ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11
அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால், பிறவிச் சுழலுக்கும் காமத்திற்கும் கருமத்திற்கும் மூலகாரணமான அவித்தை மிச்சமில்லாமலே அழிந்து போகின்றது.
அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால், பிறவிச் சுழலுக்கும் காமத்திற்கும் கருமத்திற்கும் மூலகாரணமான அவித்தை மிச்சமில்லாமலே அழிந்து போகின்றது.
உலகில் உள்ள எல்லா போராட்டங்களையும் விட மனிதனுக்கும் அவன் மனதிற்க்கும் நடக்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம். சிறிது கூட இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டம் இதில் மனம் ஜெயித்தால் பயித்தியகாரன் மனிதன் ஜெயித்தால் புத்தன், ஞானி. ஆ என்றால் பெரியது தலைவன் என்ற அர்த்தத்தோடு இறை என்ற அர்த்தமும் உள்ளது அதாவது நீ லயத்தில் இருந்தால் ஆ எனும் இறையை உடலில் காணலாம். இதில் முக்கியமானது லயத்தில் இருக்க வேண்டும் அதாவது உடல் லயத்தில் இருக்க…
மனதின் இயக்கங்களை முழுமையாக கண்டறிய மனிதனால் இன்னும் முடியவில்லை அதனால் தான் புத்தர் போன்றோர் மனதை கடந்து சென்றுவிட்டனர் அப்படி மனதை கொண்டேமனதை கடந்து சென்றதினால் அதை பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மனதை நமக்கு எஜமானனாக நாம் கொண்டால் நாம் மறைந்து விடுவோம். மனம் மட்டுமே இருக்கும் நாம் மனதிற்கு எஜமானனாக இருந்தால் நாம் இருப்போம் மனம் மறைந்து விடும் இது புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும் மிக…
உடலை எவனொருவன் ஆண்டவன் உருவாக்கிய ஆபூர்வகருவியாக நினைத்து ஆச்சரியப்பட்டு பின் தன் உடல்மீது அன்பு கொள்கிறானோ எவன் தனது உடலை கடவுளை அடைய உதவும் ஏணியாக பயன்படுத்த அறிந்திருக்கிறானோ அவன் உடலில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை கண்டு கொள்வான் அந்த ரகசியங்கள் மூலம் இறையை உணர்வான் இதைத்தான் முன்னோர்கள் இப்படி சொன்னார்கள் ஊணுடம்பு ஆலயம் என்று.
உண்மையில் மனித வாழ்வில் அழிக்கப்பட வேண்டியது என்று எதுவும் இல்லை மாற்றி அமைத்து மேன்மைப்படுத்த வேண்டியவைகள் மட்டுமே உண்டு அப்படி மேன்மைப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவரவரிடமே உள்ளது. கடவுளை அறிய அல்லது அடைய முக்கியமாக தேவையானது இதயம் தலை அல்ல. அடுத்ததாக இதயம் மட்டும் பத்தாது அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும். தலையில் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும் அதனால் அதைக்கொண்டு இறைவனை அடைய முடியாது.
ஒருவன் தன்னுடைய உடலையோ, மனதையோ வெறுப்பதினால் அவன் அடையும் பயன் ஒன்றே ஒன்று தான் கடவுள் என்பவரின் நிழலைக் கூட காண முடியாது. ஒருவன் தன்னை வெறுப்பதினால் தன் மீது அன்பு செலுத்த இயலாதவனாகிவிடுகிறான். அதன் பின் அவனால் பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர், நண்பர்கள் போன்றவற்றில் எதிலும் அன்பு செய்ய இயலாதவனாகிவிடுகிறான். கடவுளை காண அன்பு மட்டுமே கருவியாக இருக்கும் போது அந்த கருவி இல்லாதவனால் கடவுளை அறியமுடியுமா?
தனக்குள் ஆனந்தம் இல்லாதவன் ஆசை வயப்படுகிறான். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதன் மூலம் அவன் ஆனந்தம் அடைய முயற்சி செய்கிறான், அதில் சில ஆனந்தங்களை மிக சிறிய அளவு அடைகிறான் மனிதன் இன்னமும் புரிந்து கொள்ளாத விஷயம் என்னவென்றால் ஆனந்தம் தனக்குள் இருப்பது அது எதை சார்ந்தும் இராது. ஆனால் ஆசை என்பது எப்போதும் பிறவற்றை சார்ந்தே இருக்கும் அதனால் ஆசையினால் அடையும் ஆனந்தம் மிக, மிக சிறிதாகவே இருக்கிறது. எப்போது மனிதன் தனக்குள் ஆனந்தத்தை அறிய…
நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் மடக்கி கட்டை விரலை நடுவிரல் நகத்தின் அருகே வைக்கவேண்டும். ஆட்காட்டி விரல் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். பலன்கள் :- உடல் வஜ்ரம்போல் பலம்பெரும். சோர்வு,மயக்கம் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலம்பெரும். கல்லீரல்,மண்ணீரல் ஆற்றலை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை அடையும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்
பெருவிரலை மடக்கி சுண்டுவிரலின் கடைசி ரேகையை தொடுமாறு வைத்து மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொள்ள வேண்டும். இதுவே ஆதி முத்திரை எனப்படும். தாயின் கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறு கைகளை மூடியபடி இம்முத்திரை போன்று இருப்பதால் ஆதி முத்திரை என அழைக்கப்படுகின்றது. பலன்கள் 1.கண், காது, பல் வலிகளை போக்கும். 2.மனக் குழப்பம், அதிர்ச்சி, படபடப்பு ஆகியவற்றை சரிசெய்யும். 3.தேவையற்ற கவலை பயம் ஆகியவற்றைப் போக்கும். 4.சுவாசம் மூச்சுத்தினறல் ஆகியவற்றை சீர்படுத்தும். 5.தீய எண்ணங்களை போக்கி மனதை…
இடதுகை பெருவிரலையும் வலதுகை பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பலன்கள்:- 1.உயிர் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும். 2.ஞாபகமறதியைப் போக்கி நினைவாற்றல் பெருகும். 3.பார்வைத் திறனும் கேட்கும் திறனும் அதிகரிக்கும். 4.கோபம்,வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகிய தீய குணங்கள் மறையும். 5.நரம்பு மண்டலம் உறுதியடையும். இம்முத்திரையை 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.…
கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது ரேகையை ஒட்டி மேலே பக்கவாட்டில் தொட வேண்டும். சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் செய்தால் அதிகமான பலன் கிடைக்கும். எளிய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு இம்முத்திரை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். பலன்கள் :- உடலில் உள்ள எல்லா விதமான நச்சுப்பொருள்களும் வெளியேற்றப்படும். உடல்வலி, மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமடையும். .நோய்கள் குணமாகும் உடல் புத்துணர்ச்சி…
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது…….., அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள்,…
சந்திரனுடன் ராகுவோ, கேதுவோ கூடி இருப்பின் ஜாதகரின் பேச்சுக்கு மதிப்பு இராது. சந்திரனுக்கு கேந்திர திரகோணங்களில் குரு, சுக்கிரன், சனி நின்றால் யோகங்கள் ஏற்படும். சந்திரன், சுக்கிரன் சமசப்தமாக இருப்பின், திருமணம் காலதாமதமாவதோ, மணவாழ்வும் சிறப்பாக அமையாது. சந்திரன், சுக்கிரன் ஒரே ராசியில் இருப்பின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சந்திரா லக்னம், லக்னத்திற்கு, ஐந்து, ஏழாம் அதிபதிகள் இணைந்து இருப்பினும் ஒன்றுக்கொன்று பார்வைபெறினும், அம்சத்தில் இணைந்தாலும் திருமண வாழ்வில் பிரிவினைத்தரும், பாவிகளின் பார்வை ஏற்படில் விவகாரத்தைத்…
சந்திரன் தனஸ்தானத்தில் இருந்தாலும், பார்த்தாலும் அந்த ஜாதகி ஏழ்மையானவள். சந்திரன் பெண்ணின் ஜாதகத்தில் 3,4,5,7,8,9,10ல் இருந்து குரு பார்வை பெற்றால் சகல மங்களங்களையும் பெற்று சுபிட்சம் அடைவாள். சந்திரனும், சனியும் கூடி 7மிடத்திலிருந்தால் இரண்டாம் தாரம் அல்லது இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடும். சந்திரனுக்கு பத்தில் குரு இருந்தால் அமலாயோகம் என்று பெயர். இவர் மத்திய வயதில் பாக்கியம் அடைவார். நித்திய தர்மத்துடன் கூடியவராக இருப்பார். பல தேசங்களில் பிரசித்தி அடைவார்.
சந்திரன் 9ம் வீட்டில் இருந்தால் அறிவாற்றல், கல்விமான், படிப்பில் ஆர்வம் இருந்த வண்ணம் இருக்கும். சந்திரன் 12ல் இருந்தால் அயல்நாட்டுக்குச் சென்று படிக்கும் தகுதி ஏற்படும் பேச்சு மென்மையாக இருக்கும். சந்திரன் லக்னத்திற்கு 11ம் இடத்தில் இருந்து புதனும், சுக்கிரனும் 7ல் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஐஸ்வர்யத்தையும் சுகபோகங்களையும் அடைவர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து சுக்கிரனும், புதனும், 3,4,5,7,8,9,10ல் இருந்து பலமும் பெற்றால் அந்த ஜாதகி மிகவும் சுபிட்சமாக அந்தஸ்து உடையவளாவாள். சந்திரன் நீசமாக விருச்சிகத்தில் உதித்தவர்களுக்கு…
திருக்காரவாசல் என்ற திருத்தலம்.திருவாரூர் அருகே உள்ளது, இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது.
பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட
உங்களின் தேவைக்காக மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடுகள்.
உபநிஷதங்களின் உபதேசத்திற்குறைவிடம் உண்மை. உண்மையாவது சூது இல்லாமையும் வாக்கிலும் மனதிலும் காயத்திலும் கபடமில்லாமையுமாகும்.
கனவில் பெற்ற மந்திர உபதேசம் நனவில் உண்மையாகின்றது, கனவில் கிடைத்த நல்லாசியால் காலையில் விழித்துக் கொண்டபின் விரும்பிய பொருள் கிட்டுதலும் காணப்படுகின்றது, ஆகையால் பொய்மையினின்றுங்கூட மெய்மை முளைக்கலாம் என்பது இதனால் அறியப்படும்.
மூன்று உலகங்களிலும் ஒவ்வொருவனும், சுகத்தையடையவே பாடுபடுகிறான். துக்கத்திற்காக அன்று, துக்கத்தின் காரணம் நீங்கினால் சுகம் வரும். துக்கத்திற்குக் காரணங்கள் , இரண்டு, ஒன்று உடலில் நான் என்ற அபிமானம், இரண்டு, உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது என்ற அபிமானம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி இதனை நன்கு உணர்ந்த நோய்வாய்பட்டவர்கள் அல்லது உடல் பலவீனமுடையவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி தேவையான சிகிச்சைகளை செய்து கொண்டு உடலை ஆரோக்கிய முறையில் பேணுவார்கள் ஆனால் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்கள் உடலைப் பற்றி சிந்திக்காமல் அதற்க்கு முக்கியத்துவம் தராமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் உடல் நலம் சரியில்லாமல் ஆக அவர்களே காரணம் ஆவார்கள்.
தாழ்வு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்ளாமல் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சந்தேகங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல் எளிமையாக மகிழ்ச்சிகரமாக இயல்பாக வாழுங்கள் யாரோ சிலர் அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை ஏமாற்றியிருந்தாலும் அதனால் பாதிப்படையாமல் உங்கள் மனதை இயல்பான வாழ்க்கையில் செலுத்தி சந்தோஷமாய் வாழ்க்கையை தொடருங்கள். உங்களுடைய பலவீனங்கள் குறைபாடுகளை நீங்கள் உணரத் தொடங்கினால் அவற்றை ஒரு போதும் மறவாது இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி இதை உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வோம்.
ஜீவனில் உயிர் உண்டு அஜீவனில் உயிர் இல்லை இந்த உயிரானது ஜடபொருளுடன் இணையாத பொழுது பூரண அறிவுடன் விளங்குகிறது. நம்முடைய பூரண அறிவுக்கு தடையாய் இருப்பவை புலன்களும், பொறிகளும் தான். அதிலிருந்து விடுதலை அடைந்து விட்டால் பூரண அறிவு சித்திக்கும் அதாவது ஞானம் உண்டாகும் லோகாதாய வாதிகள், பிரத்தியட்சத்தை மட்டுமே ஏற்கிறார்கள். யூகத்தை ஏற்பதில்லை சமண வாதிகள், பிரத்தியட்சம், யூகம் இரண்டையும் ஏற்கிறார்கள். அனுபவ வாக்கை ஏற்பதில்லை. அதனால் இவர்கள் வேதங்களை ஏற்பதில்லை.
ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தையும் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்கையில் நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒருபாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடையமேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும், புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமேவேடிக்கையும், விளையாட்டும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது. இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் , துயரும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.
அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத்தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையாகும். எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். இந்த உண்மை இம்மை மறுமையாகியஇரண்டு உலகங்களுக்கும் பொருந்தும். நன்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணுறு சதவீதம் இறந்து போனவர்கள். அவர்கள் பிசாசுகள்தாம். எனது அருமைக் குழந்தைகளே, அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது.
சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், தானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்.
மனதில் இறங்காமல் வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும் தத்துவங்களும் நூலகங்களில் படிக்காமல் விடப்படும் புத்தகங்களும் ஒன்றுதான்.
தற்போது மத சந்தையில் அழகிய புறத் தோற்றம் கொண்ட எதற்கும் பயன்படாத பொருட்கள் இப்போது துன்பத்தை கண்டு வேகமாக ஓடும் மக்களுக்கு பரிசு பொருட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது.
பிரார்த்தனை இதயத்தால் நடைபெற வேண்டிய ஒன்று அறிவிலோ, புத்தியிலோ நடைபெற வேண்டிய செயல் அல்ல. கோயிலில் இருப்பது என்ன சிலையா? தெய்வமா கல் என்றால் பிரார்த்திக்க முடியாது. தெய்வம் என்றால் நெக்குருகி பிரார்த்திக்காமல் இருக்க முடியாது உண்மையில் பிரார்த்தனை என்பது அன்பில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் கண்ணதாசன் சொன்னது போல, கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும் அன்பில்லாத பிரார்த்தனை உயிரற்ற உடல்,
வாழ்க்கையில் துன்பத்தை கண்டு ஓடுபவன் குருட்டு நம்பிக்கைகளில் தன்னை இழக்கிறான். அந்த குருட்டு நம்பிக்கைகளில் புகலிடம் தேடுகிறான். இதை போலி மதவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி மதவாதிகள் என்றால் தன்னையும் அறியாமல் தன்னை அண்டி வருபவர்களையும் தன்னை அறிய விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள்.
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தூணின் தென்பக்கத்தில் அரை சந்திர வடிவில் 1 முதல் 6 வரை மற்றும் 6 முதல் 12 வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டும்போது, குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போதைய மணி ஆகும்.
பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னிதி இருப்பதில்லை. ஆனால், தருமபுரியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில் அமைந்திருக்கும் அபீஷ்ட வரதராஜர் கோவிலில் நவக்கிரகங்கள் உள்ளன. அதோடு அந்த நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.
ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது⁉️ ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபினின் பணி என்ன⁉ ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை + சக்தி எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை ஏற்படும். ரத்த சிவப்பு அணுக்களின் பயன் என்ன ? ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின்…
1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை⁉️ ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. 2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது⁉️ எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் ஏற்படும். எலும்பு மஜ்ஜை தேவைக்கு உணவிலிருந்து கல்லீரல் வழியாக சத்துக்களை ஏற்ப மண்ணீரலும் கிட்னியும் சேர்ந்து ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் .
சுத்த அறிவு இராமனாகவும் அறிவின் சத்தி சீதையாகவும் பத்து திசைகளிலும் அலையக்கூடிய மனமே இராவணனாகவும் மாரீசன் என்பது வஞ்சகமாகிய உலக வாழ்வாகவும் அறிவு மாரீசன் பின் செல்ல மனமாகிய இராவணன் அறிவின் சத்தியாகிய சீதையை கவர்ந்து சோகம் என்னுமிடத்தில் பிரணவத்தில் சிறை வைத்து விடுகின்றது அறிவானது ” வாசி” யாகிய அனுமன் துணை கொண்டு பிரணவத்தை அடைந்து கோதண்டமாகிய பிரணவத்தை வளைத்து அதிலிருந்து சிவவொளியை வீசச் செய்து மனதை அழித்து அறிவின் சத்தியை மீட்டது என்பதையே இராமாயணமாகச்…
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்யலாம். பலன்கள் : 1.ரத்த ஓட்டம் சீராகும் 2.தூய சிந்தனைகள் ஏற்படும் 3.கண் குறைபாடுகள் நீங்கும் 4.சுவாசம் சீராகும் 5.இரத்த அடைப்பு நீங்கும் 6.மண்ணீரல், கல்லீரல் உறுப்புகள் வலுப்பெறும் 7.உயிர் ஆற்றல் அதிகரிக்கும் 8.தலைவலி தலைசுற்றல் நீங்கும் 9.ஜீரணசக்தி அதிகரிக்கும். இம்முத்திரையை…
நான்கு விரல்களையும் கட்டைவிரலோடு இணைத்து குவித்து வைக்க வேண்டும். இதுவே முகுள முத்திரையாகும். பலன்கள்:- மனம் சம்மந்தமான நோய்கள் குணமாகும். உடல் சோம்பலைப் போக்கி உடல் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் அல்லது வலியுள்ள இடத்தில் இம்முத்திரையை வைத்து கண்களை மூடி பாதிக்கப்பட்ட இடத்தையே சிந்திக்க வேண்டும். மூச்சு ஒரே சீராக இருக்க வேண்டும். பத்து நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செய்யலாம். ஒரே நாளில் பலமுறை செய்யலாம். வலது கையில் மட்டுமே…
இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். பலன்கள் : 1.உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். 2.கபத்தை அகற்றும். 3.ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். 4.வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும். 5.நுரையீரலை வலுப்படுத்தும் 6.காய்ச்சல் குணமாகும் 7.உடல் புத்துணர்ச்சி அடையும் 8.உடல் எடையைக் குறைக்கும். 9.உடலில் உள்ள கொலுப்பை கரைக்கும். 10.ஒவ்வாமை நீங்கும். 11.கோபம், கவலை, பொறாமமை போன்ற தீய எண்ணங்களைப் போக்கி மனதை சாந்தப்படுத்தும்.…
11 – க்குரியவர் 3 – இல் 4 – க்குரியவருடன் சேர்க்கை சனி பார்வை, 2 – இல் செவ்வாய் இருப்பின் 1 ஆண், பெண் இரண்டு உடன் பிறப்புக்கள் உண்டு. 3 – க்குரியவர், 8 – இல், 3 – ஆம் இடத்தை குரு பார்த்தால் 3 – ஆண் உடன் பிறப்பு உண்டு. 3, 11 . க்குரியவர், பரிவர்த்தனை பெற்று 3 – க்குரியவர் கேந்திரம் பெற்று லக்கினாதிபதியை குரு…
3 – இல் 7, 9 – க்குடையவர்கள் கூடி நிற்க, குரு பார்க்க, அழகிய ஸ்திரீகளிடம் சுகபோகங்களை சதா அனுபவிப்பார். 3 – க்குரியவர், 7, 8 – இல் இருப்பின் அரசாங்கத்தில் தொல்லை, பால்ய வயதில் திருட்டுத்தனம், காமப்பிரியர். 3 – க்குரியவர், 11 – ல் செவ்வாயுடன் சேர்க்கை, 2 – ஆண், 2 – பெண் உடன்பிறப்பு உண்டு. 3 – க்குரியவர், 8 – ல் செவ்வாய் உச்சம் 6…
சுக்கிரனும், 2, 3 – க்குடையவர் மூவரும் திரிகோணமடைய குரு பார்க்க, பல ஸ்திரீகளிடம் சுகத்தை அடைந்து கொள்வார். 3, 4 – க்குடையவர்கள், புதன் கூடி கேந்திரமடைய, அதில் ஒருவர் நீச்சம் பெற, துஷ்ட குலத்தவர்களையும், அடிமையுரச் செய்யும் சுந்தர வார்த்தைகளுடைய குணமுடையவர். 3 – க்குடையவர், 7 – ல் நிற்க, குரு பார்க்க 7 – க்குடையவர் லக்கினத்தில் இருந்து, புதன், சுக்கிரன் சேர, வயதான காலத்திலும் உத்தம ஸ்திரீ போகமுடையவர்.
எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச்செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக்கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மசரியமும்,வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன. எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம்சொல்கிறது. இந்த அறிவுஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்துஎழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.
தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்டதங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும் உயர்ந்த கருத்துக்களை இவர்களுக்குக் கொடுங்கள். இந்த ஒரே ஒரு உதவிதான்அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமதுகடமை. பின்புஅவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும். இப்போது மலை முகமதுவிடம் செல்லா விட்டால்…
நாடி சுத்தி பத்மாசனத்தில் செய்யவும், மேற்கூறப்பட்ட காலம் ஆசனங்களுக்கிடையே ஓய்வையும் உள்ளடக்கியது. இந்த ஆசனங்கள் சரீர உழைப்பு, சிரமம் உண்டாக்காத தன்மை கொண்டதாதலால் பழகியவர், ஆசனங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வின்றியே செய்து கொள்ளலாம். ஆசனத்தில் நிற்பதே இவர்களுக்கு ஒரு ஓய்வு.
அரை மணி நேர சிக்கனத் திட்டம். தனுராசனம் 3 நிமிடம் பஸ்சிமோத்தானாசனம் 3 நிமிடம் ஹலாசனம் 3 நிமிடம் சர்வாங்காசனம் 7 நிமிடம் மத்ச்யாசனம் 1 நிமிடம் சிரசாசனம் 7 நிமிடம் சவாசனம் 3 நிமிடம் உட்டியாணா 2 நிமிடம் நெளலி 2 நிமிடம் நாடி சுத்தி 5 நிமிடம்.
1.மயூராசனம், 2. சலபாசனம், 3.யோகமுத்ரா, 4.புஜங்காசனம், 6. வாம, தக்ஷிண நெளலி, 7. நெளலிக்ரியா 8.பாதஹஸ்தாசனம், 9. திரிகோணாசனம், 10. சித்தாசனம். காலம் அதிகமிருந்தால் மேற்கூறிய பத்து ஆசனங்களைக் கலக்கப் பிடித்தமில்லாவிட்டால், 1,2,3, 6, 7 மட்டும் சேர்த்து மிகுதியான காலத்தை சர்வாங்காசனம், கும்பகப் பிராணயாமங்களுக்கு, அதே வரிசைக் கிரமத்தில் சேர்க்கவும்.
நாடி சுத்தி, பிராணயாமம் பத்மாசனத்தில் இருந்தபடியே செய்யப் பழகலாம். இந்தக் காலக் குறிப்புகள், ஆசனங்களிடையே ஏற்பட வேண்டிய ஓய்வையும் உள்ளடக்கியுள்ளது. இந்தத் திட்டமும், கீழ்காணும் மற்ற இரண்டு திட்டங்களும், ஆரம்ப சாதகர்களுக்கல்ல, ஆசனம் நன்றாகப் பழகிய பின் ஏற்பட்டவையாகும் ஒரு மணிக்கு மேல் காலமிருந்தால் ஆனந்தரகஸ்யத்திலுள்ள மற்ற ஆசனங்களுக்கு உபயோகிக்கவும். மேல் விதித்துள்ள ஆசனங்களில் நிற்கும் காலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம். சேர்க்க வேண்டிய மற்ற ஆசனங்களில். கீழ்க்கண்ட வரிசை முக்கியமெனக் கருதவும்.
ஆசனங்கள் செய்ய வேண்டிய நிமிடம் செய்யவேண்டிய தடவை தனுராசனம் 2 3 பஸ்சிமோத்தானாசனம் 2 …
புத்திமான் எல்லாக் காலத்திலும் கவனத்துடன் தனது ஆத்மாவை தியானிக்க வேண்டும். காணப்படாவிடடாலும் அது ஒன்றே உண்மை, வெளியுலகாய் அது விளங்கும் பொழுதும் ஸாக்ஷிமாத்திரமாகவே உளது. ஆகையால் அடையப்படுவது துக்கத்திற்குக் காரணம், அடைந்த மறுகணத்தில் அது ருசியற்றதாகிறது, அறிவிலிகளே அதை நாடுவர்.
மதிமயக்கம் நீங்கியவன் ஒன்றேயாகிய ஆத்ம ஞானத்தை வேறு ஞானத்துடனோ கருமத்துடனோ பிணைக்க விரும்புவதில்லை. ஆதிகாரணம் அஸத் எனக் கூறுபவன் மலடி மகனுடன் வியாபாரம் செய்பவன், கானல் நீரால் தாகத்தைத் தீர்த்துக் கொள்பவன்.
காமத்திற்கும் கர்மத்திற்கும் காரணத்தை அறியாதவனுக்கே சோகமும், மோகமும் ஆகயத்தைப்போல் பரிசுத்தமான ஆத்மாவைக் காண்பவனுக்கில்லை.
ஒரு விஷயம். மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று; மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்றுதான் காதல். இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும் ஏனோ நாம் காதல் பண்ணும் விஷயத்தில் சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்களால் காதல் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது… எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது. இது விபத்தா, தெரியாது. விதியா? தெரியாது
மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்… செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை
எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*
இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
தொலைத்ததை தேடி கிடைத்ததை அடைந்து சில நேரம் விரும்பியும் சில நேரம் விருப்பமின்றியும் தொடருகிறது பலரது வாழ்க்கை
எண்ணம் கடந்த காலத்தை பற்றி இருந்து நிகழ் கால நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் அது நுழைந்து நமக்கு பயம், பொறாமை, இன்பம், வருத்தம் போன்றவற்றை தந்து கொண்டேயிருக்கிறது. அதனால், நாம் நம் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை. இதிலிருந்து விடுபட என்ன வழி, ஒரே வழி எதை நாம் அனுபவிக்கின்றோமோ அதை அப்போதே மறந்து விடுவது இது கடினமாக தோன்றும் விஷயம் ஆனால் நம்மை நாம் கவனிப்பதன் மூலம் மிக எளிதாக கைவரக்கூடிய விஷயம் இதை முயன்று…
எண்ணத்தின் முழு செயல்பாடும் கடந்த காலத்திலேயே வேர் பரப்பி ஊன்றி நிற்கிறது அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது நம்மை ந ல்லது, கெட்டது சரி, தவறு என்று நம்மை ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திக்கிறது அதனால் நாம் நம் இயல்பு நிலையை இழக்கிறோம்
நாம் வளர்ச்சி பாதையில் செல்ல திறமையாக திட்டமிடவும், செயல்படவும் வேண்டியுள்ளது. இதை எண்ணமற்ற நிலையில் செய்யமுடியாது. இப்போது நாம் எந்த முடிவுக்கு வருவது என்பது குழப்பமாகத்தான் இருக்கும். ஆனாலும், குழப்பம் தெளியவேண்டும் அதற்கு ஒரே வழி வினாவும், விசாரித்தலும்தான். நம் வாழ்க்கையில் எண்ணத்தின் இடம் என்ன என்ற விசாரிக்க ஆரம்பிக்க வேண்டும் அதில் நாம் எண்ணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கும் எண்ணம் நமது இயல்பான வாழ்க்கையில் குறிக்கிடாமல் இருப்பதற்கும் உள்ள எல்லைக்கோடு எது என்பதை கவனமாக உற்றுப்…
இந்த கடந்த காலம், எதிர்காலம் என்பது எண்ணங்களால் ஆட்சி செய்யப்படுகிறது இந்த எண்ணங்களே பயத்தை நம்முள் விடாமல் அழுத்தமாக பிடித்து வைத்திருக்கிறது. இதை நாம் நன்றாக முதலில் புரிந்து கொள்வோம் அடுத்ததாக நமது வளர்ச்சிக்கும், இந்த எண்ணங்களே காரணமாயும் உதவி செய்வதாயும் இருக்கிறது. இந்த விஷயத்தை நன்கு கவனித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். நன்றாக இதை புரிந்து கொண்டபின் எண்ணங்கள் என்பது என்ன என்ற வினாவை நாம் முன் வைத்து சிந்தித்தால் வரும் பதில் எண்ணம்…
மரண பயத்தை விட்டு விட்டு வேறு சில பயங்கள் எது என்று பார்த்தால் நாம் செய்த தவறுகள் வெளியே தெரிந்து விடுமோ எனும் பயம், நம்முடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில கொண்டு எதிர் கால சிந்தனையில் ஏற்படும் பயம். இதில் நாம் கவனித்து பார்த்தால் பயம் என்ற விஷயம் கடந்த காலத்தையோ, அல்லது எதிர்காலத்தையோ மையமாக கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்
ஒருவாறு சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கு மரணமே மிக பெரிய பயமாய் இருந்திருக்கிறது இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் மரணம் வரும் வினாடி வரை நீங்கள் வாழ்க்கையில் மரணத்தின் பயத்தை ஒத்தி வைத்திருக்கிறீர்கள் அதாவது மரண பயத்திலிருந்து தப்பித்து வந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம் நாம் நம்மிடம் உள்ள பல பயங்களில் இருந்து விடுபட அல்லது தற்காலிமாக வேணும் தப்பிக்க கோயில், மதம், கடவுள் போன்றவற்றின் துணையை கைக்கொண்டு வந்துள்ளோம் ஆனாலும் எத்தனையோ மதங்கள், கோயில்கள், கடவுள்கள், தத்துவங்களாலும்…
இந்த பயம் பல சமயங்களில் மறைமுகமாகவும், சில சமயங்களில் மட்டுமே வெளிப்படையாகவும் உள்ளது. பயம் ஏன் வருகிறது? எப்படி அந்த பயம் உருவாகிறது என்று நாம் சிந்தித்தால் மட்டுமே முழுமையாய் பயத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் அப்படி முழுமையாய் அறிந்து கொண்டபின் அந்த பயத்தை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம், வேண்டாமென்றால் அந்த பயத்தை தூக்கி போட்டு விடலாம்.
சந்திரனுக்கு 5க்குடையவன் கன்னியில் சுக்கிரனுடன் இணைந்து பாவிகள் சம்பந்தம் பெற்றாலும் குழந்தையோகம் ஏற்படும். சந்திரன் 6ல் (ஸ்திரி சூதகத்தில்) வியாதியால் பீடிக்கப்படுவாள்., மரியாதை, பணிவு இராது, பகைவர்கள் அதிகம் இருப்பார்கள் அற்பமானப் பணமே சேரும். சந்திர பலம், ஜன்ம ராசியில் இருந்து, சந்திரன் உலவுகிற 2,5,9 ஆம் ராசியானால் மத்திமம் 4,8,12ஆம் ராசியானால் அசுபம், 1,3,6,7,10, 11 ராசிகளில் இருந்தால் சுபம்.
சந்திரன் விருச்சிக ராசியில் இருக்கப்பெற்றால் மனிதாபிமானம் குறைந்திருக்கும், உறவினரை விட்டுப் பிரிந்திருப்பார். பொருளாதார நெருக்கடி இருக்கும். சந்திரன் கன்னியில் இருப்பாரானால் கல்வித்திறன் கூடும் இனிமையாக பேசுவர். சத்தியத்தை காப்பர், பெண்குழந்தை பாக்கியம் ஏற்படும். சந்திரன் கடகத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல வீடு அமையும். ஜோதிட புலமை ஏற்படும். கடல் கடந்த பயணங்களும், வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்கள். சந்திரன் பெண் ஜாதகத்தில் 6 அல்லது 8லோ இருக்கக்கூடாது.
சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதியோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.
சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இச்சுழற்சியில் பூமியைச் சுற்றுகிற சந்திரன், சூரிய பாதையில் குறிக்கிடும். இடம் வடபாகத்தில் அமைவது ராகு, தென்பாகத்தில் அமைவது கேது என அழைக்கபபடுகிறது. சந்திரனுக்கு 12ல் சனி இருந்தால் தமது வாழ்க்கைத் துணையினை பிரிந்து வாழ்வர். சந்திரன் பலமுடன் இருந்தால் சிவ வழிபாட்டின் மூலம் ஞானஒளி பெறுவர். சந்திரன் சிம்மத்தில் நின்று குரு பார்வை பெற்றால் அரசியலில் முன்னோடியாக திகழ்வார். சந்திரனும், சுக்கிரனும் பலம் பெற்றால் மக்கள்…
2, 3 – க்குரியவர்கள் திரிகோணமடைய 8 – க்குடையவர் 3 – ல் இருந்து பார்க்க, அன்னியருடைய மனைவியை மனம் நோகாது புணரும் லீலா விநோதன். சந்திரனுக்கு 3 – இல் 7 – க்குடையவர்கள் நிற்க, 3 – க்குடையவர் பார்க்க, பல ஸ்திரீகளிடம் சுகத்தை அடைந்து கொள்வார்.
சுக்கிரனும், 2, 3 – குடையவர்களும், மூவரும் திரிகோணமடைய 5 – க்குரியவர் பார்க்க சாஸ்திரங்களில் வல்லவராயிருந்தும் நரி ஊளையிட்டால் பயப்படுவார். 3, 5, 6 – க்குடையவர்கள் பலமடைந்து 12 – ல் நிற்க, ராஜசபையிலும் பந்துக்கள் சபையிலும், பயமும், வெட்கமும் உடையவர். 7 – ல் ராகு நிற்க, 7 – க்குடையவர் கேந்திரமடைய தன் மனைவியோடு மதன நூல் விதிப்படி லீலைகள் செய்து வாழ்வார்.
சுக்கிரன் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் 3 – ல் நிற்க, 12 – க்குடையவர் உச்சமடைய, வீரர்கள், யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார். 3 – க்குடையவர் பாவியுடன் கூடி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் உச்சமடைய, வீரர்கள் யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார். செவ்வாயோடு சந்திரனுடன் கூடி 12 – ல் நிற்க, 3 – க்குடையவர் பார்க்க ராஜாங்கம் சென்று, வீரிய விஜயம் பெறுவார்.
முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை தவிர மற்ற வலது கை விரல்களால் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்போது சங்கு போன்ற அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும். வலது கையின் பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே சங்கின் வாய் போன்ற ஒரு அமைப்பு உருவாகி இருக்கும். பலன்கள்:- தொண்டை சம்மந்தமான நோய்கள் குணமாகும். ஜீரணசக்தி அதிகரிக்கும்.…
கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம். அது சிவபெருமானின் ஆலயம். கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும். ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள். அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன. ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடி. பரசுராமர் அமைத்த ஆலயம்
சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
ஆலயத்தின் சிறப்புகள் சிவபெருமானுடன் சேர்ந்து அமர்ந்த கோலத்தில் அம்மன் இருக்கும் அரிய காட்சியை இந்த ஆலயத்தில் தரிசிக்க முடியும். இறைவன்- ஞானமூர்த்தீஸ்வரர். அம்பாள்- முத்தாரம்மன். சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு எதிரே சிம்மம் உள்ளது இங்குள்ள முத்தாரம்மன் சிலை, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள சிற்பியின் கனவில், அம்பாளே சென்று செய்யச் சொன்னதாக தல வரலாறு சொல்கிறது. அம்மை நோயை தீர்க்கும் ஆற்றல் கொண்ட தெய்வம் என்பதால், இந்த அன்னைக்கு ‘முத்தாரம்மன்’ என்ற…
தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு சுவாமிமலை தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.
சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம் திருத்தணி சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.
நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.
ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகிறார்கள் கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராகஇல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்தநாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன்பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்
பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாகஇருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்குஉதவிபுரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருந்துமா ? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.
இனி, சமணத்தைப் பற்றி பார்ப்போம். சமண மதத்தின் தத்துவங்களை உருவாக்கியவர் மகாவீரர் ஞானம் அடையும் முன் இவர் பெயர் வர்த்தமானர் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்பதே சமண தத்துவத்தின் கருப்பொருள் தத்துவங்களின் பயணம் உண்மையை தேடி அதாவது அறுதியான, இறுதியான உண்மையை தேடி இதில் அந்த உண்மையை சமண தத்துவம் எல்லாவற்றையும் விட்டு விடுதல் என்ற அடிப்படையில் உண்மையை நாடி பயணிக்கிறது. அதன், பார்வையில் கண்ணுக்கு, புலனுக்கு தெரியும் உலகமும் உண்டு. கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத சூட்சமமான…
லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4 நம் புலன்கள் அறியாத காரணத்தால் தீர்மானமாக நாம் நம்பலாம் கடவுள் என்று ஒன்று இல்லையென்று. கடவுள் இல்லையென்று ஆகிவிட்டதால் கர்மவினையும் இல்லை என்பதே இவர்கள் தத்துவம் சுருக்கமாக சொன்னால் பூதங்களின் இயல்பான குணவிசேஷத்தால் உள்ள கலப்புகளே பொருள்கள் அந்த பொருள்களை காண முடியும் உணர முடியும் சில கால கட்டத்தில் இணைந்த பூதங்கள் பிரிந்து வேறாக மாறுகின்றன இதில் மனிதனும் அடக்கம் அதனால் மனிதன் அனுபவிக்க பிறந்துள்ளான், அனுபவிக்கிறான்,…
எவ்வளவு காலம் இதற்குச் செலவழிக்க வேண்டும்? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இதில் ஈடுபடுதல் அவசியமாகும். எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கிட்டால் அரை மணி நேரமாவது பயிலலாம். எதற்குமே ஓய்வில்லாவிட்டால் கால்மணி நேரம் ஓய்வற்ற நாளிலும் இதற்குச் செலவிடலாம். தினம் தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம், மத்ச்யாசனம், சிரசாசனம், அர்த்த மத்ச்யேந்த்ராசனம், பத்மாசனம், உட்டியாணா, நெளலி, சவாசனம், நாடி சுத்தி செய்ய வேண்டியது, மற்றவைகளை ஓய்வுக்குகந்தவாறு இவைகளுள் கலந்து கொள்ளலாம்.
நோய் தடுக்க மேல் கூறப்பட்ட பலன்களைப் பெற்று வாழ யோகாசனப் பிராணயாமத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும்? இதற்கு தினசரித் திட்டம் என்ன? எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது அவசியமா? ஆனந்தரகஸ்ய நூலில் கூறிய ஆசனங்களில் எவற்றைத் தினம் அவசியம் செய்ய வேண்டும்? எவைகளை இஷ்டம், காலம் , செளகரியத்திற்கொப்ப சேர்த்துக்கொள்ளலாம். ஒருவன் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது செய்யவேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து வாரத்தில் ஆறு நாட்கள் செய்தல் அதிகப்பலனைக் கொடுக்கும். நித்தியக் கடனாக…
மனதிற்குச் சாந்தி அளிக்கிறது. பிராண உடலில் சமாதானமாக இயற்கைக்குகந்தவாறு பரவி, நிலைத்து வேலை செய்யத் தூண்டுகிறது. சளைக்காது அதிக வேலை, அதிகப்படிப்பு, அதிகச் சிந்தனை செய்ய உதவுகிறது. ஒவ்வொருவரையும் அவரவர் தொழிலில், வாழ்வில் சக்தி பெற புத்தி, சாமார்த்தியத்தை அளிக்கிறது. இக்கவசத்தின் எண்ணற்ற பலன்களை எடுத்துரைக்க இயலாது.
பயம் இது எல்லோரிடமும் உள்ளது. அனால் அது எற்படுவதற்குரிய சூழ்நிலைகளும் , பொருள்களும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. மற்றபடி பயம் என்பது பயம்தான். நீரை கண்டு பயப்படாதவன் நெருப்பைக் கண்டு பயப்படலாம். பாம்பைக்கண்டு பயப்படாதவன் புலியைக் கண்டு பயப்படலாம். இதில் நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால் பயம் என்பது அதாவது பயம் எனும் உணர்வு தனியே நிற்பதில்லை. அதாவது பயத்தால் தனியாக செயல்படமுடியாது. அதற்கு ஏதாவது ஒரு பிடிமானம் வேண்டும் அந்த பிடிமானம் என்பது இருட்டாய் இருக்கலாம். கொடிய…
அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்
ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி நிறுவனங்களும், முறைபடுத்தப்பட்ட மதங்களும், பிரச்சாரங்களும், அரசியல் அமைப்புகளும் எல்லாம் தோல்வியை தழுவிவிட்டது என்பதற்க்கு உதாரணம் இப்போதைய மக்கள் நிலையே போதுமானது. அதனால், மனிதனுக்கு தற்போது அவனை காப்பாற்ற எதுவுமில்லை என்பதே தெளிவாக இருக்கிறது. அவனை காப்பாற்ற அவனால் மட்டுமே முடியும் என்பதே தீர்வாக தெரிகிறது.
மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது. தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் .
அரசியளார்கள், மதகுருமார்கள், தனிதிறமை பொருந்தியவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று இருப்பவர்களாலும் இருந்தவர்களாலும் இது நாள் வரையில் உலகில் அமைதியையோ, மகிழ்ச்சியையோ, திருப்தியையோ மனிதனின் இயல்பான சுதந்திர நிலையினையோ கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை.
ஒரு விதத்தில் பார்த்தால் மனித இனம் ஒவ்வொரு விதத்தில் தேசிய, கலாசார, மத விஷயங்களில் பிளவு பட்டு இருக்கிறது. பிளவுபட்டதை இணைந்து விடாமல் இருக்க தேசியமும், மதமும் தங்களால் முடிந்த அளவு போராடுகின்றது. இந்த குழப்பத்தை காணும் போது காணும் நபர் என்ன செய்வது, என்ன செய்வது என்று யாரை போய் கேட்பது இப்படிப்பட்ட பூனைகளுக்கு மணி கட்டுவது யார் என்பதே வினாவாயும் தனக்குள் விவாதமாயும் இருக்கிறது.
எல்லா கோட்பாடுகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்றன எந்த விஷயத்திலும் எந்த தத்துவத்திற்க்கும் நீடித்த நிலையில் மதிப்போ, ஆதாரமோ, நம்பிக்கையோ இருப்பதில்லையென்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் இது, மதமாகட்டும், தத்துவமாகட்டும், நிறுவனமாகட்டும், தனிமனித உறவுகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் இந்த நிலையேதான் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த குழப்பமும் சந்தேகமும், பதற்றமும் நிறைந்த உலகில் நாம் எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதே நம் எதிரில் இருக்கும் வினா.
உலகில் அதாவது மனிதர்கள் வாழுமிடங்கள் அனைத்திலும், குழப்பம், முறைகேடு, வன்முறை, கிளர்ச்சி, கொடூரத்தன்மை, போர், போன்றவையே நிறைந்துள்ளதை காணும் போது மனிதனுக்கு ஆறறிவு உண்டா அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் தானா? அவன் சரி, தவறு, என்று அறியும் ஆற்றல் உடையவன் தானா எனும் ஐயப்பாடு எழுகிறது. இதில் தனி மனித வாழ்க்கையும் கூட குழப்பமும், எதிர்மறை சிந்தனைகளும் எதிர்மறை செயல்களும், நிறைந்ததாகவே உள்ளது.
நமது வாழ்க்கை முறையில், வாழுதல் எனும் நிகழ்வில் பிரச்சனைக்குறியதாக வன்முறை உள்ளடங்கியுள்ளது. அது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயலிலும் வெகு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதே உண்மை அதனால் தான் தொழில் நுட்பங்களில் மனிதன் அசாதாரண பிரம்மிப்பூட்டும் வெற்றியடைந்த நிலையிலும் மனிதன் இன்னும் போர், பேராசை, பொறாமை, தாங்கற்கரிய சோகம் இவற்றால் கனமாக அழுத்தப்பட்டு இருக்கிறான்.
சிருஷ்டியின் ரகசியத்தை எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது. ஒன்று அதை எப்படியாவது கஷ்டப்பட்டு அறிந்து கொள்ளலாம் அல்லது அறியாமல் விட்டுவிடலாம் இவ்வளவுதான் முடியும் அதை, வாத, விவாதங்கள் மூலம் நிரூபிக்க முடியாது. அப்படி நிரூபிக்க முடியாதது தான் சிருஷ்டியின் அழகு, அதிசயம் இதை தான் நம் முன்னோர்கள் இறைவன் என்றும் கடவுள் என்றும் சொன்னார்கள்.
உடலை வனப்புறச் செய்கிறது. ஊளைச்சதை பற்றாது தடுக்கிறது. ஆயுளை அதிகரிக்கின்றது. புலன்களை சுத்தம் செய்கிறது. மூளையை அபிவிருத்தி செய்கிறது. நரம்புகளை, நரம்பு வலைகள், நரம்பு சக்கரங்களை விழிப்பித்து, வீரியப் படுத்தி நன்கு வேலை செய்யத்தூண்டுகிறது. காமக்ரோத, லோப, மோக, மத மத்சரங்களை விலக்கி பரிசுத்தம் செய்து ஆட்சி புரிகிறது.
உயிர்கருவிகளான இருதயம், சுவாசப்பைகளை நேராகத் தாக்கி வீர்ய நிலையில் வைக்கிறது. ரத்தவோட்டத்தை சுறுசுறுப்பாக்கி, அசுத்தத்தை எளிதாக முற்றிலும் போக்குகிறது. ரசங்களை ஒழுங்கான முறையில் கக்கச் செய்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. நோய் கிருமிகளைக்கொன்று, உயிர்ப்பிக்கும் சக்தியை எண்ணற்ற மடங்கு அதிகரிக்கிறது. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை, உன்னதம் பெற உதவுகிறது.
பகவான் வியாஸர் தமது குமாரருக்கு நீண்ட ஆலோசனையின் பயனாய்ப் பின்வருமாறு உபதேசித்தார், வேதத்தில் இருவேறு மார்க்கங்கள் கூறப்பட்டுள்ளன ஒன்று பிரவிருத்தி ( கர்மமார்க்கம் ), மற்றொன்று நிவிருத்தி ( ஞானஸந்நியாஸமார்க்கம் ). அத்விதீய பிராம்மீஸ்திதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தேவர்களும், அசுரர்களுக்கொப்பானவர்களே, அவர்களுடைய உலகங்களும் அசுரத்தன்மையுடையனவே.
நாம் நாள்தோறும் கண்டனுபவிக்கும் உலகம் வியவகாரத்தில் உண்மையாகத் தோன்றினாலும் அடுத்த நொடியில் பொய்த்துப் போவதால் அது இருப்பில்லாத கனவுலகம் போன்றதேயாகின்றது. ஞானத்திற்கும் கருமத்திற்குமிடையே உள்ள வேற்றுமை மலை போன்று அசைக்க முடியாதது.
ஒரு சிறு குழந்தையை போல உடைகள் ஏதுமின்றி ,பொய் முகங்கள் ஏதுமின்றி அதாவது (பொய் முகங்கள் என்பது அறிவாளி, முட்டாள்,பணக்காரன், ஏழை, பண்டிதன், பாமரன், வேதாந்தி, அஞ்ஞானி, ஞானி, அப்பா, மகன், சகோதரன், கணவன், மனைவி, இது போல இன்னும் எத்தனையோ இருக்கின்ற அதிகார சின்னங்களும், உறவு சின்னங்கள் இன்றி.) அப்பட்டமாக நிர்வாணமாகி உண்மையில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கடவுள் உன்னை பார்க்கும்படி நீ செய்தால் சந்தோஷம் சாத்தியமே எப்போதும் சந்தோஷமே இது சாத்தியமா?
இங்கு எல்லாவற்றையும் என்று நான் சொல்லுவது உன்னுடைய வாழ்க்கையை அதன் அழகை அதன் உன்னதத்தை சூரிய உதயம், அஸ்தமனம், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம், தாமரையின் அழகு ரோஜாவின் வாசனை, வளர்ந்து தேயும் நிலவு, ஆர்பரித்து ஓடும் ஆறு ஓ என்று ஒசையுடன் விழும் அருவி உயர்ந்த சிகரங்களை கொண்ட மலை அதில் படர்ந்திருக்கும் பனி இவைகளை ரசிக்க தெரிந்தால் உன் மனம் லேசாகிவிடும். பூரணம் அதில் நிரம்பி வழியும் அப்போது நீ உண்மையிலேயே, தாயை, தந்தையை,…
அன்பை அறிந்து கொண்டு அதில் திளைப்பவனுக்கு பணத்தின் அருமை, பெருமை, அதிகாரத்தின் ஆற்றல் போன்றவை ஏனோ தெரிவதில்லை. மக்கள் ( உலகோர் ) பார்வையில் கையாலாகதவனாக எதிர்கால சிந்தனையற்றவனாக பிழைக்கத் தெரியாத அறிவிலியாகவே தென்படுவான். உன்னை சுற்றி இருக்கின்ற நடக்கின்ற விஷயங்களை ரசித்து பழகினால் ரசிப்பது எப்படி என்ற வித்தையை அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நீ பணத்தின் மீது உன்னுடைய எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு மோகம் கொள்ளமாட்டாய்
3 – ல் சுக்கிரன் நிற்க, 3 – க்குடையவர் சுக்கிரன் வீட்டில் நிற்க, முத்து, ரத்தினம், மாலையணியும் பொன் போன்ற தேகம் உடையவர். குரு 3 – இல் நிற்க, புதனுடன் 3 – க்குடையவர் கூடி பகை பெற்று செவ்வாய் பார்க்க ரத்தினமாலை அணிவார். லக்கினாதிபதியுடன் 2 – க்குடையவர் கூடி கேந்திரமடைய புதன் பார்க்க அழகான உடல், ரத்தினமாலை அணிவான். சந்திரன் நின்ற ராசிக்கு 2 – க்குடையவர் 12 – ல்…
சனி, சூரியன் சேர்க்கையை 3 – க்குடையவர் பார்க்க 12 – க்குடையவர் சேர பல சகோதரர்கள் இருந்தும் ஒற்றுமை குறையும். மனபேதங்கள் காணும். உயிர் சேதங்கள் ஏற்படும். 3 – க்குடையவரும், சனியும், கூடி 12 – ல் நிற்க, 8 – க்குடையவர் 3 – ல் நிற்க, சகோதரர்களைப் பெற்ற தாய்க்கு வீண் வேதனையும் பாவமும் தரும் சகோதரர்களாக வருவார்கள். 3, 10 – க்குடையவர்கள்ள கூடி 8 – ல் நிற்க,…
3 – க்குடையவரும், செவ்வாயும், சனி, மூவரும் சேர்ந்து 7 – இல் நிற்க ஒரு சகோதரர் இருந்தும் பயன் இல்லை. செவ்வாய், 3 – க்குடையவருடன் கூடி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய, 3 – ஆமிடம் சூன்யமாக இருக்க, சொப்பனத்திலும் சகோதரர் இல்லை. 3 – இல் ராகு நிற்க, 5 – ஆம் இடம் சூனியமாக செவ்வாய் 3 – க்குடையவருடன் கூடி நிற்க, முன்னும், பின்னும் சகோதரம் இல்லை.…
சந்திரன் புதனுடன் சேரும்போது மனநிலை பாதிப்பு, சித்த பிரமை ஏற்படுத்துகிறது. சந்திரன், செவ்வாயுடன் சேரும்போது ரத்த அழுத்த நோயை தருகிறது. சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது உணர்ச்சிவேகம் செய்து மனநிலை பாதிப்பை தருகிறது. சந்திரன் ராகு, கேது கிரகங்களுடன் சேரும்போது கிரஹணதோஷம் ஏற்படுகிறது. சந்திரன் ஒரு தினக்கோளாகும், சந்திரனது நக்ஷத்திரம் ரோஹிணி, அஸ்தம், திருவோணம்.
சந்திரனுக்கு 1, 4, 7, 10ல் செவ்வாய் இருக்கும் போது சந்திர மங்கள யோகம். சந்திரனுக்கு 1,4,7,10ல் சுக்கிரன் இருக்கும்போது மாளவ யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 1,4,7,10ல் புதன் இருக்கும்போது பத்திர யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 6,7,8 சுபகிரகம் இருக்கும்போது அதியோகத்தை தருகிறது. சந்திரன் சனியுடன் சேரும்போதும், பார்க்கும்போதும் நரம்புதளர்ச்சி, வாத நோயை தருகிறது.
சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகட யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது சுனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.
இதுவுமது ….. சமமான ஆகாரம், மித சஞ்சாரம் ஆக இவ்விரண்டையும் சதா அனுஷ்டிக்கிறவர்கள் அகந்துக காலத்தை மிரட்டி காலபிராப்தி அளவு ஜீவித்திருக்கிறார்கள். அவர்களது சீவனம் அமிருத துல்யமென்று சொல்லப்படுகின்றது. சிரஞ்சீவியாய் இருக்க விதம் ….. மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாய் இருக்க இஷ்டப்படுகிற பண்டிதர்கள் ( கால பிராப்தி ) என்கிற சத்துருவை விஜயம் செய்து ஸ்திரமாயிருக்கிறார்கள்.
சரீர ரக்ஷண உபதேசம் முதலில் மனிதன் சகல கருமங்களைவிட்டு சரீரத்தை பரிபாலிக்க வேண்டியது. அவசியமாக இருக்கிறது சரீரமில்லாது சுபம், அசுபம், இல்லாமை இவைகள் எப்படி வாய்க்கும். சரீரத்தை பாதுகாக்க வேண்டிய முறை பட்டணத்தை படைத்தவன் பட்டணத்தை எவ்விதம் பரிபாலிக்கிறானோ அவ்விதம் மேதாவி ஆனவன் சரீரத்தை பாதுகாக்கவேண்டியது. சரீரத்தை பாதுகாப்பவனது அகாலம் அகன்று காலமென்கிற பராக்கிற உச்சாஹம் இந்திரிய ஆயுர்பலம் முதலியவைகள் உண்டாகின்றது.
அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்து எரிந்துக்கொண்டிருந்த வத்தியானது கையால் எப்படி அணைந்து போகிறதோ அவ்வண்ணம் சகலத்திற்கும் ஆதாரமாகிய வாயு ஆதாரமற்றதாகிறதினால் பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இதற்கு ஆகந்துக மிருத்யு என்றுப்பேர். இது வைத்தியனுடைய மந்திர, தந்திர மங்களாசரணத்தினால் சாந்தியாகின்றது. மரணகாலம் சம்பவிக்கும்போது எந்த விதமான மருந்தும் பிரயோஜனப்படாது.
விழிப்பு நிலையில் கனவு பொய்யாகிறது, கனவு நிலையில் விழிப்புலகம் இல்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டும் இல்லை. உறக்கமும் மற்ற இரண்டு நிலைகளில் இல்லை. ஆகையால் முக்குணங்களால் சிருஷ்டிக்கப்பட்ட மூன்று நிலைகளும் பொய்யோகின்றன. எனினும் அவற்றிற்குப்பின் உள்ள ஸாக்ஷியோ குணங்களைக் கடந்து நித்தியமாய் ஏகமாய் அறிவு வடிவான மெய்ப்பொருளாய் விளங்குகிறது.
எப்படியோ மனிதப்பிறவியை, அதிலும் புருஷ சரீரத்தை, அடைந்து வேதத்தையும் கற்றுணர்ந்து அதன் பின்னும், ஒருவன் மூடனாய் முக்திக்கு முயலாவிட்டால், இவன் தற்கொலை செய்து கொண்டவனுக் கொப்பாகிறான். ஏனெனில் பொய்யான பொருள்களைப் பற்றிக் கொண்டு அவன் தன்னை மாய்த்துக் கொள்ளுகிறான். முக்திக்குதவும் சாதனங்களுள் பக்திதான் தலைசிறந்தது. தன்னுடைய உண்மை நிலையில் நாட்டமே பக்தியெனப்படும்
பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள். ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்
வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…
கொடுப்பது சிறிது என்று தயங்காதே. வாங்குபவர்க்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே. இழப்பவர்க்கு அது பெரிது.
உணவு, ஒழுக்கம், உழைப்பு இயற்கை முறையில் அமைத்துக் கொள்வதுடன், நோயைத் தடுத்து, சுகமாக நீடூழி காலம் வாழ, யோகாசனப் பிராணாயாமம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது? இதற்கு சக்தியுண்டு என்று அறிய விஞ்ஞானம் என்ன? இந்த கேள்விகளுக்கு விபரமாக யாவரையும் நம்பச் செய்யும் ஆனந்த ரகஸ்யம் என்னும் நூலில் காணவும். இந்தக்கவசத்தின் சக்தியையும், இது வேலை செய்யும் முறைகளையும் கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கிய வாழ்க்கைக்கும் இயற்கை வாழ்க்கைக்கும் புலனடக்கத் திற்கும், மனச்சாந்திக்கும், விரோதமாகவே அமைந்திருக்கின்றது. இயந்திர யுக – நாகரிக – அவசர, வாழ்க்கை, உணவு, ஒழுக்கம், உழைப்பு மட்டும் நன்முறையாக இருந்தால் போதாது. இதனால் மட்டும் நோய்களைத் தடுத்து நிறுத்த இயலாது. வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வாலும் சிதைக்கப்படாத, நோய், தடுக்கும். சீர்திருத்தம், அமோக சக்தி வாய்ந்த, ஒரு கவசம் வேண்டும். அந்த கவசம்தான் யோகாசனப் பிராணயாமம்.
ஹோட்டல்கள் கணக்கின்றி ஊரெல்லாம் பரவிவிட்டன. இவைகள் பணம் திரட்ட நடத்தப்படுகின்றன. ஜனங்களுக்குச் சேவை செய்ய அல்ல. லாபமும், சேவையும் கலந்து நடத்தப்படுவதில்லை. இதில் உணவு தயாரிக்கும் முறைகள் சேர்க்கப்படும் பொருள்கள், நோய் பரவக் காரணமாகின்றன. பட்டினங்கள் பெருக இயந்திர யுகம் பரவ, வீட்டிலுண்பது குறைய, ஹோட்டல்கள் எங்கு பார்த்தாலும், கிளம்ப,காரணமாகிவிட்டது இவைகளில் உண்ண வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்பட நோயிலிருந்து ஒருவன் தன்னை தடுத்துக் கொள்வது சிரமமோங்கிய, நுட்பமான செயலாகிவிட்டது.
ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் வைக்க வேண்டும். பின்பு நடுவிரல் நுனியும் மோதிரவிரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சுண்டுவிரல் நீண்டிருக்க வேண்டும். பலன்கள்:- 1.நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும். 2.மன அழுத்தம் மன இருக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். 3.மலச்சிக்கல் தீரும், சிறுநீர்ப் பிரச்சனை தீரும். 4.தலைவலி மற்றும் கழுத்துவலி குணமாகும். 5.இதயம் சம்மந்தமான நோய்களை குணமாக்கும் இதயத் துடிப்பை சீராக்கும். 6.இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும். 7.லோ பிரசர் (குறை இரத்த அழுத்தம்) இருப்பவர்கள்…
சுண்டுவிரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.சளி, இரும்பல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் ஆகியவற்றைப் போக்கும். 2.சிறுநீர் சம்மந்தமான நோய்கள் குணமாகும். 3.உடலில் நீரின் அளவை சமன்படுத்தும். 4.உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அதிக வியர்வையைப் போக்கும். 5.மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர…
மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். 2.உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும். 3.தொப்பை குறையும். 4.கொழுப்பை குறைக்கும் 5.உடல் பருமன் குறையும் 6.தைராய்டு சுரப்பி ஆற்றல் அதிகரிக்கும் 7.ரத்தக் குழாய்களில் அடைப்பு நீங்கும் 8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 9.பார்வைத் திறன் அதிகரிக்கும் 10.களைப்பைப் போக்கும். 11.ஆஸ்துமா,பீனிசம்…
ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல். தனது காலத்தைவிட முற்போக்காகச் சிந்திக்கும்ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவேஎதிர்ப்பும், அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும்உறுதியாகவும், துாய்மையாகவும், கடவுளிடம் அளவுகடந்த நம்பிக்கைஉடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள்எல்லாம் மறைந்து போய்விடும்.
இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் எத்தனை பேர்வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர்தோல்வி அடைந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறிவிழுந்தவன் மூலம் தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.
அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்.
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும்அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது ஒருமுறை நீ அவற்றை இயங்கச்செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தீய செயல்களைச் செய்வதிலிருந்து எப்போதும் விலகியிரு.
சண்டையிடுவதிலும், குறைசொல்லிக் கொண்டிருப்திலும் என்ன பயன் இருக்கிறது ? நிலைமையைச் சீர்படுத்திக் அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும்முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன்தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல்ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்றுகொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்தகடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித்…
4, 9 – க்குடையவர்கள் 11 – ல் நிற்க, 11 – க்குடையவர், 3 – ல் நிற்க, சந்திரன் செவ்வாய்க்கு கேந்திரம் அடைய, 7 – க்குடையவர் பார்க்க, பேதமில்லாத துணைவர் உண்டு. சந்திரனுக்கும், லக்கினத்திற்கும், 3 – க்குடையவர்கள் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, செவ்வாய் திரிகோணமடைய புண்ணிய சகோதரர்கள் உண்டு. 3 – ல் புதன் நிற்க, 12 – ல் சனி நிற்க, 5 – ல் சூரியன் நிற்க,…
7, 4 – க்குரியவர்கள் கூடி 3 – ல் நிற்க, 3 – க்குடையவர் கேந்திரமடைய குரு 5 – ல் நிற்க, சுகமாகிய நிலைத்த சகோதரம் உண்டு. செவ்வாய்க்கு 3 – க்குடையவர் உச்சமடைந்து, அவ்வுச்ச ராசியாதிபதி திரிகோணமடைய 3 – ல் குரு நிற்க, சுபர் பார்க்க செல்வந்தரான துணைவர்கள் உண்டு. 3 – க்குடையவர் திரிகோணமடைய, செவ்வாய், குரு கூடி திரிகோணமடைய சகோதரர்கள் நிலைப்பார்கள்.
3 – இல் பாவர் இருக்க பாவர் பார்க்க, பிறந்த ஜாதகங்கள் எவ்வகையினாலும் தன் காரியத்தை சாதித்துக் கொள்ளுவான். பிறரின் பொருளை அபகரிப்பான். தவறான காரியங்களில் ஈடுபடுவான். தாய்க்கும், தந்தைக்கும் ஆபத்துக்களைத் தருபவன். 3 – க்குரியவர், 9 – க்குரியவருடன் சேர்ந்து பாவரால் பார்க்கப்பட்டு இருந்தால், தாய், தந்தையை துன்புறுத்துவான். உடன் பிறப்புக்களுக்கு ஆகாதவன். காம இச்சையை எப்படியாவது தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவான். 3 – க்குரியவர், 8 – க்குரியவர், 7 – க்குரியவர்…
3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று 8, 12 – லிருந்து 8 – க்குரியவருடன் சேர்ந்திருந்தால் மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில் உடன் பிறப்பு பிரிவினை, குடும்பம் பிரிந்து வாழுதல் குடும்பத்தில் தற்கொலை நிகழ்ச்சிகள் நடக்கும். 3 – இல் 7 – க்குரியவர், 3 – க்குரியவர் 12 – லிருந்து, 10 – க்குரியவர் சாரம் பெற்று இருந்தாலும், அக் கிரக சாரத்தை பெற்று கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், இளம் வயதிலேயே பெண்…
சந்திரன் 6, 8, 12ல் நின்று மூன்று கிரகங்கள் நீசமடைந்து இருப்பின் மதி பேதம் ஏற்பட்டு வாழ ஏதுவுண்டு. சந்திரனுடன் குரு நின்று இருப்பின் 70 வயது வரை வாழ்வர். சந்திரனுடன், சூரியன் நின்றிடில் பெற்ற அன்னையே சந்தேகப்படுவர். சந்திரன் அல்லது சனி பெண் ராசிகளில் நிற்க. ஆண் ராசிகளில் சூரியன் நின்றால் அலித்தன்மையுண்டு. சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருக்கம்போது கஜகேசரியோகத்தைத் தருகிறது.
கோள் செய்வதை நல்லவரும் செய்யார் சந்திரன் ஆட்சி உச்சமேறிய ஜாதகர்கள் குடும்ப க்ஷேமத்துடன் நல்வாழ்வு வாழ்வர். சந்திரன் லக்னத்தில் அமைந்தவர்கள் சிந்தனையாளர்கள், ஆய்வுசெய்து முடிவெடுப்பார். சந்திரனும், சூரியனும் சேர்ந்தால் அமாவாசை யோகத்தைத் தருகிறது. சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதி, தாயாரை குறிப்பிடுவது சந்திரன் நல்ல மனநிலை அடைய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும். சந்திரன் குருவும் சேர்ந்தால் குரு சந்திர யோகத்தை தருகிறது.
அப்படி தியானத்தை பழகி கொண்டால் பணம், அதிகாரம் பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை உன்னிடம் தோன்றாது. அப்போது நீ சுதந்திரமானவனாய், இன்பத்தில் மூழ்கியவனாக இருப்பாய் பணத்தை கொண்டு கட்டில் மெத்தை வாங்கலாம் நிம்மதியாக நிர்சிந்தையற்ற தூக்கத்தை வாங்கமுடியாது. பணத்தை கொண்டு அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் சிற்றின்பத்தை விலை கொடுத்து வாங்கலாம்.
நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு இன்னும் சொல்லப் போனால் உள்ளதை உள்ளபடி ஏற்று அந்தந்த கணங்களில் அப்படி அப்படியே வாழ்பவன் தனக்குள் உள்ள வெற்றிடத்தை அன்பு, சந்தோஷம் போன்றவற்றால் நிரப்பி கொள்கிறான். அது அவனிடம் முன்னமேயே உள்ளது அதை அவன் கண்டுகொள்கிறான், அதனால் அவனுக்கு மீண்டும் வெற்றிடம் உருவாதில்லை அவனள் இருக்கும் சந்தோஷம் இன்பம் போன்றவை வெளியில் இருந்த வந்தவையல்ல அவனுள்ளேயே எப்போதும் இருப்பவை அவன் அதை உருவாக்கவில்லை இருப்பதை உணரமட்டுமே செய்தான் இதற்கு தியானம் ஓர் அளவு…
பணம் இருந்தால் வீடு வாங்கலாம் பயணிக்க கார் வாங்கலாம் சமூகத்தில் அந்தஸ்தை அடையலாம். விமானத்தில் பறக்கலாம் உயர்தர உணவகங்களில் உணவு அருந்தலாம். இவை எல்லாம் உனக்கு என்ன விதமான மாற்றங்களை தரும் நீ இன்பமாயும், சந்தோஷமாயும் இருப்பதாய் தோன்றும் ஆனால் அது எல்லாம் எத்தனை நேரம் எத்தனை நாள் அதன் பிறகு உனக்குள் நீ ஒரு வெறுமையை உணருகிறாய் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் வெறுமையை உணருகிறாயே ஏன் அப்படி உணருகிறாய் காரணம்…
நல்லவராக இருப்பது சிறந்தது தான்.. ஆனால், நல்லது கெட்டது தெரியாத நல்லவராக இருப்பது ஆபத்தானது
பசிக்கும் பொழுது உண்ணவேண்டும். நாகரீக வாழ்க்கையில் எம்மட்டும் இத்திட்டங்கள் நிறைவேறுகின்றன? நித்திரை, உழைப்பு, இவைகளெல்லாம் எண்ணற்ற சமயங்களில் தாறுமாறாக நடக்கின்றன. தொத்து நோயிடங்களில் புகுதல், ஒட்டு நோயுள்ளவர்களுடன் அறிந்தும், அறியாமலும் பழகுதல், இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும்.
மலப்போக்கு உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம். விலங்குகளுக்கு இது ஏற்பட்டவுடன் மலத்தைக் கழித்துவிடுகின்றன. வைத்தியரும், வைத்தியசாலைகளும் இன்றி, மனிதனைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன. இதிலும் மனிதனின் போக்கு தொத்துவியாதி, அசுத்த ஆபாசங்களுக்கு இடம் தரும். சுய இச்சையாய் காட்டில் திரியும் விலங்குகள், இன்றும் ஆரோக்கியமாக அமோகமாகப் பெருகி வாழ்கின்றன. விலங்கின் சுதந்திரம் மனிதனுக்கில்லை. வசதி இருந்தாலும், வம்பு பொழுதுபோக்கு, நாகரீகத் திட்டங்களை உத்தேசித்து இயற்கையின் மிக முக்கியமான இந்த உணர்ச்சியை ஒதுக்கி வைக்கிறார்கள்.
நிர்வாண ஊரில் கோவணாண்டி, பைத்தியக்காரன், துணி கட்டிக் கொள்ள இஷ்டப்பட்டாலும், நிர்வாண ஊரில், துணி கிடைத்தால் தானே! கைக்குத்தல் அரிசி, தீட்டாத அரிசியை இயற்கைக்குகந்தபடி உபயோகிக்க சிலர் விரும்பலாம். மந்திரியிலிருந்து மடப்பள்ளிக்காரன் வரையிலும் தீட்டிய அரிசியைத் தின்று சில கேடுகளை சம்பாதித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
நமது வாழ்க்கை சிறந்ததாகவும், துாய்மையுடைவதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும், துாய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்,… நாம்அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக்கொள்வோமாக.
துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல். இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறhர்கள். உயர்ந்த இலட்சியம்கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும்இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான்உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பதுமேலானது
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்துவருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில்வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்லஎண்ணங்களும், செயல்களும், ஒரு நுாறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னைஎப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக…
காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை. அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள் சம்பவிக்காது. அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை, கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும். அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம், அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால் மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.
மேலும் காலமானது வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது. இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர வேறு கிடையாது. ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.
ஒப்புயர்வற்ற ஆனந்தத்தின் உறைவிடமாகிய பிரம்மத்தைப் பரத்துவமென உணர்ந்து உண்மையைக் கண்டு கொண்டவர்கள் அதில் சரண் புகுகின்றனர். நீரில் கரைந்து போன உப்புக் கட்டியைக் கண்ணால் காண முடியாது, நாவினால் ருசித்தறியலாம். அவ்வாறே உள்ளத்தின் ஆழத்திலூடுருவியிருக்கும் பிரம்மத்தை வெளி இந்திரயங்களால் அறிய முடியாது. தீர்க்கதரிசியாகிற குருவின் கருணை நிறைந்த உபதேசத்தால் ஏற்படும் ஞானம் கண்விழிப்பால்தான் அறிய முடியும். அவ்வுபதேசமாவது, உன்னைச் சுற்றிக் காணப்படும் உலகம் நீயன்று, நீ பிரம்மமே.
எவர்கள் ஒப்புயர்வற்றதும் பரிசுத்தமானதுமான பிரம்மபாவத்தை நாடவில்லையோ அவர்கள் பிறவியில் மனிதர்களாயினும் வாழ்க்கையில் மிருகங்களுக்கு ஒப்பாவர். அவர்கள் வாழ்க்கை வீண். காணும் உலகைக் காணதது போல் கருதி ஒருவன் அனைத்தையும் பிரம்மம் என்று உணரவேண்டும். புத்திமானாகிய அவன் தன் மனதைச் சிதானந்த ரஸத்தால் நிரப்பி அந்த எல்லையிலா ஆனந்தத்தில் எப்பொழுதும் நிலைபெற வேண்டும்.
உண்மையில் அப்படி யாரும் இல்லை. அதனதனின் குண இயல்புக்கு ஏற்ப இணைந்து விலகுகின்றன அத்தனை தான் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் மூன்று விதமான வர்ணத்தில் இருந்தாலும் ஒன்று இணையும் போது அதற்கு சம்பந்தமே இல்லாத நிறம் வருகிறது அல்லவா இதற்கு காரணம் கடவுள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா இது போலவே பூதங்களின் இணைவும், விலகுதலுமே இந்த பிரபஞ்ச உற்பத்திற்கு கடவுள் தேவையில்லை காரணம் கடவுள் இல்லை பூதங்களின் கலப்பே பிரபஞ்சம் அப்படிப்பட்ட கலப்பை நம்…