ஸ்ரீவாஞ்சியம்

ஸ்ரீவாஞ்சியத்தில் குப்த கங்கை என்ற திருக் குளம் உள்ளது. இந்த திருக்குளத்திலும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.

ஸ்ரீதரஐயாவாள் திருமடம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர் என்ற ஊர். இங்கு ஸ்ரீதரஐயாவாள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்திற்குள் தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதில் கார்த்திகை மாத அமாவாசை நாளில் கங்கை நீர் பொங்கி வெளியேறும். அப்போது நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும்.

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை….கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன். ரொம்ப சரி…அது கழுகே தான், என்றான் அர்ஜுனன். மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை… என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே…! அது…

வியாழன் 15

குரு புத்திரகாரகர், 5ம் இடத்தில் புத்திர ஸ்தானத்தில் வீட்டில் வீற்றிருந்தால் அந்த ஜாதகர் ஒரே ஒரு புத்திரனைப் பெறுவர். குரு சந்திர கேந்திரத்தில் இருந்தால் ‘’ கஜ கேசரி யோகம் ‘’ ஏற்படும்.  செல்வம், பெயர், புகழ் ஏற்பட்டு செல்வாக்குடன் வாழ்வர். குரு, தன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ சந்திரனுக்கு, லக்னத்திற்கு கேந்திர கோணத்தில் இருப்பின், செல்வந்தராகவும், நீண்ட ஆயுள் உடையவராகவும் திகழ்வர். குரு சந்திரனுக்கு 6,8, 12ல் வீற்றிருந்தால் சகடை யோகம் உண்டாகிறது. சகடையோகத்தில்…

வியாழன் 14

குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நால்வரும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினதிலேயே இருப்பார்களானால் அப்பெண் மிக அதிர்ஷ்டசாலி, நற்குணவதி புத்திர பாக்கியத்துடன் வாழ்வர். வியாழனின் 5ம் வீட்டையோ அல்லது லக்னத்திற்கு 5ம் வீட்டையோ குரு, செவ்வாய் இருவரும் பார்ப்பின் புத்திர சோகத்தால் அந்த ஜாதகர் அவதிபடுவவர். குருவானவர் சந்திரனை கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ இருந்து பார்வை செய்யின் அந்த ஜாதகர் ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்று பல ஜோதிட புத்தகங்களை எழுதி பேறும் புகழும் பெறுவர்.

வியாழன் 13

குருவிற்கு 5ல் சூரியன் இருக்கும்போது வக்கிரம் ஏற்படுகிறது, வியாழனக்கு 9 ல்சூரியன், வரும்போது வக்கிரம் நிவர்த்தியாகிறது. குருவுக்கு 6,7,8ல்  சூரியன் இருந்தால் வியாழன் வக்கரம் பெற்ற இருக்கும். குரு, சனி, புதன், சந்திரன், செவ்வாய் கூடி 10மிடத்தில் இருப்பின் ஜாதகன் அவரது உழைப்பால் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்.

வியாழன் 12

குருவின் பார்வையோ, சேர்க்கையோ 10மிடத்து அதிபனுக்கு இருந்தால் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். புதன் தொடர்பு இருப்பின் வங்கி ஆடிட்டராக திகழலாம். குருவுக்கு கேந்திர திரிகோணங்களில் செவ்வாய், சுக்கிரன், சனி நின்றால் யோகம் விருத்தியடையும். வியாழன் ஆட்சி, உச்சமேறி லக்கினத்தையோ, சந்திரனையோ பார்த்தோ, இணைந்தோ இருப்பின், நீதி தாண்டாத குண அமைப்பு இருக்கும்.

வியாழன் 11

குரு போன்ற சுப கிரகங்கள் நான்கு கேந்திரங்களில் தனித்தனியாக இருப்பின் அந்த ஜாதகர் ராஜயோகத்தை அடைவர். குரு விருச்சிக லக்னகாரகர்களுக்கு 3ம் இட நீசகுருவும் சரி, 9ம் இடம் உச்ச குருவும் சரி திருமண வாழ்க்கையில் குறைபாடுகள்தான் அதிகம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 39

நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன. அந்த மதங்களின் கொள்கைகளும் போதனைகளும் கோட்டுபாடுகளும் அற நெறிகளும் அவைகளைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அவர்களின் வாழ்க்கையே அந்த மதங்களின் ஆதாரமாகவும் அதிகாரமாகவும் ஆற்றலாகவும் உள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 38

ஒவ்வொரு மதத்திலும் உள்ள எத்தனை எத்தனையோ விந்தையான கருத்துக்களைக் கேட்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. சிறிதுகாலத்திற்கு முன்பு கூட, கிறிஸ்தவ மதம் மட்டுமே உலகம்தழுவிய மதம் என்று என் சிறந்த நண்பரான டாக்டர் பரோஸ் உரிமை பாராட்டியதை நீங்கள் கேட்டிருக்கலாம் இந்த விஷயத்தைப்பற்றிச் சிறிது சிந்திக்க விரும்புகிறேன். வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் அதற்கான காரணங்களை இப்போது கூறுகிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 37

அவர்களது மதமான கிறிஸ்தவம் பல விஷயங்களில் நல்லதாகவும் பெருமை மிக்கதாகவும் இருந்தாலும் அதனை அவர்கள் முழுமையாக உணரவில்லை; உணர்ந்தபோதோ அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை எனவே மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 36

படைகளோ அரசாங்கமோ சட்டக்கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும் ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது. ஆன்மீகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின் தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும் எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும் புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 36

ஆனால் அங்குள்ள மகத்தான சிந்தனையாளர்களிடம் வேறு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வில் எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கண்டு விட்டார்கள். அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும்.