சுந்தர யோக சிகிச்சை முறை 145

உணவுத் தவறுதலாலும், பெருங்குடல் புண் வருவதாலும், மலச்சிக்கல் நிலைத்துவிடும். இடுப்புக்கான நரம்புகள் கெடுவதாலும் இது உண்டாவதுண்டு. மலச்சிக்கலுண்டாக, ஒரு பெரும் கெடுதிச் சக்கரம் ஏற்படுகிறது.

உன்னிடமே கேட்டுப் பார்த்துக்கிட்டியா 2

தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா! எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார் நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய் . எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு” என்றார் துறவி. அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.…

உன்னிடமே கேட்டுப் பார்த்துக்கிட்டியா 1

அந்த மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார். அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை…

முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே 2

மன்னருக்கு ஆத்திரம் வந்தது. “நானே புலியை வீழ்த்தியிருப்பேன். உன்னை யார் அம்பு விடச் சொன்னது?” என்று கோபமாகக் கேட்டார். இல்லை மன்னா, அந்தப் புலி உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்லப் பார்த்தது…” என்று வேடன் முடிப்பதற்குள் மன்னர் குறுக்கிட்டார். இதற்கு மேல் எதுவும் பேசாதே” என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் மன்னர். மறுநாளே வேடன் கைது செய்யப்பட்டார். மந்திரியும் வேடனும் அருகருகே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மந்திரி வேடனிடம் பேசி, அவர்…

 முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே  1

ஒரு அரசன் யார் பேச்சையும் கேட்காத, தலைக்கனம் பிடித்தவர். ஒரு நாள் அரசவையில், “மந்திரி, நான் வேட்டைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார். நல்லது மன்னா, நான் நமது வீரர்களைத் தயார் படுத்துகிறேன்.” எதுக்கு? நான் ஒருவனே பெரும் படைக்குச் சமமானவன் தானே?” மன்னரின் பெருமைப் பேச்சைப் புத்திசாலித்தனமாகத் தான் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த மந்திரி தொடர்ந்தார் . “உண்மைதான் மன்னா. மிகப் பெரிய மனிதப் படையைத் தாங்கள் ஒருவரே வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால், விலங்குகள்…

நான் இங்கு வெறும் பிரதிநிதி   2

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும்” என்ற ஞானி “நீ இப்போது எப்படி இருக்கிறாய்” என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்” முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா???” இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்?? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்???”” விழித்தான்…

கதை 18  நான் இங்கு வெறும் பிரதிநிதி  1

ஒரு அரசன், ஞானியிடம் “என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை” என்றான். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?” என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை” என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு”…

கதை 17ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்

முன்பு ஒரு நாடு பிளவுபட்டிருந்த போது அதன் தலைநகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பகுதியை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டு வந்து மதில் தாண்டி மேற்கு பகுதி பக்கம் கொட்டினார்கள். (அவ்வளவு குரோதம்!) மேற்கு பகுதியை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை…

சனி 2

சனி 5ம் பாவத்தில் இருப்பின் புத்திர சுகம் இருக்காது. சனியுடன் மாந்தி சேர்ந்திருந்தால் வாழ்வில் சிரமமே ஏற்படும். சனி லக்னத்திற்க 8ல் இருந்தால் தீர்காயுள் அளித்து செல்வத்தினையும் அளிப்பார். சனி, சுக்கிரசேர்க்கை எங்கிருப்பினும் திருமண வாக்கையில் குறைபாடோ இரகசிய முறைகேடோ இருக்கும்.

சனி 1

சனி லக்னத்தில் நின்றிடில் அதிகம் பேசாத மந்தநிலை, பலரையும் குறை சொல்லும் குணம் இருக்கும். சனீஸ்வரன் 7ம் பாவாதிபதியோடு சேர்ந்து இருந்தாலும் 7மதிபதியை பார்த்தாலும் நல்ல ஆயுளுடன் வாழலாம். சனி 8ம் பாவத்தில் இருந்தால் தீர்க்காயுசு. சனியுடன், சூரியன் நின்றிடில் ஜாதகரை நீசசெயலில் ஈடுபடவைக்கும். சனிபகவான், செவ்வாயுடன் 6ம்பாவாதிபதியோடு இருப்பின் திருட்டுபயம் ஏற்படும். சனியும், செவ்வாயும், சக்கிரனும் 2,4,7,12ல் ஏதாவத ஒரு பாவத்தில் இருந்தால் இருதார யோகம் உண்டு.

சுக்கிரன் 21

சுக்கிரன் அல்லது 7ம் வீட்டிற்கு அதிபதி சனி, சூரியனுக்கு இடையில் இருப்பின் திருமணம் நடைபெறாது.  சனி 7ம் வீட்டை பார்த்தாலும் திருமணமாவது அறிது. சுக்கிரன் நீச்சமாக இருந்தால் தன் இனத்திலேயே காதல்புரிந்து மணம் செய்து கொள்வர். சுக்கிரனுக்கு சுக்ரன் 6 ,8 ஆக ஆண், பெண்ணுக்கு இருக்குமாயின் இனிதான குடும்ப வாழ்க்கை அமையாது, அன்பாக இருக்கமாட்டார்கள்.

சுக்கிரன் 20

சுக்கிரன் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சிபெற்றோ செவ்வாயுடன் இணைந்து லக்கினத்திற்கு 1,4,7,10 ஆகிய இடத்தில் இருப்பின் பெண்களை விரும்புவர்களாகவும், இழிவு குணம் கொண்டோராகவும் இருப்பர். சுக்கிரனுக்கும் 7ம் அதிபதிக்கும் அல்லது 7மிடத்திற்கும் நல்ல சம்மந்தமாக காதல் திருமணம் கைகூடிவரும். சுக்ரன் உள்ள ராசியும் ( ஆண் ஜாதகத்தில் ) செவ்வாய் உள்ள ராசியும் ( பெண் ஜாதகத்தில்) ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஆகும்.

சுக்கிரன் 19

சுக்கிரன், சனி பரிவர்த்தனை பொதுவாக திருமண வகையில் நாட்டத்தினை தடுத்து ஆன்மீக வழியில் மனதை ஈடுபடுத்தும். சுக்கிரன் மகரத்தில் அமர்ந்தால் பெருமாள் மீது பக்தியும், ரிஷப சந்திரன் ஸ்ரீ வெங்டாஜலபதி மீது அளவற்ற பக்தி ஏற்படும். சுக்ரன் 7ம் பாவம், 7ம் அதிபதி ஆகியவற்றிற்கு, சனி, ராகு, கேது சம்பந்தம் ஏற்படின் பிரிவினைதரும், செவ்வாய் சம்பந்தம் ஏற்படின் விவாக ரத்து ஏற்படும்.

வாழ்க்கை 9

வாழ்க்கை என்பது கற்பனை அல்ல யதார்த்தம் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் பெறுவதற்கு எதை, எதை இழந்தோம் என்றும் இழந்ததற்கு எதை எதை எப்படி எப்படி எவர் எவரிடம் பெற்றோம் என்றும் நடு நிலையில் தனக்குள் உண்மையாய் சிந்தித்து பார்த்தால் மட்டுமே தெரியும் விளங்கும்.

மொழி 4

தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான். ஆனாலும் பல கோடிகளில் யாரோ ஒரிருவர் விதி வகுத்த வாழ்வை மீறி தான் வகுத்த வாழ்விற்கு விதி அமைத்து கொண்டவர்ளும் இருக்கிறார்கள்.

மொழி 3

சொல் _செவிக்கு புலனாகும் போது ஒலியாகவும் கண்ணுக்கு புலனாகும் போது எழுத்து வடிவில் இயங்குகிறது. இறைவன் விதியை வகுத்து எழுதி படைத்தான்.  மனிதன் எழுதி விதியை படைத்தான். கம்பன், காளிதாசன், வால்மீகி, திருவள்ளூவர், பாரதி போன்றோர் இந்த வகையை சார்ந்தவர்கள். இறைவன் உண்டாக்கிய நம் தலைஎழுத்தின் வரியும், வடிவமும் தெரியவில்லை, அதன் பொருளும் தெரியவில்லை. ஆனால் மண், உலகிற்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள் தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் எனும் பெயரும் சூட்டி உள்ளனர்.

மொழி 2

எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தது. சொற்கள் பொருள்களை உடையதாயிற்று அதில் பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரு பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி  நிலத்தில் வார்த்தைகள் விளைந்தது. ஒற்றை தனி மலர் போல் ஒர் எழுத்தில் விளைந்த சொற்களும் தொகுத்த மலர் மாலையை போல் பல எழுத்துக்கள் இணைந்த விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது.

மொழி 1

தனை புகழ தன்னிடத்திலே சொல் இல்லாத தனி தமிழ். எந்த மொழிக்கும் ஆதி வடிவம் ஒசைதான். முன் பண்படாமலும், வரையறையில்லாமல் வந்த சப்தங்களே ஒசை கால போக்கில் பண்பட்டு, வரையறையில் அமைந்ததே ஒலி, ஒலியும் ஒசையும் கண்ணுக்கு புலன்கா கண்ணுக்கு தெரியாத கடவுளை கண்ணுக்கு தெரியும் விக்கிரகங்களை உண்டாக்கி கண்டு வழிபட்டு இறையை அறிவது போல தோற்றமில்லா ஒலிக்கு தோற்றமாய் அமைவதே வரி வடிவங்களாய் வந்ததே எழுத்து எழுத்தின் மூலம் மொழிக்கு உருவம் பிறந்தது.

இராமாயணம் பற்றி –

1927 வையாபுரி புலவர் அறிஞர் குழு ஆராய்ந்து அறிவித்தது 124000 – தனி சொற்கள். 118 படலங்கள்       இடை செருகல்  10.368 பாடல்கள் மிகை பாடல் 1286   கம்பன் பயன் சொற்கள் 3. முதல் 3 1\2 லட்சம்

கம்பன் 3

கரையறியா காட்டாற்று வெள்ளம் போல கவி பொழிந்து வான்மீகி உலகுக்கு ஈந்த _ திரையறியா ஒட்டத்தை தேக்கி கட்டி திறன்மிகு கால்வாய்கள் செய்து பாய்ச்சி தரையறியா காவனத்தை தந்தான் தனி புலமை   கவிதை தச்சன் வில் கிடந்தது மிதிலை தனில் கல் கிடந்தது கானகம் தனில் நெல் கிடந்தது சடையன் வீட்டில் சொல் கிடந்தது கம்பன் மனத்தில் உதித்தெழுந்து ராமன் கதை

கம்பன் 2

கம்ப இராமாயணம் பற்றி மேல்படிந்த பிசின் அகற்றி மெல்ல கீறி மெதுவாக சுளை எடுத்து தேன் வார்த்து நூல் படித்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான் கம்பன் எனும் தமிழ் தாயால் நோற்ற மைந்தன். நாமக்கல் கவிஞர்

கம்பன் 1

கம்பன் என்றாலே நினைவுக்கு வருவது யுக நாயகனான ராமனின் கதையாகிய  ராமாயணமே, கம்ப ராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது வடமொழியில் வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணத்தை தமிழ் கூறும் நல் உலகிற்க்கு தந்தவர் கம்பர். கம்பரின் ராமாயணம் தமிழ் பண்பாட்டின் நன்மைகளை முழுமையாக பிரதிபலிப்பது இவரின் காலம் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி, இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூர் என்னும் இடத்ததில் பிறந்தார். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் அவை புலவரான ஒட்டக் கூத்தரும் நளவெண்பா தந்த புகழேந்தியும் கம்பரின்…

ஆசிரியருக்கு உண்டான தகுதி வரையறை

நிலத்தை போல தம்மை அடைந்தவர்களை தாங்கும் பொறுமையும் மலையை போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ள குறையாத வளமும் நல்ல நறுமணம் தரும் மலரை போன்ற மென்மையும் துலாகோலை போல நடுநிலை பிறழாத தன்மையும் உடையவரே ஆசிரியர் ஆவர்.

அறிவு என்பதற்கு வரையறை

அறிவு என்பதற்கு வரையறை நல்லதின் நலனும் தீயதின் தீதும் உள்ளவாறு அறிதலே அறிவு என்பதாம் இதில் எங்கு பிழை ஏற்படினும் மிக்க கற்றவரேயானாலும் அவர் அறிவு அற்றவரே

வாழ்க்கை 8

நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும் போது நம்முடைய நினைவில் அந்த வினாடி வரை தோன்றாத ஏதேனும் ஒரு திசையை காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதின் அவசியத்தை யாராவது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே யாரோ வந்து போகிறார்கள். அதன் காரணங்கள் நமக்கு தெரிவதில்லை நமக்கு தெரிந்த காரணங்கள் அதற்க்கு பொருந்துவதில்லை இது  தான் வாழ்க்கையின் சூட்சுமம்

வாழ்க்கை. 7

நம்முடைய வினைகள் நமக்குத் தெரியத் தொடங்கும் போது நாம் எதை, எதை எப்படியெல்லாம், எப்போது அனுபவிக்க வேண்டி வரும் என்பது தெரிந்து விடும். அப்படி தெரியும் போது நமக்கு பயம் போய் விடும், பயம் போய்விட்டால் தெளிவு கிடைத்துவிடும். தெளிவு வந்து விட்டால் சிந்தனை சரியாய் அமையும். சிந்தனை சரியாய் அமையும் போது செயலும் சரியாய் அமையும். சரியாக அமைந்த செயல் நன்மையை மட்டுமே தரும் அப்போது பாபம் பின் தொடராது. பாபம் தொடராத வாழ்க்கை அமைவது…

வாழ்க்கை. 6

தன்னைத்தான் அறிய வேணும் சாராமல் சார வேணும் பின்னைத் தான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி – அகப்பேய் சித்தர். தேவையைப் பற்றியும் ஆசையைப் பற்றியும் அறிவு இல்லாதவர்களுக்கு வேறு என்ன தெரிந்து இருந்தாலும் அது தெரிந்து கொள்ள உதவிய அறிவு பேயறிவு ஆகும். பேயறிவு என்று அவர் சொன்ன காரணம் அந்த அறிவு நன்மையை தராது, பாபத்தை போக்காது, புண்ணியத்தை சேர்க்காது முக்கியமாக தன்னை அறிந்திருக்காது. தன்னைத் தான் அறியும் போது நம்முடைய வினைகள் நமக்கு தெரியத்…

வாழ்க்கை.5

உண்மையில், நமக்கு நமது மனதைப் பற்றியும், நமது உடலைப்பற்றியும் அறியும் தன்மை அமைந்துவிட்டால் நாம் அறிவுள்ளவர்கள் ஆவோம். நாம், உடலை பற்றி அறிந்து கொண்டால் தேவையைப்பற்றி அறிந்து கொள்ளலாம். மனதைப் பற்றி அறிந்து கொண்டால் ஆசையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இது இரண்டை பற்றியும் அறிந்து கொண்டவர் எல்லாம் அறிந்தவர் ஆகின்றனர்.

வாழ்க்கை. 4

 நாம் அறமுடன் வாழ்ந்து பொருளை சேர்த்தால் இன்பமுடன் இருந்து வீடு பேற்றை அடையலாம். இது வாழும் வகை, இப்படி எல்லோராலும் வாழ முடிகிறதா என்ற வினா நமக்குள் எழும்போது இல்லையென்றுதான் சொல்ல தோன்றுகிறது,  இப்போதைய சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து பொருளை சேர்ப்பது நோக்கமாகிவிட்டது. அப்படி அடிப்படை மாறும் போது எல்லாமே மாறிதானே போகும். வினைகளை தீர்க்க எடுத்த இந்த ஜென்மானது வினைகளை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளவே அமைந்து விட்டது.

வாழ்க்கை.3

தன்னைப் பற்றிய சிந்தனையை  தேவைகளில் செலுத்தும் போது நன்மை  நம்மை நாடி வரும் தேவைகளில் ஆசைகளின் அளவுகள் அதிகமாக, அதிகமாக தீமைகள் நம்மை நாடி வந்து தொல்லை செய்யும்.  இதை புண்ணியம், பாபம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். தன்னைப் பற்றி சரியான சுய மதிப்பீடு இல்லாத நிலையில் நம்மை தீமைகள் அணுகுவதும் நாம் பாபத்திற்கு ஆட்படுவதும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும்.

வாழ்க்கை. 2

உதாரணமாக பசிக்கு உணவு என்பது தேவை ஆனால் அந்த உணவை நாம் ஆசையின் காரணமாக தேவைக்கு அதிகமாக உண்ணும் போது நமக்கு நன்மை செய்ய வேண்டிய உணவு தீமையை செய்ய தொடங்கிவிடுகிறது. அளவுகளை ஆசையின் காரணமாக நாம் தாண்டும் போது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது போல் அமிர்தமும் நஞ்சாகிறது. நமக்கு எது தேவையென்று அறிய தொடங்கி விட்டாலே நமது ஆசையின் அளவு முடிந்த அளவு குறைந்துவிடும்.

வாழ்க்கை. 1

மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும்  நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது. அதாவது, பசி, தூக்கம், போன்றவை, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும்போது, நன்மையோ, தீமையோ உண்டாகிறது.

வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை

    நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.   இந்த நொடி முதல் யாவும் மாறும், மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்…. செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற  வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டு வளமாக வாழ்வோம்…

சிங்கிரி குடி நரசிம்மர்

கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார். ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது. ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

அரியக்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

உத்திரகோசமங்கை 2

உத்திரகோசமங்கை கோவில் அமைப்பு முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு…

உத்திரகோசமங்கை. 1

 இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.  இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இது. உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  59

மேலை நாடுகளில் எந்த அளவிற்க்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணமான ஒன்று. தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள் அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி, இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   58

ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது. இந்த உண்மை நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது; நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது. இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர். இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  57

இது இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய வேண்டிய ஒன்றும், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள் மிகச் சிறந்த உண்மையும் ஆகும். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை, தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது; காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  56

வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர், ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி – இருப்பவர் ஒருவரே, ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள் என்று கூறினார்.

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

சுக்கிரன் 18

சுக்ரன், குரு விருச்சிக லக்னகாரர்களுக்கு சமசப்தமாக இருந்தால் சிற்றின்ப நாட்டம் அதிகம் ஏற்படும். சுக்கிரனுக்கு கேந்திர கோணங்களில் சனி, ராகு, கேது நின்றால் யோகம் ஏற்படும். சுக்கிரனுடன் ராகு அல்லது கேது, சூரியன் கூடி நின்றால் ஜாதகரைத் தேடி வம்புகள் வழக்குகள் வரும், பொருள் இழப்பும் ஏற்படும்.

சுக்கிரன் 17

சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம், நிறைய பெறுவார்கள். சுக்ரன் 4ல் இருந்தால் சிறு பிராயம்  முதலே தாய்மீது பாசம் அதிகம் இருக்கும்.  தாய் நலனில் கவனம் செலுத்துவார், அறிவிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவராய் விளங்குவார். சுக்ரன் விருச்சிக லக்னகாரர்களுக்கு 7மிடத்ததிபதியாக, களத்திரகாரகனாக ஆகிறார், காதல் திருமணத்தையும், சனி, ராகு கலப்பு திருமணத்தையும், தேய்பிறைச்சந்திரன் குறையுள்ள களத்திரத்தையும் தருவார்.

சுக்கிரன் 16

சுக்ரன் கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் அறிவாற்றல் இருக்கும், வேற்றுமாநிலத்தில் உழைத்து வாழ்வார்கள்.   அழகுசாதனங்களில் நாட்டமுள்ளவராய் இருப்பர், காதல் தோல்வி ஏற்படும். இனிமையாக பேசுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பெலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள்.

சுக்கிரன் 15

சுக்கிரன், சந்திரன் கூடி மேஷம், விருச்சிகம், கும்பம், மகரம் இவைகளில் ஒன்றில் இருந்து லக்னமாகி அதை சனி, செவ்வாய், சூரியன், ராகு நோக்கின் அந்த ஜாதகி விபசாரியாவாள். சுக்கிரனும், லக்னாதிபதியும் சேர்ந்து 6,8,12ல் இருப்பின் அந்த ஜாதகர் காமசுகத்தில் அதிகம் ஈடுபடமாட்டார்.  வெறுப்புள்ளவர் ஆவர். சுக்ரன் கும்பத்தில் இருப்பின் தோற்றப் பொலிவுடனிருப்பார்கள், மனதில் கலவரமும், மனைவிக்கு கட்டுப்பட்டிருப்பார்கள்.

சுக்கிரன் 14

சுக்கிரன் பாவரோடு கூடி 6,8ல் பலம் பெற்றிருக்கப் பிறந்தவர் ஸ்திரீ சபலம் உள்ளவன். சுக்கிரன் களத்திராதிபதியாகி அந்த சுக்கிரனை சனி, செவ்வாய் பார்க்க பிறந்தவர் எப்போதும் விலை மாதர்கள் தொடர்பு உடையவர். அம்சத்தில் சுக்கிரன் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் சுக்கிரனும் அமையப்பெறின், ஜாதகி தன் இச்சையினாலேயே பல பேர்களை சம்போகம் செய்து சந்தோஷமாக இருப்பாள்.

சுக்கிரன் 13

சுக்கிரன் துலாத்தில் அமர்ந்து அதுவே லக்னமாயின் பல சிறு தொழிலில் நவீன பொருளை விற்று, தொழில் செய்து சம்பாதிப்பர். சுக்கிரன் மிதுன வீட்டிலோ, ரிஷப வீட்டிலோ, துலாம் வீட்டிலோ இருப்பின் 4ஜாதகர் காமுகனாக இருப்பான். சுக்கிரன் வீட்டில் லக்னாதிபதி இருப்பினும் சுக்கினுடன் சேரினும், பார்ப்பினும் அந்த ஜாதகர் ஸ்தீரிலோலன்.

நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

பிறரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம்.. உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.. இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 5

அவளை வேறு எந்தப் பெண்ணுடனும் ஒப்பிட வேண்டாம் அவளைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். “உன் நண்பன் என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையா?”  எங்கள் பக்கத்து வீட்டு மனைவியிடமிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையா?” “அப்படியா?” பழைய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும் விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.  தற்போதைய பிரச்சினையில் ஒட்டிக்கொண்டு, பெரியவர்களைப் போல விவாதித்து, தொடரவும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 4

பொதுவில் மனைவியைத் திருத்த வேண்டாம்  உங்கள் மனைவியை பொதுவில் திருத்துவதைத் தவிர்க்கவும், அது உங்களை ஒரு நல்ல மனிதராகக் காட்டாது, மேலும் அவரது சுயமரியாதையை பாதிக்கும். கோபத்தில் திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும் கோபத்தில் உங்கள் மனைவியைத் திருத்துவதையும், கூச்சலிடுவதையும், திட்டுவதையும், அடிப்பதையும், பிரச்சனை செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையான ஆண்கள் அப்படிச் செய்வதில்லை.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 3

எது சரியானது என்பதற்காக அவளைப் பாராட்டுங்கள் நன்றாக செய்யாத போது திருத்துவது தவறாகும் நல்ல செயல்களுக்காக உங்கள் மனைவியைப் பாராட்டி பாராட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முன் அதைச் செய்யாதீர்கள் உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியைத் திருத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக உங்கள் மனைவியை இடைவிடாமல் திருத்துவது அவர்கள் அவளை அவமதிக்கச் செய்யும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்..2

 காதலில் செய்யுங்கள்  காதலில் திருத்த வேண்டும்.  வேறு வழியில் செய்தால், அது விமர்சனமாகவும் கண்டனமாகவும் மாறும்.  3a: விமர்சிக்க வேண்டாம் மனைவியை விமர்சிப்பதை நிறுத்துங்கள், மாறாக காதலில் சரியானது.  ஆக்கபூர்வமான விமர்சனம் என்று பெரும்பாலானோர் கூறுவார்கள்.  ஆனால் உண்மையில், இது பிழைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுப்பு என்று பொருள்.  திருத்தம் என்பது தவறுகளுக்கு சிறந்த விருப்பங்களை வழங்கும் செயலாகும்  திருத்தமும் விமர்சனமும் எப்போதும் ஒன்றல்ல  3b: கணவர் A கூறுகிறார்  இது என்ன வகையான…

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்…1

 உங்கள் குரலைக் குறைக்கவும் மனைவியைப் பார்த்து கத்தாதே, அவள் உன் குழந்தை இல்லை. நீங்கள் சரி செய்யலாம், ஆம், ஆனால் ஏன் கத்துகிறீர்கள்? கத்துவதால் பிரச்னை பெரிதாவது தவிர்க்கமுடியாது அப்படி பெரிதாவதால் நம் நிம்மதி கெடும் அதனால் கத்துவதை செய்யாதீர்கள்

மன்னிப்பு கேட்பது 3

ஒரு மனிதன் என்பவன் ஒருவனல்ல என்றும் எல்லா மனிதனும்  ஒன்றுதான் என்றும் இங்கு நட்சத்திரத்திற்கும் எறும்பிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற புரிதல் தொடங்கியிருக்க வேண்டும்… தெரியாமல் சிந்தி விடும் தேநீருக்காக சகமனிதன் மீது கோபத்தை வெளிப்படுத்தாத நிமிடத்தில் இருந்து நாம் மன்னிப்பிற்கான முதல் விதையைக் கண்டெடுக்கிறோம் மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் வெறும் செயல் அல்ல ஞானத்திற்கான சிறு ஒத்திகை.

மன்னிப்பு கேட்பது 2

ஒரு குழந்தையின் புன்னகையில் சில நிமிடங்களாவது நிஜமாகக் கரைந்திருக்க வேண்டும். யாரும் பார்க்காத போதும் ஒரு கவிதைக்காக அழுதிருக்க வேண்டும். சக மனிதனின் புன்னகையின் மதிப்பை கண்ணீரின் அர்த்தத்தை மரணத்தின் விஸ்வரூபத்தை நிஜமாகத் தரிசித்திருக்க வேண்டும்.

யதார்த்தம்!!

கஷ்டப்பட்டு படிச்சோம் கஷ்டப்பட்டு வேலைக்கு வந்தோம்.. கஷ்டப்பட்டு காதலிச்சோம் கஷ்டப்பட்டு கண்ணாலம் கட்டிகிட்டோம்.. கஷ்டப்பட்டு புள்ள பெத்து வளக்குறோம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டுறோம்.. கஷ்டப்பட்டு கடன                  அடைக்க ஓடுவோம்.. கஷ்டப்பட்டு கடைசில கஷ்டப்படாம செத்துட்டா போதும்ன்னு நினைச்சு நினைச்சு.. கஷ்டப்பட்டுட்டே செத்திடுவோம்..

வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள் சில:-

கணவன்கள் – படபடப்பு மனைவிகள் – நச்சரிப்பு டீன் ஏஜ்க்கள் – பரபரப்பு மாணவர்கள் – ஏய்ப்பு மாமியார்கள் – சிடுசிடுப்பு மருமகள்கள் – கடுகடுப்பு வக்கீல்கள் – ஒத்திவைப்பு டாக்டர்கள் – புறக்கணிப்பு அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு வயதானவர்கள் – தொணதொணப்பு ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு சிரிப்பு. இது உடம்புக்கு மிகச்சிறப்பு…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  55

மத விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவதற்க்கு பல்வேறு குழுக்கள் நிகழ்த்திய இத்தகைய போராட்டம் இந்தியா எல்லைகுள்ளும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கும் ஆரியர்களின் பல்வேறு இனங்களுக்குள் தங்கள் தெய்வங்களின் தலைமைக்காகக் கருத்து வேற்றுமைகள் நிலவியிருக்கலாம். ஆனால் இங்கு நிகழ்ந்தது வேறு. இந்திய வரலாறு யூதர்களின் வரலாற்றிலிருந்து. மற்ற நாடுகள் எதைவிடவும் சகிப்புத் தன்மைக்கும் ஆன்மீகத்திற்க்கும் இருப்பிடமான நாடாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே இனச் சண்டைகள் இங்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  54

யூதர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் இஸ்ரேல் என்னும் குழுவிற்க்கு சொந்தமானவர் மொலாக்-யஹ்வா அல்லது மொலாக் -யாகவா என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று, அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்துத் தங்கள் சொந்த மொலாக்தான் மொலாக்குகள் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது. இத்தகைய ஒரு மத வெற்றிக்காகச் சிந்தப் பட்ட ரத்த வெள்ளங்களும், நடத்தப்ட்ட கொடுமைகளும் எவ்வளவு என்பது உங்களுள் பலருக்கும் தெரியும். பிற்காலத்தில் பாபிலோனியர்கள்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 53

 பாபிலோனியர்களின் தெய்வங்கள் பால் என்று வழங்கப்பட்டனர். இவர்களுள் பால் மெரோடக் தலைமை தெய்வம். நாளடைவில் இந்தக் குழுக்களில் ஒன்று மற்றவற்றை வென்று, அவற்றைத் தன்னுடன் ஒன்று சேர்த்துவிட்டது. அதன் விளைவாக வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிடுவார். இவ்வாறுதான், இன்று தம்பட்டம் அடித்துக் கொள்வதான, செமிட்டிக் இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  52

மத ஒப்புமையிலிருந்து பெறப்பட்டுள்ள அத்தகைய இரண்டு விஞ்ஞான முடிவுகள் மீது உங்கள் கவனத்தைச் சிறிது திருப்ப விரும்புகிறேன்- ஒன்று, மதங்களின் சமரசம்; மற்றொன்று, எல்லாம் ஒன்றே என்னும் கொள்கை பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம். பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொறு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு. இந்தக் தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரைப் பெற்றிருந்தனர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 51

உண்பதற்கோ தன் ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியே செல்வதற்கோகூட நேரமில்லாத அவர் என் வேதாந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பார். வேதாந்தம் மிகவும் அறிவுபூர்வமானது; காலத்தின் தேவையை முழுக்க முழுக்க அது பூர்த்தி செய்கிறது; தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற முடிவுகளுடன் அப்படியே இயைந்திருக்கிறது என்பார் அவர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 50

தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம், வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில் அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் என்னிடம் கூறினர். அவர்களுள் ஒருவரை எனக்கு நெருக்கமாகத் தெரியும்.

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

அந்தணர்கள் மனிதனை பற்றி

அந்தணர்கள் மனிதனை பற்றியும் நிறைய யோசித்து வைத்தார்கள் மனிதனின் போருக்கு காரணம் மண், பெண். அந்தணர்களுக்கு மண் முக்கியமேயில்லை.  என் நாடு, என் தேசம் என்ற எண்ணத்தில் அந்தணன் சிக்குவதே இல்லை. கட்டின துணியும் ஒலை சுவடிகளும், சமஸ்கிருதமுமே சொத்து. இரந்துண்பதே வாழ்க்கை, எதிர்ப்பு காட்டாததே நியதி முடிந்தால் நீதி சொல்வது இல்லையேல் மவுனமாக இருப்பது.

எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம்

இது கலிகாலம் காசுக்கு ஆசைப்படும் பிராமணனும் மோட்சத்திற்க்கு ஆசைபடுகின்ற தாசியும் நிறைந்த கலிகாலம். அந்தணர்கள் துறவிகள் அல்லர் அவர்கள் அறிவு சார்ந்தவர்கள் அறிவுக்கும், அமைதிக்கும், அன்புக்கும் கர்வம் உண்டு. அந்தணர்கள் கர்வம் வினோதமானது அது முழக்கமிடாது திட்டமிடும் ஆரவாரிக்காது முறுவலிடும்.  வெற்றியை கண்சிமிட்டி தந்திரமாய் அனுபவிக்கும். எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம் அதுதான் வாழ்க்கையின் அடிப்படை உயிர் வாழ்தலுக்கு ஆரோக்கியம் முக்கியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

உணர்வு உனக்குள் நீ

உணர்வு உனக்குள் நீ உன்னை காண்பிப்பது,  அறிவு உன்னை நீ பிறருக்கு காண்பிப்பது. பூமி பிரபஞ்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் பூமியில் நடைபெறும் அத்தனை விஷயங்களும் பிரபஞ்சத்தின் கொடையே பூமியில் உள்ள உயிரினங்களும் பிரபஞ்சத்தின் கொடையை கொண்டே செயல்புரிகின்றன.  

சுக்கிரன் 12

சுக்கிரன் மீனத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர். உயர்ந்த தன்மைகள் குடிகொண்டிருக்கும், உயர்ஸ்தானம் வகிப்பார்கள்.  சுக்கிரன் தனுசில் இருக்கப் பிறந்தவர்கள் நல்லொழுக்கம் இருக்கும் உயர்ந்த பதவிக்கு வருவார்கள், எல்லோராலும் விரும்பப்படுவார்கள் சமூகத்தில் மதிப்பு ஏற்படும். சுக்கிரன் 9,7,5 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பர்.

சுக்கிரன் 11

சுக்கிரனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு பழிவாங்கும் உணர்ச்சி இருக்கும். இன்பங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பாள். சுக்கிரன் விருச்சிகத்தில் இருக்கப்பிறந்தவர்கள், கோபம் உள்ளவர்களாகவும் இருப்பர், ஒழுக்கக் குறைபாடு இருக்கம், மறைமுக உறுப்புகளில் உபத்திரம் இருக்கும் துடுக்காகப் பேசுவார்கள்.  மனிதாபிமானம் குறைந்தவர்களாக இருப்பார்கள். சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர் பல செல்வம், கல்வியறிவு கூடும்.  புகழ் உண்டாகும், மற்றையோரு உதவுவர்.

சுக்கிரன் 10

சுக்கிரன் மேஷத்தில் இருக்கப் பிறந்தவர்கள், வழக்கு வியாஜ்ஜியங்களில் ஈடுபடுவார்கள்.   காம இச்சை அதிகமிருக்கும், பேச்சில் வன்மையிருக்கும். சுக்கிரன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தனியே சந்திரன் நின்றால் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் நின்றிடில் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படும்.

சுக்கிரன் 9

சுக்கிரனும், செவ்வாயும் 7ல் இருந்தால் அந்த ஜாதகர் விதவை பெண்ணை விவாகம் செய்வர். சுக்கிரன் 12ல் இருந்தால் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். கலைத்திறனும் உண்டாகும்.  ஆனால், தொழில் தடையைச் சந்திக்கநேரும். சுக்கிரன் 4ல் இருந்தால் ஜாதகர் மற்றையோரைவிட அந்தஸ்திலும், தாய் மீது பாசம் அதிகரித்தும், அறிவில் உயர்ந்தவராய் விளங்குவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 5

உலகத்தை யாரால் வெல்ல முடியும் ? சத்தியமும், பொறுமையும் உள்ளவரால். யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ? எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை. செவிடன் யார் ? நல்லதைக் கேட்காதவன். ஊமை யார் ? சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன். நண்பன் யார் ? பாவ வழியில் போகாமல் தடுப்பவன். யாரை விபத்துகள் அணுகாது ? மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 4

எது மரணத்துக்கு இணையானது ? அசட்டுத்தனம். விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ? காலமறிந்து செய்யும் உதவி. இறக்கும் வரை உறுத்துவது எது ? ரகசியமாகச் செய்த பாவம். எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ? துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் ! சாது என்பவர் யார் ? ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 3

உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. எது இன்பம் தரும் ? நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 2

எல்லோரும் பயப்படுவது எதற்கு ? இறப்புக்கு. குருடனை விட குருடன் யார் ? ஆசைகள் அதிகம் உள்ளவன். சூரன் யார் ? கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். 9.மதிப்புக்கு மூலம் எது ? எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. எது துக்கம் ? மன நிறைவு இல்லாமல் இருப்பது.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள்  1

எது இதமானது ? தர்மம். நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். கள்வர்கள் யார் ? புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். எதிரி யார் ? சோம்பல்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  4

அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப்பல புராண வரலாறுகளும் சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.  

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  3

சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர், அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள், வண்ண சித்திரங்களாக உள்ளனர்

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  2

 லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர். இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதும் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன. திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும் புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  1

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல்திருமேனிகளாக உள்ளன. இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன. புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறைச் சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் 6

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார். மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான். ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போது தான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான். விரைவில் தனிமைச் சிறையில்…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  5

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். “இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்து விடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.” மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் 4

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார். மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில்…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  3

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள் அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது. முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  2

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும். நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  1

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். “ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது…

ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். “ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?” “வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்றான் ஒரு மாணவன்.  “ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்” என்றான் இன்னொரு மாணவன்.  “பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”  “”தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”  “”பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”.  பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள். இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, “”ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான் மிகவும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 144

காலனி” ன், வளைவுகளில் மலம் குவிகிறது. அது மிகப்பெரிதாகி வேலைக்கு உதவாமல் போய்விடுகிறது. இம்மலத் தேக்கம் படிப்படியாய் உயர்ந்து குறுக்குக் குடல், ஏறுகுடல், சீகத்திற்கும் எட்டி விடுகிறது. நீர்க்குழம்புகள் தேங்குகின்றன. உடைகின்றன.  உள்ளிழுக்கப்படுகின்றன. வினை விளைகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 143

இக்கெட்டி மலம், சதா நரம்பு முனைகளை வெளிப்போக்கு உணர்ச்சி உண்டாகத் தூண்டிக்கொண்டே நிற்கிறது. பயனின்றி இந்நரம்புகள் துடித்து, முடிவில் வேலைநிறுத்தம் செய்கின்றன. நாள் கணக்காக இவ்வாறு நடந்து வரவே ரெக்டத்தின் நரம்புகள் க்ஷீணித்து, இவ்விடம் மலம் சேர்ந்தாலும் கழிக்க உணர்ச்சியைத் தூண்டுவதில்லை. கிடைப்பது தீரா மலச்சிக்கல் “

சுந்தர யோக சிகிச்சை முறை 142

தூண்டுதலுக்கு இணங்க, மலப்போக்குச் செய்யாவிட்டால் கோரநிலை உண்டாகிறது. மலத்துவாரத்திற்கு மேல் நிற்கும் “ ரெக்ட “ த்துக்குள் ( RECTUM ) பெருங்குடல்  வழியாக  மலம் தள்ளப்பட்டவுடன் தான் போக்கு  உணர்ச்சி ஏற்படுகிறது. வெளிச்செல்லாவிட்டால் முன்போக வழியில்லாமல் ரெக்டத்திலேயே குவிந்து தேங்குகிறது இதிலிருக்கும் நீர்ச்சத்து உள்ளிழுக்கப்படவே கெட்டியாக கல்போல் ஆகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 141

இது விஷயமாய் கார்டிடம் கம்ப்ளெயிண்ட் செய்ய, அப்பாவி மூன்றாவது வகுப்புப் பிரயாணிக்குத் தைரியமிராது. பிராது கொடுத்தவுடன் பிரியமாய் உதவி கிடைப்பதுமில்லை. இயற்கை தர்மங்களைத் தழுவ உன்னத வழிகளைத் திட்டமிட்டு நிற்பதே நாகரிகம் தற்கால உடையிலும், நடையிலும், உண்பதிலும், வீண் கர்வத்திலும் நல்ல நகாரீகத்தைக் காணமுடியாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 140

தற்கால நகரங்களில் பொதுமக்கள் செளகரியங்கள் சரியாகக் கிடையாது. ஜெர்மனி, ஹாலந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சிறு செலவுக்குப் பெருத்த மலநீர்போக்கு செளகரியங்களை அதிகாரிகள் அமைத்துள்ளார்களாம் பிரயாணம் செய்யும் பொழுது புகை வண்டியில் பேருக்குத்தான் கக்கூஸ் இருக்கிறது. இது சுத்தமாயுமில்லை தண்ணீர் வசதியும் கிடையாது. குழாய் இருக்கும், பம்பிருக்கும், ஆனால் தண்ணீர் மட்டுமிராது.

சுந்தர யோக சிகிச்சை முறை 139

வயது வந்த வாழ்க்கையில் புகுந்தவுடன் நேர்மை வந்து விடுகிறதா? டாக்டருக்கு, ‘ விசிட்டுகளும், பேஷண்டுகளும் “ காத்திருக்கும். வக்கீல் கட்சிக்காரன் மணிபர்சையோ நீதிபதியின் முகத்தையோ தாரணையில் நிறுத்தி நிற்பார். வியாபாரிக்கு மூச்சுவிட ஓய்வு ஏது? காலை எட்டு மணிக்கப் பெட்டியடி சென்றால், இரவு எட்டு வரையிலும் மடித்த காலை நீட்ட  நேரமிராதே! இயற்கை ஒன்று அமைக்க, நாமொன்றாக அதை மாற்றி விடுகிறோம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 138

தற்கால வாழ்க்கையில் உண்டாகும் தீங்கை நன்கு ஆராய்ந்து தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். மலத்தை அடக்குவது பால்யப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பள்ளியில் சேர்ந்தால் ஆசிரியரின் டம்ப கர்வம் கொட்டமடிக்கும். அவர் என்ன செய்து விடுவாரோ என்ற பயம் பையனுக்கு வைத்தாலும் பரவாயில்லை! தன்னுடைய அமிர்த மொழிகள் தடைபெற்ற கோபத்தில் பிரம்பால் “ நொக்கி “ விட்டால் என்ன செய்வது? அக்காலத்தில் எது ஜெயிக்குமோ? மலமோ பயமோ!

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 5

நிறைய வேலைகள் இருக்கும் போது ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். *வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் *நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும்* என்பதை மனதில் கொள்ளுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் !* அடுத்தவர்களைக் ~*காயப் படுத்தாமல்*~ வாழப் பழகுங்கள். இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே* மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 4

தினமும் *உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்* எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் ~*பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட. பிறருக்காக எதையேனும்   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து *பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும்.  உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 3

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’*~ என்று சொல்லப்பழகுங்கள்  எளிமையாக வாழுங்கள்  உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம் !* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். *தடையற்ற தூக்கத்துக்கு* அது உதவும்  ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்  குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் *நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 2

 சற்று *முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள்*.  பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இப்படி பயணப்படலாம் என்பது போன்றவை.  தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, *சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்*. சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள்.*~ ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள்.! 1

காலையில் *சூரிய உதயத்திற்கு முன்* எழுந்துவிடுங்கள்! ஒரு காகிதத்தில் அன்றைய தினம் *செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம்* என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். *ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது* காத்திருத்தலை சுகமாக்கும் ! முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் ~*கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.*~

உலக பூமி நாள் 3

குறைந்த தூரம் செல்ல, மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். சைக்கிள் செலவை இல்லாமல் செய்வதுடன் உடல் நலத்துக்கும் மிக நல்லது.  உங்கள் சர்க்கரை,கொழுப்பை குறைக்கும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.  சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள் தேவையான மின் சக்தியை சூரிய ஆற்றல், காற்றாலைகள் மூலம் பெற வேண்டும். பாடப்புத்தகங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களை சேர்த்து வருங்கால மக்களாவது  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம். நாம் வாழும் பூமி, தாய்,…

உலக பூமி நாள் 2

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் “கைலார்ட் நெல்சன்‘ என்பவரின் தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது.  தற்போது இந்த “எர்த் டே நெட்வொர்க்‘ அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. உலகை காக்க நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யலாம். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். சி.எப்.எல்., பல்பை பயன்படுத்த வேண்டும். பாலிதீன்,மக்கா…

உலக பூமி நாள் ” 1

நாம் அதிகப்பட்சமாக 100 ஆண்டுகள் வாழும்  பூமிப்பந்தை அப்படியே விட்டுச்செல்லுகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரவர்களால் முடித்த அளவு நாசப்படுத்தியே வருகிறோம். இயற்கைவளம்–கனிம வளம் மிக்க பூமியை காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கி வாழ்கிறோம். சக வாழ்விகளான விலங்குகள்–பறவைகளை வாழ வழியில்லாமல் செய்கிறோம். பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இந்த இயற்கை சுழற்சியில், பூமி அவ்வப்போது, நினைவுப்படுத்துவது போல இயற்கை…

சமத்துவ சிந்தனை 5

வெள்ளையாய்யும் – நீர்ம நிலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் பாலும், கள்ளும் ஒன்று என்று சொல்லுவது அறிவுடைமை ஆகுமா? அப்படி இரண்டையும் ஒன்றாய் பாவித்தால் பலன் ஒன்றாய் வருமா? இப்படி எல்லாம் யோசிக்கும் போது சமத்துவம் என்பது இயற்கைக்கு மாறுதலான விஷயம். அதனால், நெடு நாட்கள் அந்த தத்துவம் நிலைபெறாது என்ற முடிவுக்கு தான் வர வேண்டியயிருக்கிறது.

சமத்துவ சிந்தனை 4

கிரககிக்கும் ஆற்றல் செயல்படுத்தும் திறமை போன்றவற்றில் பல்வேறு வித்தியாசங்களை சமமாய் பாவிப்பது எப்படி சரியாய் வரும். சமத்துவத்தை சமநிலையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்துவது சரியா? அப்படி செய்தால் எதிர் கால வளர்ச்சி என்பது சரியாய் வருமா? தனிப்பட்ட மனிதனின் ஆற்றல் மனிதருக்கு மனிதர் வேறுபடுவதை கண்கூடாய் நாம் காணும் போது எப்படி சமன் செய்ய முடியும்.

சமத்துவ சிந்தனை 3

நாம் சிந்திக்க வேண்டியது இயற்கையின் இயல்பை அதாவது மனிதனின் இயல்பை. மனிதனின் பிறப்பில் ஒவ்வொருவரும் உடலால், அறிவால், மனதால் பல்வேறு வித்தியாசங்களுடனேயே பிறக்கிறான். வளருவதும் ஒருவரை போலில்லாமலேயே வளருகிறான்.

சமத்துவ சிந்தனை 2

சமத்துவ தத்துவத்தை சிந்தித்தால் சரி என்று தான் தோன்றுகிறது. ஆனால் சரியாய் இருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது. கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் மண்ணில் அனைவரும் ஒன்று, எல்லோரும் சமம் எனும் நிலை கொண்ட  தத்துவம் தானே சமத்துவம் என்பது  ரொம்ப சரியான தத்துவம் தானே என்று தோன்றினாலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்.

சமத்துவ சிந்தனை 1

சமத்துவம் மக்களிடையே இருக்க வேண்டும். அதுதான் சிறந்தது.  அதிலும் முக்கியமாக அரசு, மடங்கள், கல்வி, நிலையங்கள், தொழிற்ச்சாலைகள் முதலியவற்றில் சமத்துவம் எனும் முறை அனுஷ்டிக்கப்பட வேண்டும். அதுவே மனித குலத்தை உயர்வுக்கு கொண்டு செல்லும். அதனால் சமுத்துவத்தை எவ்வாறேனும் ஸ்தாபிக்க முயலவேண்டும்.

தற்போதய சமுதாய சூழ்நிலையில்

தற்போதய சமுதாய சூழ்நிலையில் அடுத்தவர்களை ஏமாற்றுவது கூட அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கையின் நியதியாய் மாறிவிட்டது காரணம் என்று தேடினால் நீதி போதனைகள் இல்லாமல் போய்விட்டது நீதி போதனைகள் மதிப்பிழந்த காரணத்தால் காணாமல் போய்விட்டது. விளைவு சரி  தவறு, பாவம், புண்ணியம் போன்றவற்றை பற்றிய அறிவு இல்லாமல் போய்விட்டது அதனால் ஏமாற்றுதல் என்பது வாழ்க்கையின் நியதியாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் திருப்தி இன்மை என்ற நிலை ஏற்படும் அது எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.   பணம், பதவி, பொன், பெண், குடும்பம், நட்பு, உறவு, ‍தொழில் என்று எதில் வேண்டுமானாலும் உண்டாகலாம். இதில் குடும்பத்தில் முக்கியமாய் கணவன், மனைவிக்குள் திருப்தியின்மை ஏற்பட்டால் அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட வேண்டும். எந்த விஷயத்தில் எந்த சூழ்நிலையில் திருப்தியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டுணர்ந்து சரி செய்து விட்டால் குடும்பம்…

கணவன், மனைவிக்கிடையே

கணவன், மனைவிக்கிடையே எப்போதும் கல்யாணம் ஆகாத காதலர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இருக்க வேண்டும். மனம், அதன் நினைவுகளில் சஞ்சரிக்கும் போது அதற்கு சமுதாய கோட்பாடுகள் நியாய அநியாய வேறுபாடுகள் எதையும் கண்டு கொள்வதில்லை. தன் இஷ்டத்திற்க்கு அது பயணத்தை தொடரும். அந்த பயணத்தில் எண்ணங்கள் பூவாய் மலரலாம். வேதனைகள் முள்ளாய் குத்தலாம் எதையுமே மனம் பொருட்படுத்தாது. அது தான் மனம் அதனால் தான் அது மனம் மனதை கட்டுபடுத்த எந்த உபகரணமும் சமுதாயத்தில் கண்டு பிடிக்கவில்லை.

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால்

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால் புரிந்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் வெளி நபர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சியை விட நம்மை சார்ந்தவர்கள், நாம் விரும்புபவர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் நம்மை அறியாமலேயே நாம் பெருமித உணர்வில் மிதப்போம்.

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள்

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும். நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் இனத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும்.

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 4

எல்லோரையும் மதியுங்கள், மதிப்பைக் கொடுக்கக் கொடுக்கதான் அது திரும்ப கிடைக்கும். நான் தராதரம் புரிந்துதான் சிலரை மதித்து வந்தேன் ! நீங்கள் யாரைவிடவும் மேலானவர் இல்லை. அதேபோல் கீழானவரும் இல்லை என்ற கருத்தியில் உறுதி காட்டுங்கள். உறுதி காட்டியதில்லை. அவரவர்க்கென தனிப்பட்ட விருப்பங்களும், தேர்வுகளும் இருக்கும். அதில் தலையிடாதீர்கள். நான் தலையிட்டுள்ளேன் !! உங்கள் பேச்சை எல்லா நேரங்களிலும், எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்திருக்கிறேன் !! மேற்சொன்ன  கருத்துக்கள் மனிதர்களுடன் நல்லுறவில் இருக்க…

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 3

நீங்களாகப் போய், எல்லா கொக்கிகளிலும் சிக்க வேண்டாம். எல்லாமே உங்கள் பிரச்சனைகள் அல்ல. எல்லாப் பிரச்சனைகளிலும் எனக்கும் பங்குள்ளதே என்று கையாண்டுள்ளேன் !! உங்களுடைய அன்பு, எவர் உரிமையையும் பறிக்க வேண்டாம். பலபேரின் உரிமையை என் உண்மையான அன்பால், பலபேரிடமிருந்து மறைமுகமாக பறிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன் !! உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் அனுபவியுங்கள். அதுபோல மற்றவர்களையும் வாழவிடுங்கள். நான் என் வாழ்க்கையை சமீபகாலத்தில்தான் வாழவே ஆரம்பித்து இருக்கிறேன் !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 2

பிறரது பொறுப்புகள் குறித்து, சதா பேசிக் கொண்டிருக்காதீர்கள். அதை மட்டும் தான் செய்துள்ளேன் !! கேட்டால் மட்டும் உதவுங்கள். உணர்ந்து உதவினேன் !! மற்றவர்களின் நடத்தைகளில் கவனம் செலுத்தாதீர்கள். மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறேன் !! எந்த ஆபத்தும் வளர்ந்து, உங்கள் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு விடாதீர்கள். பல ஆபத்துக்களில் என் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 1

மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசிப்பதை நிறுத்திவிட்டு, உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.   மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசித்து ஆலோசனைகள் சொல்லிகொண்டே  இருப்பேன் கோபம் வந்தால், அவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள். பொதுவாக எனக்கு கோபம் உடனே வந்ததில்லை, வந்தால் ருத்ரதாண்டவம் தான் ! யாராவது நல்லவிஷயம் செய்தால், அவரை பாராட்டுங்கள். நான் பலபேர் மத்தியில் பாராட்டியுள்ளேன்

உரையாடலின் ஒரு பகுதி 68

எப்போதுமே ஆசை வேகம் கொடுக்கும் நிறைவேறாத ஆசை ஏக்கம் வளர்க்கும், ஏக்கம் சோர்வு தரும் சோர்வு ஆசைக்கு எதிர்மறையான விஷயம் அப்படியிருக்கும் நாம் ஆசையினால் ஏக்கப்படாமல் தேடுவதே ஏக்கத்தை தொலைக்கும் விஷயம் இது தெரிந்து விட்டது என்றால் எதிர்பாராமல் ஆசை கைகூடாவிட்டாலும் நம்மை ஏக்கமும் சோர்வும் ஆட்கொள்ளாது காரணம் ஆசையை அடைய நாம் எடுத்த முயற்ச்சிகள் நமக்கு அனுபவமாயிருக்கும்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 11

இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம். இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம். சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள். நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக…

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 10

நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும். உடலில் அசைவுகள் இருக்க வேண்டும் நாம் உழைக்க வேண்டும். உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல் துரு துரு’ வென ஏதாவதுஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 9

நெருப்பு [உழைப்பு] இரத்தத்திற்கு சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால் தான் வீரியம். நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அசைவுகள் என்ற உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அது இயக்க சக்தியாக மாறி வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 8

அதே போல் ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது. இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும். தூங்கினால் இது அதிகரிக்கும். அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. எனவே தூக்கத்தின் மூலமாகஇரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 7

.4. ஆகாயம் [தூக்கம்] நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூட காலியிடம் இருக்கும். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 6

நீர் நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர். எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன. தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா எனவே தண்ணீரும் மருந்துதான் அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்

சுந்தர யோக சிகிச்சை முறை 137

எவ்விதத் தொந்தரவும் அற்றவை இவ்விலங்குகள். இதைக் காட்டிலும் கிராமங்களிலும், சுதந்திரமாய் வாழும் நகர, நாகரீகமற்ற மக்களும் தடைகளின்றி இந்த இயற்கைக் கடனை முடிக்கிறார்கள். இவர்கள் டாக்டர்களுக்கும் பேடண்ட் மருந்துகளுக்கும் கப்பம் கட்டுவதில்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 136

காட்டில் வசிக்கும் மிருகங்களின் இயற்கை வாழ்க்கை மிகவும் உன்னத மாயிருக்கின்றது. மல உணர்ச்சி ஏற்பட்டதும் அதைக் கழித்து விடுகின்றன. பஜாரில் கக்கூஸ் இல்லையென்று அடக்க வேண்டுமா? ஆபீஸ் உத்தியோகத்தில் அவகாசமில்லையென்று புறக்கணிக்க வேண்டுமா? அல்லது சினிமாப் படம் தவறிவிடுமோ என்ற தயக்கமா?

சுந்தர யோக சிகிச்சை முறை 135

காட்டு மிருகங்களிடத்திலும், நாட்டு இனத்தினரிடத்திலும் இது தென்படுவதில்லை அனால் வெகு தாராளமாய் நாகரீக சமூகத்தில் நின்று வருகிறது. பெரு நகரங்களில் அடிக்கடி உண்டாகும் சீர்கேடே இது. அசையா மேஜையடி வாழ்க்கையும், தற்கால உணவு பழக்கங்களுமே, அதிகரித்து நிற்கும் மலச்சிக்கலுக்கு பெருத்த காரணங்கள், பெருங்குடலை அதிகமாய் உபயோகப்படுத்தாதற்கு அனுபவிக்கும் தண்டனைகளில் இது ஒன்று “.

சுந்தர யோக சிகிச்சை முறை 135

லக்ஹார்ட்மம்மரி ( LOCKHART MUMMERY ) என்ற நிபுணர் பெருவாரியாய் முறையிடுகிறார். “ CHRONIC CONSTIPATION, LIKE MANY OTHER COMPLAINTS OF THE PRESENT DAY, IS IN MOST CASES A RESULT OF MODERN CIVILISED LIFE – AMONG NATIVE RACES AND WILD ANIMALS, IT IS PRACTICALLY UNKNOWN, BUT IS ALL TOO COMMON IN CIVILISED COMMUNITIES, AND INDEED FORMS ONE OF THE…

சுந்தர யோக சிகிச்சை முறை 134

நாக்குத் தூண்ட ஆசை கெடுக்க, அவசியம். ஆரோக்கியம் என்ற யோசனையின்றி வயிற்றில் கொட்டினால் இவை வெளிச் செல்ல வேண்டுமே! மலமாகமாறி, தேங்கி, விஷம் கக்கிய பிறகு “ ஐயோ! இது அல்வாவாக அல்லவா” வாயில் நுழைந்தது! என்று முறையிட்டால், நோயும், சாவும் விலகி விடுமா? இம்மாதிரி இரைப்பைக்கு கொடுமை செய்வது மட்டுமல்ல, நாகரீக வாழ்க்கையில் மலத்தூண்டுதலைப் புறக்கணித்து, பெருங்குடலையும் கெடுக்கிறோம் என்ன விபரீதம்!

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18

6 – க்குரியவர் 11 -இல் லக்கினாதிபதியுடன் சம்பந்தப்பட்டு அல்லது பார்வை பெற்று அல்லது சாரம் பெற்று இருப்பின்  எதிரி அதிகம் உண்டு. சத்துரு தனம் கிடைக்கும். நோய் இன்றி வாழ்ந்தாலும், மேற்படி தசாபுத்தி காலங்களில் ஆளை புடம்போட்டு, பல வித கெட்ட பெயர்கள் வாங்கித் தர வாய்ப்பு உண்டு. 10, 6, 12, 2 – இல் சூரியன், செவ்வாய், சனி, ராகு சேர்க்கை பார்வை இருப்பின் ஏவல், பில்லி சூன்யத்தால் பயம் ஏற்படும். 6,…

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 8

மருந்துகளால் ஏற்படும் புல்லரிப்பு… பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த புல்லரிப்பு தற்காலிகமானதாக இருக்கும். அவை சில விநாடிகளில் போய் விடும். அப்படி இல்லையென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கடுமையான மருந்துகளின் விளைவாகக் கூட இது ஏற்படலாம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 7

ஆழ்ந்த உணர்ச்சிகள் நாம் சோகம், பயம், மகிழ்ச்சி அல்லது பாலியல் ஆசை போன்ற தீவிரமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது, உடல் இரண்டு வெவ்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, தோலின் கீழ் உள்ள தசைகளில் மின் செயல்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படும். இரண்டாவதாக, உங்கள் சுவாசம் கனமாகும். இந்த இரண்டு நிகழ்வுமே நமது தோலில் புல்லரிப்புகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான ஒரு படத்தைப் பார்க்கும் போதோ அல்லது உணர்ச்சிப்பூர்வமான சமூக தூண்டுதல்களைப் பார்ப்பது அல்லது உணர்ச்சிபூர்வமான ஒன்றைக்…

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 6

குளிரால் ஏற்படும் புல்லரிப்பு… நமது உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது அல்லது நாம் குளிரால் நடுங்கும் போது, மயிர்க்கால்களின் முடிவில் அமைந்துள்ள சிறிய தசைகள் சுருங்கி, முடி எழுந்து நிற்கும். புல்லரிப்பு ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் நமது மூளை உடலை சூடாக்குவதற்கு எதாவது செய்யுங்கள் என்று எச்சரிக்கிறது. உங்கள் உடம்பை சூடேற்றியதும் இந்த புல்லரிப்புகள் போய் விடும்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 5

நமது உடலில் உள்ள ஒவ்வொரு முடியின் வேரிலும் அரெக்டர் பில்லி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய தசை சூழ்ந்துள்ளது. இந்த சிறிய தசை இறுகும்போது, தோலில் சிறிய புடைப்புகள் தோன்றும். இந்த இறுக்கம் நாம் அதிக உணர்ச்சி வசப்படும் போது ஏற்படுகிறது. பிறகு உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளரும் போது புடைப்புகள் மறைந்து விடுகின்றன.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 4

இந்த புல்லரிப்புக்கும் நம் உணர்ச்சிக்கும் இடையே ஏகப்பட்ட சம்பந்தங்கள் உள்ளன. ஆழ்ந்த உணர்ச்சி அனுபவங்களை அனுபவிக்கும் போது இந்த மாதிரி ஏற்படுகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த புல்லரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாய்கள், குரங்குகள் மற்றும் முள்ளம் பன்றிகள் இந்த தோல் புல்லரிப்பை பெறுகின்றன. சரி  இது எப்படி ஏற்படுகிறது, நம் உடல் இதற்கு எப்படி மாற்றம் அடைகிறது என்பதை பார்ப்போம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 3

பைலோரெக்ஷன், க்யூட்டிஸ் அன்செரினா மற்றும் ஹார்பிபிலேஷன் என்றும் மருத்துவ ரீதியாக இதற்கு பெயரிடுகின்றனர். பயம், மகிழ்ச்சி, குளிர், சோகம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் தீவிர உணர்வை நீங்கள் அனுபவிக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பு புடைப்புகளை பெறுவோம். சில நேரங்களில் இது எந்த காரணமும் இல்லாமல் கூட நிகழலாம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 2

நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, நீங்கள் பயப்படும் போது அல்லது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பை பெறுவீர்கள். அப்படியே தோல் சிலிர்த்துக் கொண்டு சிறிய சிறிய புடைப்புகள் தோன்றும். பார்ப்பதற்கு இறகுகள் நீக்கிய கோழியின் தோல் போன்று இருக்கும். இதை கூஸ்பம்ப்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த புல்லரிப்பு பொதுவாக கைகளின் கீழ்ப்பகுதியில் ஏற்படக் கூடும்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா1 .

நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது.

காத்திருக்கப் பழகு 6

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே. உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா……??? நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும். காத்திருக்கப் பழகினால்…….. வாழப் பழகுவாய். இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்ப  காத்திருப்பதை உணர்வாய் எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய் … !!!

காத்திருக்கப் பழகு 5

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால், உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது. உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது

காத்திருக்கப் பழகு !4

உணவு தயாராகும் வரை காத்திரு போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு 3

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு  2

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு காய் கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு 1

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: தியானம் செய்… !!! நான் அழைக்கும் வரை காத்திரு’. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு

உரையாடலின் ஒரு பகுதி 67

எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள நிதானம் வேண்டும். ஆற்றல் வேண்டும் அவகாசம் வேண்டும். இதனுடன் செயல்படும் போது அனுபவம் வரும் அந்த அனுபவமும் வேண்டும். இது எல்லாவற்றையும் விட புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆசை வேண்டும். இதெல்லாம் இருந்தால் மட்டுமே பெண்ணை புரிந்து கொள்ள முடியும் அப்பவும் முழுமையாய் அல்ல எனக்கென்னவோ தோன்றுகிறது இங்கு உள்ள ஜீவ ராசிகளை முழுவதுமாய் தெரிந்து கொள்ள முடியாது என்று.

உரையாடலின் ஒரு பகுதி 66

 பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விஷயம். அத்தனை சுலபத்தில் கைகூடாது அதனால் தான் தகுதியுள்ளவனுக்கே திருமணம் என்று இருந்தது தகுதியை நிரூபிப்பது இப்போது திருமணத்தில் மட்டுமல்ல எந்த துறையிலுமே இல்லையென்பது தான் தற்கால நிதர்சனம். ஒரு விதத்தில் யோசித்தால் பெண் மலிவாகிவிட்டாளோ என்ற தோன்றுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 65

ஒரு காலத்தில் அவதாரங்களுக்கு கூட பெண்ணிடம் தன்னை நிரூபிக்க தன் தகுதியை, தன் திறமையை வெளிகாட்ட வேண்டியிருந்தது வேறு ஒன்றுமில்லை ராமனைத் தான் சொல்கிறேன். சீதையை மணமுடிக்க வில் ஒடித்து தன்னை நிரூபிக்க வேண்டி வந்தது. காலங்கள் செல்ல, செல்ல கல் தூக்குவது, காளையை அடக்குவது என்று வந்தது. மாயாஜால கதைகளில் ஏழுமலை, ஏழு கடல் தாண்ட வேண்டியிருந்தது. இப்படி எல்லாம் தன்னை நிரூபித்தாலே திருமணம் காரணம் வேறு ஒன்றுமில்லை.