கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மீனம் :-

மீனம் :- “மீன மகனை விடேல்” என்ற இந்த ராசி, இரண்டு மீன்கள் தலைமாறி இருப்பதை போன்ற அமைப்புடைய இந்த ராசி கால புருஷனின் கடைசி ராசியாகும். உபயராசி  இரட்டை ராசி என்று அழைக்கப்படும் பெண் ராசி  கௌரவமும் தன் அடக்கமும் கொண்டது. நீர் தன்மையுடையது. அதிக கற்பனை வளம் அரசியலில் வெற்றியினை தரும் அதிக அளவு சுயநலம் கொண்டது. இதன் அதிபதி குருவாகும். தென் முக ராசியில் கடைசி ராசி பயனுள்ள ராசி. ஆனால் மௌனமானதும்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கும்பம்

கும்பம்:- “கும்பத்ததோன் குன்நின்று வெல்வோன்” என்ற இந்த ராசி, கும்பம் அலங்கரித்தது போன்றதும் கோயில் கோபுர கலசம் போலவும் தோற்றம் தரும். இந்த ராசி கால புருஷனின் லாபஸ்தானம் என்னும் பெருமை பெற்றதாகும். இது 300 பாகை முதல் 330 பாகை வரை வான மண்டலத்தில் வியாபித்து உள்ளது. இதன் அதிபதி சனிஸ்வரன் ஆகும். ஒற்றை ராசி என்றும் ஆண் ராசி என்றும் வழங்கப்படும். ஸ்திர ராசியும் ஆகும் தென்முக ராசியில் 5 – வதாக வரும்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மகரம்:-

மகரம்:- “மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன்” என்ற இந்த ராசி பெண் தலையும் மீன் உருவமும் கொண்ட தோற்றத்தில் வானவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த ராசி கால புருஷனின் கர்மஸ்தானமாகும். இது 270 பாகை முதல் 300 பாகை வரை வியாபித்துள்ளது. இதன்அதிபதி சனீஸ்வரன் ஆவார் இது பெண் ராசி ஆகும். சரராசியும் தென்முக ராசிகளில் நான்காவதாக இடம் வகிக்கும் இது அயன ரேகைக்குரிய ராசியும் ஆகும். மண் தன்மையுள்ள ராசியாதலால் லோகாதாய விருப்பம் செயலை…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் தனுசு:-

தனுசு:- “வில்லானை சொல்லால் வளை” என்ற இந்த ராசி, அம்பு எய்யும் அமைப்பை போல் வான மண்டலத்தில் தோன்றும். இந்த ராசி காலபுருஷனின் ஒன்பதாவது ராசி ஆகும்.   இது  240 பாகை முதல் 270 பாகை வரை வியாபித்துள்ளது.   இதன் அதிபதி குருவாகும்.   உபய ராசியாகிய இது ஒற்றை ராசி எனப்படும்.  ஆண் ராசி ஆகும், நெருப்பு தன்மையுள்ள இந்த ராசி வேகத்தையும், விபரீதத்தையும் உடையது.  தென் முக ராசிகளில் மூன்றாவதாக வருவது,…

இரும்பிலி (Diospyros ferrea)

இரும்பிலி தமிழ் இதற்கு கருவிஞ்சிப் பழம் என்ற பெயரும் உண்டு. இதன் முதிர்ந்த பழங்கள் துவர்ப்புத் தன்மையும் சிறிதளவு கசப்புத் தன்மை கொண்டவை. இவை, கிராமப்புற சிறுவர்களாளும், பறவைகள்,மற்றும் காட்டு விலங்குகளும் உண்ணுகின்றன . இரும்பிலி இலைகளையும் மென்று சாப்பிடலாம் இதனால் உடலில் துவர்ப்புச் சுவை மிகுதியாகி,உடல் பலப்படும்.

வாத நாராயணன் (delonix elata)

வாத நாராயணன் வாதமடக்கி ஆதி நாராயணன், வாதரச ஆகிய மாற்றுப் பெயர்களும் வாத நாராயனுக்கு உண்டு. இலைகள் கசப்பு சுவயும் வெப்ப தன்மையும் கொண்டவை. இதன் இலைகள் குழம்பு செய்யவும் துவயல் தயாரிக்கவும் வதக்கிச் சாப்பிடவும் பெரிதும் பயன்படுகிறது. இதனால் நரம்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்றவை கட்டுப்படும். வீக்கத்தை வடிய வைக்க கரைக்கும் பண்பும் இதற்கு உண்டு. தொடர்ந்து,வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு தயாரிப்பில் வாதநாராயணன் கீரையை சேர்த்துக் கொண்டு வரலாம்.

நாம் அடைய நினைப்பது

நாம் தெரிய நினைப்பதும், நாம் அடைய நினைப்பதும் முயற்சிக்காமல் கிடைக்காது. முயற்ச்சி தொடர்ந்து வரவேண்டும். அதற்க்கு வைராக்கியம் தேவைப்படுகிறது. அந்த வைராக்கியம் கைவர பெற்றால் முயற்ச்சி என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் அப்படி முயற்ச்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது நாம் அறிய நினைப்பது அடையநினைப்பது நமக்கு கைகூடும். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதாவது பணம், பதவி, மண், பெண், பொன், தெய்வீகம் போன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் நமக்கு தொடர்ந்த முயற்ச்சியும் அதை…

சிந்திக்க செயல்படுத்த -3

மகிழ்ந்த விஷயங்களைவிட, உடைந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வதால் தான் நம் முகத்தில் சந்தோஷம் இருப்பதில்லை. நம் பழைய பிழைகளை எண்ணி அழாமல் ஆத்திரப்படாமல் இருந்தால் நம் முகத்தில் சந்தோஷம் இருக்கும்

வளர்ச்சி

வளர்ச்சி விளைவுகளை பொருத்தது அல்ல செயல்களை பொருத்தது. வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையை உயிரூட்டும் சாதனம் தத்துவம் ஆனால் அது கூட பல மாறுபாடுகளை தனக்குள் கொண்டுள்ளது. அது மனிதனின் சுபாவத்திற்க்கு ஏற்றபடி மாறுபட்ட உணர்ச்சிகளையும், அர்த்தங்களையும் தரவல்லது. ஏதும் விளையாத பாலைவனம், பாலைவனம் வளர்ச்சியுற்றதா, இல்லை கங்கை நதியோரம் உள்ள செழிப்பான மலர் சோலைகளும், தோப்புகளும் வளர்ச்சியுற்றதா அனுமானிக்க முடிவதில்லை, ஏனென்றால், கதிரவன் தனது கடுமையை பாலைவன மணலில் எத்தனையோ காலங்கள் செலுத்தினாலும் அந்த மணல்…

தழுதாழை(clerodendrum phlomides)

தழுதாழை இலைகள் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. இதனை மைய அரைத்து காரக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மூட்டுவலி, கீல்வாதம் போன்றவை இதனால் குணமாகும். மேலும் செரிமானத் தன்மை அதிகரிப்பதுடன் உடலில் கழிவுகளும் வெளியாகும். தொடர்ந்து உபயோகித்துவர இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கம் குணமாகும்

நெளலி — NAULI

நெளலி உட்டியானா செய்யச் செய்ய நெளலி தானாக வந்துவிடும். கால்களை அகற்றி நின்று, கைகளைப் படத்தில் காட்டியபடி தொடை மேல் அமர்த்தி உடலை முன்னால் குனிந்து கொள்ளவும். சுவாசம் முழுமையும் மெதுவாய் வெளியில் விட்டு வயிற்றை உட்டியானா செய்யவும். பின் தளர்ச்சியைடைந்த வயிற்றின் சதைகளை இறுகக் கட்டிச் செய்யவும். இப்படி இறுக்கியவுடன் மேல் சென்ற வயிறு தானாக முன்னால் துருத்தும் பின் வயிறு தடிபோல் முன்வந்து நிற்கும். சில வினாடிகள் நின்ற பிறகு சதையை நழுவவிட்டு சுவாசத்தை…

கட்டுக்கொடி(cocculus hirautus)

கட்டுக்கொடி  இலைகள் உடல் சோர்வைக் குறைக்கும். இலைகளை கசக்கிச் சாறு எடுத்து அதனை நீரிலிட நுங்கு போல் கட்டும். இதைச் சாப்பிட தாது பலம் உண்டாகும். அதோடு, இளைத்த உடலையும் தோற்றம். கட்டுக்கொடி இலைச்சாற்றுடன் எருமை மோர் கலந்து பருகிவர பெண்களுக்கு  உண்டாகும் சிறுநீர் எரிச்சல் வெள்ளைப்படுதல் ஆகிய வெப்ப நோய்கள்  குணமாகும்.

உட்டியானா – UDDIYANA

உட்டியானா கால்களை ஒரடி அகற்றி நின்று கொள்ளவும். உடலை வாந்தி செய்வது போல் முன் வளைந்து கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும். மூச்சை முழுவதுமாக வெளியே விடவேண்டும். வயிற்றை எக்கி கைகளை தொடையில் அழுத்தி குடலை படத்தில் காட்டியபடி ஏற்றவும். இவ்வாசனத்தை மிக மெதுவாக அவசரப் படாமல் செய்ய வேண்டும். 5 வினாடிகள் நிறுத்தி இளைப்பாறவும். ஒரு முறைக்கு 5 வினாடிகள் 2 முதல் 4 முறை செய்யலாம். உட்டியானா வெறும் வயிற்றில் காலையில்தான் செய்யவேண்டும். ஆகாரம்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் விருச்சிகம்

விருச்சிகம்:-  “தேளானைப் பேணி கொள்” என்ற இந்த ராசி, வான மண்டலத்தில் தேளைப் போன்ற அமைப்பை உடையது இந்த ராசியாகும். இது கால புருஷனின் தர்ம ஸ்தானங்களை குறிப்பிடுகிறது. இது 210 டிகிரி பாகை முதல் 240 பாகை வரை பரவியுள்ள ராசியாகும். இது தென் முகராசிகளில் இரண்டாவது ராசியாகும். இதன் அதிபதி செவ்வாய், பெண் ராசி அதாவது இரட்டை ராசி என்ற பெயரும் கொண்டது. ஸ்திர ராசி அதிக சீற்றமுள்ள ராசி எனவே மிகத் துணிவும்…

கோணாசனம் — KONASANAM

கோணாசனம் நேராக நின்றுகொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கெள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளையவேண்டம். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப்பக்கம் சாயவேண்டும். 3 முறை செய்யலாம். பலன்கள் — விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும் பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால், இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் துலாம்

துலாம் “துலாத்தான் எவ்விடத்திலும் தோளான்” என்ற இந்த ராசி, நீதியின் தன்மையை உணர்த்தும் பாவ, புண்ணியங்கள் எடையிடும் வண்ணம் தராசு போல தோற்றமுடைய அமைப்பை உடைய இந்த ராசி வான மண்டலத்தில் 180 டிகிரி பாகை முதல் 210 பாகை வரை பரவியுள்ளது. கால புருஷனின் ஏழாவது ராசியாகிய இது தென்முக ராசியில் முதல் ராசியாகும். விஷவரேகைக்குரிய ராசியில் இரண்டாவது ராசியாகும். ஓஜை ,  எனப்படும் ஒற்றை ஆண்ராசி எனவே இது உறுதியானது பலங்கொண்டது. அதிக ஆற்றலில்…

காசான் (memecylon umbellatum)

காசான் சர்க்கரை வில்வம் என்கின் பெயராலும் வழங்கப்படும் இதன் இலைகளைச் சாப்பிட உடலில் துவர்ப்புச் சுவை கூடுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

வெற்றி

பல தோல்விகளைப் பார்த்தவன் ஒரு வெற்றியை கண்டதும் மெல்ல கடந்து போவான்…… பல வெற்றிகளை பார்த்தவன் ஒரு தோல்வியை கண்டதும் துவண்டு போய்விடுவான்…… அனுபவத்தில் இது உண்மையென்றேபடுகிறது அதுவும் எதிர்பாராத வெற்றிகள் வரும் போது உலகே தனக்கு கீழ் தான் என்ற எண்ணம் வந்து ஒரு தோல்வி வந்தவுடன் திசைமாறியவர்களை காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது

திரிகோணாசனம் — THIRIKONASANAM

திரிகோணாசனம் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக…

சீடர்

எவரை பார்க்கும் போது நீ எல்லாவற்றிலும் சாந்தமான நிலையை உணருகின்றாயோ, எவரின் அண்மை உனக்குள் பரவசத்தை உண்டாக்குகிறதோ , எவரின் சிந்தனை உனக்குள் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தருகிறதோ, என்ன செய்து கொண்டிருந்தாலும் யாருடைய சிந்தனை உனக்குள் ஓடிக்கொண்டு உனக்கு சந்தோஷத்தை தருகிறதோ எவருக்கு வேண்டி நீ உன்னை முழுவதும் அர்ப்பணிக்க தோன்றுகிறதோ, எவரின் பார்வை ஸ்பரிஸம் உனக்கு உடலிலும் உனக்குள்ளும் மாறுதலை உருவாக்குகிறதோ அவரே உன் குரு. இதை சரியாய் சிந்தித்தால் இந்து மதத்தில் கணவனிடம் மனைவி…

நிம்மதி

மகிழ்ச்சி வேண்டுமானால், பணம் சார்ந்ததாக இருக்கலாம்… ஆனால் நிம்மதி, என்றும் மனம் சார்ந்ததுதான்… வெளியில் தேடினால், கிடைக்கும் பொருளல்ல… மனதில் தேடினால், கிடைக்கும் உணர்வே நிம்மதி!…

நீர்முள்ளி(hygrophila auriculata

நீர்முள்ளி விதைகளை சேகரித்து, நீரில் இட்டு முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ள வேண்டும், இதனைக் காலையில் சாப்பிடலாம் இதனால் தாது பலஹீனம் குணமாகும்.

ஆலம்

ஆலம் ஆலம்பழம் விலங்குகளலும் பறவைகளாளலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்றாகும். பாரம்பரிய மக்களால் இந்தப் பழங்கள் உண்ணப்படுகின்றன. மலட்டுத் தன்மை நீங்க இதன் விதைகள் முக்கியமான மருந்தாகின்றன.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கன்னி:

கன்னி:- “கன்னி மகனை கைவிடேல்” என்ற இந்த ராசி, அழகிய பெண்ணை போல தோற்றமுடைய அமைப்பை உடையது இந்த ராசி வான மண்டலத்தில் 150 பாகை முதல் 180 பாகை வரை வியாபித்துள்ள பகுதியாகும். கால புருஷனின் ஆறாவது ராசி இதன் அதிபதி புதன் ஆகும். இது உபய ராசி ஆகும். இருமடிப்புள்ள இரட்டை தன்மையுடைய ராசியாகிய இது சஞ்சலப்படுதல் வளையும் தன்மை இரக்க குணம் உடையது. மண் தன்மையுடையது அதனால் லோகாதாய வாழ்க்கையில் விருப்பும், சிந்தனை…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் சிம்மம்:-

சிம்மம்:- “சிங்கத்தானோடு செருஏரேல்” என்ற இந்த ராசி. சிங்கத்தின் உருவை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ராசியானது, கால புருஷனின் 5 வது ராசியாகும். வானவெளியில் 120 பாகை முதல் 150 வரை வியாபித்துள்ளது . ஸ்திர ராசி, ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி, எனவே அதிக அளவு துணிவும் தலைமை பதவி வெறியும் எவருக்கும் அடங்காத தன்மையும் அடக்க வேண்டும் என்கிற சர்வாதிகள் போக்கும் கம்பீரமும் மிக்கது. வட, முக ராசிகளில் 5 வது இதன்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கடகம் :-

கடகம் :- “நண்டானுக்கு இடம் கொடேல்” என்ற இந்த ராசி, நண்டின் அமைப்பைக் கொண்டது இந்த ராசி 90 பாகை முதல் 120 பாகை வரை வான மண்டலத்தில் பரவியுள்ளதாகும். காலபுருணனின் நான்காவது ராசி ஆகும். இது பெண் தன்மை உடையது. பேராசையின் மீது விருப்பம் உடையது. பலவந்தம், விருப்பங்களில் மாற்றமும் திருத்தி அமைப்பதும் போன்ற குணங்கள் உடையது. நீர் தன்மை உடையதில் முதலாவது ராசி மிக சிறந்த கற்பனை வளம் கோழைத்தனம் புறமுதுகில் குத்துதல் ஆணவத்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மிதுனம்

மிதுனம் :- “தண்டுக்கொண்டு இல்புகே”என்ற இந்த ராசி ஆணும், பெண்ணும் இணைந்திருப்பதைப் போன்ற தோற்றமுடைய இந்த ராசி வான வெளியில் 60 பாகை முதல் 90 பாகை வரை வியாபித்துள்ளதாகும். கால புருஷனின் மூன்றாவது ராசியான இது ஆண் தன்மை உடையது. உபய ராசி இதன் அதிபதி புதன் ஆகும். ஒற்றை ராசி என்ற அமைப்பைக் கொண்டது. உறுதியும் துணிவும் மிக்கது. அதிக அளவு மூளை பலம் மிக்கது. அதிக புத்திசாலி தனத்தையும் மிகச் சிறந்த திறமையும்…

தவறுகளின் பாதை

எப்போதும் எல்லாம் தவறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப் படுகிறதோ அதுதான் சரியானது தவறுகளின் பாதைதான் சக்தியத்தின் பாதை. மனித குலத்திற்க்கு இது என்ன சொல்ல வருகிறது இதிலிருந்து மனிதன் அல்லது மனித குலம் என்ன புரிந்து கொள்வது. அப்படி புரிந்து கொள்வதால் என்ன பயன் சிந்திக்க வேண்டும். சிந்திக்க விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலை தேவைபடுகிறது. மனமானது விருப்பு, வெறுப்பு , சுகம், துக்கம், சரி, தவறு என்று பற்றியபடியே மனம் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நடு…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் ரிஷபம் :-

ரிஷபம் :- “ரிடபத்தானோடு தோரேல் ” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. காளை மாட்டின் உருவத்தை ஒத்த இந்த ராசியான மண்டலத்தில் 30 டிகிரி பாகை முதல் 60 பாகை வரை வியாபித்து இரண்டாவதாக அமைந்திருக்கும் ராசியாகும். இதன் அதிபதி சுக்கிரன். இது பெண் தன்மையுள்ளது. சாத்திய ராசி, சமராசி ஸ்திர ராசியும் கூட எனவே இது அமைதியானது. ஆர்பாட்டம் செய்ய ஆசைப்பட்டாலும், செய்ய துணிவில்லாதது அதிக சுய இரக்கமும் சுய பச்சாதாபமும் மிக்கது வட…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மை மேசம் :-களும்

27 நட்சத்திரங்கள் அதன் அதிபதிகள் அது அமைந்திருக்கும் ராசிகள் முதலியவற்றை அறிந்து கொண்ட நாம் அடுத்ததாக 12 ராசிகளின் தன்மையைப் பற்றி சிறிது விரிவாக காண்போம் மேசம் :- “தகடோடு எகரேல்” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஆதியாய் இருப்பது ஆடு தலை உடைய ராசி மேஷம் ஆகும். இது உறுதியானது. துணிவு மிக்கது முரட்டு சுபாவம் மிக்கது. நிலையான பலமும் தூய நம்பிக்கையும் ஊட்டும் தன்மை மிக்கது.…

ஸ்ரீ குரு கீதை

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை சிருஸ்டி, ஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி பூஜைக்கு மூலம் குருவின்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 2

கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்? பதில் – அது அவன் அருளால் தான் முடியும். ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும். அது மனத்தின் மலங்களை அகற்றும். பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும் , கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும். அவனருளின்றி ஏதும் அடையமுடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும்…

சுடர்

நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி யோசிக்கும் விஷயத்தை அந்த சுடரினில் வைத்து அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு, பிரித்து அறிந்தால் குழப்பங்கள் தெரியும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.

ஆதண்டை (capparis brevispina)

ஆதண்டை  காய்களை வெட்டி, உப்பிட்டு ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி, வற்றல் செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வறுவலாகச் செய்து சாப்பிடலாம். மேலும், ஆதண்டை ஊறுகாய் சுவையானது, பசியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஊறுகாய் நமது பாரம்பரிய உணவான கூழ்,கஞ்சி போன்றவற்றுக்கு மிகவும் சுவை சேர்ப்பதாகும்

சித்த விருத்தி

மனிதனின் உயிர் அவன் உள்ளிழித்து வெளியே விடும் மூச்சுக் காற்று ஆகும். நாசி நுனியில் எண்ணத்தை நிறுத்தி, மூச்சுக் காற்றை எண்ணத்தின் மீது ஏற்றி , மூச்சைத் தடை செய்யாமல் அதைத் குதிரையாக்க வேண்டும். இவ்வாறு ஒன்றே கால் நாழிகை மூச்சோடு எண்ணத்தை நனையவிட்டால், சித்த விருத்தி உண்டாகி, ஞான ஒளி மின்னல், சடடோரி தோன்றி மறையும். இப்படி மூச்சுக்குள் இருக்கும் பிராணனை வசியம் செய்யும் முறைதான் விபாசன யோக முறை. முயற்சிப்போம் முடிவு என்னவென்று தான்…

கள்ளி முளையான் (Caralluma umbellata)

கள்ளி முளையான் இளம் தண்டுகள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன. சில நேரங்களில், உப்பு, எண்ணெய் சேர்த்து ஊறுகாய் மற்றும் சட்டினி போன்றவை தயார் செய்யவும் பயன்படுகின்றன.

சிந்திக்க செயல்படுத்த

கற்பிக்கத் துணிந்தவன் கற்றலை நிறுத்தக் கூடாது. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

தலைமை  பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 3

பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள் இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல்,   நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள். எந்தப்பேச்சும், செயலும் யார் மனதையும் காயப் படுத்தாமல்  இருக்கட்டும். நம்மை மற்றவர்கள்…

முட்சங்கன் (azima tetracantha)

முட்சங்கன் பழங்கள் ௨ண்ணத் தகுந்தவை. இலைகளை கசாயமாக ச் செய்து வயிற்றுப்போக்கு மற்றும் மூட்டு வலிக்கு ௨ள்மருந்தாக கொள்ளலாம். பால் கறக்கும் கால்நடைகளுக்கு முட்சங்கன் இலைகளை ௨ணவாகக் கொடுக்க, கறக்கும் பால் மற்றும் ௮திலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் போன்றவை மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.

நம் உடலை நாமே பாதுகாப்போமாக.

உலக சாஸ்திரத்தில் முழுமையாக வெற்றி அடைந்தது என்று எதுவுமே இல்லை. அவரவர் சிந்தனைக்கு எது பிடிக்கிறதோ அந்த பாதையில் சென்று பிரபஞ்ச சக்தியின் ஆசீர்வாதத்துடன் வெற்றி கொள்கிறார்கள். நமது உடல் பஞ்சபூதங்களோடு இணைந்து இயங்குவதை அறிந்தோம். நமது உடல் 72 ஆயிரம் நாடி நரம்புகளால் ஆனது. இதில் முக்கியமான 10 நாடிகள், இந்த பத்தில் முக்கியமானது மூன்று ( 3 ) அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை அது போல் வாயுக்கள் பத்து ( 10 )…

கடவுளைப்பற்றி காமராசரின் சிந்தனை

நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான்னான், அதுல சன்னி,…

காட்டு எலுமிச்சை (Atalantia monophylla)

காட்டு எலுமிச்சை முதிர்ந்த காட்டு எலுமிச்சைப் பழங்களை ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பழங்களின் மேல் தோலில் இருந்து வடித்து எடுக்கப்படும் எண்ணெய் பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்த்தொரு மருந்தாகவும் பயன்படுகிறது.

தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 2

இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசவேண்டாம். மற்றவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக  நடுநிலை தவறவேண்டாம்.. அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும்  ஆசைப்படாதீர்கள். சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும்  என  உணருங்கள். தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேக பிரச்சனைக்கு காரணம் தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிட்டுப் போங்கள். இப்படியெல்லாம் இருக்கமுடியாது…

இருவாட்சி ( திருவாத்தி) (Bauhinia tomentosa)

இருவாட்சி ( திருவாத்தி) இலைகளை வதக்கி, மிளகு, உப்பு ,சேர்த்து அரைத்து , தாளித்து-வதக்கி துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால்,பசி, மந்தம்,வயிற்றுக் கடுப்பு போன்றவை குணமாகும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து இந்தத் துவையலைக் கொடுத்துவர நல்ல பசி எடுப்பதுடன் நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படும்.

தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 1

மற்றவர்வகளின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள். கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். எந்த கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தை- யும், நேர்மையாகக் கையாளுங்கள்.…

குஞ்சிதபாதம்

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை நடராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசகயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது.…

இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்.

சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். இராமன் என்றால் ஒளி மிக்கவன்,…

எதையும் மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத…