எங்கு வன்முறை வரும் 2

வன்முறைக்கு காரணம் என்ன பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஏன் இல்லாமல் போயிற்று. ஆணவமும்,அகங்காரமும் மட்டும் இருப்பதினால் ஆணவமும், அகங்காரமும் மட்டும் ஏன் இருக்கிறது. அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் இல்லாததால் அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் ஏன் இல்லாமல் போயிற்று

எங்கு வன்முறை வரும் 1

எங்கு எதிர்ப்பு வராதோ, எவரால் பதிலுக்கு அடிக்க முடியாதோ, எவர் பதிலுக்கு அடிக்கமாட்டரோ, அவர்களிடமே வன்முறையை பயன்படுத்த எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஒரு கன்னத்தில் அறைந்த பின் மறு கன்னத்தை காட்டுபவரிடமே இப்போதைய தலைமுறை மட்டுமல்ல எந்த கால தலைமுறையும் வன்முறையை பயன்படுத்தியிருக்கிறது.

பெண் அனுபவ பொருள் 4

ஆண் அப்படி நகர இயற்கை வாய்ப்பை தரவில்லை. அந்த நிலையை ஆணே உருவாக்கி கொள்ளும் படிதான் இயற்கை வைத்துள்ளது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் குழந்தையாய், குமரியாய், தாயாய் பெண் மாறும் போது உடலிலும் மனதிலும் ஒரே சேர அனுபவம் பெறுகிறாள். ஆணுக்கு அப்படியல்ல குழந்தையாய் வாலிபனாய் ஆன ஆணுக்கு தந்தையாய் மாறும் போது உடலில் மாற்றங்கள் குறைவாகவும் மனதில் அதிக மாற்றங்களையும் அவன் அடைகிறான். இப்படியெல்லாம், யோசிக்கும் போது அனுபவ பொருள் என்பது உலகத்தில் எத்தனையோ இருந்தாலும்…

பெண் அனுபவ பொருள் 3

ஆணுக்கு, பெண் எல்லா காலங்களிலும் அனுபவத்தை தந்து கொண்டிருப்பவள் அதனால் தான் அவள் எப்போதும் புதிரானவள் படித்து மாளாத அனுபவபட்டு தீராத விஷயமாகவே சிருஷ்டிபெண்ணை வடிவமைத்துள்ளது இந்த காரணத்தினாலேயே சாக்த மதம் தோன்றியிருக்கும் என்று கூட நாம் நம்பலாம் அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அனுபவ பொருளே இதில் சந்தேகம் இல்லை பெண்ணால் ஆணை சீக்கிரம் படித்து விட முடிகிறது. அவன் அனுபவத்தை தன்மையை உணர்ந்து விடுகிறாள் அதனால் அவள் அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுகிறாள்

பெண் அனுபவ பொருள் 2

 ஒவ்வொரு புலனும் மற்ற புலனின் பணியில் தலையிடுவது இல்லை ஆனால் மனம் மட்டும் எல்லா புலன்களிலும் தலையிட்டு பணி செய்கிறது. அதனால், அனுபவத்தின் தொகுப்பு மனதில் அமைகிறது. சரி இப்போது விஷயத்திற்க்கு வருவோம். அனுபவ பொருளான பெண் எதனால் மற்றவைகளை விட முக்கியத்துவம் பெற்றாள் என்றுபார்த்தால் மற்ற பொருள்களிடம் நமக்கு உறவோ, ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்போ இல்லை. பெண்ணிடம் உறவு, மற்றும் நாம் ஆதிக்கம் செலுத்தவும் முடியும் அதனால் தான் மற்ற அனுபவ பொருள்களை விட பெண்…

பெண் அனுபவ பொருள் 1

பெண் அனுபவ பொருள். அப்படித்தான் முன் காலங்களில் கருதியிருந்தார்கள் தற்போது கூட முகமதியர்கள் வழக்கில் பெண் அனுபவப் பொருளே. இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். அப்படி சிந்தித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வருவோம். அனுபவம் தருவது பெண் மட்டும் அல்லவே. பஞ்சபூதங்களும் அனுபவத்தை தருகிறது. அது போலவே பஞ்சபுலன்களும் அனுபவத்தை உணர்த்துகின்றதே நாம் புலன்களின் வழியே பெரும் அனுபவம் அனைத்தும் பொறிகள் வாயிலாகவே அமைகிறது. காண்பது எனும் அனுபவம் ஏற்பட கண் என்ற பொறியும் காண்பதற்க்குண்டான…

புரிதலை எது தருகிறதோ 2

தன்னைப் போல் பிறரையும், பிறவற்றையும் உணரும் அறிவு உண்டாகும். இந்தக் கல்வி கிடைக்க நாம் நமக்குள் போரட வேண்டும். கடைகளிலும், கல்லூரிகளிலும் இது கிடைக்காது. கூவிக்கூவி விற்பனைக்கு வருவது அல்ல இந்த கல்வி. இந்த கல்வியை படித்தவனையே ஞானஸ்தன் என்கிறோம். பற்றற்று இவனால் எல்லா காரியங்களையும் செய்ய முடியும். தன் மரணத்தை தானே சந்தோஷமாய் அழைக்கும் தகுதியை இந்த கல்வி தரும்.

புரிதலை எது தருகிறதோ 1

பல மரணங்களைக் கண்டு, பல மனிதர்களுடன் பழகி, அவர்களின் நிலைகளை அறிந்து வாழ்க்கை அர்த்தமில்லாதது என்பதை புரிந்து கொண்டு ஊரோடு ஒட்டி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற புரிதலை எது தருகிறதோ, அதுவே கல்வி. அந்த கல்வி ஆணவப்படாது, ஆசைப் படாது, ஆசையும், ஆணவமும் இல்லாத இடத்தில் திருப்தி இயல்பாகவே இருக்கும். திருப்தி எப்போதும் மன நிம்மதியைத் தரும். மனநிம்மதியும், மனநிறைவும் நாணயத்தின் இருபக்கங்கள் போல இப்படி வாழும் வாழ்க்கை நிறைவையும், இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ளவும் மனம்…

உரையாடலின் ஒரு பகுதி 21

 நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நமது எண்ணத்தை நமது விருப்பம் போல் உருவாக்க முடியும் அப்படி நாம் உருவாக்க வேண்டிய எண்ணம் முதலாவதாகவும், முன் உரிமை தரபட வேண்டியதாகவும் உள்ள எண்ணம், நான் திருப்தியடைந்த சந்தோஷமுடையவன். என்னால், என் சமுதாயமும், என் மனித குலம் முழுவதும் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் இருக்கும் என்னுடைய செயல்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என்ற எண்ணத்தை முன் நிறுத்தி செயலாற்ற பழகுங்கள் ஆனந்தம் உங்களுடையதே.

உரையாடலின் ஒரு பகுதி 20

எண்ணமே வாழ்வு என்பது முன்னோர்கள் வாக்கு தினம், தினம் எத்தனையோ எண்ணங்கள் நம்மிடம் இருந்து கிளம்பி நம்மிடமே நிறைவடைகின்றன. இதனை, ஊன்றி கவனித்தால் எந்த விதமான எண்ணங்கள் நம்மிடம் தோன்றி நம்மிடம் நிறைவடைய வேண்டும் என்பதை நம்மால் தீர்மாணிக்க முடியும் என்பது தெரியும்

குறைகள் கூறி

குறைகள் கூறி யாரும் வெற்றியாளர்கள் ஆனதில்லை. நீங்கள் ஒன்றைப்பற்றி ஒருவரை பற்றி குறை கூறும் போது உங்கள் மனதில் விஷ கறை படிகிறது. மற்றவர்களுக்கு உங்கள் மேல் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது. குறைகள் விஷத்திற்க்கு ஒப்பானவை. அது மனிதனை பல வழிகளில் நிலைகளில் துண்டாக்கி துன்பத்திற்க்கு ஆளாக்குகிறது. மகிழ்ச்சியை, ஆனந்தத்தை விரும்பும் எவரும் குறை கூறுவதை நிறுத்துங்கள் குறை கூறும் மனதிற்குள் ஆக்கபூர்வமான நல்ல எண்ணங்களை விதையுங்கள் அது உங்களுக்குள் ஆனந்த மலர்களை பூச்சொறியட்டும்.

துக்கத்திற்க்கு காரணம்

துக்கத்திற்க்கு காரணம் ஆசை. அந்த ஆசையை இல்லாது ஆக்கிவிட்டால் துக்கத்திலிருந்து தப்பிவிடலாம் என்பதே பெளத்த தத்துவத்தின் மைய கருத்து.

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும்

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சில ஆதங்கங்கள் இருக்கும் அந்த ஆதங்கங்கள் நிறைவேறுமா என்பது வாழ்க்கையின் ஒட்டத்தில் நம் தகுதியை பெறுக்கிக் கொள்வதில் அமைகிறது. ஆனால் அந்த ஆதங்கங்களில் சிலது நம்மை பிடிவாத காரனாக, தன் நினைப்பை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத மனோ பாவத்தை வளர்த்து விடுகிறது. இந்த நிலை தொடரும் போது நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. விளைவு ஆதங்கம் ஆதங்கமாகவே சற்று மாறுதலடைந்து கோபமாகவே இருக்கிறது.

தர்மம் என்பதற்கு 3

இந்த சிந்தனை வர காரணம் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட சமுதாய மாற்றமே காரணம் வேறு என்ன சொல்வது இருந்ததை தொலைத்து இல்லாததற்க்கு ஏங்கி இல்லாததை இருப்பதாய் நினைத்து தலை தெறிக்க தறிகெட்டு ஓடும் இந்த மனித சமுதாயத்தில் தர்மம் என்று சொல்லுவதே கூட பாபம் என்று தான் தோன்றுகிறது.

தர்மம் என்பதற்கு 2

இப்போது நம் முன் உள்ள கேள்வி, அல்லது சிந்தனை அப்படி பட்ட தர்மம் என்று ஒன்று உள்ளதா என்பதே காரணம் வெற்றியும், தனக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோபாவம் ஊறி தடித்து விட்ட மனதினால் தற்கால மனிதர்கள் இருக்கும் போது மேலே கூறிய அம்சங்களை கொண்ட தர்மத்தை எங்கே காண்பது எப்படி தேடுவது ஏதாவது பண்டைய நூல்களில் கிடைத்தால் உண்டு

தர்மம் என்பதற்கு 1 மாதவராவ், சதாசிவ கோல்வல்கர்

தர்மம் என்பதற்கு மாதவராவ், சதாசிவ கோல்வல்கரின் விளக்கம் எது உண்மை வடிவில் உள்ளதோ, எது அனைவரையும் ஒரு நூலில் இணைக்குமோ எது பிரிவினையையும், விளைவையும் உண்டாக்காதோ எது வழிபாட்டு பிரிவுகளிடையே மோதல்களின் மூலம் மக்களை கட்டி போடாதோ, எது பல்வேறு கொள்கைகளில் இடையே ஒத்திசைவை உண்டாக்குமோ, அதுவே தர்மம்

உரையாடலின் ஒரு பகுதி 19

எப்போது நாம் பிறருடன் ஒப்பிடுதல் , என்கிற நிலைக்கு நகர்கின்றேமோ அப்போது நாம் வாழ்தலில் பகுதியாக உள்ள அனுபவித்தல் என்கிற நிலையில் இருந்து வெகு தூரம் நகர்ந்து விடுவோம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

உரையாடலின் ஒரு பகுதி 18

ஆனாலும், அதில் அவனுக்கு நிம்மதி கிடைக்காமல் அடுத்த ஒப்பீடுகளுக்கு நகர்ந்து தன் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடுகிறான். இந்த நுண்ணிய வலைபின்னலில் இருந்து தப்பித்து தனக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து எந்த அளவு வேண்டும் என்பதையும் தீர்மானித்து தான் வேண்டியதை அடைவதற்க்கு உண்டான தகுதியையும் வளர்த்து தான் வேண்டியதை அடைந்து விட்டால் ஏற்படும் திருப்தி என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும் காரணம் இங்கு யாரோடும் ஒப்பிடுதல் இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி 17

நம்முடைய வாழ்க்கை முறையில் ஒப்பிடுதல், ஒப்பிட்டு பார்த்தல் என்ற விஷயமே நமக்கு அதிக அளவு அழுத்தத்தை தருகிறது. இந்த ஒப்பிடுதலின் காரணத்தால் போட்டி, பொறமை, வெறி போன்றவற்றால் மனிதன் தாக்கப்பட்டு சீர் குலைந்து விடுகிறான். ஆனாலும் அவன் போராடுகிறான் வெற்றி அடைகிறான்

பிராணனைப் பற்றி.

பிராணன் என்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஈரேழு பதினான்கு லோக ஜீவ ராசிகளுக்கும் அதுவே ஆதாரம் அப்படி ஆதாரமாய் இருக்கும் பிராணனை நாம் போற்றி வழிபடுவோம். நமது உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் நம்மை நாம் என்று சொல்வதற்கும் வேண்டிய சக்தியை தருவது பிராணணேயாகும். புலன்களுக்கு வேண்டிய அளவு சக்தியை வழங்குவதும் பிராணணே ஆகும். ஒவ்வொரு புலனுக்கும் பிராணன் தேவைப்படும் அளவு மாறுபடும் அப்படி மாறுபடும் அளவை அறிந்து பிராணன் புலன்களுக்கு தனது சக்தியை வழங்கட்டும் என்று…

மறு பிறவியை நிர்ணயிப்பது எது ?

மனிதனுடைய வாழ்க்கை பயணம் முடிந்தது என்பதற்கு அறிகுறி மரணம். மனிதனுடைய வாழ்க்கை பயணம் நடக்க உதவி செய்வது பிராணன் ஆகும். மரணத்திற்க்கு பின் ஜீவன் அதாவது உயிர் பயணிக்க உதவி செய்வதே உதானனின் பணியாகும். மரணமடையும் தருவாயில் மனிதனின் புலன்கள் செயலிலக்கின்றன. அப்படி செயலிலக்கும் போது முதலில் பேச்சு அவனிடம் இருந்து விடைபெறுகிறது. பின் படிப்பபடியாய் தொடர்ந்து ஒவ்வொரு புலனும் அவனைவிட்டு விலகுகிறது. கடைசியாய் மனம் விடைபெறும். அவனிடமிருந்து மனம் விடைபெறும் சமயத்தில் என்ன சிந்தனை அந்த…

கற்பனை வாழ்க்கைக்கு

கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்

மனிதனுக்கு ஏனோ 2

பல வேளைகளில் மனிதனால் எதையும் எல்லாவற்றையும் மாற்றி விடமுடியும் என்ற ஆணவத்தோடு கூடிய சிந்தனையின் நிலைதான் தற்போதைய நாகரிகம் என்றும், வளர்ச்சி என்றும் கொண்டாடப் படுகிறது. ஏதோ படத்தில் சொன்ன வசனம் போல, ஒடிக்கொண்டிருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடாது. கடைசியில் தான் முடிவு செய்ய வேண்டுமென்று அது போல இந்த வளர்ச்சி, நாகரீகம் என்பதின் முடிவு ஒரு விதத்தில் நினைத்தால் பயம் தருகிறது. இன்னொரு விதத்தில் தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனிதன்…

மனிதனுக்கு ஏனோ 1

மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம் அவன் என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான். ஆனால், உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள் அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது. தோற்றவன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் விதி, வினை என்று நினைக்கிறான், சிந்திக்கிறான்.

உரையாடலின் ஒரு பகுதி 16

மதிப்பற்று வாழ உலகில் எந்த உயிரும் விரும்புவது இல்லை தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளலும் பிறரை மதித்தலும் வாழ்க்கையின் அடிப்படையான அடித்தளங்கள் அந்த அடித்தளங்களை அமைக்க உள்ள அனுபவங்களே தத்துவங்கள் என்பார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி 15

பிரார்தனையில் ஒரு பாகமாக இருக்க வேண்டியது சொல்லிக்கொடு. எனக்கு எது தெரிய வேண்டுமோ அதை முழுமையாய் சொல்லி கொடு அதை புரிந்து கொள்ளும் சக்தியையும் நீயே கொடு என்று உண்மையாய் பிரார்திக்கும் பக்குவம் அதாவது நான் என்ற நிலை இல்லாத நிலையில் பிரார்திக்கதெரிந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு

உரையாடலின் ஒரு பகுதி 14

நாம் வளர்வதும் நல்லபடியாய் இருப்பதும் ஒரு தனிமனிதன் கையில் இல்லை. காலம் விளையாடும் இடம் இது காலம் சில சமயம் பெரிய குழுக்களை ,தேசத்தை, இனத்தை, உருமாற்றும் இதையெல்லாம் தனி மனிதனால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என்று கேட்டால் ஆமாம் என்பதுதான் பதில் உதவி செய்ய கூடாதா என்றால் எது உதவி என்றே தெரியாத போது உதவி எப்படி செய்வது உதவி இதுதான் என்று தெரிவதற்கே ஜென்மம் போதாதே, ஏனென்றால் நாம் கற்க…

உரையாடலின் ஒரு பகுதி 13

எந்த அனுபவமும் ஒருவனுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த அனுபவம் தரும் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் அனுபவம் தன்னை மீறி ஆட்சி செய்ய தொடங்கிவிட்டால் நாம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியாது இந்த விஷயம் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

உரையாடலின் ஒரு பகுதி 12

மனித சமுதாயம் வாழ வேண்டிய முறை, உலகத்தை உள்ளபடி ரசி உனக்கென்று உள்ளதை முழுமையாக அனுபவி உன்னுடைய எந்த செயலும் பிறரை காயப்படுத்தாமல் வாழ். உன்னையே கவனி உனக்குண்டானது தவிர மற்றதை ஒதுக்க எப்போதும் எச்சரிக்கையாய் இரு ஆனந்தமாய் இரு அப்படி நீ இருந்தால் நீ ஆண்டவனை கூட நினைக்க வேண்டியது இல்லை காரணம் ஆண்டவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பான் இயற்கையிடம் பாடம் கேள் அது சொல்லி தருவதை புரிந்து கொள் சுதந்திரமானவனாய் இரு.

ஆண்களும், பெண்களும் 2

எப்போது பொருளாதார சிந்தனை பெண் இனத்திற்குள் ஊடுருவி வேர் விட்டதோ அன்றே சமுதாயத்தில் தவறுகளின் காலம் தொடங்கி விட்டது எனலாம் மனிதனின் தேவைகள் என்பவற்றில் ஆசைகள் ஆட்சி செய்து ஆசைகள் எல்லாம் தேவைகளே எனும் நிலைக்கு வந்தது அப்போதுதான் பொறுப்பற்றதன்மையும், வேகமும், முரட்டுதனமும், சினமும், ஆதிக்கம் செலுத்தும் மனோ பாவமும் ஆணின் இயற்தன்மை. அச்சம், மடம், நாணம், பொறுப்போடு இருத்தல் அன்பு செலுத்துதல், அரவணைத்தல் அடங்குதல் பெண்ணின் இயற்தன்மை இவற்றில் குறையோ, மாறுபாடோ தோன்றினால் அடிப்படை எங்கோ…

ஆண்களும், பெண்களும் 1

ஆண்களும், பெண்களும் எப்போதும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கும், இயற்கையான இயல்பு தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் இதை முதலில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இவை இரண்டும் எதிர், எதிர் கோணங்கள் ஆண் ஆணாக இருப்பதும், பெண், பெண் ஆக இருப்பதும் இயற்கையின் வடிவமைப்பு அந்த வடிவமைப்பில் மனிதன் மாற்றம் செய்யும் போது அடிப்படை தகர்ந்து விடும் இது ஆணாதிக்க நிலையில் தோன்றிய சிந்தனை அல்ல உண்மை நிலை இதை பகுத்தறிவு கொண்டு மறுதலிக்கும் போது கட்டமைப்பு…

உரையாடலின் ஒரு பகுதி 11

இனப்பற்றையும், மொழிப்பற்றையும் தொலைத்த சமுதாயம் , சமுதாயம் சக்தியுடன் வளரமுடியாது.   இப்போது உள்ள சூழ்நிலை திராவிடர் எனும் இனப்பற்றும் தமிழ் எனும் மொழிப்பற்றும் தேய்ந்து அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது.  அதனாலேயே தற்சமய சூழ்நிலையில் இனப்பற்றும், மொழிப்பற்றுமே வருங்கால சந்ததியினரை அடிமைகளாகாமல் காப்பாற்ற முடியும்.  ஆனால், பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கிய நிலையில் உள்ள இக்கால சந்ததியினரால் இதை புரிந்து கொள்ள முடியுமா என்பதே கேள்விகுறிதான்.  

உரையாடலின் ஒரு பகுதி 10

மனித வாழ்க்கை சிறப்புறுவதர்கான கருணை எப்போதும் எங்கும் பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த கருணையை சரியாய் உள்வாங்கி கொள்வது என்பது அவரவர்களிடமே இருக்கிறது. சரியாய் உள் வாங்கிவிட்டால் வாழ்வின் அர்த்தம் வாழும் விதம் புரிந்துவிடும். எதில் வெற்றி அடைய வேண்டுமென்றாலும் கேள்விகள் கூர்மையாக வந்து கேள்விகளுக்கு விடை காண அபாரமான வேகத்தில் இயங்க வேண்டும் . அப்படி இயங்கினால் வெற்றி அடைதல் சுலபமாகும்.

உரையாடலின் ஒரு பகுதி 9

உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி மனம் பற்றும் விஷயத்தாலேதான் பற்றும் விஷயத்திற்க்கு சக்தி இதை புரிந்து கொண்டால் பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும் அப்படி தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை அணுகி கேட்டு தெரிந்து கொண்டால் சக்தி, பக்தி ஆகும். அந்த பக்தி சக்தியாகி நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.

யாருக்கு விருப்பம் ?12

உயிரைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தவர்கள் சொத்து பற்றி யோசிக்க மாட்டார்கள் உடம்பு பற்றி யோசிப்பவர்கள் சொத்தோடு ஒட்டிக்கொள்வார்கள். சொத்தோடு ஒட்டிக்கொள்பவர்கள் உடலை தான் என்று நினைத்துக் கொள்வார்கள்.

யாருக்கு விருப்பம் ?10

நான் என்பதை அறிந்து அந்த நானிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தலே வெற்றி மற்றபடி எந்த வெற்றியும் வெற்றி ஆகாது அந்த நான் என்பது என்ன என்ற வினா தனக்குள் வரும் போது நான் என்பது உடலா, இல்லை மனமா என்ற வினா வரும் அது சரியா என ஆராய பொறுமை, நிதானம், அமைதி, சாந்தம், விடாமுயற்சி, இது அத்தனையும் தேவை இவைகளை கைகொள்ளும் போது அன்பு ஊற்று எடுக்கிறது. அந்த அன்பு தனக்குள் பெருக, பெருக…

யாருக்கு விருப்பம் ? 9

தன்னைதான் அறிய வேணும் சாராமல், சாரவேணும், பின்னைதான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி என்ன சொல்கிறது இந்த பாடல் தன்னை அறிய வேண்டும் என்கிறது தன்னை அறிவது என்றால் என்ன தனக்குள் இருக்கும் உணர்வுகளை அறிதல் அது தோன்றுமிடம் அறிதல் எதனால் தோன்றியது என்றும் அறிதல் அப்படியானால் உணர்வுகள் எத்தனை விதம் உணர்வுகள் பலவிதம் அதில் சில காம, கோப, லோப, மோக, மத, மாச்சர்யம் காதல் அன்பு பரிவு நேசம் பாசம் தியாகம் போன்றது இதில் நல்லது,…

யாருக்கு விருப்பம் ?8

எண்ணம் எனும் விதை பல தரத்தில் இருக்கிறது. அந்த விதைகளில் சில காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம், அன்பு, காதல், பாசம், நேசம், நட்பு, தியாகம், பரிவு, பண்பு, இத்தனை விதைகளும் வளர்ந்து மனிதனை பல விதங்களில் இம்சை படுத்துகிறது. சந்தோஷபடுத்துகிறது. இறப்பில் இவை அத்தனையும் நி‍றைவு பெற்றதாய் சக மனிதன் நினைக்கிறான். ஆனால் சாஸ்திரம் இவை அனைத்தும் தொடரும் என்கிறது.

யாருக்கு விருப்பம் ?7

பஞ்ச பூத தத்துவத்தில் மனதை ஆகாய தத்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ தோன்றுகிறது. மனம் நிலத்தத்துவமோ என்று ஏனென்னறால் நிலம் தானே. எந்த விதையையும்வளர செய்கிறது. அது மாதிரி எண்ணம் எனும் விதை மனதில் விழுந்தவுடன் மிக வேகமாக எண்ணம் வளர்ந்து விடுகிறது. அது பிறகு பல விதங்களில் ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மனிதன், மனித குலம் தடுமாறி தள்ளாடி ஆடுகிறது. அதில் ஏற்படும் கலக்கம் குழப்பம் பயம் மனித குலத்தை படுத்தும் பாடு சொல்லிமாளாது.

யாருக்கு விருப்பம் ? 6

இறப்பு உடல் சம்பந்தப்பட்டதுதான் அதில் சந்தேகம் இல்லை ஏனென்றால் இறப்பு என்ற ஒன்று உடலை இயங்க அனுமதிப்பது இல்லை. இயங்காத உடல் அழுகி நாறி ஏதேதோ ஆகி அந்த உடல் இல்லாமல் பேய் விடுகிறது. மனம் என்ற ஒன்று உடலில் ஏதோ ஒரு வஷ்துவாய் இருந்தாலும் அது மனிதனுக்கு தெரியவில்லை. தெரிவதில்லை அதை அடுத்தவருக்கு காட்ட முடிவதும் இல்லை. இதை தான் கண்ணதாசன் தன் பாடலில் அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்ட கூடாதோ என எழுதியிருப்பார்.…

யாருக்கு விருப்பம் ?5

இதிலிருக்கின்ற சிக்கல் என்னவென்றால் செத்தார் எப்படி திரிவார்கள் என்று தெரிந்தால்தானே அப்படி திரிய அது சரியாய் தெரியாத காரணத்தால் அவர் அவர்களுக்கு தோன்றியபடி திரியும் சில கூட்டங்கள் செத்தார்கள் இப்படிதான் திரிவார்கள் என சக மனிதர்களுக்கு பாடமும் எடுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் நரியையும் பார்த்ததில்லை அதன் கொம்பையும் பார்த்ததில்லை. நரி அதிகமாய் இருக்கும் காட்டையும் பார்த்ததில்லை ஆனால் நரி கொம்பு விற்கும் மனிதர்களை போல்தான் உள்ளது.

யாருக்கு விருப்பம் ? 4

இறப்பில் இருந்து பாடம் கற்க துணிந்து அதில் இறங்கி அந்த பாதையை ராஜபாட்டையாய் மாற்றி நடைபோட்டவன் வரலாற்றில் எனக்கு தெரிந்து புத்தன் மட்டுமே. மற்ற எல்லோரும் அந்த பாதையை முட்டு சந்தாகதான் உபயோக படுத்தி யிருக்கிறார்கள். இறப்பை சிந்திக்க வாழும் வாழ்க்கை ஏனோ அனுமதிப்பது இல்லை என்றே தோன்றுகிறது. அதனாலேயே அனுபவத்தில் சிறந்த முன்னோர்கள் செத்தாரை போல் திரி என்று சொல்லியிருக்கிறார்கள்

யாருக்கு விருப்பம் ? 3

அவர்கள் அப்படிதான் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலைவயிலும் மனிதன் ஏனோ இறப்பை விரும்புவதில்லை. அதற்க்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இயற்கை அல்லது இறைவன் தன் கையில் வைத்திருக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று ஆனால் இது மிக முக்கியமானது மனிதனின் அறிவுக்கு புலப்படாதது எல்லா காலத்திலும் மனிதன் தோற்றவிஷயம் இது மட்டுமே.

யாருக்கு விருப்பம் ? 2

ஏனென்றால் இந்த வார்த்தைக்கு இந்த சொற்பொருளுக்கு இந்த அர்தத்தை தவிர நிறைய அர்தங்கள் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலே சொன்ன விஷயம் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அவர்கள் சொல்லவில்லை. காரணம் நாம் பயந்துவிடுவோம் என்று நினைத்திருப்பார்கள்.

யாருக்கு விருப்பம் ?1

இறக்க யாருக்கு விருப்பம் ? யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் விரும்பாத ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தானே இருக்கிறோம். விரும்பாத ஒன்றை செய்து தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு. கால அளவுகள் வேறு அவ்வளவுதான். இறப்பை விரும்ப வேண்டுமென்றால் முதலில் அதை படிக்க வேண்டும். இறப்பை படிப்பது எப்படி யார் சொல்லி தருவார்கள் அப்படியே சொல்லித்தந்தாலும் நமக்கு அது புரியுமா நாம் இருக்கும் சூழ்நிலை நாம் பெற்ற அறிவு சொல்லித்தருவதை ஒத்துக்கொள்ளுமா பெரிய கேள்வி தான்…

எந்த திட்டமும்

எந்த திட்டமும் அது பெரியதோ, சிறியதோ காலத்தின் அனுகூலத்திலோ, அல்லது பிரதி அனுகூலத்திலோதான் இருக்கிறது நாம் திட்டம் தீட்டலாம் ஆனால் முடிவு காலத்தைப் பொறுத்தது. அதாவது, காலமாகி இருக்கின்ற கண்ணுக்கும், புலன்களுக்கும், அறிவுக்கும் புலனாகாத சக்தியைப் பொறுத்தது.

வேதாந்தம் பேச

எல்லோரும் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள், வேதாந்தம் பேச வயது வேண்டும் என்று உண்மையில் வேதாந்தம் வயதில் இல்லை. வேதாந்தம் இருப்பது சிந்தனையின் நுட்பத்திலும் விவேகத்தின் அடித்தளததிலும் இருப்பது.

தத்துவம் எது

தத்துவம் எது என்று வினா வந்தால் சிறிதும் யோசிக்காமல் விடையை சொல்லிவிடலாம் மனித வாழ்க்கையென்று ஆம் வேறு எது பெரிய தத்துவமாக இருக்கமுடியும். எத்தனை தத்துவங்கள் இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு வேண்டிதானே தத்துவம். தத்துவம் நிலைபெறுவது தர்க்கத்தினால் மனித வாழ்க்கை எனும் தத்துவத்திற்கு, மனித வாழ்க்கையின் ஒட்டமே தர்க்கம். ஒவ்வொரு மனிதனின் காலமும், முன்னேற்றமும், வீழ்ச்சியும், சாதக, பாதகங்களுமே மிக சிறந்த தர்க்கங்கள்.

சாந்தமும்,அமைதியும்

வருட கணக்கில் போர் செய்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிடலாம். அணுவை பிளக்க செய்து மலையை தரைமட்டமாகிவிடலாம் பிடிவாதத்தை மூலதனமாக்கி எட்டாத மலைகளிலும் ஏறிவிடலாம். அணையை கட்டி நதியின் பிரவாகத்தை கட்டுபடுத்திவிடலாம் ஆனால் பலவந்தமாய் ஒரு பூவை மலர செய்ய முடியாது. அது இயற்கையால் தான் முடியும். இது எப்போது ஒருவருக்கு புரிகிறதோ அப்போதே புரிந்தவர் எல்லா விஷயங்களையும் சரியான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார் அதுமட்டுமல்ல தன்னை மீறிய சக்தி உண்டு தன்னால் செய்ய முடியாத வேலைகளும்…

உண்மையாய் இருக்கும் போது

பாசம் உண்மையாய் இருக்கும் போது அது குடும்பத்திற்க்கு பல நன்மைகளை செய்துவிடுகிறது. துறவு உண்மையாய் இருக்கும் போது அது உலகிற்க்கு நிறைய நன்மையை செய்துவிடுகிறது. இங்கு பாசமோ துறவோ விஷயம் அல்ல உண்மை தான் விஷயம் உண்மையாய் இருந்தால் நல்லதுகள் நடந்துவிடுகின்றன தற்போதைய காலத்தில் உண்மையாய் இருக்க எத்தனையோ பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது அதிலும் உள்ள சிக்கல் அத்தனை பொய்களையும் உண்மை போலவே சொல்லவேண்டியிருக்கிறது என்ன செய்ய

ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை.

வாழ்க்கை போராட்டத்தில் ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை. அவர் அவர்களின் நுண்ணிய உணர்வுகள். நுண்ணிய உணர்வுகள் என்பது எது காதல், காமம், வாஞ்சை,பரிவு, நேசம், பாசம், போன்றவை  இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை தொலைத்தபின் போராட்டத்தில் வெற்றி பெற்று என்ன பயன் யோசிக்க வேண்டும் ஆனால் யோசிக்காமல் இருப்பதே நல்லது காரணம் அவரவர்களே சொல்லிக்கொள்ளுங்கள் ஏனென்றால் அவரவர்கள் தொலைத்தது அவரவர்களுக்கு தானே தெரியும் 

கடவுள் இருக்கிறாரா? 9

 போன பதிவில் குறிப்பிட்ட ஒவ்வொன்றை பற்றியும் சிந்தித்தால் முதலில் நமக்கு தெரிவது கடவுள் என்ற வார்த்தையில் கடவுள் இல்லை என்பது தான், அதனால் நாம் அவசரப்பட்டு கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது, வரக்கூடாது இனி அடுத்த நிலைக்கு நகர வேண்டும் அப்படி நாம் நகர நாம் இதுவரை நாம் படித்த, கேட்ட, பார்த்த, எல்லா விஷயங்களில் இருந்தும் வெளியேறி தன்னே நிற்க வேண்டும் எப்படி யென்றால், நல்லதும், கெட்டதும் நான் என்பதும் மறந்து என்ற நிலையை…

கடவுள் இருக்கிறாரா? 8

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை ஏன் வருகிறது வாருங்கள் சிந்திப்போம். முதலில் நமது ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை. இரண்டாவது ஏதோ ஒரு சிலருக்கு கடவுளை காணவேண்டும் என்ற ஆர்வம். மூன்றாவது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களால் நமக்கு ஏற்படும் கலக்கம் அந்த கலக்கத்திலிருந்து விடுபட நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய பொருள் கடவுள். நான்காவது நம்மை சுற்றியிருக்கும் ஏதோ சிலர் சொல்லும் வார்த்தையான கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நரகத்திற்க்கு போவாய் என்ற வார்த்தையால் ஏற்பட்ட பயம் அது…

கடவுள் இருக்கிறாரா? 7

சொல் அல்லது வார்த்தை என்பது என்ன? சொல் என்பது அவரவர்களின் கடந்த காலமாகவும், ஞாபகமாகவும் இருக்கிறது. அதாவது, மகன் என்றால் எனது மகனையும் என் நண்பனின் மகனையும் அவர் உறவுகளின் உள்ளவர்களையும் என்னுடைய ஞாபகத்திற்க்கு கொண்டு வருகிறது இது அனைத்தும் மனதிலிருந்தே உண்டாகிறது. இப்படி மனதில் தோன்றும் கடந்த கால எதிர் கால நினைவுகளை பிறருக்கு வெளிப்படுத்த உபயோகப்படுவதே சொல் இந்த சொல் எப்போதும் மிக அதிக அளவாக கடந்த கால அல்லது எதிர்காலத்தில் மட்டுமே இருக்கும்…

கடவுள் இருக்கிறாரா? 6

கடவுள் என்ற சொல்லில் என்னென்ன பொருள்கள் அமைந்திருக்கிறது என்றால் பாரம்பரிய மரபு அவரவர் நம்பிக்கைகள், ஆசைகள், அபிலாஷைகள் நிறைவேறும் எனும் ஆசை, கஷ்டங்கள், துயரங்கள், தீரும் எனும் நம்பிக்கை பூரணத்தை அல்லது பரிபூரணத்தை அறியும், அடையும் ஆசை

கடவுள் இருக்கிறாரா? 5

கடவுளை பற்றி ஆராய  நாம் நமது மனதை காலி செய்ய வேண்டும் மனதை காலி செய்வதென்றால் கடந்த காலத்தை மனதில் இருந்து அப்புற படுத்திவிட வேண்டும் கூடவே எதிர்காலத்தையும் இல்லாமல் காலி செய்துவிட வேண்டும் அப்படி செய்தால் என்ன நடக்கும் மனம் இல்லாமல் போயி விடும் அப்படி மனம் இல்லாது போன நிலையில் நாம் ஆராயும்போது சரியான முடிவு கிடைக்கும் அந்த முடிவு மட்டுமே சாஸ்வதமான சக்திய மாக இருக்கும் அப்படி ஆராய நமக்கு நிகழ்கால பிரக்ஞை…

கடவுள் இருக்கிறாரா? 4

எந்த ஆராய்ச்சி செய்வதற்கும் மனம் என்ற ஒன்று தேவைப் படுகிறது. இந்த மனதில் உள்ள உணர்வுகள் நமக்கு நம்பிக்கையையோ அல்லது அவநம்பிக்கையையோ தந்துவிடுகிறது. இந்த இருநிலைகளில் நாம் எந்த நிலைகளில் இருந்தாலும் நம்மால் முடிவு செய்யாமல் ஆராயமுடியாது. அந்த நிலையில் வரும் முடிவும் சரியானதாக இருக்காது.

சந்தோஷம் என்பது 3

மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.  தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் 

கடவுள் இருக்கிறாரா? 3

நம்பிக்கையை கொண்டு கடவுளை ஆராய்ந்ததால் மனித குலம் பெற்ற பலன் இதுதான். உதாரணமாக நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சூரியனை அதன் ஒளியை அதன் வெப்பத்தை அறிய உணர முடியும் அல்லவா அதுபோலதான் கடவுளை பற்றிய நிலையும் எந்த நம்பிக்கையும் முன்னேற்பாடான முடிவுடன் ஆராயும் போது விஷயங்கள் உண்மையை வெளிப்படுத்துவது இல்லை அப்படியே அது வெளிப்படுத்தினாலும் நம்மாள் அதை சரியாக புரிந்து கொள்ள முடிவது இல்லை அதனால் நாம் எந்த நம்பிக்கையையும் இல்லாமல் இந்த விஷயத்தை ஆராய்வோம்.

கடவுள் இருக்கிறாரா? 2

கடவுளை அறிந்து கொள்ள நம்பிக்கை தேவையா? உண்மையில் அறிந்து கொள்வதைவிட கற்றுக்கொள்ளுதல் மேலானது அல்லவா நம்பிக்கைகளை கொண்டு கற்றுக்கொள்ளும் போது நம்பிக்கைகள் நம்மை ஒரு முடிவுக்கு அழைத்து செல்லுகின்றன அப்படி நம்பிக்கை அழைத்து சென்ற முடிவு சரியானதாக இருக்குமா என்ற ஐயம் குழப்பம் தான் உலகில் உள்ள இத்தனை மதங்களுக்கும் காரணம். அதனால் பிரிவுகள், பிரிவுகளால் பிரச்சனைகள் அதில் எல்லை மீறும் போது வன்முறைகள்

கடவுள் இருக்கிறாரா? 1

பொதுவாக இந்த வினாவரும் போது ஆன்மீகத்தில் உள்ளவர்கள் சொல்லும் பதில் நம்பிக்கை வையுங்கள் கடவுளை காணலாம், கடவுளை அறியலாம் அவர் இருக்கிறார் என்று அறியலாம் என்கிறார்கள். நம்பிக்கை இல்லாவிட்டால் இறைவனை மட்டுமல்ல எதையும் அறிய முடியாது என்கிறார்கள். நம்பிக்கை கொண்டு ஆராய்கிறோம் என்றால் என்ன அர்த்தம் முடிவு செய்து கொண்டு ஆராய்கிறோம் என்று அர்த்தம் அப்படி அந்த விதத்தில் ஆராய்ந்தால் சரியான முடிவு கிடைக்குமா? சந்தேகம்தான்,

தற்போதைய காலம் 2

நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அனைத்தையும் இழந்து விட்ட பின் நான் என்பதிலும் வெற்றி பெற்றேன் என்பதிலும் சக்கையை தவிர வேறு என்ன இருக்கிறது. யோசிக்க நேரமில்லை, யோசிக்க ஆசையில்லை சரியாக சொன்னால் யோசிக்க தெரியவில்லை வேறு எப்படி எடுத்துக்கொள்வது உழைப்பின் உன்னதம் சிந்தித்தலின் அழகு அதை செயல்படுத்தலில் உள்ள நளினம் இவையெல்லாம் இக்கால இளைய தலைமுறையினர் அறியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டதே அதனால் அவர்கள் வாழ்க்கையே அவர்களுக்கு அந்நியமாகிவிட்டதை அறியாதவர்களாக ஆகிவிட்டார்களே என்ன செய்வது அறிந்தவர்கள் வருத்தப்படதான்…

தற்போதைய காலம் 1

தற்போதைய காலம் உழைக்காது உயர்வு பெற இளைஞர்கள் முயலும் காலம். இப்போது உள்ள சூழ்நிலையில் பணம், பதவி மட்டுமே உயர்வு எனும் எண்ணமும் நானே எல்லாம். நான் மட்டுமே எல்லாம் எனும் மனோ பாவத்தை உண்டாக்கும் சூழ்நிலையே கொண்டிருக்கிறது, இதில் எளிதில் வெற்றி வேண்டும் எனும் எண்ணம் உயர கிளம்பி எல்லாவற்றையும் முடிக்கிறது. அல்லது அழிக்கிறது. எல்லாவற்றையும் என்பது அன்பு, பாசம், நட்பு, உறவு, தியாகம், பணிதல், திருப்தி, போன்ற விஷயங்களை தான் சொல்கிறேன்.

நிகழ்சிக்கு அர்த்தம்

நிகழ்சிக்கு அர்த்தம் காண முயலுவது காரியத்துக்கு காரணம் தேடும் பகுத்தறிவின் சாபக்கேடு. இதை ஏன் சாப கேடு என்று சொன்னார்கள் பகுத்தறிவு என்பது சாப கேடா பகுத்தறிவு எப்படி சாப கேடு ஆகும் இப்படி கேள்வி முளைத்து சிந்திக்கும் போது சில விஷயங்கள் விடையாய் வருகிறது அப்படி வந்ததை வைத்து பார்த்தால் பகுத்தறிவு சாப கேடு தான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது பகுத்து பார்க்கும் போது புத்தி அதிகமாய் வேலை செய்கிறது அப்படி வேலை செய்யும் புத்தி…

இக் கால வாழ்க்கை முறை

இக்கால வாழ்க்கை முறையில் வாழ்க்கைக்கு உண்டான மதிப்புகள் என்று எதுவும் இல்லை வாழ்க்கைக்கு உண்டான முக்கிய விஷயமான நியாயம், அநியாயம் என்ற ஒன்றும் இல்லை ஒரு மூர்க்கத்தனமான ஒட்டப்பந்தயத்தில் யார் ஜெயிக்கின்றானோ அவன் வெற்றியே எதையும் ஞாயப்படுத்தி காட்டுகிறது. வெற்றி அடைந்தவன் நிர்ணயிப்பதே வாழ்க்கை தர்மம். என்ன செய்வது இது சரியா என்று கூட யோசிக்கும் நிலையில் நாம் இல்லையே நம்மை சுற்றி நடப்பவைகளில் எத்தனை விஷயங்கள் நம் சிந்தனைக்கும் நாம் கற்றதிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது வெற்றியாளன்…

குற்றமில்லாத மனசுதான் 4

இப்ப புதுசா வந்துருக்கற விதி என்னன்னா யார் உரத்து பேசறாங்களோ அவங்க சத்தியம் பேசறாங்க அப்படிங்கறது தான் சத்தியத்துக்கே இது தான் கதின்னா உண்மைக்கு என்னன்னு சொல்லறது அடுத்தது குற்றம் குற்றம் அப்படின்னாலே ரெண்டு பேரோ அதுக்கு அதிகமாகவோ நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கணும் சம்பந்தப்பட்டவங்க ஒன்னும் பிரச்னை இல்லை அப்படின்னு சொல்லிட்டா குற்றம் எங்கிருந்து வரும் உதாரணம் லஞ்சம்

குற்றமில்லாத மனசுதான் 3

அடிப்படையே மாறின பின்னாலே சரியாய் இருக்கோம் அப்படின்னு எப்படி சொல்லறது அதனால நாமலே ஒரு முடிவுக்கு வந்து இது தான் சத்தியம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம் அந்த முடிவு என்னான்னா அவனவன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அது தான் சத்தியம் அப்படிங்கறது தான் இதுல பாத்தா வேதம் சொன்னபடி இருக்கணும் அப்படிங்கற அவசியம் இல்ல நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இதுனால என்னாச்சுன்னா இந்த காலத்துல எல்லாரும் சத்தியம் தான் பேசறாங்க எல்லாருமே உரத்துதான் பேசறாங்க…

குற்றமில்லாத மனசுதான் 2

சத்தியம் அப்படிங்கறது முன்னோர்கள் சொன்ன படி பாத்தா கடவுளால் அருளப்பட்ட அல்லது ரிஷிகளால் கிரகிக்கப்பட்ட விஷயங்கள் அதாவது வேதங்கள் சத்தியம் அப்படின்னு சொல்லறாங்க அப்ப வேதத்தின் படி வாழ்தலே சத்தியம் அப்படின்னு ஆகுது நாம இப்ப வேதப்படி வாழறோமா அப்படின்னு அவங்க அவங்கலே மனச தொட்டு கேட்டு பாத்துக்க வேண்டியது அப்படி கேட்டு பாத்தா இல்லை அப்படின்னு தான் பதில் வரும் நம்மனால அதை ஒத்துக்க முடியாது ஏன்னா நாம சத்தியம் தான் பேசறோம் அப்படிங்கற மனோநிலையில்…

குற்றமில்லாத மனசுதான் 1

குற்றமில்லாத மனசு தான் சத்தியத்தை சத்தமாக பேசும். உண்மையை உரத்துப் பேசும். இந்த வார்த்தைகள் என்ன சொல்ல வருது இதை பத்தி நாம ஒரு முடிவுக்கு வரணும் அப்படின்னா நமக்கு சத்தியம் அப்படின்னா என்ன உண்மை அப்படின்னா என்ன குற்றம் அப்படின்னா என்னங்கிறது நமக்கு தெளிவா தெரிஞ்சிருக்கணும். நாம வச்சிருக்கிற அகராதியில இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் நாம வச்சிருக்கோம் அப்படின்னு நமக்கு தெளிவா தெரிஞ்சாதான் நமக்குள்ள ஒரு முடிவுக்கு வரமுடியும் சரி இப்ப யோசிப்போம்

வாழ்க்கையில் நிர்பந்தம்

யாரோடும், எதனோடும் ஒட்டாத தன்மையோடு இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம உணவுக்கும், உடைக்கும், வம்ச விருத்திக்கும், அடுத்தவங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது தனிப்பட்ட அப்படிங்கற விஷயமே இல்லாதா போயிருது நம்முடைய அந்தரங்கத்துடன் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு ஒரு சூழ்நிலையில் நாம் அடுத்தவரை சார்ந்து இருத்தல் என்பது நிர்பந்தம் இதை புரிந்து கொண்டால் வீண் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தும் பழக்கம் நம்மை விட்டு சென்றுவிடும் அது சென்று விட்டாலே சுற்றம்…

கேள்விகேட்க ஆரம்பிச்சா

கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது  அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…

வாழ்க்கையை நிர்ணயிப்பது

வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது திறமையோ, நமது அறிவோ, நமது கடமையோ அல்ல. அதை நிர்ணயிப்பது நமக்கு மீறிய சக்தி. அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வதே நமது கடமை. விதியின் புயலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள். யார், யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ, யார் கண்டது? இயற்கையின் விசித்திரத்தை நாம் அறிய முடியுமா? யாரே அறிவர்.

மன போராட்டம் தவிர்க்க

மனிதன் என்றுமே பணத்திற்க்கு அடிமையாக கூடாது. அப்படி அடிமையாகி விட்டால் மனபோராட்டத்தை தவிர்க்க முடியாது. மன போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் பணத்திற்க்கு மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களுக்கு அதாவது பெரியவர்கள் சொன்ன புலன் விஷயங்களுக்கு அடிமையாகக் கூடாது

வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க

வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். நிஜங்கள் தவிர்க்க முடியாதவை, வாழ்க்கையை விட்டு விலக்க முடியாதவை, விலக்க முடியாதவைகளோடு கை குலுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மனித முன்னேற்றத்திற்கு தேவை

மனித முன்னேற்றத்திற்கு தேவை அதிர்ஷ்டம் தான். ஆனால், அது ஏன் வருகிறது? எவரால் வருகிறது? எப்படி வருகிறது? எப்படி மாறுகிறது? என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும், அப்பாற்பட்டதாய் இருக்கிறது. உதாரணமாக பார்த்தால் அன்றய லிங்கன் முதல் இன்றய நரேந்திர மோடி வரை

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள்

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏன் வருகின்றன? எப்படி வருகின்றன? எதற்க்காக வருகின்றன? எப்போது வருகின்றன? யாருடன் நம்மை சேர்க்கின்றன? யாரிடமிருந்து நம்மை பிரிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஏன்,

பயம் வேறு, பக்தி வேறு

பயம் வேறு, பக்தி வேறு தான். பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது. பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது. இரண்டும் இணைவது கஷ்டம் என்றாலும், அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.

எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு.

வாழ்க்கையில் பணத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு. அந்த ஏற்றதாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகி ஆகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் போகி ஆகிறான். அல்லது ரோகி ஆகிறான். சற்று பாதிக்கப் பட்டாலும், சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்பவன் விவேகி ஆகிறான்.

துக்கம் ஏது?

எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும்.  அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?

உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்து செயல்படுத்துபவர்கள் தான் அரசியல் ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக ஆட்சி பரிபாலனம் நடைபெறுகிறது.

காதலும், வேதாந்தமும் ஒன்றா?

காதலும், வேதாந்தமும் ஒன்றா? ஆம் என்றால் வேதாந்தம் என்பது சிருஷ்டியின் தத்துவம். காதலும் சிருஷ்டியுடன் சம்பந்தப்பட்டது. இல்லையென்றால் வேதாந்தத்தில் உணர்வுகள் இருக்கும் தாமரை நீர் போல. காதலில் உணர்ச்சிகள் இருக்கும். புயலும், சூறாவளியும், பூகம்பங்களும் போல.

தர்க்க ரீதியில்

மனிதன் எந்த அநியாயத்தையும் தர்க்க ரீதியில் நியாயம் போல் காட்ட வல்லவன். அப்போது அவன் வேதாந்தம் பேசுவான், சாஸ்திரங்கள், புராணங்களை தனக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துவான். காரணம், மனிதன் உணர்ச்சிகளின் அடிமை. அவனின் உள் உள்ள சுயநலம் அப்படி அவனை ஆக்குகிறது

நவீன நாகரீகம்

ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் காட்டு மிரண்டிதனமே நவீன நாகரீகமாகிவிட்டது. இப்படி ஏன் தோன்றுகிறது எதனால் இப்படி தோன்றியது என்று சிந்தித்தால் சுற்றுப்புற சூழ்நிலையில் இருக்கும் நிலைகளே காரணம் என்று தோன்றுகிறது பணத்திற்க்குவேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனோபாவம் பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மனோ போக்கு பெரியவர்களை இலக்கியங்களை உதாசீனப்படுத்தும் பேச்சுக்கள் செயல்கள் உறவுக்கும்,உணர்வுக்கும் மதிப்பே இல்லாத சூழ்நிலைகள் தான் இப்படி தோன்ற வைத்திருக்கிறது எனக்கு ஏனோ அப்படிதான் தோன்றுகிறது

அடுத்தவரின் பாதிப்பு

ஒரு நபரின் வாழ்க்கையில் இன்னொரு நபரின் பாதிப்பு எந்த விதத்திலாவது இருந்தே தீரும். இதை நாம் நமக்குள் இறங்கி பார்க்கும்போதுதான் அந்த நபர் யார் என்பதே தெரியும். சமூகத்தில் அந்த பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர் ஆண் என்றால் மனைவியாகவோ, பெண் என்றால் கணவராகவோ இருக்க வேண்டும் என்ற ஆசையில் உண்டான நியதியே திருமணம். ஆனால் எல்லா தம்பதியருக்கும் அப்படி அமைகிறதா என்பது வினாவிற்குரிய விஷயம் தான் என்பதே உண்மை. அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், ஆன்மீக பேச்சாளர்கள்,…

வியாபார லக்ஷ்ணங்ள்

இந்த சமுதாயத்தில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பது என்ற பேச்சுக்கே இடமேயில்லை சட்ட விரோதம் என்பது வியாபார லக்ஷ்ணங்களில் ஒன்று. இதை புரியாதவர்கள் வியாபாரத்தில்  நியாயம், தர்மம், வியாபாரத்தில் வெளிப்படை சட்டத்திற்க்குட்பட்ட வியாபாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் உண்மையாகவே   பாவம்.

இப்பிறவி எடுத்தது

இப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் யோகமெல்லாம் பார்த்தவுடன் வருவதல்ல!! கோடிக்கணக்கான ஜென்மத்தின் பயனால் வருவதாகும்!!! மனதை கொண்டு போய் மூலத்தில் சேர் என்றவுடன் சேருமா, சேராது மாயை எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் சேரும். வணக்கமும், யோகமும் எதற்கு பயன்படும் என்று உதாசீனம் செய்தால் ஒரு தொழிலும் பலியாது.

ஒரே இடத்தில் நில்

மற்றவர்களுடன் கூடி பேசுவதால் குடியா மூழ்கி போய்விடும் என்று நீ கேட்கலாம் இப்போது சொல்வதை கவனமாக கேள். 5 விதமான பொறிகள் ஒரு நிலையில் நிற்காமல் அங்கும் இங்கும் ஒடும். பேச்சால் பொறிகள் கர்வம் அடைந்து கனத்து விடும் அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது. அப்படி பட்டவர்களுக்கு புத்தி கூறினாலும் அது அவர்கள் புத்திக்கு எட்டாது அதனால் யோகம் கைகூடாது. பல திக்கும் பார்க்காமல் பலதையும் பேசாமல் எச்சரிக்கையாய் ஒரே இடத்தில் நில் அப்போது யோகம்…

உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்துசெயல்படுத்துபவர்கள் தான்அரசியல்ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக பரிபாலனம் நடைபெறுகிறது

சகல உயிர்களுக்கும் 1

சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே . பசி, வலி, காமம், மரணம் இப்படியிருக்க மனிதர்களுக்குள் ஏன் இத்தனை முரண்பாடு. நான் பிறரையும், பிறர் என்னையும் புரிந்து கொள்ளாத வேதனை ஏன்? தன் உணர்வை தானே புரிந்து கொள்ளாத பரிதாபம். தன்னை மதிக்காத போது ஏற்படும் சிக்கல். மனிதன் ஏன் தன்னை மதிக்காமல் போனான். மாறுதல் ஏற்படுவதை மறுதலிக்க முற்பட்ட போது மாறுதல் வேண்டவே வேண்டாம் என்று ஆசைப்பட்ட போது ஆசையே துன்பத்திற்கு காரணமாயிற்று.

வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவர்களுக்கு

புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை அதன் இயல்பை புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம். முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்த புரிதல் இல்லாது போனால் இருப்பே இம்சையாகிவிடும்.

புரிந்துகொண்டால்

எது பார்க்கப்பட்டதோ அது காட்சி! எது கேட்கப்பட்டதோ அது கேள்வி! எது உணரப்பட்டதோ அது உணர்வு! எது அறியப்பட்டதோ அது அறிவு! இதில் ‘ நீ ‘ என்பதும் எங்கு ,எதில், எப்போது , கடைசியில் வரும் விடை நீ என்பது இல்லை என்பதே இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அவசியமில்லை உண்மை இதுதான் இதை புரிந்துகொண்டால் நிம்மதி புரியாவிட்டால் சங்கடம், வருத்தம், துக்கம், துயரம், அத்தனைதான்

பெரிய மனிதர்கள் கையாளும் முறை.

சில விஷயங்களை வெளிப்படையாக பேசிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது அவர்அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். நடந்தது எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாதது போல் சும்மா இருந்து விடுவோம். இது  வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் கையாளும் முறை. கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும், சில சமயங்களில் குடும்பத்திலும் கூட இந்த முறையை கையாள்வோர் உண்டு இதற்க்கு புத்திசாலித்தனம் என்ற பட்டமும் உண்டு  இந்த முறையை வாழ்க்கையிலும் பலர் பயன்படுத்துகின்றனர். இதை குடும்பத்தில் உபயோகப்படுத்துவதில்  பலன் என்னவென்று தான்…

ஒவ்வொருத்தருக்கு

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம், ஒவ்வொருவிதமான வேதனை. யார்தான் இங்கு நல்லா இருக்காங்க. இது கேள்வி இதை மாத்தி கேட்டா யார் தான் இங்க நல்லா இல்லை அப்படிதான் வரும் நல்லா இருக்கறது அப்படின்னு எடுத்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு நல்லாயிருக்கு அப்படி பாக்கும் போது ஏதாவது ஒரு விதத்துல ஒவ்வொருத்தரும் நல்லா தான் இருக்கான்னுதான் தோணுது

நம்ம புத்தி

நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர  நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம். கூட்டுக் குடும்பம் நம் கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி…… இதை நம்மனால ஏத்துக்க முடியாது காரணம் இதை நாம புரிஞ்சுக்காதது வளர்ச்சி தான் சரி அதுக்கு வேண்டி தான் நம்ம வாழ்க்கை வளர்ச்சி இல்லைனா வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை அப்படின்னு சொல்லி குடுத்து வளர்க்கப்பட்டிருக்கற நமக்கு இது புரிய லேட்…

தனிமையில் இருப்பவர்களுக்கு

தனிமையில் இருப்பவர்களுக்கு வேலை தான் துணை. துன்பங்களையும், வேதனைகளையும் மட்டுமல்ல ஆசைகளையும், இன்பங்களையும் கூட வேலையில் ஈடுபட்டு தான் மறக்க வேண்டும். இந்த வித்தையை தெரிந்து பயின்று தெளிந்தவர்கள் தன் நிலை மாறாமல் கெளரவத்தை இழக்காமல் அவமானத்தை அடையாமல் கரையேறிவிடுகிறார்கள். இந்த வித்தை சூட்சமம் தெரியாதவர்கள் பாவம், வேறு என்ன சொல்வது.

சில விஷயங்களை

சில விஷயங்களை பகுத்தறிவைக் கொண்டு லாப நஷ்ட கணக்கு போட்டு பார்க்க முடியாது. உதாரணம் ஒருவரின் புகழ், பெருமை போன்றவை, ஏன் ஒருவருக்கு பெருமை கூடி வருகிறது? ஏன் ஒருவருக்கு புகழ் போன்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில் சொல்லாது, அப்படியே சொன்னாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒரே காரணத்தை சொல்லுவதில்லை. காரணம் மனிதனுக்கு அறிவு மட்டுமில்லையே மனமும் இருக்கிறதே, அது மட்டுமல்ல மனிதனுக்கு வாழ்வு மட்டுமல்ல வினையும் இருக்கிறதே.

உரையாடலின் ஒரு பகுதி 8

அதிகார மமதையில் உள்ள சர்வாதிகார அரசுக்கு தேவை உணர்ச்சியற்ற, சுய சிந்தனை இல்லாத தொலை நோக்கு சிந்தனை இல்லாத, அடிமை மக்கள் தான் தேவை. அதற்கு முதலில் மக்களின் மொழி உணர்ச்சியை அழிக்க முயல்வான் அப்படி அந்த மொழி அழியும்போது அதன் இலக்கியம், பாரம்பரியம் அனைத்தும் காணமல் போய்விடும். அந்த மக்கள் முகவரியற்றவர்களாக ஆகிவிடுவார்கள் உண்மையில் நம் நாட்டில் தேச பக்தி என்பது மொழி உணர்ச்சிதான் நன்றாக ஆழ்ந்து, கூர்ந்து பார்த்தால் தெரியும். மொழி உணர்ச்சியை அழிப்பதன்…

உரையாடலின் ஒரு பகுதி 7

ஊர்கூடி செக்கு தள்ளினால்தான் எண்ணை உண்டு என்று காத்திருக்க முடியுமா? முடியும் முடியனும் அதுதான் ஜனநாயகம்  ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே சாம்ராஜ்யம், ஒரே இனம், ஒரே கொள்கை, ஒரே மொழி இது சாத்தியமா என்பதைவிட நம் நாட்டிற்க்கு இது சரியானதா? தேவைதானா ? அப்படின்னு யோசிகிச்சா தேவைஇல்லைன்னு சொல்லறதுதான் சரியான பதில் நாட்டுப்பற்று இல்லைன்னு அர்த்தம் இல்லை இதுக்கு சரியான கோணத்துல விஷயத்தை சரியா பாக்கறோம் அப்படிங்கறது தான் பதில் நம் நாட்டில் அது…

விடை தேடி 4

ஆம், எத்தனைக்கெத்தனை திருப்தி அடைந்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது, முக்கியமான விஷயம் திருப்தி அடைவதன் எண்ணிக்கை எத்தனை கூடினாலும் அத்தனைக்கத்தனை சந்தோஷத்தின் அளவும் கூடுகிறது. இது எனக்கு கிடைத்த விடை. இனி உங்களுக்கு கிடைத்த விடையையும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன். எந்த காரணமும் காரியமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்கும் கணத்தை நாம் கண்டு கொண்டிருந்தால் நான் சொன்ன விடையை நீங்கள் உணர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

விடை தேடி 3

அவசர உலகில் எத்தனையோ பணிகளுக்கிடையில் இதையெல்லாமா யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் ஒரு ஆளாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு ஆசை தான் நமக்குள் நடைபெறும் சங்கதிகளை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் பிறகு யார் தான் தெரிந்து கொள்வது? இப்படி சிந்தித்தால் என்ன? அதாவது நம்மிடம் சந்தோஷம் எனும் நிலை உண்டாவது மனதால் என்று தெரிந்து கொள்கிறோம், அப்போது உடலுக்கு சந்தோஷம் இல்லையா என்ற வினா வருகிறது, அதற்கு விடை உடலின் சந்தோஷத்தையும்…

விடை தேடி 2

ஒரே விஷயம் தரும் அனுபவம் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு விதமாக உணரப்படுகிறதே அது ஏன்? அது பணமாகட்டும், பதவியாகட்டும், படிப்பில் முதலாவது வந்ததாகட்டும், பெண் ஆகட்டும், சந்தோஷம் எனும் பொறி நமக்குள் படர்ந்து நிறைவது கன நேரமாகவோ அல்லது அன்றைய நாள் மட்டுமே தான் இருக்கிறது, பின் அதே அனுபவம் வாய்த்தால் கூட சந்தோஷம் இருந்தாலும் கூட அதன் சதவிகிதம் மாறிவிடுகிறதே, ஒரு கால கட்டத்தில் அந்த அனுபவம் நமக்கு சந்தோஷபட வைக்காமல் கூட போய்விடுகிறதே,

விடை தேடி 1

எப்போதாவது ஒரு முறை தான் மனம் சந்தோஷமாக இருப்பது நமக்குத் தெரியவருகிறது. எந்த விஷயத்தில் சந்தோஷம் வந்தது என்று குறித்து வைத்துக் கொண்டு நாம் சில காலங்களுக்குப் பிறகு அதே விஷயத்தை நாம் அடைந்தாலும் மனம் சந்தோஷமாய் இருப்பதில்லை, ஏன்? என்ன காரணம்? என்று யாரேனும் இதை சிந்தித்தது உண்டா? அப்படி இது சிந்திக்க வேண்டிய விஷயம் தானா? வினா தான் உருவாகிவிட்டதே, இனி விடை தேடி பயணப்பட வேண்டியது தான், யாரேனும் துணைக்கு வருகிறீர்களா? ம்ம்,…

புராண கதைகள் அப்படீன்னா

புராண கதைகள் அப்படீன்னா என்னங்கற விஷயத்திற்க்கு நான் ஒண்ணுல படிச்சேன் அது தாழ்வு மனப்பான்மையினால் அவஸ்த்தைப் பட்ட ஆண்கள், பெண்களுக்கு தர்மவேலியிட்டு தங்கள், தங்கள் குறைகளை மூடி மறைத்த கதைகள் தான் புராண கதைகள்.அப்படின்னு   புராண கதைகளை எந்த கோணத்துல நின்னு பாத்து இந்த கருத்தை அவர் சொல்லியிருப்பார் இந்த கருத்து சரியா நிறைய யோசிக்கனும்

உள் மன சுத்தம்

தற்கால இளைஞர்களுக்கு தன் உள் மன சுத்தம் பற்றி தெரிவதில்லை. தமக்குள் காமம் புகுந்து தன்னை வாட்டி வதைப்பதை அவர்கள் உணர்ந்தாலும் அதை வெளியே சொல்லி தீர்வு தேட முயலுவதில்லை அல்லது முடியவில்லை. காமத்தை பற்றி சிந்திக்காமல் முழுவதுமாக மற்ற வேலைகளில் ஈடுபடுகின்ற வாழ்க்கை பலருக்கு வாய்ப்பதில்லை. ஒயாமல் வேலை செய்வதென்பது இவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி வேலை செய்யும் போது காமத்தை பற்றிய நினைவே வராது என்ற உண்மை புரியவில்லை ஓயாமல் வேலை செய்வது மட்டுமே உள்…

நம் பண்பாட்டின் இயல்பான ஆதி அறிவு

நம் பண்பாட்டின் இயல்பான ஆதி அறிவு அப்படீங்கறது எப்படி இருந்ததுன்னு  தெரியுமா? ஒரு உதாரணத்தோட சொல்றேன் வாழ்க்கையில் பணம், பணம் ஒடிட்டு இருக்க, அப்ப ஹான்னு உக்காந்து ஆகாசத்தை பாக்க தோணாதா, தோணனும் அப்படி பாக்க நாம நேரம்  ஒதுக்கணும். அப்படி நாம ஒதுக்கறோமா நீயே கேட்டுக்க அப்படி ஒதுக்குன நேரத்தை நாம கொஞ்சம் மதம் சம்பத்தப்பட்ட விஷயம் கொஞ்சம் இலக்கியம் சம்பந்தபட்ட விஷயம் அப்படீன்னு நாம் நம்மள செட் பண்ணிக்கணும், அப்பத்தான் நாம மனுஷனா இருக்கோம்…

தன்னை பற்றி யோசிக்க

வார்த்தைகளுக்கு குதிக்காமல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னவரின் கோபத்தை எடுத்துப் போட்டுவிட்டு செய்தியை மட்டும் எடுத்துக் கொள்ளும் நிதானம் கைகூடும் போது, ஒருவர் தன்னை பற்றி கூர்மையாய் யோசிப்பதற்க்கு, நிறைய வழிகள் இருக்கின்றன. தலைமுறை, தலைமுறையாய் கூர்மையாய் யோசிக்க சொல்லி கொடுக்கப்பட்ட விஷயங்கள் நாகரீகம் என்ற பெயரில் மறைந்து ஒழிந்து விட்டது. அதனால் தொலைநோக்கு பார்வை என்பதே இல்லாமல் போய்விட்டது தனக்கு பின் வரும் சந்ததியினரை பற்றிய நினைவே இல்லாமல் போய்விட்டது என்ன செய்வது வளர்ச்சி,நாகரீகம் என்ற…

புத்தியின் குதியல்கள்.

சண்டை, கோபம், அதீத வருத்தம், புலம்பல், அழுகை, தனக்குதானே பேசிக்கொள்வது போன்றவை பாதி புத்தியின் குதியல்கள். அதனால் புத்தியை முழுதாய் வைத்தால் இதிலிருந்து எல்லாம் தப்பிக்கலாம் எப்படி புத்தியை முழுதாய் வைப்பது மனதை அமைதியாய் வைத்தால் புத்தி முழுதாய் இருக்கும் புத்தி முழுதாய் இருந்தால் தேவை இல்லாத குதியல்கள் இருக்காது

நாலு பேர்

நாலுபேர் பேசுகிறார்கள், நாலு பேர் பார்க்கிறார்கள் என்று நினத்தே நாம் நம்மை பல இடங்களில் இழக்கிறோம். ஆயுளில் முக்கால் வாசி காலம் இப்படியே போய்விட்டால் தனக்கென வாழும் காலம் எப்போது எந்த அளவு

தண்டித்தலில் அடி நோக்கம்

தண்டித்தலில் அடி நோக்கம் சொல்லி தருதல். தண்டிப்பது கூட கூடலை போல ஒரு சுவையான விஷயம். ஆனால் அதை கற்க வேண்டும் கூடலையே நாம் கற்றதில்லை பின் எப்படி இதை கற்பது எல்லாம் தெரிந்த மனோபாவத்தில் நாம் இருக்கும் போது கூடலையோ, தண்டித்தலையோ கற்பது எங்கனம்

வன்முறை-அமைதி

வன்முறையால் ஏற்படும் அமைதி மிக குரூரமானது. அது அடிபட்ட நாகம், புதரில் பதுங்கிய புலி தோப்புக்கு நடுவே யானை, கிணற்றுக்குள் உறங்கி கிடக்கும் வாயு விரிசல் விட்டு கீழே விழ காத்திருக்கும் கோபுர கலசம் சாம்பல் கக்கும் எரிமலை, வெளியே தெரியாமல் தனக்குள் முணுமுணுக்கும் பூகம்பம், குடும்பத்தில் இந்த சூழ்நிலை இருந்தால் உடனே கவனித்து சரி செய்யப்படவேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் சீர்குலைந்துவிடும் 

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன.

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன. அவை மின்னுவதில்லை பற்றி எரிகின்றன. அந்த வேதனை நம் கண்ணுக்கு தெரியக்கூடாது என்று வைரம் போல் ஜொலித்தபடி நமக்கு பிரம்மையை ஏற்படுத்துகின்றன. அதிக தூரத்தில் இருப்பதால்அவைஅப்படி தோன்றுகின்றன. எதார்த்தமான நிஜம் இதுதான் எந்த விஷயமும் நமக்குவெகு தொலைவில் இருக்கும் போது ஓன்று நமக்கு அது தெரிவதில்லை அல்லது அது நமக்கு அழகாய் தெரிகிறது

அனுபவ பகிர்வு

எவருக்கும் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்பது தான் இன்றைய வாழ்க்கை. அதனால் அனுபவ பகிர்வு என்பது மிக, மிக அவசியம். நாம் நம்முடைய அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதில்லை. எங்கோ எவருக்கோ நேர்ந்த அனுபவத்தையும் ,படித்தது கேட்டது போன்றவற்றையும் நம் அனுபவமாக கொண்டு நாம் பகிர்ந்து கொள்வதும் உண்டு. அனுபவம் பகிர்ந்து கொள்ள பகிர்ந்ததை புரிந்து கொள்ள வாழ்க்கை எளிதாகிறது.

தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை

துர் அதிர்ஷ்டமானவர்களுக்கு எங்கே இருந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் (அதாவது தைரியம், துணிச்சல்,தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு) தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் மனிதன் போக கூடாத வழி என்று ஒன்றும் இல்லை.

விஸ்டம் ஆப் லவ் காமு,கோமு

காமு: பிலாசஃபி அப்படீன்னா என்ன? கோமு: பிளட்டோ சொல்றார் விஸ்டம் ஆப் லவ்னு காமு: அப்படீன்னா கோமு: விஸ்டம் ஆப் லவ்வன்னா சுதந்திரமான அன்புன்னு அர்த்தம். காமு: அப்ப என்ன அன்பு அடிமையாய் இருக்கா கோமு: ஆமா காமு: எப்படி சொல்லற கோமு: ஏன் உனக்கு புரியலையா காமு: ஆமாம் கோமு: இப்ப பாத்தீன்னா நீ, அம்மாங்கறதாள நீ உன் அம்மாகிட்ட அன்பு செலுத்தற உங்க அம்மா நீ அவங்க பையன் அப்படீங்கறதாள அன்பு செலுத்தறாங்க, இதே…

திருச்சி சிவாவின் பார்வையில் வாழ்க்கை

வாழ்க்கை என்பது நம்மை ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு நகர்த்துகிறது. நாம் வெற்றி பெற்றதாகவும் வெற்றியாளராகவும் கருதப்படுகிறோம். அதற்குள் நாம் இழந்தவை ஏராளம், தொலைத்தவை ஏராளம், எதை தேடுகிறோம் என்பதையே அறியாமல் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு செல்லும் சாதாரண மனிதப்பிறவிகள்

யோசிக்க 2

ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு, ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20…

யோசிக்க 1

தனக்கு ஒப்புமை, அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்த உள்ள  தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது. பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று…

பிரமாணம் அப்படீன்னா என்ன 3

சத்துவ குணத்தோடு உள்ள தூயவனால்தான் பிரபஞ்ச சக்தியின் உண்மைகளை உணர்ந்து கிரகிக்க முடியும். அதனால ஆப்த வாக்கியம் தருகிற ஆப்தன்ங்கிறவன் முற்றிலும் தூயவனாக புலன்களை கடந்தவனாக, கடந்த கால அறிவுக்கும் முரண்படாத கருத்தை சொல்லறவனாக இருக்கணும் புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட உண்மை என்று நாம் சொல்லும் எதுவும் பழைய உண்மைக்கு மாறுபட்டதாய் இருக்ககூடாது அடுத்தது அந்த ஆப்தனின் வாக்கியபடி பயணப்படும் அனைவரும் ஆப்தன் ஆவார்கள். ஆப்தனின் வாக்கியம் அப்படிபட்டதாகவே இருக்கும். அதைவிட்டுட்டு ஆப்தனின் வாக்கியம் ஆப்தனுக்கு மட்டுமே சொந்தம்…

பிரமாணம் அப்படீன்னா என்ன 2

தம்பி இப்ப நாம இருக்குற இந்த ரூமுக்குள்ள ஒரு பயித்தியகாரன் வந்து இந்த ரூம் பூரா தேவதைக இருக்காங்க அதுலயும் உண்ண பாத்து கடவுள்ன்னு சொன்னா அது பிரமாணமாகாது. நான் சொல்லறது  கரெக்ட்டா  கரெக்ட் ஏன், அவன் புத்திசரியில்லாதவன், அப்ப சரி, பிரமாணம் அப்படின்னு சொல்லறவங்க அறிவோட ,புத்தியும் இருக்கிறவங்களா இருக்கனும். சரி தானே சரி தான் இப்ப அடுத்தது கடந்த கால அறிவுக்கு முரண்படாம இருக்கனும் இதுல என்ன முரண்பாடு இருக்கு என்னை கடவுள்னா அப்ப…

பிரமாணம் அப்படீன்னா என்ன 1

 காமு பிரமாணம் அப்படீன்னா என்ன கோமு பிரமாணம் அப்படீங்கறது ஆப்த வாக்கியம்.  காமு அப்ப ஆப்தவாக்கியங்கறது கோமு ஆப்த வாக்கியம்னா உண்மையை கண்டிறிந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள், இவர்களின் வார்த்தைகள், இவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களுக்கு ஆப்த வாக்கியம்ன்னு பேர்  காமு ஓஹோ அப்படியா கோமு விஷயங்களை புரிஞ்சுக்க புலன்களை தாண்டுன அறிவுன்னு ஒன்னு இருக்கு அந்த அறிவுனால சிந்திச்சு யோகிகள் சொன்னது தான் ஆப்த வாக்கியங்கள் காமு ஆப்தவாக்யங்களுக்கு  எது அத்தாட்சி கோமு நீ பெரிய அறிவாளி…

காலம் மறப்பதில்லை 1

மனிதன் தனது குழப்பங்களை தானே தான் வரவழைத்துக்கொள்கிறான். அவற்றிக்கு அவன் எங்கே எப்போது அழைப்பு விடுத்தான் என்பதை மறந்து போய் அவற்றை அவன் எதிர்க்கிறான். ஆனால் காலம் மறப்பதில்லை. அது சரியான தருணத்தில் சரியான முகவரியில் அது நீ விடுத்த அழைப்பை உனக்கு விநியோகிக்கவே செய்கிறது. நீ எந்த முகவரியில் இருந்தாலும் அந்த முகவரியை காலம் அறிந்து கொள்கிறது. சரியானபடி உன் அழைப்பை விநியோகிக்கவும் செய்கிறது. இது புரிந்தது என்றால் நமக்கு வினை, விதி பற்றிய அடிப்படை…

காதல்.

ஒரு காலத்தில் நல்ல பண்புள்ளவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், நல்ல உணர்வுகள் உள்ளவர்களுக்கும், இடையே மட்டுமே மிக அபூர்வமாக இருந்து வந்த விஷயம் கால ஓட்டத்தின் வேகத்தில் நிலை தடுமாறி ஒரு சகதியானது துர்பலமே.

எழுதாத விதி

மனிதன் எந்த சூழ்நிலையிலும் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட வேண்டும் என்பது எழுதாத விதி விதியை மாற்றி எழுதினால் மனிதன் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட கூடாது முக்கியமாக தான் மதிக்கத்தக்க விலை மதிப்பில்லாதது எனும் ஒன்றை இழந்துவிட கூடாது.

ஞானம் அப்படின்னா என்ன

ஞானம்ன்னா என்ன தனக்குள் உண்டான அறிவுக்கு ஞானம்ன்னு பேர் முதிர்ந்த அனுபவ அறிவுக்கு ஞானம்ன்னு சொல்லலாமா கூடாது உனக்குள் உள்ள இருந்து அறிவு வரணும் அப்படி வந்தா மட்டுமே ஞானம் அப்படி வருமா வந்துருக்கே உதாரணத்துக்கு ரிஷிகள், யோகிகள்

கர்மா செயல்படும் விதம் 4

நமக்கும் இவ்வுலகிற்க்கும் இவ்வுலகம் போல் அல்லது இதற்கும் மேற்பட்ட அண்ட பகிரண்டங்களையும் நாம் காண, அறிய, புரிய, உள்ள ஒரே கருவி நமது மனம் மட்டுமே உடல் பொறிகளும், புலன்களுடனேயே செயல்படும். ஆனால் மனம் இவைகள் இல்லாவிட்டாலும் செயல்படும் மனோவேகம் நம்மாள் கணக்கிட முடியாத வேகமாகும். இந்த அளவு ஆற்றல் உள்ள மனதை புரிந்து அதை நமக்கு பணியாளாகக்கொண்டால் நாம் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய முடியும். நாம் ஏமாந்து அதற்கு அடிமையாகிவிட்டால் நாம் அடைந்தது, அத்தனையும்…

கர்மா செயல்படும் விதம் 3

மனம் சும்மா இருந்தது என்றால் எண்ணங்கள் சிந்தனைகள் இல்லை. எண்ணங்கள் சிந்தனைகள் இல்லையென்றால் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லையென்றால் கர்மாக்கள் இல்லை. மனிதனிடம் இருக்கும் அற்புதமான பொக்கிஷம் மனம் ஆகும் அதன் வலிமையை, வல்லமையை, எத்தனை பேசினாலும் எத்தனை எழுதினாலும் தீராது. அந்த மனம் இல்லாததை இருப்பதாயும் இருப்பதை இல்லாததாயும் காட்டும் வலிமை உடையது.

கர்மா செயல்படும் விதம் 2

ஒரு செயல் செய்யப்படும் போது அந்த செயலைப்பற்றிய நினைவு வருவது முதல்படி. பின் அதை செயலாக்கத்திற்க்கு கொண்டு வருவது இரண்டாம் படி. ‍அந்த செயலினால் உண்டாகும் விளைவு என்பது மூன்றாம் படி. நினைவு வரும் இடம் மனம் அதை செயலாக்கத்துக்கு கொண்டு வரும் போது அதனுடன் உடல் இணைகிறது. அதன் விளைவுகள் எனும் போது சில சமயங்களில் மனம் மட்டும் அனுபவிக்கிறது பலசமயங்களில் உடலும் மனமும் அனுபவிக்கிறது. இதை நாம் கர்மா என்கிறோம். இதை பெரியவர்கள் மனஸா…

கர்மா செயல்படும் விதம் 1

மனிதன் செயல்படுவதற்க்கு பல உறுப்புகளின் செயல்கள் தேவைப்படுகிறது. அதில் மிக மிக முக்கிய பங்கு வகிப்பது உடலும், உயிரும் ஆகும். உடல் இயங்க காரியமாற்ற, சிந்திக்க, செயல்பட உடலின் பல உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகிறது. அப்படி செயல்பட ஆதாரமாய் இருப்பது கண்ணுக்கு தெரியும் உடலின் உள் கண்ணுக்கு தெரியா காற்று உட்சென்று வெளிவரும் இயக்கமே மற்றஎல்லா இயக்கங்களுக்கும் அடிப்படை காரணமாய் இருக்கிறது. இதை நாம் பிராணன் என்றும் உயிர் என்றும் அழைக்கின்றோம். இந்த உயிராகப்பட்டது இருக்க…

சரியான கோணம்

பிரச்சனையை சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் பரிகாரம் கிடைக்கும். மரணத்தை சரியான கோணத்தில் இருந்து வரவேற்க்க முடிந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை சந்தோஷம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அனுபவிப்பவர்களின் எல்லையை பொறுத்து இருக்கிறது வெற்றியின் ஆனந்தம் அனுபவித்து  பார்த்தவர்களுக்கு தான் அது புரியும்.

முகமூடி

நம் எல்லோருக்கும் இயற்கை முகம் என்னும் சிறிய முகமூடி போட்டு மனம் எனும் பெரிய ராட்சசனை மறைத்திருக்கிறது. அதனால் தான் நாம் நம்மை பார்ப்பதில்லை ஏன்னா ராட்ஷசனை பார்க்க எல்லோருக்கும்  பயம்தானே

நாட்டின் நிர்வாகம் 2

நாட்டின் நிர்வாக நிலைகளில் சில சமயங்களில் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய துறையில் உள்ளவர்களின்  நியாயமும்,  நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களின் நியாயமும் வார்த்தை ஒன்றாய் இருந்தாலும் அர்த்தங்கள் சூழ்நிலை நிகழ்வுகளின் தரம் அதனால் உண்டாகும் விளைவுகளை கொண்டு அர்த்தங்கள் மாறுபடும். இது முழுக்க அரசு அதிகாரிகளின் விஷயம் இதை அறிந்து கொள்ள கட்சி தலைவர்களுக்கே முடியாத போது கட்சியின் தொண்டனுக்கு எப்படி தெரியும் ஆனாலும் அவனும் நாட்டின் குடிமகன்

நாட்டின் நிர்வாகம் 1

ஒரு நாட்டின் நிர்வாகம் எனும் அமைப்பு  பல கிளைகளை கொண்ட அல்லது பல வேர்களை கொண்ட மரம். அது இயங்கும் சூட்சமம் நாட்டின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கே சரியாக தெரியாது. மக்களின் ஆதரவினால் வந்தவர்களிடம் மக்களாகியவர்கள் வேறு எதையும் அல்ல இதையும் கூட எதிர்பார்க்க கூடாது. நாட்டின் நிர்வாக சக்கரத்தின் பற்களில் பல துறைகள் உள்ளது. அதன் இயக்கங்கள் நாம் நினைக்கும் தர்மம், நியாயம், உண்மை போன்றவற்றிற்க்கு வித்தியாசமான அர்த்தங்களை கொண்டிருக்கும்.

விமர்சனம் தேவையில்லை

அடுத்தவர் புத்தி பற்றி வாழ்க்கையைப் பற்றி அசிங்கமாகப் பேச யாருக்கும் யோக்தையில்லை. அப்படிப் பேசினால் அது அலட்டிக்கிறது தானே தவிர வேறென்றும் இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்கிறார்கள் அத்தைனைதான்   இதை எப்படி புரிந்து கொள்வது விமர்சனம் செய்யாமல் அதாவது சரி, தப்பு சொல்லாமல் வாழ முடியுமா குடும்பத்தில், அலுவலகத்தில், அரசியலில், இத்தனையிலும் விமர்சனம் வருகிறதே சரி, தப்பு சொல்வது விமர்சனத்தின் பகுதியல்லவா ஒரு வேளை நன்றும், தீதும், பிறர் தர வாரா என்பது விமர்சனம்…

இன்றைய தலைமுறையினருக்கு

இன்றைய தலைமுறையினருக்கு, நிதானம் என்னும் வார்த்தையின் பொருள் மறந்தே விட்டது. எதிலும் அவசரம் கண்டிப்பாய் இந்தத் தலைமுறையினருக்கு நிதானத்தின் பொருள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும், அவர்களும் அதை புரிந்து கொண்டால் மட்டும் தான் எதிர்கால தலைமுறையாவது கொஞ்சமாவது சரியான பாதைக்குத் திரும்பும். நிதானம் இல்லாத காரணத்தால் சிந்திக்கும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. சிந்திக்காததின் விளைவு எல்லாம் அள்ளி தெளித்த கோலம் ஆக மாறிவிட்டது. அதில் வாழ்க்கையும் வாழும் நெறியும் கூட அடங்கிவிட்டது. இதனாலேயே நிதானத்தை கண்டிப்பாய் கற்று…

நேசிப்பது இயற்கை பால குமாரனின் பார்வையில்

மனிதனை மனிதன் நேசிப்பது இயற்கை    ஏனோ அது செயற்கை ஆகிவிட்டது. ஆண், பெண்ணை நேசிப்பதும், பெண், ஆணை நேசிப்பதும் இயற்கை, இயல்பு ஆனால் அதே செயற்கை ஆகிவிட்டது. இயல்பு தொலைந்தும் போய்விட்டது. சிநேகத்தை மறந்த மனிதன், பரஸ்பர விரோதத்தில் மடிந்து விடுவது நிஜம். ஆண்களும், பெண்களும் தங்களுடைய இளமைக்காலங்களில் அதிகமாக நெருங்கி பழகக்கூடிய ஒரு சுதந்திரத்தினால் சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விபரீதங்களுக்கு நெருங்கிப் பழகக் கூடியது தான் வாய்ப்பு என்றாலும், இன்றைய சூழ்நிலையில் அப்படிப்பட்ட…

சந்தோஷம் பெற

மனிதன் தனக்கு எது தேவை என்றும், எது தேவையில்லை என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் சுகமாக இருக்கவேண்டும்  நம்முடைய சுகம் யாருக்குமே இந்த உலகத்தில் துக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நம்முடைய தற்போதைய சுகம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடாது. இந்த மூன்று கொள்கைகள் கொண்ட மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தான்.

வாழ்க்கை என்றால்

வாழ்க்கை என்றால் குடும்பம் என்றால் கணவன், மனைவி சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. சமூகத்தின் பாதிப்பும் சேர்ந்தது தான் சமூகத்தின் பாதிப்பு இல்லாத வீடு இருக்காது. இந்த உலகத்தில் எந்த இருவருக்கும் இரு கட்சிகளுக்கும் எந்த இரு நாடுகளுக்கும் ஏன் தகராறு வருகிறது என்று யாராலுமே தீர்மானமாய் சொல்ல முடியாது காரணம் அவரவர்களை பொறுத்த வரையில் அவரவர்கள் செய்வது தான் சரி.

சூழ்நிலை

சூழ்நிலை என்பது காலத்தின் வசம் அந்த காலம் எப்போதும் நமக்கு அனுகூலமாய் இருக்காது. செய்ய நினைத்த, செய்ய வேண்டிய காரியத்தை செய்ய முடியாமல் போய்விடும். செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். யாருமே இதற்க்கு விதிவிலக்கல்ல. செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். வேண்டுமானால்  கால அளவுகள், செய்ய வேண்டிய காரியங்கள் மாறுபடலாம் மற்றபடி இதிலிருந்து யாரும் தப்பியது இல்லை  அவ்வளவுதான்.

உலகம் பிரம்மாண்டமானது

இந்த உலகம் பிரம்மாண்டமானது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாம் பிரம்மாண்டமானவர் என்றால் சந்தேகமும், அவநம்பிக்கையும் கூடவே எப்படி என்ற கேள்வியும் வருகிறதே, யோசித்துப் பார்த்தால் நாம் பிறந்து, இறக்கும் வரை உள்ள அனுபவத் தொகுதிகள், அறிவு விஷயங்கள் அனைத்தும் பிரம்மாண்டமில்லையா?, எந்த சிந்தனையும், எதுவுமே தெரியாத நிலையில் பிறந்து, அவரவர் நிலைக்கு இந்த அளவு வந்திருக்கிறோமே என்பது பிரம்மாண்டமல்லவா. சரியாக சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் தொடர்ச்சி என்பது எத்தனை பிரம்மாண்டம்.…

பொய் முகம்

உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம், தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது, அழிந்து போயிருக்கலாம், பொய் முகம் அணிந்து, அணிந்து பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.  ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் முகத்தை நாம் மறைத்து வேறு முகத்தை காண்பித்திருப்போம், அப்படி நாம் மறைத்து வேறு முகத்தை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில்…

உரையாடலின் ஒரு பகுதி 6

ஒரு சந்தேகம், விஸ்தாரமாக நாடெங்கும் பொது நன்மைக்காக விரைவில் ஒரு சீர்திருத்தத்தையோ,காரியத்தையோ, வலுவுடன் செய்ய ஏகாதிபத்திய சர்வாதிகார சக்தி வேண்டுமல்லவா சர்வாதிகார சக்தி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி அது ஏதாவது சந்தர்ப்பத்தில் தன்னையோ, பிறரையோ காயப்படுத்திவிடும். ஏகாதிபத்திய ஆட்சியிலும் ஆட்சியை நடத்தும் சர்வாதிகாரிக்கு முன்போ பின்போ சுயநல இச்சைகள் ஏற்படும் போது மக்களின் சுதந்திரம் பறி போவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். எந்த சமயமும் கொடுங்கோண்மையாக மாறக்கூடிய சர்வாதிகார அரசியலைவிட சக்தியற்ற மந்தமான அரசியல்…

இயற்கையும் இறைவனும் 3

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென வழிவழிவந்த ஒரு இயல்பு உண்டு அதை உறுதியாக பற்றி நின்றவாறு செயல்படுத்துவதே அந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். இந்த விஷயத்தை சிந்தித்தால் நம் நட்டின் வழிவழி வந்த இயல்பு என்ன என்பது விளங்கும் அது விளங்கிவிட்டது என்றால் நாடு சுபிட்சம் அடைந்து விடும். உண்மையில் நாம் இப்போது நமது பண்பாட்டை மறந்து இருக்கின்ற காலத்தில் இருக்கின்றோம். இது நீடித்தால் பண்பாட்டை இழந்த காலத்தில் கலந்து நமக்கென எந்த அடையாளமும் இல்லாத…

இயற்கையும் இறைவனும் 2

உயர்ந்தோங்கிய மலைகள்  அடி வானத்தை தொட்டு விடுமோ என்கிற நிலையில் அடர்ந்த கானகங்கள்  பரந்து விரிந்து இருக்கும் கடல் இவைகளை நாம் இயற்‍கையென்று அழைக்கிறோம். அதன் நிலைகளை கண்டு மனம் மயங்குகிறோம் நம்மையே மறக்கின்றோம். இவைகள் உருவான விதம் அல்லது உருவாக்கிய சக்தி எது என்ற பிரம்மிப்போடு சிந்திக்கிறோம். நம் முன்னோர்கள்  சிந்தித்து அந்த சக்திக்கு இறைவன் என பெயரிட்டு நமக்கு  தந்தனர். அதாவது இயற்கை – இறைவன் அவர்கள் மிக எளிதாக நமக்கு உணரும் வண்ணம்…

இயற்கையும் இறைவனும் 1

மதம் என்றால் என்ன? வாழ வேண்டிய முறையை உள்ளடக்கியது மதம். வாழ வேண்டிய முறை என்ன? நீயும், நானும் வேறல்ல. நாமும் பிரபஞ்சமும் வேறல்ல என்ற உண்மையை உணர்வது தான் வாழ வேண்டிய முறை இன்னும் சொல்லப் போனால் ஒன்று பலவாகி பலது ஒன்றாவது இயக்க சூத்திரம் அந்த இயக்க சூத்திரத்தை முழுவதும் உணர உள்ள கருவியாய் அமைவது மதம் நான் எனும் பேதம், நாம் எனும் போதமாய் மாற உள்ள படி நிலைகளில் முதல் படியாய்…

உரையாடலின் ஒரு பகுதி 5

ஒரு கிராம நிர்வாகத்திலும், சுய ஆட்சியிலும் பங்கு கொள்ளும் அந்த கிராம மக்கள் அனைவரும் சம உரிமைகளின் செல்வாக்கோடும், உற்சாகத்தோடும், கிராம பொது நல முன்னேற்றத்துக்கு பாடுபடுவார்கள் அந்த கிராம ஆட்சியின் சபைக்கு தலைவானக தேர்ந்தெடுப்பவன் அந்த கிராம மக்களின் நன்மையையும் நன்மதிப்பையும் மதித்து நடக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சர்வ சக்திவாய்ந்த அரசு தன்னுடைய பிரநிதியை அனுப்பி அந்த கிராம ஆட்சியை நேரடியாக நடத்தினால் அந்த ராஜ பிரதிநிதிக்கு கிராமமும் தெரியாது கிராம மக்களின் உணர்வும்…

உரையாடலின் ஒரு பகுதி 4

யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை அமைக்க இடம் கொடுத்துவிட்டால் மக்கள் அனைவரும் அடிமை, செக்கு மாடுகள், ஆகிவிடுவார்கள் அப்படி பட்ட அரசாங்கம், அரசு, சுயநலத்திற்காகத்தான் பாடுபடும். வரலாறு அதுதான் சொல்கிறது யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஜனங்களுக்காக செயல்பட்டதாக எந்த நாட்டு சரித்திரமும் கிடையாது. அப்ப ஏகாதிபத்தியம் கூடாதுன்னு சொல்லுறயா ஏகாதிபத்தியம்ன்னா என்ன ? ஒரே தலைமை புரிஞ்சுக்கோ நம்ம நாட்டுக்கு ஏகாதிபத்தியம் சரியாகாது ஏகாதிபத்தியம் என்பது சிந்திக்காத சிந்திக்க மறுக்குற அடிமை முட்டாள் பிரஜைகளை…

உரையாடலின் ஒரு பகுதி 3

தேசபக்தி என்றால் என்ன? தேசம் என்பது என்னவென்று தெரிந்தால் தான் சரியான பக்தி செலுத்த முடியும் சரி, இனி கேள்விக்கு வருவோம் தேசம்னா என்ன மண்பரப்பா? மரமா? கல்லா? தேசியக்கொடியா இல்லை. தேசபக்தின்னா மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகள் மீதும், மொழி வழி கலாசாரங்கள் மீதும் கருத்து சொல்வதும் அவற்றை பேணிக் காப்பதும் தான் தேசபக்தி. மொழிகளில், கலாசாரத்தில் கைவைக்கும் ஏதேச்சதிகாரமான ஆசை, துதி பாடுவது, ஏகாதிபத்திய அரசு எது செய்தாலும் சரி என்று ஆனந்த கூத்தாடுவது,…

உரையாடலின் ஒரு பகுதி 2

உரையாடலின் ஒரு பகுதி 2 எதிர், எதிர் கருத்து கொண்டு கட்சி ஆரம்பித்து தொண்டர்களும் மாறி, மாறி வசை பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென கட்சிகள் தேர்தலின் போது இணையும் அறிக்கை மட்டும் வரும் நாங்கள் கொள்கையில் உடன்படவில்லை ஆனால் சில விஷயங்களுக்கு வேண்டி இணைகிறோம் இணைந்திருக்கிறோம் என்று, இதை ஆழமாக யோசிக்க முடியாதவாறு எப்போதும் கட்சிகள் தொண்டர்களையும் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களையும் வைத்திருப்பார்கள். இதன் அடியில் இருப்பது  என்னவென்று உற்றுப்பார் உணரப்பார் வரும் பதில்  பதவி ஆசை மட்டும்…

உரையாடலின் ஒரு பகுதி 1

உரையாடலின் ஒரு பகுதி அரசியல் துறை என்பது ஒரே வரியில் சொன்னால் நம்ப வைத்து கழுத்தறுப்பது, அதாவது அரசியல் துறையில் உள்ள ஒருவன்  அல்லது   வாக்கு போட்ட மக்கள்,   அவன் யாரை எல்லாம் நம்பிக்கொண்டிருப்பானோ அவர்கள் எல்லாம் இக் கட்டான சூழ்நிலையில் கைவிட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல. அவனின் உயிரின் கடைசி துளி பிரியும் வரை நம்பிக்கொண்டே இருக்கும்படியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொண்டே இருப்பார்கள். இதைப் பற்றி கேட்டால் ராஜ தந்திரம், சாணக்கிய வித்தை, என்று சொல்லுவார்கள்.…

சந்தோஷமான விஷயம்

ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…