ஒரு முக்கியமான விஷயத்தை 1

மனிதர்களாகிய நாம் ஒரு முக்கியமான விஷயத்தை ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.  அது என்னவென்றால், நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டதற்க்கு எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அவ்வளவு நியாயம் அந்த விஷயத்தை புரிந்து கொள்ளாதவனுக்கும் உண்டு என்பதைத் தான் நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியது.

காதல் என்பது

பல சமயங்களில் காதல் என்பது தண்ணீர் இல்லாத குளத்தில் குளித்து வருபவருக்கு தலை துவட்ட துண்டு கொடுக்க காதலனிடம் சொல்லும் இதை புரிந்து கொள்ள நிச்சயம் காதலித்திருக்க வேண்டும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 15

ஒவ்வொருத்தருக்கும் நாம் இயற்கையின் படைப்பு இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்பதை திடமாகவும், தெளிவாகவும் நம்புவது அவசியம். அது மட்டுமல்ல குணங்களும், தீய குணங்களும் கலந்து இருப்பவனே மனிதன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த நிலையில் இருக்கும் மனிதன் அவனது வாழ்நாளில் பல நிறை, குறைகளை அனுபவிக்கிறான்.  அந்த அனுபவம் எதற்கென்றால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கே ஆகும். சோதனைகளும், வேதனைகளும் எல்லோருக்கும் அவரவர் நிலையில் கண்டிப்பாக உண்டு. அதில், பெறும் அனுபவத்தை பாடமாக கொண்டு…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.14

மனிதன், மனித வாழ்க்கை நிறை குறைகளுடன் கூடியதே என்பதை முதலில் நன்கு புரிந்து மனதில் இருத்திக் கொண்டாலே தானாகவே மன்னிக்கும் சுபாவம் கைகூடி வரும் மன்னிக்கும் சுபாவம் கைகூடினால் மனதில் வன்மம் வளராது வன்மம் இல்லாத மனம் கோபமும், அழிக்கும் ஆவேசமும் இல்லாத மனம் ஆகும் அந்த மனம் வெகு இயல்பாகவே ஆனந்தத்தின் பிடியில் சிக்கும். 

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.13

நம் வாழ்க்கையை பிறர் வாழ முடியாது அதுபோல தான் பிறர் செயல்களும் வாழ்க்கையும் நாம் ஆசைப்படும்படி, நாம் நினைக்கும்படி இருக்க வேண்டியது இல்லை இதை புரிந்து கொண்டு வாழ்ந்தாலே நமக்கு சோகமோ, கோபமோ உண்டாகாது இவை இரண்டும் இல்லாவிட்டாலே வாழ்வு இனிமை தானே வாழ்க்கையில் ஆனந்தம் தானே!

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.12

நம்மிடையே எத்தனையோ வேறுபாடுகள் உண்டு.  உதாரணமாக நிறம், மொழி, வயது, அறிவு, புத்திசாலிதனம் அனுபவம் இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொவரு விதத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று முக்கியமானதே என்பதுதான் அதை, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முயல வேண்டும்.   நம்மையும் சேர்த்துதான் எப்போது நாம் உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள பழகுகிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நாம் இறைவன் அருகில்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.11

ஒவ்வொருவரும்  தற்கால  சூழ்நிலையில் முக்கியமான இரண்டு வினாக்களை  தம்முள் வைக்க கடமைப்பட்டுள்ளோம். முதல் வினா எதுவாக ஆக வேண்டும்? இரண்டாவது வினா அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே உப வினாவாக இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.  அது எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இந்த வினாக்களை ஆராயும் நமக்கு தெரிந்து விடும் நம்முடைய இலட்சியம் என்ன நம்முடைய குறிக்கோள் என்னவென்று பின் என்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் மன உறுதியோடு முழு நம்பிக்கையோடு நீங்கள் அதை நோக்கி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.10

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு அவர் அவர் திறமையை கண்டு உணர்வது அவரவர் கையில் அதை கண்டு கொண்ட பின் நீங்கள் முழு மனதுடன் ஈடுபடுங்கள் நிச்சையமாய் ஈடுபடுவீர்கள் ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு தெரிந்ததை செய்கிறீர்கள் அப்படி செய்யும் போது உங்கள் வாழ்வு முழுமையாய் இருக்கிறது என்பதை அறிவீர்கள் இங்கு நீங்கள் எதனுடனும், எவருடனும் ஒப்பீடு செய்வதில்லை. அதனால் உங்களின் ஆனந்தம் உங்களிடமே சுழலும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.9

எப்போதும் நீங்கள் உங்களையும், உங்கள் சுற்றுப்புறத்தையும் உங்கள் சுற்றுபுறத்தில் உள்ளவர்களையும் கவனிக்க கற்றுக் கொள்ளுங்கள்.  ‍ஏனென்றால் இவை அனைத்தும் உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு பாடம் எடுப்பவர்கள் அப்படி உங்களுக்கு எடுக்கப்படும் பாடத்தை கவனமோடு படித்து தேர்ந்தீர்கள் என்றால் அது தான் அனுபவம் அந்த அனுபவமே உங்கள் சொத்து அதைக் கொண்டு நீங்கள் உங்கள் உறவுகளிடம் மற்றும் சமுதாயத்தில், மனநிறைவோடு வாழலாம்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.8

இறை நம்பிக்கையின் அடித்தளமே சுய நம்பிக்கை தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பது முழுக்க, முழுக்க என்னுடைய சிந்தனை தான் இதில் பிறறின் தலையீடு இருக்காது, இருக்கக் கூடாது அப்படி பிறறின் தலையீடு இருந்தால் அது கடவுள் நம்பிக்கையாய் இருக்காது அதாவது முழுமையான என்னுடைய கடவுள் நம்பிக்கையாக இருக்காது.  இதை, நன்கு யோசித்து புரிந்து கொள்ளுங்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.7

நாம் அசைக்கமுடியாத மன உறுதியை, பெற வேண்டுமானால் நாம் உண்மையிலேயே உறுதியான மனம் உடையவரென்றால் நாம் கடவுளின் குழந்தை என்பதை அறிந்து உணரவேண்டும் ஏனென்றால் இந்த உலக இயக்கங்களின் மூல காரண உயிர் தத்துவ அல்லது சக்தி தத்துவ புரிதல் இல்லாமல் ஒருவருக்கு அசைக்க முடியாத மன உறுதியோ அல்லது உறுதியான மனமோ அமைய வாய்ப்பில்லை நம்முடைய ஆழ் மனதில் நாம் கடவுளுடன் இணைந்தவர்கள், கடவுளால் நேசிக்கப்பட்டு அன்பு செலுத்தப்படுபவர்கள் என்ற புரிதல் மட்டும் இருந்து விட்டால்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.6

உங்களிடம் நீங்கள் போராடுங்கள் அதில் வெற்றி பெறுங்கள் அந்த வெற்றி நீடித்த வெற்றி நிலைத்த வெற்றி பிறருடன் போராடி கிடைக்கும் வெற்றி நிலைத்த வெற்றி அல்ல கால மாற்றத்தால் அந்த வெற்றி இடம் மாறிக் கொண்டே இருக்கும். அப்படி வெற்றி இடம் மாறும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் எல்லாவற்றையும் இழந்ததாக நினைத்து துன்பப்படுவீர்கள் அதனால் போராட்டம் என்பது உங்களிடம் இருக்கட்டும் அப்போது கிடைக்கும் வெற்றியும் எப்போதும் உங்களிடம் இருக்கும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.5

நம் கடந்த கால நிலைக்கும் நம் தற்கால நிலைக்கும் உள்ள வளர்ச்சியை அல்லது வீழ்ச்சியை ஒப்பிட்டு உங்களை சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள் அந்த சுய மதிப்பீடு உங்களை மேலும் சரி செய்ய பயன்படும்.  உங்களுக்குள்ள பிரச்சனைகளை முதலில் கண்டுணர பழகுங்கள் அந்த பிரச்சனைகள் முழுவதும் உங்களுடையது அதாவது நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது தான் என்று அறியுங்கள். அறிந்த பின் உங்கள் திறமைகளை மதிப்பீடு செய்யுங்கள் அந்த திறமையை கொண்டு உங்களின் உள்ளார்ந்த பிரச்சனைகளை சரி செய்து…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 4

அனுபவங்களை துணை கொண்டு எளிமையான திருப்தியான வாழ்க்கையை வாழுங்கள் அறவே அச்சத்தை விடுங்கள் இதன் கருத்து எதிர்கால பயத்தை விட்டொழிங்கள் என்பதே பிறருடன் உங்களை ஒப்பிடும் போது அது அழகோ, அறிவோ, பணமோ பதவியோ இது போன்ற எதாக இருந்தாலும் நீங்கள் தாழ்வு மனப்பான்மையையோ, அல்லது அகங்காரத்தையோ அடைவதை தடுக்க முடியாது. அது உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை கெடுக்கும் கோடாலி எனவே எதோடும் எவற்றோடும் உங்களை ஒப்பிடாதீர்கள் உங்கள் திறன் உங்களுடையது அதில் சந்தோஷம் கொள்ளுங்கள் திருப்தி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 3

எல்லோருக்குமே ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் பிரச்சனைகள், சிக்கல்கள் இருக்கும் அதை நினைத்துக்கொண்டே இருப்பதால் நாம் கவலையும் வருத்தமும், மனசோர்வும் அடைவதை தவிற வேறு பயன் எதுவும் இல்லையென்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சிக்கல்களை பிரச்சனைகளை தாண்டி பழகுங்கள், மன மாற்றம் செய்து பழகுங்கள் அது உங்களுக்கு உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் தரும் மனித மனம் அளவிறந்த ஆற்றலை உடையது என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள். உடலுக்குத்தான் வயது மனதிற்க்கு இல்லை நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில்…

நம்மில் பெரும்பாலானோர்,

நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …, இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன. நாங்கள் சொல்லட்டுமா? எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன். மின் விசிறி சொன்னது “Be cool,,, கூரை சொன்னது “Aim high “ ஜன்னல் சொன்னது “See the world “ கடிகாரம் சொன்னது “Every minute is precious “ கண்ணாடி சொன்னது “reflect before you act” காலண்டர் சொன்னது “be up to…

எனது போர் முறை 4

முதன்முதலில் தியாசஃபிகல் சொசைட்டியைப் பற்றி நான் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் . அவர்கள் நம் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. அதற்காக ஒவ்வோர் இந்துவும் அவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அன்னிபெசன்ட் அம்மையாருக்கு நன்றியுடையவனே. அவரைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அறிந்ததிலிருந்தே அவர் நமது தாய்நாட்டிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர், நம் நாட்டை உயர்த்துவதற்காகத் தமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து வருபவர் என்பதை என்னுள் ஆழமாக உணர்ந்து…

எனது போர் முறை 3

ஓரளவுக்குத் தவறான அபிப்பிராயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிவருகிறது. அன்னிய நாட்டில் இருந்தவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தேன் . ஆனால் இப்போது, என் தாய்நாட்டு மண்ணின்மீது நின்று கொண்டு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன் இதன் விளைவு என்ன என்பதைப்பற்றி நான் கவலைபடவில்லை. அந்தச் சொற்கள் உங்களிடம் எத்தகைய உணர்ச்சியை எழுப்பும் என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை; அது எனக்கு ஒரு பிரமாதமான விஷயமல்ல ; ஏனெனில் நான் ஒரு துறவி. ஒரு தடியோடும் கமண்டலத்தோடும்…

எனது போர் முறை 2

என்னிடமுள்ள எல்லா குறைபாடுகளுடன் , என்னிடம் சிறிது தைரியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து மேலை நாட்டிற்குத் தருவதற்கான செய்தி ஒன்று என்னிடம் இருந்தது. தைரியமாக அதை அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அளித்தேன். இன்றைய தலைப்பை எடுத்துக் கொள்ளுமுன் சில வார்த்தைகளைத் தைரியமாக உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னை நிலைகுலையச் செய்யவும், என் வளர்ச்சியைத் தடுக்கவும், முடியுமானால் என்னையே நசுக்கி எறிந்துவிடவும் சில சூழ்நிலைகள் என்னைச் சுற்றி உருவாகியது உண்டு. அத்தகைய முயற்சிகள் எப்போதும் தோல்வி அடைவதைப்போல் இவையும்…

எனது போர் முறை 1

9 பிப்ரவரி 1897 அன்று மாலை விக்டோரியா ஹாலில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. கூட்ட மிகுதியால் அன்று நம்மால் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எனவே சென்னை மக்கள் எனக்கு அளித்த அன்புமயமான வரவேற்புக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரவேற்புரையில் அழகிய சொற்கள் பல கூறப்பட்டன. மனம்திறந்து பாராட்டப்பட்ட அந்தக் கனிவான சொற்களுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்குமாறு எம்பெருமானைப் பிரார்த்திப்பதையும், நமது மதத்திற்காகவும் நமது தாய்நாட்டின் சேவைக்காகவும் என் வாழ்நாள் முழுவதம் பாடுபடுவதையும் தவிர…

மதத்தை எவ்வாறு கற்றுக் கொள்வது ?

நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்துத் தத்துவங்களை எல்லாம்அனுபவித்து அறிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றைஎன்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால், நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம் என்வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு முயற்சி செய்தேன்.ஆனால் அதிலே ஒன்றுமில்லை. என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள்.ஆனால்; அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 30

தாய் மாரக விதிகள் …. 4 – இல், 7 – க்குரியவர், பாவர் சேர்க்கை, 4 – க்குரியவர் நீச்ச அஸ்தமன மறைவு மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம். 4 – க்குரியவர் சுய சாரம் பெற்று வலுத்து, கருமாதிபதி சாரம் பெற்று கிரகம் 3 – லிருந்து தனது திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம். 4 – க்குரியவர் 3 – இல் அமர்ந்து, 6, 7 – க்குரியவர் சேர்க்கை…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 29

 4 – லில் 11 – க்குரியவர், 4, 5 – க்குரியவர், 9 – ல் நஞ்சை – புஞ்சை, நிலம், வாகனம் உண்டு. விவசாயத்தில் மேன்மையானவன். பாரம் பரியத்தை காப்பவன். தனக்கு என்று ஒரு பாதை அமைத்து வாழ்பவன். உடன்பிறப்புகளால் கவலையை அடைபவன்.  4 – ஆமிடத்தை 8, 10 – க்குரியவர் சேர்க்கை பெற்று 10 – க்குரியவர் பலம் பெற்று பார்த்தால், ரகசியமான வேலைகளை செய்பவன். பூமியோகமும், ஆடம்பரமான வீடும் உண்டு.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 28

 4 – லில் சூரியன், 4 – க்குரியவர் பலம் பெற்று சுக்கிரனின் தொடர்பை பெற்றால் நிலம், வீடு, வாகனம் போன்றவைகளின் மூலம் லாபம் தேடுவான். 30 வயதிற்கு மேல் நல்ல நிலையில் வாழும் தன்மை உண்டு.  3, 6, 8, 12 – இல் சந்திரனிருப்பதும் அல்லது 3, 6, 8, 12 – க்குரியவர் சந்திரனுக்கு 3, 6, 8, 12 லிருந்து, 5, 9 – க்குடையவர், தொடர்பை பெற்றால் இவர்களின் திசாபுத்திகாலங்களில்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 27

4 – ல் குரு, சனி சேர்க்கை பெற்று 6, 8 – க்குடையவரின் தொடர்பை பெற்றால், காது, வாய், கால்கள், மர்மஸ்தானங்கள் இவைகளில் பாதிப்புக்கள் காணும். மத்திமவயதிற்கு மேல் இவ்வகை குற்றங்கள் அதிகரிக்கும். 4 – லில் சூரியன், சனி, செவ்வாய், புதன், சேர்க்கை பெற்று 6, 8 – க்குரியவரின் தொடர்பு பெற்றால், வீடு சுகமற்றவன், இவன் சொத்துக்கள் அடமானத்தில் மூழ்கும். எந்த வீடும் விருத்தியாகாது. 4 – க்குரியவர், சந்திரன் 3, 6,…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 26

 4 – இல், சனி, புதன், செவ்வாய், இருந்து 4 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் இன பந்துக்கள் அற்றவன், பாவ காரியங்களில் நாட்டம் உள்ளவன். மனைவிக்கு துர்தேவதாபயம், பீதி , மன நோய் ஏற்படலாம். உடல் உறவை விரும்பாத மனைவியாவாள். 4 – க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – லிருப்பின் எதிர்பாராத சொத்துக்கள் சேரும். தாய் வழியால் லாபம் உண்டு. திசாபுத்தி காலங்களில் மேல்மட்ட ஆட்களின் உதவி கிடைத்து தொழில் ரீதியான தொடர்பு பெற்று…

சுந்தர யோக சிகிச்சை முறை 94

1 ஆஸ்த்மா 2. டயாபெடிஸ் 3. இருதய நோய்கள் 4 இரத்த இறுக்க நோய்கள் 5. டி.பி. 6. குடல் புண் 7. டான்சிலிடிஸ் ( TONSLITITIS) 8. அடினாய்ட்ஸ் ( ADENOIDS ) 9. ஜீரணக்கேடு ( DIGESTIVE DISORDER) 10. பராலிசிஸ் (PARALYSIS) 11 போலியோ ( POLIO ) 12. குஷ்டம் (LEPROSY) 13. கடுமையான மேகப்படை அல்லது வி.டி ( ADVANCED VENEREAL DISEASES ) 14. லிவர், கிட்னி நோய்கள்…

சுந்தர யோக சிகிச்சை முறை 93

ஹோமியோபதியும், ஆயுர்வேதமும் இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் சிலவற்றை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றன. ஆனால், இம்முறைகளைக் கையாளும் வைத்தியர்களால், குணப்படுத்த முடிவதில்லை என்று நோயாளிகளின் அனுபவத்திலிருந்து கூறலாம். வைத்திய முறை குணப்படுத்த முடியாது என்று கூறும், மருந்து கண்டு பிடிக்காத சில நோய்களின் பட்டியல்—

சுந்தர யோக சிகிச்சை முறை 92

எவ்வளவு சீக்கிரம் நோய் தாக்கியவுடன் நோயாளி யோக சிகிச்சைக்குத் திரும்புகிறாரோ, அவ்வளவு சீக்கிரமாகக் குணமடைவார்.  தற்காலத்தில் தாண்டவமாடும் மேல் நாட்டு அல்லோபதி வைத்திய நிபுணர்கள், கீழ்க் காணும் நோய்களை ஒழிக்க மருந்து, சிகிச்சை  கிடையாதென்று முறையிட்டு  விட்டனர்.  இவைகளில் சிலவற்றுக்குத் தற்போதைய பயன், சிகிச்சை மட்டும் விதிக்கின்றார்கள்.  இன்னும் சிலர் உடல், இயற்கை, உணவு ஒழுக்கத்தால் குணமடையலாம் என்று கூறுகிறார்கள்.   இப்படிப்பட்ட நோய்களின் பட்டியல் பெருகிக் கொண்டே போகின்றது.  நூதனமான புது நோய்கள் கிளம்பி சேர்க்கப்…

சுந்தர யோக சிகிச்சை முறை 91

இனி நோயாளிகள் இச் சிகிச்சையை மேற்கொள்ளும் முன், கவனிக்க வேண்டிய பொதுத் திட்டங்களைக் கூறுவோம்.  ஊசி, உள் மருந்து, வெளி மருந்து, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் இவை எல்லாவற்றையும் தீர்த்த பிறகு தான் யோக சிகிச்சைக்குத் திரும்புகிறார்கள்.  இதற்குள் உடலின் இயற்கைச் சக்தி எல்லாம் மிகக்குன்றி விடுகின்றன.   உட்செலுத்திய மருந்துகள், பல கோளாறுகளை விளைவித்து விடுகின்றன.  மற்ற வைத்திய பரீட்சையில் முக்கியமான காலம், வருடக் கணக்கில் வீணாகி விடுகிறது.   படுத்தபடுக்கையாக நோயாளி ஆகிவிட்டால், யோக…

சுந்தர யோக சிகிச்சை முறை 90

‘யோக சிகிச்சை’  என்ற பெயர் இந்த நூலில் கண்ட இம்முறைக்கு இடுவானேன்?  பிணியை ஒழிப்பதற்கு, ஈசன் அளித்துள்ள யோக சம்பந்தமான எல்லா அம்சங்களையும், என் நூதன அனுபவ ஆராய்ச்சி சாஸ்திர வழியில் பிணைக்கப்பட்டிருப்பதால் ‘ சுந்தர யோக சிகிச்சை ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.  நான் ஒருவனே கையாளக் கூடியது என்று பொருளல்ல, யாவரும் இதில் தேர்ச்சி பெற்று மானிட உலகிற்குப் பணியாற்றலாம்.  தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு, தான் அடைந்த சுகத்தைப் பிறருக்குப் பரவச் செய்யலாம்.  இந்த…

இயல்பு என்பது

இயல்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எதற்கு வேண்டியும் மாறாது எப்போதும் மாறாதது எதுவோ அதுவே இயல்பு.  விதிகள் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்களுக்கு தகுந்தபடி அதிகாரத்திற்கு தகுந்தபடி, காரியங்களுக்கு தகுந்தபடி, காலங்களுக்கு தகுந்தபடி மாறிக்கொண்டே இருப்பது தான் விதி. இயல்பு மாறாது, விதி மாறும்.

எரிந்து மறைதலும்,

எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு.  இருளை விலக்கத்தான் முடியும் அழிக்க முடியாது இது ஒளி கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மை, மரணமும் அப்படிதான் விலக்கவோ, மறுக்கவோ முடியாது.

பெண் மனதை

பெண் மனதை ஆண் கணிக்க முடியாதா நிச்சயம் முடியாது உண்மையை சொன்னால் ஆண்களுக்கு அதில் அக்கறையோ, கவனமோ இல்லை நதியின் ஆழத்தை படகு அறியாது நீரின் போக்கில் செல்வதே அதற்கு சுலபம் அதன் பயனும் அதுதான். பெண் மிக புத்திசாலி எப்போதும் அவள் ஆண்களிடம் சிக்குவதே இல்லை சிக்கியது போலிருப்பாள் அதுதான் அவளுக்கு வசதியும் கூட.

அற்பம் என

அற்பம் என எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் புல்லும் வைரமும் ஒன்றுதான். இரண்டுக்கும் ஒரே மூலக்கூறு கார்பன் தான். இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இதை புரிந்துகொண்டால்  நாம் பக்குவப்பட்டு விடலாம் பக்குவப்பட்டுவிட்டால் துன்பம் நம்மை அணுகுவதில் இருந்து தப்பிவிடலாம்  

எல்லா கேள்விகளுக்கும்

எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் தேவையில்லை எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தேவையில்லை எல்லா விமர்சனங்களுக்கும் வியாக்கியானம் தேவையில்லை அவற்றை விளக்க முயற்சிக்கையில் நாம் தர்க்கவாதியென முத்திரை குத்தப்படுவோம் பதில் கூறுகையில் நாம் எதையும் ஏற்றுக்கொள்ளாதவராகி விடுவோம் நாம் கேட்கும் கேள்விகளுக்கும் நம்மை பிறர் கேட்கும் கேள்விகளுக்கும் என்றும் வித்தியாசம் உண்டு ! வினா என்றுமே ஒன்று   விடை என்றுமே வேறு   கேட்பவரை பொறுத்து அது தன்னை உருமாற்றிக்கொள்ளும் ! சொல்லியும் விளக்கியும் அறிந்து கொள்ளமுடியாத நிறைய உணர்வுகள்…

இயற்கைதானே

காலம் எப்போதும்சொல்லிக்கொண்டிருக்கும் பாடங்களில் ஒன்று வலிமையைவிட நுட்பமே பலமும் பயனும் நிறைந்தது என்பது. ஒன்றை நீங்கள் அறிய நினைக்கும் போது உங்களின் அறியாமையை அடுத்தவர்கள் அறிந்த கொள்வது இயற்கைதானே.

ஆசை, பகை

ஆசை, பகை இரண்டும் காட்டினில் விளையும் நெருப்பைப் போல பரவிக்கொண்டே ஆற்றலை பெருக்கிக்கொண்டே இருக்கும் முடிவு என்னவென்று பார்த்தால் அவை அழித்துக்கொண்டே இருக்கும் இங்கு வரும் வினா எல்லாவிதத்திலும் அழித்தல் தவறா என்பதுதான் அதற்கு பதில் அழித்து பழகியது ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் அழிக்கும் எனென்னறால் அழிக்க வேண்டியது எதை என்பதை பற்றி சிந்திக்கும் அறிவு போய்விடும் அங்கு அகங்காரமும், ஆணவமும் குடிகொள்ளும் பிறகென்ன எல்லாம் அழியும். ஒரு விதத்தில் பார்த்தால் பகை வளர்க்காத அரசும் பலம்…

இயற்கையை அழிப்பவரை

இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.  இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் மன்னன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்று. எட்டுவழி சாலையோ , 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ எவையாயினும் இதுவே விதி. விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் பூமியில் நிலைத்து  வாழ முடியாது.  காரணம் இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.

அரசில் இருப்பவர்கள்

அரசில் இருப்பவர்கள் எதை செய்தாலும் அது அவர்களின் சொந்த நலனுக்காக தான் இருக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் அன்றைய அரசர்கள் முதற்கொண்டு இன்றைய அரசாங்கம் வரை அப்படிதான் நடந்த கொள்கிறது.

நாளை என்பதே

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை நாளும் நமக்கு அது புரிவதில்லை நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான் நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வ லித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….

ரோம மகரிஷி ஜீவசமாதி அருள்மிகு மயிலாண்டவர் திருக்கோவில்.

திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலில் அங்கே  சென்று, அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும். அதனுள்ளே  2 அல்லது 3 வீடுகள் தாண்டி சென்றால், ரோம மகரிஷி ஜீவசமாதி இருக்கும்.

குழந்தை வடிவில் நந்தி

சிவன் கோவில்களில் இறைவனின் சன்னதிக்கு எதிராக நந்தியம் பெருமான் வாகனமாக வீற்றிருப்பார். அனைத்து சிவாலயங்களிலும் இது போன்ற அமைப்பில் தான் நந்தியை தரிசனம் செய்ய முடியும். ஆனால் திருச்சியில் உள்ள உண்ணக்கொண்டான் மலைமீது உள்ள உஜ்ஜீவநாதர் கோவிலில் குழந்தை வடிவத்தில் நந்தியம் பெருமானை தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் ஆதிபராசக்தியே ஜோஷ்டாதேவியாக அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் கையில் நந்திகேஸ்வரர், குழந்தை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.  

செவ்வாய் 3

செவ்வாய் துலாத்தில் இருக்கப்பிறந்தவர்கள் லாகிரிவஸ்த்துக்களில் நாட்டம் செலுத்துவர். செவ்வாய் மீனத்தில் உள்ளவர்கள் நல்லபதவி வகிப்பார்கள், வெளிநாட்டு வாஸம் கூடும். செவ்வாய் கடகத்தில் உள்ளவர்கள் கடல் கடந்து செல்வர், சொந்த வீடு இராது. செவ்வாய் 2, 4, 7, 8, 12 இந்த பாவங்களில் இருந்தால் களத்ர தோஷம் ஏற்படும்.

செவ்வாய் 2

செவ்வாய், சூரியன் 7,8 ல் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே அந்த பெண் விதவையாகிவிடுவாள். செவ்வாயுடன், சூரியன் சங்கமித்தால் உடன் பிறப்பிற்கு தீங்கிழைப்பார். செவ்வாய் சிம்மத்தில் இருக்கப் பிறந்தவர்களுக்கு உடல் உறுதி தைரியம் இருக்கும்.

செவ்வாய் 1

ஆட்சி மன்றத்தில் உள்ள அமைச்சர்களைப் போன்றவர்களே ஜாதகத்தில்உள்ள கிரகங்கள். செவ்வாய் லக்கினத்தில் நின்றிடில் கோபகுணம், விரோதம் கொண்ட இதயத்தினராய் இருப்பர். செவ்வாய் ஆண்கிரகம், சகோதர காரகன், உத்தியோக காரகன், பூமி காரகன், கர்மக்காரகன், மூளைக்காரகன் ஆகிறார். செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகம் ஆட்சிவீடுகள், மேஷம் மூலத்திரிகோண வீடு, மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்ச வீடாகும் கொண்டுள்ளார். செவ்வாய் மகரத்தில் இருக்க பிறந்த ஜாதகர்களுக்கு புத்திர பாக்கியம் செல்வம், அரசு அந்தஸ்து ஏற்படும்.  வெற்றி, புகழ் ஏற்படும்.

சந்திரன்20

சந்திரனுக்கு 8லும், லக்னத்திற்கு 8லும் 3 கிரகங்கள் இருந்து அவை பாப கிரகங்களாக இருப்பின் குழந்தைக்கு ஆயுள் குறைவு. சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை எந்த லக்னமானாலும் முறைகேடான வாழ்க்கை தருகிறது.  சிற்றின்ப பிரியராக செய்கிறது.  முரணான திருமண வாழ்க்கை ஏற்படுத்துகிறது.

உன்னை அழித்துக் கொண்டாவது பிறருக்கு நன்மை செய்

மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகிற அந்த நாளும் வருமா ? இந்த உலகம் வெறும் குழந்தை விளையாட்டு அல்ல. மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தில் இரத்தத்தைச் சிந்தி, பாதைஅமைப்பவர்கள் தாம் பெரியோர்கள் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம்ஒன்றை அமைக்கிறார். அந்தப் பாலத்தின் உதவியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்து விடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும். அப்படியே என்றைக்கும் இருக்கட்டும்.

நீ கடவுளாகவே ஆக ஒரு வழி

பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும்நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால். அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்துவிட விரும்புகிறாயா ? அப்படி நீ செய்தால் கடவுளாகவே  ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.

விக்கிரகத்தில் மட்டுமே கடவுள் இல்லை

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானை காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.

அஞ்சாமல் முன்னேறுக

மோகமாகிய முதலையின் வாயில், மக்கள்எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் அந்தோ  இதயத்தைப் பிளக்கக் கூடியஅவர்களின் சோகக் குரலை கேளுங்கள். முன்னேறிச் செல்லுங்கள்*கட்டுண்டுகிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும், எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்டகிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும், ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள் அஞ்சாதே  அஞ்சாதே * என்று வேதாந்த முரசு முழங்கிக்கொண்டிருப்பதைக் கேளுங்கள்.

மனித உடலைப்பற்றி அறிவோம் 4

16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72 18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2 19: மிகப்பெரிய உறுப்பு: தோல் 20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்

மனித உடலைப்பற்றி அறிவோம் 3

11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7 12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14 14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22 15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25

மனித உடலைப்பற்றி அறிவோம் 2

6: இதய அறை எண்: 4 7: மிகப்பெரிய தமனி: பெருநாடி 8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg 9: இரத்தம் Ph: 7.4 10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33

மனித உடலைப்பற்றி அறிவோம் 1

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206 2: தசைகளின் எண்ணிக்கை: 639 3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2 4: பால் பற்களின் எண்ணிக்கை: 20 5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்.25

3–,8இல் புதன் இருந்து அது உபய ராசியாகி அந்த ராசி நாதன் உபய ராசியிலிருந்தால் தன் தாயின் வளர்ப்பு கிட்டாது. அன்னியத்தாய் இவளை வளர்ப்பாள். இவன் வாழ்க்கை உயர்வாகத்தான் இருக்கும். பாசமும், நேசமும் நிறைந்தவன், பிறக்கும்போது தாய்ப்பாலை அருந்த முடியாதவன். 2–4 – க்குரியவர், 6 – க்குரியவர் சேர்ந்து 4 – க்கு 12 – இல், இருந்து 4 – க்கு, 7, 8 – க்குரியவர் சேர்ந்து 4 – க்கு 9…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 24

3 – ல் பாவர் பலம் பெற்று 3 – க்குரியவர் பாதகாதிபதி சேர்க்கை பெற்று 3 – மிடத்தை பார்த்தால் உடன்பிறப்பு, பிறந்து இறக்கும், 1 ஆண் சகோதரம் தங்கும். 3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று மறைந்து 3 – க்கு, 6 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று, செவ்வாய்க்கு 12 – க்குரிய சாரம் பெற்று பலம்இழந்து பாவரால் பார்க்கப்பட்டால், 3 – க்குரியவர் திசையில் அல்லது அவர் பெற்ற சாரநாதன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 89 

பிணிகளும், சிகிச்சையும். சிகிச்சையின் பிரிவுகள். யோக முறைகளால், பிணியைப் போக்கும் வழிக்கு யோக சிகிச்சை  என்று பெயர் பலரும் இதைக்கையாளலாம் இவர்கள் உபயோகிப்பது பெரும்பாலும் யோகாசனம் ஒன்றே.  பிராணயாமத்தையும் இன்னும் சிலர் சேர்த்துக் கொள்கிறார்கள். உணவையும், ஒழுக்கத்தையும் அநேகமாய் மறந்து விடுகின்றனர்.  யோகப் பயிற்சிக்கு அடுத்தபடியாய் சிகிச்சையின் முக்கிய அம்சமாக உணவு ஒழுக்கத்தையும் பிணைத்து அளிப்பதில்லை.  பின் விளக்கப்படும் மற்ற தொகுதிகளை அறவே மறுக்கின்றனர்.

சுந்தர யோக சிகிச்சை முறை 88

தொழிலாளர்கள், ரயில் உத்தியோகஸ்தர், தபாலாபீஸ், தந்தி ஆபீஸ் காரியஸ்தர்கள், இயந்திர சாலை வேலையாட்கள், மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டு, நோய் தடுத்து ஆரோக்கியமாய் இருக்க திட்டம் அமைத்து வாழலாம்

சுந்தர யோக சிகிச்சை முறை 87

மாணவர்களுக்கு, மேல் படிப்பாளர்களுக்கு எழுதல் 4 மணி அதிகாலை நித்தியக்கடன் 4.30 மணி வரை படித்தல் 6 மணி வரை ஆசனப் பிராணயாமம்   7 மணி வரை ஸ்னானம் துதிக்குப் பின் பால் 7.30 மணிக்குபடித்தல், உணவு காலம் வரை பகல் 9 லிருந்து 10 மணிக்குள் போஜனம் சத்துள்ள சிற்றுண்டி 2 லிருந்து 3 மணிக்குள் ஆட்டம், பொழுது போக்கு 5 லிருந்து அல்லது 6 லிருந்து 6.30 வரை படித்தல், இரவு உணவு இரவில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 86

கடவுளே இல்லை என்போருக்கும் ஒரு வழி சொல்லுகிறேன். துதிக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி இருதய ஸ்தானத்தில் நிறுத்தி தானே சத்திய, நித்திய ஆனந்தம் என்று எண்ணி லயிக்கட்டும். நோய் தடுத்து ஆரோக்கிய சுகத்தில் வாழ ஒரு உதாரண திட்டம் கொடுக்கிறேன். காலை எழுதல் 4 அல்லது 4-30 மணி மலஜலப் போக்கு, நித்தியக் கடன்  அரை மணி நேரம். ஆசனம், பிராணயாமம் 5லிருந்து 6 மணி வரை ஸ்னானம், துதி 6.30லிருந்து 7.00…

உரையாடலின் ஒரு பகுதி 29

ஆற்றலை அறிவதும் அறிந்த ஆற்றலை பயன்படுத்தி வெல்லுதற்க்கு முடியாதவனாக மாறுவதும் மனிதனின் ஆசை.  உண்மையில் இயற்கை எப்போதும் மனிதனுக்கு அதை அளிப்பதில்லை. மனிதன் வெல்லுவதற்க்கு முடியாதவனாக மாறுவதற்க்கு இயற்கை அனுமதிப்பது இல்லை. அணு சக்தியை அறிந்து அணுகுண்டுகள்  மூலம் பிற நாடுகளுக்கு தான் வெல்லமுடியாதவன் எனும் அறிவிப்பை செய்பவனின் வாழ்வும், நீர் மேல் குமிழி இக்காயம் அது நில்லாது போய்விடும் நீயறிமாயம். என்பதுதான்

மனிதனின் குணம்

மனிதனின் குணம் எப்போதுமே இப்படிதான் இருக்கும் அதாவது அழிவுகளின் நியாயத்தை சிந்தித்துக்கொண்டு அழித்தலின் அவசியத்தை கற்பிப்பான். பயனளிக்கும் இடத்தை நோக்கி பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் வளர்ச்சி நியதி விதி  எல்லாம்.

உரையாடலின் ஒரு பகுதி 28

ஒரு பொருளினால் நமக்கு ஏற்படும் பயன் அந்த பொருளுக்கு இல்லை என்பதை எந்த மனிதன் அறிகிறானோ அல்லது அந்த வித கல்வியை கற்கிறானோ அவன் அறத்தின் வழியாக இயல்பாகவே இயங்குவான் அதைத்தான் பட்டினத்தார் இப்படி சொல்கிறார் போலும், பொன்னால் பயன் நமக்கு அநேகமுண்டு,  நம்மாள் பயன் பொன்னுக்கு ஏது உண்டு என்று

ஆழ்மனம் வரை அச்சம்

ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக ஆழ்மனம் வரை அச்சம் ஊடுருயிருந்தது என்றால் அப்படி ஊடுருவியிருந்த மக்கள் எதையும் எவரையும் நம்ப மாட்டார்கள்.

இயற்கை தனது இருப்பை காட்ட

பஞ்ச காலத்தில் அதாவது இயற்கை தனது இருப்பை காட்ட நினைத்து மழை பெய்து கெடுத்தோ, அல்லாது பெய்யாமல் கெடுத்தோ உணவுக்கு மனிதன் தவிக்கின்ற நிலையில் பூமியின் அடியில் இருக்கும் கிழங்குகள் மனிதனை கைவிடுவதில்லை மலைகளில் இயற்கையோடும், இயல்போடும் வாழும் மக்களுக்கு இது நன்கு தெரியும். சித்திரவள்ளி கிழங்கு, காட்டு வள்ளிகிழங்கு, நூரை, சவலன், நெருடுவன் தீச்சி, நாச்சி, சம்பை, நூழி இவை ஏழும் பூமியின் ‍வெவ்வேறு ஆழத்தில் விளைந்து இருக்கும் மண் அறிந்த மனிதன் இதை பஞ்ச…

உரையாடலின் ஒரு பகுதி 27

ஓசைகளில் எத்தனையோ வகைகள் உண்டு.  அவற்றில் வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை உள்ளே சுழன்று தன் நிலையையே மறக்க வைக்கும் ஓசை உள்ளே நுழைந்து அடி ஆழம் வரை சென்று ஆழ் மனதில் இருக்கின்ற அச்ச உணர்வை பெருக்க செய்யும் ஓசை என பல வகைகள் உண்டு.

உரையாடலின் ஒரு பகுதி 26

மனித குலத்தின் முதல் முயற்சி இயற்கையின் நுட்பத்தை அறிய பயிரிடுதலின் நுட்பம் தான் அது தலைமுறை, தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுக்கும், விண்ணுக்கும் தாவரத்திற்க்கும், பயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதே ஆகும் அது தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது அது மனிதன் வரை வந்துவிட்டது. தற்போதய சூழ்நிலையில் மனிதனும் பயிரிட முடிகிற ஒரு பொருள் எனும் அளவிற்க்கு அவன் வந்திருக்கிறான். இதனால் அவன் இயற்கையை மறுக்கிறான் அது மட்டுமல்லாது இயற்கையை வெற்றி கொண்டதாகவும்…

உரையாடலின் ஒரு பகுதி 25

பொறுப்பு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. கடமை என்பது அறிவு சம்பந்தப்பட்டது. இயற்கையின் உள் நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே புலப்படும்.

உரையாடலின் ஒரு பகுதி 24

தியானத்தில் ஏதோ ஒரு வினாடியில் உங்களை காணும் நீங்கள் அதிர்ச்சி மேலோங்கி மூர்ச்சை அடைகிறீர்கள் அதன் பின் இரண்டு விஷயங்கள் மட்டுமே நடக்கும். 1. தியானத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் அல்லது உங்களை சுற்றியுள்ளவற்றிடம் இருந்து வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் இதில் எது நடக்கிறது என்பதை நீங்கள், நீங்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் உங்களை நீங்கள் காணும் அந்த வினாடி எத்தனை முகமூடிகளை அணிந்திருக்கிறீர்கள் என்பது தெரியும் போது ஒரு சிலர் அதிர்ச்சியும், ஒரு…

உரையாடலின் ஒரு பகுதி 23

உங்களையே நீங்கள் அறிய முற்படும் போது முதலில் குழப்பமும் அதை தொடர்ந்து பயமும் தான் ஏற்படும்.    உங்களை நீங்கள் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அது இல்லாததைக் கண்டு கலவரப்படுவீர்கள். நீங்கள் பெருமையாயும், உன்னதமாயும் சத்தியம் என்று ஊருக்கு, உறவுக்கு, நட்புக்கு சொல்லியதெல்லாம் உங்களிடம் சில சந்தர்ப்பங்களில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைவீர்கள் சில நபர்கள் தியானத்தில் மூர்ச்சையடைவது இதனால்தான். 

உரையாடலின் ஒரு பகுதி 22

இயற்கையை அதன் இயல்பை எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது. மனிதனால், மனிதன் வெற்றியடைந்ததாக சிலசமயங்கள் நினைத்து சந்தோஷப்படலாம், கர்வப்படலாம் ஆனால் மனிதன் வரையறைக்குட் பட்ட சக்தி கொண்டவன் இயற்கையோ வரம்பில்லாத சக்தி கொண்டது சின்ன உதாரணம் மனிதனுக்கு உண்டாகும் இறப்பு.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 23

3 – க்குரியவர் 2 – இல்  அமர்ந்து, 4, 7 – க்குரியவர் 3 – இல் அமர்ந்து சந்திரனுக்கு கேந்திரம் பெற்றால் இரண்டு உடன்பிறப்பு உண்டு. 2 ஆண், 2 பெண். 3 – க்குரியவர் 9 – க்குரியவர் சாரம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால்  6 உடன்பிறப்பு உண்டு. 4 ஆண் 2 பெண் 3 – இல் கேது அமர்ந்து இவரை லக்கினாதிபதி அல்லது குரு பர்த்தால், அன்னிய சகாயத்தால் முன்னேற்றம்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 22

3 – க்குரியவர் 8 – ல் அமர, 7 – இல் செவ்வாய் இருக்க, 3 – இல் பாவர் இருப்பின் 6 உடன்பிறப்பு உண்டு. உடன் பிறப்பால் நன்மை இல்லை. செவ்வாய் நீச்சம் பெற, 3 – க்குரியவர் பலம் பெற 3 – க்கு 5 – க்குரியவர் பார்க்க உடன் பிறப்பில் ஒருவர் பெரும் வசதி படைத்தவராக இருப்பார். 3 – க்குடையவர் 3 – இல் பலம் பெற்று, 5…

உடலில் ரத்தம் பயணம் செய்யும் துாரம்

உடலில் ரத்தம்  ஒரு சுழற்சியில் பயணம் செய்யும் துாரம், ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ., ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம். எப்படிப்பட்ட அதிசயமான தொழில் நுட்பம் இயற்கை எப்படியெல்லாம் சிந்தித்து நம்மை வடிவமைத்திரிக்கிறது

பிளாஸ்மா’ என்றால்

பிளாஸ்மா’ என்றால் ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் இருக்கும். சூரிய ஒளியில் இருந்து நமக்கு இது முழுமையாகக் கிடைக்கிறது. ரத்த அழுத்தம் என்றால்  உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், ‘பம்ப்’…

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை  ரத்த வெள்ளை அணுக்களை, ‘படை வீரர்கள்’ என்று அழைக்கலாம். ஏனெனில், உடலுக்குள் ஆற்றல் சேமிப்பு, ரத்த வெள்ளை அணுக்களே. அவை ஆரோக்கிய சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்தத்தில் உள்ள, ‘பிளேட்லெட்’ அணுக்களின் வேலை  உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி, பிளேட்லட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, ‘கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.

சந்திரன்19

சந்திரன் ( அல்லது ) குரு 5ம் அல்லது 9ம் வீட்டில் இருந்து குரு,  லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் அமர்ந்து அவர் சந்திரனை 9 ம் பார்வையாக பார்த்தால் ஜோதிட சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி கட்டுரை எழுதுபவராகவும் கவிதை எழுதுபவராகவும் சிறந்த ஆய்வாளராக விளங்குவார். சந்திர லக்னத்திற்கு 10ம் இடத்தில் புதன், சனி சேர்க்கைபெற்றால் கவிதை, கட்டுரை, கதை எழுதி சிறந்து விளங்குவார்.

சந்திரன்18

சந்திரனிலிருந்து 5,11ல் ராகு-கேது இருந்தால் விவாஹபாக்கியமே இல்லாமல் அமைந்து வருகிறது. சந்திரன் சுக்ரன், சனி ஒருவருக்கொருவர் ஏதோவகையில் தொடர்புடையவராக இருந்தால் காதல் திருமணம் ஏற்படும்.

சந்திரன்17

சந்திரனுக்கு 4,7,10ல் குரு இருப்பின் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது.  ஜாதகருக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அடையச்செய்யும். சந்திரன், சனி, சேர்க்கை, அல்லது பார்வை ஏற்படின் சன்யாச யோகம் அமையும். சந்திரன் லக்னம், சுக்ரன் இவர்களுக்கு 7ல் சனி இருந்தாலும், பார்த்தாலும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சந்திரன்16

சந்திரன், கடக லக்னத்தில் இருந்தால் சொந்த, பந்தங்கள்மீது அதிக பாசமாக இருப்பர். அவர்களை ஆதரித்து மகிழ்வோடு வைத்திருப்பர். சந்திரன், 1,4,5,7,9,10ல் இருந்து குரு அல்லது சுக்ரன் பார்வை ஏற்படின் சிறந்த நாடாளும் பலன் ஏற்படும். சந்திரனுக்கு 4க்குடையவன் கேதுவுடன் இணைந்தாலும் அல்லது சுக்கிரனுடன் எந்த வீட்டில் இருந்லும் அந்த ஜாதகர் தெய்வாம்சம் பெற்று ஞானமார்க்கத்தில் ஈடுபடுவர்.

பங்கஜ முத்திரை

பங்கஜம் என்றால் தாமரை என்று பொருள் இம்முத்திரை தாமரை போல் காட்சியளிப்பதால் பங்கஜ முத்திரை என்று அழைக்கிறோம். இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று குவித்து இரண்டு கை பெருவிரல்கள் மற்றும் சுண்டு விரல்கள் மட்டுமே ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் ஒன்றையொன்று தொடாமல் விரிந்து சற்று வளைந்து இருக்க வேண்டும். பலன்கள் :- மனதில் தோன்றும் கோபம், பொறாமை, வெறுப்பு, ஆணவம் போன்ற தீய எண்ணங்களை போக்கி மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றச் செய்கின்றது.…

காக்கினி முத்திரை

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிமையாக செய்யும் முத்திரை ஆகும். வலதுகை விரல்கள் நுனியும் இடதுகை விரல்கள் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் ஒன்றை ஒன்று தொடதவாறு இடைவெளி இருக்க வேண்டும். பலன்கள் :- ஒரு செயலில் ஈடுபடும்போது அந்த செயலில் மனம் ஒன்றாமல் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் ஒரு பத்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் போதும் மனம் ஒறுமுகப்பட்டு செயலில் நன்றாக ஈடுபாடு செலுத்த முடியும். ஆசிரியர்…

சுந்தர யோக சிகிச்சை முறை 85 

துவிஜர்களாக இருந்தாலும் இவர்களுக்குத் தினசரி  சந்தியா காயத்திரியை மூன்று வேளை முறைப்படி செய்வதுதான், முறை மற்றவர்கள் தங்களுக்கு இஷ்டமான மூர்த்தியின் உருவத்தை புறத்திலும், அகத்திலும் பார்த்து, பெரியோர் இயற்றிய துதிகளை மனமுருகி  துதிக்கலாம் துதிப்பதற்கு உலக இன்னல்களுக்கு, மத்தியில் சாந்தி, சக்தி பெற கந்தன் புகழ், அன்னையின் திருவடி மலர்கள், பரமாத்ம நாம சங்கீர்த்தன பஜனாவளி என்ற எனது மூன்று நூல்கள் மிக்க உபயோகமாகும். சுந்தரோதயம் பத்திரிகையில் வெளிவந்த, பாடல்களும், கீர்த்தனங்களும் பாராயணத்திற்கு உதவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 84

துதி நோய் தடுக்கும் திட்டத்தில் துதியும் கலந்துள்ளது.  துதி என்பதானது, மனிதன் தன் சக்தியை கணக்கற்ற அளவுக்கு, அதிகரித்துக் கொள்ளும் மார்க்கமாகும். மனத்திற்குச் சாந்தியும், நரம்புகளுக்கு வீர்யமும், அமைதியும் எண்ணற்ற எதிர்பாராத அபாயங்களிலிருந்து விடுதலை அடையும் வழியும்.  ஊழ்வினையால் ஏற்படும் கெடுதலையும் அணு அளவுக்குக் குறைத்துக் கொள்ளும் சூழ்ச்சியும் கொண்டதே துதி.  இதன் விதிகளை, சாந்தி யோகம், சந்தியா காயத்ரி ஜபயோகம் என்ற நூல்களில் காணலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 83

நித்திரைத்  திட்டம். தினசரி வாழ்க்கையில் நித்திரையின் தேவையும் சுமாராகக் குறிப்பிட்டுவிடுகிறேன். மூளை வேலைக்காரருக்கு 6 மணி நேரம் மாணவர்களுக்கு   8 மணி நேரம் மூளை, உடலுழைப்பு கலந்தவர்களுக்கு 7 மணி நேரம் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 9லிருந்து 10 மணி நேரம். நித்திரைக்கு செல்ல வேண்டிய காலம். இளம் மாணவர்கள் இரவு 9 மணி, உயர் படிப்பாளர்  இரவு 10 மணி மூளை வேலையும், உடலுழைப்பு கலந்தவர் இரவு 10 மணி, பாட்டாளி இரவு 9 மணி

எத்தனை வயது ஆனாலும்

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்… ஆனால் எத்தனை வயது ஆனாலும், எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

அவரவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டுமே  தெரியும்

ஒ௫ ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இ௫ந்தது அந்த வழியாக வந்த ஒ௫ சிட்டு கு௫வி மரத்திடம் கேட்டது… மழை காலம் தொடங்க இ௫ப்பதால் நானும் ௭ன் குஞ்சுகளும் வசிக்க கூடு ௧ட்ட அனுமதிக்க முடியுமா ௭ன்றது முதலில் இ௫ந்த மரம் முடியாது என்றது அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது கு௫வி கூடு கட்டி சந்தோசமா௧ வாழ்ந்து கொண்டு இ௫ந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது…

சக்தியை சிதற விடாதே

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச்சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூ ர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப்பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப்பூர்வமாகநம்புகிறேன் கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்ததில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆதனால் எதிர்காலம் சிறப்பாக அமையப் போகிறது என்பதைநான் முழு மனதுடன் நம்புகிறேன்.

ஒவ்வோர் உயிரும் கடவுளே

கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறுஒரு கடவுள் இல்லை.  இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான்புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில்கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்

நீ யார் என்பது முக்கியமல்ல

நீ யார் என்பது முக்கியமல்ல, நீ என்ன செய்கிறாய் என்பதே முக்கியம். நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாகஇருந்தாலும் சரி, ஆன்மீக வாதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதாந்தியாகஇருந்தாலும் சரி, கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி, அல்லது இஸ்லாமியாக இருந்தாலும்சரி, உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமாகும்.

யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்

உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய்  சிரசாசனத்தில் சிவன் காட்சி தரும் அதிசய திருக்கோவில் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.  

எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

மயானேஸ்வரர்

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிற்குடி மயானேஸ்வரர் ஆலயத்தில் சக்கரம் ஏந்திய சிவபெருமானை தரிசிக்கலாம். இத்தலம் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்த்தப்பட்ட, அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும்.

கடவுளை அறிய அல்லது அடைய  11

பாய் விரித்து படுத்தவனோ வாய்திறந்து தூங்குகிறான். பஞ்சணையில் படுத்தவன் நெஞ்சில் ஏனோ அமைதியில்லை என்ன காரணமாய் இருக்கும் இப்படி பஞ்சனையில் படுக்க எத்தனைபேரை வஞ்சித்தானோ, ஏமாற்றினானோ அந்த நினைவுகளே அவனை நிம்மதியற்றவனாக ஆக்கியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.  அது மட்டுமல்ல பஞ்சணையை யாராவது பிடுங்கி கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம் இந்த இடத்தில் அரசு அதிகாரம் பதவி போன்றவையும் பஞ்சணைகளே. எப்போதுமே தவறுகளை உணர்ந்து கொள்வது மட்டுமே தவறுகளுக்கு பிராயசித்தம் ஆகாது. தண்டைனை கூட…

கடவுளை அறிய அல்லது அடைய  10

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஆயிரமாயிரம் சூழ்ச்சிகள், குழிபறிப்புகள், துரோகங்கள் போன்ற எல்லாவற்றையும் சமாளித்துதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. அந்த கால மன்னராட்சி முதல் இந்த கால மந்திரிகள் ஆட்சி வரை இந்த நியதி மாறவேயில்லை அதிலும் அதிகாரம் கைபற்ற இத்தனை செய்யவேண்டியிருக்கிறது என்றால் கிடைத்த அதிகாரத்தை தக்க வைக்க இதை போல் பல மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது. அதிகார போதையில் மிதக்க ஆசைப்படுபவன் எல்லோரையும் ஏமாற்றவே நினைக்கிறான். அதில் கடவுளும் அடக்கம் ஏமாற்றியதற்கு கடவுளிடம் மன்னிப்பு…

கடவுளை அறிய அல்லது அடைய 9

ஒரு விதத்தில் பார்த்தால் மனிதனால் எதையும் முழுமையாய் அனுபவிக்க முடிவதில்லை எதையும் முழுமையாய் அனுபவிக்கும் வித்தை ஏனோ மனிதனுக்கு கைவர பெறவில்லை.  அது மண் ஆகட்டும், பெண் ஆகட்டும், பொன் ஆகட்டும் எதையும் முழுமையாய் அனுபவிக்காததால் அவனுக்கு எதுவும் முழுமையாய் தெரிவது இல்லை அதனாலேயே ஜனன மரணங்களைப் பற்றிய புதிர் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாம் பிறவற்றை பற்றி அறியாமல் இருப்பது ஒன்றும் மிகப் பெரிய தவறோ, இழிவோ அல்ல ஆனால் தன்னை தான் அறியாமல் இருப்பத…

கடவுளை அறிய அல்லது அடைய 8

எல்லாவற்றையும் காலம் நினைவில் கொண்டுள்ளது.  காலம் வெற்றியடைந்தவன், தோல்வி பெற்றவன், பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் பண்டிதன், பாமரன், ஞானி, அஞ்ஞானி என்ற பேதத்தை கைகொள்வதில்லை அதனுடைய நினைவில் எல்லோருக்கும் இடம் உண்டு, அதனால் காலத்தை வென்றவன் காலத்தை வெல்லாதவன் என்ற பாகுபாடுகளை நாம் பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.  காலத்தில் கடந்த ,நிகழ், எதிர் காலங்கள் என்ற பிரிவுகள் கிடையாது அது காலமாக மட்டுமே இருக்கிறது.  நாம் தான் காலத்தை மூன்று கூறாக்கி வைத்திருக்கிறோம் எதையும்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 21

3 – க்குரியவர் பலமடைந்து, ராசி அம்சத்தில் பெண் ராசியில் இருப்பின் பின் சகோதரரும் 1 உண்டு.  5, 6 – க்குரியவர் 3 – ல் சுயசாரம் பெற்று சுபர் பார்த்து இருந்து, இவர் திசாபுத்தி நடந்தால், நல்ல யோகத்தைத் தரும். தன சேர்க்கை ஏற்படும்.  3 – க்குரியவர் கேந்திரம் பெற்று, செவ்வாய் சேர்க்கை சுபர் பார்த்தால் 6 உடன் பிறப்பு உண்டு.  3 – க்குரியவர் உச்சம் பெற்று 3 – இல்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 20

 1 – க்குரியவர், 3 – ஆமிடத்தை பார்த்து 3 – க்குரியவர் யோகாதிபதி சாரம் பெற்று செவ்வாய் சேர்க்கை பெற்றால் 10 உடன் பிறப்பு ஏற்பட்டு 8 பேர் தங்குவார்கள். இதில் ஆண் 5, பெண் 3, ஆனால் ஆண் உடன் பிறப்பால் நன்மை இல்லை பெண் உடன்பிறப்பால் நன்மை ஒரளவு உண்டு.  4 – க்குரியவர் 3 – இல், 6 – க்கு உரியவரிடம் சேர்க்கை பெற்று இருப்பின் பின் ஆண் சகோதரம்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 19   

 3 – இல் ராகு இருந்து, சனி பார்வை பெற்று 3 – க்குரியவர் கேந்திரம் பெற்று லக்கினாதிபதியை குரு பார்த்தால் 10 உடன்பிறப்பு , 7 ஆண், 2 பெண், இதில் முதல் தாய்க்கு ஒரு ஆண்.  3 – க்குரியவர் உச்சம் பெற்று, லக்கினாதிபதி பார்த்து 3 – ஆமிடத்தில் பாபர் இருந்தால், பல மாதர்களுடன் இன்பமாக காலத்தை கழிப்பான். இளம் வயது பெண்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டே இருக்கும்.  3 – க்குரியவர்,…

கடவுளை அறிய அல்லது அடைய 7

 இதை தான் பெரியவர்கள் எதை, எதை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டுமோ அப்படி வைக்கவேண்டும் என்றார்கள் அவர்கள் சொன்னது புற பொருள்களை அல்ல நம்மிடம் கருவியாய் உள்ள மனதையே சொன்னார்கள் அது மட்டுமல்ல பெரியோர்கள் சொன்னது மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றார்கள் இதில் உள்ள அர்த்தம் மனமது நமக்கு ஏவளாளியாய் அடிமையாய் இருந்தால் மந்திரம் ஜெபித்து நாம் பெற வேண்டியது எதுவும் இல்லை நமக்கு வேண்டியது எல்லாம் இயல்பாகவே கிடைக்கும் என்பது தான். இதை…

கடவுளை அறிய அல்லது அடைய 6

நன்றாக கவனம் வைத்துக் கொள்ளுங்கள் கை, கால்களை போலவே மனமும் ஒரு கருவியே நம்முடைய கை, கால்கள் நாம் சொல்லுவதற்கு அல்லது நினைப்பதற்கு முன்னால் அவை அசைந்தால் நமக்கு எத்தனை அசெளகரியமும், குழப்பமும் உண்டாகுமோ அதை விட பல கோடி மடங்கு அசெளகரியமும் குழப்பமும் நாம் கட்டளை இடும் முன் மனம் அசைந்தால் உண்டாகும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 82

நோய் தடுத்து ஆயுள் ஆரோக்கியத்தைப் பெருக்கும் இந்த கவசத்தை காலையில் மேற்கொள்ளுதல் நலம்.  இரவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தூங்கி எழுந்து பின்பும் அல்லது வேலை முடித்து வந்த உடனேயும், பிரயாணத் தொழிலில்லாத மறுநாள் ஓய்வு காலத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 81

கால் மணி நேர அவசரத் திட்டம், சர்வாங்காசனம் 5 நிமிடம், மத்ச்யாசனம் அரை நிமிடம், சிரசாசனம்  5 நிமிடம், சவாசனம் 1 அரை நிமிடம், நாடி சுத்தி 3 நிமிடம். ஒரு மணி நேரக் காலத்திட்டம், தினசரி பயிலுவதற்கும், அரை மணி நேர சிக்கனத் திட்டம் தேவையானால், சில சமயங்களுக்கும், கால் மணி நேர அவசரத் திட்டம் வெகு அபூர்வமாகவும் கையாள வேண்டும்.

நன்மையே செய், நன்மை தானாக வந்தடையும்

தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். கர்மயோகத்தின் விதியின்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரியபலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரியபலனை விளைவிப்பதை இயற்கையிலுள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான்அனுபவித்தே ஆகவேண்டும். இந்த பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத்தடுக்கவும் முடியாது, நிறுத்தி வைக்கவும்…

பிச்சையல்ல.. .. அது ஓர் உதவி

உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக் கொண்டு, ஏபிச்சைக்காரா  இதை வாங்கிக் கொள் என்று நீ சொல்லாதே, மாறாக அவனுக்குகொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்தஏழை இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான்பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்மசிந்தனையையும், இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக்கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத்தன்மையும் உன்னை வந்தடையும்.

உலகுக்கு செய்யும் நன்மை நமக்கே நன்மையாக முடியும்

 நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும், உலகிற்கு நன்மை செய்வதும்தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் ? மேலோட்டமாக பார்த்தால் உலகிற்குநன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறேhம்.

சந்திரன்15

சந்திரன், சுக்ரன் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தாலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ 30 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறும். சந்திரன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புடவை, அழகு பொருட்கள், வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பர். சந்திரன், ரிஷப ராசியில் இருந்து, குருவின் பார்வைபெறீன் பேரும் புகழும் கல்வி, கேள்விகளில் சிறந்தும் பலபேர் மெச்சும் வண்ணம் புகழ் பெற்று வாழ்வர்.

சந்திரன் 14

சந்திரனுக்கு 10ம் வீட்டில் சுக்கிரன், சனி, சேர்க்கை, மருத்துவ தொழில் செய்வர், சூரியன் அல்லது செவ்வாய், ராகு சேர்க்கை டாக்டராக வாய்ப்பு உண்டு, லக்னத்திற்கு 10ல் சந்திரன், சுக்கிரன் இருந்து சுபகிரஹபார்வை ஏற்படின் டாக்டராக இருப்பர். சந்திரன் கேந்திரத்தில் இருந்து பாபகிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ இருப்பின் பாலாரிஷ்டம் ஏற்படும். சந்திர மங்களயோகம், மனைவி வந்தபின் அதிர்ஷ்டசாலியோகம் பூமி, புகழ், வாகனம் போன்ற செல்வத்தை அடைவர்.

சந்திரன் 13

சந்திரா லக்னத்தின் அதிபதி உச்சமுற்றிருந்தாலோ, அல்லது நீச்சமுற்ற கிரகங்களின் இல்லத்தில் இருந்தாலும் ஜாதகர் செல்வம், செல்வாக்குடையவராக இருப்பர். சந்திரன், சூரியன் சேர்ந்து 9,5 லக்ன வீட்டில் இருந்தால் பிற்காலத்தில் கண் பார்வை இழப்பர். சந்திரன், சூரியன், சனி 12, 2, 8ல் முறையே இருப்பின் கண்பார்வை அற்றவராக இருப்பர். சந்திரன், சுக்கிரன் 6,8,12ல் இருப்பின் கண்  பார்வை இரவு நேரத்தில் தெரியாது. சந்திரன் 7ம் வீடாக சிம்மராசியில் அமர்ந்து அதை செவ்வாய் பார்வை செய்யின் அந்த ஜாதகருக்கு…

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14

தன்னுடைய சிருஷ்டியில் இறைவன் ஒரு பொழுதும் இரக்கமற்றவனாகவும், நீதிவழுவியவனாகவும் இருப்பதில்லை.  ஒருவன் உடலைப்பற்றிய கவலை நீங்காமல் ஆத்மாவை அறிந்தனுபவிக்க ஆசைப்பட்டால் அவன் ஒரு முதலையைத் தெப்பம் என்று நம்பி அதன் மேலேறி ஓர் ஆற்றைக் கடப்பதற்காசைப்படுவைனைப் போலாவன்.  

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13

நல்லதும் ‍பொல்லாததும், உயர்ந்ததும், தாழ்ந்ததும், விரும்பத்தக்கதும், வெறுக்கத்தக்கதுமான காட்சிகளை ஒருவன் கனவில் காணும் பொழுது அவையெல்லாம் உள்ளபடி உண்மை என்றே நினைக்கிறான். கனவு நிலையில் அவை பொய்யென்ற எண்ணம் சிறிதுகூட இல்லை.  அவ்வாறே தான் ஞானோதயம் ஏற்படும் வரை இவ்வுலகும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12    

முக்தியாவது நான் என்னுடையது  என்ற எண்ணங்களை அறவேயொழித்து  ஆத்மானுபவத்தில் நிலை பெறுதலாம். கனவு மனதின் கற்பனை. கண்ட மறுகணத்தில் அது காணப்படாமல் போவதால் அது பொய்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11

அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால், பிறவிச் சுழலுக்கும் காமத்திற்கும் கருமத்திற்கும் மூலகாரணமான அவித்தை மிச்சமில்லாமலே அழிந்து போகின்றது.

கடவுளை அறிய அல்லது அடைய 5

உலகில் உள்ள எல்லா போராட்டங்களையும் விட மனிதனுக்கும் அவன் மனதிற்க்கும் நடக்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம். சிறிது கூட இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டம் இதில் மனம் ஜெயித்தால் பயித்தியகாரன் மனிதன் ஜெயித்தால் புத்தன், ஞானி. ஆ என்றால் பெரியது தலைவன் என்ற அர்த்தத்தோடு இறை என்ற அர்த்தமும் உள்ளது அதாவது நீ லயத்தில் இருந்தால் ஆ எனும் இறையை உடலில் காணலாம். இதில் முக்கியமானது லயத்தில் இருக்க வேண்டும் அதாவது உடல் லயத்தில் இருக்க…

கடவுளை அறிய அல்லது அடைய 4

மனதின் இயக்கங்களை முழுமையாக கண்டறிய மனிதனால் இன்னும் முடியவில்லை அதனால் தான் புத்தர் போன்றோர்   மனதை கடந்து சென்றுவிட்டனர் அப்படி மனதை கொண்டேமனதை கடந்து சென்றதினால் அதை பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.   மனதை நமக்கு எஜமானனாக நாம் கொண்டால் நாம் மறைந்து விடுவோம்.  மனம் மட்டுமே இருக்கும் நாம் மனதிற்கு எஜமானனாக இருந்தால் நாம் இருப்போம் மனம் மறைந்து விடும் இது புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும் மிக…

கடவுளை அறிய அல்லது அடைய 3

உடலை எவனொருவன் ஆண்டவன் உருவாக்கிய ஆபூர்வகருவியாக நினைத்து ஆச்சரியப்பட்டு பின் தன் உடல்மீது அன்பு கொள்கிறானோ எவன் தனது உடலை கடவுளை அடைய உதவும் ஏணியாக பயன்படுத்த அறிந்திருக்கிறானோ அவன் உடலில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை கண்டு கொள்வான் அந்த ரகசியங்கள் மூலம் இறையை உணர்வான் இதைத்தான் முன்னோர்கள் இப்படி சொன்னார்கள் ஊணுடம்பு ஆலயம் என்று.

கடவுளை அறிய அல்லது அடைய 2

உண்மையில் மனித வாழ்வில் அழிக்கப்பட வேண்டியது என்று எதுவும் இல்லை மாற்றி அமைத்து மேன்மைப்படுத்த வேண்டியவைகள் மட்டுமே உண்டு அப்படி மேன்மைப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவரவரிடமே உள்ளது. கடவுளை அறிய அல்லது அடைய முக்கியமாக தேவையானது  இதயம் தலை அல்ல. அடுத்ததாக இதயம் மட்டும் பத்தாது அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.   தலையில் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும் அதனால் அதைக்கொண்டு இறைவனை அடைய முடியாது.

கடவுளை அறிய அல்லது அடைய 1

 ஒருவன் தன்னுடைய உடலையோ, மனதையோ வெறுப்பதினால் அவன் அடையும் பயன் ஒன்றே ஒன்று தான் கடவுள் என்பவரின் நிழலைக் கூட காண முடியாது.  ஒருவன் தன்னை வெறுப்பதினால் தன் மீது அன்பு செலுத்த இயலாதவனாகிவிடுகிறான்.  அதன் பின் அவனால் பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர், நண்பர்கள் போன்றவற்றில் எதிலும் அன்பு செய்ய இயலாதவனாகிவிடுகிறான்.   கடவுளை காண அன்பு மட்டுமே கருவியாக இருக்கும் போது அந்த கருவி இல்லாதவனால் கடவுளை அறியமுடியுமா?

ஆனந்தம் இல்லாதவன்

தனக்குள் ஆனந்தம் இல்லாதவன் ஆசை வயப்படுகிறான். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதன் மூலம் அவன் ஆனந்தம் அடைய முயற்சி செய்கிறான், அதில் சில ஆனந்தங்களை மிக சிறிய அளவு அடைகிறான் மனிதன் இன்னமும் புரிந்து கொள்ளாத விஷயம் என்னவென்றால் ஆனந்தம் தனக்குள் இருப்பது அது எதை சார்ந்தும் இராது. ஆனால் ஆசை என்பது எப்போதும் பிறவற்றை சார்ந்தே இருக்கும் அதனால் ஆசையினால் அடையும் ஆனந்தம் மிக, மிக சிறிதாகவே இருக்கிறது.  எப்போது மனிதன் தனக்குள் ஆனந்தத்தை அறிய…

வஜ்ர முத்திரை :

 நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் மடக்கி கட்டை விரலை நடுவிரல் நகத்தின் அருகே வைக்கவேண்டும். ஆட்காட்டி விரல் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.  பலன்கள் :- உடல் வஜ்ரம்போல் பலம்பெரும். சோர்வு,மயக்கம் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலம்பெரும். கல்லீரல்,மண்ணீரல் ஆற்றலை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை அடையும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்

ஆதி முத்திரை:-

பெருவிரலை மடக்கி சுண்டுவிரலின் கடைசி ரேகையை தொடுமாறு வைத்து மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொள்ள வேண்டும். இதுவே ஆதி முத்திரை எனப்படும். தாயின் கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறு கைகளை மூடியபடி இம்முத்திரை போன்று இருப்பதால் ஆதி முத்திரை என அழைக்கப்படுகின்றது. பலன்கள்  1.கண், காது, பல் வலிகளை போக்கும். 2.மனக் குழப்பம், அதிர்ச்சி, படபடப்பு ஆகியவற்றை சரிசெய்யும். 3.தேவையற்ற கவலை பயம் ஆகியவற்றைப் போக்கும். 4.சுவாசம் மூச்சுத்தினறல் ஆகியவற்றை சீர்படுத்தும். 5.தீய எண்ணங்களை போக்கி மனதை…

கருட முத்திரை:-

இடதுகை பெருவிரலையும் வலதுகை பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பலன்கள்:- 1.உயிர் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும். 2.ஞாபகமறதியைப் போக்கி நினைவாற்றல் பெருகும். 3.பார்வைத் திறனும் கேட்கும் திறனும் அதிகரிக்கும். 4.கோபம்,வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகிய தீய குணங்கள் மறையும். 5.நரம்பு மண்டலம் உறுதியடையும். இம்முத்திரையை 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.…

சுத்த முத்திரை:-

கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது ரேகையை ஒட்டி மேலே பக்கவாட்டில் தொட வேண்டும். சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் செய்தால் அதிகமான பலன் கிடைக்கும். எளிய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு இம்முத்திரை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். பலன்கள் :- உடலில் உள்ள எல்லா விதமான நச்சுப்பொருள்களும் வெளியேற்றப்படும். உடல்வலி, மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமடையும். .நோய்கள் குணமாகும் உடல் புத்துணர்ச்சி…

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது…….., அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள்,…

சந்திரன் 12

சந்திரனுடன் ராகுவோ, கேதுவோ கூடி இருப்பின் ஜாதகரின் பேச்சுக்கு மதிப்பு இராது. சந்திரனுக்கு கேந்திர திரகோணங்களில் குரு, சுக்கிரன், சனி நின்றால் யோகங்கள் ஏற்படும். சந்திரன், சுக்கிரன் சமசப்தமாக இருப்பின், திருமணம் காலதாமதமாவதோ, மணவாழ்வும் சிறப்பாக அமையாது. சந்திரன், சுக்கிரன் ஒரே ராசியில் இருப்பின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சந்திரா லக்னம், லக்னத்திற்கு, ஐந்து, ஏழாம் அதிபதிகள் இணைந்து இருப்பினும் ஒன்றுக்கொன்று பார்வைபெறினும், அம்சத்தில் இணைந்தாலும் திருமண வாழ்வில் பிரிவினைத்தரும், பாவிகளின் பார்வை ஏற்படில் விவகாரத்தைத்…

சந்திரன் 11

சந்திரன் தனஸ்தானத்தில் இருந்தாலும், பார்த்தாலும் அந்த ஜாதகி ஏழ்மையானவள். சந்திரன் பெண்ணின் ஜாதகத்தில் 3,4,5,7,8,9,10ல் இருந்து குரு பார்வை பெற்றால் சகல மங்களங்களையும் பெற்று சுபிட்சம் அடைவாள். சந்திரனும், சனியும் கூடி 7மிடத்திலிருந்தால் இரண்டாம் தாரம் அல்லது இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடும். சந்திரனுக்கு பத்தில் குரு இருந்தால் அமலாயோகம் என்று பெயர்.  இவர் மத்திய வயதில் பாக்கியம் அடைவார்.  நித்திய தர்மத்துடன் கூடியவராக இருப்பார்.  பல தேசங்களில் பிரசித்தி அடைவார்.

சந்திரன் 10

சந்திரன் 9ம் வீட்டில் இருந்தால் அறிவாற்றல், கல்விமான், படிப்பில் ஆர்வம் இருந்த வண்ணம் இருக்கும். சந்திரன் 12ல் இருந்தால் அயல்நாட்டுக்குச் சென்று படிக்கும் தகுதி ஏற்படும் பேச்சு மென்மையாக இருக்கும். சந்திரன் லக்னத்திற்கு 11ம் இடத்தில் இருந்து புதனும், சுக்கிரனும் 7ல் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஐஸ்வர்யத்தையும் சுகபோகங்களையும் அடைவர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து சுக்கிரனும், புதனும், 3,4,5,7,8,9,10ல் இருந்து பலமும் பெற்றால் அந்த ஜாதகி மிகவும் சுபிட்சமாக அந்தஸ்து உடையவளாவாள். சந்திரன் நீசமாக விருச்சிகத்தில் உதித்தவர்களுக்கு…

திருக்காரவாசல்

 திருக்காரவாசல் என்ற திருத்தலம்.திருவாரூர் அருகே உள்ளது, இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.

சூரியன் வழிபடும் சிவன் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது.

பல கனவுகளோடு

பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட

உங்களின் தேவைக்காக

உங்களின் தேவைக்காக மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.   தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடுகள்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 10

உபநிஷதங்களின் உபதேசத்திற்குறைவிடம் உண்மை.  உண்மையாவது சூது இல்லாமையும் வாக்கிலும் மனதிலும் காயத்திலும் கபடமில்லாமையுமாகும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 9

கனவில் பெற்ற மந்திர உபதேசம் நனவில் உண்மையாகின்றது, கனவில் கிடைத்த நல்லாசியால் காலையில் விழித்துக் கொண்டபின் விரும்பிய பொருள் கிட்டுதலும் காணப்படுகின்றது, ஆகையால் பொய்மையினின்றுங்கூட மெய்மை முளைக்கலாம் என்பது இதனால் அறியப்படும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 8

மூன்று உலகங்களிலும் ஒவ்வொருவனும், சுகத்தையடையவே பாடுபடுகிறான்.  துக்கத்திற்காக அன்று, துக்கத்தின் காரணம் நீங்கினால் சுகம் வரும். துக்கத்திற்குக் காரணங்கள் , இரண்டு, ஒன்று உடலில் நான் என்ற அபிமானம், இரண்டு, உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது என்ற அபிமானம்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 2

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி இதனை நன்கு உணர்ந்த நோய்வாய்பட்டவர்கள் அல்லது உடல் பலவீனமுடையவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி தேவையான சிகிச்சைகளை செய்து கொண்டு உடலை ஆரோக்கிய முறையில் பேணுவார்கள் ஆனால் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்கள் உடலைப் பற்றி சிந்திக்காமல் அதற்க்கு முக்கியத்துவம் தராமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் உடல் நலம் சரியில்லாமல் ஆக அவர்களே காரணம் ஆவார்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 1

 தாழ்வு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்ளாமல் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சந்தேகங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல் எளிமையாக மகிழ்ச்சிகரமாக இயல்பாக வாழுங்கள் யாரோ சிலர் அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை ஏமாற்றியிருந்தாலும் அதனால் பாதிப்படையாமல் உங்கள் மனதை இயல்பான வாழ்க்கையில் செலுத்தி சந்தோஷமாய் வாழ்க்கையை தொடருங்கள்.  உங்களுடைய பலவீனங்கள் குறைபாடுகளை நீங்கள் உணரத் தொடங்கினால் அவற்றை ஒரு போதும் மறவாது இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி இதை உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வோம்.

ஆதி. 12

ஜீவனில் உயிர் உண்டு அஜீவனில் உயிர் இல்லை இந்த உயிரானது ஜடபொருளுடன் இணையாத பொழுது பூரண அறிவுடன் விளங்குகிறது.  நம்முடைய பூரண அறிவுக்கு தடையாய் இருப்பவை புலன்களும், பொறிகளும் தான். அதிலிருந்து விடுதலை அடைந்து விட்டால் பூரண அறிவு சித்திக்கும் அதாவது ஞானம் உண்டாகும் லோகாதாய வாதிகள், பிரத்தியட்சத்தை மட்டுமே ஏற்கிறார்கள்.  யூகத்தை ஏற்பதில்லை சமண வாதிகள், பிரத்தியட்சம், யூகம் இரண்டையும் ஏற்கிறார்கள்.  அனுபவ வாக்கை ஏற்பதில்லை. அதனால் இவர்கள் வேதங்களை ஏற்பதில்லை.

கருத்து மட்டுமல்ல, , காரியமாற்றவும் வேண்டும்

ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தையும் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்கையில் நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒருபாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடையமேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

மறைந்திருக்கும் அழுகையும் சிரிப்பும்

மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும், புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமேவேடிக்கையும், விளையாட்டும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது. இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் , துயரும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.

நமக்குத் தேவை அன்பும் பொறுமையும்

அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத்தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையாகும். எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். இந்த உண்மை இம்மை மறுமையாகியஇரண்டு உலகங்களுக்கும் பொருந்தும். நன்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணுறு சதவீதம் இறந்து போனவர்கள். அவர்கள் பிசாசுகள்தாம். எனது அருமைக் குழந்தைகளே, அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது.

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை  சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், தானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்.

மனதில் இறங்காம‍ல்

மனதில் இறங்காம‍ல் வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும் தத்துவங்களும் நூலகங்களில் படிக்காமல் விடப்படும் புத்தகங்களும் ஒன்றுதான்.

தற்போது மத சந்தையில்

தற்போது மத சந்தையில் அழகிய புறத் தோற்றம் கொண்ட எதற்கும் பயன்படாத பொருட்கள் இப்போது துன்பத்தை கண்டு வேகமாக ஓடும் மக்களுக்கு பரிசு பொருட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது.

பிரார்த்தனை

பிரார்த்தனை இதயத்தால் நடைபெற வேண்டிய ஒன்று அறிவிலோ, புத்தியிலோ நடைபெற வேண்டிய செயல் அல்ல. கோயிலில் இருப்பது என்ன சிலையா? தெய்வமா கல் என்றால் பிரார்த்திக்க முடியாது. தெய்வம் என்றால் நெக்குருகி பிரார்த்திக்காமல் இருக்க முடியாது உண்மையில் பிரார்த்தனை என்பது அன்பில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் கண்ணதாசன் சொன்னது போல, கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும் அன்பில்லாத பிரார்த்தனை உயிரற்ற உடல்,