நீர்முள்ளி(hygrophila auriculata
நீர்முள்ளி விதைகளை சேகரித்து, நீரில் இட்டு முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ள வேண்டும், இதனைக் காலையில் சாப்பிடலாம் இதனால் தாது பலஹீனம் குணமாகும்.
நீர்முள்ளி விதைகளை சேகரித்து, நீரில் இட்டு முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ள வேண்டும், இதனைக் காலையில் சாப்பிடலாம் இதனால் தாது பலஹீனம் குணமாகும்.
ஆலம் ஆலம்பழம் விலங்குகளலும் பறவைகளாளலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்றாகும். பாரம்பரிய மக்களால் இந்தப் பழங்கள் உண்ணப்படுகின்றன. மலட்டுத் தன்மை நீங்க இதன் விதைகள் முக்கியமான மருந்தாகின்றன.
கன்னி:- “கன்னி மகனை கைவிடேல்” என்ற இந்த ராசி, அழகிய பெண்ணை போல தோற்றமுடைய அமைப்பை உடையது இந்த ராசி வான மண்டலத்தில் 150 பாகை முதல் 180 பாகை வரை வியாபித்துள்ள பகுதியாகும். கால புருஷனின் ஆறாவது ராசி இதன் அதிபதி புதன் ஆகும். இது உபய ராசி ஆகும். இருமடிப்புள்ள இரட்டை தன்மையுடைய ராசியாகிய இது சஞ்சலப்படுதல் வளையும் தன்மை இரக்க குணம் உடையது. மண் தன்மையுடையது அதனால் லோகாதாய வாழ்க்கையில் விருப்பும், சிந்தனை…
சிம்மம்:- “சிங்கத்தானோடு செருஏரேல்” என்ற இந்த ராசி. சிங்கத்தின் உருவை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ராசியானது, கால புருஷனின் 5 வது ராசியாகும். வானவெளியில் 120 பாகை முதல் 150 வரை வியாபித்துள்ளது . ஸ்திர ராசி, ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி, எனவே அதிக அளவு துணிவும் தலைமை பதவி வெறியும் எவருக்கும் அடங்காத தன்மையும் அடக்க வேண்டும் என்கிற சர்வாதிகள் போக்கும் கம்பீரமும் மிக்கது. வட, முக ராசிகளில் 5 வது இதன்…
கடகம் :- “நண்டானுக்கு இடம் கொடேல்” என்ற இந்த ராசி, நண்டின் அமைப்பைக் கொண்டது இந்த ராசி 90 பாகை முதல் 120 பாகை வரை வான மண்டலத்தில் பரவியுள்ளதாகும். காலபுருணனின் நான்காவது ராசி ஆகும். இது பெண் தன்மை உடையது. பேராசையின் மீது விருப்பம் உடையது. பலவந்தம், விருப்பங்களில் மாற்றமும் திருத்தி அமைப்பதும் போன்ற குணங்கள் உடையது. நீர் தன்மை உடையதில் முதலாவது ராசி மிக சிறந்த கற்பனை வளம் கோழைத்தனம் புறமுதுகில் குத்துதல் ஆணவத்…
மிதுனம் :- “தண்டுக்கொண்டு இல்புகே”என்ற இந்த ராசி ஆணும், பெண்ணும் இணைந்திருப்பதைப் போன்ற தோற்றமுடைய இந்த ராசி வான வெளியில் 60 பாகை முதல் 90 பாகை வரை வியாபித்துள்ளதாகும். கால புருஷனின் மூன்றாவது ராசியான இது ஆண் தன்மை உடையது. உபய ராசி இதன் அதிபதி புதன் ஆகும். ஒற்றை ராசி என்ற அமைப்பைக் கொண்டது. உறுதியும் துணிவும் மிக்கது. அதிக அளவு மூளை பலம் மிக்கது. அதிக புத்திசாலி தனத்தையும் மிகச் சிறந்த திறமையும்…
எப்போதும் எல்லாம் தவறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப் படுகிறதோ அதுதான் சரியானது தவறுகளின் பாதைதான் சக்தியத்தின் பாதை. மனித குலத்திற்க்கு இது என்ன சொல்ல வருகிறது இதிலிருந்து மனிதன் அல்லது மனித குலம் என்ன புரிந்து கொள்வது. அப்படி புரிந்து கொள்வதால் என்ன பயன் சிந்திக்க வேண்டும். சிந்திக்க விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலை தேவைபடுகிறது. மனமானது விருப்பு, வெறுப்பு , சுகம், துக்கம், சரி, தவறு என்று பற்றியபடியே மனம் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நடு…
ரிஷபம் :- “ரிடபத்தானோடு தோரேல் ” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. காளை மாட்டின் உருவத்தை ஒத்த இந்த ராசியான மண்டலத்தில் 30 டிகிரி பாகை முதல் 60 பாகை வரை வியாபித்து இரண்டாவதாக அமைந்திருக்கும் ராசியாகும். இதன் அதிபதி சுக்கிரன். இது பெண் தன்மையுள்ளது. சாத்திய ராசி, சமராசி ஸ்திர ராசியும் கூட எனவே இது அமைதியானது. ஆர்பாட்டம் செய்ய ஆசைப்பட்டாலும், செய்ய துணிவில்லாதது அதிக சுய இரக்கமும் சுய பச்சாதாபமும் மிக்கது வட…
27 நட்சத்திரங்கள் அதன் அதிபதிகள் அது அமைந்திருக்கும் ராசிகள் முதலியவற்றை அறிந்து கொண்ட நாம் அடுத்ததாக 12 ராசிகளின் தன்மையைப் பற்றி சிறிது விரிவாக காண்போம் மேசம் :- “தகடோடு எகரேல்” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஆதியாய் இருப்பது ஆடு தலை உடைய ராசி மேஷம் ஆகும். இது உறுதியானது. துணிவு மிக்கது முரட்டு சுபாவம் மிக்கது. நிலையான பலமும் தூய நம்பிக்கையும் ஊட்டும் தன்மை மிக்கது.…
எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை சிருஸ்டி, ஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி பூஜைக்கு மூலம் குருவின்…
கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்? பதில் – அது அவன் அருளால் தான் முடியும். ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும். அது மனத்தின் மலங்களை அகற்றும். பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும் , கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும். அவனருளின்றி ஏதும் அடையமுடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும்…
நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி யோசிக்கும் விஷயத்தை அந்த சுடரினில் வைத்து அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு, பிரித்து அறிந்தால் குழப்பங்கள் தெரியும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.
ஆதண்டை காய்களை வெட்டி, உப்பிட்டு ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி, வற்றல் செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வறுவலாகச் செய்து சாப்பிடலாம். மேலும், ஆதண்டை ஊறுகாய் சுவையானது, பசியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஊறுகாய் நமது பாரம்பரிய உணவான கூழ்,கஞ்சி போன்றவற்றுக்கு மிகவும் சுவை சேர்ப்பதாகும்
மனிதனின் உயிர் அவன் உள்ளிழித்து வெளியே விடும் மூச்சுக் காற்று ஆகும். நாசி நுனியில் எண்ணத்தை நிறுத்தி, மூச்சுக் காற்றை எண்ணத்தின் மீது ஏற்றி , மூச்சைத் தடை செய்யாமல் அதைத் குதிரையாக்க வேண்டும். இவ்வாறு ஒன்றே கால் நாழிகை மூச்சோடு எண்ணத்தை நனையவிட்டால், சித்த விருத்தி உண்டாகி, ஞான ஒளி மின்னல், சடடோரி தோன்றி மறையும். இப்படி மூச்சுக்குள் இருக்கும் பிராணனை வசியம் செய்யும் முறைதான் விபாசன யோக முறை. முயற்சிப்போம் முடிவு என்னவென்று தான்…
கீழ்படிய முடியாதவனுக்கு தலைமை தாங்கவும் முடியாது. ஒரு நல்ல புத்தகம் தலை சிறந்த ஆன்மாவின் விலை மதிப்பற்ற உயிர் துடிப்பு
கள்ளி முளையான் இளம் தண்டுகள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன. சில நேரங்களில், உப்பு, எண்ணெய் சேர்த்து ஊறுகாய் மற்றும் சட்டினி போன்றவை தயார் செய்யவும் பயன்படுகின்றன.
கற்பிக்கத் துணிந்தவன் கற்றலை நிறுத்தக் கூடாது. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள் இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல், நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள். எந்தப்பேச்சும், செயலும் யார் மனதையும் காயப் படுத்தாமல் இருக்கட்டும். நம்மை மற்றவர்கள்…
முட்சங்கன் பழங்கள் ௨ண்ணத் தகுந்தவை. இலைகளை கசாயமாக ச் செய்து வயிற்றுப்போக்கு மற்றும் மூட்டு வலிக்கு ௨ள்மருந்தாக கொள்ளலாம். பால் கறக்கும் கால்நடைகளுக்கு முட்சங்கன் இலைகளை ௨ணவாகக் கொடுக்க, கறக்கும் பால் மற்றும் ௮திலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் போன்றவை மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.
உலக சாஸ்திரத்தில் முழுமையாக வெற்றி அடைந்தது என்று எதுவுமே இல்லை. அவரவர் சிந்தனைக்கு எது பிடிக்கிறதோ அந்த பாதையில் சென்று பிரபஞ்ச சக்தியின் ஆசீர்வாதத்துடன் வெற்றி கொள்கிறார்கள். நமது உடல் பஞ்சபூதங்களோடு இணைந்து இயங்குவதை அறிந்தோம். நமது உடல் 72 ஆயிரம் நாடி நரம்புகளால் ஆனது. இதில் முக்கியமான 10 நாடிகள், இந்த பத்தில் முக்கியமானது மூன்று ( 3 ) அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை அது போல் வாயுக்கள் பத்து ( 10 )…
நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான்னான், அதுல சன்னி,…
காட்டு எலுமிச்சை முதிர்ந்த காட்டு எலுமிச்சைப் பழங்களை ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பழங்களின் மேல் தோலில் இருந்து வடித்து எடுக்கப்படும் எண்ணெய் பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்த்தொரு மருந்தாகவும் பயன்படுகிறது.
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசவேண்டாம். மற்றவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.. அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள். சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என உணருங்கள். தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேக பிரச்சனைக்கு காரணம் தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிட்டுப் போங்கள். இப்படியெல்லாம் இருக்கமுடியாது…
இருவாட்சி ( திருவாத்தி) இலைகளை வதக்கி, மிளகு, உப்பு ,சேர்த்து அரைத்து , தாளித்து-வதக்கி துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால்,பசி, மந்தம்,வயிற்றுக் கடுப்பு போன்றவை குணமாகும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து இந்தத் துவையலைக் கொடுத்துவர நல்ல பசி எடுப்பதுடன் நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படும்.
மற்றவர்வகளின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள். கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். எந்த கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தை- யும், நேர்மையாகக் கையாளுங்கள்.…
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை நடராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசகயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது.…
சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். இராமன் என்றால் ஒளி மிக்கவன்,…
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத…
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது . ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, . புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை…
கினி வளைகுடா பகுதியில் அமைந்துள்ள கானா நாட்டின் தலைநகர் மற்றும் (ம.தொத.,2001 மதிப்பீடு 15,51,200) 1482-ல் போர்த்துகீசியர்கள் இப்பகுதியில் முதன்முதலில் குடியேறிய போது, இந்தப் பகுதி ‘கா’ மக்களின் குடியிருப்பாக இருந்தது. 1650-80களில் பாதுகாப்பு மிக்க மூன்று வணிக மையங்கள் முறையே டேனியர்கள், டச்சுகாரர்கள் மற்றும் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டன. டேனியர்களும் டச்சுகாரர்களும் முறையே 1850 மற்றும் 1872ல் இப்பகுதியை விட்டு வெளியேறினர். 1877ல் அக்ரா பிரிட்டிஷ் கோல்ட் கோஸ்ட் காலனியின் தலைநகரமானது. 1957ல் கானா சுதந்திரம் அடைந்த…
ஸோ – என்ற நாதத்துடன் காற்றை உள்ளே இழுத்து ஒசை எழுப்பி ‘ ஹம் ‘ என் ற ஒசையுடன் அதை வெளியே விட்டு, ஒலி எழுப்பும்போது, பிரசித்தி பெற்ற ஒங்கார நாதமாகிய ‘ ஸோஹம்’ இணைகிறது. இதுவே சூட்சும பஞ்சாட்சரம்.
காரை சிறுகாரை என்று சொல்லப்படும் இதன் இலைகள் மற்றும் பழங்கள் உண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். சமைத்த உணவுகளை பதப்படுத்தவும் காரை இலைகள் பயன்படுகின்றன. குரங்குகளும், சிலவகைப் பறவை இனங்களும் காரை பழங்களை விரும்பி உண்கின்றன. இவற்றின் மூலமாக காரை விதைகள் இனப்பெருக்கம் அடைகின்றன.
1970,80,90 -ம் காலங்களில் வாழ்ந்தவர்களின், வாலிபர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திய மாபெரும் கான கந்தவர்வன் பாடலிலேயே சிரிக்கவும், சிணுங்கவும், உள்ள கலையை முழுமையாக கைவர பெற்ற உன்னத பாடகர். ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா இந்த பாடலில் விழுந்தவன் இன்னும் ஏனோ என்னால் எழ முடியவில்லை சிந்து பைரவி படத்தில் வரும் தண்ணிதொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி என்ற பாடலை நான் ஏன் டைரக்டர்…
தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, இதுவே முதல் உயிரெழுத்தாகும், அகரம் என்று வழங்கப்படுகிறது. உயிரும், மெய்யுமாக அமைந்த எழுத்துக்களின் வரிசை நெடுங்கணக்கு எனப்படும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் கலந்ததாக நெடுங்கணக்கு உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில், உயிரெழுத்துக்கள் முதலிலும், மெய்யெழுத்துக்கள் பின்னரும் அமைகின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அகரமே, எழுத்துக்களுக்கு முதலானது என்று குறிப்பிடுகிறது. வள்ளுவரின் திருக்குறளும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகள் முதன் முதலில் ஒலியெழுப்பத்…
சூட்சும எல்லையில் மனிதனின் எண்ணத்தைச் செலுத்தினால், சூட்சும சரீரமும் அதைத் தொடர்ந்து வர வேண்டும். எண்ணத்தை சூக்குமத்தில் நிறுத்தும் போது, சூக்கும சரீரம் ஸ்தூல சரீரத்துக்குள் இருக்கக்கூடாது.
பாதஹஸ்தாசனம் — பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் மூங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிப்போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஒரிரு வாரங்களில் படத்தில காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு…
புறமனத்தில் எழும் எண்ணங்களும், திட்டங்களும் நிறை வேறலாம், நிறைவேறாமலும் போகலாம். ஏனென்றால் புறமனதின் எல்லைக்கோட்டில் இருக்கும் நினைவிற்கு பந்தபாசம் உண்டு. ஆனால் புறமனதிலிருந்து அகமனதிற்குக் கொண்டு செல்லும் எண்ணங்களும், திட்டங்களும் பந்தபாசங்களுக்கு அப்பாற்பட்டவை, தோல்வி அறியாதவை. எனவே அவை நிறைவேறியே தீரும். இது மனேதத்துவச் சட்டம்.
மூன்று பிரிவுகளைக் கொண்ட தொண்ணுற்றாரு மனத் தத்துவங்களில், இரண்டாம் தத்துவம் மொத்தம் முப்பத்தைத் தன்னுள் அடக்கியது இந்த முப்பதில் தச வாயுக்கள் பத்து – அதில் பிராணனும் ஒன்று. இந்தப் பிராணன், லலாட மத்தியில் உருவாகி, சித்ரஹாச நாடியில் பரவி, மூலாதாரத்திற்கு வந்து, மணி பூரக நாபியைச் சந்தித்து, இடகலை, பிங்கலைகளில் ஒடி, ஏழு சூட்சும நாடிகளையும் சந்தித்து, கபாலத்தைச் சுற்றி, நாசியில் பன்னிரண்டங்குலம் எழுந்து, நாலங்குலம் விடுவித்து, எட்டங் குலம், நீண்டு, தான் நின்ற இடத்தில்…
பிறையாசனம் — இவ்வாசனத்தை அர்த்த ( பாதி ) சக்ராசனம் எனகூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளையவேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். – பலன்கள் — முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை…
நின்ற பாத ஆசனம் — இவ்வாசனம் சிரசாசனம், அர்த்த சிரசாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம். ஒற்றைக் காலில் நிற்பது. வலது காலில் நின்று கொண்டு இடது காலைமடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக்கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு…
ஒரு வியாபாரி நாய் ஒன்றை அன்புடன் வளர்த்தார். ஒரு சமயம் நாயின் உடல்நிலை சரியில்லாமல் போனது அதை சோதித்த கால்நடை மருத்துவர் அதற்கு மீன் எண்ணெய் கொடுக்கச் சொன்னார். உடனே பெரிய புட்டி நிறைய மீன் எண்ணெய் வாங்கி கொண்டுவருமாறு வேலையாட்களை பணித்தார் வியாபாரி. நாயை மடியில் வைத்து எண்ணெயை கெண்டி வழியாக ஊற்ற நினைத்தார். பலவந்தமாக எதோ செய்யப் போகிறார்கள் என்று நினைத்த நாய் திமிறிக் கொண்டு தப்பியோடியது. ஓடும் பொழுது எண்ணெய் புட்டி கீழே…
கலாம் வாழ்க்கையை நேசித்தவர், வாழ்ந்து காட்டியவர், மனிதனுக்கு இருக்க வேண்டிய சிறப்பான குணங்கள் அன்பு, பண்பு, பொறுமை, நிதானம், வைராக்கியம், தனக்கும் தன் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமை போன்றவை வேண்டுமென்று பெரியவர்கள் சொன்னதை செயல்வடிவத்தில் செய்து காட்டியவர். அது கலாமின் கடைசிபயணத்தில் நடந்த சம்பவத்தில் கூட நாம் காண முடியும். அந்த நேரத்திலும் அவர் ஆசானக இருந்து நமக்கு போதித்திருக்கிறார். புண்ணியம் செய்திருப்பவர்கள் அந்த போதனையை ஏற்று தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள். அதனால் அவர்கள் சந்தோஷத்தையும்,…
கோமு -ஒரு சந்தேகம் காமு -என்ன கோமு- வாழ்க்கைங்கிறது என்ன தொடர்ந்து நடந்துகிட்டு இருக்குற மரணமா இல்ல தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற ஜனனமா? காமு- ரெண்டும்தான் கோமு – இப்படி சொன்னா எப்படி கொஞ்சம் விளக்கமா இல்லாட்டி புரியறமாதிரி சொல்லு காமு- இங்க பாரு சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட ஞாபகமே வராது துக்கத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட சிந்தனை வந்துகிட்டே இருக்கும் இதுல தமாஷ் என்னன்னா ரெண்டுபேரும் மரணம் அடைவாங்க கோமு -நான் கேட்டது மரணம்…
காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது. பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை…
உடன் சாதனப் பயிற்சியிலும், சொல்லிலும், செயலிலும் உண்மையாக இரு, அப்போது எவ்வளவு இன்பமாக உள்ளோம் என்பதை உணர்வாய். உலகிலுள்ள எல்லாப்பிராணிகளின் மீதும் ஆண்டவனது கருணை மழை பெய்கின்றது. அது வேண்டும் எனக்கேட்பது அவசியம் இல்லை. நீ உண்மையாகத்தியானம் பழகு. அப்போது ஆண்டவனின் அளவற்ற கருணையின் இருப்பை உணர்ந்து கொள்வாய். ஆண்டவன் நேர்மையையும் சத்தியத்தையும், அன்பையுமே விரும்புவான். வெளிப்பகட்டானவாய் வார்த்தைகள் அவனைத் தீண்டுவதுமில்லை.
கிழமைகள் ஞாயிறு: அனுசம், கேட்டை, விசாகம், மகம், பரணி மிருகசீரிஷம் திங்கள்: பூராடம், அனுசம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம் செவ்வாய்: அவிட்டம், திருவோணம், சதயம், கேட்டை, திருவாதிரை புதன்: அசுவனி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். வியாழன் : மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி வெள்ளி: ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், அஸ்தம், விசாகம், அனுசம், அவிட்டம். சனி : புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், ரேவதி மேலே சொன்ன கிழமைகளில் வரும் நட்சத்திரங்களில்…
மரணம் என்பது உண்மையான விஷயம் அது உண்மை தானென்று ஏற்று அதை இயல்பாய் அல்லது துணிவாய் எதிர் நோக்கி வரவேற்க்கும் பக்குவம் யாருக்குதான் இருக்கிறது. பணம், பதவி, படிப்பு, அந்தஸ்து வெற்றி (முதன்மை அடைய வேண்டும். ) போன்றவற்றில் நிலை பெற்ற மனிதர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறல்லவா.
உன் இதயத்தின் உள்ளிடத்திருந்து எப்போதும் ஆண்டவன் நாமத்தைக் கூறிக்கொண்டேயிரு, மனப்பூர்வமாக குருதேவரைத் தஞ்சம் அடை, சூழ்நிலையிலுள்ள பொருள்களை உன் மனம் எவ்வாறு கருதுகிறது என்பது பற்றிய கவலை வேண்டாம். ஆத்ம வழியில் முன்னேறியுள்ளோமா இல்லையா என்று கணக்கிட்டுப் பார்த்துக் கவலைப்படுவதில் உன் காலத்தை வீணாக்காதே, நாம் முன்னேறியுள்ளோமா என்று ஆராய்தலே அகங்காரமாகும். உன் குருவினிடத்தும் இஷ்ட தேவதையிடத்தும் நம்பிக்கை வை.
நல்லவேளை ஆண்டவன் மனுஷனுக்கு எதுக்கு ரெண்டு காது ஒத்த காது போதும்னு நினைக்கல அப்படி நினைச்சுருந்தார்னா இப்ப நாம எல்லோரும் மாஸ்க் மாட்டுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டுருப்போம்.
அசுவனி, ரோகிணி, புனர்பூசம், மகம், அஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி சத்துவ குணம், இதில் எந்த கிரகம் இருந்தாலும் நன்மை தரும் நிலையாகும். பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ரஜோகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் மத்திம பலன் தரும் நிலையாகும். கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, கேட்டை, உத்திராடம், சதயம், ரேவதி தாம்ஸகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் தீமையான பலனைத் தரும் நிலையாகும்.
நட்சத்திரம் மூலம் 4 பாதம் நட்.அதிபதி கேது ராசி தனுசு ராசி அதிபதி குரு நட்சத்திரம் பூராடம் 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி தனுசு ராசிஅதிபதி குரு நட்சத்திரம் உத்திராடம் 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி தனுசு ராசி அதிபதி குரு நட்சத்திரம் உத்திராடம் 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி மகரம் ராசி அதிபதி சனி நட்சத்திரம் திருவோணம் 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி மகரம் ராசிஅதிபதி சனி நட்சத்திரம் அவிட்டம்…
முந்திரி முந்திரியின் கனி பொய்க்கனி (pseudo -fruit)வகையச் சேர்ந்தது. இது,முதிர்ந்த நிலையில் இனிப்புச் சத்து கொண்டது. மேலும்,இதில்’அஸ்கார்பிக் அமிலமும் நிறைந்துள்ளது. பழம் அல்லது பழச்சாறாகச் செய்து இதனை சாப்பிடலாம். முந்திரிப் பருப்பு அதிகமான சத்துக்கள் நிரம்பியது. இதனை உலர்த்தியோ,அல்லது,நெய் சேர்ந்து வறுத்தோ சாப்பிடலாம் ஜாம்,பலவகையான பானங்கள்,இனிப்புப் பொருட்கள் மற்றும் போதை நீர்மங்கள் தயார் செய்வதற்காகப் பல நாடுகளிலும் முந்திரி பயன்படுத்தப்படுகிறது.
சீத்தா ஆங்கிலத்தில் சர்க்கரை ஆப்பிள் ( sugar apple) எனப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் இதன் சதைப்பகுதி விருப்ப உணவாகக் கொள்ளப்படுகிறது. பழத்தில் 1.6% புரதம், கொழும்பு 0.4% , நார்ச்சத்து 3.1%, மாவுச்சத்து 23.5% மற்றும் ,தாது உப்புக்கள் (100 கிராமுக்கு 0.9 கிராம் அளவில்) காணப்படுகின்றன. அதோடு , பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தையமின், ரைபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன . பழச்சாற்றில் 20% அளவிற்கு சர்க்கரைச் சத்து நிரம்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது .…
ஓர் ஊரில் ஏழை ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன் , ”கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!” என்று புலம்பிவிட்டுப் போனான். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ”பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு…
௮ரைகீரை தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளை கீரையாகக் கடைந்தோ ௮ல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம். அதோடு இதன் தண்டுகளைக் கடைந்தோ, கூட்டு ௮ல்லது சாம்பாரில் இட்டு வேகவைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இலைகளில் புரதச் சத்து 5.2%, கொழுப்பு 0.3%, நார்ச்சத்து 6.1%, மாவுச்சத்து 3.8% மற்றும் தாது ௨ப்புகள் 2.8% ௮ளவிற்கு நிறைந்துள்ளது. அதோடு ,கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்-சி அகியவையும் அடங்கியுள்ளன.
வீட்டிலே காபி கொடுத்தாள் மனைவி. உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை. சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது. இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து…
பிரப்பன் கிழங்கு பிரப்பன் பழத்தைப் பசுமையாக அல்லது ஊறுகாய் செய்தோ சாப்பிடலாம், பலவிதமான நுண் சத்துக்கள் நிறைந்தது. மேலும் இதனால் மிகுதாகம் மற்றும் நாவறட்சியும் கட்டுப்படும். இளம் தண்டுப் பகுதியை பசுமையாகவோ, சமையல் செய்தோ சாப்பிட உடலுக்கு நற்பயன் விளையும்.
வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு…. அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது… உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம்…
நட்சத்திரம் மகம் 4 பாதம் நட்.அதிபதி கேது ராசி சிம்மம் ராசிஅதிபதி சூரியன் நட்சத்திரம் பூரம் 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி சிம்மம் ராசி அதிபதி சூரியன் நட்சத்திரம் உத்திரம் 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி சிம்மம் ராசி அதிபதி சூரியன் நட்சத்திரம் உத்திரம் 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி கன்னி ராசி அதிபதி புதன் நட்சத்திரம் அஸ்தம் 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி கன்னி ராசிஅதிபதி புதன் நட்சத்திரம் சித்திரை…
பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.
செம்பிரண்டை பாரம்பரிய பழங்குடி மக்கள் இதன் பழங்களை விரும்பி உண்கிறார்கள். இலைகளை சூப் செய்தும் சாப்பிடலாம். இதன் அடி வேர்களை சிறு துட்டுகளாக்கி,அரைத்து இஞ்சிக் குழம்பு வைப்பது போல காரக் குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுப்பிடிப்பு அகலும், தொடை வலியும் குணமாகும்.
காட்டுச் சேனை அடிகிழங்குளை சிறு துண்டுகளாக்கி, புளியன் இலை சேர்த்து வேகவைத்து அதிலுள்ள அரிப்புத் தன்மையான(நமநமக்கும்) காரப்பண்பினை நீக்கி விடலாம். பின்னர்,இதனை,பொரியல்,காரக்குழம்பு அல்லது ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பாரம்பரிய மக்களிடம் இந்தப் பழக்கம் இன்றும் உள்ளது.
சிரசாசனம் 15 நாட்கள் அர்த்த சிரசாசனம் செய்த பின்புதான் சிரசானம் தொடங்க வேண்டும். அர்த்த சிரசாசன நிலையில் சுவர் ஒரமாகவோ, மூலையிலோ இருந்து கொண்டு இலேசாக மூச்சுசப் பிடித்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாகத் தூக்க வேண்டும். கால்களை விறைப்பாக இல்லாமல் சாதாரண நிலையில் வைக்க வேண்டும். சாதாரண மூச்சு. கண் மூடி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பிறர் உதவியுடன் செய்யலாம். நன்றாக பேலன்ஸ் கிடைத்தபின் தனியாக நிற்கலாம். ஆரம்பத்தில் 3 நிமிடம் முதல் 5…
அர்த்த சிரசாசனம் கெட்டியான விரிப்பில மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில்அமர்ததி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்கவேண்டும். ஒருமுறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை…
சாதாரண எண்ணத்தைக் கொண்டு சாதனை அடைந்தவர்கள் உண்டா? முயற்சியின்றி தேர்ச்சிப் பெற்றவர்கள் உண்டா? தியகமின்றி தங்கம் வென்றவர்கள் உண்டா? கவலைகள், கனவுகள், இல்லாத கலைஞர்கள் உண்டா? அனைவருக்கும் எளிதில் கிடைக்க சாதனை என்ன சாதாரண விஷயமா? சித்தேஷ்
நட்சத்திரம் அஸ்வினி பாதம் 4 நட்.அதிபதி கேது ராசி மேஷம் ராசி அதிபதி செவ்வாய் நட்சத்திரம் பரணி 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி மேஷம் ராசி அதிபதி செவ்வாய் நட்சத்திரம் கார்த்திகை 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி மேஷம் ராசி அதிபதி செவ்வாய் நட்சத்திரம் கார்த்திகை 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி ரிஷபம் ராசி அதிபதி சுக்கிரன் நட்சத்திரம் ரோகிணி 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி ரிஷபம் ராசி அதிபதி சுக்கிரன்…
வேண்டும் பேறு குருவைக் கண்டிட! வேண்டும் ஜென்மங்கள் குருவருள் பருகிட வேண்டும் காலம் குருவை அறிந்திட வேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட வேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட வேண்டும் அறிவு குருவழி நடந்திட
இராசி துலாம் 180 பாகைமுதல் 210பாகை வரை சரராசி தன்மைகள் காமம் – வெகுளி – மயக்கம் இரவில் பலம் இராசி விருச்சிகம் 210 பாகைமுதல் 240பாகை வரை ஸ்திர ராசி தன்மைகள் அறம் – பொருள் – இன்பம் இரவில் பலம் இராசி தனுசு 240 பாகைமுதல் 270 பாகைவரை உபயராசி தன்மைகள் நியாயம் – தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி மகரம் 270 பாகைமுதல் 300பாகை வரை சரராசி தன்மைகள் ஆணவம்…
ராசிகளின் அமைப்பு :- வானத்தில் பூமியானது சூரியனை சுற்றி வரும் பாதை ” எக்லிப்டிக்” எனப்படும். இதற்கு இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும். இந்த சுற்று வளைய பகுதிக்குத்தான் கோள்களும் சந்திரனும் சுற்றி வருகின்றன. இது 12 பாகமாக பிரிக்கப்பட்டு 12 ராசியாக கொண்டு உள்ளது. இராசி மேசம் சரராசி 0 பாகை முதல் 30 பாகை வரை தன்மைகள் நியாயம் தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி…
!!இழப்புகளும், பிரிவுகளும் நம்மை நமக்கும் பிறரையும் நமக்கு அடையாளம் காட்டுகின்றன ஆளாக்குகின்றன!!
மனித மூளையில் சேமிப்புத் திறன் 256 GB பில்லியன். ஹார்ட் டிஸ்க் ( சராசரி 250 GB ) எண்ணிக்கைப் படி பார்த்தால் சுமார் 1.2 பில்லியன் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு இணையானது மனித மூளை. இந்த சேமிப்புத் திறன் அளவிற்கு குருந்தகடுகளை ( சி.டி ) அடுக்கினால் அது நிலவைத் தாண்டி செல்லும். இத்தனையும், வெறும் 1,400 கிராமில் அடங்கியது என்ன விந்தை!!
அர்த்த மத்ச்யேந்திராசனம் — உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது…
அகிலமெங்கும் பரந்து விரிந்திருக்கும் சக்தி மயமான ஆற்றலும் திறனும் மனிதனுள் அடக்கம். பரவிவிரிந்திருக்கும் அந்தப் பூரணத்தின் சர்வ சக்தி வடிவே மனிதன். தன்னுள் அடங்கி ஒடுங்கியிருக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளிக்கொணர்ந்து விரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த அறிவின் வினையே கடவுள் என்று மனிதன் அறிந்து விட்டால், தன்னிலிருந்து பேராற்றலை அவன் வெளிப்படுத்தமுடியும்.
மகாமுத்ரா — உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம். வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு. 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும் .பலன்கள் — வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.
உசர்ட்டாசனம் — உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப்பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக்கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.…
நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதோ கால அட்ட வணை: விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9…
அழிஞ்சில் அழிஞ்சில் பழங்கள் உண்ணுவதற்கு இனிப்புச் சுவையுடன் கூடிய புளிப்புத் தன்மை கொண்டவை, மார்ப்புச் சளியைக் குறைக்கும் மற்றும் மலமிளக்கும் தன்மையானவை. குறைந்த அளவில் உண்பது கண் ஒளியைக் கூட்டுவதுடன் இரத்தப் போக்கையும் தடுக்கும்
கேள்வி – தெய்வீக அருள் எப்போது எனக்குக் கிட்டும்? பதில் – தவம் செய்வதால் மட்டும் தெய்வத்தின் அருள் கிடைத்துவிடும் என்ற நியதி இல்லை பழங்காலத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தலைகீழாகத் தொங்கியும் தீயிடை நின்றும் மகரிஷிகள் தவம் செய்தனர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருள் பெற்றனர். கேள்வி – அன்னையே எவ்வளவோ தவம் செய்தேன், எவ்வளவோ ஜபமும் செய்தேன். ஆனால் அடைந்த பலன் ஏதுமில்லையே? பதில் — விலை கொடுத்து வாங்கக் கடவுள்…
நாயுருவி நாயுருவியின் இலைகளைக் பிற கீரைகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட உடலுக்கு வலு சேர்க்கும். விதைகளைச் சேகரித்து, மேல் தோல் நீக்கி தினை அரிசியை சமைப்பது போலச் சமைத்து சாப்பிட உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பசியை அடக்கும் தன்மை கொண்டது. எனவே, நீண்ட நேரம் தியானத்தில் அமர்பவர்கள் மட்டும் இதை பின்பற்றலாம். மேல் தோல் நீக்கப்பட்ட இதன் விதைகளில் 22.5% புரதமும் , 4.7% கொழும்பும் , 56.1% மாவுப் பொருட்கள், 1.8%…
துத்தி துத்தி இலைகளைத் துவையல் செய்து சாப்பிடுவது அஜிரணித்திற்கு மருந்தாகும். மேலும் இது முலநோய்க்கும் மருந்தாகிறது. துத்தி இலைகளை நெய்யில் வதக்கித் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூலம் குணமாகும். இலைகளைக் காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வெள்ளைபடுத்தல் குணமாகும். இலையைக் கஷாயம் செய்து கொப்பளிக்க பல்வலி குணமாவதுடன் ஈறு வீக்கமும் வடியும். இலைகள் மற்றும் தண்டுகளில் வைட்டமின் சி (31.1 மி.கி. /100 கிராம்) அடங்கியுள்ளது. துத்திப்…
மனிதனுடைய அடிப்படையான குணம் வன்முறைதான். ஒருவரை ஒருவர் முந்தி நான்தான் முதல் என்று காண்பிக்க, ஆசைப்படும் மனோபாவம் வன்முறையின் ஆரம்பம். விஞ்ஞானம் அமைதியையும், சாந்தத்தையும் எந்தக் காலத்திலும் தராது. அடுத்தாப்பல இருக்கிற மனுசன புரிஞ்சுக்காம, புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம, நிலாவையும், செவ்வாயையும் புரிஞ்சுஎன்ன ஆகப் போகுது.
குன்றிமணி (Abrus precatorious) குன்றிமணிக் கொடியின் வேர் “நாட்டு அதிமதுரம்” எனவும் கூறப்படும். இதன் இலைகளை வாயிலட்டு மென்று சாப்பிடலாம். அளவாக 5-10 இலைகள் சாப்பிட மலமிளக்கியாகச் செயல்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்கள் இந்த இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். அதிகமாகச் சாப்பபிட்டால் பேதியாகும், எனவே எச்சரிக்கையுடன் சாப்பிட்டு வர வேண்டும் இலைகளை உலர்த்தி,தேனீர்.தயாரிப்புக்கான மூலிகைப் பொடியாகவும் செய்து கொள்ளலாம். இலைகளில் ‘கிளைசிரைசின் எனப்படும் ‘செயல்படும் முலக்கூறு’ காணப்படுகிறது. இலைகளைக் கொண்டு கொதிநீர் தயாரித்து சாப்பிட…
சகோதரி நிவேதிதை எழுதியது கேம்பிரிட்ஜ் மாஸ், ஞாயிற்று கிழமை. டிசம்பர் 10, 1910. அன்புமிக்க அன்னைக்கு, இன்று அதிகாலையில் ‘ சாரா ‘ வுக்காகப் பிரார்த்தனை செய்யும் பொருட்டு சர்ச்சுக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் எல்லோரும் ஏசுவின் தாயான மேரியைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தனர். திடீரென நான் உங்களை நினைத்தேன். உங்கள் பிரியமுகம், அன்பு நிறைந்த பார்வை, உங்கள் வெண்மையான ஆடை, உங்கள் கைவளையல்கள் எல்லாம் என் மனக்கண்முன் தோன்றின. சாராவிற்கு ஆறுதல் தந்து ஆசி கூறுவதற்கு ஏற்றவர்…
ஓடிக்கொண்டே இருப்பதுதான் நதியின் அழகு. பாடிக்கொண்டே இருப்பதுதான் குயிலுக்கு அழகு சீறிக்கொண்டே இருப்பதுதான் பாம்பிற்கு அழகு. தேடிக்கொண்டே இருப்பதுதான் மனிதனுக்கு அழகு நாடிக்கொண்டே இருப்பதுதான் மனதுக்கு அழகு பேசிக்கொண்டே இருப்பதுதான் கிளிகளுக்கு அழகு நகர்ந்துகொண்டே இருப்பதுதான் மேகங்களுக்கு அழகு. மின்னிக்கொண்டே இருப்பதுதான் விண்மீன்களுக்கு அழகு. ஒளிவீசிக் கொண்டே இருப்பதுதான் வைரங்களுக்கு அழகு.
ஜானுசீராசனம் நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து, பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்கவேண்டும். இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம், இடது கால் மூட்டைத் தொட வேண்டும். பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும். ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது. ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச்…
பலாப் பழம் முக்கனிகளில் ஒன்றானது பலா, இது இனிப்பு சுவை கொண்டது. பல விதமான பலா மரங்கள் இருந்தாலும் வேர்ப் பலா மற்றும் மலைப் பலா சிறந்தது என்பார்கள். இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை உண்டாக்கி வயிற்று கடுப்பு, வயிற்று வலி முதலியவற்றை உண்டாக்கும். இதில் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவாக சாப்பிட வேண்டும். பயன்கள் கண் நோய் வராமல் தடுக்கும் உடம்பில் உள்ள புண்களை பொங்கி வரச் செய்து…
ஒரு பெரியவர் எப்போதுபார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்வந்து கேட்டான் , ” தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையேபடிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனைநாளா படிக்கிறீங்க?” என்றான். பெரியவர் சொன்னார்,” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்இருக்கும் “.” அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்குமனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன்இன்னும் படிக்கிறிங்க ?” என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், ” எனக்கு ஒரு உதவி…
முலாம் பழம் கோடைக் காலத்தில் இயற்கை நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை இந்த முலாம் பழம். 75 சதவீதம் நீர் சத்தும், இரும்பு சத்தும் நிறைந்தது. உடலிற்க்கு குளிர்ச்சியை தந்து கோடைக் கால உஷ்ணத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறது. பயன்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் கோடைக் காலத்தில் ஏற்படும் கட்டிகள், பருக்களையும் போக்கும் மலச்சிக்கலைப் போக்கும் சிறுநீரை அதிக அளவு உற்பத்தி செய்து தேவையற்ற அசுத்தங்களை வெளியே கொண்டு வரும்.
சுக்கிரன் :- கோள்கள் எல்லாவற்றிலும் ஒளி மிகுந்தது சுக்கிரன் தான். சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தோன்றும். அல்லது சூரிய உதயத்திலும் முன் கிழக்கு அடிவானில் தோன்றும். இது பூமியுடன் சேர்ந்த இரட்டை பிறவி என்றே சொல்லலாம். சூரியனிலிருந்து 10.7 கோடி கிலோமீட்டர் சூரியனை ஒரு முறை சுற்றிவர 225 நாள் தன்னைத்தானே 30 நாளில் சுற்றுகிறது. சனி :- நம் முன்னோர்களுக்கு கடைசியாகத் தெரிந்த கோள்தான் சனி – சூரியனுக்கு 141.8 கோடி கிலோ மீட்டர்…
செவ்வாய் :- செந்நிறமானது, புதனைவிட சற்று பெரியது சூரியனில் இருந்து 22.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றி வர 687 நாள் தன்னைத்தானே 24.87 நிமிடங்களில் சுற்றுகிறது. இங்கே பல எரிமலைகள் உள்ளன. புதன் :- சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. இது சூரியனுக்கு 5 கோடி 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய உதயத்திற்கு முன்னரோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னரோ புதனை வானத்தில் பார்க்கலாம்.…
சூரியன்:- இது தானாக ஒளிரும் கோளம். இதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர். இது தன்னைத்தானே சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்றுவதற்கு 25.38 நாள் ஆகும். வினாடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் எங்கோ செல்கிறது. இந்த பயணத்தில் தன்னுடன் விண்மீன்களையும் பூமி முதலிய கோள்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது. பூமி :- இது சூரியனை சுற்றி வருகிறது. சூரியனை சுற்றி வரும் 9 கோள்களுள் பூமியும் ஒன்று.…
காமு- வளர்ச்சின்னா என்ன கோமு- வளர்ச்சின்னா அழிவு காமு- நீ தப்பா சொல்லரே கோமு – அப்ப நீ சரியா சொல்லு காமு- இடைஞ்சலைத்தாண்டுவதுதான் வளர்ச்சி கோமு- அது இயற்கையை உத்து பாக்காதவங்க சொல்லற வார்த்தை காமு- நீ ரொம்ப உத்துபாத்துட்டாயோ கோமு- நான் சொன்னது நமக்கு முன்னாடி பாத்தவங்களோட கருத்து எனக்கு அது சரின்னு படுது காமு – என்ன நீ இப்படி சொல்லற கோமு- யோசி புரியும் காமு- உலகமே வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு ஓடுது…
யோக முத்ரா — YOGA MUDRA பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி நெஞ்சைத் தொடும்படியாக வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடடவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தைப் பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5…
வாழ்க்கை யாத்திரையில் மனம் பல விஷயங்களில் மோதுகிறது. சிலவற்றை மறக்க முடிவதில்லை. சிலவற்றை நினைக்க முடிவதில்லை.
காமு -அரசியலிலே நீடிச்சு நிலைச்சு நிக்கணும் அப்படின்னா என்னென்ன குணம் இருக்கணும் கோமு- நான் சொல்லுவேன் உனக்கு புடிக்காது காமு -இல்ல சொல்லு நான் கேக்கறேன் கோமு -சரி சொல்லறேன் கேளு உறவாடி கெடுக்கும் உத்தம குணம், சுயநலம், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், ஏளனம், பொறாமை, பேராசை இதல்லாம் சாதரண மனிதர்களுக்கும் இருக்கும், ஆனா விசேஷமாய் அரசியல் நடத்துபவர்களிடம் இருக்கும். அந்த விசேஷம், ராஜ தந்திரத்தில் குள்ளநரியாகவும், அரசியல் கட்சிகளில் அடிக்கடி கட்சிமாறும் பச்சோந்தியாகவும், மத நம்பிக்கைகளில்…
ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு. காமு தேச பக்தின்னா என்ன கோமு தேசத்தை துதி பாடறது தேச பக்தி காமு அப்ப ராஜ பக்தின்னா என்ன கோமு ராஜாங்கத்தை துதி பாடறது ராஜ பக்தி தம்பி காமு நல்லா புரிஞ்சுக்க ஆளும் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் பக்தி வேறு. ஆளப்படும் தன் நாட்டை கண் திறந்து பார்க்கும் பக்தி வேறு. இந்த அரசியல் அறிவை லட்சியவாதிகள் சாதாரண குடிமக்கள் மண்ணின் மைந்தர்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்போது…
காமு; வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை கோமு; என்ன தனியா ஏதோ பேசிட்டு இருக்க காமு ; நீ எப்ப வந்த? கோமு; நீ வர வரன்னு சொல்ல ஆரம்பிச்சவுடனேயே வந்துட்டேன் காமு; உனக்கு தான் எந்த பக்தியும் கிடையாதே அதனால் அத விட்று கோமு ; நீ என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறேன்னு நினைக்கிறேன் காமு; என்ன என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறன் நான் கோமு ; உன்னோட அளவுக்கு யாருக்கும் தேச…
* கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது
ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சோதிடம் எங்கு எப்படி தோன்றியது என்பது பற்றி எவருக்கும் தெரியாது ஆனால், சீனர்கள், இந்துக்கள், சால்தியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர், ரோமானியர், அரேபியர் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு முறைகளை கையாண்டு வந்தனர் என்பது அறிந்த உண்மை. இக்கலை ஒரு பழங்கால கலை அது விதியையும் எதிர் காலத்தையும் வானத்தில் உள்ள கோள்களின் இருப்பின்படி முன் கூட்டித் தெரிவிக்கும் ஒரு விஞ்ஞானக்கலை. ” வேதயஸ்யசஷ ¨ ஜ்யோதிஷம் ஜயோதிஷம் ஜகதாய சக்ஷ ¨…
ஜோதிடர் அமரும் திசை தெற்கு, மேற்கு பார்த்து அமருவது நல்லது. ஜோதிடம் கேட்பவர் :- கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பார்த்து அமருவது நல்லது. ஜோதிடம் கேட்பவர் கிழக்கு முகமாய் இருந்தால் அனுகூல பலன்கள் ஏற்படும். மேற்கு முகமாய் இருப்பது கூடாது. வடக்கு, தெற்கு முகமாய் இருந்தால் நல்லது நடக்கும். தென்மேற்கு முகமாய் இருந்தால் காரியங்கள் நடக்க கால தாமதமாகும். வடகிழக்கு முகமாய் இருந்தால் பல தடைகள் ஏற்படும். வடமேற்கு தென்கிழக்கு முகமாய் இருந்தால் தோல்வி, ஏமாற்றம், தடுமாற்றம்…
ஜோதிட ஞானம். தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர் அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாகக் கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்டும். நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கத்தையும் உணர்த்துவார்கள். அப்படி அல்லாமல் ஒருவர் எத்தனை நூல்கள் கிரந்தங்கள் படித்தாலும், கணிதங்கள் ஆராய்ச்சிகள் செய்தாலும் இக்கலையைப் பற்றிய அருமை பெருமைகளை தெரியமுடியாது. இவர்கள் சொல்லும் பலாபலன்கள் சரிவர நடக்காது. இக்கலையை கையாள்பவர்கள் கண்டிப்பாக…
இது காகிதப்பூ அல்ல!! காவியப்பூ! இதை வாழ்த்தவில்லை!! வணங்குகிறேன்.!! கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். நான் சோதிடன் அல்லன், சோதிடத்தை அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் காட்டுகிற சாதாரணமானவன் என்ன காரணத்தாலோ எனது நண்பர்களில் பலரும் சோதிடர்களாகவே அமைந்துவிடுகிறார்கள். சோதிடம் படிக்கிறவர்கள் எல்லோரும் சோதிடர்கள் ஆவது இல்லை. முப்பத்தி ஐந்து வயது நிரம்பிய எல்லோரும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவது இல்லை அல்லவா? எந்தத் துறையிலும் உவமை சொல்ல இயலாத உயர்ந்தவர்கள் உருவாவது உண்டு. ஓடுகிறவர்கள் எல்லோருமா உஷா…
அணிந்துரை R.P சாமி “கோள்களின் கோலாட்டம்” என்ற இந்நூல் ஓர் ஒப்பற்ற அரிய ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மகரிஷி அவர்கள் சிறந்த வாசியோகியாகவும், தலைசிறந்த சோதிட வல்லுநரும் ஆவர். பிரம்மரிஷி சோதிஷ ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும், ”ஞான சிந்தாமணி” மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அவருடன் ” நந்தி சோதிடம்” மாத இதழ் வந்து கொண்டிருந்த காலத்திற்கு முன்பிருந்தே இணைந்து நின்று சோதிடகலைக்கு தொண்டாற்றியவன்…
தனுராசனம் விரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை ( கரண்டைக்கால் ) இறுகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை படத்தில் காட்டியபடி வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப்பொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக…
சலபாசனம் — குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு, கைகளைத் தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க வேண்டும். ஆரம்பத்தில் சில நாள் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும். பலன்கள்…
புஜங்காசனம் குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும். சாதாரண மூச்சு , பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும். ஒருமுறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் பெயர் பெற்றது. பலன்கள் –– வயிற்றைறையில் தசைகள்…
சுப்தவஜிராசனம்முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமரவேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படு படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும் தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும். பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்துப் படுக்க வேண்டும். அடுத்து ஆசன…
காஞ்சி பெரியவர் சொன்னது நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம்…
லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது! இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் இரண்டாம் வீடு மற்றும்…
அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்! ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு…
ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று…
நீ ஆமையைப் பற்றிக் கேட்டாயல்லவா..? ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். ‘அதுதான் தனக்கான இடம்’ என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும். முதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே…
மீனம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் – பாத்திரம், முத்துக்கள், ரத்தினங்கள், சங்கு இவற்றுடன் கலந்த பொருள்களால் சம்பந்தம் பெற்ற கையை உடையவனும், அலங்காரங்களுடன் கூடியவனுமான, மனையாளின் ஆபரணத்திற்காக கடல் தாண்டி செல்பவனும்.ஆவான் குரு நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– செண்பகத்திற் – கொப்பான முகமுள்ளவனும், சேடிகள், வேலையாட்கள், இவர்களுடன் கூடியவளுமான ஸ்திரீயாக மிகவும் உயர்ந்தவளும், கொடி இவைகளுடன் கூடின தெப்பத்தை உடையவனும் கடலில்…
இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சீத்தாபழம் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது.சீத்தாபழம். கிராமங்களில் வீடுதோறும் பயிரிடபட்டு இருக்கும் பழம் சீத்தாபழம் தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் வளர்க்கப்பட்டு வருகிறது.. இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்தது சீத்தாபழம்
கும்பம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் – எண்ணெய்கள், ஜலம் உணவு இவற்றின் லாபத்தில் கவலை அடைந்த மனதை உடையவன் , கம்பளத்துடன் கூடியதாகவும், பட்டு வஸ்திரமுடையதாகவும், மான் தோல் உடன் கூடியதாகவும் கழுகுக்கொப்பான முகமுடையதாயும், இருப்பது சனி நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ அக்னிதிரேக்காணம்– அழுக்கடைந்த துணியினால் சுற்றப்பட்டவள். சிரசில் மண் பாத்திரங்களுடன் கூடியது. காட்டில் பொசுக்கப்பட்ட வண்டியில் உலோகங்கள் எடுக்கப்படுவது…
” ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம். தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற, சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி, ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார். வந்தவர்களுக்கோ…
மகரம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ நிகடத்திரேக்காணம்– மயிர்கள் அடர்ந்தவன், மீனின் பல்களை போல் பல் அமைந்தவன், பன்றியின் தேகம் போன்ற அமைப்பு உள்ளவன் மாடு கட்டும், தும்பு, வலை விலங்கு இவைகள் தரித்தவன் பயங்கர முகம் உள்ளவன். சனி நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– கீதம், வாத்தியம் முதலிய கலைகளில் சமர்த்தானவன் தாமரை இதழ் போல் நீண்ட கண்ணுள்ளவள் கருத்த நிறம்…
தனுசு 1 முதல் 10 பாகைக்குள் — நரநாற்கால் ஆயுததிரேக்காணம்– மனிதனின் முகம் உள்ளது, குதிரைக்கொப்பான சரீரம் ஆஸ்ரமம் வேள்வியில் பங்கு பெறும்அமைப்பும் உண்டு. புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– மனதைக் கவரக் கூடிய அமைப்பு, செண்பக புஷ்பம், தங்கம் இவற்றிற்கொப்பான நிறமுள்ளவளும், கடலில் விளையும் பொருள்களை தரித்தவளும், பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும் ஆவாள். செவ்வாய் நாயகன். ஆண் கிரகம் பலம் – தொப்புள்…
அன்பு சார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை அவரவர்கள் அறிய தன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சார பலன், அஷ்ட வர்க்கம், மூர்த்தி நிர்ணயம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கோசார கிரகம், தொடும் நிலை அல்லது அதை நோக்கி நகரும் நிலை அல்லது அதை விட்டு விலகி நகரும் நிலை இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு பலன் அறிந்தால் அதிகபட்சமான சரியான பலனை அறிய முடியும் என்பது ஜோதிட வல்லுனர்களின் அபிப்பிராயம். சிந்தித்துப் பார்த்தால் சரியென்றுதான்…
ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை.ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக்…
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதற்குடைய சூரியன் நீச்சம் அடைந்திருந்தால் பிதுர் தோஷம் உண்டு. இப்படி அமைய லக்னம் தனுசு ஆக அமைந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு. மேஷ லக்னத்திற்கு நாலுக்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீச்சமடைந்து எட்டில் இருக்கும் போது மாதுர் தோஷம் உண்டு. சிம்ம லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் கடக ராசியில் 28 பாகையில் அமைந்திருந்தால் சகோதர வர்க்கத்தால் தோஷமும் கிராம தேவதைகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ரிஷப லக்னத்திற்கு ஐந்துக்குடைய புதன் மீனத்தில் நீச்சம் பெற்று 15…
விருச்சிகம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– வஸ்திரம் ஆபரணம் சரிவர இல்லாதவளும் தனது இருப்பிடத்திலிருந்து விலகியவளும், பாம்பினால் கடிபட்ட பாதத்தையுடையவளும் அழகு பொருந்தியவளுமான தோற்றம், கடலில் இருந்து கரையை நோக்கி வரும் தன்மை செவ்வாய் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– ஆமை, குடம் இவற்றிற்கொப்பான சரீரமுடையவள் பாம்பினால் சுற்றப்பட்ட ஸ்திரீயானவள். கணவனுக்காக இடம், சுகம் இவைகளை விரும்புகிறாள். குரு…
துலாம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம்– வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும் தராசை கையில் தாங்கியவன், சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும், படியால் அளப்பதிலும் சமர்த்தன், சுக்கிரன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சிதிரேக்காணம் – கழுகு முகம். பசிதாகம் உள்ளவன், பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன். மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும் சனி நாயகன் ஆண்…
கன்னி. 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– புஷ்பம் நிரம்பிய குடத்துடன் அழுக்கடைந்த வஸ்திரத்தால் மறைக்கப்பட்ட சரீரமுடையவளாகவும், வஸ்திரம், தனம் இவற்றின் சேர்க்கையை விரும்புவளாகவும் தந்தை வீட்டை விரும்புவளாகவும் உள்ளவள். புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம், கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திர«க்கானம் — எழுதுகோலை தரித்த கருப்புநிறமுள்ள வஸ்திரத்தை தலையில் சுற்றப்பட்டவனும், செலவு வரவு இரண்டையும் செய்கிறவனும், ரோமங்கள் அடர்ந்த சரீரமுடையவனும் ஆயுதம் தரித்தவனும் ஆவான்.…
சிம்மம். 1 முதல் 10 பாகைக்குள் — நர நாற்கால் பட்சிதிரேக்காணம்– கழுகு, நரி, நாய் போன்றதாயும், அழுக்கடைந்த துணியுடன் கூடியவன். தாய், தந்தையை விட்டுப் பிரிந்தவன் போல கதறுவான். சூரியன் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திரேகாணம் – குதிரையைப் போல் உள்ளவன். வெண்ணிறமான மாலையை தலையில் அணிந்தவன். எளிதில் அண்ட முடியாதவன், ஆயுதம் தரித்தவனும் வளைந்த நுனி மூக்கை உடையவனும், மான்தோல்…
கடகம். 1 முதல் 10 பாகைக்குள் — நாற்கால் புருஷதிரேக்காணம்– இலை, கிழங்கு, பழம் இவற்றைத் தரித்தவனும், யானைக் கொப்பான சரீரமுடையவனும், காட்டில் வாசனை நிரம்பிய இடங்களில் வசிப்பவனும், பெருத்த கால் உள்ளவனும், பன்றிக் கொப்பான முகம் உள்ளவனும் ஆவான். சந்திரன் நாயகன் — ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– சிரசில் தாமரை புஷ்பங்கள் உள்ளவளும், சர்மங்கள் கூடியவளும், தனிமையான இடத்தை அடைந்தவளும் கதறும் குணம் உள்ளவளும்…
ஆப்பிள் பழம் ஆப்பிள் பழத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் சக்தி நிறைந்த பழமாகக் கருதப்படுகிறது. 30 சதவித தண்ணிரும், வைட்டமின் “சி” மற்றும் தாது உப்புகளும் நிறைந்தது. நெல்லிக்கனியோடு ஒப்பிடும்பொழுது இதன் சக்தி குறைவுதான். ஆப்பிள் பல வகையாக இருந்தாலும், சிவந்த நிறத்தில் மேற்பகுதியும் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழம் சிறந்தது. பயன்கள் 1, இரத்த சோகையை குணப்படுத்தும். 2. உடல் தோல் சுருக்கத்தை நீக்கும். 3. கண், பல் வியாதிகளை குணப்படுத்தும் 4. சிறுநீரகக்…
அன்னாசிப்பழம் இந்த அன்னாசிப் பழத்தின் அமைப்பு வேறுபட்டிருக்கும், 75 சதவிதம் தண்ணீர் கலந்துள்ள இந்தப் பழத்தின் உள் அமைப்பும் மிக வித்தியாசமாக இருக்கும், இது ஒரு காரல் தன்மையைக் கொண்டது, வைட்டமின் “சி”டிநிறைந்தது. பயன்கள் அன்னாசிப்பழம் பல், எலும்பு, தோல் வியாதிகளை குணப்படுத்தும், ஸ்கர்வி வியாதிக்கும் நல்ல மருந்து. வாரத்திற்கு மூன்று நாட்கள் பயன்படுத்தினால் போதும். நிமோனியா உள்ளவர்கள் நாள்தோறும் 200 கிராம் வீதம் தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
மிதுனம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்காணம் – நல்ல ரூபத்துடன் கூடியவள், நகை செய்வதில் பற்று உள்ளவள். சந்ததி இல்லாதவள். உயர தூக்கப்பட்ட கைகளை உடையவள். மாதவிடாய் தோஷம் உள்ளவள் ( அ) காம பீடையுள்ளவள், ஊசியால் செய்யக்கூடிய நெசவு முதலிய காரியத்தை விரும்புவாள். ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத பட்சி திரேக்காணம் – தோட்டத்தில் வசிப்பவன். கவசமுள்ளவன். ( கண்ணாடி போன்ற…
சப்போட்டாப் பழம் சப்போட்டா மற்ற பழ வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. அதன் தோல் அமைப்பு பொதுவாக எந்தப் பழத்திற்கும் இல்லை. இதில் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளது. அதிக நீர் சத்து உள்ளதால் இரத்தம் விருத்தியடைய பயன்படுகின்றது. இரத்தப் புற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது. பயன்கள் சப்போட்டா குணப்படுத்தும் வியாதிகள் 1, இரத்த சோகையைப் போக்கும் 2, உடலின் கருமை நிறத்தை மாற்றும் 3, இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும் 4, அதிக பேதி…
ரிசபம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ அக்னி திரேக்காணம் – சுருட்டையாகவும், அறுக்கப்பட்டதாகவும் இருக்கின்ற மயிர்களை உடையவன் குடம் போன்ற வயிறை உடையவன். ஓரிடத்தில் பொசுக்கப்பட்ட துணி உடையவன் தாகமுடையவன், அதிகமான சாப்பாட்டு பிரியன், ஆபரணங்களை விரும்பும் ஸ்திரீ சுக்கிரன் நாயகன். ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர நாற்கால் திரேக்காணம் – வயல், நெல், வீடு, பசு இவைகள் சம்பந்தமான பரீட்சை செய்யும்காரியங்கள்…
கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள். மேசம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ அங்காரக ஆயுத திரேக்காணம் பலன்கள். வெளுத்த துணி தரித்தவன், கருத்த நிறம் உள்ளவன். மிகுந்த பலசாலி போன்ற தோற்றம் உள்ளவன். பயப்படும்படியான தோற்றம். சிவந்த கண்கள் உள்ளவன். செவ்வாய் நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் கழுத்து வரை அதிபதி. 10 முதல் 20 பாகைக்குள் — நாற்கால் பட்சி ஸ்திரீ திரேக்காணம் ஆபரணம்,…
மச்சாசனம் பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் வளைத்து தலையைப் படத்தில் காட்டியபடி பின் வளைத்து, கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள் –– சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு…
ஹலாசனம் — HALASANAM சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும். அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில்வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்கவேண்டும். கால்கள் நேராக ஒட்டியவாறு இருக்கவேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுபபிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி…
ஜோதிட விதிகள் இலக்கினத்தில் சனியிருந்து சந்திரனாவது, சுக்கிரனாவது 7 – ல் நிற்க, அழிந்து போனவளுக்குப் பர்த்தாவாவான். இலக்கினாதிபதியுன் புதன் கூடினால், முந்தின பிள்ளை பெண் பெறுவன். இலக்கினாதிபதி பாபருடன் கூடி ராசியிலாவது 8 – லாவது இருந்தால், சரீரத்தில் சிரங்கு, கொப்பளம், அரையாப்பு கிரந்தி இரணமுள்டாகும். இலக்கினாதிபதி, சூரியன் செவ்வாய்கில், சுடு சாதத்தின் மேற் பிரியன். இலக்கினாதிபதி, சந்திரனாகில் தித்திப்பில் விருப்பன் இலக்கினாதிபதி புதனாகில், புளிப்பில் விருப்பன். இலக்கினாதிபதி வியாழனாகில் தயிரில் விருப்பன் இலக்கினாதிபதி சுக்கிரனாகில்,…
காந்த ஊசி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவதால், கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அதுபோலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும்வரை, அவன் வாழ்க்கை கடலில் திசை தப்பிப் போவதில்லை. — இராமகிருஷ்ண பரமஹம்சர் “ ” மலர்களிலே மணம் இருப்பதுபோலவே ஆண்டவனும் உன்னிடமே இருக்கிறான். இதை அறியாமல், தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான், புல்லில் தேடுவது போல் நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?” — கபீர்தாஸ் . “கடவுளை வணங்குதல் என்றால் என்ன?…
திருமந்திரமாலை பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில் அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே சிவபெருமான் விழுமிய முழுமுதலாம் பரனாய் நின்று தன் திருவடியான் உணரப்படும் உவமையிலாக் கலைஞானமாகிய அபரமும் மெய்ஞ்ஞானமாகிய பரமும் முறையே சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தார்க்கும், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானத்தார்க்கும் நீங்காது உடனாய் நிறைந்து அருளிச் செய்தனன். அங்ஙனம் அருளிச் செய்து உலகினில் சிவபுண்ணியங்களுள் எல்லாம்…
திருமணம் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும் சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது. குரு பலவீனமாகி…
மயூராசனம் மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப்பெயர். முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்த்துத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம். பலன்கள் – வாத…
வஜ்ராசனம் கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமிர்த்தி கம்பீரமாக உட்காரவும். நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும். 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம் ..பலன்கள் — வச்சிரம் போன்று திட மனது ஏற்படும் அலையும் மனது கட்டுப்படும். தியானத்திற்குரிய ஆசனம்
இறைவன் தாம் விரும்பியதைச் செய்கிறார். எவரும் அவரை அதைச் செய், இதைச் செய் எனக்கட்டளையிட முடியாது. அவர் அரசர்க்கெல்லாம் அரசர், சக்கரவர்த்திகளுக்கெல்லாம் மேலான சக்கரவர்த்தி, அவரது கட்டளைக்கும், விருப்பத்துக்கும் இணங்கி வாழ்வதே நாம் வாழ வேண்டிய வழியாகும். ” …
உத்தித பத்மாசனம் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது ஒருமுறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் செளகரியம்போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும். பலன்கள் – தொந்தி…
சர்வாங்காசனம் – விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் இருந்து கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு நாடியில் தொடும்படி உடலை உயர்த்தி கைகளை முதுகில் தாங்கி நிற்கும்படி ” L ” உருவில் நிற்கவும். சாதாரண மூச்சு நிலையில் கால்களின் பெருவிரல்களை இரு கண்களையும் அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும். 2 நிமிடத்திற்கு ஒரு முறையாக,…
விபரீத கரணி விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இணக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் (குண்டியை ) முதுகையும் உயரக்கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும் .ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஒரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட…
நவாசனம் நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்கவேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு . பலன்கள் — இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல்…
கோமு: என்ன பண்ணிட்டு இருக்க காமு: -ப்ளேன் பண்ணிட்டேன் இனி வொர்க்குள்ளே போக போறேன். கோமு – என்ன ப்ளேன் பண்ணீட்டே காமு – எப்படியும் இந்தியன் டீமில செலக்ட் ஆகணும்னு, கோமு அப்படியா வொர்க் என்ன பண்ணப்போற காமு – தினமும் பிராக்ட்டீஸ் கோமு – அப்புறம் காமு – அத்தனை தான் கோமு – அது மட்டும் போதுமா காமு – ஏன் அதுதான் பண்ணனும் அத தவிர வேற என்ன பண்ணனும். கோமு…
பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM. விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் – இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்துது ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் எக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுக்களைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியே விட் நிலையில்…
உணவு உண்ணும்முறைகள் 1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் . 2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும். 3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும் 4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்) 5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று…
உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும் . இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் ( விறைப்பாக இல்லாமல் ) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப் பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4…
விடுகதைகள் 1, கட்டை போலிருந்தவனை வெட்டிப்பிழிந்தால் ருசியோ ருசி, அது என்ன? 2. பாடி அழைப்பான் உறவை கூடி உணவை உண்பான், அவன் யார்? 3. ஒரு வாய் தண்ணீரை சுமந்தபடி உயரத்தில் நிற்கிறான், அவன் யார்? விடைகள் 1 கரும்பு 2 காகம் 3 தென்னை மரம்