நம்முடைய மதிப்பு

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.…

உங்களது பேச்சில் பணிவும்

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது.  அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ” ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார்.   சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக்…

வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்

   தந்தை மகனை நோக்கி: நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்    மகன்: என்னால் முடியாது    தந்தை: டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.   மகன்: டபுள் ஓகே டாட்.   தந்தை பில்கேட்ஸிடம் போய்: என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா?   பில்கேட்ஸ்: முடியாது   மகனின் தந்தை: என் பையன் world bank CEO.   பில்கேட்ஸ்: டபுள் ஓகே   தந்தை…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 11

வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில்  தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம்பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 10

பெண்ணாடகம் விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார். உடனே நந்தியெம் பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 9

 திருவைகாவூர் கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப்படுகிறது. சிவபக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 8

சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம். திருவல்லம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், “இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும்…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 7

திருப்புள்ளார் திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம். பட்டீஸ்வரம் இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பொறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார். ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   84

இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன. அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது. ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது;…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  83

துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  82

நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்து எழ  செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும் அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன். வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 81

எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 80

வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மிதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன் பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!

எத்தனை தர்மங்கள் செய்தாலும்

எத்தனை தர்மங்கள் செய்தாலும் பூஜைகள் செய்தாலும் அதன் பலன்கள் உங்களை வந்து சேர வேண்டுமென்றால்… உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை வாழ்த்த வேண்டும்.

பழ மொழிகள் 15

தை மழை நெய் மழை. படித்த முட்டாள் படு முட்டாள். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. பசு கறுப்பானால் பால் கறுப்பாகுமா?

பழ மொழிகள் 14

கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. தேவையற்றதை வாங்கினால் தேவையுள்ளதை விற்பாய். செயலே புகழ் பேசும். மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். பொய்க்கு எல்லையில்லை.

பழ மொழிகள் 13

திங்களும், சனியும் தெற்கே நோக்க வேண்டும். தீராக் கோபம் போராய் முடியும். தீயில்லாமல் புகை கிளம்பாது. தூங்குகிற நரிக்கு இரை கிடையாது. தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.

பழ மொழிகள் 12

தன் பாவம் தன்னுடன் வரும், கோபத்திற்கு கண்ணில்லை. தீயிலிட்ட நெய் திரும்பி வருமா? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே.

பழ மொழிகள் 11

தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான். சிக்கனமாக இருப்பதே பெரிய வருமானம். செய்து முடி அல்லது செத்து மடி. தாய் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.

கீதைகள் மொத்தம்\ – 60-27 to 30

*வியாத கீதை* – கௌஷிக முனிவருக்கு வேடன் வியாதன் ஆற்றிய உரை இது. இது மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *யுதிஷ்டிர கீதை* – யுதிஷ்டிரருக்கும் ஒரு யக்ஷனுக்கும் இடையிலான உரையாடல். இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதை நல்லொழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்க்கையின் அடித்தளத்தை உருவாக்கும் அடிப்படை நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது. *மோக்ஷ கீதை* – ஸ்வாமி சிவாநந்தா இயற்றிய மோக்ஷ பாடல். *ரமண கீதை* – பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் போதனைகளை கொண்டு முனிவர் ஸ்ரீ வசிஷ்ட…

கீதைகள் மொத்தம்\ – 60- 23 to 26

*ரிஷப கீதை* – உலக நன்மைக்காக நித்ய சத்தியங்கள் மற்றும் விடுதலைக்கான வழி குறித்து ரிஷப முனிவர் தனது குழந்தைகளுக்கு அறிவுறுத்தியது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நோக்கத்தையும், மனதின் மாறுபாடுகளை அகற்றிவைத்து, சுயத்தை பற்றுகளிலிருந்து விடுவித்து விடுதலையை அடைவது எப்படி என்பதை மனிதகுலத்திற்குக் கற்பிக்கிறது. *சௌனக கீதை* – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து யுதிஷ்டிரருக்கு சௌனக முனிவர் அறிவுறுத்தியது. இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி கீதை*…

கீதைகள் மொத்தம்\ – 60- 19 to 22

*கபில கீதை* – தாய் தேவாஹுதிக்கு மகன், கபில மஹரிஷி போதிப்பது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. *நஹுஸ கீதை* – நஹுஸன் மற்று யுதிஷ்டிரருக்கு இடையிலான உரையாடல். மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *நாரத கீதை* – ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆர்வலரின் பொதுவான தேவைகளை கூறுகின்றது. இது குரு அல்லது ஆன்மீக போதகரின் ஆதிபத்யத்தை வலியுறுத்துகிறது. *பாண்டவ கீதை* – ஆதி நாராயணனின் வெவ்வேறு பக்தர்கள் வழங்கும் பல்வேறு பிரார்த்தனைகளின்…

கீதைகள் மொத்தம்\ – 60-15 to 18

பிக்ஷு கீதை* – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர், பின்னர் ஒரு முனிவராகி உத்தவருக்கு ஒரு பாடலைப் பாடுகிறார். சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையை அதில் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கோபி கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த கோபியரின் பாடல். இந்த கீதை ஆதிமூலத்திடம் கொண்ட மிக உயர்ந்த பக்தியால் நிறைந்துள்ளது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது. ஹம்ஸ கீதை* – ஓர் அன்னபக்ஷியின் வடிவில் ஸ்ரீ விஷ்ணு பிரம்ம…

கீதைகள் மொத்தம்\ – 60 -11 to 14

சித்த கீதை* – ஜனக மஹாராஜனின் அரண்மனைக்கு அருகே பல சித்தர்கள் பாடிய பாடல். அதன் சாராம்சம் என்னவென்றால் – முடிவெளிக்குள் சுயஉணர்வை விரிவாக்கும் வழி அக-புற பொருள் வேறுபடுத்தலும் சுயகட்டுப்பாடும் தான் என்பது. இது யோக-வசிஷ்டத்தின் உபசாந்தி ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உத்தர கீதை* – பகவத் கீதையின் இணைப்பாக இது பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இது ஞானம், யோகாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி பேசுகிறது. வசிஷ்ட கீதை* – நித்ய சத்தியங்களை குறித்து…