ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 45

ஒருவன் வார்த்தையாலும் பிறரைத் துன்புறுத்தக்கூடாது. அனாவசியமாக ஒருவன் பிறருக்குப் பிரியமாயிராத மெய்யை உரைத்தலாகாது. கடுமொழிகள் பேசுவதால், ஒருவனது சுபாவமே கொடுமையாக மாறுகிறது. நாவை அடக்கும் சக்தி ஒருவனுக்கு இல்லாது போயின், அவன் தனது மனநுண்மையை இழக்கிறான். ஒரு நொண்டியைப் பார்த்து, அவன் எப்படி முடமானான் என்று வினவக் கூடாது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது வழக்கம்.

இக்கட்டான நி‍லையை சமாளிக்க

அபாயத்தால் மனிதன் மனம் துணிவு பெற வேண்டும். துணிவினால் தான் இக்கட்டான நி‍லையை சமாளிக்கமுடியும். அழையா வீட்டில் நுழைவதுதான் நட்பின் உயர்ந்த லட்சணம்