இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 17

 நமது உடலில் உள்ள இரத்தத்தை முற்றிலுமாக தூய்மையான வீரியமுள்ள நல்ல இரத்தமாக மாற்றி வைத்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன் நோயை தாமாகவே குணப்படுத்திக் கொள்ளும். தன் உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும். இப்படி நம் உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்தமாக்குவது மூலமாக அனைத்து நோய்களையும் எந்தவொரு மருந்து, மாத்திரை, மருத்துவர், இல்லாமலும் நமக்கு நாமே குணப்படுத்திக் கொள்ள முடியும். எனவே உணவு குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று உழைப்பு, தூக்கம் இந்த ஐந்தையும் சரி…

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 16

இரத்தத்தில் எல்லாப் பொருளும் தேவையான அளவு தரமான பொருளாக இருந்தால் இரத்தம் தானாக ஊறும். நமது உடம்பில் உள்ள எலும்பு மஜ்ஜைகள் அதற்குத் தேவையான எல்லாப் பொருளும் கிடைத்தவுடன் 48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தத்தை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு சொட்டாக உருவாக்க ஆரம்பித்து 120 நாட்களில் உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும் மொத்தமாக புதிதாக மாற்றி விடும்.

இரதத்தைச் சுத்தம் செய்யும் வழி 15

உடல் உழைப்பு நமக்கு எவ்வளவு தேவை எப்படி உழைக்க வேண்டும் என்பது, உழைப்பின் மூலமாக இரத்தத்திற்கு, நெருப்பு சம்பந்தப்பட்ட பொருளை நல்ல முறையில் எப்படிக் கலப்பது என்பதைத் தெரிந்து கொள்வது ஐந்தாவது இரகசியம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 14

சுவாசிக்கும் காற்றை எப்படி சுவாசித்தால் காற்றில் உள்ள பொருள்கள் நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைக் கற்றுக் கொள்வது மூன்றாவது இரகசியம். நமது தூக்கத்தை எப்படி ஒழுங்கு செய்தால் தூக்கம் மூலமாகக் கிடைக்கும் ஆகாய சம்பந்தப்பட்ட பொருள்கள் நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்கும் என்பதை கற்றுக் கொள்வது நான்காவது இரகசியம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 13

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகும். எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்து நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்க வேண்டும் என்பதைகற்றுக் கொள்வது முதல் இரகசியம். குடிக்கும் நீரை எப்படிக் குடித்தால் நீரில் உள்ள பொருள்கள் நல்ல முறையில் ஜீரணமாகி இரத்தத்தில் கலக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது இரண்டாவது இரகசியம். 

 இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 12

உடல் உழைப்பு மூலமாக நமது இரத்தத்திற்கு நெருப்பு சக்தி கிடைக்கிறது. சாப்பிடும் உணவு மூலமாக இரத்தத்திற்கு மண் சம்பந்தப்பட்ட பொருள் கிடைக்கிறது, குடிக்கும் நீர் மூலமாக நீர் சம்பந்தப்பட்டபொருள் கலக்கிறது. சுவாசிக்கும் மூச்சுக்காற்று மூலமாக காற்று சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. தூக்கத்தின் மூலமாக ஆகாயம் சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. உழைப்பின் மூலமாக நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. ஆக மொத்தம் இரத்தத்தில் மொத்தம் ஐந்து வகையான பொருள்கள் உள்ளது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 11

இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம் இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம். சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள். நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக…

 இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 10

நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும். உடலில் அசைவுகள் இருக்க வேண்டும். நாம் உழைக்க வேண்டும். உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல் ‘துரு துரு’ வென ஏதாவதுஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 9

நெருப்பு [உழைப்பு] இரத்தத்திற்கு சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால் தான் வீரியம். நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அசைவுகள் என்ற உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அது இயக்க சக்தியாக மாறி வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 8

 ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது. இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும். தூங்கினால் இது அதிகரிக்கும். அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. எனவே தூக்கத்தின் மூலமாக இரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 7

ஆகாயம் [தூக்கம் நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூட காலியிடம் இருக்கும். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 6

நீர் நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர். எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன. தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா? எனவே தண்ணீரும் மருந்துதான். அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 5

உணவு மூன்று வேளைதான் சாப்பிடுகிறோம். ஆனால் காற்று 24 மணி நேரமும் சுவாசிக்கிறோம். எனவே காற்றும்ஒரு மருந்து தான். காற்றில் உள்ள ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் மூக்கின் வழியாக நுரையீரலுக்குச்சென்று நுரையீரலின் வழியாக இரத்தத்தில் கலக்கின்றன. எனவே இரத்தத்தில் காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் காற்று வழியாக கலக்கின்றன.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 4

காற்று உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். உண்மை. உணவு மருந்தாகச் செயல்படும். ஆனால் உணவு மட்டுமே மருந்தாகச் செயல்படாது உணவை சரியான முறையில் ஜீரணம் செய்வதால் நோய்கள் குணப் படுத்தலாம். ஆனால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. உணவு மட்டுமே மருந்து என்று கூறினால் உணவை மட்டும் சரியாக சாப்பிட்டு விட்டு மூக்கை அடைத்து வைத்துக் கொண்டால் உயிரோடு இருக்க முடியுமா?

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 3

இரத்தம் என்பது உணவு மட்டும் கிடையாது. உணவு நேரடியாக இரத்தமாக மாறுவது கிடையாது. உணவு இரத்தத்தில் சில பொருட்களைக் கலக்கிறது. இது மண் சம்பந்தப் பட்ட பொருள்கள். நாம் சாப்பிடுகிற உணவில் சர்க்கரை, புரோட்டீன், விட்டமின், மினரல் போன்ற பொருள்கள் உள்ளது. இவை மண் சம்பந்தப்பட்ட பொருள்கள் எனப்படும்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 2

இரத்தத்தில் எத்தனை பொருள் இருக்கிறது? அவை என்னனென்ன என்பதைப் பார்ப்போம். இரத்தத்தில் மொத்தம் நிறைய பொருள் இருக்கிறது. ஆனால் அதை ஐந்து வகையாக சுலபமாகப் பிரிக்கலாம். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.1. நிலம் [உணவு] [மண் நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. சாப்பிடுகிற உணவு வாயில், வயிற்றில் குடலில் ஜீரணமாகி அதில் உள்ள சத்து பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 1

நமது உடம்பில் ஒரு சுரப்பி உள்ளது. அது சுரக்கும் ஒரு நீரைக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்தலாம். அந்த சுரப்பியின் பெயர் எலும்பு மஜ்ஜைகள். அது சுரக்கும் நீரின் பெயர் சுத்தமான “இரத்தம்”. இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பதே இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி

வெற்றி – இது ஒரு சொல் 4

பகிர்ந்து கொள்ளுதல் – இலக்கை அடைவதன் பயனை – அடைய பட்ட சூழ்நிலைகளை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அது  மேலும் இலக்கை நோக்கி பயணிக்க உதவும் நிறைய பேருக்கு உந்து சக்தியாகவும் இருக்கும்.

வெற்றி – இது ஒரு சொல் 3

பின்பற்றுதல் – இலக்கைப் பற்றிய சிந்தனையும், தொடர்ந்து பயணிக்க தேவையான விஷயங்களை, விடாப்பிடியுடன் பின்பற்றுதல், இலக்கை அடைய முயற்சிக்கும், முயற்சியில் ஏற்படும் தடைகளை கண்டு சோர்வுறாமல் வைராக்கியத்துடன் உறுதியாய் இருந்து குறிக்கோளை நோக்கிப் பயணித்தல்.

வெற்றி – இது ஒரு சொல் 2

தெளிவு – உன்னுடைய குறிக்கோளில் உனக்கு ஏற்படும் எல்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்து விடு உனக்குள் தெளிவை, உன்னுடைய குறிக்கோளில் தெளிவை உண்டாக்கிக்கொள்.  படைப்பு – உன்னுடைய குறிக்கோளை, அதை அடைந்த, அதில்அடைந்த வெற்றியை உனது மனதில் உருவாக்கு, – கொண்டாடு.

வெற்றி – இது ஒரு சொல், 1

வெற்றி – இது ஒரு சொல், ஆனால் இதை அடைய நீ என்னன்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? அது தெரிந்தால் அதாவது வெற்றிக்குப் பின் இருப்பவைகளை நீ தெரிந்து கொண்டால் உன் முன் வெற்றி நிற்கும், முதலாவது – பார் – எதை என்று நீ கேட்டால் உன்னை என்பதே பதில் முழுவதும் உன்னைப் பார்.  உன் அனுமதி வேண்டாமல், இயங்கும் ரத்த ஒட்டம் இதயத் துடிப்பு போன்றவற்றைப் பார். அப்போது உனக்குப் புரியும் இறைவ‍னின்…

கல்வியின் பயன் 6

இது வரை சொன்னவற்றை தொகுத்தால் கல்வி அறிவை தர வேண்டும் அறிவு ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அன்பு அருளை தரவேண்டும் அருள் துறவை தரவேண்டும் துறவு வீடுபேற்றை தரவேண்டும். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உரையில் இருந்து.

கல்வியின் பயன் 5

இப்போதய கல்வியின் முறை பொருளாதாரத்தைக் பெறுவதற்கு மட்டுமே அடிப்படை உந்து சக்தியாய் இருக்கிறது அந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் குறைவு ஆனால் ஒழுக்கத்திலும் அன்பிலும் இருந்து வாழ்ந்தவர்கள் அதிகம் இந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் மிக, மிக அதிகம் ஆனால் ஒழுக்கத்திலும், அன்பிலும் இருப்பவர்கள் இல்லையென்று சொல்லும் அளவிற்க்கு குறைவு. 

கல்வியின் பயன் 4

நம் முன்னோர்கள் கல்வி என்பது எதை செய்யும் அதை கொண்டு நாம் எதையெல்லாம் செய்யலாம் என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இப்போது நாம் சிந்திக்க வேண்டியது நமது கல்வி முறை நம்மை வீடு பேறு வரை அழைத்துச் செல்லுமா என்று சிந்தித்தால் கேள்விகுறிதான் பதிலாக இருக்கிறது.

கல்வியின் பயன் 3

அடுத்து ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அடுத்து அன்பு அருளை தரவேண்டும் அடுத்து அருள் துறவை தரவேண்டும், அடுத்து துறவு வீடு பேற்றை தரவேண்டும் இப்படி பார்க்கும் போது சரியான கல்வி நம்மை வீடு பேற்றிற்க்கு அழைத்து செல்லும்

கல்வியின் பயன் 2

அடுத்து அறிவானது ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கத்தை தராத அறிவு அறிவே அல்ல ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி அறிவு தந்து அந்த அறிவு ஒழுக்கத்தை தரவில்லையென்றால் அந்த கல்வியே தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் வரவேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

கல்வியின் பயன் 1

கல்வியின் பயன் நம்மை எங்கே அழைத்துச் செல்லுமென்று பார்ப்போமேயானால் அது நம்மை முழுமைக்கு அழைத்து செல்வதை காணலாம். மனிதராக பிறந்த நாம் வீடு பேறு அடைவதே முழுமையாகும். அதற்கு அடித்தளமாய் மூலமாய் இருப்பது கல்வியாகும். கல்வி நமக்கு அறிவை தரவேண்டும். அறிவை தருவதே தரவேண்டியதே சரியான கல்வியாகும்.

சோம்பேறித்தனம் 2

எப்போதும் ஆசையுடனும் மனப்பூர்வமாகவும் வேலைகளை செய்ய கற்றுக்கொண்டாலே சோம்பேறிதனம் இருக்காது வாழ்வின் விடியலில் நாம் ஆசைப்பட்ட விடியலில் இருப்போம் இது அனுபவத்தால் மட்டுமே தெரிந்து புரிந்து கொள்ளமுடியும்.

சோம்பேறித்தனம் 1

காலையில் நாம் எழவைத்த அலாரத்தை அது அடித்தவுடன் நாம் அதை அடித்து அணைத்துவிட்டு போர்வைக்குள் இன்னம் கொஞ்ச நேரம் என்று உறக்கத்தை தொடரும் சோம்பேறித்தனம் நம்முள் இருக்கும் வரை வாழ்க்கையில் வெற்றி எனும் விடியலை எப்போது பார்க்க முடியும் மேலே சொன்ன செயலை தொடர்ந்து கொண்டிருப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எப்போது விடியல் என்று

சந்தோஷமாய் கேட்பவர்கள் இருந்தால்

சந்தோஷமாய் கேட்பவர்கள் இருந்தால் வயதானவர்களுக்கு தங்களின் பழைய நினைவுகளை பற்றி சொல்லுவதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு எதுவும் இல்லை._

உங்கள் பிரச்சினைகளின்

உங்கள் பிரச்சினைகளின் அளவு..அவற்றைத் தீர்ப்பதற்கான உங்கள் திறனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை.. உங்கள் பிரச்சினைகளை மிகைப்படுத்தி உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

நம் வாழ்க்கையை

நம் வாழ்க்கையை கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் எதையாவது கற்றுக்கொள்கிறோம்..  சில பாடங்கள் வலிமிகுந்தவை.. சில வலியற்றவை.. வலி அல்ல இங்கு விஷயம் கற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதே விஷயம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வலியை பொருட்படுத்தாது உண்மையில் அனைத்தும் விலைமதிப்பற்றவை!

நேரம் ஒதுக்கி

நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் பழகுங்கள்.. வேலைகளை ஒதுக்கி பேசுபவரை நேசியுங்கள்! நேரத்திற்கும் வேலைக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்துகொண்டாலே இது சாத்தியம்

நம்முடைய இந்த நிலைக்கு

நம்முடைய இந்த நிலைக்கு நாம் தான் காரணம் என உணர்வோம். மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். பிரச்சனையை ஒரு பிரச்சனையாகப் பார்த்தால் மட்டுமே அது ஒரு பிரச்சனை.. உங்கள் கண்ணோட்டத்தை  மாற்றினால்.. பிரச்சனைக்கு.. பதிலாக வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள்!

காலத்தின் நிலை 2

காலத்தை வீணாக்கினால் வாழ்க்கையை அதாவது சரியான வாழ்க்கையை இழந்து விடுவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்துகொள்ளலாம் இப்போ என்ன அவசரம் என்று எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை காலம் நிச்சையம் தள்ளி வைத்துவிடும் யாருக்காகவும் எதற்கு வேண்டியும் காத்திருக்காது காலம். அதனால் கற்றலோ, கற்பித்தலோ, விளையாட்டோ, ஆலயவழிபாடோ, தவமோ, வேலையோ எதுவானாலும் உரிய காலத்தே செய்து பழவோம்

காலத்தின் நிலை 1

காலத்தின் தன்மையை தெரிந்து புரிந்து கொள், காலமே எல்லாம் அதாவது காலமே உன் உயிர் அதை உனக்கோ அல்லது அடுத்தவருக்கோ உபயோகப்படுத்தாமல் நீ வீணாக்கினால் உன்னையே நீ கொலை செய்தவன் ஆகிறாய். காலம் விலை மதிப்பில்லாதது, அதை வீணாக்கி விட்டுவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை பிடிக்க முடியாது. வீணாக்கிவிட்டு அழுது புரண்டு அரற்றினாலும் சென்ற காலம் சென்றது தான் நம்மாள் அதை பிடிக்க முடியாது. அதனால்தான், பெரியவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தார்கள் காலத்தே பயிர் செய்,…

உலகில் கடினமானது

உலகில் கடினமானது எத்தனையோ உண்டு அதில் சில அல்லது முக்கியமானதில் இது அமையும் முக்கியமாய் இதையும் வைத்துக் கொள்ளலாம்.   1. ரகசியத்தை காத்தல், 2. பிறர் செய்த தவறை மறப்பது, மன்னிப்பது அதாவது நம்மை வஞ்சித்தவரை நம்மை காயப்படுத்தியவரை, 3 ஓய்வு நேரத்தை மிக பயனுள்ள வழியில் கழித்தல். .

கோபம்

கோபம் என்பது உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, சுற்றுபுறம் சார்ந்த பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லாத சூழ்நிலை காரணமாக உண்டாகிறது கோபம் உண்டாக அவரவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதில் ஒன்று சிந்திக்காமல் செயல்படுத்தும் அதிர்ப்தி தான் கோபம், மேலும் பிறர் நம்மை தாழ்த்தும் போதும் உண்டாகும் எதிர்வினை  உணர்வே கோபம், எவனால் சிந்தித்து தனது கோபத்தை தனது கட்டுபாட்டில் வைத்து வெற்றி கொள்கிறானோ அவன் தனது வாழ்நாளின் மிக பெரிய எதிரியை வெற்றி கொண்டவன்…

எது மெச்யூரிட்டி 6

காணும் அனைத்திலும் பிறப்பு ரீதியாக இன ரீதியாக சாதி ரீதியாக மத ரீதியாக மொழி ரீதியாக பிரிவினையைப் பற்றியே முதலில் யோசிக்கும் சிந்தனையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் வெளியேறி கல்வி கற்று முன்னேறி பல பயணங்கள் மேற்கொண்டு பல ஊர்களை அடைந்து பல ஊர்  தண்ணீர் குடித்து பல மனிதர்களைக் கண்டு நம் அனைவருக்கும் நோய்/ வலி/ மகிழ்ச்சி/ மரணம்/ பிரிவு / காதல் ஆகியவை ஒன்றாக இருப்பதை உணர்ந்து வேற்றுமையை மறந்து ஒற்றுமையைப் பற்றி யோசித்தால்…

எது மெச்யூரிட்டி 5

நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்கக்கூடாது என்றும் மாற்றுக் கருத்துகளை பேசுபவரை எதிரி என்று நோக்கும் மனநிலையில் இருந்து நாம் மாறி மாற்றுக் கருத்துகளையும் கனிவோடு செவிமடுத்து அந்த கருத்துகளைப் பேசுபவரையும் அரவணைத்து அதில் உள்ள உண்மையையும் தேவையற்றதையும் வடிகட்டி ஆராய்ந்து ஒன்றாகப் பயணிப்பது தான்  மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 4

நம்மை யார் விமர்சித்தாலும் யார் நம் தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் கடுப்பாகி கண் சிவந்து விமர்சித்தவர்களை கல்கொண்டோ சொல் கொண்டோ தாக்க எண்ணுவதில் இருந்தும் மாறி நம் முன்னேற்றத்தில் நம்மை விமர்சிக்கும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்ந்து ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து நமக்கு நேரெதிர் கருத்துகளையும் மதித்து ஆராய்ந்து அதில் இருந்தும் பாடம் கற்று சுயமுன்னேற்றம் அடைவது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 3

ஒரு தோல்வியில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் ஒரு வெற்றியில் அனைத்தும் வந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஒரு வெற்றிக்குப் பின்னும் தோல்வி உண்டென்றும் ஒரு தோல்விக்குப் பின்னும் வெற்றி உண்டென்றும் உணர்வதில் உள்ளது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 2

ஒருவர் இதுவரை எவ்வளவு பட்டங்கள் பெற்றார் என்பதில் மெய்யான முதிர்ச்சி இருப்பதில்லை மாறாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் வெளியே வாழ்க்கை ஒரு பாடத்தை சர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கிறதே. . அந்த பாடத்தை படித்து வாழ்வு வைக்கும் தேர்வுகளில் வெற்றியோ தோல்வியோ மாறி மாறி அனுபவித்து சேமித்து வைத்திருக்கிறாரே ஒரு அனுபவம் அது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 1

மெச்யூரிட்டி என்பது வயதால் மட்டும் வருவதன்று. ஒருவருக்கு வயதாவதால் மட்டுமே அவர் முதிர்ச்சி அடைவதில்லை மாறாக அவர் அன்றாட வாழ்வில் எத்தனை பேரைக் கடந்து வந்திருக்கிறார் அத்தனை பேரும் மற்றும் அவர்களுடைய வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும் இவரது எண்ணங்களிலும் சிந்தனையிலும் என்னென்ன மாற்றங்களைச் செய்தன என்பதில் தான் மெச்யூரிட்டி வருகிறது.

பலவீனத்தை எல்லாம்

பலவீனத்தை எல்லாம் ஒப்பனைகள் அதிகம் பூசி பலமாக மாற்ற வேண்டாம்.. மனமுவந்து ஏற்றுக்கொண்ட பின் அவைகள் தானாகவே பலமாகிவிடும்! அங்கேயே தான் உள்ளன பகல்கள்.. எப்படியும் வந்தே தீரும் இரவுகள்.. அது அது அப்படியே இயங்கட்டும் இயைந்து கொள்ளுங்கள்! ஒடிந்த முருங்கை மரத்தின் கிளை மீண்டும் ஒரு மரமாகும்.. எடுத்து அதே தோட்டத்தில் நட்டு வையுங்கள்!!

பங்கஜ முத்திரை

பங்கஜம் என்றால் தாமரை என்று பொருள் இம்முத்திரை தாமரை போல் காட்சியளிப்பதால் பங்கஜ முத்திரை என்று அழைக்கிறோம். இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று குவித்து இரண்டு கை பெருவிரல்கள் மற்றும் சுண்டு விரல்கள் மட்டுமே ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் ஒன்றையொன்று தொடாமல் விரிந்து சற்று வளைந்து இருக்க வேண்டும். பலன்கள் :- மனதில் தோன்றும் கோபம், பொறாமை, வெறுப்பு, ஆணவம் போன்ற தீய எண்ணங்களை போக்கி மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றச் செய்கின்றது.…

காக்கினி முத்திரை

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிமையாக செய்யும் முத்திரை ஆகும். வலதுகை விரல்கள் நுனியும் இடதுகை விரல்கள் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் ஒன்றை ஒன்று தொடதவாறு இடைவெளி இருக்க வேண்டும். பலன்கள் :- ஒரு செயலில் ஈடுபடும்போது அந்த செயலில் மனம் ஒன்றாமல் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் ஒரு பத்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் போதும் மனம் ஒறுமுகப்பட்டு செயலில் நன்றாக ஈடுபாடு செலுத்த முடியும். ஆசிரியர்…

வஜ்ர முத்திரை :

 நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் மடக்கி கட்டை விரலை நடுவிரல் நகத்தின் அருகே வைக்கவேண்டும். ஆட்காட்டி விரல் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.  பலன்கள் :- உடல் வஜ்ரம்போல் பலம்பெரும். சோர்வு,மயக்கம் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலம்பெரும். கல்லீரல்,மண்ணீரல் ஆற்றலை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை அடையும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்

ஆதி முத்திரை:-

பெருவிரலை மடக்கி சுண்டுவிரலின் கடைசி ரேகையை தொடுமாறு வைத்து மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொள்ள வேண்டும். இதுவே ஆதி முத்திரை எனப்படும். தாயின் கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறு கைகளை மூடியபடி இம்முத்திரை போன்று இருப்பதால் ஆதி முத்திரை என அழைக்கப்படுகின்றது. பலன்கள்  1.கண், காது, பல் வலிகளை போக்கும். 2.மனக் குழப்பம், அதிர்ச்சி, படபடப்பு ஆகியவற்றை சரிசெய்யும். 3.தேவையற்ற கவலை பயம் ஆகியவற்றைப் போக்கும். 4.சுவாசம் மூச்சுத்தினறல் ஆகியவற்றை சீர்படுத்தும். 5.தீய எண்ணங்களை போக்கி மனதை…

கருட முத்திரை:-

இடதுகை பெருவிரலையும் வலதுகை பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பலன்கள்:- 1.உயிர் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும். 2.ஞாபகமறதியைப் போக்கி நினைவாற்றல் பெருகும். 3.பார்வைத் திறனும் கேட்கும் திறனும் அதிகரிக்கும். 4.கோபம்,வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகிய தீய குணங்கள் மறையும். 5.நரம்பு மண்டலம் உறுதியடையும். இம்முத்திரையை 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.…

சுத்த முத்திரை:-

கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது ரேகையை ஒட்டி மேலே பக்கவாட்டில் தொட வேண்டும். சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் செய்தால் அதிகமான பலன் கிடைக்கும். எளிய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு இம்முத்திரை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். பலன்கள் :- உடலில் உள்ள எல்லா விதமான நச்சுப்பொருள்களும் வெளியேற்றப்படும். உடல்வலி, மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமடையும். .நோய்கள் குணமாகும் உடல் புத்துணர்ச்சி…

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது…….., அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள்,…

ருத்ர முத்திரை :

கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்யலாம். பலன்கள் : 1.ரத்த ஓட்டம் சீராகும் 2.தூய சிந்தனைகள் ஏற்படும் 3.கண் குறைபாடுகள் நீங்கும் 4.சுவாசம் சீராகும் 5.இரத்த அடைப்பு நீங்கும் 6.மண்ணீரல், கல்லீரல் உறுப்புகள் வலுப்பெறும் 7.உயிர் ஆற்றல் அதிகரிக்கும் 8.தலைவலி தலைசுற்றல் நீங்கும் 9.ஜீரணசக்தி அதிகரிக்கும். இம்முத்திரையை…

முகுள முத்திரை:-

நான்கு விரல்களையும் கட்டைவிரலோடு இணைத்து குவித்து வைக்க வேண்டும். இதுவே முகுள முத்திரையாகும். பலன்கள்:- மனம் சம்மந்தமான நோய்கள் குணமாகும். உடல் சோம்பலைப் போக்கி உடல் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் அல்லது வலியுள்ள இடத்தில் இம்முத்திரையை வைத்து கண்களை மூடி பாதிக்கப்பட்ட இடத்தையே சிந்திக்க வேண்டும். மூச்சு ஒரே சீராக இருக்க வேண்டும். பத்து நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செய்யலாம். ஒரே நாளில் பலமுறை செய்யலாம். வலது கையில் மட்டுமே…

லிங்க முத்திரை:-

இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். பலன்கள் : 1.உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். 2.கபத்தை அகற்றும். 3.ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். 4.வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும். 5.நுரையீரலை வலுப்படுத்தும் 6.காய்ச்சல் குணமாகும் 7.உடல் புத்துணர்ச்சி அடையும் 8.உடல் எடையைக் குறைக்கும். 9.உடலில் உள்ள கொலுப்பை கரைக்கும். 10.ஒவ்வாமை நீங்கும். 11.கோபம், கவலை, பொறாமமை போன்ற தீய எண்ணங்களைப் போக்கி மனதை சாந்தப்படுத்தும்.…

சங்கு முத்திரை:-

முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை தவிர மற்ற வலது கை விரல்களால் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்போது சங்கு போன்ற அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும். வலது கையின் பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே சங்கின் வாய் போன்ற ஒரு அமைப்பு உருவாகி இருக்கும். பலன்கள்:- தொண்டை சம்மந்தமான நோய்கள் குணமாகும். ஜீரணசக்தி அதிகரிக்கும்.…

அபான வாயு முத்திரை

ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் வைக்க வேண்டும். பின்பு நடுவிரல் நுனியும் மோதிரவிரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சுண்டுவிரல் நீண்டிருக்க வேண்டும். பலன்கள்:- 1.நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும். 2.மன அழுத்தம் மன இருக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். 3.மலச்சிக்கல் தீரும், சிறுநீர்ப் பிரச்சனை தீரும். 4.தலைவலி மற்றும் கழுத்துவலி குணமாகும். 5.இதயம் சம்மந்தமான நோய்களை குணமாக்கும் இதயத் துடிப்பை சீராக்கும். 6.இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும். 7.லோ பிரசர் (குறை இரத்த அழுத்தம்) இருப்பவர்கள்…

நாஷக் முத்திரை

சுண்டுவிரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.சளி, இரும்பல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் ஆகியவற்றைப் போக்கும். 2.சிறுநீர் சம்மந்தமான நோய்கள் குணமாகும். 3.உடலில் நீரின் அளவை சமன்படுத்தும். 4.உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அதிக வியர்வையைப் போக்கும். 5.மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.  வயதானவர்கள், ஆசனநிலையில் அமர…

சூரிய முத்திரை:

மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். 2.உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும். 3.தொப்பை குறையும்.       4.கொழுப்பை குறைக்கும் 5.உடல் பருமன் குறையும்      6.தைராய்டு சுரப்பி ஆற்றல் அதிகரிக்கும் 7.ரத்தக் குழாய்களில் அடைப்பு நீங்கும்   8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 9.பார்வைத் திறன் அதிகரிக்கும்     10.களைப்பைப் போக்கும். 11.ஆஸ்துமா,பீனிசம்…

சூன்ய முத்திரை

நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் :- இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். காதுகளின் கேட்கும் திறன் அதிகரிக்கும். பஞ்சபூத சக்திகள் சமநிலை அடையும். காது சம்மந்தமான குரைபாடு உடையவர்கள் 40 நிமிடம் வரை செய்யலாம் மற்றவர்கள்…

வாயு முத்திரை:-

ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.  பலன்கள்: வாயு தொந்தரவினால் ஏற்படும் வயிற்றுவலி நெஞ்செரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும். பக்க வாதம் முகவாதம் ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.    தசைப்பிடிப்பு, சுளுக்கு ஏற்ப்படாமல் பாதுகாக்கும். மூட்டுவலி குணமாகும்.    குதியங்கால்வலி பித்த வெடிப்பு குணமாகும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.…

பிராண முத்திரை:

மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும்.    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  புற்று நோய்க் கட்டிகள் நீ்ர்க்கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கும்.   நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் களைப்பு நீங்கும்     நரம்புத் தளர்ச்சி நீங்கும்    பக்கவாதம் குணமாகும்   நினைவாற்றல் அதிகரிக்கும் ஆஸ்துமா,…

வியான முத்திரை:-

வியான முத்திரை:- ஆள்காட்டி விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். . மற்ற இரண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:_ தூக்கமின்மை, தலைபாரம் ஆகியவற்றைப் போக்கும். தொண்டைக் கட்டடைப் போக்கும், குரல் இனிமை அடையும். தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட்டு தைராய்டு குறைபாட்டைப் போக்கும். இரத்த அழுத்தம், படபடப்பு ஆகியவற்றைப் போக்கும். தலைவலி தலைசுற்றல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் இரத்த சோகையை போக்கும். கண் எரிச்சல் உள்ளங்கை…

வருண முத்திரை

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தெடுக்கப்படும். சிறுநீரக கோளாறுகள் அகலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடல் வெப்பநிலையை சமப்படுத்தும் ரத்த ஓட்டம் சீராகும் தாகம் குறையும் சதைப்பிடிப்பு நீங்கும் குடல் அழற்சி நீங்கும் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். கோடையில் ஏற்ப்படும் கொப்பளங்கள் நீங்கும். அம்மை நோய்…

பிருத்திவி முத்திரை

பிருத்திவி முத்திரை:- மோதிர விரல் நுனியும் கட்டை விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- உயிர்ஆற்றல் அதிகரித்து உடல் வலிமை அடையும். முடிஉதிர்வைப் போக்கும். உடல் சோர்வும் மனச்சோர்வும் நீங்க்கும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல் சம்மந்தமான நோய்கள் குணமடையும். சிந்தனைத் தெளிவடையும். ஆஸ்துமா, சைனஸ் நோய் கட்டுப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வாயுத் தொல்லை நீங்கும். உடல் வெப்பநிலை சமனடையும்.…

பாவம் போக்க

நம் முகத்தை முழுமையாக புருவ மையத்தில் கொண்டு வந்து, ஓடும் கலை வழியாக_காற்றை இழுத்து 3 மாத்திரை நிறுத்தி அடைத்த பாகம் வழியாக நிதானமாக விடவும். பின்பு மறுபடியும் புருவமையத்தில் நம் முகத்தைக் கொண்டு வந்து கண்களை திறக்கவும். _ பலன் — கண், காது , வாய், மூக்கால் செய்த பாவம் போகும். _

கீழாநெல்லிவேர்

கீழாநெல்லிவேர், திங்கட்கிழமை, சந்திரகலையில் வீட்டில் வைத்து இஷ்டதெய்வ படம் முன் வாசிசெய்ய காற்றுபேசும். தெய்வம் வீட்டில் நடமாடும்

ஆகாய முத்திரை:-

பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும். 1.எலும்புகள் மற்றும் பற்க்கள் வலுவடையும்; 3.இதய நோய்கள் இரத்த அழுத்தம் குணமடையும். 4.உடல் கழிவுகள் வெளியேறும். 5.ஒற்றைத் தலைவலி குணமாகும். 6.காது சம்மந்தமான நேய்கள் குணமாகும். 7.காதடைப்பு நீங்கும் கேட்கும் திறன் அதிகரிக்கும். 8.மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். 9.எழும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்சியம் குறைபாடு நீங்கும். 10.உடலில் ஜீவகாந்த ஆற்றல்…

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:

  கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.மனதை ஒருநிலைப்படுத்தும். 2.மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். 3.ஞாபக சக்தி அதிகாரிக்கும். 4.மனநோய், மனக்குழப்பம் தீரும். 5.குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும். 6.தலைவலி நீங்கும். 7.தூக்கமின்மை குணமாகும். 8.கவலை, கோபம் ஆகியவை விலகும். 9.தன்னம்பிக்கை அதிகரிக்கும். 10.மன அமைதி உண்டாகும். 11.பிட்யூட்டரி சுரப்பி நன்றாக செயல்படும். 12 இது மாணவர்களுக்கு முக்கியமான முத்திரை.  இம்முத்திரையை 20…

அஞ்சலி முத்திரை:-

நாம் இரு கைகளையும் கூப்பி இறைவனை அல்லது பெரியவர்களை வணங்குகிறோம் அல்லது வணக்கம் சொல்கின்றோமே அதுதான் அஞ்சலி முத்திரை எனப்படும். இரு கரங்களையும் ஒன்றோடொன்று வைத்து விரல்களுக்கு நடுவே இடைவெளி இன்றி ஒட்டியிருக்க வேண்டும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். கைகளை மார்புப் பகுதியில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.  பலன்கள் :- அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தும். உடலில் உள்ள அனைத்து சக்தியோட்ட பாதைகளையும் சமநிலைப் படுத்தும். உடல் முழுவதும் பிராண சக்தி…

உபநிஷதம்

மனிதன் மூன்று பகுதிகளால் ஆனவன். 1. உடல், 2. மனம், 3. ஆன்மா இது உபநிஷதங்களின் அடிப்படை கருத்து – உபநிஷதங்கள் – மனித வாழ்வை ஆராய்கின்றன.  இதில் நான் யார், எனது மூலம் எது? எனது முடிவு எது?  இது போன்ற நிலையில் ஆராய்ச்சி தொடருகிறது.  அடுத்து, உலகம் – இதன் தோற்றம், மனிதனுக்கும், உலகத்திற்க்கும் உள்ள உறவு போன்ற நிலையில் ஆராய்கிறது. அடுத்து, இது இரண்டுக்கும் மூலமாயும், ஆதாரமாயும் உள்ள சக்தியை அதாவது இறைவனை,…

வெற்றிக்கு வித்திட 3

எந்த ஒரு செயலை செய்வதாய் இருந்தாலும் அதற்க்குண்டான மனநிலை இருக்க வேண்டியது அவசியமாகும் செய்யும் செயலுக்கு உண்டான இல்லாத மனநிலையையே பெரியோர்கள் எண்ணம் சேராத செயல் உயிரற்ற உடலை போன்றது என்றார்கள்.  லோகாதயமான வாழ்வில் ஆகட்டும், லெளகீக வாழ்வில் ஆகட்டும், அல்லது ஆன்மீக வாழ்வில் ஆகட்டும் செய்யப்படும் செயலுக்கு ஏற்ப உண்டான மனநிலையை உருவாக்கிய பிறகு செயலுக்கு சென்றால் அந்த செயல் மூலம் ஆனந்தமும், திருப்தியும் கிடைக்கும்.

வெற்றிக்கு வித்திட 2

 கற்றுக்கொள்ள – ஆர்வமும் – கற்றுக்கொண்டதை செயல் படுத்தவும் உங்களுக்குள் ஆர்வத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.  அடுத்தது எதைப்பற்றியும் அதாவது எந்த செயலைப் பற்றியும் திட்டமிடல் அவசியம் என்று போதித்து இருக்கும். அடுத்து காலம் தவறாமை எனும் விஷயத்தையும் விவரிக்கும்.

வெற்றிக்கு வித்திட 1

தன்னம்பிக்கை தரும் நூல்கள் ஆகட்டும் வெற்றிக்கு வித்திடும் ஆலோசனைகளை தரும் நூல்கள் ஆகட்டும் யார் எழுதியிருந்தாலும் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் அதில் உள்ள மொத்த கருத்துகளை நாம் பார்த்தோம் என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்கும், அதாவது நீங்கள் உங்கள் குண இயல்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் கொண்டிருக்கும் இலக்கிற்க்கு ஏற்ப அதாவது உங்கள் குறிக்கோளிற்க்கு ஏற்ப நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைய உங்களிடம் உள்ள சோம்பேறி தனம் எனும் குண இயல்பை மாற்ற வேண்டும்…

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்அவரவர் விருப்பம் கேட்காமல்  ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கொண்டு போகும் கட்டாறு. திருமணம், குழந்தை, செல்வம் சேர்த்தல் நோய்வாய்ப்படுதல் எல்லாம் பூர்வ வினை இதை புரிந்து கொண்டாலே மனம் அமைதியின் பக்கம் திரும்பிவிடும். அப்படி அமைதியின் பக்கம் மனம் திரும்பிவிட்டாலே மனம் தியானத்திற்கு பக்கம் சென்று விடும்

தியானம் என்றால்

  தியானம் என்றால் என்ன?   ஒவ்வொருவர் ஒவ்வொன்று  சொல்லுகின்றனர் தவறில்லை இதையும் சேர்த்துக் கொள்வோம். வேலையோடு வேலையாய் தன்னை மறந்து மூழ்கி விடுவது.  கடந்த காலத்திலும் இல்லாமல் எதிர்காலத்திலும் இல்லாமல் இடை விடாது நிகழ்காலத்தில் இருப்பதே தியானம்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த ஏங்குதலும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே தியானம்.

இலட்சியப்பூர்த்தி அடைய

பகவான் பாபா சொல்கிறார் ” எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்” அன்பு உயர பண்பு உயரும். பண்பு உயர ஒழுக்கம் உயரும் ஒழுக்கம் உயர,தியானம் வளரும் தியானம் வளர ஒளி மிளிரும், ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் . அன்பு ஓங்க. சாதனை ஓங்கும் சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………

இது ஆகற காரியமா

எதையும்வெட்கப்படற மாதிரி செய்யக்கூடாது, அப்படிப் பண்ணிட்டா வெட்கப்படக்கூடாது. இது ஆகற காரியமா செய்யறது எல்லாம் ஏதாவது ஒரு விதத்துல பிறருக்கு தெரியக்கூடாதுன்னு இருக்கும் போது எப்படி இப்படி இருக்க முடியும் இது சரியா இருந்தாலும் அனுபவத்துக்கு ஒத்து வரணும்னா நாம எதை பத்தியும் யோசிக்காத மனோபாவத்துல இருக்கணும் இதோட அர்த்தம் என்னன்னா யாரையும் மதிக்காத மனோபாவத்தில இருக்கணும் அப்படிங்கறது அப்படி இருந்தா மட்டுமே இது சாத்தியம்

ரொம்ப முக்கியமா சிந்திக்க வேண்டியது

ரீ கலெக்ஷன் ஆப் தாட்ஸ், மனிதர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்து யோசனைப் பண்ணி தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். மிருகத்திற்கு வருவது போல் கோபமோ, காமமோ சட்டென்று வருவதில்லை. கோபப்பட்டால் என்ன ஆகும்? தரம் தெரியாமல் இடம் புரியாமல், காமவயப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி, எப்போதும் யோசிக்காதவன் மிருகம். யோசனை பண்ணியதின் விளைவு, இன்றைய வாழ்க்கை, இன்றைய வளர்ச்சி.

பிரம்மச்சர்யம் என்றால்

பிரம்மச்சர்யம் என்றால் அது ஒரு மன நிலை, உடல் மட்டும் ஒரு பெண்ணை தீண்டாமல் இருந்துவிட்டால் மட்டும் பிரம்மச்சர்யம்ஆகாது , மனம் ஒத்துழைக்க வேண்டும், மனம் ஒத்துழைக்க சூழ்நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் அமைய வேண்டும், அப்படி இல்லாவிட்டால் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனம் சலனப்படும், மனம் சலனப்பட்டால் உறக்கம் போகும், உறக்கம் இல்லாத போது உடல் உபாதை உண்டாகும், உடல் உபாதை பிரம்மச்சரியத்தை முறிக்கும். இது மாலையிட்டு விரதம் இருக்கம் ஐயப்ப பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. இல்லறத்தான்…

அன்பு-அதிகாரம்

அன்பு பழக நேரமாகும். அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்படும். பேசி புரிந்து கொள்வது போல் சுகம் எதுவுமில்லை. என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தலைவிட ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று உடனே பார்த்துவிடுவது நல்லது.

பிரச்சனைகளுக்கு பரிகாரம்

எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்று தான் சூழலுக்கு ஏற்ப தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொள்வது மட்டுமே இந்த கால கட்டத்தில் வாழ ஒரே வழி

மன முதிர்ச்சி 2

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.. 11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

மன முதிர்ச்சி – 1

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 2. அனைவரையும் அப்படியே (நிறை, குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

பலவான்

மனம் எனும் குதிரையின் கடிவாளத்தை விட்டுவிட்டால் குதிரைகள் நம்மை அதன் இஷ்டபடி இழுத்து செல்லும். அதை இழுத்து பிடித்து நிறுத்துபவனே பலவான். மனதின் அலைகளை அடக்கி ஆள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ்நிலை ‍வெளிப்பாடே செயல் அமைதியோ அதன் உயர்நிலை வெளிபாடு. சோம்பலான மந்தநிலையை சத்துவம் என தவறாக எண்ணிவிட கூடாது.

குணங்களின் தன்மை 3

சத்வ குணம் – அமைதியும் சாந்தமும் முழு தெளிவும் கொண்ட நிலை, இது செயலற்ற நிலை அல்ல விளைவுகளின் தன்மையை முழுமையாக உணர்ந்த தீவிர செயல் பாட்டு நிலையாகும். அமைதியாய் இருப்பதே ஆற்றலின் வெளிப்பாடு.

குணங்களின் தன்மை 2

ரஜோ குணம் – அதிகாரமும், இன்பநுகர்ச்சி மட்டுமே கொண்டது. அதிகாரத்திற்க்கு வேண்டி எதையும் செய்யும் தேவைப்பட்டால் எதையும் செய்யாமலும் இருக்கும் இது போலவே இன்ப நுகர்ச்சிக்கு வேண்டியும் இயங்கும்

எப்போதும் மனிதனாய் வாழ

உனக்காக வாழ்கிறேன் என்று உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!! ஆனால்..!!! உன்னால் தான் வாழ்கிறேன் என்று  யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம்  அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய்  என்று அர்த்தம்……!  நேசிப்பவர் சொன்னது ஆசையினால் அல்லது தேவையினால் சொல்லியிருக்கலாம் ஆனால் உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார் என்று உனக்கு தெரிந்தது என்றால் நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் அதை பிடித்துக்கொள் விட்டுவிடாதே  

மாமனிதர்கள்

துக்கமும், துயரமும் நிராசையும்,பேராசையும், எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும், அனைத்து மனிதர்களையும் ஆட்கொள்கிறது ஆனால் மாமனிதர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவதால் அவர்களை உலகம் மாமனிதர்கள் என்று ஒப்புக்கொள்கிறது.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள்.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள். விளக்கு வெளிச்சத்தை தானே பார்த்துக்கொள்ளும். அது போல நீ முடிவு செய்த செயலை மட்டும் செய்துகொண்டிரு அந்த செயல் உன்னை எங்கு கொண்டு போகவேண்டுமோ அங்கு கொண்டுபோய்விடும். கால வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாய் எங்கு சேர்த்தவேண்டுமோ அங்கு சேர்த்துவிடும் 

வாழ்க்கையில் முடிவு செய்ய

நீங்கள் சாப்பிடும் இட்லியின் எண்ணிக்கையை அதற்கு வைக்கும் சட்னி முடிவெடுக்கும் போது….. இந்த வாழ்க்கையை  உங்களால் மட்டும் தனியாக எப்படி முடிவு செய்ய முடியும்……..!! தனியாக யோசியுங்கள்; அவரவரது  அனுபவங்கள் நிறைய ஞாபகப்படுத்தும் நிறைய சொல்லித்தரும் கற்று கொள்ளுங்கள் காலத்திற்கும் பயன்படும் 

பரிசு பொருள்

பரிசு பொருள் என்பது பரிசு பொருள் அல்ல நம் இதயத்தில் ஊற்றடுக்கும் அன்பின் வெளிப்பாடு  நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது…

வெற்றி அடைய

நான் எனக்கு உள்ளே இருந்து என்னை பார்க்கிறேன் அப்படி என்னை பார்க்கும் போது நான் சார்ந்திருக்க கூடிய விஷயங்களை நம்பிக்கையுடன் வரவேற்க்கிறேன் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கான பாடமாகவே பார்க்கிறேன் அதுமட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் பாடமாக பார்த்து அதிலிருந்து கவனமாக எனக்கு வேண்டியதை கற்றுக்கொள்கிறேன் எனது திறமைகளை மேலும் வளர்க்க எல்லா உபாயங்களையும் மிக சந்தோஷமாக கையாளுகிறேன் அதில் வெற்றி அடைவேன் என்று எனக்குள் முழுமையாக நம்புகிறேன் என்னுடைய நம்பிக்கை செயலுடன் கூடிய நம்பிக்கை…

பயம் என்றால் என்ன

எதை பற்றி அறிய வேண்டுமென்றாலும் அதை பற்றி அறிய தடை செய்யும் கணிப்புகள் எதுவும் நம்மிடம் இருக்க கூடாது முடிவை முடிவு செய்து ஆராய்கிறேன் என்று சொன்னால் உள்ளது உள்ளபடி அறிய முடியாமல் போய்விடும் ஆராய்வதில் மட்டுமே நின்றால் சரியான முடிவு தானே வந்துவிடும் இந்த சூத்திரத்தை கை கொண்டு பயம் என்றால் என்ன என்பதை அறிய முற்படுவோம் பொதுவாக பயத்தின் கூறுகள் கடந்த கால நிலைகள்,    நிகழ் கால நிலைகள்,    எதிர்கால நிலைகள்,…

கவனித்து கேட்டல்

இது ஒரு அழகான அற்புதமான கலை கண்டீப்பாய் நாம் அவசியம் கற்று கொள்ள வேண்டிய கலை நாம் இப்போது செய்து கொண்டிருப்பது எந்த விஷயத்தை கேட்டாலும் உடனே அதை எதோ ஒன்றுடன் ஒப்பு நோக்கிக்கொண்டோ அல்லது எடை போட்டுக்கொண்டோ தீர்ப்பு வழங்கிக்கொண்டோ ஒத்துக்கொண்டோ மறுத்துக்கொண்டோ இருந்து பழகியதால் எதையும் நாம் உள்ளபடி கவனித்து கேட்பதில்லை கவனித்து கேட்டால் ஒப்பு நோக்கோ எடை போடுவதோ தீர்ப்பு வழங்குவதோ ஒத்துக்கொள்வதோ மறுப்பதோ எதுவும் இருக்காது விஷயம் விஷயமாக மட்டுமே தெரியும்…

எதையும் சாதிக்கலாம்..

ஒருவர் எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் ஒன்று அவர்களுக்கு பிறவியிலிருந்து திறமை இருக்க வேண்டும், இல்லையென்றால் யாராவது சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.. பயிற்சியானால் செயல்களை கற்றுத் தெரிந்து கொள்ளலாம். . இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன், ஒரு தாய் தன் இருபிள்கைளிடம் இறைவனிடம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன் அது நிறைவேறினால் பத்தாயிரம் அரிசி காணிக்கை தருவதாக வேண்டியுள்ளேன் என்றாள். அதற்கு மகன்கள் பத்தாயிரம் அரிசியா எப்படியம்மா எண்ணி கொடுக்கமுடியும் என்றனர். சிறிது நேரம் கழித்து பெரியவன் சொன்னான் சீக்கிரம்…

உறவு சிக்கல் ஏற்படும் போது 2

நிலை 1: அதிர்ச்சி நாம் கொண்டிருக்கும் அன்பு திடீர் என சம்பந்தப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படும் போது முதலில் நமக்கு ஏற்படும் உணர்வு அதிர்ச்சி ஆகும். அதனுடன் தொடர்ந்து ஆச்சர்யமும் சில சமயங்களில் பயம் கூட ஏற்படும். இதனால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனும் உணர்வு தான் பயமாக வெளிப்படும். இந்த சூழ்நிலை ஏற்படும் போது மன பயிற்சிக்காக தியானம் செய்யுங்கள். உடல் உழைப்பை அதிகப்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட உணர்வில் இருந்து விடுபட வேறு பல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்

உறவு சிக்கல் ஏற்படும் போது 1

அன்பு உடைந்துகொள்வது மிக மோசமான விஷயமாகும் அது உங்களுக்கு பயனற்றது என்பதை உணர்வீர்கள் . நீங்கள் நம்பிக்கையை இழந்து துயரப்படுவீர்கள். ஆனால், பல முறை, ஒரு உறவு இருக்கும்போது நீங்கள் சந்தித்த எல்லா பிரச்சினைகளுக்கும் இது ஒரு தீர்வாகும். ஒருவரை தைரியமாக முகம் கொடுப்பதன் மூலம் பிரேக்-அப்களை இன்னும் சமாளிக்க முடியும். நினைவில், வலி தவிர்க்க முடியாதது ஆனால் துன்பத்தை விருப்பமாக்குங்கள் நீங்கள் வெற்றியாளராக வெளிப்படுவீர்கள். இதில் நீங்கள் ஏழு விதமான உணர்வுகளை அடைவீர்கள் அவைகளை பின்வருமாறு…

படித்தல் என்றால் என்ன சு- ப- வீ பார்வையில்

படித்தல் என்பது புத்தகத்தை படித்தல் எதிரிலும் சுற்றிலும் உள்ள மனிதர்களை படித்தல் வாழ படித்தல் வாழ்க்கையை படித்தல் பிறருக்கு உதவ படித்தல் இதை தவிர ஏதாவது விட்டுருந்தால் அதையும் முயன்று படித்தல் வாழ்க்கை என்பதே கற்றுகொண்டே கற்றுக்கொடுப்பது தான்

பரகாயப் பிரவேசம்

தீப ஒளியோக முறையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது, உள்ளே நிலை நிறுத்தும் போதும், அவைகளுக்கான உச்சரிப்புகளை வாயாலும், பின்னர், மனதாலும், பின்னர் அஜாப முறையில் ஆக்ஞையிலும் சொல்ல – பருவுடன் ஜோதி வடிவாகவும், இதயத்தில் அங்குஷ்ட பிராண ஜோதியையும் காண்பதுடன், பிரணவ தேகத்தையும் அடையலாம். இரண்டு கைகால் விரல்களைக் கட்டி மல்லாந்து படுத்து, மனதைச் சிதறவிடாது நிறுத்தி, மவுனத்தில் அழுந்தினால், மனம் சுழுப்தியில் அடங்கும். இந்த நிலையில், ஐங்கோல உச்சரிப்பை ஏழு ஸ்வரங்களில் எழுப்ப வேண்டும்.…

ஒலியற்ற ஒசை

வீட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ ஒலிகளின் உணர்வே இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே புற மனதின் எண்ணங்களோ, சிந்தனைகளோ கொஞ்சம்கூட இல்லாமல் மவுனமாக அமருங்கள். இந்த மவுன நிலையில் இடைவிடமல் தினமும் தனித்திருந்து உங்களுக்குள் நீங்களே ஒடுங்குங்கள். இந்த மவுனப் பெருநிலையில் ஒரு ஒசை கேட்கும். இந்த ஒசை உங்கள் உள்மனம் இயங்கும் ஒசை. இந்த ஒசை எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கும் சர்வ சக்தி வாய்ந்தது. அந்த ஒலியற்ற ஒசை உங்கள் காதுகளில் ஒலித்துவிட்டால் உங்களால் இயக்கமுடியாதது…

சிந்திக்க செயல்படுத்த

மனசக்தி- குரு வாசகம் மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தான் இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவையில்லை. அதை அடக்க நீங்கள் தான் தகுதி பெற வேண்டும். உங்கள் மனதை குருவாலோ பெற்றோராலோ, இறைவனாலோ  கூட அடக்க முடியாது. மனம் உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஓடுக்கி தவம் செய்யுங்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது .

சிந்திக்க செயல்படுத்த 5 மூல மந்திரம்

உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாகவும் இருக்கலாம். அதன் பெயரை ஆக்ஞா சக்கரம் திறக்கப்பட்டபின் அழுந்தச் சொல்லுவது மூல மந்திரம் எனப்படும். இந்த இஷ்ட தெய்வம் அடிமனதிற்கு எட்டக் கூடிய சூக்கும சரீரத்தில் குடி கொண்டிருக்கும். மனோசக்தி பயிற்சி பெற்றவர்களிடமிருந்து சக்திக் கனல் எழுந்து பெருகி வரும். இவர்களுக்கு, சூட்சுமமமான அடி மனத்தொடர்பு சாதாரணமாக உண்டு. அந்த அடிமனத் தொடர்பும், சக்திக் கனலும் சந்திக்கும் இடத்தில் சர்வ சக்தி மயமான ஆற்றல் முழு உருவெடுத்து இறங்குகிறது.

சிந்திக்க செயல்படுத்த -3

மகிழ்ந்த விஷயங்களைவிட, உடைந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வதால் தான் நம் முகத்தில் சந்தோஷம் இருப்பதில்லை. நம் பழைய பிழைகளை எண்ணி அழாமல் ஆத்திரப்படாமல் இருந்தால் நம் முகத்தில் சந்தோஷம் இருக்கும்

சிந்திக்க செயல்படுத்த

கற்பிக்கத் துணிந்தவன் கற்றலை நிறுத்தக் கூடாது. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.