ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை….கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன். ரொம்ப சரி…அது கழுகே தான், என்றான் அர்ஜுனன். மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை… என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே…! அது…

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15

எண்ணிறந்த சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ள உண்மையை நான் அரை சுலோகத்தில் கூறுகிறேன். ( ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர – ) பிரம்மம் மெய், உலகம் பொய், ஜீவன் பிரம்மமேயன்றி வேறன்று. என்னுடைய மனமெங்குளதோ அங்கு உனது உருவம் இருக்கட்டும், என்னுடைய தலை எங்குளதோ அங்கு உன்னுடைய திருவடி இருக்கட்டும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14

தன்னுடைய சிருஷ்டியில் இறைவன் ஒரு பொழுதும் இரக்கமற்றவனாகவும், நீதிவழுவியவனாகவும் இருப்பதில்லை.  ஒருவன் உடலைப்பற்றிய கவலை நீங்காமல் ஆத்மாவை அறிந்தனுபவிக்க ஆசைப்பட்டால் அவன் ஒரு முதலையைத் தெப்பம் என்று நம்பி அதன் மேலேறி ஓர் ஆற்றைக் கடப்பதற்காசைப்படுவைனைப் போலாவன்.  

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13

நல்லதும் ‍பொல்லாததும், உயர்ந்ததும், தாழ்ந்ததும், விரும்பத்தக்கதும், வெறுக்கத்தக்கதுமான காட்சிகளை ஒருவன் கனவில் காணும் பொழுது அவையெல்லாம் உள்ளபடி உண்மை என்றே நினைக்கிறான். கனவு நிலையில் அவை பொய்யென்ற எண்ணம் சிறிதுகூட இல்லை.  அவ்வாறே தான் ஞானோதயம் ஏற்படும் வரை இவ்வுலகும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12    

முக்தியாவது நான் என்னுடையது  என்ற எண்ணங்களை அறவேயொழித்து  ஆத்மானுபவத்தில் நிலை பெறுதலாம். கனவு மனதின் கற்பனை. கண்ட மறுகணத்தில் அது காணப்படாமல் போவதால் அது பொய்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11

அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால், பிறவிச் சுழலுக்கும் காமத்திற்கும் கருமத்திற்கும் மூலகாரணமான அவித்தை மிச்சமில்லாமலே அழிந்து போகின்றது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 10

உபநிஷதங்களின் உபதேசத்திற்குறைவிடம் உண்மை.  உண்மையாவது சூது இல்லாமையும் வாக்கிலும் மனதிலும் காயத்திலும் கபடமில்லாமையுமாகும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 9

கனவில் பெற்ற மந்திர உபதேசம் நனவில் உண்மையாகின்றது, கனவில் கிடைத்த நல்லாசியால் காலையில் விழித்துக் கொண்டபின் விரும்பிய பொருள் கிட்டுதலும் காணப்படுகின்றது, ஆகையால் பொய்மையினின்றுங்கூட மெய்மை முளைக்கலாம் என்பது இதனால் அறியப்படும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 8

மூன்று உலகங்களிலும் ஒவ்வொருவனும், சுகத்தையடையவே பாடுபடுகிறான்.  துக்கத்திற்காக அன்று, துக்கத்தின் காரணம் நீங்கினால் சுகம் வரும். துக்கத்திற்குக் காரணங்கள் , இரண்டு, ஒன்று உடலில் நான் என்ற அபிமானம், இரண்டு, உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது என்ற அபிமானம்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 7

புத்திமான் எல்லாக் காலத்திலும் கவனத்துடன் தனது ஆத்மாவை தியானிக்க வேண்டும்.  காணப்படாவிடடாலும் அது ஒன்றே உண்மை, வெளியுலகாய் அது விளங்கும் பொழுதும் ஸாக்ஷிமாத்திரமாகவே உளது. ஆகையால் அடையப்படுவது துக்கத்திற்குக் காரணம், அடைந்த மறுகணத்தில் அது ருசியற்றதாகிறது, அறிவிலிகளே அதை நாடுவர்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 6

மதிமயக்கம் நீங்கியவன் ஒன்றேயாகிய ஆத்ம ஞானத்தை வேறு ஞானத்துடனோ கருமத்துடனோ பிணைக்க விரும்புவதில்லை. ஆதிகாரணம் அஸத் எனக் கூறுபவன் மலடி மகனுடன் வியாபாரம் செய்பவன், கானல் நீரால் தாகத்தைத் தீர்த்துக் கொள்பவன்.   

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 5

காமத்திற்கும் கர்மத்திற்கும் காரணத்தை அறியாதவனுக்கே சோகமும், மோகமும் ஆகயத்தைப்போல் பரிசுத்தமான ஆத்மாவைக் காண்பவனுக்கில்லை. 

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 4

 பகவான் வியாஸர் தமது குமாரருக்கு நீண்ட ஆலோசனையின் பயனாய்ப் பின்வருமாறு உபதேசித்தார், வேதத்தில்  இருவேறு மார்க்கங்கள் கூறப்பட்டுள்ளன ஒன்று பிரவிருத்தி ( கர்மமார்க்கம் ), மற்றொன்று நிவிருத்தி ( ஞானஸந்நியாஸமார்க்கம் ). அத்விதீய பிராம்மீஸ்திதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தேவர்களும், அசுரர்களுக்கொப்பானவர்களே, அவர்களுடைய உலகங்களும் அசுரத்தன்மையுடையனவே.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 3

நாம் நாள்தோறும் கண்டனுபவிக்கும் உலகம் வியவகாரத்தில் உண்மையாகத் தோன்றினாலும் அடுத்த நொடியில் பொய்த்துப் போவதால் அது இருப்பில்லாத கனவுலகம் போன்றதேயாகின்றது. ஞானத்திற்கும் கருமத்திற்குமிடையே உள்ள வேற்றுமை மலை போன்று அசைக்க முடியாதது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 2

விழிப்பு நிலையில் கனவு பொய்யாகிறது, கனவு நிலையில் விழிப்புலகம் இல்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டும் இல்லை.  உறக்கமும் மற்ற இரண்டு நிலைகளில் இல்லை.  ஆகையால் முக்குணங்களால் சிருஷ்டிக்கப்பட்ட மூன்று நிலைகளும் பொய்யோகின்றன.  எனினும் அவற்றிற்குப்பின் உள்ள ஸாக்ஷியோ குணங்களைக் கடந்து நித்தியமாய் ஏகமாய் அறிவு வடிவான மெய்ப்பொருளாய் விளங்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 1

எப்படியோ மனிதப்பிறவியை, அதிலும் புருஷ சரீரத்தை, அடைந்து வேதத்தையும் கற்றுணர்ந்து அதன் பின்னும், ஒருவன் மூடனாய் முக்திக்கு முயலாவிட்டால், இவன் தற்கொலை செய்து கொண்டவனுக் கொப்பாகிறான். ஏனெனில் பொய்யான பொருள்களைப் பற்றிக் கொண்டு அவன் தன்னை மாய்த்துக் கொள்ளுகிறான். முக்திக்குதவும் சாதனங்களுள் பக்திதான் தலைசிறந்தது.  தன்னுடைய உண்மை நிலையில் நாட்டமே பக்தியெனப்படும்

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 12

ஒப்புயர்வற்ற ஆனந்தத்தின் உறைவிடமாகிய பிரம்மத்தைப் பரத்துவமென உணர்ந்து உண்மையைக் கண்டு கொண்டவர்கள் அதில் சரண் புகுகின்றனர். நீரில் கரைந்து போன உப்புக் கட்டியைக் கண்ணால் காண முடியாது, நாவினால் ருசித்தறியலாம். அவ்வாறே உள்ளத்தின் ஆழத்திலூடுருவியிருக்கும் பிரம்மத்தை வெளி இந்திரயங்களால் அறிய முடியாது. தீர்க்கதரிசியாகிற குருவின் கருணை நிறைந்த உபதேசத்தால் ஏற்படும் ஞானம் கண்விழிப்பால்தான் அறிய முடியும். அவ்வுபதேசமாவது, உன்னைச் சுற்றிக் காணப்படும் உலகம் நீயன்று, நீ பிரம்மமே.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 11

எவர்கள் ஒப்புயர்வற்றதும் பரிசுத்தமானதுமான பிரம்மபாவத்தை நாடவில்லையோ அவர்கள் பிறவியில் மனிதர்களாயினும் வாழ்க்கையில் மிருகங்களுக்கு ஒப்பாவர். அவர்கள் வாழ்க்கை வீண். காணும் உலகைக் காணதது போல் கருதி ஒருவன் அனைத்தையும் பிரம்மம் என்று உணரவேண்டும். புத்திமானாகிய அவன் தன் மனதைச் சிதானந்த ரஸத்தால் நிரப்பி அந்த எல்லையிலா ஆனந்தத்தில் எப்பொழுதும் நிலைபெற வேண்டும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 10

காரணமாகிற மண்ணைப்பற்றி அறிந்தால் காரியமாகிற மண்குடம், மண்பானை முதலியவை அறியப்படுவது போல் பிரம்மத்தையறிந்தால்  உலகம் அறியப்பட்டதாகிறது. அனைத்தையும், பிரம்மமென்று அறிந்து கொண்ட ஞானிகளுக்கு தியானிப்பதற்கோ தியானிக்காமலிருப்பதற்கோ, பேசுவதற்கோ, செய்வதற்கோ, செய்யமலிருப்பதற்கோ என்ன இருக்கிறது?

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 9

ஆகையால் நீ பிரம்மம்.  நான் பிரம்மம் அல்லன் என்பது மாயை.  மாயையினின்று உதிப்பது வேற்றுமை.  எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே வேர்.  பிரம்மம் ( மனதால் ) அறிய முடியாததென்றாலும், ஸ்வயம் பிரகாசமாயிருப்பதால் அனுபவிக்க முடியாததன்று. ( ஸத்யம் ஞானம் ஆனந்தம் ) பிரம்மும், ஸத்தியமும், ஞானமும் எல்லையற்றதாகும் என்ற வேதாந்த வாக்கியம் அதை விளக்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 8

 ஒரு பானைக்கும் மண்ணிற்கும் காரிய காரண சம்பந்தம் எப்பொழுதும் எப்படி இருக்கிறதோ அப்படியே வியவஹார உலகிற்கும், பிரம்மத்திற்கும் அதே சம்பந்தம் இருக்கிறது, இது சுருதியாலும், யுக்தியாலும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பானை முதலிய மண்ணாலான பாண்டங்கள் எப்படி மக்கள் அறியாமற் போனாலும் மண்ணேயாகுமோ அப்படியே மக்கள் அறியாமற்போனாலும் அவர்கள் செய்யும் செயலெல்லாம் பிரம்மத்தினிடமே பிரம்மத்தின் மூலமே நிகழ்கின்றது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 7

 பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் பிரம்மமேயன்றி வேறல்ல.   உண்மையனுபவத்தை அடைந்தபின் ஒருவன் உலகை அத்வீதீயப் பிரம்மமாகவே காண்கிறான். ஒரு பானையை எண்ணும் பொழுது மண்ணினுடைய ஞாபகம் நமக்கு தானே எழுவது போல், வியாவரிகப் பிரபஞ்சத்தை எண்ணும்பொழுது நமக்கு பிரம்மத்தின் எண்ணம் உதிக்கிறது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 6

உபாதிகளற்றதும், சாந்தமானதும், முடிவற்றதும், ஒன்றேயாவதும் இரண்டற்றதும் ( பூமா ) அளவு கடந்தது எனக் கூறப்படுவதுமான பிரம்மம் எளிதில் அறியப்படுவதன்று. உலகம் பிரம்மமே, பிரம்மத்தினின்று பிரிதாக எது ஒன்றுமில்லை. பிரம்மம் அல்லாது ஏதாவது ஒரு பொருள் தனித்திருப்பதாய்த் தோன்றினால் அது கானல் நீரைப் போல் பொய்யானது

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 5

ஆதியந்தமற்ற பிரம்மம் அவித்தையின் நீக்கத்தாலன்றி வேறெந்த ஸாதனத்தாலும் அடையப்படமாட்டாது. எது ஆத்மாவோ அதுவே நிகரற்றதும் அளவு கடந்ததும் உண்மைப் பொருளுமான பிரம்மம் என்று அறிய வேண்டும். அது ( ப்ருஹத் ) பெரிதாயிருப்பதால் பிரம்மம் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  4

சூரியனையும், சந்திரனையும் போன்றே ஒளி மண்டலங்கள் எதனுடைய ஒளியால் பிரகாசிக்கின்றனவோ, ஆனால் எது அவற்றின் ஒளியால் பிரகாசிக்கப்படமாட்டாதோ, மேலும் அனைத்துமே எதனால் பிரகாசிக்கின்றதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. தீயானது ஒரு இரும்பு குண்டை உள்ளும், புறமும் வியாபித்து எப்படித் தனது சக்தியால் பிரகாசிக்குமோ அப்படியே பரப்பிரம்மம் உலகனைத்தையும் உள்ளும் புறமும் வியாபித்து தனது சக்தியால் பிரகாசிக்கிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  3

எல்லாப் பொருள்களும் அதில் பிணைக்கப்பட்டுள்ளன. எல்லாச் செயல்களும் அந்த அறிவுடன் தொடர்புள்ளன, பாலில் எங்கும் நெய் வியாபித்திருப்பது போல் பிரம்மம் உலகில் எங்கும் வியாபித்திருக்கிறது. ஸ்தூலமாயில்லாமலும் ஸூக்ஷ்மமாயில்லாமலும், நீளமாயில்லாமலும், குட்டையாயில்லாமலும், பிறப்பில்லாமலும், தேய்வில்லாமலும், வடிவும் குணமும் வண்ணமும் இல்லாமலும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  2

எதையடைந்த பின் வேறு அடைய வேண்டியது எதுவுமில்லையோ, எந்த ஆனந்தம் அனுபவிக்கப்பட்ட பின் அதற்கு மீறிய ஆனந்தம் வேறு ஒன்று வேண்டப்படுவதில்லையோ, எதையறிந்த பின் வேறு அறிய வேண்டியது எதுவுமில்லையோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.  பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்கள் அவரவர் நிலைக்குத் தகுந்தபடி அந்த அளவு கடந்த பிரம்ம ஆனந்தத்தின் சில திவலைகளையே அனுபவித்து ஆனந்தமுடையவர்களாகிறார்கள்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  1

                                                பி ர ம் ம ம் ஸத் – சித் – ஆனந்தமாயும், இரண்டற்றதாயும், அளவு கடந்ததாயும், என்றுமுளதாயும், ஒன்றேயாயும், உள்ளதையெல்லாம் வியாபித்து நிற்பதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. இரண்டற்றதாயும், பிளவுபடாததாயும், ஒன்றேயாயும் ஆனந்த வடிவாயும், காணும் பொருளெல்லாம் கனவுபோலொதுக்கப்பட்ட பின் அடிப்படையாக எஞ்சி நிற்பதென்று வேதாந்தத்தில் விளக்கப்படுவதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 21

நான் தேவதைகளை வணங்கவில்லை.  நான் தேவதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அதனால் அவன் எந்த  தேவதையையும் வணங்கமாட்டான்.  அந்த நிலையில் அவனுக்குக் கடமைகளும் இல்லை.  எல்லாச் செயல்களுக்கும் மூலமாயிருக்கும் எனது ஆத்மாவையே நான் மேன்மேலும் வணங்குகிறேன்.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  20

 பரமாத்மா பரமானந்த ஸ்வரூபமுடையதாகையால் அதில் அறிபவன், அறிவு அறியப்படுவது என்ற வேற்றுமைக்கு இடமில்லை, அது ஒன்றாகவே பிரகாசிக்கிறது

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  19

 எப்படி ஒரு கயிறு அதை உள்ளபடி அறிந்தவனுக்கும், அறியாதவனுக்கும் இரண்டு வகையாகக் காட்சியளிக்கிறதோ அப்படியே ஆத்மா எப்பொழுதும் ( ஞானிக்குப் ) பரிசுத்தமாயிருப்பினும் அஞ்ஞானிக்கு அழுக்கடைந்தது போல் தோன்றுகிறது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  18

 விழிப்பிலும், கனவிலும் எப்படியோ அப்படியே ஆழ்ந்த உறக்கத்திலும் சக்தி மங்காததாலும் மாறுபடாததாலும் ஆத்மா அறிவுடன் கூடியே இருக்கிறது.  எங்கு துவைதம் உண்டோ என்று சுருதி கூறுகிறபடி அறியும் பொருள்களில்தான் வேறுபாடு.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  17

ஒருவன் தனது ஆத்மாவைப் புண்ணியம் பாவம், சென்றது வருவது, காரணம் காரியம் என்ற எல்லாத் தளைகளினிறும் விலகிச் சுதந்திரமாய் விளங்கும் பரப்பிரம்மம் என்று அறியவேண்டும்

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  16

எதுவரை ஒருவன் உடலே தான் என்ற எண்ணமுடையவனோ அதாவது ஆத்மானுபவம் பெறவில்லையோ அதுவரை உலகக் காட்சியும் அதனுடைய உண்மையும் பாதிக்கப்படுவதில்லை.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  15

ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்று அறிந்தனுபவிப்பதற்கு முன் இந்திரியங்களால் உணரப்படும் உலகமும் மற்ற பொருள்களும் அவ்வவற்றின் தனி உருவங்களை உடையவையாயிருக்கின்றன.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  14

தன்னுடைய உடலை ஒருவன் அறிவதற்கு எவ்வாறு வெளியிலிருந்து அத்தாட்சி வேண்டுவதில்லையோ அவ்வாறே தன்னுடைய ஆத்மாவை அறிவதற்கும், வெளியிலிருந்து அத்தாட்சி ஏதும் வேண்டுவதில்லை.  எல்லா ஆசைகளையும் விட்டு ஆத்மாவைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை மட்டும் தான் ஆத்ம தரிசனத்திற்கு அவசியமான ஸ்தானம்

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  13

(மாயாப்பிரபஞ்சத்திற்கு ) வித்தாகிய அஞ்ஞானம் இல்லையென்ற நிச்சயத்தையடைந்தவனும், ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்பதை அறிந்தவனும் எங்ஙனம் பிறவியை அடைவான். ஆத்மா என்பது ஒருவருக்கும் ஒரு காலத்தும் தெரியாத ஒரு பொருளோ அல்லது கொள்ளத்தக்கதோ, தள்ளத்தக்கதோ ஆகாது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  12

ஆத்மா வெளியே உள்ள பொருள்களைப் போல் அறியப்படுவதன்று. அதில் பாகுபாடுகளும், வேற்றுமைகளும் இல்லை. ஆகையால் அதை எவராலும் கொள்ளவோ தள்ளவோ இயலாது. உள்ளும், புறமும் எங்கும் வியாபித்ததும் பிறப்பு, தேய்வு, மூப்பு, சாவு முதலியவற்றிற்க்கப்பாற்பட்டதுமான ஆத்மா தான் என்ற அறிந்து கொண்ட பின் ஒருவர் எதற்காக ஒரு சிறிதேனும் அஞ்சவேண்டும்?

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  11

ஆத்மா  இங்கே இப்பொழுது உளது, இருதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம் அவிழ்கின்றன என்பவை போன்ற சுருதி வாக்கியங்களைக் கொண்டு ஒருவன் ஜீவாத்மாவை பிரம்மம் என்று இங்கேயே இப்பொழுதே கண்டு கொள்ள வேண்டும். 

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  10

ஒருவன் சுருதியாலும், யுக்தியாலும் அறிந்து கொள்ள வேண்டிய பெரிய விஷயம் தான் ஆத்மா என்பதேயாகும் .  அஹங்காரம் முதலிய அனாத்மாவை ஆத்மா என்று கொள்வது அறிவாகாது. அனாத்மாவை ஆத்மா எனக்கருதும் பிழையை ஒருவன் விட்டு விலக வேண்டும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  9

ஒளிவடிவாயுள்ள சூரியனிடம் எவ்வாறு இருள் இல்லையோ அவ்வாறே அறிவு வடிவான ஆத்மாவில் அஞ்ஞானத்திற்கிடமில்லை. அவ்வாறே மாறுபாடற்ற ஆத்மாவில் மாறுபடும் நிலைகளுக்கிடமில்லை. அப்படி மாறுபடுமேயானால் அது அழிவுடையதாய்விடும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  8

விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மாறுபாடுகளை உடைய சித்த விருத்தியைப் பிரகாசப்படுத்திக் கொண்டு எங்கும் நிறைந்ததாயும் எல்லா உயிர்க‍ளிலும் ஒன்றாயுமிருக்கும் ஆத்மா அனைத்திற்கும் சாக்ஷியாயுளது.  ஆத்மா கண்டனுபவிக்கப்பட்டால் இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன.  சந்தேகங்களெல்லாம் ஒழிகின்றன.  கருமங்களெல்லாம் நாசமடைகின்றன என்று உபநிஷதம் கூறுகிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 7

ஆத்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை, ஏனெனில் ஆத்மா பரிசுத்தமான அறிவொளி வடிவானது, அதனிடம் அஞ்ஞான இருளில்லை. ஆத்மாவிற்கு உபாதிகள் ஏதுமில்லை, அது வர்ணிக்க முடியாதது, பகுக்க முடியாதது, குணங்களற்றது, பரிசுத்தமானது, வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 6

ஒருவனுக்கு நான் என்னுடையது என்ற சொற்கள் எப்பொழுது முற்றும் அர்த்தமற்றவையாகின்றனவோ அப்பொழுது அவன் ஆத்மஞானியாகின்றான். எல்லா உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மாவைக் கண்டு கொண்டதாய்க் கருதுபவன் அப்பொழுதும் தனக்குப் பகைவர்கள் இருப்பதாய்க் கருதுவானேயானால் அவன் நெருப்பைக் குளிர்ந்ததெனக் கொள்பவனாவான்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 5

செயல்களைத் துறந்து, காலம், தேசம், திக்கு முதலியவைகளைக் கருதாமல் என்றும் இன்பவடிவானதும், மாசற்றதும், குளிர் முதலியவற்றை போக்குவதும் ஆகிய ஆத்மா எனும் புண்ணிய பூமியை எவன்,  நாடுகிறானோ அவன் அனைத்தையும் அறிந்தவனாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் சாவைக் கடந்தவனாகவும் விளங்குவான், உடலில் ஒரு கை வெட்டி எறியப்பட்டால் உடலுக்குக் குறைவேற்படும்பொழுது ஆத்மாவிற்குக் குறைவேற்படுவதில்லை. மிகுதியுள்ள உடலின் அங்கங்கிளிலும் ஆத்மாவிற்கு ஒரு பற்றுமில்லை

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 4

ஆத்மா எப்பொழுதும் அடையப்பட்டதாயிருப்பினும் அஞ்ஞானத்தால் அடையப்படாததது போல் தோன்றுகிறது. அஞ்ஞானம் நீங்கியதும் ஒருவன் தன் கழுத்தில் ஏற்கனவே இருந்த ஆபரணத்தைக் கண்டு கொள்வது போல் ஆத்மா ‍ அடையப்பட்டது போல் பிரகாசிக்கிறது. உலகனைத்தும் ஆத்மாவே, ஆத்மாவிற்குப் புறம்பாக ஒரு சிறிதுமில்லை. குடம் முதலியவை மண்ணெனக் காண்பது போல் ஞானி அனைத்தையும் ஆத்மாவாய்க் காண்கிறான்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 3

புத்திமான் தன்னுடைய அறிவால் காணும் உலகனைத்தையும் ஆத்மாவில் ஒடுக்கி ஆத்மாவானது களங்கமற்ற ஆகாயம் போன்றதென்று எப்பொழுதும் தியானிக்க வேண்டும். அருணோதயத்தால் இருளானது முதலில் நீக்கப்பட்ட பின் சூரியன் தானே பிரகாசிப்பது போல் அஞ்ஞானம் ஞானத்தால் நீக்கப்பட்ட பின் ஆத்மா தானே பிரகாசிக்கும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 2

எப்படி ஒரு விளக்கைக் காண்பதற்கு வேறொரு விளக்கு வேண்டப் படுவதில்லையோ அப்படியே அறிவு வடிவான ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்துவதற்கு வேறொரு அறிவை வேண்டுவதில்லை. ஆத்மா தன்னை ஜீவன் என்று கொண்டால், ஒருவன் பழுதையைப் பாம்பு என்று கொண்டு பயப்படுவது போல் பயத்துக்குள்ளாகிறது. தான் ஜீவனன்று தான் பரமாத்மா என்று அறிந்தனுபவிக்கும் பொழுது பயமின்மையை மீண்டும் அடைகிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 1

ஆத்மா ஸத்தும் சித்துமே வடிவான ஆத்மாவை இடைவிடாத அப்பியாஸத்தாலன்றி அறிய முடியாது. ஆகையால் ஞானத்தை நாடுபவன் தன்னுடைய லக்ஷியத்தையடைய நீண்ட காலம் தியானம் பழக வேண்டும். ஒரு விளக்கானது குடம் முதலியவற்றைப் பிரகாசப்படுத்துவது போல் ஆத்மா ஒன்றே புத்தி முதலியவற்றையும் இந்திரியங்களையும் பிரகாசப்படுத்துகிறது. ஜடமான அவற்றால் ஆத்மா பிரகாசமடைவதில்லை.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 14

எனக்கு ஞானத்தை அளித்து அஞ்ஞானம் நிறைந்ததும் பிறப்பிறப்பு வடிவானதுமான ஸம்ஸாரஸாகரத்தினின்று என்னைக் காப்பாற்றியவரும், போற்றுதற்குரியவர்களிற் சிறந்தவரும், எல்லாமறிந்தவருமான எனது குருநாதரை வணங்குகிறேன். அஞ்ஞான இருளிருந்தபொழுது இவ்வுலகம் முழுதும் உண்மையெனப்புலப்பட்டது. ஞான சூரியன் உதித்த பிறகு உலகை நான் காணவில்லை. இது ஆச்சரியம்.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 13

வேதாந்தத்தின் விஷயமான ஞானம் சித்தித்தால், ஜீவனே பிரம்மம் என்ற அனுபவம் ஏற்படும். அதனால் ஒருவன் பிறவித் தளையினினின்று முற்றும் விடுபடுகிறான். ஆத்ம ஞானத்திற்கொப்பாவது வேறெதுவுமில்லாமைாயல், ஒருவன் எப்பொழுதும் சீடனுடைய குணங்களைக் கைக்கொண்டு ஞானத்தைச் சம்பாதித்துப் பிறவிக்கடலைக் கடந்து செல்லவேண்டும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 13

இறைவனைத் தொழுதாலும், தொழவிட்டாலும், மணம் புரிந்துகொள்ளாத ஒருவன் பாதியளவு விடுதலை பெற்றவனாகிறான். கடவுளிடம் அவனுக்குச் சிறிதளவு பற்று ஏற்டுவதாக உணரும்போது, அவன் வெகு வேகமாக இறைவனைச் சென்றடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 12

இறைவனது அருளே காசி முழுதும் நிரம்பியிருக்கிறது. ஆஸ்திகனோ, நாஸ்திகனோ, வேறு மதத்தவனோ, பூச்சியோ அங்கு இறக்கும் எந்த உயிரும் முக்கியைடையும். அனேக பாவிகள் காசிக்கு வந்து, விசுவநாதரது உருவைத் தொட்டு தம் பாவத்தினின்றும் விடுதலை பெறுகின்றனர்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 11

துக்கத்திலடிபட்ட உங்கள் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள். கண்ணீர் சிந்தி, ‘ இறைவனே, என்னை உன்பால் இழுத்துக் கொண்டு மன அமைதி தந்தருள்க ‘ என்று மனமாரப் பிரார்த்தியுங்கள். அவ்வாறு எப்போதும் செய்வதன் மூலம் படிப் படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 10

அஞ்சேல், இறைவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறான். அவனுக்குரிய பணிகளைச் செய். சாதனங்கள் பழகு. தினந்தோறும் சிறிது வேலை செய்தாலும் மனத்திலிருந்து விணான நினைவுகளை நீக்கிவிடும். இப்பிரபஞ்சம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக்கொள்க. அவன் தனது கருணையை உன் மீது பொழிவான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 9

உண்மையில் இவ்வுலகமாகிய கடலைக் கடக்க விரும்பும் ஒருவன் எப்படியாவது தன் பந்தங்களை அறுத்துக் கொண்டு விடுவான். யாராலும் அவனை அவற்றில் சிக்க வைக்க முடியாது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 7

இன்னல்கள் நேர்கின்றன. ஆனால், அவை என்றும் இரா. பாலத்தினடியில் ஒடும் நீரைப்போல் அவை ஒடி மறைந்து விடும். என்னைப் பிரார்த்திப்போர்க்கு இறக்கும் தருவாயில் நான் அருகில் நின்று அபயம் அளிப்பேன் ‘ என்று குருதேவர் (ஸ்ரீ ராமகிருஷ்ணர்) சொல்வது வழக்கம். மேற்கூறியவை, அவரது வாயினின்றும் வெளி வந்த சொற்களாகும். உங்கள் மனச்சுமையை ஸ்ரீராமகிருஷ்ணர் முன் இறக்கி வையுங்கள். கண்ணீருடன் உங்கள் துன்பங்களை எடுத்துரையுங்கள். உங்கள் கை நிறைய நீங்கள் விரும்பியவற்றை அவர் தருவதைக் காண்பீர்கள்.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 11

வைராக்கியத்தின் பயன் ஞானம், ஞானத்தின் பயன் விஷய சுகங்களை நாடாமல் ஆத்மானந்தத்தையனுபவித்தல், அதனால் விளைவது பரம சாந்தி. அகங்காரத்தில் வேரையறுத்து அதை எரித்துச் சாம்பலாக்குவது உண்மையான ஞானத்தின் இயல்பு. அப்பொழுது செயல் புரிபவனும் இல்லை. செயலின் பலனை அனுபவிப்பவனும் இல்லை.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 6

ஒருவன் இறைவனிடம் சரண்புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற்றப்படுகின்றன. இத்தகைய மனிதனது தலையெழுத்தை விதியே தனது கரங்களால் துடைத்துவிடுகின்றது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 10

நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கிப் பிரகாசிப்பது போல் கேள்வி முதலியவற்றால் கொழுந்து விட்டெரியும் ஞானத்தீயில் பரிசுத்தமான ஜீவன் எல்லா மலங்களும் நீங்கித் தன்னுடைய சுய ஒளியுடன் பிரகாசிக்கிறான். ஒன்றை மற்றொன்றாய்க் கொள்ளும் மதியீனம் பரிபூர்ண ஞானத்தாலன்றி வேறெதனாலும் நீங்காது. ஜீவன் பிரம்மமே என்று அறிந்தனுபவிப்பதுதான் பரிபூர்ண ஞானமென்பது வேதத்தின் முடிவு.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 5

உன் உள்ளத்தை விண்மீனைப் போல் தூயதாக ஆக்க வேண்டுமென இறைவனை வேண்டு. காலமுறை தப்பாமல், முழுமனத்துடன் செய்யப்படும் ஜபத்தின் பலனாக, இறைவன் உன்னுடன் பேசுவதை நீ உணர்வாய். உன்னுடைய விருப்பங்களெல்லாம் பூர்த்தியடையும், களங்கமிலாப் பேரின்பத்தை நீ காண்பாய்.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 9

இருளில் ஏற்பட்ட திக்பிரமையானது ஒளியில் நீங்குவது போல் அஞ்ஞான நிலையில் ஏற்பட்ட அகங்காரம், மமகாரம் முதலியவையெல்லாம் தத்துவஸ்வரூப அனுபவத்தில் ஏற்படும் ஞானத்தால் உடனே அழிந்துபோம். தெளிந்த ஞானத்தையடைந்த யோகியானவன், ஞானக் கண்ணால் தன்னிடத்திலேயே உலகனைத்தும் இருப்பதாயும் ஆத்மாவே அனைத்துமாயிருப்பதாயும் காண்கிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 4

குழந்தாய், கவலையுறாதே, இவ்வுலகப் பந்தங்களெல்லாம் நிலையில்லாதனவே. இன்று அவையே சாரமும் பயனும் எனத் தோன்றும். ஆனால், நாளை அவை மறைந்துவிடும். இறைவனுடன் உள்ள தொடர்பே உண்மையானது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 8

ஸம்ஸாரம் கனவு போன்றது, விருப்பு வெறுப்புக்கள் நிறைந்தது, அதனடைய காலத்தில் அது உண்மை போல் பிரகாசிக்கிறது. ஆனால் ஞான விழிப்பு ஏற்பட்டதும் மறைந்து போகிறது. அரணிக் கட்டையைக் கடைவது போன்ற ஆத்ம தியானம் எப்பொழுதும் செய்யப்பட்டால் அதினின்று எழும் தீயானது அஞ்ஞனமாகிற விறகை முழுவதும் எரித்துவிடும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 3

எந்த மனிதனும் எப்போதும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கமுடியாது. எவனும், ஆயுள் முழுவதும் துயரத்திற்கு ஆளாக மாட்டான். ஒவ்வொரு செயலும் முறையே அதனதன் பயனைத் தருகின்றது. அதற்கேற்பச் சந்தர்ப்பங்களையும் ஒருவருக்கு கொணர்கிறது. என் குழந்தை சேற்றையும், புழுதியையும் பூசிக்கொண்டிருந்தால், அதைக் கழுவி என் மடிமீது அமர்த்திக்கொள்வது என் கடமையல்லவா?

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 7

மற்ற சாதனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஞானம் தான் மோக்ஷத்திற்கு நேரான சாதனம் என்பது தெளிவாகின்றது. நெருப்பில்லாமல் எப்படிச் சமையல் இயலாதோ அப்படி ஞானமில்லாமல் மோக்ஷம் இயலாது. தேத்தாங்கொட்டைப் பொடியானது தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டுக் கீழே படிந்து விடுவது போல் ஞானமானது அஞ்ஞானத்தால் அழுக்கடைந்த ஜீவனை அப்பியாசத்தால் அழுக்கற்றவனாக்கி விட்டுத் தன்னையும் மறைத்துக் கொள்ளுகிறது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 2

அவதார புருஷர்களும், முனிவர்களும், யோகிகளுங்கூட, துன்பம் அனுபவித்தே தீர வேண்டும். ஏனெனில், சாதாரண மனிதர்கட்கு, தகாததைச் செய்தாலும், தக்கதைச் செய்யாமையாலும் ஏற்படும் பாவங்களை அம்மகான்கள் தாங்களே ஏற்றுக்கொண்டு, உலக நன்மைக்காகத் தம்மையே பலியாக்குகின்றனர்.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 6

அந்தக்கரணம் உள்ளவரை வெளி விஷயங்கள் புலனாகின்றன. அந்தக்கரணமில்லையேல் வெளி விஷயங்கள் இல்லை. அறிபவன் அறிபவனாக எப்பொழுதும் ( விஷயங்கள் இல்லாத பொழுதும் ) இருக்கவே இருக்கிறான். துவைதத்திற்கு இருப்பில்லை. நான் பரிசுத்தமான ஆத்மா என்று ஒருவன் உணரும் பொழுது தான் உடல் என்ற நினைவு அழிந்து போகிறது. ஒருவன் விரும்பாவிடினும் அந்த ஞானம் அவன் மனிதன் என்ற எண்ணத்திலிருந்து அவனை விடுவித்து விடுகிறது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள்.1

அஞ்சற்க, மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. இறைவன் பெயரை ஒதிக்கொண்டே அவற்றை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். இறைவனே மனித உருக்கொண்டு வந்தாலும் அவனால் மனம், உடல் இவற்றின் காரணமாக உண்டாகும் இன்னல்களினின்றும் தப்பிக்க இயலாது.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 5

நான் மாறுபடாதவன், எனக்கு உருவம் இல்லை, குற்றமும் குறைவும் என்னிடமில்லை, நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது. எனக்கு குணமும் இல்லை செயலுமில்லை, நான் என்றுமுள்ளவன், சுதந்திரமானவன், அழியாதவன், நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 52 

செல்வம் எப்போதும் மனத்தைக் கறைப்படுத்துகிறது. நீங்கள் செல்வத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவரென்றும், செல்வத்தின் மீது உங்களுக்கு எவ்விதப் பற்றும் ஏற்படாதென்றும் நினைக்கலாம். அதை நீங்கள் விரும்பியபோது விட்டு விடலாம். இவ்வாறு எண்ணற்க, ஒரு சிறிய துளை வழியாக அப்பற்று உங்கள் மனத்தினுட் புகுந்து உங்களையறியாமலே கொஞ்சம், கொஞ்சமாகக், கொன்று விடும். ஸ்ரீராமகிருஷ்ணர் பொருளைத் தொடவும் பொறார். எப்பொழுதும் அவருடைய உபதேச மொழிகளை நினைவிருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் நீங்கள் காணும் இன்னல்களுக்கு மூல காரணமாவது இப்பொருள்தான். அது உங்கள் மனத்தை வேறிச்சைகளிடத்தும்…

ஸ்ரீசங்கரரின் ஞானம் 4

நான் மாசற்றவன், அசைவற்றவன், அளவில்லாதவன், புனிதமானவன், அழிவற்றவன், சாவில்லாதவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமானகளால் கூறப்படுகிறது. நான் நோயற்றவன், எதிலும் பிடிபடாதவன், துவந்துவங்களுக்கப்பாற்பட்டவன், எங்கும் நிறைந்தவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 51

பணியைப் பெறும் அம்மனிதரைப் பொம்மை போல அடக்கியாள அவன் விரும்புகிறான். பின் உணவருந்தல், உட்காருதல், எழுதுதல் முதலான ஒவ்வொன்றிலும் அவரை ஏவ விரும்புகிறான். பணி செய்யும் விருப்பத்தை அவன் இழக்கிறான். அநேக மகான்கள் தம்மைச் சுற்றிலும் செல்வத்தையும், சிறப்பையும் உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல மனிதர் அவருக்கு வேலையாளாக வரப் பிரியப்படுகின்றனர். அவர்கள் தங்கள் பதவியின் சுகங்களில் மதி மயங்கித் தங்கள் அழிவுக்குத் தாங்களே வழிதேடிக் கொள்கிறார். தக்க மனநிலையுடன் பணி செய்ய விரும்புபவர் எத்தனை பேர்…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 3

சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது, வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும். ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 3

சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது, வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும். ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 50

ஒரு சாதுவைக் கண்டால் நீங்கள் அவருக்கு எல்லா மரியாதைகளையும் செய்ய வேண்டும். கோபத்துடன் பதிலுரைப்பதாலோ, அன்றி மதிப்பற்ற மொழிகளாலோ அவருக்கு நீங்கள் அவமரியாதை செய்யக் கூடாது. ஒரு பெரிய மகானுக்குப் பணிவிடை செய்யுங்கால், பின்வரும் முறைகளில் ஒருவன் தவறு செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய பணி செய்யும் உரிமையை ஒருவன் அனுபவிக்கும்போது, அவனுக்கு அகங்காரம் மேலிடுகிறது.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 2

தன்னாலோ, பிறராலோ ஆத்மாவைக் கொள்ளவும் முடியாது. தள்ளவும் முடியாது. அதுவும் எதையும் கொள்ளுவதுமில்லை, தள்ளுவதுமில்லை. இதுதான் உண்மையான ஞானம். வேதங்களிலும் தேவதைகளிடமும் உறையும் உன்னதமான ரகசியம் ஞானமே. அதுதான் பரிசுத்தமளிப்பவற்றுள் தலை சிறந்தது.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 1

எப்படி ஒளியின் உதவியில்லாமல் ஒரு பொருள் ஒரு பொழுதும் பார்க்கப்படுவதில்லையோ, அப்படி மனதில் ஆராய்ச்சியில்லாமல் எதனாலும் ஞானம் அடையப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 49

கீழ் கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்களில் நீங்கள் மிக்க எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதலாவது, ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள வீடு. எந்நேரத்திலும் ஆறு பெருக்கெடுத்து,      உங்கள் வீட்டை அரித்துச்சென்று விடலாம். இரண்டாவது பாம்பு, ஒரு பாம்பைக் காணும்போது நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில், அது எப்பொழுது உங்களை அணுகித் தீண்டும் என்பதை உங்களால் அறிய முடியாது. மூன்றாமவர் சாது, அவரது ஒரு எண்ணமோ அல்லது வார்த்தையோ ஒரு இல்லறத்தானை எப்படிப் பாதிக்கும் என்பதை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 48

எத்தகைய சிற்றறிவை மனிதன் பெற்றிருக்கிறான்? அவனுக்கு வேண்டுவது ஒன்றாயிருக்க, அவன் கேட்பது வேரொன்றாயிருகிறது பல சந்தர்ப்பங்களில் அவன் பிள்ளையார் பிடிக்கத் தொடங்குகிறான். அது குரங்காய் முடிகிறது. ஆகவே நம் விருப்பங்கள் எல்லாவற்றையும் இறைவனது பாதங்களில் ஒப்படைத்தலே சாலச் சிறந்தது. நமக்கு எவை மிக நல்லவையோ அவற்றையே இறைவன் நமக்கு அருள்வான். ஆனால், ஒருவன் பக்தி பெருகுவதற்கும் பற்று அற்றுப் போவதற்கும் பிரார்த்திக்கலாம். அவை மேற் கூறிய இச்சைகளின் பாற்படா.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 13

நான் மாறுபடாதவன், உருவில்லாதவன், நான் எல்லா இந்திரியங்களிலும் எல்லா இடத்திலும் வியாபித்திருப்பதால் எனக்குப் பற்றின்மை என்ப‍தில்லை, முக்கியுமில்லை, பந்தமுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான். சங்கரரின் பஜ கோவிந்தம் இத்துடன் நிறைவு அடைகிறது 

மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தை மட்டுமே வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 12

புண்ணியமும், பாவமுமில்லை, இன்பமும், துன்பமும் இல்லை, மந்திரங்களும், தீர்த்தங்களும், வேதங்களும், யாகங்களுமில்லை, நான் புசிப்பவனன்று, புசிக்கப்படுவதுமன்று, புசிக்கும் செயலுமன்று, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான் சிவமே நான். எனக்குச் சாவில்லை, பயமில்லை, ஜாதிபேதமில்லை, எனக்குத் தாயில்லை, தந்தையில்லை, பிறப்புமில்லை, எனக்குச் சுற்றமுமில்லை, நட்புமில்லை, எனக்கு குருவுமில்லை, சீடனுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 47

சாவு எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை யாதலால், ஒருவன் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தூய எண்ணங்களைச் செயலாக்கிவிட வேண்டும். அதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக்கூடாது. சாவுக்கு காலப் பாகுபாடு கிடையாது. பலவற்றின் கலப்பான இத்தத்துவ ஆராய்ச்சியை, இந்த வறட்டு வாதத்தை விட்டு விடுங்கள். வாதத்தின் மூலம் இறைவனை அறியும் திறமை பெற்றவர் யார்?

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 46

நீ ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் போது உன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களை உற்று நோக்கி அறிந்து கொள். நீ வாழும் இடத்தில் என்ன கிடைக்கின்றது எனபதைப் பற்றியும் நீ அறிந்து கொள். ஆனால், உன் வாயை மட்டும் திறவாதே. உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்குக்கூறி உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 11

நான் பிராணன் எனப்பட்டவனன்று, நான் ஐந்து வாயுக்களன்று, ஏழு தாதுக்களுமன்று, ஐந்து கோசங்களுமன்று, வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் எனப்படுவையுமன்று, அறிவும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான். எனக்கு விருப்பும், வெறுப்புமில்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, பேராசையும் மதிமயக்கமுமில்லை, கொழுப்பும் மாச்சரிய பாவனையுமில்லை, அறமும், பொருளும், இன்பமும், வீடும் இல்லை. அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 45

ஒருவன் வார்த்தையாலும் பிறரைத் துன்புறுத்தக்கூடாது. அனாவசியமாக ஒருவன் பிறருக்குப் பிரியமாயிராத மெய்யை உரைத்தலாகாது. கடுமொழிகள் பேசுவதால், ஒருவனது சுபாவமே கொடுமையாக மாறுகிறது. நாவை அடக்கும் சக்தி ஒருவனுக்கு இல்லாது போயின், அவன் தனது மனநுண்மையை இழக்கிறான். ஒரு நொண்டியைப் பார்த்து, அவன் எப்படி முடமானான் என்று வினவக் கூடாது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது வழக்கம்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 10

உன்னுடைய குருவின் திருவடித்தாமரைகளைப் போற்றி உலகத்திற் கடிமையாயிருப்பதினின்று உன்னை விடுவித்துக்கொள். இந்திரியங்களையும், மனதையும் அடக்கி பகவானை உன் இதயத்தில் பார். நான் மனதும், புத்தியும், சித்தமும், அஹங்காரமும் அன்று, காதும், கண்ணும் , நாக்கும், மூக்குமன்று, ஆகாயமும், பூமியும், தீயும், காற்றுமன்று, அறிவும், ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 44

ஒருவன் போகப் பொருள்களினிடையே வாழ்வானாயின், இயற்கையாகவே அவன் அவற்றால் வெல்லப்படுகிறான். மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் உருவத்தையும் கண்ணெடுத்துப் பாராதே, அதன் அருகிலும் செல்லாதே சீடர் – அன்னையே, தீய எண்ணங்கள் என் மனத்துள் புகுவதில்லை உடனே, அன்னையார் அவரைப் பேசவிடாமல் தடுத்து,  அவ்வாறு உரைக்காதே, இவ்வாறு ஒருவர் பேசுவது தவறு” என்றார்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 9

பிரணயாமம், மனதை உள்முகமாய்த் திருப்புதல், அழியும் பொருளையும் அழியாப் பொருளையும் ஆராய்ந்தறிதல், ஜபமும், ஸமாதியும் கூடுதல் ஆகிய மகத்தான ஸாதனைகளில் உன்னுடைய முழுமனதையும் செலுத்து. தாமரையிலை மேலுள்ள தண்ணீர் மிகவும் சஞ்சலமானது. அதே மாதிரிதான் ( உடலில் ) உயிரும் அதிசயிக்கும்படி சஞ்சலமானது. உலகனைத்தும் நோயாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டடுத் துன்பத்தால் கொல்லப்படுகிறதென்பதை அறிவாயாக.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 8

பொருள்,சுற்றம், யெளவனம் முதலியவற்றைப் பற்றி கர்வம் கொள்ளாதே, காலம் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய்விடும். மாயாமயமான இவ்வனைத்தையும் விட்டு பிரம்மபதத்தை அறிந்து கொண்டு அதனுட் புகுவாயாக. காமத்தையும், கோபத்தையும், பேராசையையும், மதிமயக்கத்தையும் ஒழித்து அஞ்ஞானத்தினின்று விடுபட்ட உனது உண்மை ஸ்வரூபத்தைப் பார். ஆத்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் வீழ்ந்த துன்பத்திற்காளாகிறார்கள். சத்துருவென்றும், மித்திரனென்றும், புத்திரனென்றும் உறவினனென்றும், வேற்றுமையைப் பாராதே. விஷ்ணுபதத்தை நீ விரும்பினால் யாரிடத்தும் பகைமையும், நட்பும் பாராட்டாமல் எல்லோரையும், எல்லாவற்றையும் சமமாகப்பார். 

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 43

ஒரு சாது எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும். அவனது மார்க்கம் வழுக்கலுடையதாதலின் மிகவும் எச்சரிக்கையாக அவன் அடியெடுத்து வைத்து அதில் நடக்க வேண்டும். சன்னியாசி ஆவது ஒரு விளையாட்டான காரியமா? அவர் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கலாகாது, தெருவில் செல்லும்போது அவரது பார்வை அவரது கால் கட்டை விரலின் மீதே பதிந்திருக்க வேண்டும். கழுத்தில் பட்டயம் அணிந்திருக்கும் நாய் எவ்வாறு ஏனைய தெரு நாய்களைப் போல் கொல்லப்படுவதினின்றும் காக்கப்படுகின்றதோ, அது போல் சன்னியாசியின் காவி நிற ஆடை,…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7

மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்க‍ளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 42

நான் உனக்கு ஒன்று கூறுவேன். உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்துக் குற்றம் காணாதே. அதற்குப் பதிலாக, உன் குற்றங்களையே எண்ணிப்பார். இவ்வுலகம் முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொள்ளப் பழகு. குழந்தாய், இவ்வுலகில் யாரும் உனக்கு அன்னியரல்ல. இவ்வுலகம் முழுதும் உனதே. ஒருவன் பிறரிடத்துக்குக் குற்றம் காணப் புகுவானேயாகில், அவன் மனமே முதலில் மாசடைகின்றது.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 6

எதுவரை மூச்சுக் காற்று உடலில் ஓடிக்கொண்டிருக்கிறதோ அதுவரை வீட்டில் உன்னுடைய நலத்தைப் பற்றிக் கேட்பார்கள். மூச்சுக்காற்றுப் போய் உடலுக்கு அபாயம் ஏற்பட்டால் மனைவி கூட அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள். காமசுகத்திற்கு எவன் வசப்படுகிறானோ அவன் நோய் வாய்ப் படுகிறான். மரணம் ஒன்றே முடிவு என்று கண்டும் ஒருவனும் பாவத்தினின்று விலகுவதில்லை.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 41

ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ள எண்ணிய ஒரு பெண்மணியிடம் தூய அன்னையார் கூறியதாவது, – அவ்வாறு செய்யாதே. பிறருக்கு நீ ஆற்ற வேண்டிய கடமைகளை எப்போதும் செய்துவா, ஆனால் உன்னுடைய அன்பைக் கடவுளிடத்து மட்டுமே நீ செலுத்தவேண்டும். உலகத்தாரிடம் வைக்கும் அன்பு தன் பின்னே சொல்லொணாத் துயரங்களை எப்போதும் இழுத்துக்கொண்டு வரும். எந்த மானுடப் பிறவியை நீ நேசித்தாலும், அதற்காக வருந்தத் தான் நேரிடும். எவள் இறைவன் ஒருவனிடம் மட்டுமே அன்பு செலுத்துகிறார்களோ, அவளே உண்மையில்…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 5

வயது கடந்தால் காமக்கிளர்ச்சி என்ன ஆகிறது? நீர் வற்றினால் குளம் என்ன ஆகிறது? பொருள் அழிந்தால் சுற்றம் என்ன ஆகிறது? உண்மை உணரப்பட்டால் ஸம்ஸாரம் என்ன ஆகிறது? ஸ்திரீகளின் நகில்களையும் நாபிப்பிரதேசத்தையும் பார்த்து மதிமயங்காதே, இவை மாம்ஸம், கொழுப்பு இவைகளின் விகாரமென்று அடிக்கடி எண்ணி மனதில் பொருட்படுத்தாமலிரு. நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தோம்? என் தாய் யார்? தந்தை யார்? இப்படித் தன்னுடைய பிறவித்தளைகளை நன்றாய் விசாரித்துப் பார்த்து இவையெல்லாம் கனவுக்கொப்பானவை எனக் கண்டு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 40

புத்தகம் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிற்குக்கூறிய புத்திமதியாவது, ”எவருடனும் மிகவும் நெருங்கிப் பழகாதே. குடும்பத்திலே பலர் கூடி நடத்தும் கொண்டாட்டங்கள் எதிலும் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்ளாதே எப்போதும் மனத்தை நோக்கி ‘ மனமே, அடக்கமாக இரு ‘ என்று சொல், பிறரைப்பற்றி அறிய ஆவல் கொள்ளாதே. தியானம், பிரார்த்தனையும் செய்யும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டு வா”. தூய அன்னையார் தம்முடைய மற்றொரு சீடப் பெண்ணிற்கு கூறிய எச்சரிக்கையாவது, ” எந்த ஆணுடனும், உன்னுடைய தந்தையாயினும் சகோதரனாயினும்…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 4

இறந்தால் மறுபடி பிறப்பு, பிறந்தால் மறுபடி இறப்பு, மறுபடியும் ஒரு தாய் வயிற்றில் முடங்குதல், கரைகாணாததும் கடத்தற்கரியதுமான இவ்வாழ்க்கைக் கடலினின்று என்னைக் காத்தருளும் பகவானே! பகலுக்குப்பின் பகலும், இரவுக்குப்பின் இரவும், பக்ஷங்களும், மாதங்களும், கோடைகாலமும், குளிர்காலமும், வருஷத்திற்குப் பின் வருஷமும் மாறாமல் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. வீண் ஆசைகளும் ஸங்கல்பங்களும் எவனையும் விட்டுப் போவதாயில்லை.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 39

ஒரு நாள், ஒரு தாய் துறவிக்கோலம் பூண்ட தன் மகனை மீண்டும் உலக வாழ்விற் புகச்சொல்லுமாறு அன்னையை வேண்ட, அவர் கூறியதாவது, ” ஒரு துறவிக்குத் தாயாக இருக்கும் பேறு கிடைப்பது எளிதல்ல. ஒரு பித்தளைப் பாத்திரத்தின் மீதுள்ள பற்றைத் துறப்பதே மக்களுக்கு முடியாது போகிறது. இவ்வுலகத்தையே துறப்பது எளிதானதா? உனக்கேன் இந்தக் கவலை?”. புதிதாக உபதேசம் செய்யப்பட்ட ஒரு சீடப்பெண்ணை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ”அப்பொழுது தான் விதவையான எந்தப் பெண்ணுக்கும் நான் உபதேசம்…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 3

அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, வாய் பல் இல்லாததாக ஆகிவிட்டது, கிழவன் கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான், என்றாலும் அவனுடைய மாம்ஸ பிண்டத்தை ஆசைவிடவில்லை. குழந்தையாயிருக்கும் பொழுது விளையாட்டின் பற்று, யெளவனத்தில் பருவப் பெண்ணிடம் பற்று, வயது முதிர்ந்தபொழுது கவலை, பரப்பிரம்மத்திடம், பற்றுக்கொண்டவன் எவனுமில்லை.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 38

ஒருவரை சாதுவாகும்படி தூண்டியதற்காகத் தூய அன்னையாரைக் குற்றஞ்சாட்டி, ” மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதலும் ஒருவகை மாதர் கோட்பாடே ” என்று கூறிய ஒரு பெண்மணியை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ” பெண்ணே, நான் சொல்வதைக் கேள், இவர்களெல்லாரும் தெய்வீகக் குழந்தைகள் முகரப்படாத மலர்களைப் போலத் தூய்மையான வாழ்வை அவர்கள் நடத்துவார்கள். இதைவிட மேன்மையானது வேறு ஏது? இம் மண்ணுலக வாழ்வு எத்தகைய துன்பத்தைத் தரும் என்பதை நீயே உணர்ந்திருக்கிறாய். இவ்வளவு நாட்களாக…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 2

சடைதரித்தவானாலும், மொட்டையடித்தவானாலும், குடுமியைக் கத்தரித்தவானாலும், காவித்துணியணிந்து பலவாறான வேஷம் பூண்டவானாலும், மதிமங்கியவன் பார்த்தாலும் பார்க்காதவனேயாகிறான். பலவகைப்பட்ட வேஷமெல்லாம் வயிற்றுப் பிழைப்பாகவே முடிகின்றது. எவனால் பகவத்கீதை சிறிதளவாவது படிக்கப்பட்டதோ, கங்கை நீர் ஒரு துளியாவது பருகப்பட்டதோ, முராரியான பகவானுடைய பூஜை ஒரு தடவையாவது செய்யப்பட்டதோ அவனுக்கு யமபயமில்லை

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 1

பகலும், இரவும், மாலையும், காலையும், பனிக்காலமும், இளவேனிற்காலமும் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது, வயது கழிகிறது, என்றாலும் காற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசைமட்டும் மனிதனை விடுவதில்லை. மதிமங்கியவனே! மரண சமயம் நெருங்கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றாது. ஆகையால் கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி. எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாயிருக்கிறானோ அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும். நோயினால் உடல் தளர்ந்து போன பின்பு…

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந் நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 37

கணவன், மகன், உடல் இவையெல்லாம் மாயையே. அவை மாயையால் ஏற்பட்ட பந்தங்களே, அவற்றினின்றும் உன்னை நீ விடுவித்துக் கொண்டாலன்றி, நீ முக்தியடையமாட்டாய். இவ்வுடலின் மீதுள்ள பற்றும், இவ்வுடலையும் அதனுள் உள்ள ஆன்மாவையும் ஒன்றெனக் கருதும் மனப்பாங்கும், மறைய வேண்டும். குழந்தாய்,  இவ்வுடல் எனப்படுவது யாது? (எரித்த பின்) மூன்று கிலோ சாம்பலேயன்றி வேறல்ல. பின் அதைப்பற்றி ஏன் அவ்வளவு ஆடம்பரம்? உடல் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அதன் முடிவு மூன்று கிலோ சாம்பலே தான், இப்படியிருந்தும் மக்கள்…

அறநூல்களில் சொல்லப்பட்ட விதி களின்படி நடந்துகொண்டால்போதாதா? இறைவழிபாடுவேறுசெய்யவேண்டுமா?

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில், “காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை, மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 24

தீமையைப் போக்கும் மருந்து நான். நான் குணமும் குறியுமற்றவன். நான் கருணையின் எல்லை. (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற  நாலுவித புருஷார்த்தங்களையும் அளித்து அனைவரையும் பலவாறாய் விடுவிப்பவன் நானே. மூலிகைகளின் ஸாரம் நானே. உலகமாகிற சேலையின் ஊடும் பாவும் நானே. ஓங்காரமெனும் தாமரையினின்று எழும் ஆனந்தமாகிய நறுமணத்தால் மதங்கொண்ட தேனீ போன்றவன் நான். அறிபவன் நானே, அறிவின் சாதனங்களும் நானே, அறிபவன் அறிவு அறியப்படுவதென்ற மூன்றையும் கடந்து கேவலம் ஸத்ரூபமாயுள்ள ஆத்மாவும் நானே. பக்தியும் நானே,…

மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்து

1 சோமாஸ்கந்தர்  2 நடராஜர் – 3 ரிஷபாரூடர் – 4 கல்யாணசுந்தரர் – 5 சந்திரசேகரர் – 6 பிட்சாடனர் – 7காமசம்ஹாரர் – 8 கால சம்ஹாரர் – 9 சலந்தராகரர் – 10 திரிபுராந்தகர் – 11 கஜசம்ஹாரர் – 12 வீரபத்திரர் – 13தட்சிணாமூர்த்தி – 14கிராதகர் – 15 கங்காளர் – 16சக்ரதானர் – 17 கஜமுக அனுக்கிரக மூர்த்தி – 18சண்டேச அனுக்கிரகர் – 19 ஏகபாதமூர்த்தி –…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 36

ஒவ்வொரு நாளும் அதிகமாக உழைக்கும் நேரங்களுக்கிடையிலும், பிரார்த்தனைக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கிவை. நான் தட்சிணேசுவரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்த காலங்களிலும் பிரார்த்தனையையும் தியானத்தையும், பழகிவந்தேன்…. மனக் கவலையிருப்பதாக முறையிடும் என் சகோதரியும் அவ்வாறு செய்யட்டும். நாடோறும் விடியற்காலையில் மூன்று மணிக்கு எழுந்து தியானத்திற்கு அவள் அமர்வாளாக, பிறகும், அவளிடம் அக்கவலைகள் உள்ளனவா என்பதைக் காண்போம். ஆனால், அவள் தன்னுடைய துன்பங்களைப் பற்றிப் பேசுவாளே அல்லாது அவ்வாறு செய்யமாட்டாள், அவளுக்கு என்ன துன்பம்? குழந்தாய், கவலை இன்னதென்பதை நான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 23

நான் ஒன்றாயிருப்பவன் ‘ இது அது, ‘ இப்படி, அப்படி, இதைப் போல் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. ஆசையற்றவர்களால் பூஜித்தற்குரியவன் எவனோ  அவன் நானே. புண்ணியம், பாவம் என்ற உள்ளுணர்வு என்னிடம் இல்லை. ஒற்றுமையை விளங்கவைப்பவன் நான். வேதாந்த மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து பரிசுத்தமான மனது படைத்தவர்களிடம் விளங்கும் பரதத்துவம் நானே. இரவின் இருள் போன்ற அஞ்ஞானத்தைப் போக்கும் சூரியன் நானே.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 35

ஒரு நாள் ஒரு பெண்மணி, அன்னையாரை அணுகித் தன் பெண்ணை மணக்கப் பணிக்குமாறு வேண்ட, அதற்கு அன்னை அளித்த பதிலாவது  வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு அடிமையாக எப்போதும் அவனது சொற்படி நடந்து கொண்டிருப்பது துன்பம் தரத்தக்கதல்லவா? பிரம்மசாரிணியாக வாழ்வதில் சிறிது ஆபத்து இருப்பினும், ஒரு பெண் இல்வாழ்வு நடத்த விரும்பாவிடில், அவளை வலிந்து புகுத்தி, ஆயுள் முழுவதும் உலகப்பற்றுக்கு உட்படுத்தக் கூடாது. துறவு வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்களை எல்லாம், பிரம்மசரிய வாழ்வு நடத்துமாறு ஊக்குவிக்க வேண்டும்.…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு –22

எனக்கு இந்திரிய சுகங்களில் விருப்பமில்லை. ஆத்மானுபவமும் அறிவும், ஆனந்தமும் என்னிடம் நிரம்பியிருக்கின்றன. வெளியுலகத்தைப்பற்றிய எண்ணத்தினின்று நான் வெகு தூரம் விலகியுள்ளேன். வெளியே காணப்படாதது எதுவோ அதனால் என்னுள்ளம் மகிழ்கிறது. மஹாபூதங்களினும் நான் பெரியவனாதலால் அவற்றில் பொதிந்துள்ள சக்தியின் நன்மையெல்லாம் நானே. உற்பத்தி செய்யும் உணர்ச்சி வேகம் என்னிடம் இல்லை.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 21

ஆகாசத்தைப் போல் நான் உள்ளேயும், வெளியேயும் நிரம்பி நிற்கிறேன். மாறுபடாமல் அனைத்திலும் ஒன்றேயாகிப் பரிசுத்தமாய்ப் பற்றற்று, மாசற்றுத் திரிபற்ற நான் பரிசுத்தமாயிருக்கிறேன். குணங்களும் செயலுமின்றி நான் என்றமுள்ளவனாய்ப் பரிசுத்தனாய், அழுக்கும், ஆசையும் அற்றவனாய், மாறுபாடற்றவனாய், வடிவற்றவனாய் எப்பொழுதும் முக்தனாய் இருக்கிறேன்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 34

பெண்கள் வெகு எளிதில் கோபத்திற்கு அளாதல் கூடாது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும். குழந்தைப் பருவத்திலும் பால பருவத்திலும் பெற்றோர்களும், வாலிப வயதில் அவர் தம் கணவருமே பெண்களுக்குக் காப்பாவர். பொதுவாக அவர்கள் ‘ ரோஷ ‘ முடையவர்கள். ஒரு வார்த்தையே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். இக்காலத்திலோ மொழிகள் அவ்வளவு சகாயம். ஆகவே, அவர்கள் துன்பம்நேரும் காலத்தும் பொறுமையுடன் பெற்றேருக்கோ கணவருக்கோ அடங்கியொழுக முயலவேண்டும்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 20

நான் ரிஷி, ரிஷிகணங்களெல்லாம் நானே. சிருஷ்டியும் நான், சிருஷ்டிக்கப்படுவதும் நான் செல்வத்தின் நிறைவும், வளர்ச்சியும் நான், திருப்தியும் திருப்தி தீபத்தின் ஒளியும் நான். பிறப்பு, தேய்தல், மூப்பு, சாவு ஆகிய மாறுதல்களினின்று நான் விடுபட்டவன், நான் உடலன்று, சப்தம், ருசி முதலிய இந்திரிய விஷயங்களில் எனக்கப் பற்றில்லை, ஏனெனில் எனக்கு இந்திரியங்கள் இல்லை. துக்கமும் பற்றும் பொறாமையும் பயமும் எனக்கில்லை, ஏனெனில் நான் மனதன்று. உபநிஷதம் கூறுகிறது, அவனுக்குப் பிராணனுமில்லை, மனதுமில்லை. அவன் பரிசுத்தமானவன், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவன்,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 33

பெண்களுக்கு உபதேசம். ஒரு பெண்ணுக்கு அடக்கமே சிறந்த அணிகலன். தெய்வீக உருவின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும்போதுதான் ஒரு மலர் தன்னைப் பாக்கியசாலியாகக் கருதுகிறது. இல்லாவிட்டால் அம்மலர் செடியிலேயே வாடிவிடுவது சாலச்சிறந்தது. ஆடம்பரக்காரன் ஒருவன் அம்மலர்காளல் ஒரு பூச்செண்டு செய்து அதை முகர்ந்து ‘ என்ன நறுமணம் ‘ என்பதைக் காண்பது எனக்கு மிக்க வருத்தத்தைத் தருகிறது.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 19

ஆனந்தமும், அறிவும், ஆத்மானுபவமும் நிறைந்தவன் நான். காணப்படும் பிரகிருதியைப் பற்றிய எண்ணத்திலிருந்து நான் வெகுதூரம் விலகியவன். எது அப்ராகிருதமோ அதனால் நான் என் உள்ளத்தில் மகிழ்கிறேன். நான் தான் உலகங்களின் ஆதி. உபநிஷத உத்யானத்தில் விளையாடுபவன் நான். பொங்கி வழியும் துக்கக் கடலை வற்றச் செய்யும் வடவாக்னி நான். மேலும் கீழும் நாற்புறங்களிலும் என்னுடைய அதிசயமான பெருமைகளால் நான் அனைத்தையும் வியாபித்து நிற்கிறேன். வாதத்தாலும் பிரதிவாதத்தாலும், ஆராய்ச்சியாலும், நிர்ணயிக்கப்பட்தாய் காணும் பரம புருஷன் நானே.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 18

நான் யார் ? நான் ஈசுவரர்களுக்கு ஈசுவரன் என்னிடத்தில் பொறாமையும், பகைமையையும் ஒரு சிறிதும் இல்லை, இலக்ஷியத்தை அடைய முயல்பவர்களின் மனோரதத்தைப் பூர்த்தி செய்விப்பவன் எவனோ அவன் நானே. நான் அழியாதவன், என்னை அழிக்க முடியாது. நான் ஈசுவரன், உயிருக்கு உயிராகியவன். நான் ஒப்பிலா ஆனந்தம் நிறைந்தவன். நான் பரமசிவன். நான் அளவிலடங்காதவன். ஆத்மாவை அறிந்தவர்களில் நான் சிறந்தவன், ஆத்மானந்தத்தையனுபவிப்பவன். பாலர்களும் படிப்பில்லாதவர்களுங்கூட, எந்த ஆத்மாவின் பெருமையை ‘ நான் ‘ என்ற உணர்வில் கண்டனுபவிக்கிறார்களோ அந்த…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 32

கேள்வி – தியானம் செய்யும் போது என் மனத்தை என்னால் ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அடிக்கடி மாறக்கூடியதாகவும், நிலையில் நில்லாததாகவும் இருக்கிறது. பதில் – அதில் என்ன உள்ளது? அதுவே மனிதன் இயல்பு, பார்த்தலும், கேட்டலும் முறையே கண், காது இவற்றின் இயல்பாக இருத்தலைப் போலவே, தியானத்தை ஒழுங்காகச் செய்துவா, இறைவனது பெயர் இந்திரியங்களைக் காட்டிலும் மிக பலமுள்ளது. எப்போதும் உங்களைக் காத்து வரும் தாகூரை (ஸ்ரீ ராமகிருஷ்ணரை) யே மனத்தில் நினைத்துக் கொண்டிரு. உன்னிடமுள்ள தவறுகளைக்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 17

சிரவணத்தாலும் மனனத்தாலும் நீண்டகாலம் தொடர்ந்த இடை விடாத தியானத்தாலும் முனிவன் ஒப்புயர்வற்ற நிர்விகல்ப ஸமாதி நிலையையடைந்து பிரம்ம நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கிறான். ஆலமரத்தடியில் ஒரு விசித்திரம் காணப்படுகிறது. குரு யெளவனமாகவும், சீடர்கள் கிழவர்களாவும் இருக்கிறார்கள். குருவினுடைய உபதேசம் மெளனமாய் நிகழ்கிறது. சீடர்கள் சந்தேகங்களெல்லாம் முற்றுந் தீர்ந்தவர்களாகின்றனர். எனக்குச் சரண் தாயுமன்று, தந்தையுமன்று, மக்களுமன்று, சகோதரர்களுமன்று, மற்றொருவருமன்று. என்னுடைய குரு எந்தப் பாதத்தை என் தலையில் சூட்டினாரோ அதுவே எனக்குச் சரண். என் குருநாதரின் கருணாகடாக்ஷம் பூர்ண சந்திரனுடைய…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 31

தியானம் செய்யும் பழக்கம் மனத்தை ஒருமுகப்படுத்தும். அழியாப்பொருள்களையும் அழியும் பொருள்களையும் எப்போதும் பிரித்தறிக. இவ்வுலகப் பொருள்களுளொன்றின் மீது உங்கள் மனம் செல்லுவதைக் காணும் போதெல்லாம் உடனே அப்பொருள்களின் நிலையற்ற தன்மையைச் சிந்தித்துக் கடவுள் மீது மனத்தை நிலை நிறுத்த முயற்சி செய்க. வாழ்க்கையில் துன்பங்களால் அடிப்பட்ட பிறகே, பலர் இறைவனது நாமத்தை ஒதுகின்றனர். ஆனால் எவன் தன் இளமை முதற்கொண்டடே மனத்தை இறைவனுடைய திருவடிகளில் அன்றலர்ந்த மலரைப்போல் அர்ப்பணம் செய்வானோ, அவனே உண்மையில் பாக்கியசாலி. மனம் எப்போதும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 16

சொற்களின் கூட்டம் ஒரு பெரியகாடு போன்றது. மனதை மயக்குவதற்குக் காரணமாகின்றது. ஆகையால் உண்மையறிவை நாடுபவர்களால் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றே நன்முயற்சியால் அறியப்படவேண்டும். அஞ்ஞானமாகிற பாம்பினால் கடிக்கப்பட்டவனுக்கு பிரம்மஞானமாகிற மருந்தல்லாமல் வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் ஆவதென்ன? மந்திரங்களாலாவதென்ன? வேறு மருந்துகளாவெதென்ன? ஆகையால் எல்லாவிதமான வழிகளையும் கைக்கொண்டு நோய் முதலியவற்றினின்று விடுபட முயலுவது போல் பிறவித்தளையினின்றும் விடுபடுவதற்குத் தனக்குத்தானாகவே அறிவாளிகளால் முயற்சி செய்யப்படவேண்டும். முக்திக்கு முதல்படி நிலையற்ற பொருள்களில் தீவிரமான வைராக்கியம், பிறகு அகக்கரணங்களின் அடக்கமும், புறக்கரணங்களின் அடக்கமும், அதன்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 30

மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. அது காற்றுடன் போட்டியிட்டுக் கொண்டு ஓடும். ஆகவே, ஒருவன் எப்போதும் நிலைாயன, நிலையற்ற பொருட்களை ஆராய்ந்து, இறைவனைக் காணவே பாடுபட வேண்டும். குருதேவருக்காகப் பணி செய். அதனுடன் ஞானசாதனையும் பழகு. சிறிதளவு வேலை செய்தல் மனத்தை அற்ப நினைவுகளினின்றும், விடுவிக்கின்றது. எவ்வித வேலையும் செய்யாமல் ஒருவன் அமர்ந்திருப்பானேயாகில் பலவகை எண்ணங்களும் அவன் மனத்தினூடே புகும். உண்மையில் இறைவனிடம் உங்களுக்கு எவ்விதப் பற்றும் தோன்றாதிருந்த போதிலும், அவனது பெயரை உரைப்பதால் மட்டுமே, அவனைக்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 15

தலையில் வைக்கப்பட்ட பளு முதலியவற்றால் ஏற்படம் துன்பம் பிறரால் தீர்க்கப்படலாம். பசி முதலியவற்றால் ஆக்கப்பட்ட துன்பமோ எனின் தன்னாலன்றி வேறு எவராலும் தீர்க்க இயலாதது. கட்டுப்படான உணவும் மருந்தை உட்கொள்ளுதலும் எந்த நோயாளியால் பின்பற்றப்படுகிறதோ அவனுக்க உடல் நலம் கைகூடுவது காணப்படுகிறது. மற்றொருவனால் அனுஷ்டிக்கப்பட்ட இச்செயல்களால் இவனுக்கு உடல் நலம் சிந்திப்பதென்பதில்லை. அறிவின்மை ஆசை தொழில் முதலிய வலைகளாலான தளையை நீக்குவதற்குத் தனக்குத் தானேயல்லாமல் நூறு கோடி கல்பகாலமானாலும் எவன் திறமை உடையவனாவான்? போகத்தாலன்று, ஸாங்கியத்தாலன்று, கர்மத்தாலன்று,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 29

மனம் ஒருமைப்படாவிட்டாலும் தூய மந்திரத்தை ஜபிப்பதை விட்டுவிடவேண்டா. உங்கள் கடமையை நீங்கள் ஆற்றுங்கள். இறைவனது பெயரை ஓதும் போதே, காற்று அடியாதபடி தடுக்கப்பட்டுள்ள ஒரிடத்தில் உள்ள விளக்கின் சுடரைப் போல், மனத்தானாகவே ஒருமைப்படும். காற்றே சுடரை ஆடச் செய்கின்றது. அதுபோல், நம்மிடத்துள்ள பாவனைகளும் விருப்பங்களுமே நமது மனத்தை அமைதியற்ற தாக்குகின்றன. காற்று மேகத்தை அடித்துச் செல்வதுபோலவே, இறைவனது திருநாமம் நமது மனத்தைச் சூழ்ந்துள்ள உலகப்பற்று எனப்படும் மேகத்தை அழிக்கிறது. கடுந்தவம் பழகிய பிறகே மனம் தூயதாகின்றது. ஒழுங்காகச்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 14

சிரத்தையும் பக்தியும் தியானயோகமும் முமுக்ஷு விற்கு முக்திக் காரணங்களாக வேத வாக்கியம் கூறுகிறது. எவனொருவன் இவைகளில் நிலையாயிருக்கின்றானோ அவனுக்கு அவித்தையால் கற்பிக்கப்பட்ட உடலாகிற தலையினின்று விடுதலை ஏற்படுகிறது. அஞ்ஞானத்தின் கூட்டுறவால்தான் பரமாத்மாவேயாகிய உனக்கு ஆத்மாவல்லாததுடன் பிணைப்பும் அதனின்றே பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஆத்மா, அனாத்மாவாகிய இரண்டையும் பற்றிய பகுத்தறிவினால் எழும் ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்துவிடும். சீடன் — குருதேவரே, கருணை கூர்ந்து எனது கேள்விக்குச் செவி சாய்த்தல் வேண்டும். அதற்கு மறுமொழியைத் தங்கள் வாயிலிருந்து…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 28

அநேக நோன்புகள் நோற்றலின் பயனாகவே மனத்தைத் தூயதாக்க முடியும். இறைவன் தூய்மை உருவினன். ஆதலின் நோன்பின்றி அவனைக் காணமுடியாது. ஒருவன் நாள்தோறும் பதினையாயிரம் முதல், இருபதினாயிரம் வரை இறைவன் பெயரை ஜபிப்பானாகில், மனத்தை நிலைநிறுத்த முடியும். இது முற்றிலும் உண்மை. நானே அதை உணர்ந்திருக்கிறேன். இம்முறையை அவர்கள் கடைப்பிடிக்கட்டும். முயற்சியில் தோல்வியைடந்தால், பிறகு முறையிடலாம். அடங்கிய மனத்தோடு ஒரு முறை இறைவன் பெயரை உச்சரிப்பதானது, அலைக்கழிக்கப்படுகின்ற மனத்தினால் இலட்சம் தடவை அப்பெயரை உச்சரிப்பதற்கு ஈடாகும். நீங்கள் நாள்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 27

கேள்வி – அம்மா, என் மனம் அடிக்கடி அமைதியை இழந்து சிற்றின்பத்தையே நாடுகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது. பதில் – இதற்காக நீ பயப்பட வேண்டாம். இக்கலியுகத்தில் மனத்தால் தீங்கு நினைத்தால் பாவமாகாது என்பதை நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இக்காரணத்தால் ஏற்படும் கவலைகளினின்றும் உன் மனத்தை விடுவி. இதற்காக நீ அஞ்ச வேண்டா. குழந்தாய், இம்மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. வாயுவின் வேகத்தோடு மனமும் ஓடும். ஆகவே, ஒருவன் எந்நேரமும் விவேகத்தால் ஆராய்ந்து வரவேண்டும் இறைவனைக் காண…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 13

குரு  கற்றுணர்ந்தவனே, பயப்படாதே, உனக்கு அழிவில்லை. பிறவிக்கடலைக் கடப்பதற்கு வழி உள்ளது. முனிவர்கள் எதனால் இதன் அக்கரையை அடைந்தார்களோ அந்த வழியையே உனக்குக் காட்டித் தருகிறேன். சிறந்ததொரு வழி (ஸம்ஸார பயத்தைப் போக்குவது) உள்ளது. அதனால் பிறவிக் கடலைக் கடந்து உயர்ந்த ஆனந்தத்தை அடைவாய். உபநிஷத் வாக்கியங்களின் அர்த்தத்தை ஆராய்வதால் சிறந்த அறிவு பிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாக ஸம்ஸார துக்கத்திற்கு முற்றிலும் அழிவு ஏற்படுகின்றது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 26

இயற்கையாகவே மனம் அமைதியற்றது. ஆகவே, மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு முன், ஒருவன் மூச்சைக் கட்டுப்படுத்தித் தியானம் செய்யலாம். அது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவுகின்றது. ஆனால் அதிக அளவில் அதை செய்தல் கூடாது. ஏனெனில் அதனால் மூளை சூடடையும். நீங்கள் ஈசனது தரிசனத்தைப் பற்றியோ, தியானத்தைப் பற்றியோ பேசலாம். ஆனால் மனமே முக்கியம் என்பதை நினைத்துக் கொள். மனம் ஒரு நிலைப்படும்போது ஒருவன் எல்லா சித்திகளையும் பெறுகிறான். தொடர்ந்தாற்போல் தியானம் செய்தால் மனம் உறுதி பெற்று விடும். அப்போது…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 12

பிறவிக் கடலாகிய இதை எப்படி நான் கடப்பேன்? எனக்குச் செல்லும் வழி எது? நான் கைக்கொள்ள வேண்டிய உபாயம் எத்தகையதாகும்? இதை ஒரு சிறிதும் நான் அறிய மாட்டேன். பிரபுவே கருணையால் காத்தருளும். பிறவித் துன்பத்தை ஒழிக்கும் வழியில் என்னைக்கூட்டி வைத்தருளும். இவ்வாறு பேசுபவனும் தம்மைச் சரணடைந்தவனும் காட்டுத்தீ போன்ற பிறவித் துன்பத்தால் பொசுக்கப்பட்டவனுமாகிய அவனைக் கருணாரஸத்தின் கசிவுடன் கூடிய பார்வையால் உற்று நோக்கி விரைவில் பயமின்மையை அளிக்கிறார் மஹாத்மாவாகிய குரு. பாதுகாப்பை விரும்புபவனும் மோக்ஷத்தில் நாட்டமுள்ளவனும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 25

தூய்மையான மனமுடைய ஒருவன் இறைவன் நாமத்தை ஜபிக்கும்போது, அந்நாமம் அவனுள்ளிருந்து தானகவே குமிழியிட்டுக் கிளம்புவதை அவன் உணர்கிறான். நாமத்தை ஒத அவன் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை விடுத்து, குறிப்பிட்ட காலத்தில் ஜபமும், தியானமும் செய்யப்பழகுதல் வேண்டும். மனமே எல்லாம். ” இது சுத்தமானது, இது அசுத்தமானது ” என்பதை மனத்தினாலேயே ஒருவன் உணர்கிறான். பிறரிடத்துக் குற்றம் காணும் ஒருவன், முதன் முதல் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்பவன் ஆகிறான்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 11

சீடன் — ‘ஆண்டவனே, உமக்கு நமஸ்காரம். வணங்கும் ஜனங்களுக்கு உண்மையான உறவினரே, கருணைக் கடலே, பிறவிக்கடலில் வீழ்ந்துள்ள என்னைக் களங்கமற்றதும் அமுதத்தைப் பொழிவதுமான உம்முடைய கடைக்கண் பார்வையால் கரையேற்றிவிடும். தடுக்க முடியாத பிறவித் துன்பமாகிய காட்டுத் தீயால் பொசுக்கப்பட்டவனும்,  துரதிருஷ்டமாகிய காற்றால் அலைக்கப்பட்டவனும், அதனால் பயந்தவனும் தங்களைச் சரணடைந்தவனுமாகிய அடியேனை – வேறு புகலிடம் நான் அறியேனாதலால் – சாவினின்று காத்தருள்வீராக. குரு — மனவமைதியுள்ளவர்களும் வஸந்த காலத்தைப் போல் உலகிற்கு நன்மையைச் செய்பவர்களும் பயங்கரமான பிறவிக்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 24

மனம் ஒவ்வொன்றும் மனத்தைப் பொறுத்தே உள்ளது. மனத்தூய்மையின்றி, ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது. முக்தியை நாடுவோனுக்குக் குரு, இறைவன், பக்தர்கள் ஆகியோரது அருள் கிட்டியிருந்தாலும், தனது மனத்தின் அருளைப் பெறாது போய் விடின் அவன் துன்பத்துக்காளாவான். இறைநெறி நிற்பவனின் மனம் அவனுக்கே அருள் புரிவதாக இருக்க வேண்டும். கடவுளை ஒருவன் தரிசிப்பதால் வேறென்ன அடைகிறான்? அவனுக்கென இரு கொம்புகள் முளைக்கின்றனவா? அல்ல, அவன் மனம் பரிசுத்தமடைகிறது. மனம் பரிசுத்தமடைவதால் அவனுக்கு மெய்யறிவும், ஞானவிழிப்பும் ஏற்படுகின்றன. பரிசுத்தமான மனமுடைய…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 10

கு ரு வு ம், சீ ட னு ம் வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும்,பாவமற்றவரும், ஆசை வாய்ப்பட்டு அழியாதவரும், பிரம்ம ஞானிகளில் சிறந்தவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், விறகில்லாத நெருப்புப் போல் அமைதியுள்ளவரும், காரணமேதுமின்றிக் கடல் போன்ற கருணை உள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ அவரே சிறந்த குரு. அந்த குருவை பக்தியுடனும் நமஸ்காரம், அடக்கம் சேவை முதலியவற்றுடனும் பூஜித்து அவர் ஸந்தோஷமாயிருக்கையில் அவரை அண்டி தான் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றிக்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு – 9

வானத்தில் நீல நிறமும், கானலில் நீரும், கட்டையில் ஒரு புருஷனும் தோன்றுவது போல் ஆத்மாவில் உலகம் தோன்றுகிறது. வானத்தில் மேகங்கள் நகர்ந்து செல்லும் பொழுது சந்திரன் நகர்வதாய் பிரமை உண்டாகிறது, அவ்வாறே அஞ்ஞானத்தால் ஒருவனுக்கு ஆத்மா உடல் என்ற பிரமை உண்டாகிறது. இங்ஙனம் அஞ்ஞானத்தால் ஆத்மாவிடம் உடலெனும் பிரமை தோன்றுகிறது. ஆத்மானுபவத்தால் அது மீண்டும் பரமாத்மாவிடம் மறைந்து போகிறது. மதிமயக்கத்தால் ஒருவன் பழுதையைக் காணாமல் பாம்பைக் காணுவது போல் அஞ்ஞானியானவன் உண்மையைக் காணாமல் வியவஹார உலகைக் காண்கிறான்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 23

ஆத்மிகக் காட்சி நிறைவுறும் போது, ஒருவன் தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆண்டவனே அமுக்கப்பட்டவர், துன்புறுத்தப்பட்டவர், தீண்டாதோர், சண்டாளர் ஆகிய மற்றெல்லாரிடத்தும் இருப்பதை உணர்வான்,  இவ்வுணர்வு உண்மையான பணிவுடைமையைத் தரும். ஆண்டவன் எல்லோருக்கும் உரியவன் தீவிரமாகச் சாதனை செய்தால் சீக்கிரமாக அவனை அடையலாம். ஆண்டவனது நாமத்தை விரல்களைக்கொண்டு ஜபித்து அதன் மூலம் அவை புனிதம் அடைதற்காகவே அவன் நமக்கு விரல்களை அளித்துள்ளான். மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப்பற்றாகிய மேகத்தைக் கலைத்துவிடும்.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு   8

ஆத்மா அறிவு மயமானது, பரிசுத்தமானது, உடல் மாம்ஸமயமானது. அழுக்கடைந்தது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக்கூறலாம்? ஸத்ரூபமாகிய ஆத்மா அழிவற்றது, அஸத்ரூபமாகிய உடல் தோன்றி மறைவது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக் கூறலாம்? மண்ணாலான குடம் முழுதும் எப்படி மண்ணாகவே இருக்கிறதோ அப்படி பிரம்மத்தாலான உடல் பிரம்மமே. ஆகையால் ஆத்மா என்றும் அனாத்மா என்றும் அஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவது…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 22

வானத்து நிலா மேகத்தால் மூடப்பட்டிருக்கிறது. காற்று கொஞ்சங் கொஞ்சமாக அம்மேகத்தை விலக்க வேண்டியதாகிறது, அப்போதுதான் நிலவைக் காணமுடியும். அது திடீரெனப் போய் விடுகிறதா? ஆத்மிகப் பூரணத்துவமும் அது போலத்தான். பழைய செயல்களின் பலன் கொஞ்சங் கொஞ்சமாகவே தீரும். ஆண்டவனை உணர்ந்தால் அவ்வாறு உணர்ந்தோர்க்கு ஆண்டவன் ஞானத்தையும் உள்ளொளியையும் அளிப்பான், அதனை அவரே உணர்வர்.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு  7

பாம்பு என்ற மதிமயக்கம் பழுதை என்ற அறிவால் எங்ஙனம் நீங்குமோ அவ்வாறு பரிசுத்தமான இரண்டற்ற பிரம்ம ஞானத்தால் மாயையானது அழிவுறும். பிரசித்தமான தத்தம் செயல்களால் ரஜஸ், தமஸ், ஸத்துவம் என்று நன்குணரப்பட்ட குணங்கள் அந்த மாயையைச் சார்ந்தவை. அவித்தை என்பது மனதிற்குப் புறம்பானதன்று. பிறவித் தளைக்கும் பிறவிச் சுழலுக்கும் காரணமான அவித்தை மனதேயாகும். அது (மனது) அழிந்தால் அவித்தை அனைத்தும் அழியும். ஆத்மா உடலை ஆள்வதாய் அதனுள் உறைவது, உடல் ஆளப்படுவதாய் வெளியே இருப்பது, அப்படியிருந்தும் மனிதர்கள்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுரசு.6

மாயை என்பது அவ்யக்தம் எனப்பெயருடையது. அது ஆதியற்றது, அஞ்ஞான வடிவானது. முக்குணமயமானது, பரமேசவரனுடைய உன்னத சக்தியாயிருப்பது. சிறந்த புத்திமானால்தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மாயை இருப்புடையதன்று, இருப்பில்லாதது மன்று, இரு வகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அங்கங்களை உடையதாகவோ, அங்கங்களில்லாததாகவோ, இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அது மிகவும் ஆச்சரியமானது. இப்படிப்பட்டதென்று கூற முடியாத ரூபமுடையது.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு 5

காலையில் தோன்றி மாலையில் அழியும் அநித்தியப் பொருள்களைப் போல் அஞ்ஞானத்தால் தோன்றும் பயன் அனைத்தும் அழிவுடையது.‍ அஞ்ஞானனியானவன் பயனில் ஆசை வைத்து கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியுடன் கருமம் செய்கிறான். அவன் மதிமயங்கியவன். ‘ நான் செய்கிறேன் ‘ ‘ நான் அனுபவிக்கிறேன் ‘ என்றெல்லாம் எண்ணுகிறான். அஞ்ஞானிகள் தத்தம் முன்வினைக்குத் தக்கபடி உலக விஷயமாகிற கடையைப் பரப்பி வைத்துக் கொண்டும், தங்கள் விதியை நொந்து கொண்டும் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுர சு. 4

இடைவிடாத தியானத்தால் ‘ நான் பிரம்மம் ‘ எனும் உண்மை மனதில் பதியும் போது அது அஞ்ஞானத்தையும் அதன் திரிசல்களையும் ஒரு ரஸாயனம் ( மருந்து ) நோயைப் போக்குவது போல் போக்கிவிடுகிறது. ஒருவன் படகில் செல்லும் போது கரையிலுள்ள மரங்கள் படகு செல்லும் திக்கிற்கு எதிராக நகர்வது போல் அவனுக்கு பிரமை ஏற்படுகிறது. பிறவிச் சுழலில் ஆத்மா உழல்வதாய்த் தோன்றுவதும் அப்படிப்பட்ட பிரமையே. ஆத்மாவினிடம் அனாத்மக் கற்பனையே அஞ்ஞானம் எனப்படுவது. அஞ்ஞானத்தின் ஒழிவே மோக்ஷம். இருள்,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 21

உன் வேலைகளைச் செய்வதோடு தியானமும் பழகாதிருப்பின், செய்வது விரும்பத் தக்கதா, தகாததா என்பதைப் பிரித்தறிவது எப்படி? காலை, மாலைச் சந்தியா காலமே கடவுள் வணக்கத்திற்கு ஏற்றது. அப்போது மனம் தூய்மையாக இருக்கும். எவ்வளவோ தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டிருப்பினும் கடவுளை நினைத்து வணங்கவாவது வேண்டும். கொஞ்சங், கொஞ்சமாகத் தியானமும் பிரார்த்தனையும் செய்யும் நேரத்தை அதிமாக்க வேண்டும். மந்திரம் உடலைச் சுத்தமாக்குகின்றது. கடவுள் நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் பரிசுத்தனாகிறான். ஆகையால் அவன் நாமத்தை எப்பொழுதும் ஜபித்துக் கொண்டிரு. நீ செய்யும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 20

மன ஒருமைப் பாட்டுடன் இரண்டு நிமிட நேரம் கடவுளைப் பிரார்த்திப்பதும், தியானிப்பதும், அதில்லாமல் பல மணி நேரம் அவற்றைச் செய்வதைக் காட்டிலும் சிறந்தது. எல்லோருமே கடமை என்று கருதுவதால் ஏதாவது ஒருவகைப் பயிற்சியை மேற்கொள்ளுகின்றனர். ஆனால் எத்தனை பேர் ஆண்டவனை நாடுகின்றனர்? கடமையைச் செய்யத்தான் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அது மனத்தை நன்னிலையில் வைக்கிறது. ஆனால் ஜபம் செய்தல் தியானித்தல், பிரார்தனை செய்தல், ஆகியவை மிக அவசியம். இவைகளைக் காலையிலும் மாலையிலுமாவது கைக்கொள்ளவேண்டும். அச் சாதனம் படகிற்குள்ள…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 19

குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை, இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே. தூண்டில் போடுபவன் தூண்டிலோடு வந்து அமர்ந்த ஒவ்வொரு நாளும் பெரிய மீனையா பிடித்துவிடுகிறான்? அவன் காத்துக் காத்து உட்கார்ந்திருக்க வேண்டும். பலமுறை அவன் ஏமாற்றமும் அடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18

ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலை‍யை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 17

எப்போதும் ஆண்டவனுக்குரிய பணிகளையே செய்யவும். அதே சமயம் ஜபமும் தியானமும் செய்யவும் முயல்க. அவ்வாறு செய்தால் உன் மனம் தீய நினைவுகளால் பாதிக்கப்படாது. செயல் புரியாது தனியே அமர்ந்திருந்தால் எல்லா வகையான எண்ணங்களும் தோன்றி மன அமைதியைக் கெடுத்துவிடும். இந்த மனிதப்பிறவி பெற்றதால் நீ பாக்கியவான். உன்னால் முடியுமளவுக்கு ஆண்டவனைத் துதி செய். நீ கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உழைக்காமல் எதையும் அடைவது முடியாது. உலகச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தினந்தோறும் பிரார்த்தனைக்கும் ஞான சாதனை கட்கும் ஒரு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 16

எதனையேனும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எழுமேயானால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க ஆண்டவனையே வேண்டுக. அவன் உன் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு உனக்கு எல்லா வற்றையும், விளங்கும்படி செய்வான். நித்திய அநித்தியப் பொருள்களைப் பற்றி எப்போதும் விசாரணை செய். உன் மனதைக் கவருகின்ற புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன என்பதை அறிய முயல்க, உன் கவனத்தை ஆண்டவனிடம் திருப்புக.