சுந்தர யோக சிகிச்சை முறை 113
ஒழுங்கான உணவுப் பழக்கங்களை நம்பியே மலப்போக்கு வழியை அமைத்துள்ளது. டாக்டர்களெல்லாம், இந்தப் பேதி வஸ்துக்கள் கெடுதலென்று பகிரங்கமாகக் கூறுகிறார்கள். இவைகள் கருவிகளை உறுத்தி வதைப்படுத்துகின்றன. பேதி சிகிச்சை பெருங்குடலுக்குத் தேவை! அதற்க நேராக அளிக்கப்படாமல் வாய் வழியாக இவைகளைக் கொட்ட வேண்டியிருக்கிறது கேட்டீர்களா கதையை! குறத்தி பிள்ளை பெறவும் குறவன் காயம் தின்றானாம்! இவனுக்கு என்ன கிடைக்கும் வயிற்றெரிச்சல், வாயு, வாய்புண்! இவைகள் தாராளமாகக் கிட்டும்.