அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 4. உயர் பதவிகளை அடைய

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே. யோகத்தாலும், தவத்தாலும் பூமியில் உள்ள மனிதரை காட்டிலும் மேம்பட்ட முனிவர்களும், வானுலகில் உள்ள தேவர்களும் வணங்கும் மெல்லிய செவ்வண்ணமுடைய தேவியே நீண்ட சடாபாரமும் அதில் கங்கையையும் குளிந்த நிலவினையும் கண்டத்தில் பாம்பை அணிந்தவருமாகிய சிவ பெருமானும் நீயும் என் அறிவிடத்தே எந்நாளும் இணைந்து இருப்பீர்களாக

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 3 குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே. வேறு யாரும் அறியாத மறையின் இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன் நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 2 பிரிந்தவர் ஒன்று சேர

துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. தனக்கு துணை என்று சொல்லும் அபிராமி பட்டர் சூட்சமாய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அபிராமியே துணை என்றும் கூறுகிறார். தன்னை பெற்ற தாயும் வேதம் எனும் மரத்தின் கிளையும் கிளையின் நுனியில் உள்ள கொழுந்தும் அம்மரத்தின் வேராகவும், அபிராமியே உள்ளாள் என்று சொல்கிறார், குளிர்ச்சியுடைய மலரம்புகளையும் கரும்பு…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 1 ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே. உதய கால சூரியனின் கிரகணங்களின் நிறத்தை ஒத்த உச்சித் திலகம் போன்று யோகியரின் ஞானியரின் நெற்றியின் நடுவே மாணிக்கம் போன்று ஒளிர்பவளே! அதுமட்டுமல்லாது மாதுளம் பூவின் நிறத்தையும் ஒத்தவளே தாமரை மலரில் அமர்ந்த தேவியால் துதிக்கப்படும் அபிராமியே மின்னலை போன்ற தோற்றம் அழகிய குங்கும வர்ணம் கொண்ட உடலை உடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி 100 பாடல்களை கொண்டது காப்பு, செய்யுளும் சேர்த்தால் 102 செய்யுள்கள் வரும் இதை நாம் தெளிந்த மனதுடன் பாராயணம் செய்ய நம் மனம் சந்தோஷமடையும் நம் சங்கடங்கள் யாவும் நீங்கும் அழகு தமிழும் அழகுக்கு அழகான அம்பிகையின் உடல் செய்கை தீரம் போன்றவற்றை விவரிக்கும் போது தமிழும் அழகுக்கு அழகாகிறது அந்த அழகில் நாம் மனதை பறிகொடுத்த வண்ணம் அந்தாதியின் காப்பு செய்யுளுக்கு செல்வோம். காப்பு தாரமர் கொன்றையும், சண்பகமாலையும் சாத்தும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி அம்மையை பார்க்கும் இடந்தோரும் பார்க்கும் திசை தோறும் கண்டு ஆராதித்து அகம் மலர்ந்தவர் எண்ணும் எண்ணத்திலும் சிந்திக்கும் சிந்தையிலும் செய்யும் செயல் யாவையிலும் அபிராமியை கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்தவர் அவர் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் இப்படி நமக்கு சொல்லுகின்றார். பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டார்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லெல்லாய் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும் – வார்க்குங்கும முலையும் மேல் முத்து மாலையுமே என்று நமக்கு சொல்கிறார்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்.

சக்தியின் வடிவங்கள் பல பல அதில் அவரவர்களுக்கு பிடித்த சக்தியில் தோய்ந்து அதனுள் மூழ்கி திளைத்து அந்த அனுபவத்தையும் அந்த சக்தியின் நிலைகளையும் உலகுக்கு கொடுத்த புண்ணியர்கள் பலர் அந்த பலரில் சுப்பிரமணி எனும் நாமம் பெற்றோரால் இடப்பட்டு உலகிற்கு அபிராமி பட்டராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புண்ணியரை ஆட்கொண்ட சக்தி திருக்கடவூர் வாழ் அபிராமி அம்மையேயாகும். சக்தியின் பல வடிவங்களில் ஒன்றாகிய அபிராமியின் அருளால் ஆட்கொண்டு நமக்கு தந்ததே அபிராமி அந்தாதி.  தெய்வ அருள் பெற்ற அபிராமி…

நம்முடைய மதிப்பு

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.…

உங்களது பேச்சில் பணிவும்

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது.  அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ” ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார்.   சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக்…

வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்

   தந்தை மகனை நோக்கி: நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்    மகன்: என்னால் முடியாது    தந்தை: டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.   மகன்: டபுள் ஓகே டாட்.   தந்தை பில்கேட்ஸிடம் போய்: என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா?   பில்கேட்ஸ்: முடியாது   மகனின் தந்தை: என் பையன் world bank CEO.   பில்கேட்ஸ்: டபுள் ஓகே   தந்தை…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 11

வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில்  தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம்பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 10

பெண்ணாடகம் விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார். உடனே நந்தியெம் பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 9

 திருவைகாவூர் கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப்படுகிறது. சிவபக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 8

சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம். திருவல்லம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், “இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும்…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 7

திருப்புள்ளார் திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம். பட்டீஸ்வரம் இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பொறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார். ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   84

இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன. அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது. ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது;…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  83

துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  82

நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்து எழ  செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும் அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன். வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 81

எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 80

வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மிதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன் பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!

எத்தனை தர்மங்கள் செய்தாலும்

எத்தனை தர்மங்கள் செய்தாலும் பூஜைகள் செய்தாலும் அதன் பலன்கள் உங்களை வந்து சேர வேண்டுமென்றால்… உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை வாழ்த்த வேண்டும்.

பழ மொழிகள் 15

தை மழை நெய் மழை. படித்த முட்டாள் படு முட்டாள். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. பசு கறுப்பானால் பால் கறுப்பாகுமா?

பழ மொழிகள் 14

கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. தேவையற்றதை வாங்கினால் தேவையுள்ளதை விற்பாய். செயலே புகழ் பேசும். மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். பொய்க்கு எல்லையில்லை.

பழ மொழிகள் 13

திங்களும், சனியும் தெற்கே நோக்க வேண்டும். தீராக் கோபம் போராய் முடியும். தீயில்லாமல் புகை கிளம்பாது. தூங்குகிற நரிக்கு இரை கிடையாது. தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.

பழ மொழிகள் 12

தன் பாவம் தன்னுடன் வரும், கோபத்திற்கு கண்ணில்லை. தீயிலிட்ட நெய் திரும்பி வருமா? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே.

பழ மொழிகள் 11

தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான். சிக்கனமாக இருப்பதே பெரிய வருமானம். செய்து முடி அல்லது செத்து மடி. தாய் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.

கீதைகள் மொத்தம்\ – 60-27 to 30

*வியாத கீதை* – கௌஷிக முனிவருக்கு வேடன் வியாதன் ஆற்றிய உரை இது. இது மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *யுதிஷ்டிர கீதை* – யுதிஷ்டிரருக்கும் ஒரு யக்ஷனுக்கும் இடையிலான உரையாடல். இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதை நல்லொழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்க்கையின் அடித்தளத்தை உருவாக்கும் அடிப்படை நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது. *மோக்ஷ கீதை* – ஸ்வாமி சிவாநந்தா இயற்றிய மோக்ஷ பாடல். *ரமண கீதை* – பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் போதனைகளை கொண்டு முனிவர் ஸ்ரீ வசிஷ்ட…

கீதைகள் மொத்தம்\ – 60- 23 to 26

*ரிஷப கீதை* – உலக நன்மைக்காக நித்ய சத்தியங்கள் மற்றும் விடுதலைக்கான வழி குறித்து ரிஷப முனிவர் தனது குழந்தைகளுக்கு அறிவுறுத்தியது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நோக்கத்தையும், மனதின் மாறுபாடுகளை அகற்றிவைத்து, சுயத்தை பற்றுகளிலிருந்து விடுவித்து விடுதலையை அடைவது எப்படி என்பதை மனிதகுலத்திற்குக் கற்பிக்கிறது. *சௌனக கீதை* – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து யுதிஷ்டிரருக்கு சௌனக முனிவர் அறிவுறுத்தியது. இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி கீதை*…

கீதைகள் மொத்தம்\ – 60- 19 to 22

*கபில கீதை* – தாய் தேவாஹுதிக்கு மகன், கபில மஹரிஷி போதிப்பது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. *நஹுஸ கீதை* – நஹுஸன் மற்று யுதிஷ்டிரருக்கு இடையிலான உரையாடல். மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *நாரத கீதை* – ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆர்வலரின் பொதுவான தேவைகளை கூறுகின்றது. இது குரு அல்லது ஆன்மீக போதகரின் ஆதிபத்யத்தை வலியுறுத்துகிறது. *பாண்டவ கீதை* – ஆதி நாராயணனின் வெவ்வேறு பக்தர்கள் வழங்கும் பல்வேறு பிரார்த்தனைகளின்…

கீதைகள் மொத்தம்\ – 60-15 to 18

பிக்ஷு கீதை* – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர், பின்னர் ஒரு முனிவராகி உத்தவருக்கு ஒரு பாடலைப் பாடுகிறார். சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையை அதில் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கோபி கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த கோபியரின் பாடல். இந்த கீதை ஆதிமூலத்திடம் கொண்ட மிக உயர்ந்த பக்தியால் நிறைந்துள்ளது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது. ஹம்ஸ கீதை* – ஓர் அன்னபக்ஷியின் வடிவில் ஸ்ரீ விஷ்ணு பிரம்ம…

கீதைகள் மொத்தம்\ – 60 -11 to 14

சித்த கீதை* – ஜனக மஹாராஜனின் அரண்மனைக்கு அருகே பல சித்தர்கள் பாடிய பாடல். அதன் சாராம்சம் என்னவென்றால் – முடிவெளிக்குள் சுயஉணர்வை விரிவாக்கும் வழி அக-புற பொருள் வேறுபடுத்தலும் சுயகட்டுப்பாடும் தான் என்பது. இது யோக-வசிஷ்டத்தின் உபசாந்தி ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உத்தர கீதை* – பகவத் கீதையின் இணைப்பாக இது பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இது ஞானம், யோகாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி பேசுகிறது. வசிஷ்ட கீதை* – நித்ய சத்தியங்களை குறித்து…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  சனி நின்றால்:-  கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு, மனைவி வகையினரின் எதிர்ப்புகள், வாத வாயு ரோகங்கள், உடல் ஹீனம், தேக பங்கம், தந்தையின் தொழில் ஜீவனம் பாதிப்பு, உடன் பிறப்பிற்கு புத்திர தோஷம், பூர்வீக சொத்தால் பாதிப்பு, நிலம், வீடு, வாகன விசயங்களால் பொருள் இழப்பு , குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுதல், தொழிலில் தடை.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சுக்கிரன் நின்றால்:- பெண்கள் வகையில் ஏற்படும் அவமானம், காதல் தோல்வி, இல்லற வாழ்வு பாதிப்பு, வீரிய பலம் இல்லாத நிலை, தொழில் வகையில் ஏற்படும் தடைகள், குடும்பத்தில் உள்ள பொருள்கள் உடமைகளுக்கு சேதம், உடன் பிறப்பிற்கு ஏற்படும் கண்டாதி தோஷங்கள், பிரயாணங்களில் வரும் பயம், நிலம், வீடு வாகன இழப்பு குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மனைவி அல்லது கணவனின் பாக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு, ஜாதகனுக்கு…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். குரு நின்றால்:-  குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள், பூர்வீக சொத்தால் வரும் தொல்லைகள் அச்சொத்து விருத்தியில்லாமை, தெய்வீக விசயங்களால் வரும் இடையூறுகள் மனக்குழப்பம் கௌரவ குறைவு அதிர்ஷ்டமில்லாத நிலை, விபத்துக்களால் ஏற்படும் செலவீனம், பயம் தந்தை இழப்பு, அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொழில் முடக்கம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  புதன் நின்றால்:- பொருளாதார வீழ்ச்சி, எத்தொழிலும் விருத்தயாகாமை, லாபம் பெற முடியாமை, மூத்த சகோதர வகை பாதிப்புகள், மாமன் வகை குற்றங்கள் உடன் பிறப்பின் பாக்கியங்களுக்கு பங்கம், விரையம், தாய்க்கு ஆயுள் பயம், புத்திர புத்திரிகளின் இல்லறம் தொழில் பாதிப்புகள் எதிரிகளுக்கு ஏற்படும் பங்கம் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். செவ்வாய் நின்றால்:- உடன் பிறப்புக்களால் வரும் தீங்கு, ரத்த சம்பந்தமான பாதிப்புகள், வீண் சண்டை, நில, வீடு, வாகன விசயமின்மை திடீர் வீழ்ச்சி, தாய் – தந்தை வகை சொத்துக்கள் இழப்பு, பூர்வீக சொத்து விரையம், எதிரிகள் பலம் பெறுதல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு.  1

சிம்ம லக்னம் லக்கினாதிபதி சூரியன் இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் .சந்திரன் நின்றால்:- தாய், தாய் வகையில் ஒற்றுமையில் குறைவு, பிரயாணத்தில் பாதிப்பு, இடது கண் கோளாறு, அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு, குடும்ப முன்னேற்றம் தடைபடுதல் செய்யும் காரியங்கள் வெற்றி பெறாநிலை, நிலம், வீடு, வாகனங்களால் செலவீனம் பாதிப்பு, குழந்தைகளுக்கு எதிர்பாராத ஆபத்து, ஆயுள்பயம், நாஸ்தீக தன்மை, எதிரிகள் வீழ்ச்சி, கணன், மனைவி விரோத நிலை.

மன முதிர்ச்சி  3

நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். Understanding the difference between the basic needs and what we want. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.  Reaching the status that happiness is not connected. with material things.

மன முதிர்ச்சி  2 

செய்வதை மன அமைதியுடன் செய்வது. Doing whatever we do with peace of mind. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. Avoiding to prove our intelligence on others. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். Avoiding the status that others should accept our actions. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். Avoiding the comparisons of ourselves with others. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை…

மன முதிர்ச்சி – Maturity of Mind 1

மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். Understanding the opinions of others from their perspectives. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். Learning to leave what are to be avoided. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 

சனி 22

சனிக்கு மீனம் 2மிடமாகி நின்றால் பெயர், புகழ், செல்வம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சனிக்கு துலாம் 2மிடமாகி உச்சம் பெற்று நின்றால் தலைவர், செல்வந்தர், அயர்நாட்டுத் தொடர்பும் இருக்கும், சிறப்பாக வாழ்வர். சனி 5மிடத்திலிருந்து லக்னாதிபதியை பார்ப்பது அல்லது 4, 5 வீட்டையும் 4,5க்குரிய கிரகத்தையும் பார்ப்பது உயர்கல்விக்கு தடை ஏற்படுகிறது. சனி ஆயுள் காரகன், சனி பலம் பெற்று 8ம் பாவத்துக்கு சம்பந்தம் பெற்றால் ஆயுள் விருத்தியாகும். சனி 8ல் நின்றால் பலம் பெற்றால்…

இருப்பதுவும் பிரிவதும்

இருப்பதுவும் பிரிவதும் அவரவர் விருப்பம்  ஆனால் உடனிருந்தே அந்நியமாக்கபடுவது ஆகப்பெரும் வன்முறை இதை உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு முறையாவது உணர்ந்து இருக்கிறீர்களா இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறீர்களா

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 79

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம். உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களுக்குக் கதிமோட்சமில்லை உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் .

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   78

மென்மையானவர்கள் ஆவதற்க்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால்  கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகக் தடுக்க முடியாததான சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, லட்சியத்தை நன்குணர்ந்து,…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   77

நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும் பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளிலம் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன். ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   76

நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தனி மனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர் . தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   75

இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.    

உரையாடலின் ஒரு பகுதி  107

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சமாதானமாக போக வேண்டிய கட்டாயம் நிச்சயம் வரும் அதை எவர்கள் அறிந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள் அதிகம் வருத்தப்படுவது இல்லை. மனித பிறவி எடுத்தாலே பலவீனங்கள் இருப்பது தவிர்க்க முடியாத விஷயம். மனித பிறவிகள் அனைத்திற்கும் ஒரு விஷயத்தில் என்று மட்டும் பலவீனம் இல்லை நபருக்கு நபர் சூழ்நிலை, அறிவு அந்தஸ்து மனோபாவம் போன்றவைகளை கொண்டே பலவீனங்கள் வெளிப்பட்டு தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  106

கனவுகளிலும், கற்பனைகளிலும் யூகித்துக் கொண்ட அனுபவம் (இறைவழிபாடு, இறையை தேடுதல் முக்தி போன்றவை) இது போல் காதலும், குடும்ப வாழ்வையும் சேர்த்துக்கொள்ளலாம் யதார்த்திற்கு வரும் போது பல பேருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுவதை பார்க்கலாம்.

உரையாடலின் ஒரு பகுதி  105

உலகிலேயே ரொம்ப துர் அதிர்ஷ்டசாலி 10 பேர் நடுவில் இருக்கும் போது தனிமை வேண்டும் என்று நினைப்பவன். தனிமையில் இருக்கும் போது 10 பேர் வேண்டும் என்று தவிப்பவன்.

கீதைகள் மொத்தம் – 60 9 – 10

இராம கீதை – II* – ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் இடையிலான உரையாடல். இது உலகத்தை துறப்பதை காட்டிலும் ஞானத்தை ஈட்டுவதை வலியுறுத்தும் அனுபத்வைதிகளின் வேதமாகும். இது தத்வ சாரண்யத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ரிபு கீதை* – ரிபு முனிவர் அவரது சீடர் நிதாகருக்கு அறிவுத்தியவை. இது அத்வைத வேதாந்தத்தை கையாளும் ஒரு பாராட்டுக்குரிய கீதை. மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு தொடர்பான உபபுராணங்களில் ஒன்றாக சிவரஹஸ்ய புராணத்தின் இதயத்தை இது உருவாக்குகிறது.

கீதைகள் மொத்தம் – 60 = 7 – 8

ஜனக கீதை* – அரண்மனைக்கு அருகே சித்தர்கள் பாடிய பாடலைக் கேட்டபின் ஜனக மஹாராஜர் எழுதிய தனிப்பாடல். இராம கீதை – I* – ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரரான ஸ்ரீ லக்ஷ்மணருக்கும் இடையிலான உரையாடல். இது அத்வைத வேதாந்தத்தில் இருக்கும் ஜீவா, அவித்யா, ஈஸ்வர, மாயா போன்ற பல்வேறு கொள்கைகளையும், நித்திய ஜீவனான, ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளும் வழிமுறையையும் விளக்குகிறது. இது ஆதியாத்மா இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 =5 – 6

அனு கீதை* – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின் தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார். ப்ரம்ம கீதை* – வசிஷ்ட முனிவருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையிலான உரையாடல். இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதையில், பிரம்மம், உலகம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 3 – 4

3  அவதூத கீதை* – ரிஷி தத்தாத்ரேயருக்கும் ஸ்கந்தனுக்கும் (கார்த்திகேயன்) இடையிலான உரையாடல். இது ஜீவன்முக்தா அல்லது முக்தியடைந்த ஆன்மாவின் மிக உயர்ந்த உணர்தல்களை வலியுறுத்துகிறது. 4  பகவத் கீதை* – மஹாபாரத போருக்கு முன்னதாக கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். வாழ்வின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கீதையின் மிகப்பிரபலமான வடிவம் இது.

கீதைகள் மொத்தம் – 60 1 – 2

1   குரு கீதை* – சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆசானின் (குரு) அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மையப்படுத்தி அவரது மகத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. இது ஸ்கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. 2   அஷ்டவக்ர கீதை* – ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது. இது அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது. இது மனித உடலின் பலவீனங்களுக்கு அப்பால் உள்ளார்ந்த ஆத்மாவின் மேன்மையையும், அதற்கு அஷ்டவக்ரரை அடையாளப்படுத்த, அதன் துன்பங்களையும்…

உரையாடலின் ஒரு பகுதி  104

யதார்த்தமான உண்மை – தந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வேண்டுமென்றாலும் மகனை பள்ளியில் சேர்ப்பதென்றாலும் மகளுக்கு திருமணம் நடத்தி பார்க்க _வேண்டுமென்றாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நடக்க வேண்டுமென்றாலும் பணம் தேவை. மனிதனின் அன்றாட வாழ்க்கை பணத்துடன் முடிச்சு போட பட்டிருக்கிறது. பணமானது எப்போதும் மனிதனின் நேர்மையை சோதித்துக் கொண்டே இருக்கும்.

உரையாடலின் ஒரு பகுதி  103

பல பேருக்கு உறவு என்பது ரொம்ப உயர்வாயும் புனிதமாயும் தெய்வீக தன்மைமிக்கதாயும் ஆரம்பத்தில் மயக்கி காதலாகி செக்ஸில் முடியும் ஆனால் ரொம்ப ரொம்ப சில பேருக்கு மட்டுமே செக்ஸில் ஆரம்பித்து பொறுப்புடன், வளர்ந்து கெளரவமான நட்பு எனும் பெயரால் காதல் எனும் அன்பில் முடியும். இதை புரிந்து கொள்ள மனம் கஷ்டப்படும். ஆனால் புரிந்து கொண்டால் மட்டுமே இதில் உள்ள நேர்மை உண்மை புரியும் புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  102

தர்மத்தின் பல பரிணாமங்களை அறிவதற்கு 14 வித்தைகளை கற்க வேண்டும் அந்த 14 வித்தைகள் என்பது வேதங்கள் 4, வேதாதங்கள் 6 எழுத்துக்களின் தன்மையையும் உச்சரிப்பையும் விளக்குகிற சிட்சை இலக்கணத்தை விளக்குகிற சிட்சை இலக்கத்தை விளக்குகிற வியாகரணம் செய்யுள் விதிகளை காட்டுகிற சந்தஸ் எந்தெந்த வார்த்தைகள் உருவாகின்றன என்பதை கூறுகிற நிருக்தம் வான சாஸ்த்திரத்தை விளக்குகிற _சோதிடம், யாகங்களுக்கான உண்டான கல்பம் இந்த ஆறு அங்கங்களை கொண்டு வேதத்தை சரியாக ஒத வேண்டும் அதுவே _ஷடாங்கம் அதுவே…

உரையாடலின் ஒரு பகுதி  101

தர்மம் தன்னை காப்பவர்களை தர்மம் காக்கும் தர்மத்தை அழிப்பவர்களை தர்மம் அழிக்கும் தர்மம் என்பது உண்மையான திருப்தியை தருவது, மகிழ்ச்சியை பரப்புவது.

மனமது செம்மையானால்

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான…