை போல்தான் உள்ளது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள். 1

கங்காதித்யர் கங்கையை பூமிக்கு வரவழைத்தவர் பகீரதன், இவர் தன்னுடைய முன்னோர்கள் நற்கதி அடைவதற்காக ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கை பூமிக்கு வந்ததை அறிந்த சூரியன், இங்கு வந்து கங்கையை வழிபட்டார். அவர் வழிபட்ட சூரியக் கோவில் லலிதாகாட் படித்துறை அருகில், கங்காதித்யர் என்ற பெயரில் அமைந்துள்ளது.

யாருக்கு விருப்பம் ? 4

இறப்பில் இருந்து பாடம் கற்க துணிந்து அதில் இறங்கி அந்த பாதையை ராஜபாட்டையாய் மாற்றி நடைபோட்டவன் வரலாற்றில் எனக்கு தெரிந்து புத்தன் மட்டுமே. மற்ற எல்லோரும் அந்த பாதையை முட்டு சந்தாகதான் உபயோக படுத்தி யிருக்கிறார்கள். இறப்பை சிந்திக்க வாழும் வாழ்க்கை ஏனோ அனுமதிப்பது இல்லை என்றே தோன்றுகிறது. அதனாலேயே அனுபவத்தில் சிறந்த முன்னோர்கள் செத்தாரை போல் திரி என்று சொல்லியிருக்கிறார்கள்

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 41

மூத்திரதாரையின் நிறக்குறி ….. மூத்திரமானது வெண்மை தாரையாகவும், மஹா தாரையாகவும், மஞ்சள் வர்ணமாயும் இருந்தால் சுரரோகமென்றும், சிகப்பு நிற தாரையாயிருந்தால் தீர்க்கரோகமென்றும் கறுப்பு நிறதாரையாயிருந்தால் அவசியம் மரணமென்றும் சவ்வீரவரணமாகிலும் மாதுலங்க பல ஆகாரத்துடன் அதே வரணமாவது இருந்தால் சுபம். சலத்தைப்போல் இருந்தால் அசீரண மூத்திரமென்று அறியவேண்டியது.

யாருக்கு விருப்பம் ? 3

அவர்கள் அப்படிதான் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலைவயிலும் மனிதன் ஏனோ இறப்பை விரும்புவதில்லை. அதற்க்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இயற்கை அல்லது இறைவன் தன் கையில் வைத்திருக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று ஆனால் இது மிக முக்கியமானது மனிதனின் அறிவுக்கு புலப்படாதது எல்லா காலத்திலும் மனிதன் தோற்றவிஷயம் இது மட்டுமே.

சுந்தர யோக சிகிச்சை முறை 35

அவரவர்களின் தினசரி வாழ்வின் தன்மைக்குத் தக்கபடி 24 மணி நேரத்தில் ஆறிலிருந்து எட்டு மணி நேரமாவது நித்திரை செய்ய வேண்டும். இந்த நித்திரையில் ஒரு முக்கியப் பகுதி நடுநிசிக்கு முன்பாக அமைந்தால் உடல் மெத்த நன்மை பெறும் நாடகம், சினிமா, கூத்து, அதிகப்படிப்பு, உழைப்பு இவைகளால் நித்திரை கெட்டால் நோய் பற்றிக் கொள்ளக்காத்து நிற்கும். நோய் தடுத்தலுக்கு முக்கியமான திட்டம். சுமார் ஆறிலிருந்து எட்டுமணி நேரம் நித்திரை செய்வது.

யாருக்கு விருப்பம் ? 2

ஏனென்றால் இந்த வார்த்தைக்கு இந்த சொற்பொருளுக்கு இந்த அர்தத்தை தவிர நிறைய அர்தங்கள் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலே சொன்ன விஷயம் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அவர்கள் சொல்லவில்லை. காரணம் நாம் பயந்துவிடுவோம் என்று நினைத்திருப்பார்கள்.

யாருக்கு விருப்பம் ?1

இறக்க யாருக்கு விருப்பம் ? யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் விரும்பாத ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தானே இருக்கிறோம். விரும்பாத ஒன்றை செய்து தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு. கால அளவுகள் வேறு அவ்வளவுதான். இறப்பை விரும்ப வேண்டுமென்றால் முதலில் அதை படிக்க வேண்டும். இறப்பை படிப்பது எப்படி யார் சொல்லி தருவார்கள் அப்படியே சொல்லித்தந்தாலும் நமக்கு அது புரியுமா நாம் இருக்கும் சூழ்நிலை நாம் பெற்ற அறிவு சொல்லித்தருவதை ஒத்துக்கொள்ளுமா பெரிய கேள்வி தான்…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 13

வேதாந்தத்தின் விஷயமான ஞானம் சித்தித்தால், ஜீவனே பிரம்மம் என்ற அனுபவம் ஏற்படும். அதனால் ஒருவன் பிறவித் தளையினினின்று முற்றும் விடுபடுகிறான். ஆத்ம ஞானத்திற்கொப்பாவது வேறெதுவுமில்லாமைாயல், ஒருவன் எப்பொழுதும் சீடனுடைய குணங்களைக் கைக்கொண்டு ஞானத்தைச் சம்பாதித்துப் பிறவிக்கடலைக் கடந்து செல்லவேண்டும்.

எந்த திட்டமும்

எந்த திட்டமும் அது பெரியதோ, சிறியதோ காலத்தின் அனுகூலத்திலோ, அல்லது பிரதி அனுகூலத்திலோதான் இருக்கிறது நாம் திட்டம் தீட்டலாம் ஆனால் முடிவு காலத்தைப் பொறுத்தது. அதாவது, காலமாகி இருக்கின்ற கண்ணுக்கும், புலன்களுக்கும், அறிவுக்கும் புலனாகாத சக்தியைப் பொறுத்தது.

வேதாந்தம் பேச

எல்லோரும் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள், வேதாந்தம் பேச வயது வேண்டும் என்று உண்மையில் வேதாந்தம் வயதில் இல்லை. வேதாந்தம் இருப்பது சிந்தனையின் நுட்பத்திலும் விவேகத்தின் அடித்தளததிலும் இருப்பது.

தத்துவம் எது

தத்துவம் எது என்று வினா வந்தால் சிறிதும் யோசிக்காமல் விடையை சொல்லிவிடலாம் மனித வாழ்க்கையென்று ஆம் வேறு எது பெரிய தத்துவமாக இருக்கமுடியும். எத்தனை தத்துவங்கள் இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு வேண்டிதானே தத்துவம். தத்துவம் நிலைபெறுவது தர்க்கத்தினால் மனித வாழ்க்கை எனும் தத்துவத்திற்கு, மனித வாழ்க்கையின் ஒட்டமே தர்க்கம். ஒவ்வொரு மனிதனின் காலமும், முன்னேற்றமும், வீழ்ச்சியும், சாதக, பாதகங்களுமே மிக சிறந்த தர்க்கங்கள்.

சாந்தமும்,அமைதியும்

வருட கணக்கில் போர் செய்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிடலாம். அணுவை பிளக்க செய்து மலையை தரைமட்டமாகிவிடலாம் பிடிவாதத்தை மூலதனமாக்கி எட்டாத மலைகளிலும் ஏறிவிடலாம். அணையை கட்டி நதியின் பிரவாகத்தை கட்டுபடுத்திவிடலாம் ஆனால் பலவந்தமாய் ஒரு பூவை மலர செய்ய முடியாது. அது இயற்கையால் தான் முடியும். இது எப்போது ஒருவருக்கு புரிகிறதோ அப்போதே புரிந்தவர் எல்லா விஷயங்களையும் சரியான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார் அதுமட்டுமல்ல தன்னை மீறிய சக்தி உண்டு தன்னால் செய்ய முடியாத வேலைகளும்…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 28

56) சந்திரனும் 2 – க்குடையவரும் கூடி நிற்க, செவ்வாய் திரிகோணமடைய லக்கினாதிபதி நீச்சம் பெற்று, 3 – க்குடையவரோடு கூடி நிற்க ஆடையின்றி தரித்திரம். 57) சந்திரனும், 2, 6, 12 – க்குடையவர்களும் லக்கினத்திற்கு 2 – க்குடையவர்களும் ஆகிய நால்வரும் 6 – ல் நிற்க, மனத்துயரத்தோடு காலம் கழிப்பார்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 27

54) 4, 11 – க்குரியவர் கூடி 9 – இல் நிற்க, செவ்வாய் பார்க்க ( பி ) சந்திரன், செவ்வாய், 2, 4 – க்குரியவர்கள் நால்வரும் கூடி 2 – ல் நிற்க ( சி ) 6, 4, 11 – க்குரியவர்கள் 2 லிருந்து, சந்திரன் பார்த்து, லக்கினத்தில் குரு இருக்க ( டி ) சந்திரன், செவ்வாய், 9 , 11 – க்குரியவர் நால்வரும் திரி«£கணத்தில் நிற்க…

சந்திரன் 7

சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதி யோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.

கல்வியும் வித்தையும்

கல்வி, வித்தை, பற்றி ஜோதிடம் நமக்கு எத்தனையோ விதிகளை கொடுத்திருக்கிறது. அந்த விதிகள் அனைத்தும் நம்மால் கை கொள்ள முடியாது. ஆனால் அதில் சில விதிகளையாவது அனுஷ்டிக்கலாம். அப்படி செய்வது குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும். வித்யாரம்பம் என்று சொல்லப்படும் கல்வி கற்க ஆரம்பிக்கும் முதல் நாள் திருவோணம், புனர்பூசம், பூசம், மிருகசீரிஷம், அவிட்டம், ஸ்வாதி, சதயம், அனுஷம், திருவாதிரை, அஸ்தம், சித்தரை நட்சத்திரங்கள் முதல் தரமானது. அஸ்வினி, ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 14

கடவுள் அவனவனுக்கே உரிய பொருள். அத்தொடர்பே நிலையானது. இறைவனிடத்து அவனவன் கொள்ளும் அன்பின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு, ஒருவன் அவனை உணர்கிறான். அஞ்சற்க யாரோ ஒருவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருப்பதாக எப்பொழுதும் எண்ணிக்கொண்டிரு.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 13

இறைவனைத் தொழுதாலும், தொழவிட்டாலும், மணம் புரிந்துகொள்ளாத ஒருவன் பாதியளவு விடுதலை பெற்றவனாகிறான். கடவுளிடம் அவனுக்குச் சிறிதளவு பற்று ஏற்டுவதாக உணரும்போது, அவன் வெகு வேகமாக இறைவனைச் சென்றடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 12

இறைவனது அருளே காசி முழுதும் நிரம்பியிருக்கிறது. ஆஸ்திகனோ, நாஸ்திகனோ, வேறு மதத்தவனோ, பூச்சியோ அங்கு இறக்கும் எந்த உயிரும் முக்கியைடையும். அனேக பாவிகள் காசிக்கு வந்து, விசுவநாதரது உருவைத் தொட்டு தம் பாவத்தினின்றும் விடுதலை பெறுகின்றனர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 40

ரோக சாத்திய குறி ….. அந்த தைலபிந்துவானது தாமரை புஷ்பாகாரமாயும், சங்குசக்கிராகாரமாயும், வீணை ஆகாரத்தைப் போலும் சிம்மாசனத்தைப்போலும் மல்லிப் பூ மொக்கைப்போலும் தோன்றினால் அந்த ரோகம் சாத்தியமென்று அறிய வேண்டியது. மரண குறி ….. அந்த தயில பிந்துவானது பக்ஷியைப்போலவும், ஆமையைப்போலவும், எருதைப்போலவும், சிங்கத்தைப்போலவும், பன்றியைப்போலவும், சர்பத்தைப் ( பாம்பு ) போலவும், குரங்கைப்போலவும், விருச்சிகத்தைப் ( தேள் ) போலவும், குக்குடத்தைப்போலவும் தோணுமாகில் அந்தரோகி எமபுரத்திற் கேகுவானல்லது மீளான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 39

தோஷ குறி  பாத்திரத்தில் விட்ட தயில பிந்துவானது பரவினதுப்போல் இருந்தால் வாத ரோகமென்றும், குமிழி குமிழிப்போல் கிளம்பினால், பித்தரோகமென்றும் உருவமாய் தோணினால் கபரோகமென்றும் தயில பிந்து உண்ணாக முழுகிவிட்டால் அசாத்தியமென்றும் அறியவேண்டியது. சாத்தியா சாத்திய ரோக குறி …..  அந்த தையில பிந்துவானது வியாபித்தால் ரோகம் சாத்தியமென்றும் மேலாக முட்டை முட்டையாய் கிளம்பினால் கஷ்டசாத்தியமென்றும், மேல் எம்பாமல் முழுகிவிட்டால் அசாத்தியம் என்றும் அந்த ரோகி சீவிக்க ( மரணம் ) மாட்டானென்றும் அறியவேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 38

தோஷாதிகளின் மூத்திர நிறம் மூத்திரமானது வாதத்தில் சிகப்பாயும், பித்தத்தில் மஞ்சள் நிறமாயும், கபத்தில் வெண்மையாயும், சந்நிபாதத்தில் கருப்பு நிறமாயும் இறங்கும். துவந்த தோஷ மூத்திர நிறம் வாத பித்தத்தில் பொகை நிறமாயும் ( புகை ) வாத சிலேஷ்மத்தில் நுறை, நுறையாயும், பித்தசிலேத்துமத்தில் மிசிரமாயும் மூத்திரம் இறங்கும். மூத்திர பரீ¬க்ஷவிதி அதிகாலையில் துத்திநாகம் அல்லது வெங்கலபாத்திரத்தில் ரோகியை மூத்திரம் பெய்யச் செய்து அதில் முதல் தாரையும், அந்திய தாரையையும் நிலத்தில் பெய்யும்படி செய்து மத்திஸ தாரையைமாத்திரம் அந்த…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 26

53) 2 – க்குரியவர் சந்திரன், குரு மூவரும் கேந்திர திரிகோணம் அடைந்து, 2 – ல் சுபர் இருக்க, ( பி ) 2, 4 – க்குரியவர், சந்திரன் – ராகு நால்வரும் கூடி, 2 – ல் நிற்க ( சி ) சுக் – சந்திரன் – குரு மூவரும் கூடி 2 – ல் நிற்க, ( டி ) 2 – ஆமிடத்தை 4, 9, 10 –…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 25

51) லக்கினாதிபதி நீச்சம் அடைந்து 4 – ல் உள்ள சனியோடு, 8 – க்குரியவர் சேர, ( பி ) 2 – க்குரியரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ( சி ) 2 -க்குரியவர், 6 – க்குரியவர், சுக்கிரன், தூமன் மூவரும் 6, 8 – ல் நிற்க, ( டி ) 2 – க்குரியவர், தூமன், எமகண்டன் மூவரும் கூடி நிற்கப்…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 24

49) 11 – ல் குரு இருந்து, சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி, 6 பேர்களையும், பார்க்க, தனம், கல்வியில் சிறப்புடன் இருப்பர். காவிய நூல் படைப்பார். பல மொழிகளில் தேர்ச்சி கிடைக்கும். ஞானநூல் ஆசிரியர் ஆவார். 50) லக்கினத்தில் ராகு நிற்க, 7, 6 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க பல நூல்களை கற்று புகழ் பெற்றவர்களோடு இருந்து பல வினோத வித்தையில் கீர்த்தியும் – புகழும் பெறுவர்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 11

துக்கத்திலடிபட்ட உங்கள் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள். கண்ணீர் சிந்தி, ‘ இறைவனே, என்னை உன்பால் இழுத்துக் கொண்டு மன அமைதி தந்தருள்க ‘ என்று மனமாரப் பிரார்த்தியுங்கள். அவ்வாறு எப்போதும் செய்வதன் மூலம் படிப் படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 10

அஞ்சேல், இறைவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறான். அவனுக்குரிய பணிகளைச் செய். சாதனங்கள் பழகு. தினந்தோறும் சிறிது வேலை செய்தாலும் மனத்திலிருந்து விணான நினைவுகளை நீக்கிவிடும். இப்பிரபஞ்சம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக்கொள்க. அவன் தனது கருணையை உன் மீது பொழிவான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 9

உண்மையில் இவ்வுலகமாகிய கடலைக் கடக்க விரும்பும் ஒருவன் எப்படியாவது தன் பந்தங்களை அறுத்துக் கொண்டு விடுவான். யாராலும் அவனை அவற்றில் சிக்க வைக்க முடியாது.