நாடிகள்
மனித உடலிலுள்ள இடகலை, பிங்கலை என்ற உஷ்ண, குளிர் நாடிகள் சுஷிமுனா என்ற சூக்கும நாடியை, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் ஆகிய ஏழு இடங்களில் சந்திக்கின்றன.
மனித உடலிலுள்ள இடகலை, பிங்கலை என்ற உஷ்ண, குளிர் நாடிகள் சுஷிமுனா என்ற சூக்கும நாடியை, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் ஆகிய ஏழு இடங்களில் சந்திக்கின்றன.
மண்ணினால் நாசிக்கு விகாரமாகிய நாற்றம் ஏற்படுகிறது. இந்த பூத விகாரத்தினால், முழுமை வெளிப்பட்டு , உலகம் இயங்கி, தன் வழியே ஒடுங்கி, இறுதியில் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியில் சென்று அடங்குகின்றன. இவைகளில் நிறைந்து மனிதரின் உள்ளத்து உணர்வு வடிவமாக விளங்குவதுதான் புருஷத்துவம். உறங்கிக் கிடக்கும் இந்த குண்டலினி சக்தியைச் சீற வைத்து இயக்குபவன்தான் சர்வ சக்தி வடிவான ஞானசொரூபன்.
அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார். அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு…
காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. “காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே,…
இந்த லக்கினம் லக்கினத்திற்கு – சந்திரனுக்கு 9 -க்குரியவர்கள் கிரண கதிர்களை கூட்டி 12 – ஆல் வகுக்க மீதி வருவது சந்திரனுக்கு எந்த இடமோ அதுவே இந்து லக்கினம் விருச்சிக லக்கினத்திற்கு துலாம் ராசிக்கு இந்து லக்கினம் அறிய. விருச்சிக லக்கினத்திற்கு 9 – க்குரியவர் சந்திரன். இதன் கதிர் 16. துலாம் ராசிக்கு 9 – க்குரியவர் புதன் இதன் கதிர் 8 இத்தோடு கூட்ட 16+8=24 – 12 –ஆல்வகுக்க மீதி வருவதில்லை.…
கிரகங்களின் அவஸ்தா நிலை பலன்கள் சனி, ராகு, கேதுவுக்கு விருத்தா அவஸ்தைக்கூடாது. சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தைக்கூடாது. செவ்வாய் விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. புதனுக்கு விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. சூரிய – குருவுக்கு விருத்த மரண அவஸ்தைக்கூடாது. சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தைக்கூடாது.
ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகளில், 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தாஅவஸ்த்தை 12 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவன அவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை
கிரகங்களின் அவஸ்தா நிலை மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளில். 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 13 முதல்18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவனஅவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை
கிரகங்களின் அஸ்தமன நிலை. சூரியனிலிருந்து 12 பாகைக்குள் சந்திரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 17 பாகைக்குள் செவ்வாய் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 14 பாகைக்குள் புதன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 11 பாகைக்குள் குரு இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 10 பாகைக்குள் சுக்கிரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 15 பாகைக்குள் சனி இருப்பின் அஸ்தமனம்
சந்திரன் சர்ப திரேக்காணத்தில் இருந்தால் கொடூர சுபாவம். ஆயுத திரேக்காணத்தில் இருந்தால் பிராணிகளை அதிகமாக இம்சிப்பான். சதுஸ்பாத திரேக்காணத்தில் இருந்தால் குரு பத்தினியை புணர்வான். பட்சி திரேக்காணத்தில் இருந்தால் அங்கும் இங்கும் அலைந்து திரிவான்.
ஜாதகன் எந்த திரேக்காணத்தில் பிறந்தானோ, அந்த திரேக்காணத்திற்கு சொல்லிய சுபாவம், குணம் உள்ளவனாக இருப்பான். அதில் சொல்லப்பட்ட வஸ்துக்கள் மூலம் லாபமோ நஷ்டமோ கஷ்டமோ அடைவான். திருடர்களையும் அறியலாம். குரு – செவ், முதல் திரேக்காணத்தில் இருப்பது நலம். சனி – புதன் 2 – வது, திரேக்காணத்தில் இருப்பது நலம். சுக் – சந் – 3 -வது திரேக்காணத்தில் இருப்பது நலம். லக்னாதிபதி திரேக்காணராசியில் உச்சம் பெறுவது மிக்க நலம். எந்த திரேக்காணத்தில் பாவக்கிரகங்கள்…
மனசக்தி- குரு வாசகம் மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தான் இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவையில்லை. அதை அடக்க நீங்கள் தான் தகுதி பெற வேண்டும். உங்கள் மனதை குருவாலோ பெற்றோராலோ, இறைவனாலோ கூட அடக்க முடியாது. மனம் உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஓடுக்கி தவம் செய்யுங்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது .
ஜனங்கள் சுதந்திரத்திற்கு வேண்டி போராடுவார்கள். பின் சுதந்திரம் பெறுவார்கள். அதன் பின் பெற்ற சுதந்திரத்தை வேறு ஒருவரிடம், அடகு வைத்து அடிமையாய் இருப்பார்கள். இதில் காலம் மாறுபடும் ஆட்கள் மாறுவார்கள் ஆனால் மக்களின் அடிமைத்தனம் மாறவே மாறாது மக்களின் சுதந்திர தாகம் தீரவும் தீராது என்ன செய்வது நம் மக்களுக்கு சுதந்திரம் என்பது எது என்பதே தெரியாததால் சுதந்திரம் வாங்கவும் தெரியவில்லை அப்படியே வாங்கினாலும் வாங்கிய சுதந்திரத்தை வைத்து வாழவும் தெரியவில்லை பாவம்
அசாத்திய ராசிகள்:- விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் தர்ம தன்மைகளையும், புத்திர விருத்தியினையும், ஆத்ம ஞான போதனைகளையும் கற்பனா வளம் மிகுந்த தன்மையினையும் சாஸ்திர நுட்ப ஆய்வுத் திறன்களையும், எதையுமே உடனுக்குடன் செய்யவேண்டும் என்ற ஆற்றலையும் தருவது, மனித செயலின் மாறுபாடு கண்டு தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை.
சாத்திய ராசிகள்:- ரிஷபம், மிதுனம், துலாம் மெதுவாக செயல்படும் சரீர அழகை எடுத்துக்காட்டும். மலட்டுத் தன்மைகளைத் தரும். அறிவு படைத்த சாஸ்திர ஆராய்ச்சி மிகுந்த ராசிகள் ஆகும். நெறி தவறா நடத்தைக்கு உறுதுணையாக செயல்பட்டு முறையான காரியங்களை நிகழ்த்துவது.
யாப்பிய ராசிகள்;- மேஷம், கடகம், சிம்மம், கன்னி எதையுமே விரைவாக செய்ய நினைப்பார்கள். ஆனால் குறைவான பலன்களை தரும். ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்தும் உயர்ந்த தன்மைகளை தரும். பிறப்பின் வேறுபாடு, செயல் வேறுபாடு பெறுமை-சிறுமை, ஆணவம், அகங்காரம், ஆசை ,போட்டி ,பொறாமை, போன்றவைகளை கொண்டது .
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பிறரை சுலபாக எடைபோடுவதில் வல்லவர்கள். பொதுச் சேவை, ஆன்மீக ,ஈடுபாடு போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள், பிரபலம் உடையவர்கள். ஜோதிடம், மந்திர சாஸ்திரம் போன்ற துறைகளில் மிகவும் பிரசித்தி பெற்றிடுவார்கள் உயர்ரக பதவியை வகிப்பவர்கள். மனோதத்துவ நிபுணர் என்றும் சொல்லலாம்.
இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது? மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… ‘எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்’ என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச…
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பொருளாதார வசதியைப் பொறுத்தவரையில் திருப்தி என்பது இருக்காது. தேவையானபோது வசதி அமையாது. செலவாளிகளாக இருப்பார்கள். முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்வில் சுகம் பெறுபவர்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். நெஞ்சழுத்தம் உடையவர்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். தியாகிகளாவர்.
சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அதிகமாகச் சம்பாதிப்பார்கள். ஆனால் தவறான வழியில் வரும் சம்பாதனையாகவே இருக்கும். சமூகத்திற்கு விரோதச் செயல்களையும், சட்டத்தை மீறும் செயலிலும் ஈடுபடுவார்கள். வன்முறையில்தான் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள். எனவே இவர்கள் நல்வழியில், மனதையும், செயலையும், ஈடுபடுத்தினால் நற்குணங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். நிதானம் என்ற குணமே இவர்களிடத்தில் இடம் பெறாது.
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். கடினமான தோற்றம் உடையவர்கள். கள்ளங்கபடம் இல்லாதவர்கள். மற்றவர்களின் சொல்லை நம்புவர். தவிர, இவர்கள் பிறரிடம் சுலபமாக ஏமாற்றம் அடைவர்கள். தமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும், அனுபவிப்பவர்கள். எப்படிப்பட்ட துன்பத்தையும் தமது விதி என்று எண்ணி கவலையை மறப்பவர்கள். பிறரின் மனம் நோகாமல் நடப்பவர்கள். பற்றாக்குறைகளும் கலந்திருக்கும்.
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்றுவார்கள். எதையும் சீராகச் செய்யவேண்டும் என்ற கருத்து உடையவர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்தே செயலில் ஈடுபடுவார்கள். அடக்கம், பணிவு, அமைதி, போன்ற குணங்கள் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.
நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது ஆசையோ, திறமையோ, அறிவோ, அல்ல. நம் கண்ணுக்கும் ,மனதிற்கும், நமது அறிவிற்கும் புலனாகாத ஒரு மாபெரும் சக்தி அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வது மட்டும் தான் நம்மால் முடியும் செயல் விதியின் புயலில், அந்த சக்தியின் சுழலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள், யார் யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ எதனால் மோதிக்கொள்கிறார்களோ எப்படி மோதிக் கொள்கிறார்களோ யார் கண்டது இயற்க்கையின் விசித்திரத்தை அந்த மாபெரும் சக்தியின் ரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள…
உங்களின் அத்தனை பொய்களையும் பொய் சமாதானங்களையும்.. ஏற்றுக்கொள்பவர்களை ஏமாளி என எண்ணாதீர்கள்..! அவர்கள் உங்களை இழக்க விரும்பாதவராக இருக்கலாம்..!! இதில் சொன்ன விஷயத்தை நாம் நம் அனுபவத்தில் கடந்திருப்போம் ஆனால் நினைவில் வைத்திருக்க மாட்டோம் காரணம் மறதி என்று சொல்ல முடியாது உண்மையான காரணம் மதிப்பு நாம் கொடுக்கவில்லை என்பதுதான் என்ன செய்வது நம்மை இழக்க விரும்பாதவரிடம் கூட நம்மால் உண்மையாய் இருக்க முடியாத அளவு அறிவின் தாக்கம் பெருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது
சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலவித இன்னல்களுக்கு இடையே சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் பெறுவார்கள். இள வயதில் கஷ்டமான சூழ்நிலையை உடையவர்கள். குறைவான கல்விப் பயிற்சி உடையவர்கள். என்றாலும் அனுபவக் கல்வி அதிகமாக உடையவர்கள், எப்படியும் பிரபலமடைந்து உயர்ந்து விடுபவர்கள் எனலாம்.
கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் தியாகசீலர் என்றுதான் சொல்லவேண்டும். பொது நலத்தில் அதிக அக்கறையும், தொண்டு புரிபவர்கள் அரசியல் பதவிகளைப் பெற்று நாட்டுக்காக நல்ல காரியங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துபவர்கள். ஆன்மீக ஈடுபாடுகள், விசேஷ ஞானசித்தி உடையவர்கள்.
அக்கறை என்பது உண்மையானதாய் இருந்தால் அது கோபப்படாது உதவி செய்து வழி காட்டும். ஆனால், நிஜத்தில் அக்கறை இருப்பதாய் நாம் நினைப்பவர்களிடம் அதிக கோபம் வருகிறதே என்ன காரணம் இதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே பதில் அது அக்கறை உருவத்தில் இருக்கிற ஆசை. அந்த ஆசை அன்பாக பரிணாமம் அடையவில்லை என்பது தான். ஆசை அன்பாக பரிணாமம் அடையும் போது அங்கு அக்கறை உண்மையாய் இருக்கும். உண்மையான அக்கறை கோபப்படாது. அது உதவி செய்து வழி காட்டும்.…
உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட…. முதலில் உன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடு… ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!! இது உறவு வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல உறவுகள் உணர்வோடு இருக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லபட்டது தற்காலத்தில் உள்ள உறவுகள் பெயரில் மட்டுமே இருக்கிறது உணர்வில் இல்லை தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, அண்ணன், தம்பி, இந்த வார்த்தைகளின் உணர்வுகளை தற்போதைய மனித சமுதாயம் 75 சதவிகிதம் தொலைத்து…
யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..! சோதித்துப் பாருங்கள், அதை பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்.. உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில்.. அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை. எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்களுடைய முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் திடமான, நல்லநிலையைப் பெறுவார்கள். கருணை உடயவர்கள். பிறரின் உதவியால் நல்ல ஸ்தானம் பெற்றிடுவார்கள். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். அடக்கமும், அமைதியும் கொண்டவர்கள், சகல வசதிகளையும் சுயமுயற்சியால் ஏற்படுத்திக் கொள்வார்கள். இனிய இல்லறம் இவர்களுக்கு உண்டு.
உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாகவும் இருக்கலாம். அதன் பெயரை ஆக்ஞா சக்கரம் திறக்கப்பட்டபின் அழுந்தச் சொல்லுவது மூல மந்திரம் எனப்படும். இந்த இஷ்ட தெய்வம் அடிமனதிற்கு எட்டக் கூடிய சூக்கும சரீரத்தில் குடி கொண்டிருக்கும். மனோசக்தி பயிற்சி பெற்றவர்களிடமிருந்து சக்திக் கனல் எழுந்து பெருகி வரும். இவர்களுக்கு, சூட்சுமமமான அடி மனத்தொடர்பு சாதாரணமாக உண்டு. அந்த அடிமனத் தொடர்பும், சக்திக் கனலும் சந்திக்கும் இடத்தில் சர்வ சக்தி மயமான ஆற்றல் முழு உருவெடுத்து இறங்குகிறது.
முந்தைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. மாறுதல்கள் காலத்தை மீறி நின்ற போதும், அண்மை கால மாறுதல்கள் விண்கல வேகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலமைக்கு காரணம் அதித விஞ்ஞான வளர்ச்சியுமாயும் இருக்கலாம் இந்த வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் மாறுதல்களும், சுயவாழ்க்கையை கூட யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுவிட்டது . இதை நாம் சிறிது ஆழ்ந்து கண்டிப்பாய் சிந்திக்கவேண்டும். சந்தோஷத்திற்கு, மன நிம்மதிக்கு, மனமகிழ்ச்சிக்கு, மனநிறைவுக்கு, எதிர்மறையான வளர்ச்சியால் என்ன…
புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சமுதாயத்தில் உயர்ந்த செல்வாக்கு உடையவர்கள். அரசாங்கத்தில் புகழ் கௌரவம் ஏற்படும். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் புகழும் அளவில் சகல சம்பத்தும் பெற்று ராஜயோகத்தில் இருப்பார்கள் கணித, விஞ்ஞான, வியாபார, வல்லவர்கள். சாஸ்திர அறிவு நிரம்பியவர்கள்.
ஸ்தூல உடல், சூட்சும ஆவி உடல், அதி சூட்சும அருள் உடல், காரண உடல், மகா காரண அருவசக்தி இவைகளில் அன்னமய கோசமாகிய ஸ்தூல பரு உடலைத் தவிர மற்ற நிலைகளை மூலாதாரம் எனப்பட்ட வாலறிவால் தான் பெறமுடியும்.
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சிக்கலான வாழ்க்கயை உடையவர்கள். பலவிதத்தில் ஆற்றலும், திறமையும் அமைந்தவர்களே என்றாலும் நேர்மையான பாதையில் நடப்பவர்கள். எனவே தாமாக வரும் தீய நண்பர்களையும், பங்குதாரர்களையும் விட்டு விலகி இருப்பதே மிகவும் நல்லது. பல பேருக்கு வேலை கொடுத்து நடத்தும் தொழிலில் அதிக வெற்றியுடையவர்கள்.
அமைதியை தேடும் மனிதன் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று அன்பு அடுத்தது மரணம் இவை இரண்டையும் மனிதன் புரிந்துகொள்ளும் போது அவனுக்கு பலவிஷயங்கள் தெரிய தொடங்கும் அதில் சில விஷயங்கள் புரியத்தொடங்கும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிறுவயது முதலே போட்டி மனப்பான்மையோடு வாழ பழக்கப்படுத்தியுள்ளோம் இதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். திறந்தமனதோடு ஒப்புக்கொள்ளவும் வேண்டும் போட்டி என்றாலே வெற்றி என்பது இலக்காகி விடுகிறது ஏதாவது ஒரு பலவீனமான சந்தர்ப்பத்தில் நாம் வன்முறையைகைக்கொள்ள தூண்டப்படுகிறோம்…
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். ஆதாயம் இல்லாமல் எந்த செயலிலும் ஈடுபடவே மாட்டார்கள். வருமானம் வருகிறது என்றால் எந்தப் பிரச்சனையிலும் ஈடுபட்டு தொந்தரவுகளைத் தேடிக்கொள்வர்கள். பல தோல்வியைக் கடந்து பிறகு வெற்றியைப் பெற்றிடுவார்கள். ஆனாலும் வசதியான வாழ்வை வாழ்வார்கள் என்று சொல்ல வேண்டும்.
தேசியத்தில் பார்த்தால் மதம், அரசியல் ,அந்தஸ்து ,போன்றவற்றால் மக்கள் பிரிந்தும் தங்களை தொலைத்தும் இருக்கிறார்கள் தான் தன்னை இழந்துவிட்டோம் தன்னை தொலைத்துவிட்டோம் என்ற சிந்தனை கூட மக்களுக்கு இல்லை பாவம் என்ன செய்வது அரசியலை சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளாலோ மதத்தை சார்ந்திருக்கும் மதகுருமார்களாலோ வியாபாரத்தை சார்ந்திருக்கும் வியாபாரிகளாலோ தனி திறமையாளர்களாலோ மிக பெரிய ஆராய்ச்சியாளர்களாலோ இதுநாள் வரையில் மக்களுக்கு சந்தோஷமாக வாழ்வதற்குண்டான கல்வியை சுதந்திரத்தை தர முடியவில்லை இனி இவர்களை நம்பி பலனில்லை அதை நாமே தேடி…
பிறகு அதற்குரிய தன்மையை நாம் நமக்குள் உருவாக்கிக்கொண்டு அந்த பணியில் இறங்குவோம் இங்கு அதற்குரிய தன்மைகள் என்பதன் பொருள் என்னவென்றால் உணர்ச்சிபூர்வமாக இல்லாதிருத்தல் பாரபட்சமற்ற நோக்கு எதையும் சாரத சுதந்திரமான தெளிவான ஒரு நோக்கு எதையும் உள்ளது உள்ளபடி கண்டறிவது இது முதல் நிலை அடுத்து உள்ளது உள்ளபடி புரிந்து கொள்வது இது இரண்டாவது நிலை நமது கருத்துக்களை பிறருக்கு தெரியப்படுத்துவது என்றால்என்ன என்பதை முதலில் நாம் சந்தேகமில்லாமல் புரிந்துகொண்டிருக்கவேண்டும் நமது கருத்துக்கள் பிறருக்கு தெரியப்படுத்துவதற்கு நாம்…
சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பொதுநலத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், சுயநலத்தை நினைத்தாலே இவர்களுக்கு மற்றவர்களின் மேல் வெறுப்பு தானாக ஏற்படும். பெரும்பாலும் இவர்கள் பொதுச்சேவை புரிவதால் இவர்களை மகான் என்றும், மேதை என்றும் போற்றுவார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைமை ஸ்தானம் பெறுவார்கள், பெருமையும், புகழும் உடையவர்கள். ஸ்திரபுத்தி இருக்காது ஏற்றத்தாழ்வுகள், பிணி, நலி, கண்டங்கள் வாழ்வில் பல முறை குறுக்கிடும்.
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பிடிவாத குணம் உடையவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது சிறிதளவுகூட இவர்களிடத்தில் இருக்காது. எனவே, இக்குணங்களை விட்டுவிட்டால்இவர்கள் வாழ்க்கையில் சிறப்பான நல்ல முன்னேற்றத்தை முழுமையாகப் பெற்றிடலாம் என்பது சிறந்த வழியாகும். எனவே அனுசரித்துப் போகும் குணம் அவசியம் தேவையாகும்.
நமது வாழ்க்கை கடினமாயும், குழப்பங்களும் , எதிர்மறை நிறைந்ததாயும் இருக்கிறது. தனி மனித வாழ்க்கை மட்டுமல்லாது பொது வாழ்க்கையும் கூட அப்படி தான் இருக்கிறது எங்கு நோக்கினும் அழிவு கோட்பாடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது எதற்கும் எதிலும் மதிப்போ ஆதாரமோ நம்பிக்கையோ இல்லை அது மதமாகட்டும் நிறுவனமாகட்டும் தத்துவமாகட்டும் அரசியல் ஆகட்டும் இப்படிபட்டக் குழப்பம் நிறைந்த உலகில் நாம் எப்படி வாழ்வது என்று நாம் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இத்தனைக்கும் காரணம் சரியான…
அன்பானவர்களுக்கு நான் படித்த சிந்தித்த விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன் மனித பிறவிகளாகிய நாம் ஒரு வன்முறை சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம் இதை தான் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கியுள்ளோம் என்பதை கூட நாம் இன்னும் உணரவில்லை இந்த நிலைக்கு வளர்ச்சி என்று பெயரிட்டு அழைக்கிறம் நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் எல்லாம் நமது முயற்சியின் பலனாகும் இதற்க்கு பின்புலமாக இருப்பது கடின பிரயத்தனங்கள் நமது வேதனைகள் திகைப்பூட்டும் கொடுமைகள் தான் அமைத்துள்ளன. இந்த உலகத்தில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது…
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் தங்களுக்கு என்று சில கருத்து, கொள்கைகளை உடையவர்கள். என்றாலும் மாறுபட்ட கருத்துடையவர்களையும் தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். தவறிக்கூட தமது கருத்து இதுதான் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். தமக்கு ஆகாதவர்களை சமயம் பார்த்து பழி தீர்த்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள். இவர்களுடைய செயல்கள் பிறருக்குப் புரியாத புதிராகவே இருக்கும், என்றாலும் தாமாக தீங்கு செய்யமாட்டார்கள்.
சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களது லட்சியம். எனவே எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்ற குறிக்கோள் கொண்டவர்கள். செல்வச் செழிப்புடன் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என எப்படியாவது செல்வ வளத்தைத் தேடி அடைந்திடுவார்கள்.
கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். துணிச்சலும், ஆற்றலும், அறிவுக் கூர்மையும் உடையவர்கள். தமது திறமையை ஆக்கப் பணிகளுக்குச் செயல்படுத்துவார்கள். மாறாக செயல்படுவார்களேயானால் அதிக இல்லல்களையே பெற்றிடுவார்கள். கலைகளில் தேர்ச்சியுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிவுடன் ஈடுபடுவார்கள்.
சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் உடையவர்களாகவே திகழ்வார்கள். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சியால் நல்ல பெயரும், புகழும், பொருளும் பெறுவார்கள். பேச்சாற்றல் கொண்டவர்கள். தமது வாக்கு சாதுர்யத்தால் நல்ல முன்னேற்றம் தேடிக்கொள்வார்கள்.
புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் பொதுநலத் தொண்டு புரிவதிலும் சிலர் தெய்வீகத் தொண்டு புரிவதிலும் மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். எப்போதும் பிரயாண ஈடுபாடு இருந்து கொண்டே இருக்கும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்கள் இருக்க வேண்டும்.
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலரின் எதிர்ப்புக்கு ஆளாவார். இவர்கள் நம்பக்கூடாத வர்களை நம்பி மோசம் போவார்கள். நண்பர்களே துரோகிகள் என்று சொல்லலாம். எனவே, இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் துயரங்களையும், எதிர்ப்புகளையும், தோல்விகளையும் பொருட்படுத்தாமல் எதிர் நீச்சல் போட்டால் சிறிது, சிறிதாக முன்னேறி உயர்நிலையைப் பெற்றே தீரலாம்.
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் இளம் வயதில் மிகவும் வறுமை வாட்டத்தில் இருப்பார்கள். நல்ல கல்வித் தகுதியைப் பெற்று நீதித்துறையில் உயர்ந்த பதவி பெறுவார்கள். பொது நலத் தொண்டிலும், ஆன்மீக ஈடுபாட்டிலும் அதிகமான ஆர்வம் கெண்டவர்கள். நல்ல வாக்குத்திறமையை உடையவர்கள். பொருளாதார சிறப்பு நன்றாக அமையும்.
சந்திரன் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் வாழ்க்கையில் ஒரே சீரான அதே நேரத்தில் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைபவர்கள். உயர்தர வாழ்க்கையை வாழ்பவர்கள். திடீர் தனயோகம் பெறுவார்கள் தமக்கு மிகவும் வேண்டியவர்களினால் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதிக நஷ்டம் ஏற்படாது. எது எப்படி இருந்தபோதிலும் கவலையை மறப்பவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுபவர்கள்.
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் இவர்களது மனதை அவ்வளவு சுலபத்தில் எடைபோட முடியாது. இவரது பேச்சையும், செயலையும் வைத்து இதுதான் இவரது கருத்து என்று கண்டுபிடிக்க முடியாது. அன்புக்கு அடிமையாவார்கள். அடக்கமும், முன் எச்சரிக்கையும் உடையவர்கள். எப்போதும் பார்வைக்கு சந்தோஷமான தோற்றத்துடனே இருப்பார்கள். துன்பத்திலும், துயரத்திலும் புன்சிரிப்புடன் இருப்பார்கள்.
நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.
நமக்கு பிரியமுள்ளவர்கள் சொல்லும் வசை சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை, பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின் அன்பு பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும் போது அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும் இதில் சொல்லியுள்ள விஷயத்தை என்றாவது உணர்ந்தது உண்டா அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சிந்தித்தது உண்டா அப்படி சிந்திக்கும் போது இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று நமக்கே தெரியவரும் அவ்வளவு தான்
சிறு குழந்தைகள் தங்கள் சந்தோஷத்திற்க்கு மண் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர். அரசியல் வாதிகள் தேசிய லட்சியங்கள் தேசபக்தி என்று உள்ளவற்றை சூதாட்ட காய்களாக வைத்து மக்களிடம் விளையாடுகின்றனர். ஆத்மவாதிகள் என கூறிக்கொள்பவர்களோ தத்துவ சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் சூதாட்டகாய்களாக மக்களிடம் வைத்து விளையாடுகின்றர் இது மூணும் ஒன்னுதானே சொல்லப்போனால் குழந்தைகளின் மண்பொம்மை விளையாட்டில் பிற ஜீவராசிகளுக்கோ, மனித ஜாதிகளுக்கோ பெரிய பிரச்சனை எதுவும் வருவதில்லை
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். வெற்றிகரமான வாழ்க்கை அமையப்பெறுவார்கள். ஸ்திர சொத்துக்கள் விருத்தி உண்டாகும். அரசாங்க மற்றும் அரசியல் விஷயங்களில் ஈடுபாடும், அவற்றில் அனுகூலமும், வெற்றியும், பதவி, வருவாய், லாபங்களும், பெறுவார்கள். எல்லோரையும் அடக்குவார்கள். வெற்றி கொள்ள வல்லவர்கள். பிடிவாதம், கோபம் விடாமுயற்சி வைராக்கியமும் இருக்கும்.
ஒரு தரமாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இடைவிடாது ஆண்டவனைப் பிரார்த்திப்பவன் அவனது அருளால் பிரேம பக்தியை அடைகிறான். குழந்தாய், , இந்தப் பிரேமையே ஆத்மிக வாழ்வின் இதயமாகும். பிருந்தாவன கோபிகள் இதனை அடைந்தனர். அவர்கள் இவுவலகத்தில் கண்ணனைத் தவிரப் பிறிதொன்றையும் உணரவில்லை.
சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அமைதியான வாழ்க்கையை உடையவர்கள். மதப்பற்று மிக்கவர்கள். பொதுநலச் சேவை புரிபவர்கள். நல்ல நண்பர்களை உடையவர்கள். தாமதத் திருமணம் உடையவர்கள். நேர்மையான முறையில் பணம் சேர்ப்பவர்கள். உயர்வு பெற பலரது உதவியையும் நாடுபவர்கள். அதிக முயற்சிகளையும் மேற்கொள்பவர்கள். ஏற்ற பணியை முடிக்க வல்லவர்கள்.
கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் கடவுள் பக்தி அதிகமுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை அனுசரித்து நடப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் அமைதிக் குறைவு ஏற்படவே செய்யும் என்றாலும் அதை சரி செய்து கொள்வார்கள். நல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.
கடவுள் தரிசனம் எப்படிப் பட்டது என்று உனக்குத் தெரியுமா? அது குழந்தை கையிலிருக்கும் கற்கண்டைப் போன்றது. சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அதனிடம் கெஞ்சுவார்கள். ஆனால் அது அவர்கட்குக் கொடுக்கச் சற்றும் நினைப்பதில்லை. ஆயினும் தான் விரும்புகின்ற வேறு ஒருவனது கையில் வெகு சுலபமாக அக்குழந்தை அதைக் கொடுதுவிடுகிறது. கடவுளின் தரிசனம் பெற வாழ்நாள் முழுவதும் தவஞ்செய்யும் மனிதன் வெற்றி பெறுதில்லை. ஆனால் எந்தவிதச் சிரமமுமின்றி மற்றொருவன் அதனைப் பெற்று விடுகிறான். அது கடவுளின் கருணையைப் பொறுத்தது.…
படிப்படியாகவே குண்டலினி சக்தி எழும், ஆண்டவனது நாமத்தை ஜபிப்பதால் நீ எல்லாவற்றையும் உணர்வாய். மனம் அமைதியாக இல்லாவிடினும் கூட நீ ஓரிடத்தில் அமர்ந்து புனித நாமத்தைப் பத்து லட்சம் முறை ஜபிக்கலாம். குண்டலினி எழுவதற்கு முன் அனாஹா ஒலி கேட்கும், ஆனால் தெய்வீக அன்னையின் அருளின்றி எதுவுமே கிட்டாது.
சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல உழைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு கடும் உழைப்பாளியாவார்கள். சகல செல்வ சுகங்களுடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களது லட்சியமாகும் நடவடிக்கையாவும் பணம் சம்பாதிப்பதிலேயேதான் இருக்கும். அதற்குத் தகுந்த வகையில் மற்றவர்களைப் பக்குவப்படுத்தி சாதித்துக் கொள்வார்.
உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்கள் கூட்டங்களில் வம்பு, தும்புகளும் புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும் பயனற்ற முரண்பாடுகளும் நிறைந்தது தான் இதில் இனம், மொழி, ஜாதி, பேதங்கள் எதுவுமில்லை அது குடும்பமானாலும் சரி, சமுதாயமானாலும் சரி, இதில் சமுதாய பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது கெளரவம் பார்ப்பதில் முன் காலத்தில் மதமும் ஜாதியும் கெளரவத்தை பிடித்துக்கொண்டிருந்தது பின் வந்த காலத்தில் படிப்பு அந்த இடத்தை பிடித்துக்கொண்டது இப்போது பொருளாதாரம் அந்த கெளரவம் என்கின்ற இடத்தை கோலாச்சுகிறது. அந்த…
புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் லட்சியத்துடன் வாழ்க்கயை நடத்துவபவர்கள். இவர்கள் சிறிய வயதில் முடிவெடுக்கும் திட்டத்தினால்தான் தமது வாழ்க்கையை அமைக்க முடியும். தமது லட்சிய அடிப்படையில் எதிர்காலத்தை ஒளிமயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அளவு கடந்த ஈடுபாடும் ஏற்பட்டு விடும்.
உன்னை அளக்கப்படுவது உன் செயல்களால்தான்
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். உறுதியான மனம் கொண்டவர்கள். எதையும் திட்டவட்டமாகச் செயல்படுத்துவார்கள். கண்டிப்பான குணம்கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடுபவர்கள் என்றாலும், விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் நிரந்தரமான வெற்றியைப் பெறலாம். மற்றவர்களை அனுசரித்து நடந்தாலே இவர்களுக்கு தாமாக முன்னேற்றம் ஏற்படும்.
எல்லாம் ஒன்று தான், ஆனால் எதுவும் ஒன்றல்ல. இதை புரிந்துகொள்ள வாழ்வது சுலபமாகும் வாழ்க்கையும் சுகமாகும் இதை எப்படி புரிந்து கொள்வது பலரின் வாழ்க்கையை பார்த்து அனுபவப்பட்டவர்களின் எழுத்துக்களை படித்து, சிந்தித்து நமக்குள்ளும் நம்மை சார்ந்தவர்களிடமும் பேசி என்ற படிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும் இதை தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் கேட்டுக்கொள்கிறேன்
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் திட்டமிட்டு செயலில் இறங்குவதால் இவர்கள் பெரும் பயன் பெறமுடியும். நுட்பமான தொழில்களில் ஈடுபாடு உடையவர்கள். அதில் நல்ல எதிர்காலம் பெறுபவர்கள். எழுத்துத்துறையிலும் இவர்கள் பிரகாசிக்க முடியும். உயர்ந்த எண்ணம் உடையவர்கள். பயன்தரும் திட்டங்களை உடையவர்கள். அதை செயல்படுத்தவும் செய்வார்கள்.
சேர்ப்பது அழிவிலும் முன்னேறுவது வீழ்ச்சியிலும் சேர்க்கை பிரிவிலும் வாழ்க்கை மரணத்திலும் முடியும் என்பதை அனைவரும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும் அப்படி புரிந்துகொண்டால் அதிக மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்திவிடலாம்
தான் செய்த தவறுகளை தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோறுவதுதான் உயர்ந்த பண்பு அதுதான் சரியான வாழ்க்கை முறை தான் செய்த தவறுகளை நினைத்து வருந்துவதும் அதை ஒப்புக்கொள்வதும் மறுபடியும் அவற்றை செய்யாமல் இருப்பதும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்
சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள். தீவிரமாக எப்போதும் ஆராயச்சியில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அமைதியான குணம் உடையவர்கள். கற்பனைசக்தி மிகுந்தவர்கள். எதையுமே அமைதியான முறையில் செயல்பட்டு வெற்றியை பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். பெரும்பான்மையாக கலைத்துறை ஈடுபாடு உடையவர்கள் 2-ம் தேதி பிறந்தவர்களாகவே இருப்பார்கள்.
நட்பு என்பது உபயோகத்தோடு சம்பந்தமாகி விட்டால் உபயோகம் தீர்ந்ததும் நட்பு முறிந்துவிடும். நட்பு முறியாது இருக்கிறது என்றால் அங்கு பரஸ்பரம் நட்பாய் உள்ளவர்கள் உபயோகமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் நட்பை உயர்வாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது கொச்சையாய் தெரியலாம் நட்பை அசிங்கப்படுத்துவதாயும் நினைக்கலாம். ஆனால் சரியாய் நின்று உற்றுப்பார்த்தால் இந்த விஷயம் புரியும் உபயோகப்படாத எதுவும் இயற்கையில் நீண்ட காலம் இருந்தது இல்லை. நட்பும் இதற்க்கு விதி விலக்கல்ல.
அத்தி அத்தி காய்களை பொரியல், மசியல் அல்லது கூட்டு செய்து வாரம் ஒரு முறை சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். அத்திப்பழங்கள் உண்ணத் தகுந்தவை மிகுந்த சத்துக்கள் கொண்டதான இந்தப் பழங்களை காலை உணவாக பெரிதும் விரும்பப்படுகின்றன. பலவிதமான கலாச்சார உணவுகளில் அத்திப்பழம் சேர்கிறது. அத்திப்பழங்களை குறுக்குவாட்டில் அரிந்து துண்டுகளாக்கி, தேனில் இட்டு ஊறவைத்து தயாரிக்கப்படும் அத்தி தேனூறல் சிறந்த ஊட்டச்சத்து தருவதாகும்.
நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது. ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது. குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண…
புளிச்சைக் கீரை புளிப்புச்சுவை கொண்டதான இந்தக் கீரையை கடைந்து, சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும் எனினும் உடலில் புளிப்புச் சுவையை அதிகப்படுத்தப் பண்பு இதற்கு உள்ளது பாரம்பரிய மக்கள் மீன்களை சமைக்கும் போது அவற்றுக்கு புளிப்புச்சுவை கொண்ட இந்த கீரையை பயன்படுத்துவார்கள்
சொத்தைக்களா இது கவர்னர்ஸ் என்ற ஆங்கிலப் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பழங்கள் உண்ணத் தகுந்தவை. ஜாம் மற்றும் பலவிதமான பழச்சாறுகள் தயாரிப்பிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
கரிசாலை (வெள்ளை கரிசலாங்கண்ணி) வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம். இதனால் கண் பார்வை அதிகரிப்பதுடன் உடல் பலமும் ஏற்படும். ஏதாவது ஒரு வகையில் இந்த மூலிகையை உண்டு வர நரை,திரை முதுமை மாறும் என்பதாக நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர் அதோடு,கல்லீரல் பலப்படும். இராமலிங்க வள்ளலார் கரிசாலையை காயகற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். தினமும் காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட மலச்சிக்கல் தீரும். கரிசாலைச் சாற்றல் வாய் கொப்பளித்தால் பற்களும், ஈறுகளும்,…
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் எதிலும் அவசரப் போக்கு உடையவர்கள், பொறுமை இவர்களிடத்தில் மிகவும் குறைவாக இருக்கும். தமது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, பேசுவதும் செயல்படுவதும் நன்றாக இருக்காது. இக்குணத்தால் மற்றவர்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்யப் படுப்படுவார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள், தமது எண்ணத்திலும், செயலிலும் ஒரு போதும் தவறே இருக்காது என்பது இவர்களுடைய எண்ணம், உறுதியான நம்பிக்கையாகும்.
கருங்காலி கருங்காலி பழங்கள் உண்ணத் தகுந்தவை பலவிதமான நுண் சத்துக்கள் பொருந்தியவை
நறுவிலி பலவிதமான நுண்சத்துக்கள் நிறைந்து, குழந்தைகள் மற்றும் சிறுவர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் இதுவும் ஒன்றாகும். கொழகொழப்புச் சுவை மிகுந்த இந்த பழம் வாய்,பல் மற்றும் ஈறு நோய்களுக்கும். மார்பு மற்றும் சிறுநீர்த்தாரை நோய்களுக்கும் சிறந்த துணை மருந்தாகும்.
எலுமிச்சை புல் எலுமிச்சைப் புல்லைக் கொண்டு தேனீர் தயார் செய்யலாம். ஒரு டம்ளர் தயாரிக்க இரண்டு இலைகள் போதுமானது. இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிநீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்த வடிநீர் உடன் தேவையான அளவு பால்,சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து சுவையான தேனீர் தயார் செய்து பருகலாம். எளிதாக வளரும் தன்மை கொண்ட இந்த புல்லை அனைவருக்கும் வீடுகளில் வளர்த்து பயன் பெற வேண்டும். எலுமிச்சை…
நல்வேளை பசுமையான இலைகளை பறித்து, மற்ற கீரைகளுடன் சேர்த்துக் கலவைக் கீரையாகத் துவட்டிச் சாப்பிடலாம். இலைகளை அளவாகச் சேர்த்து, கார குழம்பு செய்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாகும். அதோடு, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு நல்வேளை சிறந்த துணை மருந்தாகத் திகழ்கிறது நல்வேளை இலை சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட இருமல் தீரும்.
கோவைப் பழங்கள் உண்ணுவதற்கு மிகவும் விருப்பமானவை. கோவைக்காய் கூட்டு மற்றும் பொறியல் செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது மேலும் வற்றல் செய்வதற்கும் உகந்தது. இந்த வற்றலை நெய்யில் வறுத்துச் சாப்பிட இளைத்த உடலைத் தேற்றும், வயிற்று புழுக்களை வெளியேற்றும். சில நாட்டுப் பழங்குடி மக்களால் இதன் இளம் தளிர் இலைகளை உண்ணப்படுகின்றன கோவைக்காயை சாம்பார், கூட்டு போன்றவை செய்து சாப்பிடலாம்.
பால்பெருக்கி: இதனைக் கீரையாகச் சமைத்துச் நெய் சேர்த்து துவையலாக சாப்பிடலாம். இதனால் குடல் வாயு அகற்றும் செரிமான தன்மையும் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பண்பு இந்தக் கீரைக்கு உள்ளதால் தாய்ப்பாலூட்டும் பெண்மணிகளுக்கு வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைத்து சாப்பிட சிறந்த பலன் ஏற்படும். இறுகிப் போன பழைய மலத்தை வெளியேற்றும் குணமும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அருகம்புல் : அருகம்புல் சாறு தற்போது மிகவும் பிரபலம் . அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். அருகம்புல்லை தூய்மையானதாக சேகரித்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் , இந்த சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து பானமாக பருகலாம் . இது ரத்தத்தை சுத்தி செய்வதுடன் உடல் வெப்பத்தையும் குறைக்கும். சிறுநீர்ப்பெருக்கி சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை அரைத்து பச்சையாக செய்து பசும்பாலில் கலக்கி குடித்து வர வெள்ளைப்படுதல்…
மாகாளிக்கிழங்கு : மாகாளிக்கிழங்கு ஊறுகாய் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது தற்போது நாட்டு மருந்து கடைகளில் உண்மையான நன்னாரிக்கு பதிலாக மாகாளிக்கிழங்கே அதிகம் கிடைக்கிறது. இதனை கொண்டு சர்பத் மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படும் பலவிதமான பானங்களையும் தயார் செய்யலாம் . இவற்றை முறைப்படி பயன்படுத்தி வெப்ப காலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகளையும் தவிர்க்கலாம்.
சுக்கங்காய் முதிராத காய்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மோர் சேர்த்து கலவையில் ஊற வைத்து வற்றலாகக் செய்து கொள்ளலாம் . இதனை வற்றலை போல் வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொண்டு தேவையான போது நெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டு வறுத்து சாப்பிட நன்றாகப் பசி எடுக்கும் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு இது சிறந்த துணை உணவாகும்.
சங்கு புஷ்பம் மலர்களிலிருந்து இதழ்களை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீராக கூட அருந்தலாம் . இதனால் உடல் அரிப்பு குணமாகும். இதன் இதழ்களை கொண்டு சிரப், சர்பத் போன்றவை செய்து சாப்பிடலாம் . இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகமாவதுடன் உடலுக்கு நல்ல பலம் ஏற்படும். இதன் மலர் சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கல்லீரல் பலப்படும் தேமல் மற்றும் கரும் புள்ளிகளும் குணமாகும். இலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து…
மீனம் :- “மீன மகனை விடேல்” என்ற இந்த ராசி, இரண்டு மீன்கள் தலைமாறி இருப்பதை போன்ற அமைப்புடைய இந்த ராசி கால புருஷனின் கடைசி ராசியாகும். உபயராசி இரட்டை ராசி என்று அழைக்கப்படும் பெண் ராசி கௌரவமும் தன் அடக்கமும் கொண்டது. நீர் தன்மையுடையது. அதிக கற்பனை வளம் அரசியலில் வெற்றியினை தரும் அதிக அளவு சுயநலம் கொண்டது. இதன் அதிபதி குருவாகும். தென் முக ராசியில் கடைசி ராசி பயனுள்ள ராசி. ஆனால் மௌனமானதும்…
கும்பம்:- “கும்பத்ததோன் குன்நின்று வெல்வோன்” என்ற இந்த ராசி, கும்பம் அலங்கரித்தது போன்றதும் கோயில் கோபுர கலசம் போலவும் தோற்றம் தரும். இந்த ராசி கால புருஷனின் லாபஸ்தானம் என்னும் பெருமை பெற்றதாகும். இது 300 பாகை முதல் 330 பாகை வரை வான மண்டலத்தில் வியாபித்து உள்ளது. இதன் அதிபதி சனிஸ்வரன் ஆகும். ஒற்றை ராசி என்றும் ஆண் ராசி என்றும் வழங்கப்படும். ஸ்திர ராசியும் ஆகும் தென்முக ராசியில் 5 – வதாக வரும்…
மகரம்:- “மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன்” என்ற இந்த ராசி பெண் தலையும் மீன் உருவமும் கொண்ட தோற்றத்தில் வானவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த ராசி கால புருஷனின் கர்மஸ்தானமாகும். இது 270 பாகை முதல் 300 பாகை வரை வியாபித்துள்ளது. இதன்அதிபதி சனீஸ்வரன் ஆவார் இது பெண் ராசி ஆகும். சரராசியும் தென்முக ராசிகளில் நான்காவதாக இடம் வகிக்கும் இது அயன ரேகைக்குரிய ராசியும் ஆகும். மண் தன்மையுள்ள ராசியாதலால் லோகாதாய விருப்பம் செயலை…
தனுசு:- “வில்லானை சொல்லால் வளை” என்ற இந்த ராசி, அம்பு எய்யும் அமைப்பை போல் வான மண்டலத்தில் தோன்றும். இந்த ராசி காலபுருஷனின் ஒன்பதாவது ராசி ஆகும். இது 240 பாகை முதல் 270 பாகை வரை வியாபித்துள்ளது. இதன் அதிபதி குருவாகும். உபய ராசியாகிய இது ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி ஆகும், நெருப்பு தன்மையுள்ள இந்த ராசி வேகத்தையும், விபரீதத்தையும் உடையது. தென் முக ராசிகளில் மூன்றாவதாக வருவது,…
இரும்பிலி தமிழ் இதற்கு கருவிஞ்சிப் பழம் என்ற பெயரும் உண்டு. இதன் முதிர்ந்த பழங்கள் துவர்ப்புத் தன்மையும் சிறிதளவு கசப்புத் தன்மை கொண்டவை. இவை, கிராமப்புற சிறுவர்களாளும், பறவைகள்,மற்றும் காட்டு விலங்குகளும் உண்ணுகின்றன . இரும்பிலி இலைகளையும் மென்று சாப்பிடலாம் இதனால் உடலில் துவர்ப்புச் சுவை மிகுதியாகி,உடல் பலப்படும்.
தும்பிலி கோள வடிவமான தும்பிலி பழங்கள் உண்ணுதற்கு மிகவும் சுவையானவை மேலும், பலவிதமான நூண் சத்துக்களையும் இவை கொண்டுள்ளன.
வாத நாராயணன் வாதமடக்கி ஆதி நாராயணன், வாதரச ஆகிய மாற்றுப் பெயர்களும் வாத நாராயனுக்கு உண்டு. இலைகள் கசப்பு சுவயும் வெப்ப தன்மையும் கொண்டவை. இதன் இலைகள் குழம்பு செய்யவும் துவயல் தயாரிக்கவும் வதக்கிச் சாப்பிடவும் பெரிதும் பயன்படுகிறது. இதனால் நரம்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்றவை கட்டுப்படும். வீக்கத்தை வடிய வைக்க கரைக்கும் பண்பும் இதற்கு உண்டு. தொடர்ந்து,வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு தயாரிப்பில் வாதநாராயணன் கீரையை சேர்த்துக் கொண்டு வரலாம்.
நாம் தெரிய நினைப்பதும், நாம் அடைய நினைப்பதும் முயற்சிக்காமல் கிடைக்காது. முயற்ச்சி தொடர்ந்து வரவேண்டும். அதற்க்கு வைராக்கியம் தேவைப்படுகிறது. அந்த வைராக்கியம் கைவர பெற்றால் முயற்ச்சி என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் அப்படி முயற்ச்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது நாம் அறிய நினைப்பது அடையநினைப்பது நமக்கு கைகூடும். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதாவது பணம், பதவி, மண், பெண், பொன், தெய்வீகம் போன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் நமக்கு தொடர்ந்த முயற்ச்சியும் அதை…
மகிழ்ந்த விஷயங்களைவிட, உடைந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வதால் தான் நம் முகத்தில் சந்தோஷம் இருப்பதில்லை. நம் பழைய பிழைகளை எண்ணி அழாமல் ஆத்திரப்படாமல் இருந்தால் நம் முகத்தில் சந்தோஷம் இருக்கும்
வளர்ச்சி விளைவுகளை பொருத்தது அல்ல செயல்களை பொருத்தது. வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையை உயிரூட்டும் சாதனம் தத்துவம் ஆனால் அது கூட பல மாறுபாடுகளை தனக்குள் கொண்டுள்ளது. அது மனிதனின் சுபாவத்திற்க்கு ஏற்றபடி மாறுபட்ட உணர்ச்சிகளையும், அர்த்தங்களையும் தரவல்லது. ஏதும் விளையாத பாலைவனம், பாலைவனம் வளர்ச்சியுற்றதா, இல்லை கங்கை நதியோரம் உள்ள செழிப்பான மலர் சோலைகளும், தோப்புகளும் வளர்ச்சியுற்றதா அனுமானிக்க முடிவதில்லை, ஏனென்றால், கதிரவன் தனது கடுமையை பாலைவன மணலில் எத்தனையோ காலங்கள் செலுத்தினாலும் அந்த மணல்…
தழுதாழை இலைகள் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. இதனை மைய அரைத்து காரக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மூட்டுவலி, கீல்வாதம் போன்றவை இதனால் குணமாகும். மேலும் செரிமானத் தன்மை அதிகரிப்பதுடன் உடலில் கழிவுகளும் வெளியாகும். தொடர்ந்து உபயோகித்துவர இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கம் குணமாகும்
நெளலி உட்டியானா செய்யச் செய்ய நெளலி தானாக வந்துவிடும். கால்களை அகற்றி நின்று, கைகளைப் படத்தில் காட்டியபடி தொடை மேல் அமர்த்தி உடலை முன்னால் குனிந்து கொள்ளவும். சுவாசம் முழுமையும் மெதுவாய் வெளியில் விட்டு வயிற்றை உட்டியானா செய்யவும். பின் தளர்ச்சியைடைந்த வயிற்றின் சதைகளை இறுகக் கட்டிச் செய்யவும். இப்படி இறுக்கியவுடன் மேல் சென்ற வயிறு தானாக முன்னால் துருத்தும் பின் வயிறு தடிபோல் முன்வந்து நிற்கும். சில வினாடிகள் நின்ற பிறகு சதையை நழுவவிட்டு சுவாசத்தை…
கட்டுக்கொடி இலைகள் உடல் சோர்வைக் குறைக்கும். இலைகளை கசக்கிச் சாறு எடுத்து அதனை நீரிலிட நுங்கு போல் கட்டும். இதைச் சாப்பிட தாது பலம் உண்டாகும். அதோடு, இளைத்த உடலையும் தோற்றம். கட்டுக்கொடி இலைச்சாற்றுடன் எருமை மோர் கலந்து பருகிவர பெண்களுக்கு உண்டாகும் சிறுநீர் எரிச்சல் வெள்ளைப்படுதல் ஆகிய வெப்ப நோய்கள் குணமாகும்.
உட்டியானா கால்களை ஒரடி அகற்றி நின்று கொள்ளவும். உடலை வாந்தி செய்வது போல் முன் வளைந்து கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும். மூச்சை முழுவதுமாக வெளியே விடவேண்டும். வயிற்றை எக்கி கைகளை தொடையில் அழுத்தி குடலை படத்தில் காட்டியபடி ஏற்றவும். இவ்வாசனத்தை மிக மெதுவாக அவசரப் படாமல் செய்ய வேண்டும். 5 வினாடிகள் நிறுத்தி இளைப்பாறவும். ஒரு முறைக்கு 5 வினாடிகள் 2 முதல் 4 முறை செய்யலாம். உட்டியானா வெறும் வயிற்றில் காலையில்தான் செய்யவேண்டும். ஆகாரம்…
விருச்சிகம்:- “தேளானைப் பேணி கொள்” என்ற இந்த ராசி, வான மண்டலத்தில் தேளைப் போன்ற அமைப்பை உடையது இந்த ராசியாகும். இது கால புருஷனின் தர்ம ஸ்தானங்களை குறிப்பிடுகிறது. இது 210 டிகிரி பாகை முதல் 240 பாகை வரை பரவியுள்ள ராசியாகும். இது தென் முகராசிகளில் இரண்டாவது ராசியாகும். இதன் அதிபதி செவ்வாய், பெண் ராசி அதாவது இரட்டை ராசி என்ற பெயரும் கொண்டது. ஸ்திர ராசி அதிக சீற்றமுள்ள ராசி எனவே மிகத் துணிவும்…
கோணாசனம் நேராக நின்றுகொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கெள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளையவேண்டம். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப்பக்கம் சாயவேண்டும். 3 முறை செய்யலாம். பலன்கள் — விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும் பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால், இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்.
துலாம் “துலாத்தான் எவ்விடத்திலும் தோளான்” என்ற இந்த ராசி, நீதியின் தன்மையை உணர்த்தும் பாவ, புண்ணியங்கள் எடையிடும் வண்ணம் தராசு போல தோற்றமுடைய அமைப்பை உடைய இந்த ராசி வான மண்டலத்தில் 180 டிகிரி பாகை முதல் 210 பாகை வரை பரவியுள்ளது. கால புருஷனின் ஏழாவது ராசியாகிய இது தென்முக ராசியில் முதல் ராசியாகும். விஷவரேகைக்குரிய ராசியில் இரண்டாவது ராசியாகும். ஓஜை , எனப்படும் ஒற்றை ஆண்ராசி எனவே இது உறுதியானது பலங்கொண்டது. அதிக ஆற்றலில்…
காசான் சர்க்கரை வில்வம் என்கின் பெயராலும் வழங்கப்படும் இதன் இலைகளைச் சாப்பிட உடலில் துவர்ப்புச் சுவை கூடுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
பல தோல்விகளைப் பார்த்தவன் ஒரு வெற்றியை கண்டதும் மெல்ல கடந்து போவான்…… பல வெற்றிகளை பார்த்தவன் ஒரு தோல்வியை கண்டதும் துவண்டு போய்விடுவான்…… அனுபவத்தில் இது உண்மையென்றேபடுகிறது அதுவும் எதிர்பாராத வெற்றிகள் வரும் போது உலகே தனக்கு கீழ் தான் என்ற எண்ணம் வந்து ஒரு தோல்வி வந்தவுடன் திசைமாறியவர்களை காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது
திரிகோணாசனம் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக…
எவரை பார்க்கும் போது நீ எல்லாவற்றிலும் சாந்தமான நிலையை உணருகின்றாயோ, எவரின் அண்மை உனக்குள் பரவசத்தை உண்டாக்குகிறதோ , எவரின் சிந்தனை உனக்குள் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தருகிறதோ, என்ன செய்து கொண்டிருந்தாலும் யாருடைய சிந்தனை உனக்குள் ஓடிக்கொண்டு உனக்கு சந்தோஷத்தை தருகிறதோ எவருக்கு வேண்டி நீ உன்னை முழுவதும் அர்ப்பணிக்க தோன்றுகிறதோ, எவரின் பார்வை ஸ்பரிஸம் உனக்கு உடலிலும் உனக்குள்ளும் மாறுதலை உருவாக்குகிறதோ அவரே உன் குரு. இதை சரியாய் சிந்தித்தால் இந்து மதத்தில் கணவனிடம் மனைவி…
குகமதி பழங்கள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன குரங்குகளும்,காட்டு விலங்குகளும் இந்த பழங்களை விரும்பி உண்கின்றன.
மகிழ்ச்சி வேண்டுமானால், பணம் சார்ந்ததாக இருக்கலாம்… ஆனால் நிம்மதி, என்றும் மனம் சார்ந்ததுதான்… வெளியில் தேடினால், கிடைக்கும் பொருளல்ல… மனதில் தேடினால், கிடைக்கும் உணர்வே நிம்மதி!…
நீர்முள்ளி விதைகளை சேகரித்து, நீரில் இட்டு முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ள வேண்டும், இதனைக் காலையில் சாப்பிடலாம் இதனால் தாது பலஹீனம் குணமாகும்.
ஆலம் ஆலம்பழம் விலங்குகளலும் பறவைகளாளலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்றாகும். பாரம்பரிய மக்களால் இந்தப் பழங்கள் உண்ணப்படுகின்றன. மலட்டுத் தன்மை நீங்க இதன் விதைகள் முக்கியமான மருந்தாகின்றன.
கன்னி:- “கன்னி மகனை கைவிடேல்” என்ற இந்த ராசி, அழகிய பெண்ணை போல தோற்றமுடைய அமைப்பை உடையது இந்த ராசி வான மண்டலத்தில் 150 பாகை முதல் 180 பாகை வரை வியாபித்துள்ள பகுதியாகும். கால புருஷனின் ஆறாவது ராசி இதன் அதிபதி புதன் ஆகும். இது உபய ராசி ஆகும். இருமடிப்புள்ள இரட்டை தன்மையுடைய ராசியாகிய இது சஞ்சலப்படுதல் வளையும் தன்மை இரக்க குணம் உடையது. மண் தன்மையுடையது அதனால் லோகாதாய வாழ்க்கையில் விருப்பும், சிந்தனை…
சிம்மம்:- “சிங்கத்தானோடு செருஏரேல்” என்ற இந்த ராசி. சிங்கத்தின் உருவை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ராசியானது, கால புருஷனின் 5 வது ராசியாகும். வானவெளியில் 120 பாகை முதல் 150 வரை வியாபித்துள்ளது . ஸ்திர ராசி, ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி, எனவே அதிக அளவு துணிவும் தலைமை பதவி வெறியும் எவருக்கும் அடங்காத தன்மையும் அடக்க வேண்டும் என்கிற சர்வாதிகள் போக்கும் கம்பீரமும் மிக்கது. வட, முக ராசிகளில் 5 வது இதன்…
கடகம் :- “நண்டானுக்கு இடம் கொடேல்” என்ற இந்த ராசி, நண்டின் அமைப்பைக் கொண்டது இந்த ராசி 90 பாகை முதல் 120 பாகை வரை வான மண்டலத்தில் பரவியுள்ளதாகும். காலபுருணனின் நான்காவது ராசி ஆகும். இது பெண் தன்மை உடையது. பேராசையின் மீது விருப்பம் உடையது. பலவந்தம், விருப்பங்களில் மாற்றமும் திருத்தி அமைப்பதும் போன்ற குணங்கள் உடையது. நீர் தன்மை உடையதில் முதலாவது ராசி மிக சிறந்த கற்பனை வளம் கோழைத்தனம் புறமுதுகில் குத்துதல் ஆணவத்…
மிதுனம் :- “தண்டுக்கொண்டு இல்புகே”என்ற இந்த ராசி ஆணும், பெண்ணும் இணைந்திருப்பதைப் போன்ற தோற்றமுடைய இந்த ராசி வான வெளியில் 60 பாகை முதல் 90 பாகை வரை வியாபித்துள்ளதாகும். கால புருஷனின் மூன்றாவது ராசியான இது ஆண் தன்மை உடையது. உபய ராசி இதன் அதிபதி புதன் ஆகும். ஒற்றை ராசி என்ற அமைப்பைக் கொண்டது. உறுதியும் துணிவும் மிக்கது. அதிக அளவு மூளை பலம் மிக்கது. அதிக புத்திசாலி தனத்தையும் மிகச் சிறந்த திறமையும்…
எப்போதும் எல்லாம் தவறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப் படுகிறதோ அதுதான் சரியானது தவறுகளின் பாதைதான் சக்தியத்தின் பாதை. மனித குலத்திற்க்கு இது என்ன சொல்ல வருகிறது இதிலிருந்து மனிதன் அல்லது மனித குலம் என்ன புரிந்து கொள்வது. அப்படி புரிந்து கொள்வதால் என்ன பயன் சிந்திக்க வேண்டும். சிந்திக்க விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலை தேவைபடுகிறது. மனமானது விருப்பு, வெறுப்பு , சுகம், துக்கம், சரி, தவறு என்று பற்றியபடியே மனம் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நடு…
ரிஷபம் :- “ரிடபத்தானோடு தோரேல் ” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. காளை மாட்டின் உருவத்தை ஒத்த இந்த ராசியான மண்டலத்தில் 30 டிகிரி பாகை முதல் 60 பாகை வரை வியாபித்து இரண்டாவதாக அமைந்திருக்கும் ராசியாகும். இதன் அதிபதி சுக்கிரன். இது பெண் தன்மையுள்ளது. சாத்திய ராசி, சமராசி ஸ்திர ராசியும் கூட எனவே இது அமைதியானது. ஆர்பாட்டம் செய்ய ஆசைப்பட்டாலும், செய்ய துணிவில்லாதது அதிக சுய இரக்கமும் சுய பச்சாதாபமும் மிக்கது வட…
27 நட்சத்திரங்கள் அதன் அதிபதிகள் அது அமைந்திருக்கும் ராசிகள் முதலியவற்றை அறிந்து கொண்ட நாம் அடுத்ததாக 12 ராசிகளின் தன்மையைப் பற்றி சிறிது விரிவாக காண்போம் மேசம் :- “தகடோடு எகரேல்” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஆதியாய் இருப்பது ஆடு தலை உடைய ராசி மேஷம் ஆகும். இது உறுதியானது. துணிவு மிக்கது முரட்டு சுபாவம் மிக்கது. நிலையான பலமும் தூய நம்பிக்கையும் ஊட்டும் தன்மை மிக்கது.…
எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை சிருஸ்டி, ஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி பூஜைக்கு மூலம் குருவின்…
கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்? பதில் – அது அவன் அருளால் தான் முடியும். ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும். அது மனத்தின் மலங்களை அகற்றும். பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும் , கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும். அவனருளின்றி ஏதும் அடையமுடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும்…
நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி யோசிக்கும் விஷயத்தை அந்த சுடரினில் வைத்து அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு, பிரித்து அறிந்தால் குழப்பங்கள் தெரியும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.
ஆதண்டை காய்களை வெட்டி, உப்பிட்டு ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி, வற்றல் செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வறுவலாகச் செய்து சாப்பிடலாம். மேலும், ஆதண்டை ஊறுகாய் சுவையானது, பசியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஊறுகாய் நமது பாரம்பரிய உணவான கூழ்,கஞ்சி போன்றவற்றுக்கு மிகவும் சுவை சேர்ப்பதாகும்
மனிதனின் உயிர் அவன் உள்ளிழித்து வெளியே விடும் மூச்சுக் காற்று ஆகும். நாசி நுனியில் எண்ணத்தை நிறுத்தி, மூச்சுக் காற்றை எண்ணத்தின் மீது ஏற்றி , மூச்சைத் தடை செய்யாமல் அதைத் குதிரையாக்க வேண்டும். இவ்வாறு ஒன்றே கால் நாழிகை மூச்சோடு எண்ணத்தை நனையவிட்டால், சித்த விருத்தி உண்டாகி, ஞான ஒளி மின்னல், சடடோரி தோன்றி மறையும். இப்படி மூச்சுக்குள் இருக்கும் பிராணனை வசியம் செய்யும் முறைதான் விபாசன யோக முறை. முயற்சிப்போம் முடிவு என்னவென்று தான்…
கீழ்படிய முடியாதவனுக்கு தலைமை தாங்கவும் முடியாது. ஒரு நல்ல புத்தகம் தலை சிறந்த ஆன்மாவின் விலை மதிப்பற்ற உயிர் துடிப்பு
கள்ளி முளையான் இளம் தண்டுகள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன. சில நேரங்களில், உப்பு, எண்ணெய் சேர்த்து ஊறுகாய் மற்றும் சட்டினி போன்றவை தயார் செய்யவும் பயன்படுகின்றன.
கற்பிக்கத் துணிந்தவன் கற்றலை நிறுத்தக் கூடாது. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள் இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல், நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள். எந்தப்பேச்சும், செயலும் யார் மனதையும் காயப் படுத்தாமல் இருக்கட்டும். நம்மை மற்றவர்கள்…
முட்சங்கன் பழங்கள் ௨ண்ணத் தகுந்தவை. இலைகளை கசாயமாக ச் செய்து வயிற்றுப்போக்கு மற்றும் மூட்டு வலிக்கு ௨ள்மருந்தாக கொள்ளலாம். பால் கறக்கும் கால்நடைகளுக்கு முட்சங்கன் இலைகளை ௨ணவாகக் கொடுக்க, கறக்கும் பால் மற்றும் ௮திலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் போன்றவை மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.
உலக சாஸ்திரத்தில் முழுமையாக வெற்றி அடைந்தது என்று எதுவுமே இல்லை. அவரவர் சிந்தனைக்கு எது பிடிக்கிறதோ அந்த பாதையில் சென்று பிரபஞ்ச சக்தியின் ஆசீர்வாதத்துடன் வெற்றி கொள்கிறார்கள். நமது உடல் பஞ்சபூதங்களோடு இணைந்து இயங்குவதை அறிந்தோம். நமது உடல் 72 ஆயிரம் நாடி நரம்புகளால் ஆனது. இதில் முக்கியமான 10 நாடிகள், இந்த பத்தில் முக்கியமானது மூன்று ( 3 ) அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை அது போல் வாயுக்கள் பத்து ( 10 )…
நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான்னான், அதுல சன்னி,…
காட்டு எலுமிச்சை முதிர்ந்த காட்டு எலுமிச்சைப் பழங்களை ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பழங்களின் மேல் தோலில் இருந்து வடித்து எடுக்கப்படும் எண்ணெய் பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்த்தொரு மருந்தாகவும் பயன்படுகிறது.
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசவேண்டாம். மற்றவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.. அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள். சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என உணருங்கள். தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேக பிரச்சனைக்கு காரணம் தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிட்டுப் போங்கள். இப்படியெல்லாம் இருக்கமுடியாது…
இருவாட்சி ( திருவாத்தி) இலைகளை வதக்கி, மிளகு, உப்பு ,சேர்த்து அரைத்து , தாளித்து-வதக்கி துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால்,பசி, மந்தம்,வயிற்றுக் கடுப்பு போன்றவை குணமாகும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து இந்தத் துவையலைக் கொடுத்துவர நல்ல பசி எடுப்பதுடன் நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படும்.
மற்றவர்வகளின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள். கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். எந்த கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தை- யும், நேர்மையாகக் கையாளுங்கள்.…
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை நடராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசகயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது.…
சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். இராமன் என்றால் ஒளி மிக்கவன்,…
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத…
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது . ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, . புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை…
கினி வளைகுடா பகுதியில் அமைந்துள்ள கானா நாட்டின் தலைநகர் மற்றும் (ம.தொத.,2001 மதிப்பீடு 15,51,200) 1482-ல் போர்த்துகீசியர்கள் இப்பகுதியில் முதன்முதலில் குடியேறிய போது, இந்தப் பகுதி ‘கா’ மக்களின் குடியிருப்பாக இருந்தது. 1650-80களில் பாதுகாப்பு மிக்க மூன்று வணிக மையங்கள் முறையே டேனியர்கள், டச்சுகாரர்கள் மற்றும் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டன. டேனியர்களும் டச்சுகாரர்களும் முறையே 1850 மற்றும் 1872ல் இப்பகுதியை விட்டு வெளியேறினர். 1877ல் அக்ரா பிரிட்டிஷ் கோல்ட் கோஸ்ட் காலனியின் தலைநகரமானது. 1957ல் கானா சுதந்திரம் அடைந்த…
ஸோ – என்ற நாதத்துடன் காற்றை உள்ளே இழுத்து ஒசை எழுப்பி ‘ ஹம் ‘ என் ற ஒசையுடன் அதை வெளியே விட்டு, ஒலி எழுப்பும்போது, பிரசித்தி பெற்ற ஒங்கார நாதமாகிய ‘ ஸோஹம்’ இணைகிறது. இதுவே சூட்சும பஞ்சாட்சரம்.
காரை சிறுகாரை என்று சொல்லப்படும் இதன் இலைகள் மற்றும் பழங்கள் உண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். சமைத்த உணவுகளை பதப்படுத்தவும் காரை இலைகள் பயன்படுகின்றன. குரங்குகளும், சிலவகைப் பறவை இனங்களும் காரை பழங்களை விரும்பி உண்கின்றன. இவற்றின் மூலமாக காரை விதைகள் இனப்பெருக்கம் அடைகின்றன.
1970,80,90 -ம் காலங்களில் வாழ்ந்தவர்களின், வாலிபர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திய மாபெரும் கான கந்தவர்வன் பாடலிலேயே சிரிக்கவும், சிணுங்கவும், உள்ள கலையை முழுமையாக கைவர பெற்ற உன்னத பாடகர். ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா இந்த பாடலில் விழுந்தவன் இன்னும் ஏனோ என்னால் எழ முடியவில்லை சிந்து பைரவி படத்தில் வரும் தண்ணிதொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி என்ற பாடலை நான் ஏன் டைரக்டர்…
தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, இதுவே முதல் உயிரெழுத்தாகும், அகரம் என்று வழங்கப்படுகிறது. உயிரும், மெய்யுமாக அமைந்த எழுத்துக்களின் வரிசை நெடுங்கணக்கு எனப்படும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் கலந்ததாக நெடுங்கணக்கு உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில், உயிரெழுத்துக்கள் முதலிலும், மெய்யெழுத்துக்கள் பின்னரும் அமைகின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அகரமே, எழுத்துக்களுக்கு முதலானது என்று குறிப்பிடுகிறது. வள்ளுவரின் திருக்குறளும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகள் முதன் முதலில் ஒலியெழுப்பத்…
சூட்சும எல்லையில் மனிதனின் எண்ணத்தைச் செலுத்தினால், சூட்சும சரீரமும் அதைத் தொடர்ந்து வர வேண்டும். எண்ணத்தை சூக்குமத்தில் நிறுத்தும் போது, சூக்கும சரீரம் ஸ்தூல சரீரத்துக்குள் இருக்கக்கூடாது.
புறமனத்தில் எழும் எண்ணங்களும், திட்டங்களும் நிறை வேறலாம், நிறைவேறாமலும் போகலாம். ஏனென்றால் புறமனதின் எல்லைக்கோட்டில் இருக்கும் நினைவிற்கு பந்தபாசம் உண்டு. ஆனால் புறமனதிலிருந்து அகமனதிற்குக் கொண்டு செல்லும் எண்ணங்களும், திட்டங்களும் பந்தபாசங்களுக்கு அப்பாற்பட்டவை, தோல்வி அறியாதவை. எனவே அவை நிறைவேறியே தீரும். இது மனேதத்துவச் சட்டம்.
பாதஹஸ்தாசனம் — பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் மூங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிப்போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஒரிரு வாரங்களில் படத்தில காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு…
மூன்று பிரிவுகளைக் கொண்ட தொண்ணுற்றாரு மனத் தத்துவங்களில், இரண்டாம் தத்துவம் மொத்தம் முப்பத்தைத் தன்னுள் அடக்கியது இந்த முப்பதில் தச வாயுக்கள் பத்து – அதில் பிராணனும் ஒன்று. இந்தப் பிராணன், லலாட மத்தியில் உருவாகி, சித்ரஹாச நாடியில் பரவி, மூலாதாரத்திற்கு வந்து, மணி பூரக நாபியைச் சந்தித்து, இடகலை, பிங்கலைகளில் ஒடி, ஏழு சூட்சும நாடிகளையும் சந்தித்து, கபாலத்தைச் சுற்றி, நாசியில் பன்னிரண்டங்குலம் எழுந்து, நாலங்குலம் விடுவித்து, எட்டங் குலம், நீண்டு, தான் நின்ற இடத்தில்…
பிறையாசனம் — இவ்வாசனத்தை அர்த்த ( பாதி ) சக்ராசனம் எனகூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளையவேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். – பலன்கள் — முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை…