சுந்தர யோக சிகிச்சை முறை 123

சதைப் பெட்டி பெருங்குடலுக்கு வந்தபின் தான் இவை அபாயநிலை கொண்ட மலமாக மாறுகின்றன. வயிற்றுக் குழியில் பல கருவிகளுடன் இக்குடலும் அமைந்துள்ளது. இதற்குத் துணையாய் இரைப்பை, சிறுகுடல், ஸ்ப்ன்ளீன், லிவர் ( பித்த கோசம் ) சிறுநீர்ப்பை முதலியவைகளுள்ளன. இந்த வயிற்றுக்குழிக்கு எலும்புப்பாதுகாப்பு அதிகமில்லை. பின்னால் முதுகெலும்பும், கீழே இடுப்பு எலும்புத் தட்டைகளுமே ஆதாரம். இதற்கு முக்கியமான பாதுகாப்பு சதைச் சுவர்களே மேலே டயாப்ரம், இலியகஸ் ( LLIACUAS ) அப்ளீகஸ் ( OBLIQUES  ட்ரான்ஸ் வர்சஸ்…

சுந்தர யோக சிகிச்சை முறை 122

மனிதனும் ஒரு பெரிய இயந்திரமே இவன் வாயில் ஹல்வா, தோசை, வடை எல்லாம் கொட்டப்படுகின்றன. ஆனால் வெளியே வரும் பொருள் வயல்காட்டுக்குத்தான் உபயோகம். பல எழுத்துக்களை கொண்ட வாசனைப் பொருள்களெல்லாம் ஓர் எழுத்துக் கொண்ட சாமானாக ஒதுக்கப்படுமுன் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், முதலியவைகளைக் கடந்தே வெளிவருகின்றன. இதற்குள் சுமார் 30 அடி தூரம் இச்சாமான்கள் கடந்து செல்கின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 121

வயிற்றுப் பெட்டி வாய் இயந்திரம் மலச்சிக்கல் பெருங்குடல் நோய், பெருங்குடல் வயிற்றில் ( ABDOMEN ) அமைந்துள்ளது இது தனிப்பட்டுதுமல்ல, துண்டாக நிற்பதுமல்ல, வாயிலிருந்து மலப்போக்குத் துவாரம் வரையில் ஒரே சதைக் குழாயாக இருக்கிறது. இதன் மெண்டரி கெனால் ( ALIMENTARY CANAL ) என பெயர் பெற்றிருக்கிறது. திருகையின் வாயில் அரிசியைக் கொட்டினால் கீழே மாவாக விழும்

சுந்தர யோக சிகிச்சை முறை 120

உடல் அமைப்பையும் இயற்கை தர்மத்தையும் தழுவி நின்றால்தான் நீண்ட பலன் கிட்டும். காரணங்கள் இவ்வளவையும் உள்ளடக்கியதே யோக சிகிச்சை இதை அறியமுன் பல விஷயங்களை ஆராய வேண்டும் குடலின் அமைப்பு, உழைப்பு, மலச்சிக்கலின் காரணம் எல்லாம் கவனித்தால் தான் யோக சிகிச்சையின் அவசியமும், பெருமையும் விளங்கும்

சுந்தர யோக சிகிச்சை முறை 119

தற்கால சிகிச்சைகள் ஆபத்தில் அற்பபலனைக் கொடுக்கலாம். ஆனால் தடுக்கவும், குணப்படுத்தவும் உபயோக மற்றவை, சிகிச்சையால் சீகம் காலியாக வேண்டும். ஆனால் இதன் பிரயோகத்தால் பலம் இழக்கக் கூடாது. ஏழைக்கும் பணக்காரனுக்கும் எளிதில் கிட்ட வேண்டும். தன் முயற்சியில் பலன் கிடைப்பதே நலம். பிறரை எதிர் பார்த்து நின்றால். வியாதியும் நின்ற இடத்தில் குடியாகிவிடும்.

திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில்

திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தரும் கருடனை தரிசிக்கலாம். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும்.  

உபதேசத் திருத்தலங்கள் 2

ஆலங்குடி: சுந்தரர் இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். சிதம்பரம்: பைரவரின் பிரம்ம தத்துவத்தை உபதேசித்த தலம். திருப்பனந்தாள்: அம்பாள், சுவாமியிடம் ஞானோபதேசம் பெற்றது. திருக்கடவூர்: பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது. மயிலாடுதுறை: குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்ற ஊர். திருவானைக்கா: அம்பிகை ஞானோபதேசம் பெற்ற திருத்தலம்.

உபதேசத் திருத்தலங்கள்! 1

சிவபெருமானின் உபதேசம் நிகழ்ந்த திருத்தலங்களைத் தரிசிக்க அறியாமை நீங்கும், கல்வி-கலைஞானம் ஸித்திக்கும் சிவத்தலங்கள் உத்திரகோசமங்கை: உமையம்மைக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் . ஓமாம்புலியூர்: இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, உமாதேவிக்கு, பிரணவப் பொருளை உபதேசித்த தலம் . இன்னம்பர்: அகத்தியர், இறைவனிடம் இலக்கண உபதேசம் பெற்ற தலம்.

ஓளவையார் பாடல் விளக்கம்

உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன் எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர். எனவே, கலயம் தான் பெரியது என்றால்…

ஓளவையார் முருகனுக்கு கூறிய பதில்களில் பெரியது எது?என்பதற்கு பதில்

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ நான்முகன் படைப்பு; நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்; கரிய மாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்; குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்; கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்; இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்; தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 35

அங்குள்ள பலரும், ஏன், பண்பட்டு உள்ளோரும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரீகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள் மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வுஎன்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 34

மனித வாழ்க்கையில், ஏன் நாடுகளின் வரலாற்றில் கூட ஒரு வகையான களைப்பு, வேதனை தரத்தக்க வகையில் அதிகமாக நிலவுகின்ற சில நேரங்கள் உண்டு அத்தகையதோர் அலை இப்போது மேலைநாடுகளில் மோதுவது போல் தோன்றுகிறது. அங்கும் மகத்தான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் இப்படிப் பணம் பதவி என்று அவற்றின் பின்னால் ஓடுவது வெறுமையிலும் வெறுமை என்று அவர்களும் கண்டுபிடித்து விட்டார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 33

யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 32

இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும். ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 31

மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்க்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம்.

அவர்களே வருவார்கள்

அவர்களே வருவார்கள் அவர்களே பிடிக்குமென்பார்கள்.. அவர்களே சலித்துவிடுவார்கள்; அவர்களே காணாமல் போய்விடுவார்கள்! அவர்கள் அவர்களாக இருக்கட்டும்; நீங்கள் அவர்களாக இருக்காதீர்கள்.. அவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே ஏராளம் பூமியில்!

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 43

எந்த துன்பமும் நமக்கு மட்டுமே என்ற நினைவு நமக்கு தேவையில்லாதது அது பணம் சம்பந்தப்பட்டதாகட்டும் தொழில் சம்பந்தப்பட்டதாகட்டும், குடும்பம், உறவு, நட்பு, கல்வி என எது சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் அதிலும் இன்பம் உண்டு என்பதை அறிந்து அதை கண்டு பின் அதை கொண்டு இன்பமாய் மகிழ்ச்சியாய், ஆனந்தமாய் இருக்கலாம் காரணம் பூமியின் மக்கட் தொகையை சிந்திக்கும் போது நாம் நம்முடைய துயரத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளவேண்டியது இல்லை கவிஞரின் வரி உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 42

நாம் சிறிது சிந்தித்து பார்த்தால் இந்த பூமியின் தற்போதய மக்கள் தொகை சற்றேற குறைய 750 கோடி இத்தனை மக்களும் நாம் வரையறத்துள்ள நியதிபடி பல்வேறு நாடுகளில், பல்வேறு சீதோஷண நிலைகளில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றனர் சிலர் அறிவாளிகள், பலர் அப்படியில்லை சிலர் பெரும் செல்வந்தர்கள், பலர் அப்படியில்லை சிலர் கறுத்தவர் சிலர் பழுப்பு நிறகண்களை உடையவர், சிலர் கறுத்தவர் , சிலர் சுருள், சுருளான தலை முடிஉடையவர், சிலர் இறை நம்பிக்கை உடையவர், பலர் அப்படியில்லை,…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 41

எந்த மனிதனின் தனிப்பட்ட கவலைக்கும் சுலபமான மாற்று விஷயம் சேவை செய்தலாகும். ஆம், உண்மையில் அடுத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் போது  நமது  உள்ளார்ந்த சக்தியும் கவலையினால் அரிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு பொலிவுடன், புது சக்தியுமாக உருப்பெறுகிறது. இந்த முறையை கைகொண்டால் நம் வாழ்க்கைப் பயணத்தில் உண்டாகும் எந்த துயரம் மிகுந்த காலத்தையும் வென்று சுகமாகவும், ஆனந்தமாகவும் இருக்கலாம். நான் துயரத்தின் வலியில் அழுது கொண்டிருந்தாலும் எனது இதயம் சோகத்தில் இருந்தாலும் எனது இதழ்கள் மற்றவர்களைப் பார்த்து புன்னகைக்கட்டும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 40

எந்த ஒரு கவலை அது யாருக்கு வந்தாலும் எதன் மூலம் வந்தாலும் அந்த கவலைக்கு காரணமான விஷயத்தில் இருந்து மனதை மடை மாற்றம் செய்வதுதான் கவலையில் இருந்து தப்பிக்க உள்ள ஒரே வழி அப்படி மடை மாற்றம் செய்வது நமது உள்ளார்ந்த சக்தியினை பெருக்குவதற்க்கு அனுகூலமான விஷயங்களில் மடைமாற்றம் செய்யப்பட வேண்டும் அது இல்லாமல் நமது உள்ளார்ந்த சக்தியினை குறைப்பதற்க்கு உண்டான விஷயங்களில் மடை மாற்றம் செய்தால் நாம் கவலை எனும் புதை சேற்றில் மூழ்கி மறைந்துவிடுவோம்.

வெற்றி

ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி என்ற நிலையில் இருந்து மாற்றி அந்த வெற்றியை பிறருக்கும் அல்லது பிறரும் மகிழத்தக்கதாக அமைத்துக் கொள்வது என்பது ஒரு கலை தான் வளரும் போதே தன்னோடு உள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்த கலை கை கூடுகிறது. தேனீயின் உழைப்பிற்கு நாம் மிகவும் முக்கியத்துவம் தருகிறோம் காரணம் அது மற்றவர்களுக்காக உழைப்பதால் தான்.

உழைப்பின் உன்னதம்

ஆசைப்படாமல் உழைக்க மனம் வராது ஆர்வம் இல்லாமல் செயலில் வெற்றி கிடைக்காது உலகில் மிக, மிக உன்னதமான உழைப்பே அதன் ஆற்றலே மனிதனை இப்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

உழைப்பினால்

உழைப்பினால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ளத்தில் நிறைவும் உண்டாகும் எவ்வளவு அற்ப பொருளிலும் ஏதோ ஒரு மனிதனின் உழைப்பு இருக்கும் அந்த உழைப்பை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு விதத்தில் பார்த்தால் உழைப்பு என்பதே எல்லா பொருட்களுக்கும் மதிப்பாகவும் விலையாகவும் இருக்கிறது.

நேர கெடு

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரக்கெடு அமைத்துக் கொள்வது மிக நல்ல பழக்கம் ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யும் போது நம் மனதுக்கு உண்டாகும் ஆனந்தமே தனிதான் எந்த வேலையை செய்வதற்கு முன்னும் அதைப்பற்றி தீர்மானிக்க வேண்டியது முக்கியம் அப்படி தீர்மானிக்கப் பட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தும் பழக வேண்டும். ஏனென்றால் கடமைகளை தள்ளிப் போடுவதால் ஏற்படும் தாமதங்கள் பல அபாயகரமான முடிவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி. விடும்

பெரிய சாதனை 5

இது போல தான் பணம், பதவி, பட்டம், பெருமை, என்ற ஆப்பிள்களில் நமது கவனம் சிதறுவதால் பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற இலக்கையே மறந்து பிறவிகளில் தோற்று பிறவி சுழலில் சிக்கிக் கொள்கிறோம். மன சஞ்சலம் எப்போதும் தோல்வியை கொடுக்கும் மிக முக்கியமாக ஆன்மீகத்தில் .

பெரிய சாதனை 4

இளவரசன் ஓடிகொண்டே வைரத்தால் ஆன ஆப்பிளை உருட்டி விட வீராங்கனையின் கவனம் முழுவதும் அதில் பதிந்ததால் வேகம் குறைந்தது ஒட்டத்தின் இலக்கையே மறந்துவிட்டாள் தோல்வியை தழுவினாள்

பெரிய சாதனை 3

அப்போது இளவரசன் முத்துக்களால் ஆன ஆப்பிள் ஒன்றை உருட்டிவிட்டு ஓடினான் அதை பார்த்ததும் வீராங்கனையின் ஓட்டம் குறைந்தது அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது

பெரிய சாதனை 2

ஒட்டபந்தயத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கும் ஒரு இளவரசனுக்கும் போட்டி நடந்தது. அதில் வீராங்கனை இளவரசனை முந்தி ஓடும் போது இளவரசன் தங்கத்தால் ஆன ஆப்பிளை தரையில் வீசினான் அதை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது பின் அதை எடுத்து வேகமாக ஓடினாள்

பெரிய சாதனை 1

ஒவ்வொருவரும் அவரவர்களுடைய தொழிலிடம் அல்லது குருவிடம், அல்லது கடவுளிடம் எந்த சஞ்சலமும் இல்லாமல் மனதை ஈடுபடுத்தினால் அது பெரிய சாதனைதான் மனிதனின் வெற்றிக்கு மிக தடையாய் இருப்பது சஞ்சலம் கொண்ட மனமே.

மரண பயம்.

உலக மோகங்களின் மீதான நம்முடைய பற்றும், மற்றும் நமது இச்சைகளும் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமாக மரணபயமும் இருக்கும் பற்றுகளும், இச்சைகளும் குறைவாக இருக்க அல்லது குறைக்க உண்டான வழியை கண்டு பிடித்து அதன் வழியே நாம் பயணித்தால் மரண பயத்தின் அளவை குறைக்கலாம் முயன்றால் இல்லாமல் கூட செய்துவிடலாம். பயத்தினால் மாறி எதுவும் நடந்துவிட போவது இல்லை வாழ்வு எப்படி யதார்த்த உண்மையோ அது போலவே மரணமும் யதார்த்த உண்மை இந்து…