வேண்டியது வேண்டாதது
வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்.. காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவை.. காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!
வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்.. காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவை.. காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!
பிராணன் என்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஈரேழு பதினான்கு லோக ஜீவ ராசிகளுக்கும் அதுவே ஆதாரம் அப்படி ஆதாரமாய் இருக்கும் பிராணனை நாம் போற்றி வழிபடுவோம். நமது உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் நம்மை நாம் என்று சொல்வதற்கும் வேண்டிய சக்தியை தருவது பிராணணேயாகும். புலன்களுக்கு வேண்டிய அளவு சக்தியை வழங்குவதும் பிராணணே ஆகும். ஒவ்வொரு புலனுக்கும் பிராணன் தேவைப்படும் அளவு மாறுபடும் அப்படி மாறுபடும் அளவை அறிந்து பிராணன் புலன்களுக்கு தனது சக்தியை வழங்கட்டும் என்று…
மனிதனுடைய வாழ்க்கை பயணம் முடிந்தது என்பதற்கு அறிகுறி மரணம். மனிதனுடைய வாழ்க்கை பயணம் நடக்க உதவி செய்வது பிராணன் ஆகும். மரணத்திற்க்கு பின் ஜீவன் அதாவது உயிர் பயணிக்க உதவி செய்வதே உதானனின் பணியாகும். மரணமடையும் தருவாயில் மனிதனின் புலன்கள் செயலிலக்கின்றன. அப்படி செயலிலக்கும் போது முதலில் பேச்சு அவனிடம் இருந்து விடைபெறுகிறது. பின் படிப்பபடியாய் தொடர்ந்து ஒவ்வொரு புலனும் அவனைவிட்டு விலகுகிறது. கடைசியாய் மனம் விடைபெறும். அவனிடமிருந்து மனம் விடைபெறும் சமயத்தில் என்ன சிந்தனை அந்த…
மனிதன் நிர்ணயிக்கிறான், கடவுள் நிராகரிக்கிறார். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம். யாராலும் செய்ய முடியாததை நல்லதோ கெட்டதோ ஒரு பெண் செய்வாள். கண்ணாடிதான் என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும் போது அது ஒரு போதும் சிரித்ததில்லை. பூவாக இருந்தாலும் அதில் வாசனை இருந்தால் தான் அழகு. நட்பாக இருந்தாலும் அதில் நம்பிக்கை இருந்தால் தான் அழகு.
அறிவதைவிட புரிதல் ஆழமானது நம்மை அறிந்தவர்கள் இருக்கலாம் ஆனால் புரிந்தவர்கள் ?
.எப்போதும் கூடவே இருந்தால்.. அது பொக்கிஷம் அல்ல; பொருளாகிவிடும்.. காதலாக இருந்தாலும்! இது நிஜமா ? அனுபவத்தை சொல்லுங்கள்
கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்
பல வேளைகளில் மனிதனால் எதையும் எல்லாவற்றையும் மாற்றி விடமுடியும் என்ற ஆணவத்தோடு கூடிய சிந்தனையின் நிலைதான் தற்போதைய நாகரிகம் என்றும், வளர்ச்சி என்றும் கொண்டாடப் படுகிறது. ஏதோ படத்தில் சொன்ன வசனம் போல, ஒடிக்கொண்டிருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடாது. கடைசியில் தான் முடிவு செய்ய வேண்டுமென்று அது போல இந்த வளர்ச்சி, நாகரீகம் என்பதின் முடிவு ஒரு விதத்தில் நினைத்தால் பயம் தருகிறது. இன்னொரு விதத்தில் தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனிதன்…
மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம் அவன் என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான். ஆனால், உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள் அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது. தோற்றவன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் விதி, வினை என்று நினைக்கிறான், சிந்திக்கிறான்.
அழகும் அறிவும் ஒன்றாய் இருந்து ஒன்றாய் அன்பாய் குடித்தனம் நடத்தும் இடம் சொர்க்கம். அங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். கெட்டதும் நல்லதாய் மாறும் இரசவாதம் போல்.
சாம்பாதித்யர் கிருஷ்ண அவதாரத்தின் போது, கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன். இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான். தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன், சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். அவன் வழிப்பட்ட சூரியனை, காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் காண முடியும்.
இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் ஆணின் திறமை தான் ஆணிற்க்கு அழகு இங்கு திறமை என்றால் என்னவென்ற வினா வரும் அதற்க்கு பதில், உழைப்பு, கெட்டி காரதனம், வரும் முன் காக்கும் குணம் எதிலும் தெளிவு. எத்தனை தடை சோதனை வந்தாலும் துணையாய் வந்த மனைவியை இழிவு படுத்தாத குணம் கம்பீரமான மனத்தின்மை இவையே ஆணின் திறமை . இதை வளர்த்துக்கொள்ள ஆண் விரும்பி முயலவேண்டும். அப்போது மனைவி கணவனை உள்ளங்கயில் வைத்து தாங்குவாள் அவளின்…
பண்டைக்கால உழைப்பை எல்லாம், தற்கால வாழ்வில் எப்படி தருவது? முன்போல் வாழ்க்கை நிதானத்தில் இல்லையே எல்லாம் அவசரம், எல்லாம் காலச் சிக்கனம், எ ல்லாம் கொள்ளையும் கூத்துமாக இருக்கிக்கின்றன. ஒவ்வொரு வரும் விறகு வெட்டவோ, மரம் ஏறவோ, தண்ணீர் தூக்கவோ, செய்வதென்பது சாத்தியமானது அல்ல.
அவர்கள் மிகுந்த காதலோடு நெல்முனையலவும் பிரிவும் குறைவும் இல்லாமல் குடித்தனம் செய்தார்கள் அவர்களின் இனிய இல்லறத்தாலும் தபோ பலத்தாலும் உலகை உய்வித்தார்கள். இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இரு எதிர் துருவாங்களாக உள்ள ஆண், பெண் எனும் பிரகிருதி வஸ்துகள் ஒன்றை ஒன்று மதித்து கெளரவித்து அன்பு கொண்டு இருத்தலே இனிய இல்லறம் அமைய வழியாகும்.
ஆத்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை, ஏனெனில் ஆத்மா பரிசுத்தமான அறிவொளி வடிவானது, அதனிடம் அஞ்ஞான இருளில்லை. ஆத்மாவிற்கு உபாதிகள் ஏதுமில்லை, அது வர்ணிக்க முடியாதது, பகுக்க முடியாதது, குணங்களற்றது, பரிசுத்தமானது, வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதது.
அகத்தியரோ உருவம் குட்டை ( குள்ளம் ) மனைவியின் அழகிற்க்கு முன் அகத்தியர் சாதாரணம், அவளுடைய ஆடை, அணிகலன்களின் விருப்பம் தனக்கு இடைஞ்சல் என்று அகத்தியர் நினைக்கவேயில்லை அவர் தனது மனைவியை இளவரசியாகவே வாழ வைத்தார். இதிலிருந்து நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது அவரவர் குணங்களை அவரவர்கள் பரஸ்பரம் மதித்தார்கள். அவரவர் விருப்பங்களை பரஸ்பரம் கெளரவித்தார்கள்.
61) குரு திரிகோணமடையவும், சுக்கிரன், குருவுக்கு கேந்திரமடையவும், புதன் கேந்திரத்தில் நிற்கவும், குருவின் கேந்திரத்தில் சந்திரனும், கேதுவும் கூடி நிற்க, ஜோதிடம், இலக்கியம், கற்றவர். 62) சுக்கிரன் உச்சமடைய, புதன் 3 – ல் நிற்க, தனுசு லக்கினமாயிருந்து 11 – ல் குரு நிற்க, வாக்கில் சிறந்தவராம். 63) 2 – ல் புதன் நிற்க, குரு திரிகோணமடைய 4 – இல் சந்திரன் நிற்க வித்தையில் வல்லவர்.
லோபா முத்திரை அழகி, இளவரசி ஆபரணங்களின் மேல் அதிகபிரியமுள்ளவள் அகத்தியர் துறவி, ஞானி காட்டில், பர்ணசாலை ஆனால் இவர்கள் இருவரும் ஆண், பெண் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்க்கு மிக சிறந்த உதாரணம். எப்படி இளவரசியும் ஆபரணங்களில் அதிக ஆசை உடையவளும் பேரழகியாக இருந்த லோப முத்திரை கணவனின் மேல் தீராத மாறாத காதல் கொண்டு காட்டிற்க்கு வந்து பர்ணசாலையில் வசிக்கும் தன் கணவனுக்கு சற்றும் அலுப்பில்லாமல் பிரியம் குறையாமல் குடித்தனம் செய்தாள்.
58) சந்திரனுக்கு 6, 8, 12 – ல் நிற்க, பாபர்கள் சுபஸ்தானங்களில் நிற்க சுபர்களை சனி பார்க்க கொடிய தரித்திரம். 59) லக்கினாதிபதியும் 4 – க்குடையவரும், குருவும், மூவரும் கூடி நன்மையான ராசி, திரிகோண கேந்திரமுடைய சந்திரன், சுக்கிரன், புதன் இவர்களில் ஒருவர் 2 – ல் நிற்க, ஜோதிட வித்துவான். 60) குரு கேந்திரமடைய, சுக்கிரன் 4 – ல் நிற்க, புதன் திரிகோணமடைய ஜோதிட சித்தாந்தி.
மதிப்பற்று வாழ உலகில் எந்த உயிரும் விரும்புவது இல்லை தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளலும் பிறரை மதித்தலும் வாழ்க்கையின் அடிப்படையான அடித்தளங்கள் அந்த அடித்தளங்களை அமைக்க உள்ள அனுபவங்களே தத்துவங்கள் என்பார்கள்.
கேசவாதித்யர் காசியில் உள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக காசி காண்டம் கூறுகிறது. திருமாலின் அருளால் சூரியன் அமைத்த சிவலிங்கம் இது. இங்கு அருள் புரியும் சூரியன் ‘கேசவாதித்யர் ‘ எனப்படுகிறார்.
பிரார்தனையில் ஒரு பாகமாக இருக்க வேண்டியது சொல்லிக்கொடு. எனக்கு எது தெரிய வேண்டுமோ அதை முழுமையாய் சொல்லி கொடு அதை புரிந்து கொள்ளும் சக்தியையும் நீயே கொடு என்று உண்மையாய் பிரார்திக்கும் பக்குவம் அதாவது நான் என்ற நிலை இல்லாத நிலையில் பிரார்திக்கதெரிந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு
உழைப்பற்றால் பசி எடுக்காது. ஜீரணம் குறையும். பித்த சோகம் ஓய்வெடுக்கும். ரத்தவோட்டம் மந்தமாகும். சுவாசநடை தாறுமாறாகும். பூர்ண சுவாசமுண்டாகாது. சதைக்கூட்டங்கள் பல உழைப்பின்மையால் முதுமை அடையும். தூங்கும், அழுகும். உடல் கொழுக்க இருதயத்தின் மேலும் கொழுப்பு இறங்கும். சகல வியாதிகளுக்கும் மூல காரணமான மலச்சிக்கல் உண்டாகி அதிகரிக்கும். உழைப்பற்ற மானிட சரீரத்தை கண்ணால் பார்க்கச் சகிக்காது. தையல்காரனைக் கூப்பிட்டு அவனுதவியால் தான் ” இதுவும், மனித சரீரம் ” என்று அறிய வேண்டும். எளிதில் நோய் பற்றும்,…
ஒருவனுக்கு நான் என்னுடையது என்ற சொற்கள் எப்பொழுது முற்றும் அர்த்தமற்றவையாகின்றனவோ அப்பொழுது அவன் ஆத்மஞானியாகின்றான். எல்லா உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மாவைக் கண்டு கொண்டதாய்க் கருதுபவன் அப்பொழுதும் தனக்குப் பகைவர்கள் இருப்பதாய்க் கருதுவானேயானால் அவன் நெருப்பைக் குளிர்ந்ததெனக் கொள்பவனாவான்.
நாம் வளர்வதும் நல்லபடியாய் இருப்பதும் ஒரு தனிமனிதன் கையில் இல்லை. காலம் விளையாடும் இடம் இது காலம் சில சமயம் பெரிய குழுக்களை ,தேசத்தை, இனத்தை, உருமாற்றும் இதையெல்லாம் தனி மனிதனால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என்று கேட்டால் ஆமாம் என்பதுதான் பதில் உதவி செய்ய கூடாதா என்றால் எது உதவி என்றே தெரியாத போது உதவி எப்படி செய்வது உதவி இதுதான் என்று தெரிவதற்கே ஜென்மம் போதாதே, ஏனென்றால் நாம் கற்க…
பூத தோஷ நிவார தயிலபிந்து ரூபம் ….. மண்டலாகாரமாய் தோன்றுமாகில் கிரஹபீடை ஒழிந்தததென்று ஓளஷத சிகிச்சை செய்தல் வேண்டும். சாகினி கிரஹ தேவதா தோஷ லக்ஷணம் ….. தயிலபிந்து திரிகோணகாரமாய் தோணுமாகில் சாகினிதேவதை வீட்டு தேவதைகளால் நோய் உண்டானதென்று அறியவேண்டியது. பூத பிரேத தோஷ குறி ….. தைல பிந்துவில் சாலனி உருவம் தோன்றினால் பூத பிதேங்களினால் நோய் உண்டானதென்று அறிய வேண்டியது.
எந்த அனுபவமும் ஒருவனுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த அனுபவம் தரும் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் அனுபவம் தன்னை மீறி ஆட்சி செய்ய தொடங்கிவிட்டால் நாம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியாது இந்த விஷயம் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.
உத்திர அர்க்கர் காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம்’ என்றும் இதைக் கூறுவர். இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சுவாமிக்கு ‘ உத்திர அர்க்கர் ‘ என்பது பெயர்.
மனித சமுதாயம் வாழ வேண்டிய முறை, உலகத்தை உள்ளபடி ரசி உனக்கென்று உள்ளதை முழுமையாக அனுபவி உன்னுடைய எந்த செயலும் பிறரை காயப்படுத்தாமல் வாழ். உன்னையே கவனி உனக்குண்டானது தவிர மற்றதை ஒதுக்க எப்போதும் எச்சரிக்கையாய் இரு ஆனந்தமாய் இரு அப்படி நீ இருந்தால் நீ ஆண்டவனை கூட நினைக்க வேண்டியது இல்லை காரணம் ஆண்டவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பான் இயற்கையிடம் பாடம் கேள் அது சொல்லி தருவதை புரிந்து கொள் சுதந்திரமானவனாய் இரு.
பொய் நகாகரிகமற்ற பண்டைக்காலத்தில், இயந்திர, விஞ்ஞான முன்னேற்ற செளகரியக் குறைவால் உடல் மேற்கூறிய பலவித உழைப்புகளுக்கு ஈடுபட்டு, நன்றாக வளர்ந்து, திறமை திடம் பெற்று, மானிடர் வனப்பு ஓங்கி, கஷ்ட சுகங்களின் மாறுதலைத் தாங்கும் சக்தியுடன் இருந்தனர். இவர்களுடைய ரத்த நாடிகளும், இருதயமும், ஸ்வாசக் கருவிகளும், பலத்துடன், சுறுசுறுப்புடன், சிரமம் தாங்கி வேலை செய்து நின்றன. எனவே நோய் எளிதில் வரவில்லை. வந்தாலும், நீண்டு நிற்கவில்லை உயர், உயிர் கருவிகளைச் சிதைக்கவில்லை. தாறுமாறான நிலைகளை உண்டாக்கி, புதுப்புது…
எப்போது பொருளாதார சிந்தனை பெண் இனத்திற்குள் ஊடுருவி வேர் விட்டதோ அன்றே சமுதாயத்தில் தவறுகளின் காலம் தொடங்கி விட்டது எனலாம் மனிதனின் தேவைகள் என்பவற்றில் ஆசைகள் ஆட்சி செய்து ஆசைகள் எல்லாம் தேவைகளே எனும் நிலைக்கு வந்தது அப்போதுதான் பொறுப்பற்றதன்மையும், வேகமும், முரட்டுதனமும், சினமும், ஆதிக்கம் செலுத்தும் மனோ பாவமும் ஆணின் இயற்தன்மை. அச்சம், மடம், நாணம், பொறுப்போடு இருத்தல் அன்பு செலுத்துதல், அரவணைத்தல் அடங்குதல் பெண்ணின் இயற்தன்மை இவற்றில் குறையோ, மாறுபாடோ தோன்றினால் அடிப்படை எங்கோ…
ஆண்களும், பெண்களும் எப்போதும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கும், இயற்கையான இயல்பு தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் இதை முதலில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இவை இரண்டும் எதிர், எதிர் கோணங்கள் ஆண் ஆணாக இருப்பதும், பெண், பெண் ஆக இருப்பதும் இயற்கையின் வடிவமைப்பு அந்த வடிவமைப்பில் மனிதன் மாற்றம் செய்யும் போது அடிப்படை தகர்ந்து விடும் இது ஆணாதிக்க நிலையில் தோன்றிய சிந்தனை அல்ல உண்மை நிலை இதை பகுத்தறிவு கொண்டு மறுதலிக்கும் போது கட்டமைப்பு…
செயல்களைத் துறந்து, காலம், தேசம், திக்கு முதலியவைகளைக் கருதாமல் என்றும் இன்பவடிவானதும், மாசற்றதும், குளிர் முதலியவற்றை போக்குவதும் ஆகிய ஆத்மா எனும் புண்ணிய பூமியை எவன், நாடுகிறானோ அவன் அனைத்தையும் அறிந்தவனாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் சாவைக் கடந்தவனாகவும் விளங்குவான், உடலில் ஒரு கை வெட்டி எறியப்பட்டால் உடலுக்குக் குறைவேற்படும்பொழுது ஆத்மாவிற்குக் குறைவேற்படுவதில்லை. மிகுதியுள்ள உடலின் அங்கங்கிளிலும் ஆத்மாவிற்கு ஒரு பற்றுமில்லை
சிராயுதயில பிந்து ரூபம் ….. அன்னபக்ஷிகள் வாத்துக்கள் முதலியது சம்பூரணமாயும் தாமரைக்காய் பூ முதலியது நிறைந்த தடாகத்தை போலும், சத்திரம், சாமரம், தோரணம் இவைகளைப்போல் தோணினாலும் அந்த ரோகி சிராயுவாயிருப்பான். பூததோஷ தயில பிந்து ரூபம் ….. தயிதலபிந்துவில் எருக்கன் செடிப்போல் தோன்றினால் அந்த புருஷனுக்கு சாகினிமோகினி முதலியவைகளால் தோஷம் சம்பவித்ததென்று அறியவேண்டியது. கிரஹதேவதா தோஷ ரூபம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் வீட்டின் தேவதைகளால் தோஷம் உண்டானதென்று அறியவேண்டியது.
இதில் வரும் கருத்துக்கள் மத்திய அரசின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும், வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயண திரவங்களிலும் கழுவப்படுகிறது. அதனால், கன்றுக் குட்டியின் சீரம் முழுவதும் போய்விடுகிறது. அதன்பின் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது. வைரஸ் வளர்ந்தபின் வெரோ செல்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. அதன்பின் வைரசும் அழிக்கப்படுகிறது. (செயலிலக்கம் செய்யப்படுகிறது )…
திரவுபதி ஆதித்யர் சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சயபீடத்தில் உள்ளது. சூரியனுக்கு திரவுபதி ஆதித்யர் என்று பெயர்.
மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக்காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா ? இந்தியஅன்னை அறிவாற்றலில் குறைந்தவளா ? அல்லது திறமையில் தான் குறைந்தவளா ? அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றை பார். பிறகு அறிவாற்றலில் இந்தியஅன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா ? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான் உலக நாடுகளின்…
இந்த உழைப்பை நடத்தல், ஓடுதல், ஏறல், இறங்கல், பிடித்தல், விழுதல், கடித்தல், மடித்தல், நீட்டல், திருப்பல் என்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். இச்செயல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சதைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதி நரம்புகள், நரம்புவலைகள், சக்கரங்கள், சக்திகள் உபயோகமாகின்றன. சதைக்கூட்டமும் ஒவ்வொருவித சக்தியை உபயோகித்து பலனுண்டாக்குகிறது.
இந்தியா அழிந்து விடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் இருந்த இடத்திலே காமமும், ஆடம்பரமும், ஆண் தெய்வமாகவும், பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றை…
அசாத்திய தயிலபிந்து உருவம் ….. மூத்திரத்தில் விட்ட தயிலபிந்துவானது ஆமையைப் போலும், நகத்தடி கலப்பை, எருது, நரி, ஒட்டகம், பன்னி இவைகளின் உருவம் போலும் தோணுமாகில் ரோகமானது அசாத்தியமென்றும் அறிய வேண்டியது. மரண கால தயிலபிந்து ரூபம் …… ஆயுதங்கள், கத்தி, வில்லு, கேடயம், உலக்கை, சூலம், கதை முதலிய உருவமாக தோணுமாகில் சந்தேகமின்றி அந்த ரோகி எமபுரத்திற்கேகுவான்.
சுஷோல்கர் ஆதித்யர் கருடன் தன் தாய் விநதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாகும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழி பட்ட சூரிய பகவானை ‘சுஷோல்கர் ஆதித்யர்’ என்று அழைக்கின்றனர். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னிதி உள்ளது.
சதைக் கூட்டங்கள் உழைத்தே உயிர், வீரியம் பெறவேண்டும். உழைக்காத சதைகள் மெலிந்து விடும் அல்லது உளைச் சதையாகப் பயனின்றி ஜீவனுக்கு அவசியமற்ற பாரமாக வளரும். இயந்திர முன்னேற்றம், மனிதனுடைய இயற்கைக்குகந்த உழைப்பு வாழ்வைப் பாழாக்கிவிட்டது. இயந்திர முன்னேற்றமே நேராகக் கெடுத்ததென்று சொல்ல நியாயமில்லை. இயந்திரம் உழைப்பின் அவசியத்தை நீக்கவே, மனிதர் சோம்பலுக்கிடங் கொடுத்தனர். இயந்திரம் நீக்கிய உடலுழைப்பை வேறு விதமாகப் பெற முயற்சிக்கவில்லை, உடலை எத்தீவிரத் திட்டத்தில் வைக்கின்றோமோ அதற்கொத்தவாறு தான் வீணைத் தந்தி போல் உயிர்…
ஆத்மா எப்பொழுதும் அடையப்பட்டதாயிருப்பினும் அஞ்ஞானத்தால் அடையப்படாததது போல் தோன்றுகிறது. அஞ்ஞானம் நீங்கியதும் ஒருவன் தன் கழுத்தில் ஏற்கனவே இருந்த ஆபரணத்தைக் கண்டு கொள்வது போல் ஆத்மா அடையப்பட்டது போல் பிரகாசிக்கிறது. உலகனைத்தும் ஆத்மாவே, ஆத்மாவிற்குப் புறம்பாக ஒரு சிறிதுமில்லை. குடம் முதலியவை மண்ணெனக் காண்பது போல் ஞானி அனைத்தையும் ஆத்மாவாய்க் காண்கிறான்.
சந்நிபாத குறி ….. கறுப்பு வன்னமாய் மூத்திரநிறமிருந்தால் சந்நிபாதமென்றும் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பிரசூதி தோஷ குறி ….. மஞ்சள் நிறமும் உபரிபாகத்தில் கிருஷ்ண வர்ணத்துடன் புத்புதாகாரமாய் மூத்திரம் விசர்ஜனமானால் பிரசூதி தோஷமென்றும் அறியவேண்டியது. பித்த வாத கப சுராதிக்க குறி ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறமும், வதாதிக்கத்தில் ரத்தநிறமும், கபாதிக்கத்தில் நுறை நுறையாயும், சுராதிக்கத்தில் புகை நிறமும் தோணுகின்றது. மேலும் தயிலபிந்துவை மூத்திரத்தில் விட்டு அதனால் தோணுகின்ற உருவங்களைத் தெரிந்து அதன் சுபாசுபங்களை அறிந்து சிகிச்சை…
எமாதித்யர் சூரியனின் மகன் எமதர்மன் தன் சக்தியை அதிகரிக்க விரும்பி, சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. எமாதித்யர் என்னும் பெயரில் இங்கு அருளும் சூரியனுக்கு காசி சங்கடா காட்டில் கோவில் உள்ளது.
இயற்கை, உடலை உழைப்பிற்கென்றே அமைத்துள்ளது. உடலின் எந்த பாகமும் அவசியமற்றதல்ல. ஒவ்வொரு பாகமும் உழைப்பில் ஈடுபட்டு, உழைப்புக் கூட்டுறவால் உடல், உயிர், உன்னத வாழ்வு பெறவேண்டுமென்பதே திட்டம். இந்த திட்டத்தை முறித்தால் அந்த பாகம் பலவீனமடையும் அல்லது உடல் முழுவதும் நோய் கொண்டு அழிவு ஏற்படும்.
புத்திமான் தன்னுடைய அறிவால் காணும் உலகனைத்தையும் ஆத்மாவில் ஒடுக்கி ஆத்மாவானது களங்கமற்ற ஆகாயம் போன்றதென்று எப்பொழுதும் தியானிக்க வேண்டும். அருணோதயத்தால் இருளானது முதலில் நீக்கப்பட்ட பின் சூரியன் தானே பிரகாசிப்பது போல் அஞ்ஞானம் ஞானத்தால் நீக்கப்பட்ட பின் ஆத்மா தானே பிரகாசிக்கும்.
விமலாதித்யர் தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்கு காட்சியளித்த சூரியன், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது என அருள் புரிந்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் சூரியனுக்கு கோவில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர் ‘ என்ற பெயர்.
ரசாதிக்ய மூத்திர குறி ….. மூத்திரமானது கரும்பு ரசத்தைப் போல் ஒத்து நேத்திரமானது பிஞ்சர வன்னமாயும் இருந்தால் சகாதிக்யத்தினால் உண்டானதென்று அறிந்து வங்கணம் செய்விக்கவேண்டியது. ஆமவாத ரோக குறி …… மூத்திரம் மஞ்சள் வன்னமாயும் அதிகமாயும் ஆனால் ஆமவாத ரோகம் என்று அறியவேண்டியது. அதிகசுர குறி ….. சிகப்பாயும் சுவச்சமாயும் தூமிரவன்னமாயும் மூத்திரமிருந்தால் அதிக சுரமென்று அறியவேண்டியது.
இனப்பற்றையும், மொழிப்பற்றையும் தொலைத்த சமுதாயம் , சமுதாயம் சக்தியுடன் வளரமுடியாது. இப்போது உள்ள சூழ்நிலை திராவிடர் எனும் இனப்பற்றும் தமிழ் எனும் மொழிப்பற்றும் தேய்ந்து அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது. அதனாலேயே தற்சமய சூழ்நிலையில் இனப்பற்றும், மொழிப்பற்றுமே வருங்கால சந்ததியினரை அடிமைகளாகாமல் காப்பாற்ற முடியும். ஆனால், பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கிய நிலையில் உள்ள இக்கால சந்ததியினரால் இதை புரிந்து கொள்ள முடியுமா என்பதே கேள்விகுறிதான்.
மனித வாழ்க்கை சிறப்புறுவதர்கான கருணை எப்போதும் எங்கும் பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த கருணையை சரியாய் உள்வாங்கி கொள்வது என்பது அவரவர்களிடமே இருக்கிறது. சரியாய் உள் வாங்கிவிட்டால் வாழ்வின் அர்த்தம் வாழும் விதம் புரிந்துவிடும். எதில் வெற்றி அடைய வேண்டுமென்றாலும் கேள்விகள் கூர்மையாக வந்து கேள்விகளுக்கு விடை காண அபாரமான வேகத்தில் இயங்க வேண்டும் . அப்படி இயங்கினால் வெற்றி அடைதல் சுலபமாகும்.
பழக்க வழக்கங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த சுத்தம் நோய் வராமல் தடுக்க மெத்த அவசியமாகும். இதற்கு விரோதமானவை குடி போதை, பொடி, சுருட்டு, புகையிலை பழக்கங்கள், போதையில் கஞ்சா, அபின் பிரதானம் பெற்றவை மூக்கில் தூளேற்றுவது, புகையிலையை வாயில் போடுவது எல்லாம் நோயை அதிக சீக்கிரத்தில் வரவழைத்துக் கொள்ளும். பிணி தடுத்தலுக்கு இப்பழக்கங்கள் எதுவும் உதவாது.
உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி மனம் பற்றும் விஷயத்தாலேதான் பற்றும் விஷயத்திற்க்கு சக்தி இதை புரிந்து கொண்டால் பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும் அப்படி தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை அணுகி கேட்டு தெரிந்து கொண்டால் சக்தி, பக்தி ஆகும். அந்த பக்தி சக்தியாகி நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.
எப்படி ஒரு விளக்கைக் காண்பதற்கு வேறொரு விளக்கு வேண்டப் படுவதில்லையோ அப்படியே அறிவு வடிவான ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்துவதற்கு வேறொரு அறிவை வேண்டுவதில்லை. ஆத்மா தன்னை ஜீவன் என்று கொண்டால், ஒருவன் பழுதையைப் பாம்பு என்று கொண்டு பயப்படுவது போல் பயத்துக்குள்ளாகிறது. தான் ஜீவனன்று தான் பரமாத்மா என்று அறிந்தனுபவிக்கும் பொழுது பயமின்மையை மீண்டும் அடைகிறது.
லோலார்க்கர் மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் சூரியனை ‘ லோலார்க்கர் ‘ என்று அழைப்பர். காசியிலுள்ள அதிசங்கமத்தில் இவருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள ‘லோலார்க்க குண்டம்’ என்னும் குளம் புகழ்மிக்கது.
உயிரைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தவர்கள் சொத்து பற்றி யோசிக்க மாட்டார்கள் உடம்பு பற்றி யோசிப்பவர்கள் சொத்தோடு ஒட்டிக்கொள்வார்கள். சொத்தோடு ஒட்டிக்கொள்பவர்கள் உடலை தான் என்று நினைத்துக் கொள்வார்கள்.
வேறு விதம் ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறம் அல்லது நிர்மலமான மூத்திரம் ஆகும். அப்படியே சமதாதுவிலும் கிணற்று சலம்போல் மூத்திரம் இறங்கும் க்ஷயரோகத்தில் கறுப்புநிறம் மூத்திரம் ஆகும். மேலும் ஊர்த்துவபாகத்தில் மஞ்சள் நிறம் அதே பாகத்தில் சிகப்பு வர்ணம் மூத்திரத்தில் தோன்றினால் பித்த பிரகிருதி சந்நிபாதமென்று அறிய வேண்டியது.
அப்படி அறியும் போது ஏற்படும் மவுனமே அறிவு, அந்த அறிவே தெளிவு, குரு, இறைவன், மற்றபடி அலைவதல்ல அறிவு. ஆர்ப்பரிப்பது அல்ல அறிவு, அடங்குதலே அறிவு. அமைதியே அறிவு இந்த பாடம் புரிந்ததென்றால் இறப்பை பற்றி அறிய உள்ள பால பாடத்தில் சேர்ந்ததாக நாம் நினைத்துக்கொள்ளலாம்.
போகம் தேவையானால் மணத்திற்குக் காத்திருக்கும் காலமல்ல இது. போகிக்க ஆண், பெண் கூட்டுறவிற்கும் எதிர்பார்ப்பதில்லை. தன் கையே தான் கெட உதவியாகக் கொண்டு, சமூகத்தின் நர உருக்கொண்டு உலாவும், கழுதைப் புலிகளின் சண்டாளச் சேர்க்கை கற்பித்தலால், இஷ்டம் போல் விந்துவை செலவழிக்கக் கூடாது. மணவாழ்க்கை கொண்டவர்கள், கூட்டுறவை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் பற்றாது தடுத்துக் கொள்ள முக்கிய உதவி, பிந்து ரக்ஷணை.
நான் என்பதை அறிந்து அந்த நானிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தலே வெற்றி மற்றபடி எந்த வெற்றியும் வெற்றி ஆகாது அந்த நான் என்பது என்ன என்ற வினா தனக்குள் வரும் போது நான் என்பது உடலா, இல்லை மனமா என்ற வினா வரும் அது சரியா என ஆராய பொறுமை, நிதானம், அமைதி, சாந்தம், விடாமுயற்சி, இது அத்தனையும் தேவை இவைகளை கைகொள்ளும் போது அன்பு ஊற்று எடுக்கிறது. அந்த அன்பு தனக்குள் பெருக, பெருக…
தன்னைதான் அறிய வேணும் சாராமல், சாரவேணும், பின்னைதான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி என்ன சொல்கிறது இந்த பாடல் தன்னை அறிய வேண்டும் என்கிறது தன்னை அறிவது என்றால் என்ன தனக்குள் இருக்கும் உணர்வுகளை அறிதல் அது தோன்றுமிடம் அறிதல் எதனால் தோன்றியது என்றும் அறிதல் அப்படியானால் உணர்வுகள் எத்தனை விதம் உணர்வுகள் பலவிதம் அதில் சில காம, கோப, லோப, மோக, மத, மாச்சர்யம் காதல் அன்பு பரிவு நேசம் பாசம் தியாகம் போன்றது இதில் நல்லது,…
ஆத்மா ஸத்தும் சித்துமே வடிவான ஆத்மாவை இடைவிடாத அப்பியாஸத்தாலன்றி அறிய முடியாது. ஆகையால் ஞானத்தை நாடுபவன் தன்னுடைய லக்ஷியத்தையடைய நீண்ட காலம் தியானம் பழக வேண்டும். ஒரு விளக்கானது குடம் முதலியவற்றைப் பிரகாசப்படுத்துவது போல் ஆத்மா ஒன்றே புத்தி முதலியவற்றையும் இந்திரியங்களையும் பிரகாசப்படுத்துகிறது. ஜடமான அவற்றால் ஆத்மா பிரகாசமடைவதில்லை.
அருணன் காசியப முனிவரின் மனைவி விநதை, இரண்டு பிள்ளைகளை பிரசவித்தாள். முதல் பிள்ளை அருணன், இரண்டாவது பிள்ளை கருடன், சூரிய பகவானை வழிபட்ட அருணன், அவரது தேரை செலுத்தும் சாரதியாகும் பேறு பெற்றார். காசி திரிலோசனர் கோவிலில் அருணன் வழிபாடு செய்த சூரிய பகவான் ‘அருணாதித்யர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
எண்ணம் எனும் விதை பல தரத்தில் இருக்கிறது. அந்த விதைகளில் சில காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம், அன்பு, காதல், பாசம், நேசம், நட்பு, தியாகம், பரிவு, பண்பு, இத்தனை விதைகளும் வளர்ந்து மனிதனை பல விதங்களில் இம்சை படுத்துகிறது. சந்தோஷபடுத்துகிறது. இறப்பில் இவை அத்தனையும் நிறைவு பெற்றதாய் சக மனிதன் நினைக்கிறான். ஆனால் சாஸ்திரம் இவை அனைத்தும் தொடரும் என்கிறது.
இதுவுமது ….. மூத்திரத்தை பார்க்கும்போது அடியில் ரத்தம் கலந்து போல் தோணுமாகில் அதிசார ரோக மென்றும், நெய்பிந்துக்களைப் போல் இருக்குமாகில் ஜலோதர ரோகமென்றும், வசும்பைப் போல் வாசனையும், தயிரைப்போல் நீர் இறங்குமாகில் ஆமவாதமென்றும், குங்கும நிறம் அல்லது மஞ்சள் நிறமூத்திரமும் அதே வன்னமான மலமும் ஆகுமாகில் வாதசுர மென்றும் அறிய வேண்டியது.
பஞ்ச பூத தத்துவத்தில் மனதை ஆகாய தத்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ தோன்றுகிறது. மனம் நிலத்தத்துவமோ என்று ஏனென்னறால் நிலம் தானே. எந்த விதையையும்வளர செய்கிறது. அது மாதிரி எண்ணம் எனும் விதை மனதில் விழுந்தவுடன் மிக வேகமாக எண்ணம் வளர்ந்து விடுகிறது. அது பிறகு பல விதங்களில் ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மனிதன், மனித குலம் தடுமாறி தள்ளாடி ஆடுகிறது. அதில் ஏற்படும் கலக்கம் குழப்பம் பயம் மனித குலத்தை படுத்தும் பாடு சொல்லிமாளாது.
போகம் என்பது பிந்து ( விந்து ) வீரியத்திற்கு சம்பந்தப்பட்டது. வயது வந்து, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கென்று ஏற்பட்ட திட்டம் தற்காலக் கலியுக வாழ்க்கையில், மணந்தவன், மணமாகாதவன், எல்லோரும் விந்துவை வரியில்லாத குழாய்த் தண்ணீர் போல் செலவழித்துவிடுகிறார்கள். மணமாகாதவன் பண்டைக் காலத்தில் பிரம்மசாரி என்று பெயர் பெற்றிருந்தான். பிரம்மசாரி என்பது விந்துவை ரட்சணை செய்கிறவன் என்றும் பொருள் பெற்றிருந்தது.
இறப்பு உடல் சம்பந்தப்பட்டதுதான் அதில் சந்தேகம் இல்லை ஏனென்றால் இறப்பு என்ற ஒன்று உடலை இயங்க அனுமதிப்பது இல்லை. இயங்காத உடல் அழுகி நாறி ஏதேதோ ஆகி அந்த உடல் இல்லாமல் பேய் விடுகிறது. மனம் என்ற ஒன்று உடலில் ஏதோ ஒரு வஷ்துவாய் இருந்தாலும் அது மனிதனுக்கு தெரியவில்லை. தெரிவதில்லை அதை அடுத்தவருக்கு காட்ட முடிவதும் இல்லை. இதை தான் கண்ணதாசன் தன் பாடலில் அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்ட கூடாதோ என எழுதியிருப்பார்.…
எனக்கு ஞானத்தை அளித்து அஞ்ஞானம் நிறைந்ததும் பிறப்பிறப்பு வடிவானதுமான ஸம்ஸாரஸாகரத்தினின்று என்னைக் காப்பாற்றியவரும், போற்றுதற்குரியவர்களிற் சிறந்தவரும், எல்லாமறிந்தவருமான எனது குருநாதரை வணங்குகிறேன். அஞ்ஞான இருளிருந்தபொழுது இவ்வுலகம் முழுதும் உண்மையெனப்புலப்பட்டது. ஞான சூரியன் உதித்த பிறகு உலகை நான் காணவில்லை. இது ஆச்சரியம்.
இதிலிருக்கின்ற சிக்கல் என்னவென்றால் செத்தார் எப்படி திரிவார்கள் என்று தெரிந்தால்தானே அப்படி திரிய அது சரியாய் தெரியாத காரணத்தால் அவர் அவர்களுக்கு தோன்றியபடி திரியும் சில கூட்டங்கள் செத்தார்கள் இப்படிதான் திரிவார்கள் என சக மனிதர்களுக்கு பாடமும் எடுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் நரியையும் பார்த்ததில்லை அதன் கொம்பையும் பார்த்ததில்லை. நரி அதிகமாய் இருக்கும் காட்டையும் பார்த்ததில்லை ஆனால் நரி கொம்பு விற்கும் மனிதர்களை போல்தான் உள்ளது.
கங்காதித்யர் கங்கையை பூமிக்கு வரவழைத்தவர் பகீரதன், இவர் தன்னுடைய முன்னோர்கள் நற்கதி அடைவதற்காக ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கை பூமிக்கு வந்ததை அறிந்த சூரியன், இங்கு வந்து கங்கையை வழிபட்டார். அவர் வழிபட்ட சூரியக் கோவில் லலிதாகாட் படித்துறை அருகில், கங்காதித்யர் என்ற பெயரில் அமைந்துள்ளது.
இறப்பில் இருந்து பாடம் கற்க துணிந்து அதில் இறங்கி அந்த பாதையை ராஜபாட்டையாய் மாற்றி நடைபோட்டவன் வரலாற்றில் எனக்கு தெரிந்து புத்தன் மட்டுமே. மற்ற எல்லோரும் அந்த பாதையை முட்டு சந்தாகதான் உபயோக படுத்தி யிருக்கிறார்கள். இறப்பை சிந்திக்க வாழும் வாழ்க்கை ஏனோ அனுமதிப்பது இல்லை என்றே தோன்றுகிறது. அதனாலேயே அனுபவத்தில் சிறந்த முன்னோர்கள் செத்தாரை போல் திரி என்று சொல்லியிருக்கிறார்கள்
மூத்திரதாரையின் நிறக்குறி ….. மூத்திரமானது வெண்மை தாரையாகவும், மஹா தாரையாகவும், மஞ்சள் வர்ணமாயும் இருந்தால் சுரரோகமென்றும், சிகப்பு நிற தாரையாயிருந்தால் தீர்க்கரோகமென்றும் கறுப்பு நிறதாரையாயிருந்தால் அவசியம் மரணமென்றும் சவ்வீரவரணமாகிலும் மாதுலங்க பல ஆகாரத்துடன் அதே வரணமாவது இருந்தால் சுபம். சலத்தைப்போல் இருந்தால் அசீரண மூத்திரமென்று அறியவேண்டியது.
அவர்கள் அப்படிதான் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலைவயிலும் மனிதன் ஏனோ இறப்பை விரும்புவதில்லை. அதற்க்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இயற்கை அல்லது இறைவன் தன் கையில் வைத்திருக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று ஆனால் இது மிக முக்கியமானது மனிதனின் அறிவுக்கு புலப்படாதது எல்லா காலத்திலும் மனிதன் தோற்றவிஷயம் இது மட்டுமே.
அவரவர்களின் தினசரி வாழ்வின் தன்மைக்குத் தக்கபடி 24 மணி நேரத்தில் ஆறிலிருந்து எட்டு மணி நேரமாவது நித்திரை செய்ய வேண்டும். இந்த நித்திரையில் ஒரு முக்கியப் பகுதி நடுநிசிக்கு முன்பாக அமைந்தால் உடல் மெத்த நன்மை பெறும் நாடகம், சினிமா, கூத்து, அதிகப்படிப்பு, உழைப்பு இவைகளால் நித்திரை கெட்டால் நோய் பற்றிக் கொள்ளக்காத்து நிற்கும். நோய் தடுத்தலுக்கு முக்கியமான திட்டம். சுமார் ஆறிலிருந்து எட்டுமணி நேரம் நித்திரை செய்வது.
ஏனென்றால் இந்த வார்த்தைக்கு இந்த சொற்பொருளுக்கு இந்த அர்தத்தை தவிர நிறைய அர்தங்கள் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலே சொன்ன விஷயம் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அவர்கள் சொல்லவில்லை. காரணம் நாம் பயந்துவிடுவோம் என்று நினைத்திருப்பார்கள்.
இறக்க யாருக்கு விருப்பம் ? யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் விரும்பாத ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தானே இருக்கிறோம். விரும்பாத ஒன்றை செய்து தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு. கால அளவுகள் வேறு அவ்வளவுதான். இறப்பை விரும்ப வேண்டுமென்றால் முதலில் அதை படிக்க வேண்டும். இறப்பை படிப்பது எப்படி யார் சொல்லி தருவார்கள் அப்படியே சொல்லித்தந்தாலும் நமக்கு அது புரியுமா நாம் இருக்கும் சூழ்நிலை நாம் பெற்ற அறிவு சொல்லித்தருவதை ஒத்துக்கொள்ளுமா பெரிய கேள்வி தான்…
வேதாந்தத்தின் விஷயமான ஞானம் சித்தித்தால், ஜீவனே பிரம்மம் என்ற அனுபவம் ஏற்படும். அதனால் ஒருவன் பிறவித் தளையினினின்று முற்றும் விடுபடுகிறான். ஆத்ம ஞானத்திற்கொப்பாவது வேறெதுவுமில்லாமைாயல், ஒருவன் எப்பொழுதும் சீடனுடைய குணங்களைக் கைக்கொண்டு ஞானத்தைச் சம்பாதித்துப் பிறவிக்கடலைக் கடந்து செல்லவேண்டும்.
புத்தகங்கள் யாரோ நமக்கு வேண்டி செய்த தவம் அல்லவா
எந்த திட்டமும் அது பெரியதோ, சிறியதோ காலத்தின் அனுகூலத்திலோ, அல்லது பிரதி அனுகூலத்திலோதான் இருக்கிறது நாம் திட்டம் தீட்டலாம் ஆனால் முடிவு காலத்தைப் பொறுத்தது. அதாவது, காலமாகி இருக்கின்ற கண்ணுக்கும், புலன்களுக்கும், அறிவுக்கும் புலனாகாத சக்தியைப் பொறுத்தது.
எல்லோரும் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள், வேதாந்தம் பேச வயது வேண்டும் என்று உண்மையில் வேதாந்தம் வயதில் இல்லை. வேதாந்தம் இருப்பது சிந்தனையின் நுட்பத்திலும் விவேகத்தின் அடித்தளததிலும் இருப்பது.
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது
கத்தி இல்லாமல் குத்தி விட்டு ரத்தம் இல்லாமல் நெஞ்சை கிழிக்கும் ஒரே ஆயுதம் நாக்கு
தத்துவம் எது என்று வினா வந்தால் சிறிதும் யோசிக்காமல் விடையை சொல்லிவிடலாம் மனித வாழ்க்கையென்று ஆம் வேறு எது பெரிய தத்துவமாக இருக்கமுடியும். எத்தனை தத்துவங்கள் இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு வேண்டிதானே தத்துவம். தத்துவம் நிலைபெறுவது தர்க்கத்தினால் மனித வாழ்க்கை எனும் தத்துவத்திற்கு, மனித வாழ்க்கையின் ஒட்டமே தர்க்கம். ஒவ்வொரு மனிதனின் காலமும், முன்னேற்றமும், வீழ்ச்சியும், சாதக, பாதகங்களுமே மிக சிறந்த தர்க்கங்கள்.
ஒரு வட்டம் போட்டு வாழ்வது தப்பில்லை ஆனால் அந்த வட்டம் தான் வாழ்க்கை என்று பிடிவாதம் பிடிப்பதுதான் தப்பு
வருட கணக்கில் போர் செய்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிடலாம். அணுவை பிளக்க செய்து மலையை தரைமட்டமாகிவிடலாம் பிடிவாதத்தை மூலதனமாக்கி எட்டாத மலைகளிலும் ஏறிவிடலாம். அணையை கட்டி நதியின் பிரவாகத்தை கட்டுபடுத்திவிடலாம் ஆனால் பலவந்தமாய் ஒரு பூவை மலர செய்ய முடியாது. அது இயற்கையால் தான் முடியும். இது எப்போது ஒருவருக்கு புரிகிறதோ அப்போதே புரிந்தவர் எல்லா விஷயங்களையும் சரியான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார் அதுமட்டுமல்ல தன்னை மீறிய சக்தி உண்டு தன்னால் செய்ய முடியாத வேலைகளும்…
56) சந்திரனும் 2 – க்குடையவரும் கூடி நிற்க, செவ்வாய் திரிகோணமடைய லக்கினாதிபதி நீச்சம் பெற்று, 3 – க்குடையவரோடு கூடி நிற்க ஆடையின்றி தரித்திரம். 57) சந்திரனும், 2, 6, 12 – க்குடையவர்களும் லக்கினத்திற்கு 2 – க்குடையவர்களும் ஆகிய நால்வரும் 6 – ல் நிற்க, மனத்துயரத்தோடு காலம் கழிப்பார்.
54) 4, 11 – க்குரியவர் கூடி 9 – இல் நிற்க, செவ்வாய் பார்க்க ( பி ) சந்திரன், செவ்வாய், 2, 4 – க்குரியவர்கள் நால்வரும் கூடி 2 – ல் நிற்க ( சி ) 6, 4, 11 – க்குரியவர்கள் 2 லிருந்து, சந்திரன் பார்த்து, லக்கினத்தில் குரு இருக்க ( டி ) சந்திரன், செவ்வாய், 9 , 11 – க்குரியவர் நால்வரும் திரி«£கணத்தில் நிற்க…
சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதி யோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.
கல்வி, வித்தை, பற்றி ஜோதிடம் நமக்கு எத்தனையோ விதிகளை கொடுத்திருக்கிறது. அந்த விதிகள் அனைத்தும் நம்மால் கை கொள்ள முடியாது. ஆனால் அதில் சில விதிகளையாவது அனுஷ்டிக்கலாம். அப்படி செய்வது குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும். வித்யாரம்பம் என்று சொல்லப்படும் கல்வி கற்க ஆரம்பிக்கும் முதல் நாள் திருவோணம், புனர்பூசம், பூசம், மிருகசீரிஷம், அவிட்டம், ஸ்வாதி, சதயம், அனுஷம், திருவாதிரை, அஸ்தம், சித்தரை நட்சத்திரங்கள் முதல் தரமானது. அஸ்வினி, ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி…
கடவுள் அவனவனுக்கே உரிய பொருள். அத்தொடர்பே நிலையானது. இறைவனிடத்து அவனவன் கொள்ளும் அன்பின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு, ஒருவன் அவனை உணர்கிறான். அஞ்சற்க யாரோ ஒருவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருப்பதாக எப்பொழுதும் எண்ணிக்கொண்டிரு.
இறைவனைத் தொழுதாலும், தொழவிட்டாலும், மணம் புரிந்துகொள்ளாத ஒருவன் பாதியளவு விடுதலை பெற்றவனாகிறான். கடவுளிடம் அவனுக்குச் சிறிதளவு பற்று ஏற்டுவதாக உணரும்போது, அவன் வெகு வேகமாக இறைவனைச் சென்றடைகிறான்.
இறைவனது அருளே காசி முழுதும் நிரம்பியிருக்கிறது. ஆஸ்திகனோ, நாஸ்திகனோ, வேறு மதத்தவனோ, பூச்சியோ அங்கு இறக்கும் எந்த உயிரும் முக்கியைடையும். அனேக பாவிகள் காசிக்கு வந்து, விசுவநாதரது உருவைத் தொட்டு தம் பாவத்தினின்றும் விடுதலை பெறுகின்றனர்.
ரோக சாத்திய குறி ….. அந்த தைலபிந்துவானது தாமரை புஷ்பாகாரமாயும், சங்குசக்கிராகாரமாயும், வீணை ஆகாரத்தைப் போலும் சிம்மாசனத்தைப்போலும் மல்லிப் பூ மொக்கைப்போலும் தோன்றினால் அந்த ரோகம் சாத்தியமென்று அறிய வேண்டியது. மரண குறி ….. அந்த தயில பிந்துவானது பக்ஷியைப்போலவும், ஆமையைப்போலவும், எருதைப்போலவும், சிங்கத்தைப்போலவும், பன்றியைப்போலவும், சர்பத்தைப் ( பாம்பு ) போலவும், குரங்கைப்போலவும், விருச்சிகத்தைப் ( தேள் ) போலவும், குக்குடத்தைப்போலவும் தோணுமாகில் அந்தரோகி எமபுரத்திற் கேகுவானல்லது மீளான்.
தோஷ குறி பாத்திரத்தில் விட்ட தயில பிந்துவானது பரவினதுப்போல் இருந்தால் வாத ரோகமென்றும், குமிழி குமிழிப்போல் கிளம்பினால், பித்தரோகமென்றும் உருவமாய் தோணினால் கபரோகமென்றும் தயில பிந்து உண்ணாக முழுகிவிட்டால் அசாத்தியமென்றும் அறியவேண்டியது. சாத்தியா சாத்திய ரோக குறி ….. அந்த தையில பிந்துவானது வியாபித்தால் ரோகம் சாத்தியமென்றும் மேலாக முட்டை முட்டையாய் கிளம்பினால் கஷ்டசாத்தியமென்றும், மேல் எம்பாமல் முழுகிவிட்டால் அசாத்தியம் என்றும் அந்த ரோகி சீவிக்க ( மரணம் ) மாட்டானென்றும் அறியவேண்டியது.
தோஷாதிகளின் மூத்திர நிறம் மூத்திரமானது வாதத்தில் சிகப்பாயும், பித்தத்தில் மஞ்சள் நிறமாயும், கபத்தில் வெண்மையாயும், சந்நிபாதத்தில் கருப்பு நிறமாயும் இறங்கும். துவந்த தோஷ மூத்திர நிறம் வாத பித்தத்தில் பொகை நிறமாயும் ( புகை ) வாத சிலேஷ்மத்தில் நுறை, நுறையாயும், பித்தசிலேத்துமத்தில் மிசிரமாயும் மூத்திரம் இறங்கும். மூத்திர பரீ¬க்ஷவிதி அதிகாலையில் துத்திநாகம் அல்லது வெங்கலபாத்திரத்தில் ரோகியை மூத்திரம் பெய்யச் செய்து அதில் முதல் தாரையும், அந்திய தாரையையும் நிலத்தில் பெய்யும்படி செய்து மத்திஸ தாரையைமாத்திரம் அந்த…
53) 2 – க்குரியவர் சந்திரன், குரு மூவரும் கேந்திர திரிகோணம் அடைந்து, 2 – ல் சுபர் இருக்க, ( பி ) 2, 4 – க்குரியவர், சந்திரன் – ராகு நால்வரும் கூடி, 2 – ல் நிற்க ( சி ) சுக் – சந்திரன் – குரு மூவரும் கூடி 2 – ல் நிற்க, ( டி ) 2 – ஆமிடத்தை 4, 9, 10 –…
51) லக்கினாதிபதி நீச்சம் அடைந்து 4 – ல் உள்ள சனியோடு, 8 – க்குரியவர் சேர, ( பி ) 2 – க்குரியரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ( சி ) 2 -க்குரியவர், 6 – க்குரியவர், சுக்கிரன், தூமன் மூவரும் 6, 8 – ல் நிற்க, ( டி ) 2 – க்குரியவர், தூமன், எமகண்டன் மூவரும் கூடி நிற்கப்…
49) 11 – ல் குரு இருந்து, சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி, 6 பேர்களையும், பார்க்க, தனம், கல்வியில் சிறப்புடன் இருப்பர். காவிய நூல் படைப்பார். பல மொழிகளில் தேர்ச்சி கிடைக்கும். ஞானநூல் ஆசிரியர் ஆவார். 50) லக்கினத்தில் ராகு நிற்க, 7, 6 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க பல நூல்களை கற்று புகழ் பெற்றவர்களோடு இருந்து பல வினோத வித்தையில் கீர்த்தியும் – புகழும் பெறுவர்.
துக்கத்திலடிபட்ட உங்கள் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள். கண்ணீர் சிந்தி, ‘ இறைவனே, என்னை உன்பால் இழுத்துக் கொண்டு மன அமைதி தந்தருள்க ‘ என்று மனமாரப் பிரார்த்தியுங்கள். அவ்வாறு எப்போதும் செய்வதன் மூலம் படிப் படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.
அஞ்சேல், இறைவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறான். அவனுக்குரிய பணிகளைச் செய். சாதனங்கள் பழகு. தினந்தோறும் சிறிது வேலை செய்தாலும் மனத்திலிருந்து விணான நினைவுகளை நீக்கிவிடும். இப்பிரபஞ்சம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக்கொள்க. அவன் தனது கருணையை உன் மீது பொழிவான்.
உண்மையில் இவ்வுலகமாகிய கடலைக் கடக்க விரும்பும் ஒருவன் எப்படியாவது தன் பந்தங்களை அறுத்துக் கொண்டு விடுவான். யாராலும் அவனை அவற்றில் சிக்க வைக்க முடியாது.
தூக்கத்தில் உடலியந்திரங்கள் எல்லாம் ஓய்வெடுக்கின்றன. செத்த அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உழைப்பில் செலவான பிராண சக்தி. மறுபடி சேகரிக்கப்படுகின்றது. மூளை, நரம்புகள், அமைதி, ஆரோக்கியம் பெறுகின்றன. ஓய்வற்ற இருதயமும் ஸ்வாசக்கருவிகளும், சிரமக் குறைவுடன் வேலை செய்து, வீரியம் பெறுகின்றன. சுவாசம் நிதானமும் அமைதியும் அடைகிறது. செத்த, உதவாத அணுக்கள் ஒதுக்கி அகற்ற ஏற்பாடாகின்றன. உணவற்றுப் பலநாள் இருந்தாலும் உடலுக்குக் கேடு அவ்வளவு இல்லை. ஒரு நாள் தூக்கமில்லாமல் இருந்தால் ஜீவன் படாத பாடு படுகின்றது. பைத்தியம் பிடித்துவிடும் போல்…
பாசம் உண்மையாய் இருக்கும் போது அது குடும்பத்திற்க்கு பல நன்மைகளை செய்துவிடுகிறது. துறவு உண்மையாய் இருக்கும் போது அது உலகிற்க்கு நிறைய நன்மையை செய்துவிடுகிறது. இங்கு பாசமோ துறவோ விஷயம் அல்ல உண்மை தான் விஷயம் உண்மையாய் இருந்தால் நல்லதுகள் நடந்துவிடுகின்றன தற்போதைய காலத்தில் உண்மையாய் இருக்க எத்தனையோ பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது அதிலும் உள்ள சிக்கல் அத்தனை பொய்களையும் உண்மை போலவே சொல்லவேண்டியிருக்கிறது என்ன செய்ய
ஒழுக்கத்தை சில முக்கிய பழக்கங்களாகப் பிரிக்கலாம். அவைகளாவன, குளித்தல், தூக்கம், போகம், பழக்கம். ஸ்நானம் அல்லது குளித்தல் உடலின் வெளிப்பாகத்தை சுத்தமாக வைக்கின்றது. தோல்களில் பதிந்துள்ள வியர்வை, தைலம் கசியும் எண்ணற்ற துவாரங்களை அடைத்து விடாமல் அழுக்குகளை வெளியே தள்ளி தம் தொழிலைச் சரிவரச் செய்ய உதவுகின்றது. நரம்பு சக்தியைப் பொதுவாக அதிகரிக்கின்றது. தோல் நோய் ஏற்படாமல் காக்கின்றது. உடல் சூட்டைக் குறைக்கின்றது. தினம் குளித்தல் அவசியம். குளிர் நீரில் குளித்தலே சீதோஷ்ண ஸ்திதி மாற்றத்தால் உடல்…
16. தோப்பையும் விற்பரே, பற்களும் காட்டுவார், காப்பி குடிக்கும் வெறிக்கு. 17. புகையிலை, ஊனைத் தொலைக்கும் பணத்தைப் புகைத்திடும் கோடரிக் காம்பு. 18. சுருட்டுப் பழக்கம் குருட்டுப் பழக்கம்! விரட்டிப் பழக்கம் வெறு!
வாழ்க்கை போராட்டத்தில் ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை. அவர் அவர்களின் நுண்ணிய உணர்வுகள். நுண்ணிய உணர்வுகள் என்பது எது காதல், காமம், வாஞ்சை,பரிவு, நேசம், பாசம், போன்றவை இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை தொலைத்தபின் போராட்டத்தில் வெற்றி பெற்று என்ன பயன் யோசிக்க வேண்டும் ஆனால் யோசிக்காமல் இருப்பதே நல்லது காரணம் அவரவர்களே சொல்லிக்கொள்ளுங்கள் ஏனென்றால் அவரவர்கள் தொலைத்தது அவரவர்களுக்கு தானே தெரியும்
போன பதிவில் குறிப்பிட்ட ஒவ்வொன்றை பற்றியும் சிந்தித்தால் முதலில் நமக்கு தெரிவது கடவுள் என்ற வார்த்தையில் கடவுள் இல்லை என்பது தான், அதனால் நாம் அவசரப்பட்டு கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது, வரக்கூடாது இனி அடுத்த நிலைக்கு நகர வேண்டும் அப்படி நாம் நகர நாம் இதுவரை நாம் படித்த, கேட்ட, பார்த்த, எல்லா விஷயங்களில் இருந்தும் வெளியேறி தன்னே நிற்க வேண்டும் எப்படி யென்றால், நல்லதும், கெட்டதும் நான் என்பதும் மறந்து என்ற நிலையை…
யாவருடைய பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேனோ அவர்கள் பந்த மற்றவராகும் வரை, எனது இப்பூதவுடல் அழிந்த பிறகும் எனக்கு முக்தியுண்டு என்று நினைக்கிறீர்களா? நான் சதா அவர்களுடனேயே வாழவேண்டும். நன்மையோ, தீமையோ அவர்களைப் பற்றிய முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடையவர் என்று நான் வரித்தவர்களை நான் சர்வசாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
முக்தியை விரும்பி ஒருவன் கங்காஸாகரத்திற்கு யாத்திரை செல்லலாம் விரதமிருக்கலாம், ஏழைகளுக்கு தானம் செய்யலாம், ஆனால் ஞானமின்றி இவை முக்கியளிக்க மாட்டா. ஆத்மஞானம் இங்கேயே இப்பொழுதே முக்தியளிக்கிறது. ஞானத்திலிருந்துதான் முக்தி என்பது உபநிஷதங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஞானத்தால் இங்கேயே, இப்பொழுதே, உடனே பயன்கிட்டுவதால், ஞானத்தால் என்ன பயன் என்ற அச்சத்திற்கு இடமே இல்லை.
ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை ஏன் வருகிறது வாருங்கள் சிந்திப்போம். முதலில் நமது ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை. இரண்டாவது ஏதோ ஒரு சிலருக்கு கடவுளை காணவேண்டும் என்ற ஆர்வம். மூன்றாவது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களால் நமக்கு ஏற்படும் கலக்கம் அந்த கலக்கத்திலிருந்து விடுபட நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய பொருள் கடவுள். நான்காவது நம்மை சுற்றியிருக்கும் ஏதோ சிலர் சொல்லும் வார்த்தையான கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நரகத்திற்க்கு போவாய் என்ற வார்த்தையால் ஏற்பட்ட பயம் அது…
47) 1, 12 – க்குரியவரும், ராகுவும் கூடி 2 – ல் இருக்க, 6 – க்குடையவர் பலம் பெற, உண்ண, உடுக்க, இருக்க இடமின்றி மனத்துயர்த்-தோடு, காலம் கழிப்பான். கனவிலும் கூட செல்வம் அடையமாட்டான். 48) 2 – ல் புதன், குரு திரிகோணத்தில், 4 – ல் சந்திரன் நிற்க, வாக்கில் சிறந்தவர் வித்தையில் வல்லவர். தமிழ் பாண்டியத்தியம் உள்ளவர். சாஸ்திர ஆராய்ச்சியில் சிறந்தவர். பல நூல்களை கற்று, வியாக்கியானங்கள் செய்து புகழ்…
சொல் அல்லது வார்த்தை என்பது என்ன? சொல் என்பது அவரவர்களின் கடந்த காலமாகவும், ஞாபகமாகவும் இருக்கிறது. அதாவது, மகன் என்றால் எனது மகனையும் என் நண்பனின் மகனையும் அவர் உறவுகளின் உள்ளவர்களையும் என்னுடைய ஞாபகத்திற்க்கு கொண்டு வருகிறது இது அனைத்தும் மனதிலிருந்தே உண்டாகிறது. இப்படி மனதில் தோன்றும் கடந்த கால எதிர் கால நினைவுகளை பிறருக்கு வெளிப்படுத்த உபயோகப்படுவதே சொல் இந்த சொல் எப்போதும் மிக அதிக அளவாக கடந்த கால அல்லது எதிர்காலத்தில் மட்டுமே இருக்கும்…
45) 2, 6 – க்குரியவர்கள் நீச்சம் அடைய, பாவர்கள் பார்க்க, மனைவியினால் துயரமடைந்து, சொத்து சுகங்களை இழந்து தனி மனிதனாக காலம் கழிப்பான். 46) சந்திரனும், சூரியனும் 2 – ல் நிற்க, 2 – க்குரியவர் 6 – ல் நிற்க, குரு 12 – ல் இருக்க, பூமி பொருட்கள் அழிந்து வாழ்வான். பலரிடம் அண்டி ஜீவிக்கும் நிலை தவிர வேறு ஜீவனம் இல்லை.
கடவுள் என்ற சொல்லில் என்னென்ன பொருள்கள் அமைந்திருக்கிறது என்றால் பாரம்பரிய மரபு அவரவர் நம்பிக்கைகள், ஆசைகள், அபிலாஷைகள் நிறைவேறும் எனும் ஆசை, கஷ்டங்கள், துயரங்கள், தீரும் எனும் நம்பிக்கை பூரணத்தை அல்லது பரிபூரணத்தை அறியும், அடையும் ஆசை
கடவுளை பற்றி ஆராய நாம் நமது மனதை காலி செய்ய வேண்டும் மனதை காலி செய்வதென்றால் கடந்த காலத்தை மனதில் இருந்து அப்புற படுத்திவிட வேண்டும் கூடவே எதிர்காலத்தையும் இல்லாமல் காலி செய்துவிட வேண்டும் அப்படி செய்தால் என்ன நடக்கும் மனம் இல்லாமல் போயி விடும் அப்படி மனம் இல்லாது போன நிலையில் நாம் ஆராயும்போது சரியான முடிவு கிடைக்கும் அந்த முடிவு மட்டுமே சாஸ்வதமான சக்திய மாக இருக்கும் அப்படி ஆராய நமக்கு நிகழ்கால பிரக்ஞை…
இன்னல்கள் நேர்கின்றன. ஆனால், அவை என்றும் இரா. பாலத்தினடியில் ஒடும் நீரைப்போல் அவை ஒடி மறைந்து விடும். என்னைப் பிரார்த்திப்போர்க்கு இறக்கும் தருவாயில் நான் அருகில் நின்று அபயம் அளிப்பேன் ‘ என்று குருதேவர் (ஸ்ரீ ராமகிருஷ்ணர்) சொல்வது வழக்கம். மேற்கூறியவை, அவரது வாயினின்றும் வெளி வந்த சொற்களாகும். உங்கள் மனச்சுமையை ஸ்ரீராமகிருஷ்ணர் முன் இறக்கி வையுங்கள். கண்ணீருடன் உங்கள் துன்பங்களை எடுத்துரையுங்கள். உங்கள் கை நிறைய நீங்கள் விரும்பியவற்றை அவர் தருவதைக் காண்பீர்கள்.
வைராக்கியத்தின் பயன் ஞானம், ஞானத்தின் பயன் விஷய சுகங்களை நாடாமல் ஆத்மானந்தத்தையனுபவித்தல், அதனால் விளைவது பரம சாந்தி. அகங்காரத்தில் வேரையறுத்து அதை எரித்துச் சாம்பலாக்குவது உண்மையான ஞானத்தின் இயல்பு. அப்பொழுது செயல் புரிபவனும் இல்லை. செயலின் பலனை அனுபவிப்பவனும் இல்லை.
எந்த ஆராய்ச்சி செய்வதற்கும் மனம் என்ற ஒன்று தேவைப் படுகிறது. இந்த மனதில் உள்ள உணர்வுகள் நமக்கு நம்பிக்கையையோ அல்லது அவநம்பிக்கையையோ தந்துவிடுகிறது. இந்த இருநிலைகளில் நாம் எந்த நிலைகளில் இருந்தாலும் நம்மால் முடிவு செய்யாமல் ஆராயமுடியாது. அந்த நிலையில் வரும் முடிவும் சரியானதாக இருக்காது.
மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது. தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும்
சுராகம்ப கால வாதரோக நாடிகதி ….. சுர ஆரம்பத்திலும், வாதரோகத்திலும் நாடியானது அதிக உஷ்ணமாய் நடக்கும். பலஹீன சுர அதிசார கிரஹனி நாடி சலனம் ….. துர்பலரோகம், சுரம், அதிசாரம், கிரஹணிரோகம், இவைகளில் நாடியானது மிகவும் துர்பலமாயிருக்கும். அப்படியல்லாமல் பிரபலமாயிருந்தால் மரணமாகும். தீர நாடி லக்ஷணம். வெகு காலமாய் ரோக பீடி தனது நாடி தீர நாடி என்றுப் பேர். அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாம் காண்டத்தில் நாடி சாஸ்திரம் சம்பூர்ணம்.
நம்பிக்கையை கொண்டு கடவுளை ஆராய்ந்ததால் மனித குலம் பெற்ற பலன் இதுதான். உதாரணமாக நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சூரியனை அதன் ஒளியை அதன் வெப்பத்தை அறிய உணர முடியும் அல்லவா அதுபோலதான் கடவுளை பற்றிய நிலையும் எந்த நம்பிக்கையும் முன்னேற்பாடான முடிவுடன் ஆராயும் போது விஷயங்கள் உண்மையை வெளிப்படுத்துவது இல்லை அப்படியே அது வெளிப்படுத்தினாலும் நம்மாள் அதை சரியாக புரிந்து கொள்ள முடிவது இல்லை அதனால் நாம் எந்த நம்பிக்கையையும் இல்லாமல் இந்த விஷயத்தை ஆராய்வோம்.
கடவுளை அறிந்து கொள்ள நம்பிக்கை தேவையா? உண்மையில் அறிந்து கொள்வதைவிட கற்றுக்கொள்ளுதல் மேலானது அல்லவா நம்பிக்கைகளை கொண்டு கற்றுக்கொள்ளும் போது நம்பிக்கைகள் நம்மை ஒரு முடிவுக்கு அழைத்து செல்லுகின்றன அப்படி நம்பிக்கை அழைத்து சென்ற முடிவு சரியானதாக இருக்குமா என்ற ஐயம் குழப்பம் தான் உலகில் உள்ள இத்தனை மதங்களுக்கும் காரணம். அதனால் பிரிவுகள், பிரிவுகளால் பிரச்சனைகள் அதில் எல்லை மீறும் போது வன்முறைகள்
11. இடைக்கிடை கீரைகாய் சோறுடன் உண்ணக் கிடைக்குமே பொன்னுடன் பண்பு. 12. காய்கீரை வெந்திடும் நீரைக் கழிக்காதே காய்ந்து கெடுமே உடல். 13. மிளகாய் எரிக்கும், மிளகும் வதைக்கும் அழகு உடலிற் கழிவு. 14. காப்பி கருஞ்சனி போதையே, இவ்வெறி தேத்தண்ணீர் தானும் விலக்கு. 15. காப்பிநீர் நின்று நசிக்கும் உடல் பொருள் காப்பதரி திவ்வடிமை கள்.
பொதுவாக இந்த வினாவரும் போது ஆன்மீகத்தில் உள்ளவர்கள் சொல்லும் பதில் நம்பிக்கை வையுங்கள் கடவுளை காணலாம், கடவுளை அறியலாம் அவர் இருக்கிறார் என்று அறியலாம் என்கிறார்கள். நம்பிக்கை இல்லாவிட்டால் இறைவனை மட்டுமல்ல எதையும் அறிய முடியாது என்கிறார்கள். நம்பிக்கை கொண்டு ஆராய்கிறோம் என்றால் என்ன அர்த்தம் முடிவு செய்து கொண்டு ஆராய்கிறோம் என்று அர்த்தம் அப்படி அந்த விதத்தில் ஆராய்ந்தால் சரியான முடிவு கிடைக்குமா? சந்தேகம்தான்,
ஒருவன் இறைவனிடம் சரண்புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற்றப்படுகின்றன. இத்தகைய மனிதனது தலையெழுத்தை விதியே தனது கரங்களால் துடைத்துவிடுகின்றது.
நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அனைத்தையும் இழந்து விட்ட பின் நான் என்பதிலும் வெற்றி பெற்றேன் என்பதிலும் சக்கையை தவிர வேறு என்ன இருக்கிறது. யோசிக்க நேரமில்லை, யோசிக்க ஆசையில்லை சரியாக சொன்னால் யோசிக்க தெரியவில்லை வேறு எப்படி எடுத்துக்கொள்வது உழைப்பின் உன்னதம் சிந்தித்தலின் அழகு அதை செயல்படுத்தலில் உள்ள நளினம் இவையெல்லாம் இக்கால இளைய தலைமுறையினர் அறியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டதே அதனால் அவர்கள் வாழ்க்கையே அவர்களுக்கு அந்நியமாகிவிட்டதை அறியாதவர்களாக ஆகிவிட்டார்களே என்ன செய்வது அறிந்தவர்கள் வருத்தப்படதான்…
நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கிப் பிரகாசிப்பது போல் கேள்வி முதலியவற்றால் கொழுந்து விட்டெரியும் ஞானத்தீயில் பரிசுத்தமான ஜீவன் எல்லா மலங்களும் நீங்கித் தன்னுடைய சுய ஒளியுடன் பிரகாசிக்கிறான். ஒன்றை மற்றொன்றாய்க் கொள்ளும் மதியீனம் பரிபூர்ண ஞானத்தாலன்றி வேறெதனாலும் நீங்காது. ஜீவன் பிரம்மமே என்று அறிந்தனுபவிப்பதுதான் பரிபூர்ண ஞானமென்பது வேதத்தின் முடிவு.
தற்போதைய காலம் உழைக்காது உயர்வு பெற இளைஞர்கள் முயலும் காலம். இப்போது உள்ள சூழ்நிலையில் பணம், பதவி மட்டுமே உயர்வு எனும் எண்ணமும் நானே எல்லாம். நான் மட்டுமே எல்லாம் எனும் மனோ பாவத்தை உண்டாக்கும் சூழ்நிலையே கொண்டிருக்கிறது, இதில் எளிதில் வெற்றி வேண்டும் எனும் எண்ணம் உயர கிளம்பி எல்லாவற்றையும் முடிக்கிறது. அல்லது அழிக்கிறது. எல்லாவற்றையும் என்பது அன்பு, பாசம், நட்பு, உறவு, தியாகம், பணிதல், திருப்தி, போன்ற விஷயங்களை தான் சொல்கிறேன்.
பாலியம், கௌமாரம், யவ்வனம், வார்த்திகம் என்கிற அவஸ்தைகளுக்கு தக்கின பிரகாரம் நாடிகளின் சலனம் குறைந்து கொண்டே வரும். சுராதி ரோகங்கள் உண்டாகும் போது நாடிகளின் சலனமானது பேதப்படும். நாடிகள் வாயு சஞ்சாரத்தினால் சரீரத்தில் ரத்தத்தை வியாபிக்கச் செய்கின்றது. அந்த ரத்ததோஷத்தினால் அந்த நாடிகளில் ரத்தபரவல் பந்தகித்தால் அப்பொழுது நாடி சஞ்சரமாயும், வேகமாயும், துர்பலமாயும், க்ஷீணமாயும் நடக்கும். இரத்தத்தால் உஷ்ணமுண்டானால் நாடியானது அதிவேகத்துடன் சஞ்சலமாய் நடக்கும்.
6. தவிடே விடமினாம் புஷ்டிநற் காப்பு, தவிடற்றால் டோ தெறும்பு. 7. வீரத் தமிழினே நீக்கிவிடு தீட்டுதலை சூரனாவாய் கஞ்சியுடன் உண். 8. கஞ்சி வடிப்பது காலனைக் கூவலாம் கஞ்சியுடன் உண்டுநீ வாழ். 9. சாக்கடை போகும் அரிசியின் கஞ்சியே போக்கும் வறுமைப் பிணி. 10. பாலைக் குடித்துப் பலத்தைப் பொறுவீரே மாலையும் காலை தினம்.
நிகழ்சிக்கு அர்த்தம் காண முயலுவது காரியத்துக்கு காரணம் தேடும் பகுத்தறிவின் சாபக்கேடு. இதை ஏன் சாப கேடு என்று சொன்னார்கள் பகுத்தறிவு என்பது சாப கேடா பகுத்தறிவு எப்படி சாப கேடு ஆகும் இப்படி கேள்வி முளைத்து சிந்திக்கும் போது சில விஷயங்கள் விடையாய் வருகிறது அப்படி வந்ததை வைத்து பார்த்தால் பகுத்தறிவு சாப கேடு தான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது பகுத்து பார்க்கும் போது புத்தி அதிகமாய் வேலை செய்கிறது அப்படி வேலை செய்யும் புத்தி…
உன் உள்ளத்தை விண்மீனைப் போல் தூயதாக ஆக்க வேண்டுமென இறைவனை வேண்டு. காலமுறை தப்பாமல், முழுமனத்துடன் செய்யப்படும் ஜபத்தின் பலனாக, இறைவன் உன்னுடன் பேசுவதை நீ உணர்வாய். உன்னுடைய விருப்பங்களெல்லாம் பூர்த்தியடையும், களங்கமிலாப் பேரின்பத்தை நீ காண்பாய்.
இக்கால வாழ்க்கை முறையில் வாழ்க்கைக்கு உண்டான மதிப்புகள் என்று எதுவும் இல்லை வாழ்க்கைக்கு உண்டான முக்கிய விஷயமான நியாயம், அநியாயம் என்ற ஒன்றும் இல்லை ஒரு மூர்க்கத்தனமான ஒட்டப்பந்தயத்தில் யார் ஜெயிக்கின்றானோ அவன் வெற்றியே எதையும் ஞாயப்படுத்தி காட்டுகிறது. வெற்றி அடைந்தவன் நிர்ணயிப்பதே வாழ்க்கை தர்மம். என்ன செய்வது இது சரியா என்று கூட யோசிக்கும் நிலையில் நாம் இல்லையே நம்மை சுற்றி நடப்பவைகளில் எத்தனை விஷயங்கள் நம் சிந்தனைக்கும் நாம் கற்றதிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது வெற்றியாளன்…