அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82

தூது சகுனம் …..  ரோகியின் குணங்கள் தெரியக்காட்டி வைத்தியரிடத்தில் சென்று வைத்தியரை அழைக்க வருந்தூதனது லக்ஷணங்கள் மருத்துவர்கள் அநுசரித்து  சாத்தியா சாத்தியங்கள் அறிந்து ரோகியினிடத்திற்கு ஏகுகிறதற்கு லக்ஷணங்களை பூர்வருஷி சிரேஷ்டர்களால் சொல்லியதை இவ்விடத்தில் விவரத்து எழுதுகிறேன். ஏழு தினத்தில் மரணமடையும் தூத லக்ஷணம் …..  எந்த அழைக்கப்போகிறவன் கையில் மதுரமான பண்டங்களைக் கொண்டு வைத்தியனை அழைக்க ஏகுவானாகில், அந்த ரோகி ஏழு தினங்களில் மரணமடைவானென்று அறியவேண்டியது. நாலு நாழிகையில் மரணகுறி தூத லக்ஷணம் ……  ஒரு தூதன்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  81

மரண லக்கின திதிகள் …..  விருச்சிகம், மேஷம் லக்கினத்தின் நந்தாதி திதியிலும், மிதுனம், கன்னிகை இந்த லக்னித்தின் பத்திராதிதியிலும், கர்க்கடகலக்கினத்தின் ஜயாதிதியிலும், கும்பம், சிங்கலக்கினங்களின், ரிக்த திதியிலும், தனுசு லக்கினத்தின் பத்திராதிதியிலும், மிதுன லக்கின ஜய திதியிலும், மகர லக்கின பூரண திதியிலும் இந்த லக்கின திதிகளில் ரோகங்கள் உண்டாகிறதினால் ரோகியானவன் மரணமடைகின்றான். திதிகளின் விவரணம் …..  செவ்வாய்க்கிழமை கிருத்திகை நக்ஷத்திரம் நந்தாதிதி, புதன் கிழமை, ஆயில்ய நக்ஷத்திரம் பத்திராதிதி வியாழக்கிழமை, மக நக்ஷத்திரம், ஜயா திதி…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  80

மரண லக்ஷணம் …..  இரவில் சந்திர பிம்பத்தைக் காட்டினால் இரண்டு சந்திர பிம்பங்கள் இருக்கிறதென்றும் அல்லது பகலில் சந்திரி, சூரியர்கள் இருக்கிறார்கள் என்றும் இரவில் நக்ஷத்திரங்கள் தென்பட வில்லை என்றும் சிவப்பெருமான் தென்படுகிறறென்றும் மலையின் மேல் கந்தருவர்கள் பாடுகிறார்களென்றும் நாகலோகம் அதோயிருக்கிறதென்றம் சொல்லுவான் இவ்விகாரங்கள் பஞ்சதத்துவங்களின் ( பஞ்ச பூதம் ) கெடுதலினால் உண்டானது இவன் சீவிக்கமாட்டான் என்று அறியவும். ஒரு வாரத்தில் நோய் நிவர்த்தி குறி …..  மனிதர்களுக்கு புரட்டாசி மாதத்தில் உத்திர நக்ஷத்திரத்தில், தைமாத…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  79

நாலாவது விதம் ……  சிரத்தில் வியர்வைஉண்டாகிக் கொண்டு வாயிநிடமாகத்தானே மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதால் எட்டு நாடிகள் பலஹீனப்பட்டு சீதளமடைதலினால் அந்த ரோகி சீவிக்க மாட்டான் ( உயிரோடு இருக்கமாட்டான் ). ஐந்தாவது விதம் …..  மரணமடையும் ரோகிக்கு நாக்கு, மூக்குநுனி, இரண்டு புருவங்கள் தாலுதேசம் இவைகள் தென்படாது இவைகளுக்கு அருந்தததி என்றும் துருவம் என்றும் விட்சு திரிபாதி மாத்ரு மண்டலமென்றும் வேறு நாமதேயங்கள் ஆரியர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாவது விதம் …..  மனதானது பிரமித்தால் அவர்களது வார்த்தைகள் பிதற்றவாய்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  78

அசாத்திய லக்ஷணம் …..  வாதமானது பித்த ஸ்தானத்திலும், பித்தமானது கபஸ்தானத்திலும், கபமானது கண்டஸ்தானத்திலும் இருக்குமாகில் அகத்தியம் மரணம் சம்பவிக்கும்.  மேலும் இரவில் அதிகதாஹமும், பகலில் சீதளமும் கண்டத்தில் ( தொண்டையில் ) கோழை கட்டுதலும் ஹீனசுரமும் அதிகபேதியும் சுவாசத்துடன் கூடிய இருமலும், விக்கலும், பக்கசூலையும், உதரசூலையும் முதலிய துர் ரோகங்கள் இருந்தால் அவன் பிழைக்கமாட்டான். இரண்டாவது விதம் …….   மார்பு, கால், கைகள், நாசிகை முதலியது சீதலமாயும், சிரசு மாத்திரம் கொதித்துக் கொண்டிருந்தால் அந்த ரோகி ஜீவிக்கமாட்டான்.…

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங்கலம் என்ற ஊர் இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்  

பதினாறும் அருளும் ரம்பாபுரி நாதர்!

திருவள்ளூர் மாவட்டம், திருஇலம்பையங் கோட்டூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ஆலயம். இங்கே மேற்கு நோக்கி, தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீரம்பாபுரி நாதர் 16 ஒளிப்பட்டைகளுடன் கூடிய லிங்கத்திருமேனியராக அருள்வது, விசேஷ அம்சம். இவரைத் தரிசித்து வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர்

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது

ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்

சிங்கிரிகுடி தலத்தில் 16 கைகளுடன் திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து எழுந்தருளியுள்ளார். நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 25

நமது மதம்தான் உண்மையான மதம். ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையானவர் இந்த உலகம் பொய்யானது, கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல, உங்கள் அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது, வாழ்க்கையே பல நேரங்களில் தீமையாகத்தான் இருக்கிறது என்று அது கூறுகிறது. எனவேதான் நமது மதம் உண்மையானது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 24

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! நமது மகத்தான லட்சியம் அதுவல்ல என்று நமது மதம்தான் கூறுகிறது. சில அடிகளுக்குள் அடங்கிவிடுகின்ற பூமியாகிய இந்தக் கோளம் ; நமது மதத்தின் காட்சியைக் கட்டுப்படுத்தவில்லை. நமது மதத்தின் லட்சியம் இவைகளுக்கு அப்பால், இன்னும் அப்பால் உள்ளது; புலன்களுக்கு அப்பால், இடத்திற்க்கு அப்பால், காலத்திற்கு அப்பால் இன்னும் அப்பால், ஆன்மாவின் கடல்போல் பரந்து விரிந்த மகிமையில் இந்த உலகம் சூன்யமாகி, பிரபஞ்சமே ஒரு துளிபோலாகின்றன அந்த இடமே நமது லட்சியம்.  

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 23

நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தைவைத்துக் கொண்டே நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. நமது மதம் மட்டுமே உண்மையான மதம். ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும் புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை வாழ்வின் அனைத்துமாகக் கொள்ளக் கூடாது,

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 22

நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை, பலசாலிகளைப் பலவீனமானவர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான். நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை. தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி , மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது. எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது, வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில் என்னதான் இருக்க முடியும் என்று…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 21

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம், அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம். கடவுள், மதம் என்பதெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான். அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது, இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ? நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை, அது நமக்கு காசு…

காந்தளூர் சாலை போர் 1

சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ படையானது.  ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டது. ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார், சேர, பாண்டிய ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர் சாலையில் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி என சொல்லப்படுகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 4

 பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படி வாழும்போது இயல்பாகவே உடல் தோற்றம், நிறம் போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு மாறிவிடுகின்றன, இதை பரிணாமவியல் கொள்கையில் ஒரு பகுதியாக டார்வின் விளக்கு இருக்கிறார் தற்கால மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து 65,000 ஆண்டுகளுக்குமுன் இந்தியா வடக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது. அந்த காலத்தில் இருந்த நிலப் பாலங்கள் வழியாக வெவ்வேறு கண்டங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றடைந்தார்கள். இந்த பரவல் மத்திய தரைக்கடல் நாடுகள் வழியாகவே நடைபெற்றிருக்க வேண்டும்.…

நவீன மனிதர்கள் தோற்றம் 3

மரபணு ஆதாரங்களும் ஆப்பிரிக்காவே மனித குலத்தின் தாய்மடி என்பதை உறுதிப்படுத்துகின்றன. அப்படியானால் இன்றைக்கு உலகில் வாழும் மனிதர்களிடையே இத்தனை நிறங்கள், தோற்ற வேறுபாடுகள், உயர வேறுபாடுகள் எப்படி வந்தன? எனக் கேட்கலாம், ஒரு குழு தன் தாய்நிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறொரு நிலப்பகுதியில் குடியேறிய பிறகு, புதிய நிலத்தில் நிலவும் கால நிலை, தட்பவெப்பநிலை, புவியியல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப தகவமைத்து வாழ தொடங்குகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 2

ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கில் உள்ளது, போட்ஸ்வானா, இந்த நாட்டின் வடபகுதி, இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்து, இன்றைக்கு பாலைவனமாக மாறிவிட்ட மக்கடிக்கடி-ஒகவாங்கோ என்ற பகுதிதான் நவீன மனிதர்களின் தாய்மடி, கோய்சான் பழங்குடிகளிடம் நடத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆய்வுவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் ஒன்று எத்தியோப்பியாவின் ஒமோ கிபிஷ் என்ற இடத்தில்  கிடைத்துள்ளது.   இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை, வாலில்லா குரங்குகளுக்கும்,…

நவீன மனிதர்கள் தோற்றம் 1

நவீன மனிதர்கள் தோன்றிய இடம் எது’ என்பது குறித்த ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில்தான் அது நிகழ்ந்தது என்றாலும் குறிப்பாக எந்த நிலப்பகுதியில் மனிதர்கள் தோன்றினார்கள் என்பதை நமது அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிலவேளை முட்டாளாக

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.  (1) மதத்தலைவர்.     (2) வழக்கறிஞர்.  (3) இயற்பியலாளர்.  முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. “கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?” என வினவப்பட்டது.  ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்.மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர் மதத்தலைவர் தப்பிவிட்டார்.  அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார்.…

நாம் தான் நிர்மாணிக்கிறோம்  

ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு வேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர். “எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும்கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?” என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு…

கறுப்பு கலர் 

 ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை மேலே பறக்கும் பலூன்கள். அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தான். மெல்ல பலூன்காரரிடம் வந்தான். “இந்த பலூன்கள் என் லாமே மேலே பறக்குமா?” என்று கேட்டாள். “ஒரு பறக்குமே. என்ன விஷயம்?”  பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?” என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி,  சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை. “ஏம்மா கேக்குற?   இல்ல,…

 ஒரு மாபெரும் கூட்டம் இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று. கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர் எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர் அந்தக் குறிப்புகளைப் படித்து விட்டார். அந்தக் குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக இருந்தது. …

போர்க்கள யானை

பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையி ல் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கி இருந்தான் பாகன்.  ஒரு நாள் போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டு இருந்த…

சுந்தர யோக சிகிச்சை முறை 113

ஒழுங்கான உணவுப் பழக்கங்களை நம்பியே மலப்போக்கு வழியை அமைத்துள்ளது. டாக்டர்களெல்லாம், இந்தப் பேதி வஸ்துக்கள் கெடுதலென்று பகிரங்கமாகக் கூறுகிறார்கள். இவைகள் கருவிகளை உறுத்தி வதைப்படுத்துகின்றன. பேதி சிகிச்சை பெருங்குடலுக்குத் தேவை! அதற்க நேராக அளிக்கப்படாமல் வாய் வழியாக இவைகளைக் கொட்ட வேண்டியிருக்கிறது கேட்டீர்களா கதையை! குறத்தி பிள்ளை பெறவும் குறவன் காயம் தின்றானாம்! இவனுக்கு என்ன கிடைக்கும்  வயிற்றெரிச்சல், வாயு, வாய்புண்! இவைகள் தாராளமாகக் கிட்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 112

பேதி வகை – வேறு சிகிச்சையே இல்லாவிட்டால், பெருங்குடலைப் பலி கொடுக்கலாம். அவ்வளவு மோசமில்லாத கேசுக‍ளுக்கு வழியாயில்லை நேர்வாளம் இருக்கும் வரை என்ன சார் பயம்?”  எனக்கொக்கரிக்கலாம்.  மலக்கழிவுடன் பிராணனும் கழியக்கூடும்! நம்மையெல்லாம் நம்பித்தானே “ ப்ரூட் சால்ட்” உண்டாக்குகிறான்”!.  நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா சார்?” என்று உள்ளம் உருகட்டும் “ என்ன சார் ! விளக் கெண்ணை சாப்பிட்டால் குளுமை, சுகம் என்கிறார்களே?” என்றும் வினவலாம். ஆனால் நேர் வாளத்திற்கும், சால்ட்டுக்கும் விளக்கெண்ணெய்க்கும் அடிமையாவதற்காக இயற்கை…

சுந்தர யோக சிகிச்சை முறை 111

 நூற்றில் ஒருவனுக்கு மலச்சிக்கல் என்றால் குடலை அறுத்து விட சட்டமிடலாம். ஏறக்குறைய நூற்றில் தொண்ணூறு பேருக்கு மலச்சிக்கல் இருப்பதனால் எத்தனை பேர் குடல்களை அறுத்தெறிவது கோடிக்கணக்கான டாக்டர் “ லேன் “ கள் இருந்தாலுமே வேலை தீராதே!

சுந்தர யோக சிகிச்சை முறை 110

இதுவரை வெளிப்பட்ட ஆராய்ச்சியிலருந்து, இப்பெருங்குடலுக்கு வேலை இருக்கிறதென்று அறிகிறோம். சீகத்தைச் சார்ந்து உயரும் குடல்பாகத்தில், இழுக்கப்படாத சில உணவுச் சத்துக்கள் கிரகிக்கபடுகின்றன. மேலும் மாமிச பட்சிணிகளைக் காட்டிலும், மரக்கறியை அண்டி நிற்கும் மனிதனின் குடல் மிகவும் நீண்டிருக்கின்றது. சுமார் ஐந்தடி நீளமுள்ள இந்த பாகத்தில் நமக்கு விளங்காத  அவசியம் அமைந்திருக்க வேண்டும் டாக்டர் கீத் ( Dr.KEITH ) துரை இதை அலட்சியம் செய்ய முடியாதென்று கூறுகிறார்.

சுந்தர யோக சிகிச்சை முறை 109

பெருங்குடல் இருப்பதால் மலம் தங்குகிறது, மலத்தால் நோய் உண்டாகிறது. குடலையே அறுத்து எறிந்து விடுவது, உத்தமமானதே என்று கூறுகின்றார். டாக்டர் அர்ப்பத்நாட்லேன், தலை வலித்தால் தலையையே வெட்டிவிடுவதா? டாக்டரின் எண்ணத்தில் பெருங்குடல் அனாவசியப் பொருள்!  விஷயமின்றிப் பருத்துத் தொங்கியிருப்பதாக யோசனை இயற்கையின் செய்கை காரணமற்றதென்று யாரால் கூற முடியும் நம் மூளைக்கு எட்டாமல் இருக்கலாம்.

வியாழன் 10

குரு லக்னத்தில் உள்ளவர்கள், ஆசிரியராக, கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகராக, பெற்ற பிள்ளைகளிடம், மிகுந்த பாசமுள்ளவராக திகழ்வர். வியாழன் எந்த லக்னமானாலும், பொதுவாக, 1,2,5,7,9,11ல் இடங்களில் இருப்பின் குரு பலம் உடைய ஜாதகமென கொள்ளவேண்டும். குரு பெண்களுக்கு 2ம் இடம், குடும்பஸ்தானம், 5ம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம், புத்திர ஸ்தானம் 9ம் இடம் பாக்கியஸ்தானம், புகுந்த வீடு பாக்கியத்தை குறிப்பிடுவதாகும். இந்த அமைப்பு அதிர்ஷ்ட இடமாகும்.

வியாழன் 9

குரு, சுக்ரன், சுக்ல பட்சத்து சந்திரன், புதன் ஆகியோர் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலேயே இருந்தால், அதிர்ஷ்டசாலியாக, நற்குணவதியாக இருப்பர். குரு பலம் என்றால் குறிப்பிட்ட ராசிக்கு கோசார ரீதியாக குருவானவர் 2,7,9,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் ஆகும். குரு உச்சமாக கடகத்தில் நின்றவருக்கு ஒரு தொழிலில் நிச்சயம் இருப்பர், அல்லது தனியார் துறை பள்ளியில் ஆசிரியராகவாவது தொழில் செய்வர்.

வியாழன் 8

குரு மகரத்தில் இருக்கப் பிறந்தவர்கள் பலவீனமாக இருப்பார்கள். அறிவாற்றல் குறைந்திருப்பார்கள், அளவோடு செல்வமும், மகிழ்ச்சி ஏற்படும். குரு கடகத்தில் இருந்தால் சரீர நலம் ஏற்படும்.  தோற்றப்பொலிவிருக்கும், கல்விஅறிவு, இனிய சுபாவம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குரு 5, 9ல் இருந்தால் ஜாதகர் பிள்ளைகளை அதிகம் விரும்புவார்.

வியாழன் 7

குரு 9ம் இடத்தில் இருப்பின் நிர்வாக படிப்பில் நாட்டம் ஏற்படும். வேதம், சாஸ்திரம் போன்ற கல்வி துறைகளிலும் தேர்ச்சி உண்டாகும். குரு பலமாக 5ல் இருந்தால் அறிவாளியாகவும், நல்ல கல்வியும், உன்னதமான ஸ்தானத்தை வகிப்பர். குருவும், சந்திரனும் கூடி 2ம் இடத்தில் இருக்க 9ம் வீட்டோன் அவர்களைப் பார்க்க, இந்த அமைப்புடைய ஜாதகர், சீரும், சிறப்பும் பெற்று வாழ்வர். குரு,சனி, கேது மூவருமே வேத, வேதாந்தங்களை சத்தியத்தின் தத்துவத்திற்கு ஆதார பூர்வமாகத்திகழ்கின்றனர்.

வியாழன் 6

குரு மேஷத்தில் இருந்தால் குடும்பநலமுண்டாகும், உடல்வலு இருக்கும் ராணுவத்தலைமை தாங்கக்கூடும், ஒரு ஸ்தாபனத்தில் தலைமை தாங்ககூடும். குரு தனபாவத்தின் அதிபதி இருவரும் 1,2,4,7,10 ஆகிய ஸ்தானத்தை அடைந்திருந்தால் சகல சம்பத்தும் நிறைந்தவராவர். குரு தனுசில் அல்லது மீனத்தினருக்காகவும் அது லக்னமாக அமையவும் அங்கு செவ்வாயும் சந்திரனும் கூடி இருக்கும் பொழுது பிறந்தவர் சிறந்த செல்வம் பெற்றவர். குருவும் சூரியனும் இணைந்து இருப்பின் குறிப்பிட்ட ஜாதகர் பெற்றோரை விட சீரும் சிறப்புமாக இருப்பர். பொருட் சேர்க்கை பாராட்டு புகழும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 39

நான் வலிமையுடையவன்  எல்லையற்ற ஆற்றலை கொண்டவன் என்ற நினைவும் அதை தொடர்ந்து கடினமான முயற்சிக்கும் குணமும் நமக்கு வேண்டும் இவைகளை நாம் பெற்ற இருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் சோகமோ, வருத்தமோ, துன்பமோ அடையமாட்டோம் நம்மிடம் இருக்கும் பல விதமான ஆயுதங்களில் மிக முக்கியமான சிலதை பட்டியல் இட்டால் அது மனநலம், அறிவின் தீட்ஷண்யம், விவேகம், பொறுமை, நேர்மை, வீரம், அன்பு, கருணை இரக்கம் இப்படிப்பட்ட ஆயுதங்களின் துணை நாம் நம்மை எந்த இக்கட்டான சூழ்நிலைகளையும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 38

இந்த பூமியில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற கனவிலும் அந்த கனவு மெய்பட வேண்டும் என்ற பேராரர்வத்துடனேயே இருக்கிறது. ஆனால் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாத போது , வாய்ப்புகள் சரியாய் அமையாத போது வாய்ப்புகளை சரியாய் பயன்படுத்தாத போது மிகுந்த ஏமாற்றத்திற்க்கும் துக்கத்திற்கும் மனிதன் ஆளாகிறான் இதிலிருந்து மீள ஒரே வழி தான் உள்ளது அது  விவேகானந்தர் சொன்னது தான்

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 37

 நமக்கு நமது செயல் ஊக்கத்திற்குண்டான சக்தியை குறைக்காமல் பாதுகாக்கும் குறிக்கோள் நிறைவேறவில்லையென்றாலும் மிகப்பெரிய சோகத்தின் பிடியில் சிக்கமாட்டோம் என்ன கொஞ்சம் சந்தோஷத்தின் அளவு மட்டும் குறைந்து இருக்கும் அத்தனை தான். நம்மை ஏமாற்றத்தில் இருந்து காக்க உள்ள வழிமுறைகளில் இது மிகவும் முக்கியமானது ஆகும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 36

எந்த ஒரு குறிக்கோளை கொண்டிருந்தாலும் அதற்கு இணையான, மாற்றான ஒன்றை எப்போதும் சிந்தித்து செயல்படுத்த தயராக இருக்க வேண்டும் இந்த சூட்சுமம் நம்மை மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருந்து காக்கும் அதனால் நம்முடைய சோகத்தின் அளவும் குறையும் ஒரு குறிக்கோள் மட்டுமே நாம் கொண்டிருந்து எதிர்பாராவிதமாக நம்முடைய அணுகுமுறையில் உள்ள ஏதாவது தவறினால் அந்த குறிக்கோளை அடைய முடியாவிட்டால் நாம் மனதளவில் வாங்கும்  பின்னடைவுகள் நமது ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அழித்துவிடும் அதற்கு முன் நாம் பெற்ற அத்தனை…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 35

 காலத்தின் ஓட்டத்தில் பருவங்கள் மாறுவது போல மனிதனின் வாழ்க்கை பயணத்திலும் சூழ்நிலைகள் அறிவு, அனுபவம் காரணமாக பல பருவங்களை மனிதன் கடக்கின்றான். ஒவ்வொரு பருவத்திலும் விருப்பு, வெறுப்புகள் ஆசை, நிராசைகள் மாறிக்கொண்டேயிருப்பதை நாம் காணலாம் இதிலிருந்து, நாம் புரிந்து கொள்ளவேண்டியது மாறுதல் நிலையானது அந்த மாறுதலில் நமக்கு பிடித்த மாறுதலை உருவாக்க உண்டான யுக்தியே நான் முன்னமே சொன்ன கற்பனா சக்தி, இந்த கற்பனா சக்தியின்  துணையை சரியானபடி புரிந்து அதை செயல்படுத்தும் வழி வகைகளையும் நன்கு…

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 20

பிற நாடுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் எத்தனையோ தேவைகளுள் மதமும் ஒன்று. நான் அடிக் கடிப் பயன்படுத்தும் ஓர் உவமையைக் கூறுகிறேன்; சீமாட்டியின் வரவேற்பறையில் பல்வேறு பொருட்கள் இருக்கும், ஐப்பானிய ஜாடி ஒன்றையும் வைப்பது இந்நாளில் ஒரு நாகரீகம் ஆயிற்றே! அதை அவள் வாங்கியே தீர வேண்டும், அது இல்லாமல் வரவேற்பறை நன்றாக இருக்குமா என்ன! அதைப்போல், அன்பர்களே, பிற நாட்டினருக்கு வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அதனை முழுமையாக்க மதம் என்பதும் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. அதற்காக…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 19

அத்தகைய மதத்தை, எதிர்விளைவாக அதே அளவு சக்தியை எழுப்பாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல், உங்களால் விட்டுவிட முடியுமா ? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது கூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை தவிர  ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 18

வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது. நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களுக்கு நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம் அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 17

நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 16

எனவே தாங்கள் விரும்புவதை அறிந்து கொள்வதில் இவர்களும் பிற நாட்டினரைப் போல் ஆர்வம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மதம் ஒன்றுதான் இந்தியர்கள் முழு நாட்டம் கொள்ளக் கூடிய ஒன்றாகும். ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை .

சினிமாவில்

சினிமாவில் குளோசப், லாங்ஷாட், ஃபேட் இன் ஃபேட் அவுட், கிராஸ்கட் போன்ற பல தொழில் நட்பங்களை அறிமுகம் செய்தவர் கிரிஃபித் என்ற அமெரிக்கர், இப்புதுமைகள் தோன்றி 100 வருடங்கள் ஆகின்றன

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 4

வறுமையில் வாடிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு பிழைக்க சென்றனர். இடையில் தரகர்கள் ஆசைகாட்டி அங்கு சென்றால் சீக்கிரமாகவே பணக்காரர்கள் ஆகலாம் என்றனர் மக்களும் ஏமாந்தனர் அங்கு தினக்கூலியாக ரப்பர், காபி இலைகளைப் பறித்து வேலை செய்து வந்தனர் மிகவும் மோசமாகவே அவர்கள் நடத்தப்பட்டனர். அதன் பின் தமிழகம் இந்த மாதிரி ஒரு பஞ்சத்தை பார்த்ததில்லை.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 3

அரசாங்கம், வசதியுள்ளவர்கள் மக்களுக்கு உணவு, உடை _கொடுத்து உதவினார்கள். வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை பகுதிகளில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. பஞ்ச நிவாரண பணிகளில் ஒன்றாக ‘ பக்கிங்காம்’ கால்வாயின் ஒரு பகுதி வெட்டப்பட்டது.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 2

இந்த தண்டனையைப் பற்றி விசாரிக்க 1854ல் சித்திரவதை விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.  அதனுடைய விவாதத்தால் அரசாங்கம் தண்டனையை கொடுக்கக்கூடாது என்று அறிவித்தது 1876 – 78 – ம் ஆண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.  வட ஆற்காட்டில் உயிர் சேதம் அதிகம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் காட்டுக் கீரைகளை வேகவைத்து சாப்பிட்டார்கள்.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 1

தமிழகத்திற்கு கொடுமையான காலம் என்று ஒன்றிருந்தது. அது வரியும் பஞ்சமும் ஒன்று சேர்ந்து மக்களை வாட்டிய காலம். அப்போதெல்லாம் வரி வசூல் செய்ய அதிகாரிகள் இருந்தனர் அவர்கள் வீடுகளுக்கு சென்று வரி கேட்டால் கொடுக்காதவர்களுக்கு அவர்களே தண்டனையும் தரக்கூடிய அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர் தண்டனைக்குள்ளானவர்கள் அதிகம்பேர். அந்த தண்டனையின் பெயர் ‘ அண்ணாந்தாள்’. அப்படியென்றால் வரி கட்டாதவர்களை கைகளையும், கால்களையும் பின்னால் சேர்த்து கட்டி கொளுத்தும் வெயிலில் நிறுத்தி விட்டு, சவுக்கால் அடியும் தருவார்கள்.  இது பற்றி அரசாங்கத்துக்கு…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 49

11 – க்குரியவர் 4 – இல், 4 – க்குரியவர் 9 – இல், 5 – க்குரியவருடன் சேர்க்கை, நஞ்சை, புஞ்சை நிலம் வாகனம் உண்டு. 8, 10 – க்குரியவர் சேர்க்கை பெற்று, 10 – க் குரியவர் வலுத்து 4 – ஆமிடத்தை பார்த்தால் நிலம் கிட்டும் ஆடம்பரமான வீடு உண்டு. 4 – ல் 7 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று 4 – க்குரியவர் மறைவு பெற்றால்,…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 48

3, 6, 8, 12 – இல் சந்திரன் இருப்பினும் அல்லது   3, 6, 8, 12 – க்குடையவர், சந்திரனுக்கு 3, 6, 8, 12 – லிருப்பினும் இவர்கள் திசாபுத்தி காலங்களில் வாகனம், நிலம், வீடு தனம் சேர்க்கை ஏற்படும். 4 – க்குரியவர், சந்திரன் 3, 6, 8 லிருப்பின் செல்வம் நிலைக்காது. 4 – ல் சூரியன், 4 – க்குரியவர் உச்சம் பெற்று சுக்கிரன் சேர்க்கை பார்வை பெற்றால், 30…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 47

4 – க்குடையவர் நின்ற நவாம்சாதிபதியின் திசையில் அல்லது 4 – க்குரியவர் திசையில் தந்தைக்கு கண்டம் 4 – இல் இருப்பவரின் திசையில் ஏற்படலாம். 4 . ல் சனி, செவ்வாய் சேர்க்கை மனைவிக்கு துர்தேவதா பயம், இட பயம் ஏற்படும். 4– க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – இல் இருப்பின் செல்வந்தர்.  4 . க்குரியவர், 1, 7 – லிருப்பின் அனேக வித்தை அறிவான். பிறர் சொத்தை அழிப்பான். சபையில் ஊமையாக…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  46

குருவும், 4 – க்குடையவரும் கூடி சந்திரனுக்கு 4 – இல் நிற்க, 7, 3 அந்த ராசியாதிபதி லக்கினத்திற்கு 4 – இல் நிற்க மேற்படி பலன். 4 – க்குடையவர், குரு ஆகியவர்கள்  நின்ற ராசியாதிபதி, பகை அஸ்தமனம், நீச்சம் அடைந்தால் பசு தங்காது பால் கிடைக்காது. 9 – இல், 4 – க்குடையவர், சுக்கிரன் பார்வை பெற்று நிற்க, 9 – க்குடையவர் 4 – ல் மாறி நின்று சுபர்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 45

12 – க்குடையவரோடு எத்தனை கிரகங்கள் கூடி இருக்கிறதோ அத்தனை வீடுகள் உண்டு. இவர் சுபத்தன்மை பெறவேண்டும். சந்திரனுக்கு, 8, 4 – க்குடையவர்களும் சுக்கிரனும் கூடி 4 – இல் நிற்க கூரை வீடு, 4 – ஆமிடத்திற்கு இரு பக்கமும் பாபிகள் நிற்க மேற்படி பலன். ஆட்சி பெற்ற சந்திரனோடு 4 – க்குடையவரும் சுக்கிரனும் கூடி நிற்க, குரு பார்க்க சிவந்த பசுவின் பாலை சாப்பிடுவார்.  4 – க்குடையவர் சுபராயிருந்து, 5…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 44

2, 4 – க்குடையவர் 4 – இல் நிற்க, குரு சந்திரனுக்கு 2 – இல் மாறி நிற்க வித்துவான். 2 – க்குடையவர் 4 – ல் நிற்க, 4 – க்குடையவர் 2 – இல் மாறி நிற்க வித்துவான். 3, 9, 10 – க்குடையவர் மூவரும் 3 – இல் நிற்க, சுபர்கள் பார்க்க மேற்படி பலனே. 4 – ஆம் இடம் சுபர் வீடாகி, அதற்குரியவர் குருவோடு 9…

விமர்சனம் செய்யுங்கள்

விமர்சனம் செய்யுங்கள் அதே நேரம் வாழ்த்தவும் செய்யுங்கள் கேள்விகள் கேளுங்கள் அதே நேரம் பதில்களை நம்புங்கள் சொன்ன பதில்களை கண்காணியுங்கள் அப்போது பதில்கள் பயனுக்கு வரவில்லையென்றால் கண்டியுங்கங்ள கண்டனம் செய்யுங்கள் புகார்களை சொல்லுங்கள் அதே நேரம் புன்னகை செய்யுங்கள் புதியதை முயலுங்கள் அதே நேரம் தெரிந்ததை செய்து கொண்டே இருங்கள் முன்னேறி செல்லும் போது எதிர்படுவோரிடம் எல்லாம் நட்பு பாராட்டுங்கள் ஒரு வேளை சறுக்கி விழ நேர்ந்தால் கீழிருந்து தாங்கி பிடிப்பார்கள். தவறு செய்த ஒருவருக்கு நம்…

மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்

நாம் இளமையாய் இருக்கும் போது பணமிருக்காது. சரி கொஞ்சம் பணத்தை சேர்த்துட்டு ஜாலியா இருக்கலாங்கறதுக்குள்ள இளமை போயிடுது.  சரி மத்திய வயசுலயாவது தாராளமா செலவு செஞ்சு மகிழ்ச்சியா இருக்கலாம்னு நினைச்சா அப்ப நேரம் இருக்காது முக்கியமான விஷயம் நேரம் பணம் எல்லாம் இருக்கறப்போ மனசு இருக்காது.   ஒரு வேளை மனசு வெச்சாலும் உடம்பு ஒத்துழைக்காது, இந்த அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும் அப்படீன்னு நான் நினைக்கிறேன். எதையோ நெனைச்சு எதை, எதையோ துரத்திட்டு எப்பவுமே ஒடறதே…

பெற்றோர்களின் விருப்பமே 2       

 குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், எவர்களுடன் பழகுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களில் கண்டிப்பும், கண்காணிப்பும் இல்லாது போவது தவறுகளை கண்டிக்காமல் பாசம் மட்டும் மிகைந்து நிற்கும் பெற்றோர்கள் ஒரு நாள் கவலையும், கண்ணீரும் விட்டே தீர வேண்டும்.   அடங்கி இருப்பது அடிமை தனம் அல்ல என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்புடனும், உறுதியுடனும் சொல்லி கொடுத்துவிட வேண்டும்.   ஒரு தவறு செய்த பிறகு அதை திருத்தாதவன் இன்னுமொரு தவறு செய்தவனாகிறான் இது தொடர்ந்தால் வாழ்க்கையே தவறாகி விடுகிறது.

பெற்றோர்களின் விருப்பமே 1

பெற்றோரின் விருப்பமே நமது வாழ்க்கை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும் அப்படி உணர்ந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள். இன்றைய பெற்றோர்கள், பிள்ளைகள் உறவு ஏனோ தடம் மாறியே இருக்கிறது இது ஏன் காரணம் எதுவாக இருக்கும் என்ற சிந்தித்தால் தகவல் தொழில் நுட்பவளர்ச்சி அடுத்தது பொறுப்பை சொல்லி கொடுக்காமல், பிள்ளைகள் கஷ்டப்படகூடாது என்று நினைத்து வளர்க்கும் பெற்றோர்கள் இதில் பெற்றோர்கள் ஏமாறும் இடமும், பெற்றோரை குழந்தைகள் ஏமாற்றும் களமாகவும், தளமாகவும் இது அமைந்து விடுகிறது.

உரையாடலில் ஒரு பகுதி 64

 இன்றைய நிலை உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் நொடி பொழுதில் தொடர்பு கெள்ள சாதனங்கள் வந்து விட்டது.   ஆனாலும் சமுதாயத்தில் அன்பு குறைந்த கொண்டே போகிறது. அன்புடன் பழகுபவர்களக்கு அந்நியர்கள் யாருமில்லை எல்லாவற்றையும் வெறுப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் நேசித்துப் பாருங்கள் புது உலகம் தெரியும்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 8

அருள்மிகு  நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம் அருள்மிகு  திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம் அருள்மிகு  இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம் அருள்மிகு  அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் அருள்மிகு  திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 7

 அருள்மிகு  கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு  உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு  வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்  அருள்மிகு  காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் அருள்மிகு  மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 6

அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி அருள்மிகு  ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 5

அருள்மிகு  விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 4

 அருள்மிகு  சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால் அருள்மிகு  மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 15

ஐரோப்பாவின் பரபரப்பான அரசியல் மாற்றங்களையும் ஐரோப்பிய சமுதாயத்தில் நடைபெறும் எழுச்சிகளைப் பற்றியும் நம் குடியானவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு அவை எதுவும் தெரியாது. தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் இந்தியாவிலிருந்து பல வழிகளிலும் பிரிக்கப்பட்ட, இந்திய வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டிக்கப்பட்ட இலங்கை விவசாயி இலங்கை வயல்களில் உழைக்கின்ற அவர்கள்கூட, அமெரிக்காவில் ஒரு சர்வசமயப் பேரவை நடைபெற்றதையும் அதற்கு இந்திய சன்னியாசி ஒருவர் சென்றதையும் அங்கு அவர் ஏதோ சிறு வெற்றி பெற்றதையும் தெரிந்து வைத்திருக்கிறான்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 14

சாதாரண இந்தியர்கள் பல விஷயங்களை அறியாதவர்களாகவும் புதிய செய்திகளை அறிவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் இருப்பதைக்கண்டு ஒரு காலத்தில் நான் வெறுப்படைந்தது உண்டு. இப்போது அவர்களின் போக்கிற்கான காரணம் எனக்குப் புரிந்துவிட்டது அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைப் பற்றிய செய்திகளை அறிவதில் , என் பயணத்தில் நான் கண்ட மற்ற நாட்டு மக்களைவிட அவர்கள் பேரார்வம் காட்டுகிறார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 13

சென்னை மக்கள் எனக்கு அமெரிக்காவில் அனுப்பிய அன்பான பாராட்டுரைக்கு நான் அனுப்பிய பதில் உங்களுள் பலரது நினைவில் இருக்கும். நம் நாட்டின் ஒரு குடியானவன், மேலை நாட்டிலுள்ள சீமான் ஒரு வனைவிடப் பல வழிகளில் சிறந்த மத அறிவு பெற்றவனாக உள்ளான் என்று அதில் நான் குறிப்பிட்டிருந்தேன் . எனது அந்தச் சொற்கள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சரியாக இருப்பதை இன்று நான் காண்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 12

நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன். அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது , சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய்நாட்டின் அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும் அதன் தேசியவாழ்க்கை முழுவதும்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 11

கும்பகோணம் சொற்பொழிவு! 3 பிப்ரவரி 1897 அன்று சுவாமிஜி கும்பகோணத்திற்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் தங்கினார். அங்கு இந்து மாணவர்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. வேதாந்தப் பணி: மிகக் குறைந்த அளவே செய்யப்படுகின்ற மதப்பணி கூட மிகப் பெரிய விளைவைத் தருகிறது – கீதை கூறுகின்ற இந்த உண்மைக்கு விளக்கம் வேண்டுமானால் எனது எளிய வாழ்க்கையைப் பார்த்தால் போதும். அதன் நிரூபணத்தை நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கண்டு வருகிறேன். எனது…

உங்கள் பிரச்சினைகளின்

உங்கள் பிரச்சினைகளின் அளவு..அவற்றைத் தீர்ப்பதற்கான உங்கள் திறனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை.. உங்கள் பிரச்சினைகளை மிகைப்படுத்தி உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

நம் வாழ்க்கையை

நம் வாழ்க்கையை கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் எதையாவது கற்றுக்கொள்கிறோம்..  சில பாடங்கள் வலிமிகுந்தவை.. சில வலியற்றவை.. வலி அல்ல இங்கு விஷயம் கற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதே விஷயம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வலியை பொருட்படுத்தாது உண்மையில் அனைத்தும் விலைமதிப்பற்றவை!

நேரம் ஒதுக்கி

நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் பழகுங்கள்.. வேலைகளை ஒதுக்கி பேசுபவரை நேசியுங்கள்! நேரத்திற்கும் வேலைக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்துகொண்டாலே இது சாத்தியம்

நம்முடைய இந்த நிலைக்கு

நம்முடைய இந்த நிலைக்கு நாம் தான் காரணம் என உணர்வோம். மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். பிரச்சனையை ஒரு பிரச்சனையாகப் பார்த்தால் மட்டுமே அது ஒரு பிரச்சனை.. உங்கள் கண்ணோட்டத்தை  மாற்றினால்.. பிரச்சனைக்கு.. பதிலாக வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள்!

செயலின் நோக்கம்

 ஒரு வீட்டுக்குப் பிச்சைக்காரன் ஒருவன் வந்தான். அந்த வீட்டுக்காரி உள்ளேயிருந்து அவனுக்கு அரிசியைக் கொண்டு வந்தாள். அதைத் தன் குழந்தையிடம் கொடுத்து பிச்சை இடச் செய்தாள். அடுத்த வீட்டுக்காரியும் அவள் செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பிச்சைக்காரன் தன் வீட்டு வாயிலுக்கு வந்ததும் அவளும் பக்கத்து வீட்டுக்காரி செய்ததுபோல் தன் குழந்தையின் கைகளில் அரிசியைக் கொடுத்துப் பிச்சையிட்டாள். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இறந்தனர். மேல் உலகத்தில் தீர்ப்பு, முந்தைய வீட்டுக்காரி சொர்க்கத்துக்கும், அவளைப் பார்த்துப் பிச்சையிட்ட…

ஜூடோ  பயிற்சி

 சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.   தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.  ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு…

இணைக்கும் செயல் 

 தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், “அப்பா! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.…

எடை அளவு

ஒருமுறை, ஒரு விவசாயி ஒரு பேக்கருக்கு வெண்ணெய் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு நாள், ரொட்டி செய்பவர் தான் கேட்ட அளவு சரியாக கிடைக்கிறதா என்று பார்க்க வெண்ணெயை எடைபோட முடிவு செய்தார். அவர் அளவு சரியாக இல்லை என்று கண்டுபிடித்தார் எனவே அவர் விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.  வெண்ணெயை எடைபோட ஏதாவது அளவைப் பயன்படுத்துகிறீர்களா என்று விவசாயியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு விவசாயி, “யுவர் ஹானர், நான் பழமையானவன். என்னிடம் சரியான அளவு இல்லை, ஆனால் என்னிடம்…

நஞ்சு

அந்த பெண்ணுக்குத் திருமணமாகி, தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு புது மணப்பெண்ணுக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.  கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் புது மருமகள் அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர் பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் மருமகள், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள…

உரையாடலில் ஒரு பகுதி 63

எல்லாவற்றையும் வெறுப்பதற்கு பதிலாக, அன்பையும், அரவணைப்பையும் அறியாததால் சமுதாயத்தில் வன்முறையாளர்கள் பெருகிவிட்டனர்.   இன்றைய காலகட்டத்தில் அன்பின் எல்லை சுருங்கி போனதால் உலகில் _கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற வன்முறைகளின் எல்லை பரந்து விரிந்து போய் கொண்டிருக்கிறது.   முன்பெல்லாம் கடிதம் எழுதப்படும் அது வந்து சேர நாட்களாகும் அந்த கடிதத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவோம் அப்படி இருந்த காலத்தில் அன்பு பலமாய் இருந்தது

காலத்தின் நிலை 2

காலத்தை வீணாக்கினால் வாழ்க்கையை அதாவது சரியான வாழ்க்கையை இழந்து விடுவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்துகொள்ளலாம் இப்போ என்ன அவசரம் என்று எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை காலம் நிச்சையம் தள்ளி வைத்துவிடும் யாருக்காகவும் எதற்கு வேண்டியும் காத்திருக்காது காலம். அதனால் கற்றலோ, கற்பித்தலோ, விளையாட்டோ, ஆலயவழிபாடோ, தவமோ, வேலையோ எதுவானாலும் உரிய காலத்தே செய்து பழவோம்

காலத்தின் நிலை 1

காலத்தின் தன்மையை தெரிந்து புரிந்து கொள், காலமே எல்லாம் அதாவது காலமே உன் உயிர் அதை உனக்கோ அல்லது அடுத்தவருக்கோ உபயோகப்படுத்தாமல் நீ வீணாக்கினால் உன்னையே நீ கொலை செய்தவன் ஆகிறாய். காலம் விலை மதிப்பில்லாதது, அதை வீணாக்கி விட்டுவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை பிடிக்க முடியாது. வீணாக்கிவிட்டு அழுது புரண்டு அரற்றினாலும் சென்ற காலம் சென்றது தான் நம்மாள் அதை பிடிக்க முடியாது. அதனால்தான், பெரியவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தார்கள் காலத்தே பயிர் செய்,…

உலகில் கடினமானது

உலகில் கடினமானது எத்தனையோ உண்டு அதில் சில அல்லது முக்கியமானதில் இது அமையும் முக்கியமாய் இதையும் வைத்துக் கொள்ளலாம்.   1. ரகசியத்தை காத்தல், 2. பிறர் செய்த தவறை மறப்பது, மன்னிப்பது அதாவது நம்மை வஞ்சித்தவரை நம்மை காயப்படுத்தியவரை, 3 ஓய்வு நேரத்தை மிக பயனுள்ள வழியில் கழித்தல். .

கோபம்

கோபம் என்பது உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, சுற்றுபுறம் சார்ந்த பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லாத சூழ்நிலை காரணமாக உண்டாகிறது கோபம் உண்டாக அவரவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதில் ஒன்று சிந்திக்காமல் செயல்படுத்தும் அதிர்ப்தி தான் கோபம், மேலும் பிறர் நம்மை தாழ்த்தும் போதும் உண்டாகும் எதிர்வினை  உணர்வே கோபம், எவனால் சிந்தித்து தனது கோபத்தை தனது கட்டுபாட்டில் வைத்து வெற்றி கொள்கிறானோ அவன் தனது வாழ்நாளின் மிக பெரிய எதிரியை வெற்றி கொண்டவன்…

செம்மொழிக்கான பதினோரு தகுதிகள்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள்  4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை   7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி தமிழ்..!

உரையாடலில் ஒரு பகுதி 62

சூன்யமான இந்த விண்வெளியில் இத்தனை நட்சத்திரங்கள் எப்படி தோன்றியது இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளில் பலவித கருத்துகளை சொன்னாலும் எதுவும் திருப்திகரமாய் இல்லை இயற்கையை சோதிப்பதில் மனிதன் இன்னும் வெற்றி அடையவில்லை காரணம் இயற்கையின் முன் மனிதன் அணுவிலும் அணு அதனால் யானையை கண்ட குருடர்கள் தங்களுக்கு தோன்றியதை சொல்லியது போல் விஞ்ஞானிகள் இயற்கையைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் பார்க்கும்  சூரியன் 1 ஆனால் அண்டவெளியில் இது போல் எத்தனையோ சூரியர்கள் நிலைமை இப்படி இருக்க…

உரையாடலில் ஒரு பகுதி 61

அன்றைய மனிதர்கள் அப்படியில்லையென்றே தோன்றுகிறது.  ஒரு 75 வருடங்களுக்கு  முன்  இருந்த இந்தியர்களின் மனோபாவம் இப்போது உள்ள இந்தியர்களுக்கு இருக்கிறதா நெஞ்சை தொட்டு சொல்லுவதாய் இருந்தால் இல்லையென்ற பதில் தான் வரும் ஏன்? எதனால் நாம் அதை இழந்தோம், இழந்ததும், இழந்து கொண்டிருப்பதும், நமது சுயத்தை என்று நமக்கு ஏன் தெரியவில்லை. அமெரிக்காவைப் பார், ரஷ்யாவை பார் அதை பார் இதை பார் இன்னும் என்னென்னமோ பார் என்று சொல்லி எல்லாவற்றையும் பார்த்து நாம் நம்மை தொலைத்துவிட்டோமே.…

உரையாடலில் ஒரு பகுதி 60

உறவுகளில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்து சில நாட்கள் ஒன்றாய் கழித்து விடைபெறும் போது   என்ன சாப்பிட்டோம் எங்கு சுற்றினோம் என்பது அல்ல முக்கியம். மனம் விட்டு எத்தனை பேசினோம் என்பது தான் முக்கியம்  

உரையாடலில் ஒரு பகுதி 59

உதட்டில் புன் சிரிப்பை தவழவிட்டு கொண்டுள்ளோரது துவேஷத்தில் வெந்து விகாரத்தோடு நசிந்து வரும் பந்தங்கள் இந்த உலகில் எத்தனை யாருக்கு தெரியும்? தெரியாவிட்டாலும் இருப்பது என்னவோ நிஜம் தான்.

உரையாடலில் ஒரு பகுதி 58

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தமானது அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற சுதந்திரம் வேண்டும்.  சில உண்மைகளை எத்தனை தாமதமாக அறிந்து கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை நல்லது, அதுவும் மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதை விட சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது ரொம்பவும் நல்லது.

உரையாடலில் ஒரு பகுதி 57

உடலில் ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை விரல் தான் உடலின் கண்களை திறக்க வல்லது.  பாலாடையின் மீது ஊர்ந்து போகும் சிற்றெறும்பின் கால் தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும், வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியே தான் நினைவின் ஊற்று கசிந்து கொண்டே இருக்கும் கண்ணுக்கு தெரியாமல் நினைவில் படறும் அந்த நறுமணத்திற்க்கு ஈடு சொல்ல உலகில் எந்த நறுமண பொருளையும் மனிதன் கண்டறியவில்லை.

உரையாடலில் ஒரு பகுதி 56

இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாக சமைக்க தெரிந்தது தான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. மண்ணும், மண்ணில் இருக்கும் தாதுக்களும் உடலினை என்னென்ன செய்யும் என்பதை அறிந்தாலே உணவு பழக்க வழக்கம் சரியாகிவிடும்.

உரையாடலில் ஒரு பகுதி 55

அறிவாலும், குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை விதிகளாலும், கட்டளைகளாலும் எடுக்க முடியாது மனிதன் எடுக்க வேண்டிய முடிவை சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம். கட்டளைகளால் கட்டியெழுப்பபடுவது தான் அரசாட்சி அதன் உறுப்புகள் அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதினாலேயே, எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது .எல்லோர் கையிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.

உரையாடலில் ஒரு பகுதி 54

மனித அனுமானங்களுக்கு அப்பால் காலம் இயங்கி கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறி கலங்கி போய்விடுகிறான். வேறு வழி, கதை சொல்லும் போது பெருகக் கூடியது, நினைக்கும் போது திரளக்கூடியது, மறக்க எண்ணும் போது நம்மை கண்டு சிரிக்கக்கூடியது வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலை கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்.

உரையாடலில் ஒரு பகுதி 53 

பேசாமல் இருந்து விட்டால் மறந்து அழிந்து போவது மொழி மட்டுமல்ல உறவுகளும் தான்.  உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் தளர்ந்து இல்லாது போய்விடும் இயற்கையின் நியதி அப்படி தான் இருக்கிறது அதனால் எல்லாவற்றையும் சரியான அளவில் உபயோகிப்போம்.  

உரையாடலில் ஒரு பகுதி 52

பல நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ அதையே அதிகம் நினைக்க வைக்கிறது. இதில் அன்பு கொண்டதோ அல்லது கோபம் கொண்டதோ, ஏமாற்றியதோ அல்லது ஏமாந்ததோ, இரக்கம் கொண்டதோ அல்லது கடுமையாய் இருந்ததோ, இணைந்து  இருந்ததோ அல்லது விலகிப் போனதோ, நம்பி இருந்ததோ அல்லது நம்பாமல் கெட்டதோ இப்படி பலதையும் மனம் மறக்க நினைக்கிறது.  ஆனால் பல சூழ்நிலைகளில் விதி அதிகம் நினைக்க வைக்கிறது.  என்ன கொடுமையடா சாமி.

உரையாடலில் ஒரு பகுதி 51

ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடியாது.  அப்படியே மதிப்பீடு செய்ய முனைந்தாலும் அந்த மனிதனின் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

அதிசயம் நிறைந்த ஆலயங்கள் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும் சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

எது மெச்யூரிட்டி 6

காணும் அனைத்திலும் பிறப்பு ரீதியாக இன ரீதியாக சாதி ரீதியாக மத ரீதியாக மொழி ரீதியாக பிரிவினையைப் பற்றியே முதலில் யோசிக்கும் சிந்தனையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் வெளியேறி கல்வி கற்று முன்னேறி பல பயணங்கள் மேற்கொண்டு பல ஊர்களை அடைந்து பல ஊர்  தண்ணீர் குடித்து பல மனிதர்களைக் கண்டு நம் அனைவருக்கும் நோய்/ வலி/ மகிழ்ச்சி/ மரணம்/ பிரிவு / காதல் ஆகியவை ஒன்றாக இருப்பதை உணர்ந்து வேற்றுமையை மறந்து ஒற்றுமையைப் பற்றி யோசித்தால்…

எது மெச்யூரிட்டி 5

நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்கக்கூடாது என்றும் மாற்றுக் கருத்துகளை பேசுபவரை எதிரி என்று நோக்கும் மனநிலையில் இருந்து நாம் மாறி மாற்றுக் கருத்துகளையும் கனிவோடு செவிமடுத்து அந்த கருத்துகளைப் பேசுபவரையும் அரவணைத்து அதில் உள்ள உண்மையையும் தேவையற்றதையும் வடிகட்டி ஆராய்ந்து ஒன்றாகப் பயணிப்பது தான்  மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 4

நம்மை யார் விமர்சித்தாலும் யார் நம் தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் கடுப்பாகி கண் சிவந்து விமர்சித்தவர்களை கல்கொண்டோ சொல் கொண்டோ தாக்க எண்ணுவதில் இருந்தும் மாறி நம் முன்னேற்றத்தில் நம்மை விமர்சிக்கும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்ந்து ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து நமக்கு நேரெதிர் கருத்துகளையும் மதித்து ஆராய்ந்து அதில் இருந்தும் பாடம் கற்று சுயமுன்னேற்றம் அடைவது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 3

ஒரு தோல்வியில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் ஒரு வெற்றியில் அனைத்தும் வந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஒரு வெற்றிக்குப் பின்னும் தோல்வி உண்டென்றும் ஒரு தோல்விக்குப் பின்னும் வெற்றி உண்டென்றும் உணர்வதில் உள்ளது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 2

ஒருவர் இதுவரை எவ்வளவு பட்டங்கள் பெற்றார் என்பதில் மெய்யான முதிர்ச்சி இருப்பதில்லை மாறாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் வெளியே வாழ்க்கை ஒரு பாடத்தை சர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கிறதே. . அந்த பாடத்தை படித்து வாழ்வு வைக்கும் தேர்வுகளில் வெற்றியோ தோல்வியோ மாறி மாறி அனுபவித்து சேமித்து வைத்திருக்கிறாரே ஒரு அனுபவம் அது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 1

மெச்யூரிட்டி என்பது வயதால் மட்டும் வருவதன்று. ஒருவருக்கு வயதாவதால் மட்டுமே அவர் முதிர்ச்சி அடைவதில்லை மாறாக அவர் அன்றாட வாழ்வில் எத்தனை பேரைக் கடந்து வந்திருக்கிறார் அத்தனை பேரும் மற்றும் அவர்களுடைய வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும் இவரது எண்ணங்களிலும் சிந்தனையிலும் என்னென்ன மாற்றங்களைச் செய்தன என்பதில் தான் மெச்யூரிட்டி வருகிறது.

பலவீனத்தை எல்லாம்

பலவீனத்தை எல்லாம் ஒப்பனைகள் அதிகம் பூசி பலமாக மாற்ற வேண்டாம்.. மனமுவந்து ஏற்றுக்கொண்ட பின் அவைகள் தானாகவே பலமாகிவிடும்! அங்கேயே தான் உள்ளன பகல்கள்.. எப்படியும் வந்தே தீரும் இரவுகள்.. அது அது அப்படியே இயங்கட்டும் இயைந்து கொள்ளுங்கள்! ஒடிந்த முருங்கை மரத்தின் கிளை மீண்டும் ஒரு மரமாகும்.. எடுத்து அதே தோட்டத்தில் நட்டு வையுங்கள்!!

தேட வேண்டாம் அவர்களை

விலகியது விலகியதாகவே இருக்கட்டும் விட்டுவிடுங்கள்.. மீண்டும் வந்தால் யார் விரிசல்கள் யாருடையது என்ற போர்கள் எழலாம்! பேசாமல் போன சொற்கள் பேசாமலே தீர்ந்து போகட்டும்.. காலம் தாழ்ந்து வந்த வார்த்தைகள் வெறும் நீராவிகள் நீண்ட நேரம் நிற்காது! சொல்லாமல் கொள்ளாமல் போனவர்கள் உண்மையில் தொலையவில்லை ஒளிந்து கொண்டனர்.. தேட வேண்டாம் அவர்களை வேண்டுமெனில் வந்துவிடுவார்கள்!

உரையாடலில் ஒரு பகுதி 50

அந்த அமைதியில் மனிதன் பழகிவிட்டான் என்றால் நிம்மதி அவனுக்கு என்றும் நிரந்தரம் இல்லாவிட்டால்  எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்பது சாஸ்வதம். ( என்று தேடி அலைவது ) எத்தனை பேர்களால் நான் நானாக எனக்குள் எனக்காக தன் பொருட்டு தானே அமைதியாய் இருக்கும் நிலையை அடைய முடிந்திருக்கிறது. அப்படி எந்த இரைச்சலும் இல்லாமல் _வேறு வெளி எந்த இரைச்சலும் கேட்காமல் ஆடாமல், அசையாமல், ஆனந்தத்தை அமைதியாய் பருகிக் கொண்டிருக்கும் நிலை எத்தனை பேருக்கு வாய்க்கிறது. எத்தனை…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  5

21 சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது. 22 கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது. 23 மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும். 24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  4

16 முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர். 17 தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும். 18 பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது. 19 கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும்…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  3

1 1வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர். 12 துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர். 13 ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும். 14 சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை,…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  2

6 திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைப் பெறுவர். 7 காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர். 8 சாவித்ரி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும். 9 சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகல ஆகம புராண…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  1

1 முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர். 2 தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர். 3 வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும். 4 லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய…

எல்லா “பிரச்சனைகளுக்கும் 

புன்னகை பிரச்சனைகள் “வருவதை தள்ளி போடும்..!! மெளனம் “பிரச்சனைகளே வராமல் தடுக்கும்..! எல்லா “பிரச்சனைகளுக்கும்  இந்த வாய் காரணம்..!!!

வாழ்க்கையில் கஷ்டங்களும்

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிகும் அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 34

மனித குலத்திற்க்கு தவம் செய்யாமலேயே கிடைத்த மிகப்பெரிய வரம் கற்பனா சக்தி ஆகும் அந்த சக்தியின் அளவை எதனைக் கொண்டும் அளக்க முடியாது அப்படி அளவற்ற ஆற்றலை முறைப்படுத்தி செயல்படுத்தினால் நம் வாழ்வு என்றும் ஆனந்தம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 108

 எல்லா பாகமும் விஷஸ்னானம் பெறவே வீரன், இருளன், காட்டேரியைக் போன்ற பலவித வியாதிகள்  ஒழியாக்குடி  புகுந்து கொட்ட மடிக்கின்றன. சீகத்தில் உண்டாகும் விஷய்ஙகள் சிறுகுடலுக்குள்ளும் உறிச்சென்று, அதன் சதைச்சுவர்கள் மூலம் கிரகிக்கப்பட்டு, குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்து விடுகின்றன. இந்தச் சீகம் இவ்வளவு மோசமானது! இப்பெருங்குடலின் மற்ற பாகங்கள் சாதுவல்ல. ஆனால் இதைப் போல் அபாயத்தைக் கொடுக்காது. அங்க மலம் தங்கக் கூடுமாகையால், கெடுதி உண்டு. வெட்டி விட்டால் – இந்த சீகத்தையே தொலைத்து…

வியாழன் 5

குரு உச்சம் பெற்று வர்க்கோத்தமாக இருப்பின் சகல பாக்யங்கள் பெற்று வாழ்வர். குரு ஆட்சி பெற்ற தனுர் லக்னக்காரகர்கள், சூரியனும், செவ்வாயும் 5ல் உள்ளவர்கள்.  உலகளவில் சாதனையும், ஆன்மீகத்துறையில் சேவைசெய்வர். குரு 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் வேதாந்தியாகவும், பேராசிரியராகவும், ஞானவழியில் வாழ்க்கை அமைப்பர். குரு மகர ராசியில் நீச நிலையை பெறுவர்.  அவர் மகரராசியில் வக்கிரகதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தால் நீசப்பங்கம் ஏற்படும். குருவுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் அரசாங்கப்பதவி கிடைக்கும்.

வியாழன் 4

வியாழன் ரிஷபத்தில் இருந்தால் நல்லசுகம் வாழ்வில் அமையும்.  இனிமையாக பேசுவார். பொதுமக்களிடையே செல்வாக்கு இருக்கும்.  தியாக குணம் இருக்கும். குரு 9ம் வீட்டோனுடன் இணைந்தோ 9ம் வீட்டோனை பார்க்கும் போது தியானம், யோகத்தில் ஈடுபாடும், தந்தை பெரும் பணக்காரராகவும் அறப்பணியில் நாட்டமும், ஞானவானாக இருப்பார். குருவானவர் நீசம்பெற்று லக்னத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் கவலைப்படுபவராக இருப்பார். குரு 5ல், 5ம் அதிபதி பலம்பெற்ற சுபர்பார்வை பெற்றால் மகன் உண்டு.

வியாழன் 3

வியாழன் 5லும், 5ம்பாவாதிபதி உச்சம், ஆட்சியில் நின்றிடில் புத்திர பாக்கியம் ஏற்படும். குரு பார்வை 5ம் பாவாதிபதியை கேந்திர, திரிகோணத்தில் நின்றிடில் புத்ர பாக்யம் ஏற்படும். குரு ஒற்றைப்படை ராசியில் 5 அல்லது 9ல் இருந்தால் சாதனையாளராகவும், தலைவராகவும் விளங்குவார். குரு பலமுடன் இருந்தால் வேத விற்பன்னராகி ஞானஒளி பெறுவார். குரு சிம்மத்தில் இருப்பின் கீர்த்தி பெற்றவர்கள், பலசாலிகள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், தலைமை தாங்குகிற தகுதி உடையவர்கள்.

வியாழன் 2

நீச வியாழனுடன் சூரியன் நின்றிடில் மித்திரர்களை பழிகாரர்களாக ஆக்கிவிடும். வியாழன் நின்ற இராசிக்கு அடுத்த ராசியில் சுக்கிரன் தனியே இருந்தால் மணவாழ்வு மகிழ்வுறும். குரு 12ல் இருந்தால் அவருக்கு அவரது குலதருமத்திற்கு மாறாக திருமணம் நடக்கும். வியாழனும், லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் கேந்திர, திரிகோணத்தில் இருப்பின் புத்ரபாக்யம் ஏற்படும்.

வியாழன் 1

கிரகங்கள் நம் விதியைப் பிரதிபலிப்பவர்கள். வியாழன் லக்னத்தில் நின்றிடில் எவருக்கும் நலம் செய்யும் நாட்டம் உண்டு.  சாஸ்திர சம்பிரதாயம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர். வியாழன், சனி, செவ்வாய் சேர்ந்திடில் குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும். வியாழன் லக்னத்தில் அமர்ந்தாலோ, அல்லது லக்னாதிபதியோடு குரு சேர்ந்தாலோ குரு நட்பு பாவத்திலமர்ந்து பார்த்தாலோ ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும். குரு 2வது பாவத்தில் இருந்தாலும், முதல் திருமணம் ஆகி, சில கால கட்டத்தில் 2வது மனைவியும் அமையும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 10

நண்பர்களே! உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணி விடாதீர்கள். மாறாக , உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்பதியையே அளிக்கிறது. அளவு கடந்த உற்சாகமே நமக்குத் தேவை.ஆனால் இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தீ அணையாமல் இருக்கட்டும். இந்தியாவில் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை. இத்தகைய உற்சாகம் வேண்டும். இனியும் இந்தச் சொற்பொழிவைத் தொடர…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 9

துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ? ஆனால் ஐரோப்பிய நாடுகளோ பிரச்சினைக்கு மறுபக்கத் தீர்வை எடுத்துள்ளன நல்ல வழியோ, தீய வழியோ ஒருவன் எவ்வளவு அதிகம் பொருள் சேர்க்கலாம், எவ்வளவு அதிகமாக அதிகாரம் இருக்க வேண்டும் போட்டி -இதுவே ஐரோப்பியச் சட்டம் ஆனால் நமதுதாகும், போட்டியின் ஆற்றல்களைத் தடுப்பதாகும், அதன் கொடுமைகளைக் குறைப்பதாகும், புதிரான இந்த வாழ்க்கைப் பாதையில் மனிதனின் பயணத்தை மென்மையாக்குவதாகும்

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 8

நமது தீர்வு துறவு, விட்டுவிடுதல், அச்சமின்மை, அன்பு. இவையே வாழத் தக்கவை. புலனின்பங்களை விடுவது ஒரு நாட்டை வாழச் செய்யும். இதற்கு வரலாறே சான்று ஏறக்குறைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன. சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன. ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் சூழ்நிலை மாற்றங்கள் என்று எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 7

பிரச்சினை இதுதான் -யார் வாழ வேண்டும்? ஒரு நாட்டை வாழவைப்பதும் பிற நாடுகளை அழிய வைப்பதும் எது? வாழ்க்கைப் போரில் வெற்றி பெற வேண்டுவது எது அன்பா, பகையா? போகமா, துறவா ? ஜடமா உணர்வா? வரலாறு காணாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் என்ன எண்ணினார்களோ அவ்வாறே நாமும் சிந்திக்கிறோம். எந்தப் பரம்பரையும் தலைநீட்ட முடியாத அந்தத் தொலைநாளில், மேன்மை மிக்கவர்களாகிய நமது முன்னோர்கள் இந்தப் பிரச்சினையில் தங்கள் பக்கத்தை எடுத்துக்கொண்டு, உலகிற்கு சவால் விட்டுள்ளனர்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 6

அப்படியானால் மக்கள் எதுவும் தெரியாதவர்களா, இல்லை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களா? இரண்டும் இல்லை. அவர்களின் பண்புடன் எது ஒத்துப் போகுமோ, எது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இருக்குமோ அதைப்பற்றி அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசியலும் பிறவும் வாழ்க்கைத் தேவைகளாக இந்தியாவில் ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய வாழ்க்கை வாழ்ந்ததும் வளம் பெற்றதும் மதம், ஆன்மீகம் என்ற அடிப்படைமீது மட்டுமே; இனியும் அவ்வாறே அது வாழும், வளம் பெறும் உலக நாடுகளின் முன் இரண்டு பிராச்சினைகள்…

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்  10

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரேவழி. ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து அதை அனுதினமும் நினைத்து அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம், எண்ணத்தை சீர் செய்து ஆழ்மன சக்தியை உணர்ந்து, ஏற்றமுடன் வாழ்வோம்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 9

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் காரணம் நம் ஆழ்மனம் நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம் நாம் விரும்பியதை அடைய ஒரே வழி நம் எண்ணங்களை சீர் செய்வது தான் அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான் ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது நல்லது எது….??? கெட்டது எது…??? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 8

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது…??? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது…??? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது….??? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும் நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 7

“உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது .”இது வரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும்,இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும், இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 6

இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது இருக்க நினைப்பவர்களுக்கு வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை மனித மனம்தான் அறிவு மனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 5

நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 4

நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது இதை உணர முடிவதில்லை ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இதுவும் உண்மை.” சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது…??? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்தது பிரபஞ்சம்தான் நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை,

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 3

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது ஆனால்“பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை நம்பித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அது உண்மை,  

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 2

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்த பின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம் அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும் நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும் மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாத, மாற விரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்1

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும் ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் வசிக்கப் பிறந்தோமா ??? அல்லது வாழப்பிறந்தோமா. ??? என்று

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 43

1, 4,9 – க்குடையவர்கள் மூவரும் கூடி 4 – இல் நிற்க, குரு லக்கினத்தைப் பார்க்க பொருள், லக்கினம் ஆடை, ஆபரணம், அரச சுகம் பெறுவார். சந்திரன் 4 – க்குடையவர், குரு, சுக்கிரன் நால்வரும் கூடி இருந்து ராசியாதிபதி நட்பு ஆட்சி உச்சம் அடைய மேற்படி பலன். சுக்கிரன் நின்ற ராசிக்கு 9, 10 – க்குடையவர்கள், லக்கினாதிபதியோடு கூடி 4 – இல் நிற்க, கணக்கில்லாத பொருள்கள், பூமி ஏவலாட்கள் உடையவர். குரு…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 42

சந்திரனுக்கு 4 – க்குடையவரும், லக்கினத்திற்கு 4 , 8 – க்குடையவரும் மூவரும் கூடி நிற்க, சனி, சந்திரன் பார்க்க தாய்க்கு மரணம் 4 – இல் சனி நீச்சமடைய, 8 – க்குடையவர் பார்க்க, 4 – க்குடையவர் நிற்க மேற்படி பலன். தேய்பிறை சந்திரன் 6, 8, 12 – இல் நிற்க, 8 – இல் , 4 – க்குடையவர் நிற்க, மேற்படி பலன். 6, 4 – க்குரியவர்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 41

4 – க்குடையவர் ஆட்சி பெற்று சந்திரனுக்கு திரிகோணத்தில் நின்றால் தாய்க்கு பூரண வயது. சந்திரன் 9 – இல் நிற்க, 9 – க்குடையவர் 4 – இல் நிற்க தாய்க்கு பூரண வயது. லக்கினாதிபதி 4 – க்குடையவரோடு கூடி 9 – ல் நிற்க, 7 – க்குடையவர் பார்க்க மேற்படி பலனே. 1, 4 – க்குடையவர் திரிகோணமடைய, லக்கினாதிபதிக்கு திரிகோணத்தில் குரு நிற்க, தாய்க்கு பூரண வயது.