கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்கினம் 3

எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் பெறும் இவர்கள், தாய், உடன்பிறப்பு, புத்திரர் வகையில் நன்மதிப்பு, மன அமைதி பெற முடியாதவர்கள், ஆயினும், இந்த கன்னி லக்கினக்காரர்கள் தாழ்ந்த வாழ்க்கையை நிச்சயமாக அடையமாட்டார்கள். அனேகருக்கு யோகம் உள்ள, லட்சுமி கடாட்சம் பொருந்திய கணவனுக்கு தைரியம் ஊட்டுபவளாக மனைவி அமைகிறாள். சிலருக்கு இரண்டு தாரம் ஏற்படுகிறது. இரண்டாம் தாரம் திருப்திப்படுவதில்லை. சிலர் சின்னவீடு வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் உண்டு. பெண்களின் அரவணைப்பு இவர்களை அணைக்கத் துரத்தி வரும். இவர்கள் பெண்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம் 2

4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள். மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி  முனிவர். இது மறுக்க முடியாத உண்மை, உண்மையே.. சுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம்.1

“கன்னி லக்கினத்தக்கசுரருக்கிறைபொன் காரியுஞ்சுபர்மதியரிசேய் மன்னிய மூவரசுபராங்கவி மாலுமேயோக காரகராம் உன்னியவன்னோர்மருவினுமதிக யோகமே தரவரவசுபர் பன்னுமாரகராமாரகத்தானப் பதிவரிற்கண்டமாம்பலனே ” (யவன காவியம் ) செவ்வாயுஞ் செம்பொன்னுஞ்சேரா மதியுமிவர் செவ்வாயர் வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன் பார்ப்பவனும் பங்கய்மா வைரிமைந்தன்னானிவர்கள் ஆர்ப்பொருமாயோகத்தாராங்கு ” (தாண்டவ மாலை ) “மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும் காலேயோகம் புந்திபுகர் ” (ஜாதக அலங்காரம் ) மேற்கண்ட கவிகளின்படி 1 – 10 – க்கு புதனும், 2, 9 –…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 15

ஞான சாதனை ஞான சாதனை என்பது ஆண்டவனுடைய தாமரைப் பாதங்களில் மனத்தை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்கிக் கிடப்பதாகும். ஞான சாதனைகளைத் தனிமையான இடத்தில் பழகுவது மிக அவசியமாகும். செடி சிறியதாக இருக்கும்போது வேலி மிக அவசியம். அது பெரியதாகிவிட்டால் கால் நடைகள் அதற்கு எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது. அது போல் சில காலம் தியானத்தில் ஆழ்ந்த மனம் நிலைத்த பிறகு நீ எங்கு வேண்டுமானாலும் தங்கி யாருடன் வேண்டுமானலும் பழகலாம். உன்மனம் அதனால் பாதிக்கப்படாது.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.3

5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கபடி நன்மை தீமைகளைத் தருகிறார். 6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன்இணைவு பெறும் போது பெரும் தீமைகளை தருகிறார். சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன்,தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது. சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 14

குழந்தாய் வருத்தப்படாதே, நம் குருதேவரே ம‍கேசுவரரும், மகேசுவரியும், அவரே எல்லாத் தெய்வங்களின் உருவமும் ஆவார். அவரே எல்லாத் தெய்வீக மந்திரங்களின் வடிவமும் ஆவார். எல்லாத் தேவர்களையும், தேவியர்களையும் அவர் மூலமாக வணங்கலாம் அவரை மகேசுவரர் என்றும் மகேசுவரி என்றும் அழைக்கலாம். வெறும் புத்தகப் படிப்பினால் ஒருவர் நம்பிக்கை பெறமுடியுமா? அதிகமாகப் படிப்பது குழப்பத்தை உண்டாக்கும் சமய நூல்களைப் படித்தறிந்து, கடவுள் ஒருவரே சத்தியம் என்பதையும், உலகம் மித்தை என்பதையும் உணரவேண்டும் என அடிக்கடி குருதேவர் சொல்வார்.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.2

 2, 11 க்குரிய புதன் மாரக தன்மை பொருந்தியவனாக வந்தாலும் நல்ல யோக பலன்களை தருவதில் தவறுவதில்லை. இவர் நல்ல இடங்களில் இருந்து சூரியன் – செவ்வாய் தொடர்பை பெற்றால் கல்வியில் நல்ல தேர்ச்சியை தருகிறார் மருத்துவத்துறை ,பொறியியல்துறை, கணக்கு துறையில் தேர்ச்சியும் உயர்தர பதவிகளும் கிடைக்கிறது. 3.10 க்குரிய சுக்கிரன் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் தனித்த நிலையில் நன்மைகள் செய்வதில்லை. தனித்த நிலையில் இருந்துவிட்டால் அவர் காலம் வரும்போது பல பாதிப்பான பலன்களை தருகிறார். செவ்வாயுடன்…

பவனமுக்தாசனம்

 பவனமுக்தாசனங்கள் ஆண், பெண், வயதானவர், சிறுவர் யாவரும் செய்யக்கூடிய மிக இலகுவான ஆசனமாகும். உடல் முதுமை அடைந்து இறுகுவதைத் தடை செய்யும். பலவீனமானவர்கள், நோயாளிகள் உடல் கனமானவர்கள் யாவரும் செய்யக்கூடிய மிக எளிமையான யோகாசனம், இரத்த அழுத்த நோய்க்கு மிகச் சிறந்த பயிற்சி. பவன முக்தாசனம் மனிதனை அமைதிப்படுத்தி, ஒரு சிறந்த நல்ல ஆரோக்கியப் பாதைக்கு அழைத்துச் செல்லும், யோகாசனத்தைப் பற்றியோ பிற விரைவுப் பயிற்சியைப் பற்றியோ ஒன்றும் தெரியாதவர்கள் கூட இப்பயிற்சியை வெகு எளிதாகப் பயிலலாம்.…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.1

“சிங்க வோரையினிலுத்தவர்க் கிரவி சேய் சுபர்கவி புதன்பாவர் மங்கல குசனும் யோககாரனாய் வரினுமம் மண் மகனாலுக் கங்க மாயுள் ளோனாதலிற்றீமை யாம் பலனீ குவன் வெள்ளி பங்குமாரகாரகமாரகத் தானம் பரிவினுங் கண்ட மாய்ப்பகரே” ( யவன காவியம்) “புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி செந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்யோகமுற்றோர் இப்பலனை யோராதளித்திடுவார் ஆகமதியாரார் புகர் ” ( தாண்டவ மாலை ) “முதலே சிங்கம் புந்தி, புகர், மோதும் பாவர், செய்சுபனாம் ”, “சேர்ந்த சிங்க…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 13

ஒரு மனிதனுக்கு உலகத்தில் எங்குமே எவ்வித உறவினரும் இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மகாமாயை அவனை ஒரு பூனையை வளர்க்குமாறு செய்து உலக பந்தத்தில் சிக்க வைத்துவிடுவாள். அவளது விளையாட்டு அவ்வாறானது என்று குரு தேவர் சொல்வது வழக்கம். கேள்வி – நான் ஏன் குருதேவரின் தரிசனம் பெறுவதில்லை? பதில் – தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவா. எல்லாம் தக்க காலத்தில் ஏற்படும். முனிவர்களும், ரிஷிகளும் ஆண்டவனை உணர எத்தனை , தவம் புரிந்தனர் என்பது தெரியுமா?…

சவாசனம் ( சாந்தியாசனம் ) SAVASANAM

விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் நீட்டி படத்தில் காட்டியபடி அமைக்கவும். கண்ணை இலேசாக மூடிக்கொள்ளவும். உடல் பாதத்திலிருந்து மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கைகள், முகம் இவைகள் வரிசையாக இணைத்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சு. நாம் இறந்து போனால் எவ்வாறு உடல் இருக்குமோ அது போன்று உடலை இளக்கி சலனமின்றி 3 முதல் 5 நிமிடம் இருந்து, எழுந்திருக்கவும். ஆசனங்கள் செய்தபின் கடைசியாக சவாசனம் செய்யாமல்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 12

நம் குருதேவர் எழுதப் படிக்க அதிகமாக அறியாதவர். உண்மையில் வேண்டுவது கடவுளிடம் பக்தியே. ஏழையையும், பணக்காரனையும், கற்றவனையும், கல்லாதவனையும் அனைவரையும் விடுவிக்கும் பொருட்டே குருதேவர் இம்மண் மீது தோன்றினார். மலயமாருதம் இங்கு வீசுகின்றது. தன் வாழ்வுப் படகின் பாய்களை விரித்துவிட்டுக் குருதேவரிடம் அடைக்கலம் புகுவோர் நிச்சயம் சிறப்புற்றவரே. ஒவ்வொன்றும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று குருதேவர் தீர்மானித்து வைத்துள்ளார். அவரது பாதங்களில் யாரேனும் பூரணமாகச் சரண்புகுந்தால் எல்லாம் நேராக நடக்கும் வண்ணம் அவர் பார்த்துக் கொள்வார். நடப்பது ஒவ்வொன்றையும்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்3

கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும். இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மனைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை. பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை. நிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராகு திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது. ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும். குரு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 11

எப்போதும் செயலாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். வேலையின்றி ஒரு போதும் இருத்தலாகாது. ஏனெனில் செயல் அற்ற சோம்பல் நிலையில் எல்லாவகைக்கெட்ட எண்ணங்களும் மனத்தில் உதிக்கும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் என்னிடம் கூறுவது உண்டு. கேள்வி — குருதேவர், தம்மை ஆன்மீக இலட்சியமாக ஏற்றுக் கொண்டோருக்குப் பிறப்பில்லை என்று” கூறியிருக்கிறார். பின்னால் சுவாமி விவேகானந்தர் சன்னியாசம் பெறாதவர்களுக்கு மோட்சமில்லை என்று கூறியுள்ளார். அங்ஙனமானால் இல் வாழ் வார்க்கு உய்யும் வழியாது? பதில் — குருதேவர் சொன்னதும் உண்மை, நரேந்திரர் ( சுவாமி விவேகானந்தர்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்2

குரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள். கடக லக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை. இது அடியேன் அனுபவம். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று…

ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் – HASTHA PADANGUSTHASANAM

கால்களை விறைப்பாக நிறுத்தி, கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டு, மார்பை முன்புறம் தள்ளி நிமிர்த்தி ஒரு காலைத் தூக்கும்போது மூச்சை வெளியிட்டு, மடக்கிய காலை படத்தில் காட்டியபடி உடம்பிற்கு நேர்கோணத்தில் கொண்டு வரவும். இப்பொழுது கால் தூக்கிய நிலையில் வந்தவுடன் இரு கைகளையும் படத்தில் காட்டியபடி நீட்டி, தூக்கிய நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் பிடித்துக்கொண்டு சில வினாடியில் நிறுத்திவிட்டு, பின்னர் சுவாசத்தை…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடக லக்கினம்.1

“கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்சுபராங்காரகன் யோககாரகனா முடனிருந்திடினும் பிரபல யோக  முற்றவனி ரவியோ கொல்லான் றிடமுள பளிங்கு மாலிவர சுபர்  செப்பிய விவரொடுங்கொடிய முடவன் மாரகனாமாரகத்தான்  முற்றிடிற் கண்டடமு மொழியே” ( யவன காவியம் ) “சுங்கனிந்து மைந்தனிவர் சூழாக்கொடுக்கோட்கள் மங்கலன்மா வேந்தனிவர் மன்னுகின்ற-துங்கமுள்ள நல்லோர் கணல்லயோகக் கிறைவனாகுமவன் சொல்லுறிற்பூ சிதனமாய் சொலல் ( தாண்டவ மாலை ) “நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய், இதமார் சுபனாம் சேய்யோகம் இருக்கும்” ( ஜாதக அலங்காரம் ) “கர்கடக…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 10

ஸ்ரீராமகிருஷ்ணர் பல சமயக் கொள்கைகளையும் அனுஷ்டித்துப் பார்த்தது  அவைகளில் காணும் ஒரு மேம்பாட்டை எடுத்துப் போதிப்பதற்கு என எனக்குத் தோன்றவில்லை. இரவும், பகலும் எந்நேரத்திலும் அவர் ஆண்டவனைப்பற்றிய ஆனந்த நினைவில் மூழ்கிக் கிடப்பார்  வைஷ்ணவ, கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிகளைப் பின்பற்றி நடந்து ஆத்மிக சாதனங்களை மேற்கொண்டதால் அவர் தெய்வீக லீலைகளை அனுபவித்தார் அனால், குழந்தாய், குருதேவரின் சிறப்பான அம்சம் அவர் கொண்ட துறவு நிலையே. அது போன்ற இயல்பான துறவினை யாரேனும் கண்டிக்கிறார்களா? அவரது அணிகலம் துறவே.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 9

சிராத்தத்தில் ( பிதிர்கட்கு ) அளிக்கப்படும் உணவை உண்ணக் கூடாது என்று பக்தர்களுக்குக் குருதேவர் சொல்வதுண்டு, ஏனெனில் அவ்வித உணவு பக்திக்கு ஊறு செய்யும். அது தவிர கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட எவ்வித உணவையும் ஒருவர் உண்ணலாம் . குருதேவர் உன்னைக் காப்பவராக இருப்பார். நீ அவரை நம்பி வாழ வேண்டும். அவர் விரும்பினால் உனக்கு நன்மை செய்யட்டும், இல்லையேல், உன்னை மூழ்கச் செய்யினும் செய்யட்டும். ஆனால் நீ எப்போதும் உன் சக்திக்குட்பட்டு, எப்போதும் நேர்மையானதையே செய்தல்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 4

இந்த மிதுன லக்கினக்காரகர்கள் எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்தவிடக்கூடாது மனம் தளர்ந்தால் மென்மேலும் சிக்கல்களே தொடரும். ஆகவே எவ்வித சோதனைகள் வந்தாலும் துணிந்து போராடினால் நிச்சயமான வெற்றி உங்கள் பக்கம்தான்-இதில் சந்தேகமில்லை. இதே லக்கினத்திற்கு,  அந்தணரும் கேந்திரமேர  அவர் செய்யும் கொடுமையது மெத்தவுண்டு குரு 1,4,7,10-ல் இருப்பது தவறு. ஆயுள் குற்றத்தை தர இடம் உள்ளது. மிதுன லக்கினத்திற்கு குரு பலம் பெறுவது தவறு 9 – ல் வரும்போது பலன் சொல்ல முடியாத நிலையே. செப்புவாய்…

சக்கராசனம் — CHAKKARASANAM

சக்கராசனம் — CHAKKARASANAM முதல் முறை — பிறையாசனம் கொஞ்ச நாள் செய்த பிறகு இவ்வாசனத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் கைகளைத் தரையில் தொட வேண்டும். பின் மூச்சை உள்ளே இழுத்து கைகளைத் தரையில் அழுத்தி எழுந்திருக்கவேண்டும். இரண்டாவது முறை — தரையில் படுத்துக்கொண்டு கால்களை இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும் உடலையும் உயர்த்தி படத்தில் காட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம்.3

மிதுன  ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை (அ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு. இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ (அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களும் மாரகத்தை தரக்கூடியவர்களே. இந்த மிதுன லக்கினகாரர்களுக்குப் பெரும் பாவியான குரு பகவான் தனது வீட்டிற்கு மறைந்து இருப்பினும் (அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம்…

இயற்கையும் இறைவனும் 3

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென வழிவழிவந்த ஒரு இயல்பு உண்டு அதை உறுதியாக பற்றி நின்றவாறு செயல்படுத்துவதே அந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். இந்த விஷயத்தை சிந்தித்தால் நம் நட்டின் வழிவழி வந்த இயல்பு என்ன என்பது விளங்கும் அது விளங்கிவிட்டது என்றால் நாடு சுபிட்சம் அடைந்து விடும். உண்மையில் நாம் இப்போது நமது பண்பாட்டை மறந்து இருக்கின்ற காலத்தில் இருக்கின்றோம். இது நீடித்தால் பண்பாட்டை இழந்த காலத்தில் கலந்து நமக்கென எந்த அடையாளமும் இல்லாத…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 2

மிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ராஜயோகம் என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும். மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்,புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள். சந்திரன் மாரகத்தை செய்யான். ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி-…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 1

“மைதுனவோரை வந்தவற்கிரவி மண்மகன் பீத்கன் கொடுமை செய்குவர் பொன்னுஞ்சனியுமே கூடிற் செகமிமை யோககாரகராம் ஐயவெண் பிறையு மாரகனல்ல வந்றியுங் குசனு மாரகனாம் பைரவதனைக் கவர்ந்த ரசிலையைப் பழித்திடுங்கடி தடத்தணங்கே” ( யவன காவியம் ) “சேய்சீவனோடிரவி சேராக் கடுங்கோடியர் ஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய் மந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல் நந்துமேடப்படியே நாடு” ( தாண்டவ மாலை ) “மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி தனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ்“மைதுனவோரை வந்தவற்கிரவி சனியுமற்ற பலன் ”…

இயற்கையும் இறைவனும் 2

உயர்ந்தோங்கிய மலைகள்  அடி வானத்தை தொட்டு விடுமோ என்கிற நிலையில் அடர்ந்த கானகங்கள்  பரந்து விரிந்து இருக்கும் கடல் இவைகளை நாம் இயற்‍கையென்று அழைக்கிறோம். அதன் நிலைகளை கண்டு மனம் மயங்குகிறோம் நம்மையே மறக்கின்றோம். இவைகள் உருவான விதம் அல்லது உருவாக்கிய சக்தி எது என்ற பிரம்மிப்போடு சிந்திக்கிறோம். நம் முன்னோர்கள்  சிந்தித்து அந்த சக்திக்கு இறைவன் என பெயரிட்டு நமக்கு  தந்தனர். அதாவது இயற்கை – இறைவன் அவர்கள் மிக எளிதாக நமக்கு உணரும் வண்ணம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்4

இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது. பிரிவினை, தாரதோஷம், வம்ச தோஷம் மனைவிக்கு அகால மரண தோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது. புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்துவிடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை. இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார். அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள். சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜ…

நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால்

ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா, 10,000 ரூபாயும் செலவு செய்யலாம். ஆனால்!!! அதையே அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா, சேவை கட்டணம் 15% – 1,500 ரூபாய் போக, அவரால் 8,500 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும்.  யோசிங்க  இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் சேரும். ஒரு…

இயற்கையும் இறைவனும் 1

மதம் என்றால் என்ன? வாழ வேண்டிய முறையை உள்ளடக்கியது மதம். வாழ வேண்டிய முறை என்ன? நீயும், நானும் வேறல்ல. நாமும் பிரபஞ்சமும் வேறல்ல என்ற உண்மையை உணர்வது தான் வாழ வேண்டிய முறை இன்னும் சொல்லப் போனால் ஒன்று பலவாகி பலது ஒன்றாவது இயக்க சூத்திரம் அந்த இயக்க சூத்திரத்தை முழுவதும் உணர உள்ள கருவியாய் அமைவது மதம் நான் எனும் பேதம், நாம் எனும் போதமாய் மாற உள்ள படி நிலைகளில் முதல் படியாய்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்3

சூரியன்-சனி போன்றோர் யோகத்தன்மையும், சந்திரன், குரு-சுக்கிரன் போன்றோர் அசுபத்தன்மையும், சந்திரன் குரு, செவ்வாய் மாரகத்தன்மையும் புதன் அசுபனாயினும் மாரகர் ஆகிறார். சந்திரன்-குரு, செவ்வாய் போன்றவர்களோடு சேர்ந்த எந்த கிரகமும் தீமைகளைத் தருவதோடு ஆயுள்தோஷத்தையும் தர காரணமாகிறார்கள் என்று ” யௌவன காவியம்” கூறுகிறது. ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4 – ல் சந்திரனிருந்து புதன்,குருவின் தொடர்பை பெற்றால் ( அ )பார்க்கப்பட்டால், யோக பலன்கள் விருத்தியாகும். சனி, ரிஷப லக்கினத்திற்கு சூரியன் – புதன் ஆகியோரின் தொடர்பை…

பிலவ ஆண்டு (2021-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2022 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர் சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை பாலுமின்றிச் செயபுவனம் பாழ் விளக்கம்: அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு, உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.

கோள்களின் கோலாட்டம் – 1.7 12லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம் 2

ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார். சந்திரன் 3 – ஆம் ஆதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள். இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே. சந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல. புதன் பஞ்சாமாதியத்தினால் சுபராயினும்,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்.

ரிஷப லக்கினம். “விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு மிக்க வர்சனி யிறையோகன் படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர் பனிமதி பொன் குசனிவர்கள் மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான் மாடிகருட னெவரேனும் அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங் கறைகுவர் சோதிட முணர்ந்தோர்” ( யவன காவியம் ) “குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர் மருவு சுபக்கோண் மந்தனென்றூழ் திருவுமா யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே ஆகுமெனப்பாவாயறி. குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும் மருவினைய ராராயினென்றுந் – தெரியும் படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும் முடியுடையார் கட்குமொழி.” ( தாண்டவ…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-

இந்த மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார். இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது. சொத்துக்கள் சேரும். ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும். காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது. செவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்ல நிலையில் இருப்பின் யோகம் தருகிறது.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 2

செவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார். ராகு, கேதுக்கள் இந்த மேஷ லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள். ராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள். ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 1

மேஷ லக்னம் :- பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள். இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது. காப்பாற்றி விடுகின்றனர். சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்று இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர். புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் 2, 7,…

கோள்களின் கோலாட்டம் பாகம்-1  – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு

யவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் – சந்திர கலா நாடி – சந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்து அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக இதனை உங்கள் முன் படைக்கிறேன். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ லக்கினத்திற்குரவி பொன்னல்லர் மிகவும் யோககாராங் கூடியேயிரக்கிற்..பிரபல யோகங் கொடுப்பர்மால் கவிசனி தீயோர்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 8

கேள்வி — நீங்கள் நைவேத்தியம் செய்யும் உணவை உண்மையில் குருதேவர் உண்கிறாரா? பதில் – ஆம், அவர் உண்கிறார். அவர் கண்ணிலிருந்து ஓர் ஒளி எழுந்து உணவுப் பதார்த்ததங்கள் அனைத்தையும் தடவுகிறது. பக்தர்களின் திருப்திக்காகவே அவர் நைவேத்திய உணவை உண்கிறார். அந்தப் புனிதப் பிரசாதம் மனத்தைப் பரிசுத்தமாக்கும். ஆண்டவனுக்கு நைவேத்தியம் பண்ணாத உணவை உண்பதால் மனம் அசுத்தமடைந்துவிடும். குருதேவருக்கு நைவேத்தியம் பண்ண எவ்விதமான சடங்குகளும் தேவையில்லை. குருமுகமாகப் பெற்ற மந்திரமே போதுமானது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 7

பரிசுத்தமான தெய்வப் பிறவியாக இருந்தபோதிலும் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறர் பொருட்டுத் துன்புற்றதையும், ஆயினும் அதே சமயம் தமது ஆனந்த பரவசத்தையும் தேவியினைப் பற்றிய தியானத்தின் இன்பத்தையும் ஒரு கணமும் இழக்காமல் வாழ்ந்ததையும் மட்டும் நீ நினைத்தாயானால், உன் துக்கமும், துன்பமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அவர் ஆனந்த சொரூபி. ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர் பக்தி பரவசத்திலும், களிப்பிலும், சிரிப்பிலும், போதிப்பிலும், கதை சொல்வதிலும் ஈடுபட்டிருந்தார். எனக்குத் தெரிந்தவரை அவர் எதற்காகவும் கவலைப்பட்டதாகத்…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஏழு முதல் பன்னிரண்டு வரை

ஏழாம் பாவம் களஸ்திரஸ்தானம்:– காமம், ஆண், பெண் லட்சணம், சையோகம், கூட்டுத்தொழில் விசயம், வழக்கு அபராதம் விவாக பிரிவினை குத்தகை அன்னிய தேச செல்வாக்கு, நீண்ட ஆயுளுக்கு பங்கம், இழந்ததை பெறல் தத்து பிள்ளை. எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம்:- அவமானம், அபகீர்த்தி, நித்தி¬, மரணம், தீர்க்காயுள் கொலை செய்தல், தந்திரம், தத்து ஸ்தானம், மறுபிறப்பு, ஆயுள் ஸ்தானம், உயில் விவரம், செயற்கை மரணம். எதிரியால் பயம், பழி, கெட்ட பெயர். முற்றுகை, அறுவை சிகிச்சை ,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம். 1

ஸ்ரீ மத் மேதா தக்ஷிணா மூர்த்திநே நம., சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரகம், என்னும் பஞ்ச கிருத்தியங்களை நடத்தும் மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளது பாதாரவிந்தங்களை இடைவிடாது திரிகரண சுத்தியுடன் தியானித்து ( வைத்தியோ நாராயணா ஹரி ) என்கிற வாக்கிய அனுசசாரமாய், ஆயுள்வேதத்திற்கு மூல புருஷோத்தராகிய வைகுண்டவாசனை சதாபஜித்து நான் எழுதும் கிரந்தம் விக்கினமில்லாது சம்பூரணம் ஆகும் பொருட்டு திரிசக்தி சொரூபத்தை ஸ்தோத்தரித்து ஆயுர்வேத குறவர்களை புகழ்ந்து இரண்டாவது காண்டம் எழுதலாயினேன். இக்காண்டத்தில், தன்வந்தரி, சாரங்கதரீயம்,…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஓன்று முதல் ஆறு வரை

முதலாம் பாவம் ஜனன தன்மை முடி-மெய்:- பிறர் பணத்தை தனதாக்குதல், தோல் சம்பந்தம், இளைய சகோதர விசயம், தாய்வழி சொத்து, உயர் தர கல்வி, நெடும் பிரயாணம், வெளிநாட்டு வாழ்க்கை, தாய் மாமனுக்கு வரும் ஆபத்து, தந்தையின் தொழில் வியாபாரம், ஜாதகனின் சிறப்பு பழக்க வழக்கங்கள் திடகாத்திர நிலை பலம். இரண்டாம் பாவம் குடும்பஸ்தானம், கற்பனை:- வலது நேத்திரம், முகம், வித்தை, தனம், உணவு, வாக்கு, நெற்றி, ஜீவ காருண்யம், நாசி, பல், பாத்திர பண்டம், அன்னதானம்,…

உரையாடலின் ஒரு பகுதி 5

ஒரு கிராம நிர்வாகத்திலும், சுய ஆட்சியிலும் பங்கு கொள்ளும் அந்த கிராம மக்கள் அனைவரும் சம உரிமைகளின் செல்வாக்கோடும், உற்சாகத்தோடும், கிராம பொது நல முன்னேற்றத்துக்கு பாடுபடுவார்கள் அந்த கிராம ஆட்சியின் சபைக்கு தலைவானக தேர்ந்தெடுப்பவன் அந்த கிராம மக்களின் நன்மையையும் நன்மதிப்பையும் மதித்து நடக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சர்வ சக்திவாய்ந்த அரசு தன்னுடைய பிரநிதியை அனுப்பி அந்த கிராம ஆட்சியை நேரடியாக நடத்தினால் அந்த ராஜ பிரதிநிதிக்கு கிராமமும் தெரியாது கிராம மக்களின் உணர்வும்…

பொன் மொழிகள்

சொர்க்கமும், நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள். நனையச் செய்த கடவுளே காய வைக்கவும் செய்வார். கெட்ட பெயரெடுத்த ஒரு மனிதன் ஏற்கனவே பாதித் தூக்கிலிடுகிறான். கடவுளை நெருங்கிச் செல்வதற்கு மலையேற வேண்டிய தேவையில்லை. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமை இல்லாதவன் ஏழைகளிலும் ஏழை. உன் பெயர் தான் வியாபார அடையாளம், அதை உன் உயிர் போல் காப்பாற்று. நமது அறியாமையை மேலும், மேலும் அறிந்து கொள்வதே கல்வி ஆகும். கடன்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 3

அவித்தையாகிய அஞ்ஞானம் எனப்படுவது இப்படிப்பட்டதென்று விரித்துக்கூற இயலாதது, அது அனாதி, அது இவ்வுலகத் தோற்றறத்திற்கு காரணம். அது ஆத்மாவிடம் கற்பனை செய்யப்பட்ட உபாதி. தண்ணீரில் சந்திரனுடைய பிரதிபிம்பம் ஆடுவது தண்ணீரின் ஆட்டத்தால் என்று அறியாதவன் சந்திரனே ஆடுவதாய் எண்ணுவது போல் மனதிற்குச் சொந்தமான கர்த்ருத்வம், போக்த்ருத்வம் ( செய்ப வனாயும், அனுபவிப்பவனாயும் இருக்குந்த தன்மை ) முதலிய குறுகிய மன பான்மைகள் ஆத்மாவிடம் தவறாகக் கற்பனை செய்யப்படுகின்றன. அஞ்ஞானி பயனில் ஆசை வைத்துக் கர்மத்தை மேற்கொள்ளுகிறான்.

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 2

கருமத்தால் அஞ்ஞானத்தை அழிக்க இயலாது, ஏனெனில் அது அஞ்ஞானத்திற்கு விரோதியன்று எப்படி ஒளியால் மட்டும் இருளைப் போக்க இயலுமோ அப்படி ஞானம் ஒன்றினால்தான் அஞ்ஞானத்தை ஒழிக்க இயலும். ஆத்மா அளவிற்குட்பட்டதாயும் கட்டுப்பட்டதாயும் தோன்றவதற்கு காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் அழியும் பொழுது வேற்றுமையைக் கடந்த ஆத்மாவானது, மேகம் நீங்கியதும் சூரியன் பிரகாசிப்பதுபோல் தன்னுடைய ஸ்வரூபத்தைத் தானே விளக்கிக் காட்டும். உலகம் விருப்பு, வெறுப்புக்களால்நிறைந்துள்ளது. அது ஒரு கனவுக்கொப்பாகும். அஞ்ஞான நிலையில் அது உண்மைபோல் தோன்றினாலும், ஞான விழிப்பு ஏற்பட்டதும்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு.

அவித்தை (அஞ்ஞானம்). உடல் முதலிய தொகுதிகளை ‘ தான் ‘ அல்லது ‘ ஆத்மா ‘ எனக் கொள்வது அவித்தை அல்லது அஞ்ஞானம். (வெளிச்சம் குறைந்த இடத்தில்) ஒரு பழுதை பாம்பெனக் கருதப் படுவது போலும், முத்துச் சிப்பி வெள்ளியெனக் கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல் ஆத்மா எனக்கருதப்படுகிறது. ஒரு ஸ்தம்பம் ஆள் என்று தவறாய்க் கருதப்படுவது போலும், கானல், நீர் என்று கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல், ஆத்மா எனக் கருதப்படுகிறது. ஸம்ஸாரம் எனப்படும் தோற்ற…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 6

கேள்வி – நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தந்தை எனக் கருத முடியுமா? பதில் – ஆம், அவர் என் தந்தையாரும், தாயாரும், உடன் பிறந்தாரும், நண்பருமாவார். எனக்கு எல்லாம் அவரே, நீ அவர் உருவப் படத்தின் முன்னின்று பிரார்த்தனை செய்தால் அப்படித்தின் மூலம் உனக்குக காட்சி தருவார். அந்தப் படம் வைக்கப் பட்டிருக்கும் இடம் கோயிலாக ஆகிவிடும். வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்டவனின் நாமத்தை, ஸ்ரீராமகிருஷ் ண‍ரின் பெயரை, மோனமாக ஜபிப்பது. ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நம்பிக்கை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 5

குருதேவர் மகா சமாதி அடைந்தபோது நானும் போகவே விரும்பினேன், ஆனால் அவர் என் முன் தோன்றி, நீ இங்கேயே இருக்கவேண்டும். செய்து முடிக்கப் பலபணிகள் இருக்கின்றன, என்று கூறினார். சூட்சும சரீரயாய்ப் பக்தர்கள் இதயத்தில் முந்நூறு வருடகாலம் வாழப்போவதாக அவர் கூறினார். உலகிற்குக் கடவுளின் தாய்மைத் தன்மையை எடுத்துக் காட்டவே ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை இவ்வுலகில் விட்டுச் சென்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஆண்டவனே ஸ்ரீராமகிருஷ்ணராகத் தோன்றினான். இது உண்மையே. பிறருடைய துக்கத்தையும், துன்பத்தையும் போக்கவே ஆண்டவன் அந்த மனித வடிவைப் பெற்றான். தனது நகரில் மாறுவேடத்துடன் செல்லும் அரசனைப்போல உலவினான். பிறர் அவனை இன்னான் என உணர்ந்ததும் அவன் மறைந்துவிட்டான். குருதேவரைச் சரண்புகுந்தால் நீ யாவையும் பெறுவாய். துறவுதான் அவரது பெருமை. நாம் அவர் பெயரைச் சொல்வதும் உண்பதும் அனுபவிப்பதும் அவர் எல்லாவற்றையுமே துறந்து விட்டமையால்தான். சத்தியத்தினிடம் குருதேவருக்குத்தான் எவ்வளவு பற்று, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் உண்மையைக் கடைப் பிடிப்பதே…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 4

கீழ்நோக்கி ஒடுவதே தண்ணீரின் இயற்கை. ஆனால் கதிரவனின் கிரணங்கள் அதனை ஆவியாக்கி வானில் உயர்த்துகின்றன. அதுபோன்ற மனமும் இழிந்த பொருள்களான விஷய சுகங்களை நாடிப் போவது இயற்கை . ஆனால் கடவுளின் அருள் உயர்ந்த பொருளை நாடிச் செல்லும்படி மனத்தை தூக்கிவிடும். நாம் நூறு தரம் கேட்டாலும் கூடத் தன் கையிலுள்ளதைக் கொடுக்க மறுக்கும் குழந்தை மற்றொருவருக்கு கேட்ட மாத்திரத்திலேயே கொடுத்துவிடலாம். அது போன்றே ஆண்டவன் அருளும் எவ்விதக் கட்டுப்பாடும் அற்க்கு கிடையாது .

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 3

உலகத்தில் துன்பம் நிறைந்திருக்கிறது. நாங்கள் ஆண்டவனை வணங்கினோம். ஆயினும் துன்பத்திற்கு முடிவுமில்லை, என்று வருந்திப் பலர் கூறுகின்றனர். ஆனால் துன்பமும் கடவுள் தந்த பரிசே. அத்துன்பம் கடவுட் கருணையின் சின்னமாகும். ஒருவருக்கு வேண்டுவதெல்லாம் இறைவனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்யவேண்டும். மனிதப் பிறவியிலே எவ்வித மகிழ்ச்சியும் இல்லை, உலகமே துன்பத்தில் மூழ்யிருக்கிறது. மகிழ்ச்சி என்பது பெயரளவில் தான் உள்ளது. குருதேவரின் அருள் பெற்றவனே, அவர் ஆண்டவன் வடிவம் என உணர்வான். அதுதான் ஆனந்தம் என்பது நினைவிருக்கட்டும்.

கிரக பலம். கோள்களின் கோலாட்டம் –பாகம் – 1 1.6

கிரக பலம். சூரியன்-செவ்வாய்-சனி-ராகு-கேதுக்கள், மேசம்-மிதுனம்-சிம்மம்- துலாம்-தனுசு-கும்பம் போன்ற ராசியின் முதல் 15 பாகைக்குள் இருப்பது மிக நல்லது. ரிஷபம்-கடகம்-கன்னி-விருச்சிகம்-மகரம்- மீனத்தில் கடைசி 15 பாகைக்குள் இருப்பது நல்லது. சந்திரன்-புதன்-குரு-சுக்கிரன் போன்றவர்கள் மேஷம்-மிதுனம்-சிம்மம்-துலாம்-தனுசு- கும்பத்தின் பின் 15 பாகைக்குள் இருப்பது நல்லது. தை-மாசி-பங்குனி-சித்திரை-வைகாசி-ஆனி போன்ற மாதங்களில் சூரிய சந்திரருக்கு அதிக பலம்.

கால பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.6

கால பலம். பகலில் பிறந்தவர்களுக்கு … சூரியன், குரு, சுக்கிரன், பலம். இரவில் பிறந்தவர்களுக்கு .. சந்திரன், செவ்வாய், சனி, ராகு,கேது பலம். புதன் பகல் இரவு எந்த நேரமும் பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. லக்கின கேந்திர ராசியாக : – மிதுனம், கன்னி, தனுசு ஆக வருவது பலம். சதுர்த்த கேந்திர ராசியாக :- கடகம், மகரம், மீனம் ஆக வருவது பலம். 7வது இட கேந்திர ராசியாக :- விருச்சிகம், ஆக வருவது பலம்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.5 லக்ன நிர்ணயம்

லக்ன நிர்ணயம் கிரேதாயுகத்திற்கு நிஷேக முகூர்த்தமே ஜென்ம லக்கினமாகும். திரேதாயுகத்திற்கு – ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்கினம் துவாபர யுகத்திற்கு சிரசு உதயமே ஜென்ம லக்கினம். கலியுகத்திற்கு பூ உதயமே ஜென்ம லக்கினமாக கொள்ள வேண்டும் என்பது குமார சுவாமிகள் கருத்து. இக்கலியுகத்தில் சிசு தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து பூமியின் இயக்கத்தில் கட்டுப்படும் நேரமே அதாவது பூ உதய நேரமே ஜென்ம லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் சிசு உள்ள போதே நவக்கிரகங்களின்…

நட்சத்திரத்தின் சிறப்பு 2

இனி சில அடிப்படை விஷயங்களை காண்போம்: கிழமைகள் – பிருதிவி நட்சத்திரங்கள் – தேயு இந்த அடிப்படையை முதலில் சிந்திப்போம் ஞாயிறு – பிருதிவியில் தேயு திங்கள் – பிருதிவியில் அப்பு செவ்வாய் – பிருதிவியில் தேயு புதன் – பிருதிவியில் வாயு குரு – பிருதிவியில் பிருதிவி சுக்கிரன் – பிருதிவியில் அப்பு சனி – பிருதிவியில் ஆகாயம் இதில் பிருதிவியில் பிருதிவி, பிருதிவியில்-அப்பு மிக நல்லது. மற்ற பிருதிவியில் தேயு, ஆகாயம் ஆன்மிக சாதனைக்கு…

நட்சத்திரத்தின் சிறப்பு 1

ஜோதிட சாஸ்திரத்தின் துணைகொண்டு சுப காரியங்கள் செய்வதற்கு உரிய நல்ல வேளையை தேர்ந்தெடுக்கும் போது யோகத்தை கருத்தில் கொண்டே அநேக முகூர்த்தங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது நாளுக்கும் நட்சத்திரத்திக்கும் உண்டான உறவின் நிலை கொண்டு உண்டாகும் யோகங்ஙள் நான்கு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம். இந்த நான்கு யோகங்களில் அமிர்த, சித்த, யோகங்கள் சிறப்பானது. பிரபாலாரிஷ்ட, மரண யோகங்கள் சிறப்பில்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜோதிட சாஸ்திரம் அறியாத பலர் கூட இன்று சித்த…

அர்க்களா பலன் ( ஜெயமுனிமதம் ) 1

1.  ஒரு பாவத்திற்கு அந்தப் பாவத்திலிருந்து இரண்டு நான்கு, பதினொன்று ஆகிய இந்தப் பாவங்களுக்கு அர்க்களம் என்று பெயர். ஒரு கிரகத்திற்குத் தான் இருக்கும் பாவத்திற்கு 2, 4, 11 ஆகிய இப்பாவங்களுக்கும் அர்க்களம் என்று பெயர். 2.  அர்க்களம்  சுப அர்க்களம் என்றும், பாப அர்க்களம் என்றும் இருவகைப்படும். 3.  சுபக்கிரகங்கள் மேற்குறித்த 2,4, 11 இவைகளில் இருந்தால் சுப அர்க்களம் உண்டாகும், அதாவது சுப பலன் உண்டாகும். 4.  பாபக் கிரகங்கள் மேற்குறித்த 2,…

யோசிக்க வேண்டிய விஷயங்கள்

வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது மரம் வெட்டுங்கள் – மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம் ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை. தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது. கல்வி கற்க புத்தகங்களை விட நோட்டுக்களேஅதிகம் தேவைப்படுகின்றன நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில். நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி.. பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை காரணமே இல்லாமல்…

பிராமண பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

கடகம், விருச்சிகம், மீனம் :- இது பிராமண பாவ ராசிகள் இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்னாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றின் இருப்பில் சரியான பிடிவாத குணம் உள்ளவர்கள். அடிக்கடி பொறுமையை இழப்பவர்கள் அறம், பொருள், இன்பத்தில் பற்று கொண்டவர்கள். தெய்வீக ஆன்மீக வழியில் அதிக நாட்டம் கொண்டவர்கள். தான் நினைத்ததை சாதிக்கும் தன்மையுடையவர்கள், தன் விருப்பதிற்கு மாறாக நடப்பவர்களை தூக்கி எறியும் சுபாவம் உள்ளவர்கள். தலைவணங்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்களிடம் சமமாக பழகுபவர்கள். ஜாதி,…

சூத்திர பாவ ராசிகள். கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மிதுனம், துலாம், கும்பம்:- இது சூத்திர பாவ ராசிகள். இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றின் இருப்பின் பொறுமையுள்ளவர், குட்ட, குட்ட, குனிபவர் பொறுமையிழந்தால் மனிதனாக செயல்பாடாதவர். நிமிர்ந்து நின்றால் யாராலும் வளைக்க முடியாதவர்கள். எதிலும் பிந்தி நிற்பவர் தாழ்வு மனப்பான்மை எதற்கும் ஆமாம் சாமி போடும் குணம் உள்ளவர். சந்தேகம் வந்துவிட்டால் அதை உறுதி படுத்தாமல் தீர்வு காணாமல், உறக்கம் கொள்ளாதவர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவர்கள்.…

வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை…

சத்திரிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மேஷம் – சிம்மம் – தனுசு :- இது சத்திரிய பாவ ராசிகள், இதில் ஒன்றில் லக்கினம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றில் இருப்பின் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் எதிர்ப்புகளைக் கண்டுபயப்படாத நிலை, துணிவு, தைரியம், எதிலும் முந்திக் கொள்ளும் குணம், அரசு நிர்வாகம், அரசியல் தொடர்புகளில் மிகுந்த திறமை, மற்றவர்களின் தவறைக் கண்டு கொதித்து எழுவது, சுயநலம், சகாஸம், வீரம், பராக்கிரமம், தண்டிக்க ஆசைப்படுதல், மற்றவர்களைத் தன் பாதைக்குக்…

நபும்ஸக நிலை அறிய விதிகள் 2

புதன், சனி 7 ல் நிற்க காம இச்சை குறையும், சனி 8லிருப்பினும் காமம் குறைவே.  குரு, சுக்ரன், சனி, சுக்ரன் சேர்க்கை மந்தமான காமத்தைத் தரும்.  இவற்றை சுக்கிரன், 8 மிடம் ( SEX ORGANS ) சயன ஸ்தானம் இவற்றையும், புத்ரபாவத்தையும் கவனித்து அறிதல் நலம். மிருகசீரிஷம், மூலம், சதயம் இவை நபும்சக நட்சத்திரங்களாகும். ஏழாம் பாவம் இவற்றில் அமைவது கவனிக்கத்தக்கது. சனி, தனுசு, அல்லது ரிஷபத்தில் இருக்க அதுவே லக்னமாக அலித்தன்மை இருக்கும்.…

நபும்ஸக நிலை அறிய விதிகள் 1

( ஆதான ) கருத்தரிக்கும் நேரத்தில் சந்திரன் இரட்டை ராசியிலும், சூரியன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலித் தன்மை ஏற்படும். சனி இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலியாம். செவ்வாய் ஒற்றை ராசியிலிருந்து சூரியன் இரட்டித்த ராசியிலும் இருந்து செவ்வாய் சூரியனைப் பார்த்தாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், லக்னம் ஒற்றை ராசியிலிருந்து செவ்வாயினால் பார்க்கப்பட்டாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருக்க, செவ்வாய்…

நபும்ஸக யோகங்கள் ..2

வியாதியினால் புணர முடியாதவர் நஷ்டகர். ஆண்குறி விரைப்பு இல்லாமல் விந்து வெளிவரக்கூடியவர் அசேவ்யர். பெண் உறுப்பை முகர்ந்த பின்னரே புணரக்கூடியவர் சுஷண்டி. பெண்மைத் தன்மை நிரம்பிய ஆண்களும், உறுப்புக்களை அறுத்துக் கொண்டவரும் ஷண்டர்கள். மோக பீஜர் என்று ஒருவகை உண்டு. பெண் தனது உறுப்புக்களை தொட்ட பின்னரே உணர்ச்சிவரக் கூடியவர், மற்றொரு வகை. க்ரஹநிலைகளை கொண்டு இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ள வேண்டும்.

நபும்ஸகயோகங்கள் 1

  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அலித்தன்மைகள் திருமணத்திற்கு முன் இவற்றைக் கவனிப்பது மிக அவசியமாகும். இவை பொதுவில் இருவகையாகும். சிலருக்கு பீஜத்தில் பலம் குறைவாகும், மற்றும் சிலருக்கு பீஜத்தில் பலமே இருக்காது. லிங்கம் இல்லாதவர்கள் நைசர்திக சண்டா வகையினர். பீஜத்தில் சக்தியில்லாதவர்கள் ( ஆண் விந்து வெளிப்படாதவர் ) பாத வகையினர். பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை சம்போகம் செய்யக்கூடியவர் பக்க்ஷ ஷண்ட வகையினர், ஒரு பெண்ணை மற்றொருவர் புணர்ந்த உடனே புணர்பவர் கீலகர். குரு சாபத்தால புனர்ச்சி…

தவறு

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை.. செய்த தவறு  வெளியே தெரியக்கூடாது என்றே பயப்படுகிறார்கள்.. சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்.. சில தவறுகள் நாம் யாராக இருக்கவேண்டும் என்பதை சொல்லி தரும்.

திரிம்சாம்சம்

திரிம்சாம்சம் என்பது ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும்…

உரையாடலின் ஒரு பகுதி 4

யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை அமைக்க இடம் கொடுத்துவிட்டால் மக்கள் அனைவரும் அடிமை, செக்கு மாடுகள், ஆகிவிடுவார்கள் அப்படி பட்ட அரசாங்கம், அரசு, சுயநலத்திற்காகத்தான் பாடுபடும். வரலாறு அதுதான் சொல்கிறது யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஜனங்களுக்காக செயல்பட்டதாக எந்த நாட்டு சரித்திரமும் கிடையாது. அப்ப ஏகாதிபத்தியம் கூடாதுன்னு சொல்லுறயா ஏகாதிபத்தியம்ன்னா என்ன ? ஒரே தலைமை புரிஞ்சுக்கோ நம்ம நாட்டுக்கு ஏகாதிபத்தியம் சரியாகாது ஏகாதிபத்தியம் என்பது சிந்திக்காத சிந்திக்க மறுக்குற அடிமை முட்டாள் பிரஜைகளை…

மதிக்க வேண்டிய உறவு

உங்கள் அன்பு யாருக்கு பலமோ… உங்கள் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ… உங்கள் புன்னகை யாருக்கு தேவையோ… உங்கள் மௌனம் யாருக்கு கண்ணீரை வர வைக்குமோ… உங்கள் பிரிவு யாருக்கு துன்பத்தை தருமோ… உங்கள் நினைவு யாருக்கு பொக்கிஷமோ… அவரே   உண்மையில் நீங்கள் மதிக்க வேண்டிய உறவு

உரையாடலின் ஒரு பகுதி 3

தேசபக்தி என்றால் என்ன? தேசம் என்பது என்னவென்று தெரிந்தால் தான் சரியான பக்தி செலுத்த முடியும் சரி, இனி கேள்விக்கு வருவோம் தேசம்னா என்ன மண்பரப்பா? மரமா? கல்லா? தேசியக்கொடியா இல்லை. தேசபக்தின்னா மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகள் மீதும், மொழி வழி கலாசாரங்கள் மீதும் கருத்து சொல்வதும் அவற்றை பேணிக் காப்பதும் தான் தேசபக்தி. மொழிகளில், கலாசாரத்தில் கைவைக்கும் ஏதேச்சதிகாரமான ஆசை, துதி பாடுவது, ஏகாதிபத்திய அரசு எது செய்தாலும் சரி என்று ஆனந்த கூத்தாடுவது,…

பரகாயப் பிரவேசம்

தீப ஒளியோக முறையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது, உள்ளே நிலை நிறுத்தும் போதும், அவைகளுக்கான உச்சரிப்புகளை வாயாலும், பின்னர், மனதாலும், பின்னர் அஜாப முறையில் ஆக்ஞையிலும் சொல்ல – பருவுடன் ஜோதி வடிவாகவும், இதயத்தில் அங்குஷ்ட பிராண ஜோதியையும் காண்பதுடன், பிரணவ தேகத்தையும் அடையலாம். இரண்டு கைகால் விரல்களைக் கட்டி மல்லாந்து படுத்து, மனதைச் சிதறவிடாது நிறுத்தி, மவுனத்தில் அழுந்தினால், மனம் சுழுப்தியில் அடங்கும். இந்த நிலையில், ஐங்கோல உச்சரிப்பை ஏழு ஸ்வரங்களில் எழுப்ப வேண்டும்.…

திருமணத்திற்குரிய காலங்கள் விசேஷ விதிகள்

1. குரு பலம் பெண் – ஆணுக்கு பருவமடையும் முன் செய்யும் திருமணத்திற்குதான் முக்கியமாகும். தந்தை உடனடியாக முயற்சி செய்யாவிடில், பருவமடைந்த பின்னர் பெண் தானாகவே கணவனை தேந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மனுநீதி. ஆகவே பெண் பருவமடைந்த பிறகு நடக்கும் திருமணங்களில் குருபலம் அவசியமில்லை. குருபலம் இருந்தால் அதிக நன்மையாகும். 2. அதாவது, ஜன்ம நக்ஷ்த்திரத்திலிலிருந்து 2, 4, , 8, 9 வது நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் போது நன்மை தரும். உதாரணமாக அசுவனி நட்சத்திரக்காரருக்கு,…

உரையாடலின் ஒரு பகுதி 2

உரையாடலின் ஒரு பகுதி 2 எதிர், எதிர் கருத்து கொண்டு கட்சி ஆரம்பித்து தொண்டர்களும் மாறி, மாறி வசை பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென கட்சிகள் தேர்தலின் போது இணையும் அறிக்கை மட்டும் வரும் நாங்கள் கொள்கையில் உடன்படவில்லை ஆனால் சில விஷயங்களுக்கு வேண்டி இணைகிறோம் இணைந்திருக்கிறோம் என்று, இதை ஆழமாக யோசிக்க முடியாதவாறு எப்போதும் கட்சிகள் தொண்டர்களையும் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களையும் வைத்திருப்பார்கள். இதன் அடியில் இருப்பது  என்னவென்று உற்றுப்பார் உணரப்பார் வரும் பதில்  பதவி ஆசை மட்டும்…

திருமண காலம் அல்லது குருபலம்.1 பொது விதி

ஆண் அல்லது பெண்ணுக்கு அல்லது இருவருக்கும் குருபலம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். இருவரில் ஒருவருக்கு குருபலம் இருந்தாலும் போதுமானது. மேலும் ஆணுக்கு குரு பலம் தேவையில்லை என சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11 – ல் குரு கோசர ரீதியாக இருக்கும் காலங்களில் குரு பலம் வந்துவிட்டதாக பொருள். பொதுவாக திருமண கால பலன்களாவன — 1 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க வம்ச விருத்தி பாதிக்கும்.…

உரையாடலின் ஒரு பகுதி 1

உரையாடலின் ஒரு பகுதி அரசியல் துறை என்பது ஒரே வரியில் சொன்னால் நம்ப வைத்து கழுத்தறுப்பது, அதாவது அரசியல் துறையில் உள்ள ஒருவன்  அல்லது   வாக்கு போட்ட மக்கள்,   அவன் யாரை எல்லாம் நம்பிக்கொண்டிருப்பானோ அவர்கள் எல்லாம் இக் கட்டான சூழ்நிலையில் கைவிட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல. அவனின் உயிரின் கடைசி துளி பிரியும் வரை நம்பிக்கொண்டே இருக்கும்படியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொண்டே இருப்பார்கள். இதைப் பற்றி கேட்டால் ராஜ தந்திரம், சாணக்கிய வித்தை, என்று சொல்லுவார்கள்.…

சந்தோஷமான விஷயம்

ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…

7 – ஆம் பாவமும் அதன் பலன் அறியும் மார்க்கமும். P.ATHMA

12 – ம் பாவத்தை வைத்துக் கொண்டு மானிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து விஷயத்தையும் கணிதம் கொண்டு அளந்தரிவது சிரமமான காரியம் தான். குருவின் துணையும், திருவின் அருளும் இருந்தால் சிரமமான காரியம் சுலபமான காரியமாக மாறிவிடும் நிஜம் இதுதான். ஜோதிடம் நமக்கு தெரியவேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும். எப்படி? புத்தகத்திலா? இல்லை ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டும். ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டுமென்றால் ஜோதி நமக்கு தெரியவேண்டும். ஜோதியை நமக்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும்…

ஒலியற்ற ஒசை

வீட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ ஒலிகளின் உணர்வே இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே புற மனதின் எண்ணங்களோ, சிந்தனைகளோ கொஞ்சம்கூட இல்லாமல் மவுனமாக அமருங்கள். இந்த மவுன நிலையில் இடைவிடமல் தினமும் தனித்திருந்து உங்களுக்குள் நீங்களே ஒடுங்குங்கள். இந்த மவுனப் பெருநிலையில் ஒரு ஒசை கேட்கும். இந்த ஒசை உங்கள் உள்மனம் இயங்கும் ஒசை. இந்த ஒசை எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கும் சர்வ சக்தி வாய்ந்தது. அந்த ஒலியற்ற ஒசை உங்கள் காதுகளில் ஒலித்துவிட்டால் உங்களால் இயக்கமுடியாதது…